வியாழன், செப்டம்பர் 27, 2012

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?



அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால்நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ளவேண்டும். பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால்பகுதிகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும்.

இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமியவழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுஅணிந்தால் அவர்கள் பர்தாவைப் பேணியவர்களாவிடுவர். ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இயல்பானஆடைகளுக்கு மேல் கூடுதலாக நீண்ட வேறு ஒரு ஆடையைப் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள்.

இந்தக்கூடுதலான ஆடை தான் பர்தா என்றும் பலர் கருதுகின்றனர். இவ்வாறு ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின்அடிப்படையில் கூடுதலாக ஆடைகளை அணிந்து கொண்டால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால்எல்லோரும் இவ்வாறு தான் அணிய வேண்டும் என்றோ இது தான் இஸ்லாமிய பர்தா முறை என்றோ கட்டாயசட்டமாகக் கூறுவது கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பர்தாவிற்கு என பெண்கள் தனியே எந்தஒரு ஆடையையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆடை வேறு பர்தா வேறு என்றில்லாமல் பர்தா சட்டத்தைக்கடைப்பிடிக்கும் வகையில் தங்களது ஆடை முறையை அமைத்துக் கொண்டார்கள்

. இதைப் பின்வரும்செய்தியிலிருந்து அறியலாம். இக்ரிமா கூறுகிறார் :
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான்பின் ஸபீர் அல்குறழீ (ர) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ர)

அவர்கள்கூறுகிறார்கள்:
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முக்காடு அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர்ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில்(கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி-
நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள்சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர்ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சை நிற முக்காடுத்) துணியை விடக் கடுமையான பச்சைநிறமுடையதாக உள்ளது'' என்று சொன்னேன். (இதற்கிடையில்)-அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம்மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார்.ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.
அப்பெண்மணி, "(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும்வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத்திருப்திப்படுத்த முடியவில்லை'' என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். நூல்:புகாரி 5825
மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட பெண் பச்சை நிறத்தில் முக்காடுஅணிந்திருந்தார் என்றும் தனது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துக் காட்டினார்என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இயல்பான ஆடையைத் தான் தங்களது பர்தாவாக ஆக்கினார்கள்என்பதை இதன் மூலம் புரிகின்றோம். பொதுவாக ஆடைகளை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும் என்று மார்க்கம் போதிக்கின்றது. இந்த அடிப்படையில் ஆண்கள் எவ்வாறு தங்களது ஆடைகளை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள உரிமை பெற்றிருக்கின்றார்களோ அது போன்ற உரிமை பெண்களுக்கும்இருக்கின்றது. பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று திருக்குர்ஆன்கூறும் அதே வேளையில் வெளிப்படையான அலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ளஅனுமதியளிக்கின்றது. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக்கொள்ளட்டும். அல்குர்ஆன் (24:31)
மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை அன்னியஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

பெண்களின் ஆடைகளில் வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும்.தேவை கருதி இந்த அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆடைகளில் இரண்டுவகைகள் இருக்கின்றது. சாதாரண ஆடைகள் பிறருடைய கவனத்தை ஈக்கும் வகையில் அமைந்த ஆடைகள்.பிறரை ஈர்க்கும் வகையில் அமைந்திராத சாதாரண அலங்காரங்கள் உள்ள ஆடைகளை பெண்கள் அணிவதைத்தான் மேற்கண்ட வசனம் அனுமதிக்கின்றது.

எந்த ஆடைகள் மிகவும் கவர்ச்சியாகவும் பிறர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றதோ அது போன்றஅலங்கார ஆடைகளைப் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்பு அணிந்துவரக் கூடாது. எனவே பெண்கள் அணியும்பர்தா என்பது பொதுவாக மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வகையில் உள்ளஅலங்காரங்களைக் கொண்டிருந்தால் அதை அணிவது தவறல்ல.

எந்த வகையான அலங்காரங்கள் மக்களை விட்டும்தன்னை தனிமைப்படுத்தி காட்டக்கூடியதாகவும் பிறர் கவனத்தை தன்பால் ஈர்க்கக்கூடியதாகவும் அமைந்துள்ளதோஅது போன்ற அலங்காரங்கள் உள்ள பர்தாவை அணியக்கூடாது.

புதன், செப்டம்பர் 19, 2012

''தந்திரம்" ஒர் விளக்கம்


அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே. அல்லாஹு தஆலா தனது படைப்புகளில் கண்ணியமிக்க படைப்பாக மனித இனமாகிய நம்மை படைத்து நமக்கு வழிகாட்டியாக நபிமார்களில் கடைசி நபியாகிய முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பிவைத்தான். நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தினராகிய நமக்கு உலக வாழ்க்கையை முழுமையாக கற்றுத்தந்தார்கள். அப்படி கற்றுத்தந்த விஷயங்களில் ஒன்று தந்திரம் செய்வது பற்றியாகும்.

"தந்திரங்கள்" என்பது அரபி மூலத்தில் "அல்ஹியல்" என்று சொல்லப்படும். ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும் சாமர்த்தியமான வழிமுறைக்கே "தந்திரம்" என்பர். தடை செய்யப்பட்ட ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காகவும், பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவும் தந்திரத்தைக் கையாள்வது மார்க்கத்தில் வரவேற்கப்படுகிறது. அதே சமயம், ஒருவரின் உரிமையைப் பறிப்பதற்காக தந்திரம் செய்வது சட்டமீறலும் பாவமுமாகும்.

தந்திரங்களை அறிஞர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கின்றார்கள்,

1. உண்மையை மறுப்பதற்கோ, பொய்மையை நிலைநாட்டுவதற்கோ தந்திரம் செய்வது. இது தடை செய்யப்பட்டதாகும்.

2. உண்மையை நிலைநாட்டுவதற்கோ, பொய்மையை அழிப்பதற்கோ தந்திரம் செய்வது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

3. வெறுக்கப்பட்ட செயலில் இருந்து தப்பிப்பதற்காக தந்திரம் செய்வது. இதுவும் அனுமதிக்கப்பட்டதாகும்.

4. விரும்பத் தகுந்த செயலைக் கைவிடுவதற்காக தந்திரம் செய்வது. இது வெறுக்கப்பட்டதாகும்.

இவை அனைத்திலும் தந்திரத்திற்காக மேற்கொண்ட வழிமுறை அனுமதிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். இல்லையேல் இவற்றில் எந்த வகையும் கூடாது. (ஃபத்ஹுல் பாரி)

எடுத்துக்காட்டாக, இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். அன்னார் நோயுற்றிருந்தபோது, தம் துணைவியார் மீது ஏற்பட்ட ஒரு கோபத்தால் ''நான் குணமடைந்த பிறகு உன்னை நூறு கசையடி அடிப்பேன்" என்று சத்தியம் செய்துவிட்டார்கள். நோய் குணமான பின், இவ்வளவு காலம் தம் மீது பிரிவு காட்டி பணிவிடை புரிந்த துணைவியாரை அடிக்க அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் சத்தியத்தை நிறைவேற்றாமல் இருக்கவும் முடியாது . இப்பிரச்சினைக்கு அல்லாஹ் ஒரு தீர்வை அறிவித்தான். ''ஒரு கைப்பிடி புற்களைக் கொண்ட ஒரு கற்றை எடுத்து அதைக்கொண்டு உம் துணைவியாரை அடிப்பீராக!" என அல்லாஹ் கட்டளையிட்டான். இதன் மூலம் துணைவியாரை கசையடியிலிருந்து காப்பது மட்டுமின்றி, சத்தியத்தை மீறிய குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதை அல்குர்ஆனின் 38:44ஆவது வசனம் எடுத்துரைக்கிறது. (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

நல்ல நோக்கத்திற்காக சில வேளை களில் தந்திரங்களை கையாள்வது அனுமதிக்கப் பட்டதாக இருப்பினும், பொதுவாகத் தந்திரங்களைக் கைவிட்டு நேர்வழியைக் கையாள்வதே சிறந்ததாகும். பின் வரும் ஹதீஸில், உம்மு கைஸ் எனும் பெண்மணியை மணமுடிப்பதற்காக ஹிஜ்ரத் செய்த ஒருவரைப் பற்றிக் கூறும்போது,

''அதுதான் அவருக்கு கிடைக்கும், ஹிஜ்ரத்தில் நன்மை கிடைக்காது" என நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் (நூல்: புகாரி, உம்ததுல் காரீ, ஃபத்ஹுல் பாரி).

இது ஒரு தந்திரம். தந்திரம் செய்பவரின் எண்ணத்திற்கேற்பவே அவரது செயலுக்குப் பலனும் கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஜகாத்தைப் பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (கடிதம்) எழுதியபோது,

"ஜகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும் ஒன்று சேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது'' என்று குறிப்பிட்டிருந்தார்கள் (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் நூல்: புகாரி).

ஒருவர் தம் மீது கடமையாகியுள்ள ஜகாத்தை வழங்காமல் இருப்பதற்காக கணக்கு வழக்கில் தந்திரம் செய்வது கூடாது. இருவருக்கு கூட்டாக உள்ள பொருளை மொத்தமாகக் கணக்கிட்டால் ஸகாத் கடமையாகிவிடும் என அஞ்சி, தனித்தனியாக பிரித்துக் காட்டுவதும், தனித்தனியாக கணக்கிட்டால் கூடுதல் ஜகாத் வழங்க வேண்டி வந்துவிடும் என்பதற்காக மொத்தமாக கணக்குக் காட்டுவதும் இவ்வகை தந்திரத்தில் சேரும்.

உதாரணமாக, 40 முதல் 120 ஆடுகள் வரை இருந்தால் ஒரு ஆடு ஜகாத்தாக வழங்கப்படவேண்டும் என்பது சட்டம்; இந்நிலையில், இருவருக்கு தலா 40 ஆடுகள் வீதம் 80 இருந்தன. முறைப்படி அவ்விருவரில் ஒவ்வொருவரும் தலா ஓரு ஆடு ஜகாத்தாக வழங்க வேண்டும். இந்த அளவை குறைப்பதற்காகத் தனித்தனியாக இருந்த பங்குகளை மொத்தமாக கணக்குக்காட்டி 80 ஆடுகளுக்கு ஓர் ஆட்டை மட்டும் அவர்கள் ஜகாத்தாக வழங்க தந்திரம் செய்தனர். இதைப்போன்றே, இருவருக்கு கூட்டாக 40 ஆடுகள் இருந்தன. இப்போது ஓர் ஆடு ஜகாத்தாக வழங்கப்பட வேண்டும். ஆதலால், ஜகாத் கொடுக்காமல் தப்பிப்பதற்காக தலா 20 ஆடுகள் என்று தனித்தனியாக கணக்குக் காட்டி தந்திரம் செய்தனர். 40 ஆடுகளுக்கு குறைவாக இருந்தால் ஜகாத் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஜகாத்தில் தந்திரம் செய்வது கூடாது. (இர்ஷாதுஸ் ஸாரி)

அவ்வாறே திருமண விஷயத்தில் அல்லாஹ் கடமையாக்கிய மஹர் வழங்காமல் இருப்பதற்காக தந்திரத்தை மேற்கொள்வதும் தவறானதாகும்.

நாஃபிவு (ரஹ்) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஷிகார்' திருமணத்தை தடை செய்தார்கள்" என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள்.

உடனே நான் நாஃபிவு அவாகளிடம், ஷிகார் திருமணம் என்றால் என்ன? என்று கேட்டேன். அவர்கள் ஒருவர் மணக்கொடை (மஹர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்கு தனது மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து கொண்டு (அதற்கு பதிலாக) அவருக்கு தன் சகோதரியை மணமுடித்து வைப்பதாகும் என்று பதிலளித்தார்கள் (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் அல்அம்ரீ (ரஹ்) நூல்: புகாரி).

ஒரு கொடுங்கோல் மன்னனின் பிடியிலிருந்து தனது மனைவியை காப்பாற்றுவதற்காக இப்றாஹீம் (அலை) அவாகள் தனது மனைவியை தன் சகோதரி என கூறினார்கள். இது போன்ற சந்தர்ப்பத்தில் தந்திரத்தை கையாள்வது தவறில்லை என்பதை இப்றாஹீம்(அலை) அவர்கள் அவ்வாறு கூறியதை இறைவன் கண்டிக்காமல் அக்கொடுங்கோல் மன்னன் அவர் மனைவியை நெருங்கிய பொழுது இறைவன் உதவியால் அவன் கைகள் செயல்பட முடியாமல் போனதும் அவர் மனைவியின் துவாவினால் அது சரியானதிலிருந்தும் விளங்கிக்கொள்ள முடிகிறது. எனவே ஒருவரை ஒரு இக்கட்டிலிருந்து பாதுகாப்பதற்காக தந்திரம் கையாள்வதில் தவறில்லை என்பதையும் இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் பள்ளியில் இருக்கின்ற பொழுது ஒரு மனிதர் வந்தார். அவர் யாரஸூலுல்லாஹ் என்னை கடுமையான பசி வாட்டுகிறது என்றார். உடனே நபி (ஸல்) அவாகள் தனது மனைவியர்களிடம் ஒரு ஸஹாபியை வந்த மனிதருக்காக உணவு கேட்டுவரும்படி அனுப்பினார்கள். தனது மனைவிமார்களிடத்தில் எந்த உணவும் கிடைக்கவில்லை என்று அறிந்த நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்களை பார்த்து, இன்று இரவு ஒரு மனிதர் விருந்தாளியாக வந்திருக்கிறார், அவருக்கு விருந்து கொடுக்க யாராகிலும் இருக்கின்றீர்களா? அல்லாஹ் ரஹ்மத் செய்வான் என்று சொன்னார்கள்.

உடனே ஒரு அன்ஸாரி தோழர் எழுந்து நான் அழைத்துச் செல்கிறேன் யா ரஸூலுல்லாஹ் என்று சொன்னார். உடனே அந்த விருந்தாளியை அழைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வருகிறார்கள். தன்னுடைய மனைவி இடத்தில் இவர் ரஸூலுல்லாஹ்வின் விருந்தாளியாவார். எதையும் மறைத்து வைக்காமல் கொண்டுவா என்றார்கள். அப்போது அன்ஸாரியின் மனைவி அல்லாஹ்வின் மீது சத்தியமாக குழந்தைகளுக்குரிய உணவைத் தவிர வேறு ஏதும் இல்லை என்றார்கள். இப்போது அன்ஸாரி தோழர் தனது மனைவியிடத்தில் குழந்தைகளை உறங்க வைத்துவிடு. பிறகு விளக்கை அணைத்துவிடு. இன்று இரவு பட்டினியாக இருந்துவிடுவோம் என்றார்கள். அவ்வாறே விருந்தாளியை கவனித்து அனுப்பிவைத்தார்கள். மறு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்த போது நபி (ஸல்) அவாகள், இன்னார் விடயத்தில் அல்லாஹ் ''தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்." என்ற வசனத்தை (59:9) வஹி இறக்கினான் என்று சொன்னார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி)

இதிலிருந்து பொதுவாக நல்ல காரியங்கள் செய்வதற்கும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும் மார்க்க வரம்பை மீறாத வகையில் தந்திரங்களை கையாள்வதில் தவறில்லை என்பது மட்டுமல்ல அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே மார்க்கம் அனுமதித்த வழிகளில் நல்ல காரியங்களுக்கு மட்டும் தந்திரங்களை சரியான முறையில் கையாளும் நல்லோர்களாக நம் அனைவரையும் வல்ல நாயன் ஆக்கியருள்வானாக. ஆமீன்.

தொகுப்பு: சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி

இஸ்லாத்தில் பொறுமை


வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் "பொறுமை" என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுமை என்பது இறைவனிடத்தில் இருந்து வருகின்ற ஓர் அருள் (ரஹ்மத்) ஆகும். பொறுமைக்கெதிரான குணங்கள் "உணர்ச்சிவசப்படுதல்" அல்லது "கோபம் கொள்ளுதல்" என்பதை நன்கு அறிந்திருந்தாலும், நடைமுறையில் இவற்றிற்கே பலர் அடிமையாக உள்ளனர்.

மனிதனுக்கு ஏற்படும் பல துன்பங்களுக்கு மூல காரணம் இக்கோபம் தான். இன்று உலகெங்கிலும் நடக்கும் அநியாய சண்டை, சச்சரவுகள் மற்றும் பேரிழப்புகளுக்குக் காரணம் இக்கோபமே!

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்! ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) எனும் அல்குர்ஆனின் (103:1-3) திருவசனத்தின் மூலம் இறைவன் உணர்த்தும் விஷயம் என்னவென்று நாம் சிந்தித்ததுண்டா?

இறைநம்பிக்கையுடன் நற்காரியங்களைச் செய்வது, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் நல் உபதேசம் செய்வது ஆகிய குணங்களை இறைவன் இவ்வசனத்தின் மூலம் உணர்த்துகின்றான்.

இவ்வுலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு மனிதன் மேற்கண்ட இவற்றைச் சரியான முறையில் கடைபிடித்தால் ஏற்படும் உலக அமைதிக்கான அடிப்படை விதிகளை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான். அத்துடன், இம்மை, மறுமை எனப்படும் ஈருலகிலும் நஷ்டங்களைத் தவிர்க்கும் சிறந்த வழிகளையும் தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் (சஹீஹ் புஹாரி, முஸ்லிம்) என்பதை அறிவித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தைத் தடுக்க இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடும் முறையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பது தமிழ் மக்களிடையே வழக்கில் உள்ள சொல்லாகும். கோபத்தால் புத்தி பேதலித்து சிந்திக்காமல் செயல்படுவதனால் வரும் பின் விளைவுகள் வருத்தங்களாக, இழப்புகளாக முடிவதைக் காண்கிறோம்.

உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்துத் தவறாக எண்ணத்துடன் உணர்ச்சி வசப்படுவானாயின் பின் விளைவுகளைப் பற்றி அக்கணத்தில் சிந்திக்காமல் பலாத்காரத்திற்குத் துணிந்து விடுகிறான். தேர்விலோ, அல்லது வேலை வாய்ப்புகளிலோ தோல்வியைத் தழுவும் ஒருவன் தவறுகளுக்கான காரணங்களைச் சிந்திக்காததினால் தற்கொலைக்குச் சென்று விடுவதைக் காண்கிறோம்.

ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று உள்மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடையில்லாமல் இல்லை. ஏனெனில், அறிவுள்ள சிந்தனைக்குத் தடை விதித்து கட்டுப்பாடற்று உணர்ச்சி வசப்படவைக்கும் ஷைத்தானின் ஆட்சி மனிதனின் மனதிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. அலைபாயும் மனதினைக் கட்டுப்படுத்த உணர்வலைகள் அடங்கி அறிவு மேலோங்கும் ஒரு நிமிட நேரம் போதும். அதன் பின் தவறு இழைக்க எண்ணும் மனிதனின் மனதிற்குக் கடிவாளம் கிடைத்துவிடும்.

கோபத்தைத் தணிக்க உங்களில் ஒருவருக்கு தான் நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட்டால் உடனே அமர்ந்து விடுவீராக: இன்னமும் கோபம் அவரை விட்டு நீங்கவில்லை எனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்! - அபூதர்(ரலி) நூல்: திர்மிதி என இறைத்தூதர் கூறிவிட்டுச் சென்றிருப்பதை நினைவு கூர்வோம்.

கோபம் என்பது இறைவன் மனிதனுக்களித்த பண்புகளில் ஒன்றாக இருப்பினும், அக்கோபம் கடுமையான நோயாக மாறி விளைவுகளை விபரீதப்படுத்துவதிலிருந்து தவிர்க்க பொறுமை என்ற மருந்தைக் கொண்டு தீர்க்க வேண்டும். சகிப்புத்தன்மைக்கு மற்ற பெயரான பொறுமையை நாம், நம் குடும்பத்தினரிடமிருந்து துவங்கி பழகிய பின்பு சமுதாய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

எவனொருவன் (தன் வாழ்வில்) துன்பங்கள் நேரிடும்போது அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் சகிப்புத் தன்மையை வழங்கி விடுகிறான். (துன்பங்களைச்) சகித்துக் கொள்ளும் தன்மையை விட சிறந்த ஒரு அருட்கொடையை எவரும் பெற்றதில்லை. அபூசையித் அல் குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லிம்

பொறுமையுடன் சகித்துக் கொள்வது இறைவனின் அருட்கொடை என்றால் அதனைப்பெற நாம் முயற்சிக்கவேண்டாமா? கோபத்தை மனிதனுக்கு அளித்த இறைவனே அதனை முறியடிக்கும் மருந்தான பொறுமை பற்றியும் கூறுகிறான்.

2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

3:200 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

11:11 ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.

11:115 (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.

மேலும் அல் குர் ஆனில் பொறுமையின் அவசியத்தை விவரிக்கும் மேலும் ஏராளமான இறைவார்த்தைகள் காணக்கிடைக்கின்றன. (பார்க்க: 2:45, 2:155, 2:156, 2:177, 2:249, 3:17, 3:120, 3:125, 3:142, 3:146, 3:186, 3:200, 4:25, 7:87, 7:126, 7:128, 8:46, 8:65, 8:66, 10:109, 11:11, 12:18, 12:83, 13:22, 13:24, 16:42, 16:96, 16:110, 16:126, 16:127, 17:44, 18:28, 18:68, 19:65, 20:132, 22:35, 23:111, 25:75, 28:54, 29:59, 30:60, 32:24, 33:35, 38:17, 40:55, 40:77,41:35, 42:33, 46:35, 50:39, 54:27, 70:5, 74:7, 76:12, 76:24, 90:17)

எத்தகைய சூழலையும் பொறுமையோடு சிந்தித்து செயல்பட்டால் வெற்றியைத் தான் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான். ஆதலால், இறைவா! நாம் அனிச்சையாய் கோபப்படும் சமயத்தில் கூட ஷைத்தானை விரட்டியடித்து நீ கூறிய அருட்கொடையாம் பொறுமையை எனக்குத் தந்தருள்வாயாக என்று நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அதற்கான பலன்களை ஈருலகத்திலும் அடைவோம்!
ஆக்கம்: ஷர்புத்தீன் உமரி

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

அணுசக்தி வேண்டாம்; ஆனால்...


அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள
் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது!


"அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.15/6

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற பல சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்.15/10

எந்தத் தூதர் அவர்களிடம் வந்தாலும், அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததேயில்லை.15/11

குற்றவாளிகளின் உள்ளங்களில் இவ்வாறே இதைப் புகுத்துகிறோம்.15/12

அவர்கள் இதை நம்ப மாட்டார்கள். முன்னோர்கள் (மீது எடுத்த) நடவடிக்கை முன் உதாரணமாகச் சென்று விட்டது.15/13


உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!15/94

கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.15/95

அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.15/97

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!15/98

உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக15/99.

பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியாக நம்பாதோர் உம்மை இலேசாகக் கருதிட வேண்டாம்.30/60

தொந்தரவு தருவதைத் தவிர அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. உங்களுடன் போருக்கு வந்தால் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள் [சூராஆலு இம்ரான்.111]

அமெரிக்காவின் உண்மை ? நிலை ?
என்ன தெரியுமா ?
அவர்கள் ஒழுக்கங்களும் ?
கற்ப்பு நெறியும் ?
இதனை முழூவதும் ஆக படியுங்கள் ...
படித்த பிறகு உலகம் முழுவதும் இந்த
தகவலை கொண்டு சேருங்கள் ...............
..
அமெரிக்காவின் கலாச்சார சீரழிவு -
உங்க அப்பா யாருன்னு தெரியுமா?
நியூயார்க்கில் நடமாடும் வாகனம்!
ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம்
செய்வது அம்மா. ஆனால் அப்பா யார்
என்று தெரிந்து கொள்ள
ஆசைப்படுபவர்கள்
மரபணு சோதனை செய்துக்கொள்ளுங
்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க்
நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது
ஒரு வாகனம்.
இந்த வாகனத்தில்
மரபணு சோதனை நடத்துவதற்கான
அனைத்து பரிசோதனை வசதிகளும்
உள்ளன. நிபுணர்கள் தயாராக
உள்ளனர்.
மரபணு சோதனை நடத்துவதற்காக,
ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய்
வசூலிக்கப்படுகிறது. தினமும்
நியூயார்க் நகரின் முக்கிய
சாலைகளை சுற்றி வரும்போது மக்கள்
நடமாட்டம் அதிகம் உள்ள
ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம்
நிறுத்தப்படுகிறது. ஏராளமான
ஆண்கள், தங்கள்
குழந்தைகளை அழைத்து வந்து இந்த
குழந்தை தங்களுக்குப் பிறந்ததுதானா?
என்று பரிசோதனை செய்கின்றனர்.
அந்த ஆய்வு முடிவுகள் சில
நாட்களுக்குப் பின்னர்
அவர்களுக்கு இமெயில் மூலமாகவோ,
கடிதம்
மூலமாகவோ அவர்களுக்கு அனுப்பிவைக்கப்ப
டுகிறது.
இதுபோன்ற
சோதனை நடத்துவதற்கு அமெரிக்காவில்
கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபோன்ற சோதனைகள் மூலம்
ஏராளமான
தம்பதிகளிடையே தேவையற்ற
மனக்கசப்பு ஏற்படுகிறது என்றும்
சமூக ஆர்வலர்கள் புகார்
கூறியுள்ளனர். அமெரிக்காவில்
ஏற்கனவே விவாகரத்துகள்
அதிகரித்து வருகின்றன. இந்த
நிலையில் இதுபோன்ற
சோதனைகளினால் குடும்ப
வாழ்க்கையில் விரிசல்கள் அதிகம்
ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
ஆனால் ஒரு சிலரோ இதுபோன்ற
மரபணு சோதனைக்கு வரவேற்பு அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளனர
்.
நிலைமை இப்படி இருக்க இந்த
கேடுகெட்ட நாய்
நம்மலபார்த்து குலைக்குது ..............
கண்ணியமான இந்த மார்க்கத்தை நீ
அல்ல
இன்னும் எத்தனை !
தலைமுறை வந்தாலும்
அசைக்க கூட முடியாது .........
அல்லாஹ் அக்பர் ! அல்லாஹ் அக்பர் !!
அல்லாஹ் அக்பர் !!! அல்லாஹ்
அக்பர் !!!
தகவல் :

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

சுன்னாவின் ஒளியில் பெருநாள்



அரபு மொழியில் பெருநாள் என்பதற்கு ‘ஈத்’ என்று சொல்லப்படும். உண்மையில் ஈத் என்றால் திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, மதீனாவாசிகள் ஜாஹிலிய்யாக் கால இரு பெருநாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்குப்பதிலாக அவற்றை விடச்சிறந்த இரண்டு பெருநாட்களை அல்லாஹ் உங்க ளுக்குத் தந்துள்ளான். அவை & ஒன்று அறுத்துப் பலியிடும் நாளாகிய (ஈதுல் அழ்ஹா), மற்றையது ஈதுல் பித்ர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸஈ

இந்த வகையில் ரமலான் முழுக்க நோன்பு நோற்ற பின் ஷவ்வால் மாதம் முதல்பிறை பார்த்ததும் கொண் டாடப்படும் பெருநாள் ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளாகும்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிட முன் வந்ததை நினைவு கூறும் விதமாக துல்ஹஜ் மாதம் பிறை 10ல் கொண்டாடப்படும் பெருநாளே ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளாகும்.

சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி வெள்ளிக் கிழமை தினமும் ஒரு பெருநாளாகும். இவை தவிர வேறு எந்தப் பெருநாட்களும் இஸ்லாத்தில் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்.

பெருநாளைக் கொண்டாடுவது எப்படி—?

பெருநாட்களை அடையாளப்படுத்திய நபி (ஸல்) அவர்கள், அவற்றை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளார்கள்.

புத்தாடை அணிவது

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் சந்தையிலிருந்து பட்டாடை ஒன்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்களி டம் கொடுத்து, இதை பெருநாளைக்கும், பிரமுகர்கள் வந்தால் அணிவதற்குமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அது பட்டு என்ற காரணத்தினால் அதை வாங்க நபியவர்கள் மறுத்து விட்டார்கள். (புகாரி ஹதீஸின் சுருக்கம்)

இதிலிருந்து பெருநாளைக்குப் புத்தாடை அணிகிற வழக்கம் இருந்ததனாலேயே உமர் (ரலி) அவ்வாறு கூறினார்கள் என்பதை உணர முடிகிறது.

ஸஹாபாக்கள் புத்தாடைகளை அல்லது அவர்களிடம் உள்ள ஆடைகளில் சிறந்ததைப் பெருநாள் தினங்களில் அணிந்திருப்பதை ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

திறந்த வெளியில் (திடலில்) பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 2ம் ஆண்டு நோன்பு கடமையாக்கப்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகையையும் தொழுது வந்துள்ளார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மஸ்ஜிதில் தொழுததற்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் கிடையாது. மஸ்ஜிதுந் நபவியில் ஒரு தொழுகை தொழுவது (மஸ்ஜிதுல் ஹராம் தவிர) ஏனைய பள்ளிகளில் 1000 தொழுகை தொழுவதை விடவும் சிறந்ததாக இருந்தபோதிலும் நபியவர்கள் பெருநாள் தொழுகையைத் திடலிலேதான் தொழுது வந்தார்கள். (புகாரி)

ஓர் ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று கூடி பெருநாளைக் கொண்டாடுவது பெருநாள் தினத்தை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்குவதற்கு சிறந்த வழி என்பதால் கூட நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.

மழை அல்லது திறந்தவெளி இல்லாமை போன்ற சந்தர்ப்பங்களில் பள்ளிகளில் தொழுவதில் எவ்வித குற்றமுமில்லை என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெருநாள் தொழுகை நடைபெறும் திடலுக்கு மாதவிடாயுள்ள பெண்களும் வருகை தந்து தொழாது அங்கு அமர்ந்திருப்பதும் நபிவழியாகும். (புகாரி, முஸ்லிம்)

நோன்புப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லும் முன் சாப்பிடல்

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் பேரீத்தம் பழங்கள் சிலவற்றைச் சாப்பிடாமல் (தொழுகைக்குச்) செல்ல மாட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)

எனவே, நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன் பேரீத்தம் பழங்களைச் சாப்பிடுவது சுன்னத்தாகும். பேரீத்தம் பழம் கிடைக்காதபோது வேறு எதையாவது சாப்பிட்டு விட்டுச் செல்வதே சிறந்தது.

தக்பீர் சொல்வது

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று தமது வீட்டை விட்டுப் புறப்படுவதிலிருந்து தொழும் இடம் வந்து தொழுகையை முடிக்கும் வரை தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்
ஆதார நூல்: முஸன்னப் இப்னு அபீ ஷைபா

ஆண்கள் சப்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் தக்பீர் சொல்ல வேண்டும். கூட்டமாக தக்பீர் சொல்வது நபிவழிக்கு முரணான ஒரு செயலாகும்.

தக்பீர் எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றி எவ்வித நபிமொழிகளும் காணப்படவில்லை. தக்பீர் என்றால் பொதுவாக ‘அல்லாஹ§ அக்பர்’ என்று கூறுவதையே குறிக்கும். எனவே ‘அல்லாஹ§ அக்பர்’ என்று கூறிக் கொண்டால் போதுமானது.

இருப்பினும், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ§ வல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர் வலில்லாஹில் ஹம்து” என்று தக்பீர் கூறியுள்ளார்கள். (ஆதார நு£ல்கள்: தாரகுத்னீ, இப்னு அபீ ஷைபா. பார்க்க: இர்வாஉல் கலீல் (6501))

மேலும் ஸல்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பரு கபீரா” என்று (தக்பீர்) கூறி இருக்கிறார்கள் (ஆதார நு£ல்கள்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக், பைஹகீ)

இவற்றிலிருந்து ஒருவர் அல்லாஹ§ அக்பர் என்பதை விட அதிகமாக மேற்கூறப்பட்டவாறு கூறினால் அதில் தவறில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தொழுகைக்காக நடந்து செல்வது

பெரும்பாலும் நபியவர்கள் பெருநாள் தொழுகைக்கு நடந்தே சென்றுள்ளனர். (திர்மிதி, இப்னு மாஜா)

தொழுகை நடைபெறும் இடம் து£ரத்தில் இருப்பின் அங்கு வாகனங்களில் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.

செல்லும்போது ஒரு வழியில் சென்று, திரும்பும்போது வேறு வழியில் திரும்புவது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையிலிருந்து (திரும்பும் போது சென்ற வழியாக இல்லாமல்) வேறு வழியாகத் திரும்புவார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

பெருநாளன்று குளிப்பது

பெருநாள் தினத்தில் குளிப்பது நபி வழி என்பதை அறிவிக்கக்கூடிய எந்த வித ஹதீஸ்களும் காணப்படவில்லை. இருந்தும் இப்னு உமர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் குளித்துள்ளதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் காணப்படுகின்றன.

பெருநாள் தொழுகையின் முறை

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். அதற்கு முன்னரோ, பின்னரோ எவ்வித தொழுகையும் கிடையாது. மேலும் பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தன்று 2 ரக்அத்துக்கள் தொழுதார்கள். அதற்கு முன்னரோ, பின்னரோ எதையும் தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு முறையல்ல, இரு முறையல்ல (பல முறை) பாங்கும், இகாமத்தும் இல்லாமல் (பெருநாள் தொழுகையைத்) தொழுதுள்ளேன் என்று ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

‘அஸ்ஸலாது ஜாமிஆ’ போன்ற வார்த்தைகளைக் கூறுவதற்கும் ஆதாரங்கள் கிடையாது. எனவே நேரடியாகத் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.

முதல் ரக்அத்தில் ஆரம்ப தக்பீர் கட்டிய பின்பு 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின் தக்பீர் இல்லாமல் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். (அபூதாவூத் இப்னு மாஜா)

ஒவ்வொரு தக்பீருக்கும் இடையில் கைகளை உயர்த்திக் கட்டுவதற்கு ஆதாரங்கள் கிடையாது. மேலும் அவற்றுக்கு இடையில் கூறுவதற்கு என்று எந்தவித வாசகங்களும் ஹதீஸ்களில் வரவில்லை. இவை தவிர ஏனைய செயல்கள் மற்ற தொழுகைகள் போன்றே அமையும்.

தொழுகை முடிந்த பின்னர் ஒரு குத்பாப் பிரசங்கம் இடம்பெறும். அதற்கு மிம்பர் அவசியமில்லை. மேலும் அந்த குத்பா ‘ஹம்து ஸலவாத்தை’க் கொண்டே ஆரம்பிக்கப்பட வேண்டும். தக்பீரைக் கொண்டு ஆரம்பிப்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது.

குத்பாவைக் கேட்பதே சிறந்ததாகும். கேட்க விரும்பாதோர் கலைந்து செல்வதற்கு அனுமதியுள்ளது.
நிச்சயமாக நாங்கள் குத்பா ஓதுகிறோம். அதைக் கேட்பதற்காக இருக்க விரும்புவோர் இருக்கலாம். செல்ல விரும்புவோர் செல்லலாம் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, ஹாகிம்)

பெருநாள் தொழுகை வெள்ளிக் கிழமை தினத்தில் வந்தால் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியவர் விரும்பினால் ஜும்ஆ தொழுகைக்கு வரலாம். விரும்பினால் வராமல் இருக்கலாம்.

இன்றைய நாளில் இரு பெருநாட்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்குப் போதுமானதாகும். இன்ஷா அல்லாஹ் நாம் இரண்டையும் தொழுவோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹ§ரைரா (ரலி), நு£ல்: அபூதாவூத், இப்னுமாஜா

பெருநாள் தினத்தில் தவிர்க்க வேண்டியவை

பெருநாள் மகிழ்ச்சியான தினமாகும். இஸ்லாம் அனுமதித்த முறையில் மகிழச்சியாகவும், சந்தோஷமாகவும் பெருநாளைக் கொண்டாட வேண்டும் அந்நாளிலும் இஸ்லாமிய வரையறைகளைத் தாண்டுவது ஹராமாகும். இந்த வகையில் சிலர் மார்க்கத்தின் பெயரால் அன்றைய தினம் அடக்கஸ்தலங்களை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பொதுவாக மண்ணறைகளைத் தரிசிப் பது ஆர்வமூட்டப்பட்டிருந்தாலும், பெருநாள் தினங்களில் குறிப்பாக அவ்வாறு செய்வது ஆதாரமற்றதாகக் காணப்படுகிறது.

நல்லமல்களைத் தொடர்ந்து, நல்லமல்கள் செய்வது அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாகும். இருந்தும் பெரும்பாலான சகோதரர்கள் ரமலான் முழுக்க நோன்பு நோற்று, இரவு வணக்கங்களில் ஈடுபட்டு பெருநாள் தினத்தில் இஸ்லாம் தடை செய்த சினிமா, சூதாட்டம் மற்றும் வீணான கேளிக்கைகள் போன்றவற்றில் நேரங்களை விரையமாக்குவது தடுக்கப்பட வேண்டிய செயல்களாகும்.

சிலர் வீண் விரயங்களில் ஈடுபடுகின்றனர். பெருநாள் தினமாக இருந்தாலும் அல்லது வேறு தினங்களாக இருந்தாலும் வீண் விரயம் செய்வது ஹராமாகும். வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் தோழர்களாவர்.

இன்னும் சிலர் பெருநாள் தினங்களில் பர்ழான தொழு கைகள் விஷயத்தில் பொடுபோக்காகக் காணப்படுவர். எந்தச் சந்தர்ப்பதிலும் தொழுகையை விடுவதற்கோ, உரிய நேரத்தை விட்டு பிற்படுத்துவதற்கோ மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

எனவே, ரமலானில் நோன்பு நோற்று இன்ன பிற வணக்கங்களில் ஈடுபட்ட நாம் நமது பெருநாளையும் இஸ்லாமிய வரையறைகளுக்குள் சுன்னாவின் ஒளியில் அமைத்துக் கொள்வோமாக!

- அபூ அதீ ஸலஃபீ

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!



- அபூ ஃபாத்திமா
எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை.
எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே - ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம்.
இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த "வல்லனவற்றின் வாழ்வு வளம்" புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும்.
இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே - புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக - மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?
இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை.
மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள்.
ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் "வல்லனவற்றின் வாழ்வு வளம்" (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.
பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?
நன்றி: Readislam.net

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

திருக்குர்ஆனில் பெண்கள்!


ஆண்கள் உலகில் பெண்கள் காலாகாலமாக பல கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களை மிக உயர்ந்த உன்னதப் படைப்பாக பார்த்து கவுரவிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை மிக மட்டரகமாக பார்த்து இழிவுபடுத்தும் ஆண்கள் மறுபுறம்.

பெண்களை தாய்மையுடன் பார்த்து மதிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை வெறும் பாலியல் இயந்திரமாக பார்த்து பழகிப் போன ஆண்கள் மறுபுறம்.


மனிதப் பிறவியில் பெண் தனித்தன்மை வாய்ந்தவள் என்று உணர்ந்து மதிப்பவர்கள் ஒரு புறம் என்றால், அவளுக்கு ஆத்மா என்று ஒன்று உண்டா என்று காராசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் மறுபுறம்.

இப்படியாக ஆண்களின் பார்வையிலும் சிந்தனையிலும் பெண் பல நிலைகளில் பரிணமிக்கிறாள்.

பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த வரலாறு மிக நீண்டதாகும். 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளிலிருந்து பெண்கள் உரிமைப் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது எல்லைக் கடந்துப் போய் கொண்டிருக்கின்றது.

பெண்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அறிவாதாரத் தேவைகள் ஆகியவைத்தான் அவர்களுக்கான சரியான உரிமைகள் என்று ஆண்களில் ஒரு சாராரின் சிந்தனை வளர்ந்து அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உலக அழகிப் போட்டியும் உடைக்குறைப்பும் ஊர் சுற்றலுமே பெண்களுக்குத் தேவையான உரிமைகள் என்று அதற்காக பணத்தை அள்ளிக் கொட்டி பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆண்கள் கூட்டம் மறுபுறம்.

உண்மையில் பெண்களின் உரிமைகளை எப்படித் தீர்மானிப்பது என்பதில் பெண்களுக்கு மத்தியிலும் ஆண்களுக்கு மத்தியிலு்ம் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது என்றால் அதுதான் உண்மை.

பல்வேறு சாசன புத்தகங்கள், சட்ட புத்தகங்கள், அறிஞர் அவைகள் என்று அலசப்படும் இந்த விவாதத்தில் இதோ நாங்கள் குர்ஆனை முன் வைக்கிறோம். திருக்குர்ஆன் பெண்கள் பற்றி வரையறுத்துக் கொடுத்துள்ள அந்த சட்டங்களில் எது பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமோ அவ அனைத்தையும் நீங்கள் காணலாம்.திருக்குர்ஆன் வரையறுத்துக் கொடுத்துள்ள இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பெண்ணுரிமை என்ற விவாதமே தேவையற்ற ஒன்றாகி விடும்.

இஸ்லாம் பார்க்கும் பெண் இதோ தொடருங்கள்.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228)

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (திருக்குர்ஆன் 2:187)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

பொருள் திரட்டும் உரிமை
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. (திருக்குர்ஆன் 4:32)

கல்வி கற்றல், கற்பித்தல்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (திருக்குர்ஆன் 9:71)

சொத்துரிமை
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (திருக்குர்ஆன் 4:7)

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 4:12)

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:11)

பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (திருக்குர்ஆன் 4:176)

மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

திருமணக் கொடை (மஹர்) பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:24)

இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (திருக்குர்ஆன் 5:5)

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தன் மகளுக்கு திருமண கொடைக் கேட்டுப் பெற்ற முஸ்லிம்.
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர் என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 28:27)

மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா? (திருக்குர்ஆன் 4:20)

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)

பெண்களுக்குக் கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது.

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)

பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)

பாதுகாப்பு
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (திருக்குர்ஆன் 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (திருக்குர்ஆன் 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 24:23)

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். (திருக்குர்ஆன் 65:1)

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:129)

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:2)

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9)

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

பண்பாடு
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அழகில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 24:31)

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 33:59)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு. (திருக்குர்ஆன் 24:26)

திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 24:60)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (திருக்குர்ஆன் 33:32)

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 58:2)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (திருக்குர்ஆன் 24:27)

பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த சஹா னாஸ்




சென்னை : பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த சஹா னாஸ் போலீசில் அளித் துள்ள பரபரப்பு வாக்கு மூலம்: எனது பெயர் ஷானு என்ற சஹானாஸ். கேரள மாநிலம் பத்தனம் திட்டா எனது சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்து உள்ளேன். தந்தை சிறு வயதில் இறந்து விட்டார். தாயும் என்னை பிரிந்து சென்று விட்டார். உள்ளூரில் துணிக்கடையில் வேலை பார்த்தேன். வருமா னம் போதுமானதாக இல்லை. இதனால் வறுமை யில் வாடினேன்.

அப்போது, எங்கள் ஊரை சேர்ந்த
சித்திக் என் பவர் எனக்கு பண உதவி செய்தார். முதலில் நட்பாக பழகிய எங்களுக் குள் பின் காதல் மலர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திரு மணம் நடந்தது. சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்தது. பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், எங்களுக்குள் சிறு சிறு பிரச்னை ஏற்பட் டது. நாளடைவில் எங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விட்டோம். குழந்தையை சித்திக் அழைத்து சென்று விட்டார். அவர் இருக்கும் வரை பணத்துக்கு கவலை இல்லை. அவர் சென்ற பின் னர் மீண்டும் வறுமை, கவலை, பசி, பட்டினி தொடர்ந்தது.

இதனால் வேலை தேடி னேன். 2005ம் ஆண்டு இறுதியில் சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு ஆள் தேவை என மலையாள பத்திரிகை ஒன்றில் விளம்ப ரம் வந்தது. அதைப் பார்த்து இங்கு வந்து சம் சுதீன் என்பவரது சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சில காலம் வேலை பார்த்தேன். பின்னர் தரமணியில் உள்ள கால்சென்டர் ஒன்றில் வேலை கிடைத்தது. அப் போது நிறைய ஆண்களு டன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் நட்பு ரீதியில் பழகினேன். கணவன், குழந்தையை பிரிந்து தனிமையில் இருந்த எனக்கு இளைஞர்களின் தொடர்பு பிடித்திருந்தது.

புது உலகத்தில் இருப் பது போன்று தோன்றியது. அப்படி போன் தொடர்பு மூலம் திருச்சியை சேர்ந்த சினிமா ஆர்ட் டைரக்டர் ராகுலின் தொடர்பு கிடைத் தது. அவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து திருச்சி வேப்பூரில் 6 மாதம் குடும்பம் நடத்தினேன். அவருடனும் பிரச்னை ஏற்பட்டது.

பின்னர், 2009ம் ஆண்டு மீண்டும் வேப்பேரியில் உள்ள சம்சுதீன் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவரிடம் வீடு வாங்க வேண்டும் என்று ஏமாற்றி ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் வாங்கி னேன். பின்னர் அவரை பிரிந்து வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினேன். எல்லோரிட மும் வக்கீல் என்று சொன் னேன். நோட்டரி பப்ளிக் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி அவர்களி டம் ரூ.25 ஆயிரம் வீதம் பணம் பறித்தேன்.

அடையாறு சரவணன் ரூ.25 ஆயிரமும், 2 பவுன் செயினும் வாங்கிக் கொடுத் தார். முகலிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி திருமணம் செய்தேன். 2 மாதங்கள் மட்டுமே அவரு டன் வாழ்ந்த நான் அவரை பிரிந்தேன். இதன் பிறகு யானை கவுனியை சேர்ந்த ஒருவரு டன் பழக்கம் ஏற் பட்டு அவரையும் திருமணம் செய்தேன்.

மணிகண்டனுடன் நடந்த திருமணத்தை மறைத்து விட்டு அவருடன் குடும்பம் நடத்தினேன். அதன்பிறகு புளியந்தோப்பு பிரசன்னாவுடன் பழகி திருமணம் செய்தேன். இந்த 4 பேரை மட்டும்தான் திரு மணம் செய்தேன். 50 பேரை நான் திருமணம் செய்ததாக சொல்வது சரியில்லை. திருவொற்றியூர் சரவணன், அடையாறு சரவணன், தி.நகர் ராஜா, வேப்பேரி சம்சுதீன், புளியந் தோப்பு சுரேஷ் ஆகியோ ருடன் நட்புரீதியாகத்தான் பழகினேன்.

அவர்களை திருமணம் செய்யவில்லை என்றாலும் அவர்களின் விருப்பப்படி நடந்து கொண்டேன். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்களு டன் உல்லாசமாக இருந் தேன். தற்போது கர்ப்பமாக உள்ளேன். அதற்கு பிர சன்னாதான் தந்தை. பண ஆசை வாழ்க்கையின் பாதையை மாற்றி விட்டது. இனி என்ன செய்ய போகி றேன் என்று எனக்கு தெரிய வில்லை.இவ்வாறு சஹா னாஸ் வாக்குமூலம் அளித் துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த சஹா னாஸ்




சென்னை : பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த சஹா னாஸ் போலீசில் அளித் துள்ள பரபரப்பு வாக்கு மூலம்: எனது பெயர் ஷானு என்ற சஹானாஸ். கேரள மாநிலம் பத்தனம் திட்டா எனது சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்து உள்ளேன். தந்தை சிறு வயதில் இறந்து விட்டார். தாயும் என்னை பிரிந்து சென்று விட்டார். உள்ளூரில் துணிக்கடையில் வேலை பார்த்தேன். வருமா னம் போதுமானதாக இல்லை. இதனால் வறுமை யில் வாடினேன்.

அப்போது, எங்கள் ஊரை சேர்ந்த
சித்திக் என் பவர் எனக்கு பண உதவி செய்தார். முதலில் நட்பாக பழகிய எங்களுக் குள் பின் காதல் மலர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திரு மணம் நடந்தது. சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்தது. பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், எங்களுக்குள் சிறு சிறு பிரச்னை ஏற்பட் டது. நாளடைவில் எங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து விட்டோம். குழந்தையை சித்திக் அழைத்து சென்று விட்டார். அவர் இருக்கும் வரை பணத்துக்கு கவலை இல்லை. அவர் சென்ற பின் னர் மீண்டும் வறுமை, கவலை, பசி, பட்டினி தொடர்ந்தது.

இதனால் வேலை தேடி னேன். 2005ம் ஆண்டு இறுதியில் சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு ஆள் தேவை என மலையாள பத்திரிகை ஒன்றில் விளம்ப ரம் வந்தது. அதைப் பார்த்து இங்கு வந்து சம் சுதீன் என்பவரது சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சில காலம் வேலை பார்த்தேன். பின்னர் தரமணியில் உள்ள கால்சென்டர் ஒன்றில் வேலை கிடைத்தது. அப் போது நிறைய ஆண்களு டன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் நட்பு ரீதியில் பழகினேன். கணவன், குழந்தையை பிரிந்து தனிமையில் இருந்த எனக்கு இளைஞர்களின் தொடர்பு பிடித்திருந்தது.

புது உலகத்தில் இருப் பது போன்று தோன்றியது. அப்படி போன் தொடர்பு மூலம் திருச்சியை சேர்ந்த சினிமா ஆர்ட் டைரக்டர் ராகுலின் தொடர்பு கிடைத் தது. அவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து திருச்சி வேப்பூரில் 6 மாதம் குடும்பம் நடத்தினேன். அவருடனும் பிரச்னை ஏற்பட்டது.

பின்னர், 2009ம் ஆண்டு மீண்டும் வேப்பேரியில் உள்ள சம்சுதீன் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அவரிடம் வீடு வாங்க வேண்டும் என்று ஏமாற்றி ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் வாங்கி னேன். பின்னர் அவரை பிரிந்து வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினேன். எல்லோரிட மும் வக்கீல் என்று சொன் னேன். நோட்டரி பப்ளிக் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி அவர்களி டம் ரூ.25 ஆயிரம் வீதம் பணம் பறித்தேன்.

அடையாறு சரவணன் ரூ.25 ஆயிரமும், 2 பவுன் செயினும் வாங்கிக் கொடுத் தார். முகலிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி திருமணம் செய்தேன். 2 மாதங்கள் மட்டுமே அவரு டன் வாழ்ந்த நான் அவரை பிரிந்தேன். இதன் பிறகு யானை கவுனியை சேர்ந்த ஒருவரு டன் பழக்கம் ஏற் பட்டு அவரையும் திருமணம் செய்தேன்.

மணிகண்டனுடன் நடந்த திருமணத்தை மறைத்து விட்டு அவருடன் குடும்பம் நடத்தினேன். அதன்பிறகு புளியந்தோப்பு பிரசன்னாவுடன் பழகி திருமணம் செய்தேன். இந்த 4 பேரை மட்டும்தான் திரு மணம் செய்தேன். 50 பேரை நான் திருமணம் செய்ததாக சொல்வது சரியில்லை. திருவொற்றியூர் சரவணன், அடையாறு சரவணன், தி.நகர் ராஜா, வேப்பேரி சம்சுதீன், புளியந் தோப்பு சுரேஷ் ஆகியோ ருடன் நட்புரீதியாகத்தான் பழகினேன்.

அவர்களை திருமணம் செய்யவில்லை என்றாலும் அவர்களின் விருப்பப்படி நடந்து கொண்டேன். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்களு டன் உல்லாசமாக இருந் தேன். தற்போது கர்ப்பமாக உள்ளேன். அதற்கு பிர சன்னாதான் தந்தை. பண ஆசை வாழ்க்கையின் பாதையை மாற்றி விட்டது. இனி என்ன செய்ய போகி றேன் என்று எனக்கு தெரிய வில்லை.இவ்வாறு சஹா னாஸ் வாக்குமூலம் அளித் துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சனி, செப்டம்பர் 01, 2012

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு​ம் தூக்கம்: ஆய்வில் தகவல்


சீரான தூக்கம் நோய் ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைகழக ஆய்வாளர்கள் தூக்கத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

125 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாள் ஒன்றிற்கு இரவில் ஏழு மணிநேரங்கள் தூங்குபவர்களின் உடலில் உள்ள பகுதிகள் சீராக இயங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது கண்டறியப்பட்டது.

இதனால் நோய்த் தாக்கங்களுக்கு உட்படுதல் குறைக்கின்றது எனவும், சராசரியாக ஆறு மணிநேரங்களுக்கு குறைவாக தூங்குபவர்கள் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் தன்மை சீராக தூங்குபவர்களை விடவும் 11.5 மடங்கு அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.

அதனால இணையம்,(இன்டெர்நெட்) தொல்லைக் காட்சின்னு இரவெல்லாம் கண்விழிப்பவர்கள் ஜாக்கரதையாக இருங்கோ..!!!
Related Posts Plugin for WordPress, Blogger...