Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 26, 2012

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர்(நேற்று ஆணி அதிகம் இணையம் பக்கமே வர முடியல இதனால் இன்று எழுதுகிறேன்). அந்த வசதியின் படி கூகுள் பிளசில் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். எனக்கு தெரிந்து எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.


கூகுள் பிளசில் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.


அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை டைப் செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.

வலது புறத்தில் உள்ள T என்ற லிங்கை கிளிக் செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்டர் மார்க் சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த வசதி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

சனி, ஜனவரி 14, 2012

அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!!

நாம இன்னிக்கு பயன்படுத்துற தொழில்நுட்பங்களான கைத்தொலைபேசி, மடிக்கணினி, விளையாட்டு சாதனங்கள் இப்படி எல்லாமே அடங்கும்!


ஆனா இந்த வகை தொழில்நுட்பங்கள் எல்லாத்துக்குமே மின்சாரம் அப்படீங்கிற இரண்டாம் பொருள் தேவை கண்டிப்பாக அவசியம். ஏன்னா, இத்தொழில்நுட்பங்கள் எல்லாமே மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் செயலிகளைக் கொண்டது! ஆக, தொழில்நுட்பங்களின் உச்சகட்டமான மொபைல்/நடமாடும் மின்சாதனங்களான கைத்தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு அதே வகையான நடமாடும் மின்சாரத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

இத்தேவையின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் பேட்டரி (இதுக்கு தமிழ்ல என்னங்க பேரு?). ஆரம்பத்துல ஒரு முறை பயன்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட பேட்டரிக்கள், பணவிரயத்தை குறைக்க மறுசக்தியூட்டப்படும் தன்மையுள்ள பேட்டரிக்களாக (ரேச்சர்கீப்ளே பட்டேரீஸ்) இற்றைப்படுத்தப்பட்டன! அப்படியான ஒரு உச்சகட்ட இற்றைப்படுத்தலின் விளைவாக, அதிநவீன மின்சார நண்பனாக நம்முன்னே நிற்கும் ஒரு பேட்டரியைப் பற்றியதுதான் இன்றைய பதிவு! அது என்னன்னு பார்க்கலாம் வாங்க…..

அசைத்தாலே ‘ரீசார்ஜ்’ ஆகும் அதிநவீன பேட்டரிக்கள்!

www.gadgetreview.com
மறுசக்தியூட்டப்படும் பேட்டரிக்களின் வரிசையில புதுசா வந்திருக்கும் நவீன பேட்டரிக்கள்தான் ‘அசைத்தாலே மறுசக்தி பெற்றுவிடும் (shake to recharge) வகை பேட்டரிக்கள்! இந்த வகை பேட்டரிக்கள் அடிப்படையில் ஒரு ஜெனெரேட்டர்தான் என்றாலும் பேட்டரி மாதிரியான ஒரு பெட்டிக்குள் அடங்கிவிடும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.பேட்டரி போன்ற பெட்டிக்குள் அடங்கும் இந்த புதிய வகை மின்சாதனம், 500 mF கெப்பசிட்டன்ஸ் (capacitance) சக்தியுள்ள ஒரு ஜெனெரேட்டரும், கெப்பாசிட்டரும் (generator as well as a capacitor) சேர்ந்த ஒரு கலவை என்பது குறிப்பிடத்தக்கது!

மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தக் கலவை மின்சாதனத்தின் முன்மாதிரி/அடிப்படை மாதிரிகளை (prototypes) உருவாக்கியுள்ள ப்ரதர் நிறுவனம் (Brother Industries), ஜெனெரேட்டர் மற்றும் கெப்பாசிட்டர் ஆகிய இரு சாதனங்களும் பேட்டரி அளவுள்ள இரு பெட்டிகளில் அல்லது ஒரே பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, கெப்பாசிட்டர் மட்டும் அதிகபட்ச வோல்டேஜுடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறது!
இந்த வகை பேட்டரிக்கள் AA மற்றும் AAA ஆகிய இருவகையான அளவுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
இந்த புதுயுக பேட்டரிகளை மறுசக்தியூட்ட/ரீச்சார்ஜ் செய்ய, அவை பொருத்தப்பட்ட மின்சாதனத்தை அசைத்தாலே போதுமானது என்கிறது. உதாரணத்துக்கு, இப்பேட்டரிக்கள் பொருத்தப்பட்ட ரிமோட் கன்ட்ரோல் அல்லது டார்ச் லைட் போன்றவற்றை அசைத்தாலே போதும் உடனே அவை மறுசக்திபெற்றுவிடும் என்கிறது ப்ரதர் நிறுவனம்! அது சரி, இதுதானா நவீனம்ங்கிறது?!
அதெல்லாம் சரி, இப்போ இருக்குற மறுசக்தியூட்டப்படக்கூடிய பேட்டரிக்களுக்கும், இந்த நவீன பேட்டரிக்களுக்கும் பலனளவுல என்ன பெரிய வித்தியாசம் அப்படீன்னு கேட்டீங்கன்னா, இப்புதிய வகை பேட்டரிக்கள்……

சக்தியிழந்தபின் மாற்றும் அவசியத்தை/வேலையை கிட்டத்தட்ட நிரந்தரமாகவே (semipermanently) இல்லாமல் செய்துவிடுமாம்!
ரிமோட் கன்ட்ரோல் மாதிரியான குறைந்த சக்தி மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும் என்கிறார்கள்!
பேட்டரிக்களால் உண்டாகும் மின்சாதனக் கழிவுகளையும் குறைத்துவிடுமாம்!
என்ன, “அட…..இது நல்லாருக்கே” அப்படீன்றீங்களா? உண்மைதான், இந்த மாதிரியான நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படலைன்னா, உலக வெப்பமயமாதலின் பிடியில் சிக்குண்டு தவித்துக்கொண்டிருக்கும் இந்த உலகமும், உலக உயிர்களும் சில நூறு வருடங்களில் காணாமல் போய்விடக் கூடிய பேராபத்தை நாம எதிர்நொக்கியிருக்கிறோம் அப்படீங்கிறத யாரும் மறந்துடாதீங்க!
அதெல்லாஞ்சரி, இந்த புதுவகை பேட்டரி எப்போ சந்தைக்கு வரும்? கூடிய சீக்கிரமே! ஏன்னா, இவ்வாரக் கடைசியில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் “Techno-Frontier 2010″ கண்காட்சியில், முதல் முறையாக பார்வைக்கும், மின்விளக்குகள் (LED flashlight) மற்றும் ரிமோட் கன்ட்ரோலில் பொருத்தப்பட்டு செயல்முறை விளக்கத்துடனும் அறிமுகமாக இருக்கிறது இந்த அசைத்தால் மறுசக்தியூட்டப்பட்டுவிடும் புத்துலக பேட்டரிக்கள்!

வெள்ளி, டிசம்பர் 23, 2011

குளோனிங் நாய்

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உலகின் முதல் `குளோனிங்' நாய்க் குட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதற்கு `ரப்பி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் 4 நாய்க் குட்டிகளும் இதனுடன் பிறந்துள்ளன.

ரப்பியும் மற்ற நாய்க்குட்டிகளும் புற ஊதா வெளிச்சத்தில் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. இதற்கு அவற்றின் தோலிலும், உரோமங்களிலும் இருக்கும் ஒரு விதமான புரோட்டீன் தான் காரணம்.

மனிதனுக்கு உண்டாகும் பல நோய்களுக்கான மருந்து, அவற்றின் தன்மை போன்றவற்றை நாய்களின் மூலம் சோதனை செய்யும் வழக்கம் ஏற்கனவே இருந்து வருகிறது. புற்றுநோய் ஆராய்ச்சியில் இந்தப் புதிய `குளோனிங்' வரவுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாய்களின் கருமுட்டையை எடுத்து அதில் ஒரு வைரஸ்ஸை ஊடுருவச் செய்தார்கள். அந்த வைரஸ், ஒளிரக் கூடிய ஒரு மரபணுவை கருமுட்டையின் உட்கருவில் இணைத்தது. இந்த உட்கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்தார்கள். மற்றொரு நாயின் கருமுட்டையில் இருக்கும் உட்கருவை நீக்கிய பின் அதனுள் தனியே பிரித்து எடுக்கப்பட்ட உட்கருவை உட் செலுத்தினார்கள். பின் இந்தக் கரு முட்டையையும் வெளியே எடுத்து ஒரு வாரகாலத்திற்கு சோதனைச் சாலையில் வைத்திருந்தார்கள். அதற்குப் பின்னால் இந்தக் கருமுட்டையை வேறொரு நாயின் கருப்பையில் விதைத்தார்கள்.

இந்த முறையில் சுமார் 344 கருமுட்டைகள் 20 நாய்களின் கருப்பைகளில் விதைக்கப்பட்டன. பெரும்பாலான கருக்கள் வளராமல் போனாலும் 7 கருக்கள் மட்டும் உருவாகின. அவற்றில் ஒரு கரு முழுவதும் வளர்வதற்கு உள்ளாகவே அழிந்துவிட்டது. மற்றொரு கரு வளர்ந்து நாய்க்குட்டியாகப் பிறந்து சில வாரங்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனது. கடைசியில் 5 நாய்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. 5 நாய்களும் தற்போது ஆரோக்கியமாக துள்ளிக் குதித்து விளையாடி காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகின்றன.

எலி போன்ற மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருப்பது போலவே நாய்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது.

தென்கொரியாவைச் சேர்ந்த இதே ஆராய்ச்சியாளர்கள் தான் `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை கடந்த 2005-ம் வருடம் உருவாக்கி சாதனை படைத்தார்கள். அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார்கள்.

வெள்ளி, நவம்பர் 04, 2011

நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா?

நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஐ டி இல் போய் ஒரு அசிங்கமான சைட்டுடைய பக்கத்தை லைக் செய்தால் என்னவாகும் நிலைமை?

அதனால் அடிக்கடி பேஸ்புக் சைட்டில் சென்று யாராவது எப்போதாவது உங்களுடைய அக்கௌன்டை ஹேக் செய்திருக்கிரார்களா என்று பார்ப்பது நல்லது தானே..

இதை செய்வதற்கு பேஸ்புக் லாக்இன் செய்து வலது பக்கத்திலுள்ள அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று செக்யூரிட்டி என்ற டேப் எடுத்து ஆக்டிவ் செஷன்ஸ் என்பதில் கிளிக் செய்து பாருங்கள். இப்போது தெரியும். யார் யார்,எங்கிருந்தெல்லாம் உங்கள் அக்கௌண்டில் நுழைந்திருக்கிறார்கள் என்று.

இனி எல்லாம் உங்கள் கையில் ...



அஞ்சல்; தமிழ் நேசன்

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம். இதற்க்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.
இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.
இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஆப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மெயில்களும் காட்டும்.
இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும் அந்த மெயிலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மெயிலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
மற்றும் ஆன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது கீழே பாருங்கள்.
இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.
; :
அனுப்பியது ; இறைநேசன்

உங்கள் இணையத்தின் வேகம் !!!!!

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம்.
உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய www.speedtest.net என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும்

உங்கள் இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும்



அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

வியாழன், அக்டோபர் 27, 2011

ஜிமெயில் கணக்கு பயன்பாட்டில்...

ஏகஇறைவனின் திருப்பெயரால்
மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் கணக்கு முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன்படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் கணக்கை வைத்திருப்பார்கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது “Last account activity” என அழைக்கப்படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால் உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.




கணணி பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது கைபேசி மூலமோ எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப்பட்டிருந்தாலும் அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.

வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப்பட்டிருந்தால் அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக்கின்றன.இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.

இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில்(பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது.இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை(பயனர் பெயர், கடவுச்சொல்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக நீங்கள் கைபேசி வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் கைத்தொலைபேசி வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் கணக்கு திருடு போயுள்ளது என அறியலாம்.அடுத்ததாக Location(IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் கணக்கை அணுகிய பத்து ஐ.பி முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால் உடனடியாக உங்கள் ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல்லினை மாற்றுவது நல்லது.

உங்களுடைய ஐ.பி முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.எடுத்துக்காட்டாக 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன்படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும்.

அதே போல கைபேசி வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, கைபேசி வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.ஒரே நேரத்தில் இருவேறு கணணிகளில் இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் கணக்கினை அணுகினால் அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.

தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து கணக்கு பார்க்கப்பட்டதாக இருந்தால் அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.

உங்களுடைய கணக்கு தகவல்கள் திருடப்பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால் கடவுச்சொல்லை மாற்றுவதுடன் கூகுள் http://www.google.com/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும்.
நன்றி - http://www.paristamil.com
Posted by திருபுவனம் வலை தளம்
Related Posts Plugin for WordPress, Blogger...