Comedy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Comedy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 05, 2012

ஒரு தம்பதியின் அந்தரங்க உரையாடல்

நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க

மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?
கணவன்: சே சே மாட்டேன்
மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா?
கணவன்: ம்ம்ம்... விரும்புவேன்
மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது?
கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன்.
மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை)
கணவன்: (க்கும்...., அமைதியா இருக்கார்)
மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா?
கணவன்: கண்டிப்பா, இது ரெம்ப நல்ல வீடு இல்லயா...!
மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா?
கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது?


மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா?
கணவன்: அது செஞ்சுதானே ஆகனும்
மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா?
கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா.
மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா?

கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே...
மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா?
கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும்.
மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...என்ன்னாதூஊஊஊஉ
கணவன்: ஷிட் அய்யய்யோ தெறியாம வாய விட்டுட்டனே?//
மனைவி:
கணவன்
http://www.enayamthahir.com

திங்கள், டிசம்பர் 05, 2011

பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?
இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!
அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?

இதோ பாருங்கள்;

http://www.youtube.com/watch?v=0o5CqTX70aw&feature=player_detailpage


அனுப்பியது; இறைநேசன்



திங்கள், நவம்பர் 28, 2011

50 ரூபாய் காமெடி (சிந்திக்கவும்தான்)

Read it.. You Will Say me "Thanks" For Sharing This Story :-)


A little Indian Boy wanted Rs50, so he prayed 4 weeks, but nothing happened.
Finally he decided 2 write a letter 2 God requesting Rs50.

When post office staff received a letter addressed 2 God, they forwarded it 2 the President.

... ... President was so amused, she instructed her secretary 2 send the little boy Rs 20.
As she thought Rs50 would be a lot of
money for him.

The little boy was delighted with Rs20 & decided 2 write a thank u note 2 God.


'Dear God, Thank u very much 4 sending d money. However,
I noticed dat u ev sent it through 'Rashtrapati Bhavan' (Through Government Building) & those corrupt donkeys ate my 30 rupees! :D'

Hope U Will Like/Share It Too And thus Give Your Friends Some Good Laugh :P —
By: Neeya naana Gopinath

திங்கள், நவம்பர் 21, 2011

பாபர் மஸ்ஜித் உன்மை வரலாறு

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
கி.பி.1855 - பாபர் பள்ளிவாச-ன் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வே- அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி -பர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 - -பர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது. நன்றி;தமிமுன் அன்சாரி
post by.erainesan
; :

வெள்ளி, நவம்பர் 18, 2011

வரலாற்றுப் புரட்டு

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.

பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.

அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.

வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.
நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!

ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.
பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!

இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!

ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.
பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.
களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!

ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.

களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.

இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.

இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.

இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.

ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

வடக்கே மகதப் பேரரசின் அசோகனின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.

பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?
சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?

இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.

சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.

சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.

இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.

சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த நரசிம்ம பல்லவன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான், பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.

விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.

கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.

பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?

இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.

கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.

___________________________________________________

ஆதாரங்கள்:

சதாசிவ பண்டாரத்தார்,
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
மயிலை சீனி.வேங்கடசாமி,
குடவாயில் பாலசுப்ரமணியம்,
நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.
from>>http://www.vinavu.com

ஞாயிறு, நவம்பர் 13, 2011

ஒரு அறிய வாரலாற்றுத்தகவல்

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்.

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

சில தகவல்கள்

சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.

சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜும்மா மசூதி மதினாவில் உள்ளது)

சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது

மேற்கோள்கள்

Video Referce : http://www.youtube.com/watch?v=BU2duvVicuI&feature=player_detailpage

a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241
cheraman juma masjid- a secular heritage
A mosque from a hindhu king
Hindhu patron of a muslim heritage site
kalam to visit oldest mosque in sub-continant
2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem

நன்றி : http://ta.wikipedia.org/wiki/
thanks to www.nagoreflash.blogspot.com



இவன் ,
முஹம்மத் இக்பால்(Mohamed Iqbal Basheer Ahamed),
நிர்வாகி,
இஸ்லாமிக் தாவா குழுமம் (http://www.facebook.com/groups

வியாழன், அக்டோபர் 27, 2011

திப்பு சுல்தானின் வீரம் ! கட்ட பொம்மனையும் மீறும்!

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்:

" நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்."

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:

ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!

நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?
...
நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த

மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!

அது தான் அந்த செய்தி!

அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,

அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:

"திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!"

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:

திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.

தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:

" திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன".

மஞ்சை வசந்தன் எழுதிய மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்று நூல் முழுவதுமாக படிக்க


http://content.yudu.com/Library/A1tf5m/TipuSultanHistory/resources/index.htm?referrerUrl=

- ராஜகிரி கஸ்ஸாலி அனுப்பிய மின் அஞ்சலில் இருந்து

வெள்ளி, அக்டோபர் 21, 2011

காவு கொள்ளப்பட்ட கடாபியும், கற்பனை ராச்சியங்களும் எஸ்,.எம்.எம்.பஷீர

கேணல் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீபோல் உலக ஊடகங்களில் இப்போது பரவி ஆக்கிரமித்திருக்கிறது. எங்கும் எதிலும் அது பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன விவாதிக்கப்படுகின்றன. கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய செய்திகளும் பல விதங்களில் சில நிமிடங்களுக்குள் மாறுபட்டே வரத் தொடங்கின . குறிப்பாக முதன் முதலில் மேற்குலக செய்தி ஊடகங்களுக்கு பரவிய செய்தி கடாபி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட வாகனத் தொடரணி மீது நேட்டோ படையினரின் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்பதாகும். பரஸ்பர சண்டையில் ஒரு வீட்டில் குண்டடிபட்டு இறந்ததாகவும் செய்திகள் வந்தன. மிக இறுதியான செய்தியாக கடாபி ஒரு களிவு நீரோடும் குழாயிலிருந்து சுடப்பட்டதாகவும் வெளியாகின வீட்டில் சுடப்பட்டதான செய்தியின் போதும் கழிவு நீர் குழாயிலிருந்து சுடப்பட்ட செய்தியின் போதும் அவர் தன்னை சுட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் செய்திகள் செய்திகள் வந்தன.

அதிலும் குறிப்பாக இறுதியில் வந்த செய்தி என்னவென்றால் கடாபி எதிர்த்து போரிடவில்லை தற்செயலாக -விபத்தாக சுடப்பட்டார். ( ஒசாமா பி லாடனையும் ஆரம்பத்தில் தாக்குதல் நடத்த முற்பட்டார் என்றும் பின்னர் அவர் தங்களை தாக்க முற்படவில்லை என்றும் செய்திகள் வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.) இந்த செய்திகள் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் ; கடாபி கொல்லப்பட்டுவிட்டார். சர்வாதிகாரி ஒழிந்து விட்டான் என்பதுதான் தேவையான செய்தி என்று மேற்குலக ஊடகங்கள் சமரசம் செய்து கொண்டன. ஆனால் சில மேற்குலக செய்திகளின் நம்பக தன்மைக்கு சவால் விடும் சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் ஓரிரு செய்தி ஊடகங்கள் மெதுவாகவேனும் கடாபி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து கேள்வி எழுப்புகின்றன. அந்த வகையில் இறுதியாக சர்வதேச மன்னிப்பு சபையும் இடைக்கால தேசிய சபை கடாபி கொல்லப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணை செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளது. லிபியாவின் இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர்கள் அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசத்தொடங்கி உள்ளார்கள்.
.
மேலும் சர்வதேச மன்னிப்பு சபை நேட்டோ நாடுகளின் குடிமக்கள் மீதான தாக்குதல்களை ஆப்கானிஸ்தானிலோ அல்லது லிபியாவிலோ ஆக்ரோஷமாக கண்டிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க கடாபியின் மரணம் ( ஆயுதம் வைத்திருக்காத எதிர்த்து சண்டைபுரியாத ஒரவரை விபத்தாக கொன்று விட்டோம் என்பதன் மூலம் கொலையை இடைக்கால தேசிய சபை மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலும் ) அடக்குமுறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் குறிப்பட்ட லிபியாவின் வரலாற்று அத்தியாத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரினும் கதையை முடிக்கவில்லை என்றும் (The reported death of Colonel Mu’ammar al-Gaddafi would bring to a close a chapter of Libya’s history marked by repression and abuse but does not end the story,) சூசகமாக கடாபியின் கொலை சம்பந்தமாக விசாரணையின் தேவைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. இதுவரை நேட்டோ நாடுகளின் குண்டுத்தாக்குதல்களினாலும், லிபிய ஆயுத புரட்சியாளர்களினாலும் கொல்லப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட குடிமக்கள் கடாபி ஆதரவாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்தவண்ணமிருக்கின்றன.

மேற்குலக மனித உரிமை நிறுவனங்கள் சிலிர்த்து எழுந்து சீண்டும் திராநியர்ரவை என்பதால் நேட்டோ அலட்டிக் கொள்ளப்போவதில்லை. ஆக மிஞ்சினால் ஒரு விபத்து நிகழ்வாக மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும். அதைதான் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் செய்து வருகிறார்கள்.
கடாபி மேற்குல எதிர்ப்பாளராக மூன்றாம் உலக நாடுகளின் அனுசரணையாளராக மாறிய போதே அமெரிக்க, பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அவர் மீது தீவிர கண்காணிப்பினை எதிர்ப்பினை கட்டமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தன. ஆனால் இந்நிலை பிரித்தானிய காவல்துறை பெண்மணியின் கொலையுடனும் லோக்கர்பீ விமான குண்டு வெடிப்புடனும் ஐரிஷ் கெரில்லாக்கள் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கான உதவிகளுடனும் (யூத எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள ) மேற்குலகின் கண்ணில் விழுந்த தூசி போல கடாபியின் இருத்தல் பிரித்தானியாவையும், அமெரிக்காவையும் உறுத்தத் தொடங்கியது. அது தொடர்பான கடாபியினதும் அவரின் மேற்குலக எதிரிகளினதும் ராஜரீய அணுகுமுறைகள் மாற்றமடைந்தன. எதிரியான இரு பகுதியினரும் இறுக்கமாக அணைத்து ஆரத்தழுவி ஆயுதங்களை கடாபிக்கு விற்றதும் மாற்றாக எண்ணைக் குதங்களையும், எரிவாயுக்களையும் குத்தகைக்கு எடுத்ததும் நடந்தேறின. அணுவாயுத அச்சுறுத்தலை கடாபி இல்லாமல் செய்தார்.

ஆனால் கடாபியை கொல்ல வேண்டும் என்பதற்கு பிரித்தானியாவின் உளவுத்துறை முதன் முதலில் சதித திட்டம் தீட்டியது. நிச்சயமாக அது அன்றைய அரசின் அனுசரணையுடன்தான் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டை அரசு மறுத்தாலும் உண்மைகளை வரலாறுகள் பதிவு செய்யத்தானே செய்யும். எம்.ஐ சிக்ஸ் எனப்படும் பிரித்தானிய உளவு ஸ்தாபனம் இதற்காக தன்னை அமர்த்தியதென அதன் உளவாளியாக செயற்பட்ட ( பின்னர் அவர் எனது அயலில் தான் வாழ்ந்திருக்கிறார் என்பதை பின்னரே அறிந்து கொள்ள முடிந்தது) டேவிட் ஷய்லேர் (David Shayler) தான் அப்பதவியிலிருந்து விலகி தனது பாதுகாப்புக்காக பிரான்ஸ் சென்று அங்கிருந்து இலண்டன் பத்திரிகை ஒன்றிற்கு தகவல் வழங்கியிருந்தார். அத்தகவலை வழங்கியதற்காக அவரை கைது செய்து நாடு கடத்துமாறு பிரித்தானிய அரசு பிரான்சை கேட்க பிரான்ஸ் இறுதியில் அதனையே செய்தது. அவர் 1996 ம் ஆண்டு மாசி மாதம் லிபியாவிலுள்ள இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்றின் முகவருக்கு கடாபியை சதிக்கொலை செய்யும் பணியை தான் எம்.ஐ சிக்ஸ் உத்தரவிற்கிணங்க வழங்கியதாகவும் அம்முயற்சியில் அவர்கள் மோட்டார் பவனி வாகனத்தின் கீழ் பொருத்தி குண்டு வெடிக்கவைத்து வெடித்ததாகவும் ஆனால் அந்த குண்டு வெடிப்பில் தெருவோரம் நின்றவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் கடாபி பாதிக்கப்படவில்லை என்றும் பின்னரும் 1996 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் (மார்ச்) மீண்டும் ஒரு சதிக்கொலை முயற்சி செய்யப்பட்டதாகவும் அது கடாபி பிறந்த நகரான சிரத்தில் ( இப்போது அவர் கொல்லப்பட்ட நகரத்தில் ) செய்யப்பட்டதாகவும் அதிலும் பிழையான வாகனமே குண்டு வெடிப்பிற்குள்ளானதென்றும் அதிலும் கடாபி தப்பிவிட்டார் என்றும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான பிரித்தானியாவின் கேவலமான கபடத்தனமான முகமூடியை டேவிட் ஷய்லேர் கிழித்தெறிந்ததற்காக அவர் கைதியாக்கப்பட்டு அரச இரகசிய வெளிப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தண்டனையும் வழங்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆதரவாக நின்றவர் அவரின் காதலியான இன்னுமொரு எம்.ஐ சிக்ஸ் உத்தியோகத்தரான அண்ணி மாச்சொன் ஆகும். இவர் இப்போது ஜெர்மனியிலே வாழ்வதுடன் பிரித்தானிய அமெரிக்க நயவஞ்சகத்தனத்தை கடாபியின் மீதான பழிவாங்கலை நேட்டோவினதும அமெரிக்காவினது அத்து மீறல்களை மனித உரிமை பாசாங்குகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டியுள்ளார். மிகவும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை தனது பட்டறிவின் பின் பட்டவர்த்தனமாக இவர் பேசுகிறார்.

நேட்டோ படைகள் கடாபி எதிர்ப்பு புரட்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கியதும் வான் தாக்குதல்கள் மேற்கொண்டதும் இறுதியில் கடாபியின் கொலையையும் செய்து முடித்திருக்கிறார்கள். ஐனாவும், மேற்குலக ஏகாதிபத்தியங்களும் தங்களின் நிகழ்சி நிரலை கடாபி எதிர்ப்பு லிபியர்கள் இஸ்லாமிய ஆட்சி முறையை நிறுவ விரும்பும் சக்திகள், தாராளவாத சக்திகள் என எல்லா தரப்பினரையும் ஒன்றிணைத்து எண்ணெய்வளமிக்க நாட்டை சுடுகாடாக்கியிருக்கிறார்கள். கடாபியின் தான் தோன்றித்தனமான, ஆட்சி அத்துமீறல்களும் ஜனநாயக மறுப்பும் பற்றிய குற்றச்சாட்டுக்கள் லிபிய மக்களின் உள்ளார்ந்த உரிமை. ஆனால் எகிப்து துனிசியா ஏன் ரோமொனியாவில் நடந்ததுபோல மக்கள் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் எதிர் ஆயுதப்புரட்சியையும் வான் வெளி தாக்குதலையும் மேற்கொண்டு கடாபியை கவிழ்த்ததன் மர்மம் என்ன .

இஸ்லாமிய தீவிரவாதிகள் என தாங்களே கருதிய ஒசாமா பின் லாடனையும் முஹாஜிதீங்களையும், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு கமுனிஸ்ட் எதிர்ப்பு போர்வையில் கூட்டமைத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆயுதம் அளித்து ஆட்சி மாற்றம் பண்ணியதையும், நஜீபுல்லாவின் உடல் தெருவோரத்தில் தொங்கவிடப் பட்டதையும் ஞாபகப்படுத்தி கொண்டு இப்போது அமெரிக்கா முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அறியப்பட்டவர்களுக்கும் லிபியாவில் ஆயுதம் வழங்கியது மட்டுமல்ல அவர்களை வைத்தே பல கொலைச்சதி முயற்சிகளை கடாபியின் மீது மேற்கொண்ட வரலாறும் நீண்டது.

அமெரிக்காவின் ஆண்டின் விமான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலிலும் கடாபி தப்பிப் பிழைத்து இறுதியில் சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு நேட்டோவின் குண்டு வீச்சில் காயமடைந்து கொல்லப்பட்டாரா? தமது இலக்கை ஒரு கால் நூற்றாண்டின் பின்னர் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் சாத்தித்து விட்டனவா? வரப்போகும் நாட்கள் கடாபியை கொன்றபோது அல்லாஹு அக்பர் சொன்ன மக்களின் ஒற்றுமையும் ஆட்சியும் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டுவருமா?

சிரிச்சுக்கிட்டே இருங்க

கீழே நமது நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஜோக்ஸ். சும்மா சொல்லக்கூடாது... கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கிறேன்..!!

“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி”
============================================================
“என்ன சார், பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
“இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
“லோயர் பெர்த்காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
“இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”


=================================================================
“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”
“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”

*********************************************************************


“வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவரும் பெரிய வித்வானோ?”
“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”
************************************************************************
“கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”
“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”
*********************************************************************
“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”
“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
“சீச்சீ… இது எனக்கில்லைங்க”
“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
“என் தம்பிக்கு”
********************************************************************

“நேத்து எஃப்.எம். ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின். கேட்டீங்களா?”
“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை. ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”
***********************************************************************
“க்யா சங்கர்ஜி, கானா பஹுத் அச்சா ஹை. சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்ன்னு தடபுடலா விருந்து வெச்சிட்டீங்கோ. நாளைக்கும் ஏதாவது விசேஷம் உண்டா?”
“நாளைக்கு மாட்டுப் பொங்கல்”
“சங்கர்ஜி, நீங்கள்ளாம் வெஜிடேரியன்தானே?”
“படுத்தாதய்யா, மாட்டுப் பொங்கல்ன்னா மாட்டை அரைச்சி பொங்கல் பண்றதில்லை, அது ஒரு பண்டிகைய்யா”
***********************************************************************
பிரபல நடிகையைக் கல்யாணம் செய்துகொண்ட அவன், மனைவி மற்றும் நாயுடன் காரில் ஜாலியாக ஒரு ரைட் போகப் புறப்பட்டான்.
டிரெஸ்ஸிங் டேபிள் முன்னால் உட்கார்ந்திருந்த மனைவியை அவன் அவசரப் படுத்தினான்.
“ம்ம்ம்ஹூம்…. நேரமில்லை, போய்ட்டு வந்ததும் எனக்கு ஒரு அவசர பிஸிநஸ் மீட்டிங் இருக்கு…. உடனே புறப்படு”
நடிகை போட்டது போட்டபடி அப்படியே புறப்பட்டாள்.
கார் ஓட்டிப் போகும்போது யாராவது தவளையைப் பார்த்து பிரேக் போடுவார்களா?
அவன் போட்டான்.
போட்டது மட்டுமில்லை, இறங்கி அதைத் தூக்கி சாலையின் ஓரத்தில் விட்டான். அது ஒரு அபூர்வ சக்தி படைத்த தவளை என்பது அவனுக்கு அதுவரை தெரியாது. தவளை அவனை நன்றியுடன் பார்த்தது.
“இதற்கு நன்றியாக நீ கேட்கும் ஒரே ஒரு ஆசையை என்னால் பூர்த்தி செய்ய முடியும், கேள்” என்றது.
ஆனந்த அதிர்ச்சி அடைந்த அவன்,
“அடுத்தவாரம் ஒரு டாக் ஷோ இருக்கு. அதில என் நாய் ஜெயிக்கணும்” என்றான்.
“கூப்பிடு நாயை, நான் பார்க்கணும்” என்றது தவளை பர்ஸனல் மேனேஜர் மாதிரி.
நாய் வந்தது.
“சான்ஸே இல்லை. சொறிநாய் மாதிரி இருக்கு, இதையா வளர்க்கறே?”
ஏமாற்றமடைந்த அவன்,
“சரி…. அதே வாரம் ஒரு அழகிப் போட்டி இருக்கு. அதில என் மனைவி ஜெயிக்கணும்” என்றான்.
“கூப்பிடு அவளை”
வந்தாள்.
தவளை யோசித்தது.
“என்ன யோசிக்கறே?”
“நாயை சரியாப் பாக்கல்லை, மறுபடி கூப்பிடு”

***********************************************************************

கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”
===============================================================

ஒரு ஆள் வீட்டை ஒழிக்கும் போது பதினைந்து வருஷத்துக்கு முந்தைய தையற்கடை ரசீது ஒன்று கிடைத்ததாம். நாளைக்கு ஆய்டும், நாளான்னிக்கு ஆய்டும் என்று இழுத்தடித்ததில், சட்டையை வாங்காமலே மறந்து போனது ஞாபகம் வந்தது அவருக்கு.
தையற்காரரை கிண்டல் அடிப்பதற்காக அதை எடுத்துக் கொண்டு தையற்கடைக்குப் போயிருக்கிறார்.
“என்னப்பா, இப்பவாவது ரெடியாச்சா?” என்று ரசீதைக் கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கிப் பார்த்த தையற்காரர் சொன்னது அவருக்குத் தலை சுற்றியதாம்,
“காஜா எடுக்க அனுப்பியிருக்கேன். வேறே ஏதாவது வேலை இருந்தா போய்ட்டு வந்துடுங்க, ஒன் அவர்ல ரெடியாய்டும்”

=================================================================
“முன்ன எல்லாம் கண்ணாடி போடல்லைன்னா வாட்சில டேட் தெரியாது. இப்ப டைமே தெரியலை”
“எனக்கு கண்ணாடி போடல்லைன்னா வாட்சே தெரியலை”

_____________________________________________________________
“உங்களுக்கு என்ன பவர் தேவைன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப சுலபம். இந்த போர்டிலே எந்த ரோவிலே இருக்கிற எழுத்து தெரியுதுன்னு சொல்லுங்க”
“போர்டு எங்க இருக்கு டாக்டர்?”
==========================================================

“ஹலோ, நான் ராஜேந்திரன் பேசறேன்.. யாரு?”
“கரெக்ட். நீங்க ராஜேந்திரன்தான்”
______________________________________________
“ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”
“இல்லைங்க, இது போன்”
______________________________________________
“ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”
“ஐய்யா குளிக்கறாரு”
“சாரிங்க, ராங் நம்பர்”
_______________________________________________
“ஹலோ, மிஸ்டர் ஏகாம்பரம் கிட்டே பேச முடியுமா?”
“நீங்கதான் சொல்லணும். பேசப்போறது நீங்கதானே?”
=====================================================================

“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”
”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
============================================================
“என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”
“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”
“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”
“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”
“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”
“நம்ம வீட்லதாங்க”
“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”
“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”
“நம்ம மாடா?”
“ஆமாங்க”
“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”
“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”
“ஐயய்யோ… எப்பிடிடா?”
“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”
“வீடு எப்படிடா எரிஞ்சது?”
“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”
“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”
“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”
“யார்ரா செத்தது?”
“உங்க அம்மா”
“எப்படி செத்தாங்க”
“தூக்கு போட்டுக்கிட்டு”
“ஏன்?”
“அவமானத்திலதான்”
“என்னடா அவமானம்?”
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்”
============================================================

எப்பூடி..? கொஞ்சம் கமெண்ட்ஸ் ல உங்க எண்ணங்களை பதிவு செஞ்சுட்டுத்தான் போங்களேன்...!!!

நகைச்சுவை

சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்

சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா............


=========================================================

உங்க மாமா டெல்லிக்குப் போனாரே...
அங்க என்னவா இருக்கார்?

அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.


-----------------------------------
உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது
பிறந்திருக்கிறார்களா?

இல்லை, குழைந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.

புதிதாக மணமான‌ கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.


30 ஆண்டுகள் உருண்டோடின..


ஒருநாள் மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.


ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..


" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."


" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"


" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"
==========================================

மார்க்கெட்டிலிருந்து வீட்டுக்கு காய்கறி வாங்கிப்போகும் ஒருவர் வெண்டைக்காய்களை உடைத்துப் பார்த்து முற்றலாக இருந்தால் கீழே போட்டுவிட்டு சென்றார்.. எதிரில் வந்த நண்பர் ஆச்சர்யம் தாங்காமல் ஏனென்று கேட்டார்..

என்ன சார் பண்றது..? உடைச்சு பார்த்து வாங்கினா கடைக்காரன் திட்டறான்.. உடைக்காம வாங்கினா வீட்டுக்காரி திட்டுறா..!
==========================================



சின்னா ஆசிரியர்கள் ஓய்வறை வழியாகப் போனபோது ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்..

சின்னா, எனக்கொரு டீ வாங்கி வா..

மற்றொருவர் " எனக்கும்.. க்ளாஸை நல்லா கழுவிட்டு டீ போட்டு வாங்கிட்டு வா.."

சின்னா 2 தேனீர் குவளைகளுடன் திரும்பினான்..

" யார் சார் கழுவின க்ளாஸ்லே டீ கேட்டது.. இந்தாங்க...!"

==========================================
வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு

" பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..

டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?

ஓ.எஸ்.. தாராளமா..

நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!
===================================================

பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக 2 கோப்பைகளுடன் திரும்பிய மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான்..


சின்ன கோப்பை எதுக்கு கிடைச்சது..?


கர்நாடக சங்கீதம் பாடினதுக்கு..


பெருசு எதுக்கு குடுத்தாங்க..?


பாட்டை நிறுத்தச் சொல்லி...!!!
=======================================

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: “நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது"
அதற்கு தவான், “உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

இதில இருந்து என்ன தெரிஞ்சுக்கிறீங்க?

மனுஷனுக்கு புறத் தோற்றம் முக்கியமில்லைனா? இல்லீங்கண்ணா ....
சாதிக்கணும் , சாதிச்ச மனுஷனுக்கு ஆடை ஒரு பெரிய விஷயமா கிடையாது.. அது வரைக்கும் , நீங்க நீட்டா டிரஸ் பண்ணுங்க, நச்சுன்னு! அதே நேரத்தில, இலக்கு முக்கியம்.. அது ரொம்ப பெருசா இருக்கட்டும்..!

மனசை எப்போவும் வாட விடாதீங்க.. மலர்ச்சி இருந்துக்கிட்டே இருக்கட்டும்.. நாம எல்லாம் சாதிக்கப் பிறந்து இருக்கோம் , ஏதோ வந்தோம் போனோம்னு இருக்க வேண்டாம்..!
Related Posts : Dr . APJ அப்துல்கலாம், தமிழ் ஜோக்ஸ்
கவலையை மறந்து சிரிப்போம் கொஞ்சம் .வாங்க பாஸூ..!
மாப்ள , நாய் ஏன் கல்யாணம் பண்ணிகிடுறது இல்லை சொல்லு?
நகைச்சுவை : சில Lovely Tamil Jokes
சிந்திச்சுப் பாத்து செய்கையை மாத்து... Lovely Tamil Jokes
கலாமும் , கடவுளும் ( அவசியம் படிக்க வேண்டிய பதிவு )
ஊழலை ஒழிக்க கரம் கோர்ப்போம் .. வாருங்கள்.. Dr . APJ அப்துல்கலாம் அவர்களை இணையத்தில் தொடர்பு கொள்ளுங்கள்..!!
கூகுளையே செதைச்சுப்புட்டாங்கப்பா.. ! Superb fun .. Dont miss it ..
Related Posts Widget[?]

சிரிப்போம்

Facebook இல் , நண்பர் ஒருவர் பதிவு செய்து இருந்த 'நச்' வாசகங்கள் . நீங்களும் தெரிந்து கொள்வதில் மகிழ்வீர்கள் என்று எண்ணி பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாதிரி பதிவு எல்லாம் வேண்டாமேன்னு நினைக்கிற நம்ம வாசகர்கள் , தயவு செய்து தெரியப்படுத்தவும்...
1] கோபத்தில் செய்யப்படும் பாவத்தை விட ஆசையில் செய்யும் பாவமே மிக மோசமானது

2] ஒரே பீடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஊது பத்திகள் விரைவாக சிலவும் மெதுவாக சிலவும் எரிந்து புகைந்து தணிகின்றன.இறுதியில் தணிந்து மறைதல் என்பது இரண்டுக்கும் ஒரே மாதிரி தானே?

3] மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்.நினைக்கிறார்கள்,​செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான் பேரமைதி கிட்டுகிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்

4] நமது உடலின் உறுப்புக்களைப் போல ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு சேர்ந்திணைந்து செயல்படவே பிறந்துள்ளோம்.
========================================================================
ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் அந்த நிகழ்ச்சியை நடத்திய நடுவர் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட நடுவர் அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ…முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் நடுவர்.

“கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”
=============================================================
சரி, கொஞ்சம் ஜோக்ஸ் ..
கல்யாணமான நண்பர் போல. பாவம் என்னமா பீல் பண்ணி எழுதி இருக்கிறார். அப்படியே கொடுக்கிறேன்.. டைம் கிடைக்கிறப்போ படிச்சுப் பாருங்க.. Have a nice day !
===================================================================
Mixed bag:
Getting married is very much like going to a restaurant with friends. You order what you want then, when you see what the other person has, you wish you had ordered that.
------------------------------​ ------------------------------​ ----------------
Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but the thought of long life will never come.
------------------------------​ ------------------------------​ -----------------
Why do couples hold hands during their wedding?
It's a formality just like two boxers shaking hands before the fight begins!
------------------------------​ ------------------------------​ -----------------
Wife: Darling today is our anniversary, what should we do?
Husband: Let us stand in silence for 2 minutes.
------------------------------​ ------------------------------​ -----------------
It's funny when people discuss Love Marriage vs Arranged.
It's like asking someone, if suicide is better or being murdered.
------------------------------​ ------------------------------​ -----------------
It is difficult to understand GOD. He makes such beautiful things as women and then he turns them into Wives.
------------------------------​ ------------------------------​ -------------------
If u r married please ignore this msg,
for everyone else: Happy Independence Day
------------------------------​ ------------------------------​ -------------------
Before marriage, a man will lie awake all night thinking about something you say.
After marriage, he'll fall asleep before you finish.
------------------------------​ ------------------------------​ -------------------
There's a way of transferring funds that is even faster than electronic banking. It's called marriage.
------------------------------​ ------------------------------​ -------------------
Girlfriends r like chocolates,
taste good anytime.
Lovers r like PIZZAS, Hot n spicy, eaten frequently.
Husbands r like Dal RICE, eaten when there's no choice.
------------------------------​ ------------------------------​ ------------------
Man receives telegram: Wife dead. Should she be buried or cremated?
Man: Don't take any chances. Burn the body and bury the ash.
------------------------------​ ------------------------------​ -------------------
Prospective husband: Do you have a book called 'Man, The Master of Women'?
Salesgirl: The fiction department is on the other side, sir.
------------------------------​ ------------------------------​ ------------------
Q: Why dogs don't marry?
A: Because they are already leading a dog's life!
------------------------------​ ------------------------------​ ------------------
There was this guy who told his woman that he loved her so much that he would go through hell for her. They got married and now he is going thru hell.
------------------------------​ ------------------------------​ -------------------
Fact of life: One woman brings you into this world crying & the other ensures you continue to do so for the rest of your life!
------------------------------​ ------------------------------​ -------------------
Q: Why doesn't law permit a man to marry a second woman?
A: Because as per law you cannot be punished twice for the same offence!
------------------------------​ ------------------------------​ -------------------
Q: A lady and a dog are shouting from outside the main door, because the door is shut. Whom would you let in first and why?
A: Of course - the dog, because the dog would stop shouting after he comes inside

comedy

இதையெல்லாம் அனுப்பிச்சு வைச்ச நண்பருக்கு ரெம்ப நன்றி.. அனேகமா , நெட்லே ஏற்கனவே யாரோ , எழுதி இருக்கலாம் னு நெனைக்கிறேன்.. நல்லா இருக்குதான்னு நீங்களே பாருங்க... எனக்கு புடிச்சு இருக்குப்பா .....
==========================================================
“மாப்பிள்ளை டிவியில எல்லாம் வராரு”
“அடேடே… எந்த நிகழ்ச்சியிலே?”
“குற்றம், நிஜம் நிகழ்ச்சிகள்ளே குத்தவெச்சி உட்கார்ந்திருப்பாரே, பார்த்ததில்லை?”
==================================================================
... டி வி யில எங்கே பார்த்தாலும், ஒரே அழுகை , அழுகை... ஏன்..? இம்புட்டு வெறி? எவன் ஆரம்பிச்சு வைச்சான்..?
முதலில் மெகா சீரியல்களில் ஆரம்பித்தது அழுகை.
அழுகாச்சிக்கு இருக்கும் மார்க்கெட் வால்யூவைப் பார்த்துவிட்டு அழுகாச்சி ஸ்பெஷலாக நடிகை லட்சுமி ‘கதையல்ல நிஜம்’ ஆரம்பித்தார்.
தாய்மார்களும் வீட்டில் வேறே வேலை இல்லாமல் இருக்கிறவர்களும் பிசியாக அழ ஆரம்பித்தார்கள்.
அப்புறம் விசுவின் டாக் ஷோவில் அழுதார்கள்.
அதற்கப்புறம் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பாட்டுப் போட்டிகளில் அழுகை, நீயா நானாவில் அழுகை என்று அழுகாச்சியின் ஆட்சி பரவ ஆரம்பித்தது. டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கூட அழுகிறார்கள்!

இப்படியே போனால் செய்திகள், ராசிப்பலன் நிகழ்ச்சியில் கூட அழுவார்கள் போலிருக்கிறது.

ராசிப்பலன்களில் விஷால் கண் சிவக்க தோன்றுகிறார்.
“கன்னி ராசி நேயர்களே……” தொண்டை அடைத்து கண்ணில் நீர் முட்டி பேச்சு நின்று விடுகிறது.
அப்புறம் மணிரத்னம் படம் போல கொஞ்சம் காற்றும் கொஞ்சம் வார்த்தைகளுமாக
“உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்……..” முஸ்க்… முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ’ஜாக்கிரதையா இருங்க’ என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டுகிறார்.

செய்திகளில் தலைவிரி கோலமாக ஜெயஸ்ரீ .
“நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க” என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறார்.

===================================================================
பைத்தியக்கார ஆஸ்பத்திரியை ஒரு தரம் பார்க்கணும்ன்னு என் நண்பர் கிட்டே சொன்னேன்.
“என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறே, இன்னிக்கே போறதிலே தப்பில்லே” ன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.
“ஓரளவு குணமானவங்களை பார்த்தா போதும். ரீசன்ட்டா அட்மிட் ஆனவங்கல்லாம் வேண்டாம்”
“அதிலே கூட ரிஸ்க் இருக்கு”
“அதிலே என்ன ரிஸ்க்கு?”
“வின்ஸ்ட்டன் சர்ச்சிலொட பையன் உன் மாதிரிதான் குணமானவங்களை பார்க்கப் போனாராம். ஒருத்தன் அவரைப் பார்த்து நீ யாருன்னு கேட்டானாம். இவர், நான்தான் சர்ச்சிலொட பையன்னாராம். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னான்?”
“உனக்கு சீக்கிரம் சரியாய்டும். நான் வர்றப்போ சர்ச்சிலே நாந்தான்னு சொல்லிக்கிட்டு வந்தேன்னானாம்.”
“ஐயய்யோ, என்னை யாராவது நீ யாருன்னு கேட்டா என்ன பண்றது?”
“உனக்கந்த கவலை இல்லே. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க”
“ஏன்?”
“எப்டி இருந்தாலும் ரொம்ப நாள் கூட இருக்கப் போறான், மெதுவா கேட்டுக்கலாம்ன்னுதான்”
நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!
அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
என்னடா இது!
மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.
ஆறாவது ஆளும்
“விமலாவைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.
நான் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டேன்.
“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.
என் நண்பர் என்னைப் பார்த்து சிரிச்சி “இதுலேர்ந்து நாம அறிகிற நீதி என்ன?” ன்னார்.
“தெரியலையே?”
“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”
பட்டி மன்றப் பேச்சாளர் திரு.அறிவொளி சொன்னது.
============================================================
ஏன்யா. நெஜமாவே ரூம் போட்டுத் தான் யோசிக்கிறீங்களோ..?

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்

இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்

மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.

நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)

ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.

ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.

ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)
Related Posts Plugin for WordPress, Blogger...