திங்கள், நவம்பர் 14, 2011

பெண் குழந்தையை வெறுப்பவரா நீங்கள்??? கட்டயம் படியுகள் இதை!!

எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள’ (அறிவிப்பவர்; ஆயிஷா( ரழி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).
Wall Photos
பெண் குழந்தையை வெறுப்பவரா நீங்கள்??? கட்டயம் படியுகள் இதை!!!

நிச்சயமாக பெண் பிள்ளைகஅல்லாஹ் அருளிய மிகப்பெரும் கொடை! யார் அப்பெண் பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார்களோ அல்லாஹ் அவர் மீது அருள் புரிகிறான்


அல்லாஹ் அவனது திருமறையில்,

(வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றைப் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும் பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயகாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய ஆற்றலுடையவன்). (அஷ்ஷுரா-49.50).

பெண் மக்களின் சிறப்பு பற்றி நபி மொழிகள்:

1) அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் ஒரு பெண் தனது இரு பெண் பிள்ளைகளுடன் அவர்களுக்கு எதையாவது (உண்ணக்) கொடுக்குமாறு கேட்டவளாக வந்தாள். ஆனால் ஒரு பேரிச்சம் பழத்தை தவிர வேறு ஏதும் என்னிடத்தில் இருக்கவில்லை. அதை அவளிடத்தில் கொடுத்தேன். அவள் அதில் எதனையும் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்தாள். பின்னர் அப்பெண் அங்கிருந்து சென்றதன் பின்னர் நபிகளார் ( ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். இச்செய்தி பற்றி அவர்களுக்கு சொன்ன போது சொன்னார்கள்

‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள’ (அறிவிப்பவர்; ஆயிஷா( ரழி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).

இமாம் திர்மிதியின் ஒரு அறிவிப்பில், ‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் (அப்பெற்றேர்) சோதிக்கப்படும் போது அதை பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள்’

2) மேலும் ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக ‘அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.’ (ஆதாரம் முஸ்லிம்).

3) நபிகளார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள’ அறிவிப்பவர் (அனஸ் (ரழி), ஆதாரம் முஸ்லிம்).

இமாம் திர்மிதிக்குரிய ஓர் அறிவிப்பில்’ எவரொருவர் இரண்டு அடிமைப் பெண்களை பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கிறார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று தனது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் ஒன்றாக சேர்த்து காட்டினார்கள்.’

4) ‘எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்’ என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி).
(ஆதாரம்: இப்னு மாஜாஹ், ஹாகிம்)

5) ‘எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்;மிதி).



6) ‘எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விட்டது’ என்று நபிகளார் சொன்ன போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா? ஆம் இரண்டு இருந்தாலும் என்றார்கள் தோழர்கள கேட்டார்கள் ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே! என்ற உடன் ஆம் ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர் ஜாபிர் (றழி), (ஆதாரம்: அஹ்மத்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...