வெள்ளி, அக்டோபர் 25, 2013

மறைக்கப்பட்ட வரலாறு
மறைக்கப்பட்ட வரலாறு ---- கஜினி முகம்மத் கொள்ளை அடிக்க வந்தவர் இல்லை மாறாக கொள்ளை தடுக்க வந்தவர் ----------- ஆதாரத்துடன் இந்திய வரலாற்றில் ஆரியர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதையான கஜினி முகம்மது இந்தியாவை கொள்ளை அடித்தார். சோமநாதர் ஆலயத்தை தாக்கி அங்குள்ள செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்தார் என்ற வரலாற்றுத்திரிப்பின் மூலம் இந்துக்களின் மனதில் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையை உருவாக்கிய ஆரிய மாயை யின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவம் ஆதாரங்களுடன் இது chach Nama http://en.wikipedia.org/wiki/Chach_Nama என்ற வரலாற்று நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது இந்த போர் கொள்ளையடிக்க நிகழ்ந்த போர் இல்லை கொள்ளையர்களை அழிக்க நடந்த யுத்தம் வரலாற்றுக்கு வருவோம் in 661-712AD காலகட்டத்தில் சிந்து பகுதியை ஆண்ட பிராமண அரசன் ராஜா தாகிர்https://en.wikipedia.org/wiki/Dahir_(Raja) இவனது முக்கிய தொழில் கடற்கொள்ளை . இவன் அரபுகளின் கடல் வாணிப வழிகளில் இந்த தாக்குதல் தொடர்ந்தது இது kutch ,Debal today karchi and kathiyavar தளங்களில் இருந்து தொடர்ச்சியாக நடந்தது இறுதியாக இலங்கையிலிருந்து அரபு நாடு சென்ற கப்பலை தாக்கி அதில் இருந்த பரிசுப்பொருட்களை கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் புனித யாத்திரை சென்ற பெண்களை மானபங்கப்படுத்தினான். https://en.wikipedia.org/wiki/Muhammad_bin_Qasim According to history writer Mr. BERZIN , Umayyad interest in the sindh region occurred because of attacks from Sindh Raja Dahir on ships of Muslims and their imprisonment of Muslim men and women. According to historian Mr. Wink, Umayyad interest in the region was galvanized by the operation of the Meds and others.[2] Meds (a tribe of Scythians living in Sindh) had pirated upon Sassanid shipping in the past, from the mouth of the Tigris to the Sri Lankan coast, in their bawarij and now were able to prey on Arab shipping from their bases at Kutch, Debal and Kathiawar அப்போது ஈராக்கின் கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள் ராஜா தாகிர் மன்னனுக்கு கடிதம் எழுதி புனித பயணம் சென்ற பெண்களை விடுவிக்கவும் கொள்ளையடித்த செல்வங்களை திரும்ப ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்தார் ஆனால் கடற்கொள்ளையனான அந்த புஷ்கரண பிராமண மன்னன் அதற்கு மறுக்கவே muhamed bin Quasim (கஜினி முகம்மது ) தலைமையில் 6000 சிரியர்கள் கொண்ட காலாட்படை சிந்து பகுதியிலிருந்தும்ம ற்றும் ஈரானில் இருந்து 5 கப்பல்படையணிகள் debel இன்றைய கராச்சி துறைமுகத்தையும் தாக்கியது .இது நடந்தது கிபி 710 இல் முகம்மது பின் காசிமின் படை சிந்து ந்திக்ககரையில் அணிவகுத்து நின்ற தாகி அரசனின் படைகளுடன் தொடர் தாக்குதல் நடத்தியது இருதியாக ராஜா தாகிர் கொல்லப்பட்டான் அவனால் கொள்ளை அடித்து சோமநாதர் ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்வங்களை மீட்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி yazid ibn al -muhallab அவர்களை fars, kirman ,makran and Sindh பகுதிகளுக்கு கவர்னராக நியமித்தார் இது தான் உண்மை யான வரலாறு கடற்கொள்ளை யடித்து ஆலயத்தினுள் மறைத்து வைக்கப்படிருந்த செல்வங்களை மீட்ட சம்பவத்தை ஆலயத்தை கொள்ளையடித்ததாக திரித்து எழுதி விட்டனர் இந்த டவுசர் கூட்டம்!!!!

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!


தலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள்.
அண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் தான் தினந்தோறும் எனக்கு அதைச் செய், இதைச் செய் என்று பிரார்த்திக்கிறோம், ஏன் இப்படிச் செய்தாய், ஏன் அப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்கிறோம். பல சமயங்களில் எதை எப்போது செய்ய வேண்டும் என்று கூட இறைவனுக்குத் தெரிவிக்கிறோம். இறைவனை வணங்கி விட்டு இப்படி நாம் அதற்குக் கூலியாகக் கேட்கும் விஷயங்கள் ஏராளம்.
இறைவனிடம் கேட்காமல் யாரிடம் கேட்பேன் என்று பக்தன் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் கேட்பதெல்லாம் நியாயமாக இருக்கிறதா என்பதே நம் கேள்வி.
1. செயலுக்கு எதிரான விளைவைக் கேட்காதீர்கள்:
பரிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிக்க மாணவனுக்கு நேரமும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. நன்றாகப் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பதை இறைவன் தந்திருக்கிற அறிவு தெரிவிக்கிறது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைப் பார்க்காமல் மாணவனால் இருக்க முடியவில்லை. கிரிக்கெட் பார்க்கிறான். வேறு பொழுது போக்குகளிலும் நேரத்தைப் போக்கி பரிட்சைக்கு இரண்டு நாள் முன்பு தான் படிக்க ஆரம்பிக்கிறான். படித்தது போதவில்லை. பரிட்சை நன்றாக எழுதவில்லை. வெளியே வந்தவன் தேர்வு வரும் வரை தினமும் கோயிலிற்குச் சென்று மனம் உருக வேண்டுகிறான். “கடவுளே என்னை நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்ய அருள் புரி”.
’உள்ளம் உருகப் பிரார்த்தித்தால் இறைவன் செவி சாய்ப்பான்’ என்று பெரியோர் சொல்வதை அவன் நம்புகிறான். அப்படி நம்புவதை அவன் இறைவனுக்கும் தெரியப்படுத்துகிறான். இறைவன் என்ன செய்வார் சொல்லுங்கள். இன்னொருவன் இறைவன் தந்த அறிவின்படி விளையாட்டு கேளிக்கைகளில் இருக்கும் ஆர்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஒழுங்காகப் படிக்கிறான். இவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்து படிக்காத மாணவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்தால் இறைவன் செய்வது நியாயமாகுமா?
இயற்கையின் விதிப்படி படிக்காதவன் பரிட்சையில் தோல்வியுற்றோ, முறைவான மதிப்பெண்கள் பெற்றோ, ”உன்னை நான் மலை போல் நம்பினேனே. இப்படி ஏமாற்றி விட்டாயே” என்று மனம் குமுறினால் அது அறிவீனமே அல்லவா? இது போல ‘இந்த செயலுக்கு இந்த விளைவு’ என்று எச்சரிக்கும் இறை அறிவைப் புறக்கணித்து விட்டு தவறாக அனைத்தையும் இஷ்டம் போல் செய்து விட்டு கடைசி நிமிஷத்தில் பிரார்த்தித்து விட்டு எல்லாம் சரியாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் தயவு செய்து சொல்லாதீர்கள்.
2. உங்களை மட்டுமே பார்க்காதீர்கள்:
இறைவனுக்கு இரு பக்தர்கள் இருக்கிறார்கள். இருவருமே மிக நல்ல பக்தர்கள். ஒருவன் குயவன். மற்றவன் விவசாயி. குயவன் ”மழையே வேண்டாம் கடவுளே, மழை பெய்தால் என் பிழைப்பு நடக்காது” என்று வேண்டிக் கொள்கிறான். விவசாயியோ, “இறைவனே மழை பொழிய வை. இல்லா விட்டால் என் பிழைப்பு என்று வேண்டிக் கொள்கிறான்.
எல்லாம் வல்ல இறைவன் இப்போது என்ன செய்வான் சொல்லுங்கள். இருவருமே பக்தர்கள் தான். இருவர் கோரிக்கையும் அவரவர் வகையில் நியாயமானது தான். முன்பு சொன்ன படிக்காத மாணவனைப் போல இவர்கள் பேராசைப்படவில்லை. இறைவன் என்ன செய்தாலும் அவன் ஒரு பக்தன் பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்.
இப்படித் தான் சில சமயங்களில் நம் பிரார்த்தனைகள் பலிக்காமல் போகலாம். அப்போதெல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் ஏன் இப்படிச் செய்தாய் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், இனியாவது இப்படிச் செய், அப்படிச் செய் என்று கோபத்தோடு அறிவுரை வழங்காமல் இருங்கள். இவர்களில் ஒருவன் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றினால், வேறொருவன் பிழைப்புக்கு இறைவன் கண்டிப்பாக வேறொரு வழியைக் காண்பிப்பான் என்பது நிச்சயம்.
3. எல்லாமே எப்போதுமே முழுமையாக விளங்க வேண்டும் என்று எதிர்பாராதீர்கள்:
மனிதன் அறிவுக்கு எல்லை உண்டு. அவனால் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் விளங்கிக் கொள்ள முடியாது. புரியாததாலேயே நடப்பதை எல்லாம் நியாயமில்லாதது என்ரும் தனக்கு எதிரானது என்றும் முடிவு எடுத்து விடக்கூடாது. பல நிகழ்வுகள் அந்தந்த நேரத்தில் தீமை போலவும் தோல்வி போலவும் தோன்றினாலும் பொறுத்திருந்து பார்த்தால் நடந்தது நன்மைக்கே என்பது புரிய வைக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபர். இறைவனின் தீவிர பக்தர். அவர் ஒரு முறை சொன்னார். “எனக்கு சிறு வயதில் இருந்தே ஸ்டேட் பேங்கில் வேலைக்குச் சேர வேண்டும் என்று ஆசை. அது நிறைவேற தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். மூன்று தடவை ஸ்டேட் பாங்க் பரிட்சை எழுதினேன். ஒரு முறை கூட நான் பாஸாகவில்லை. பிறகு எழுத வயது கடந்து விட்டது. நான் கடவுளிடம் கோபித்துக் கொண்டு ஆறு மாதம் கும்பிடாமல் கூட இருந்தேன்….”
பெரிய தொழிலதிபர் ஆகவும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆகவும் முன்னேற வேண்டிய மனிதர் ஒரு வங்கி குமாஸ்தாவாக வேண்டும் என்று பிரார்த்தித்தால் இறைவன் என்ன செய்வார்? பக்தன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டு அந்த ஆசையை நிறைவேற்றி வைக்காமல் இருந்தது அவருடைய கருணையை அல்லவா காண்பிக்கிறது. எனவே பல நேரங்களில் உங்களுக்கு நல்லது எது என்று உங்களை விட இறைவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்திருங்கள். அவனிடம் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லி வழி காட்டாதீர்கள்.
”நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!” என்கிறது இந்துமதம். “நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!” என்கிறது கிறிஸ்தவம்.
”அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும் தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும்” என்கிறது இஸ்லாம். இப்படி எல்லா மதங்களும் இறைவனின் சித்தம் மனிதனின் சிற்றறிவை விட மேலானது என்றும் அதை எப்போதும் நம்புங்கள் என்றும் ஒருமித்த குரலில் சொல்கின்றன.
உங்கள் செயல்கள் உங்கள் நோக்கங்களுக்கு எதிராக இல்லாத வரையில், உங்கள் கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் வரையில் எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு எது நல்லதோ, எது சிறப்போ அதைச் செய்வான் என்பதை நம்புங்கள். அதை விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் அவன் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்த அளவு பேரறிவு எந்த மனிதனுக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருங்கள்.
குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் மார்புகளில் பாலைத் தயார் நிலையில் உருவாக்க முடிந்த இறைவனுக்கு, அண்ட சராசரங்களையும் அனாயாசமாக ஒப்பற்ற ஒழுங்கு முறையில் இயக்க முடிந்த இறைவனுக்கு, ஒவ்வொன்றையும் அடுத்தவர் சொல்லித் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள். தவறில்லை. ஆனால் அதன் பின் எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும், இன்று புரியா விட்டாலும் பின்பாவது புரியவரும் என்று நம்பிக்கையுடன் பொறுத்திருங்கள். அதுவே இறைவன் மேல் வைக்கக் கூடிய உண்மையான நம்பிக்கை.

பொய் சத்தியம் செய்தல்துரோகத்திற்கு கருவியாகும் பொய் சத்தியம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த கட்டுரைகளில் பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சொல்லி வியாபாரம் செய்வது போன்றபொய்யான செயல்கள் அனைத்தும் யூதர்களிடமிருந்தேப் பிறந்தது என்பதை விளக்கி இருந்தோம்.
பொய், யூதர்களின் கருவறையில் பிறந்து பல பிரிவுகளாக பிரிந்து சென்று பிற மதத்தவர்களின் மடியில்வளர்ந்தது என்றால் மறுக்க முடியாத உண்மை.
சீரிய இஸ்லாம் மார்க்கம் உலகுக்கு வருவதற்கு முன் மனித குலத்தில் மலிந்துக் கிடந்த மூடப் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் இஸ்லாமிய அறிவொலிக் கதிர்கள் உதயமாகி எரித்து சாம்பலாக்கியது. அவற்றில்பொய் பேசும் பழக்கமும் ஒன்று.
பொய்யை வேறோடும், வேறடி மண்ணோடும் இஸ்லாம் தான் ஒழித்துக் கட்டியது என்பதை கடந்தகட்டுரைகளிலும் பார்த்தோம், இனி வரும் கட்டுரைகளிலும் சில சம்பவங்களை காண்போம்.
23 வருட வாழ்க்கையில் தொடர் உபதேசங்கள்.
ஏகஇறைவனின் சத்தியத் தூதர்(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போதெல்லாம் பொய்பேசுவதனால் ஏற்படும் உலக-மறுமை இழப்புகளைக் கூறி பொய் எந்த வழியிலும், வேறு எந்த பெயரிலும்முஸ்லீம் சமுதாயத்திற்குள் நுழைந்து விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து உபதேசங்களைசெய்து கொண்டே இருந்தார்கள்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்குநான் தெரிவிக்கட்டுமா ? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வன் தூதர்அவர்களே என்று கூறினர். 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்என்றார்கள்.
பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து கொண்டு , 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும்(மிகப் பெரிம் பாவமே) என்றார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக்கண்ட) நாங்கள் அவர்கள் நிறுத்தமாட்டார்களா?' என்று நினைக்கும் அளவுக்குக் கூறிக் கொண்டே இருந்தார்கள்என்று அபூபக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 6274.
பெரும் பாவங்கள் அனைத்தும் நரகில் சேர்க்கக் கூடியவைகள் என்பதை மக்கள் அறிந்தே வைத்திருந்தனர்.
ஆனூலும் அதை நிருத்த மாட்டார்களா ? என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு தொடர்ந்து கூறிக்கொண்டேஇருந்தார்கள் என்றால் எந்தளவுக்கு பொய் பேசும் பழக்கமும், பொய்யான செயல்களும் சமுதயாத்தில் தீங்குவிளைவிக்கக் கூடியவைகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஐயம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நான் மீற முடியாத காரணத்தினால் குர்ஆனின் மீது பொய் சத்தியம் செய்து விட்டேன். இதை நினைத்து தினமும் மனது கவலை அடைகின்றது. அல்லாஹ் இந்தப் பெரும் பாவத்தை மன்னிப்பானா? இல்லை, இதற்கு ஏதும் பிரார்த்தனை இருக்கிறதா?

- சகோதரர் jainulabadheen


தெளிவு:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன், நன்கறிந்தவன்.

உங்கள் சத்தியங்களுள் வீணானவற்றுக்கு அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். எனினும், உங்கள் உள்ள(உறுதியுடன் நீ)ங்கள் செய்த(சத்தியத்)துக்காக அவன் உங்களைக் குற்றம் பிடிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத்தன்மை உடையவன் (அல்குர்ஆன் 2:224-225).

"சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், "உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 3836, முஸ்லிம் 3383, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).

அல்லாஹ்வைத் தவிர வேறு எவர் மீதும், எதன் மீதும் சத்தியம் செய்தல் கூடாது! அதனால் குர்ஆன் மீது சத்தியம் செய்தல் இஸ்லாத்திற்கு முரணாகும். மேலும், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதும் நன்மை செய்வதற்கும், இறைவனை அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இதுபோன்ற நன்மையானவற்றுக்குத் தடையாகவும் இருக்கக்கூடாது. அதாவது, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இனிமேல் நல்லறங்கள் செய்யமாட்டேன்" என்றோ, "அல்லாஹ்வை அஞ்சி வாழமாட்டேன்" என்றோ "பிணங்கிக் கொண்டவர்களிடையே இணக்கம் ஏற்படுத்த மாட்டேன்" என்றோ சத்தியம் செய்யலாகாது.

வீணான, உறுதிப்படுத்திட முடியாத, எதற்கெடுத்தாலும் வெற்று வார்த்தையாகச் சொல்லப்படும் அர்த்தமற்ற 'வல்லாஹி' சத்தியங்களுக்காக அல்லாஹ் குற்றம் பிடிப்பதில்லை. உள்ளத்தில் திட்டமிட்டு, பிறரை மோசடி செய்யும் நோக்குடன் சத்தியம் செய்வதை அல்லாஹ் குற்றம் பிடிப்பான், தண்டிப்பான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து விளங்கலாம்.

பொய் சத்தியம் செய்தல்

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பெரும் பாவங்கள் எவை?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், "இறைவனுக்கு இணை கற்பிப்பது" என்றார்கள். அவர், "பிறகு எது?" என்றார். நபி(ஸல்) அவர்கள், "பிறகு தாய் தந்தையரின் மனத்தைப் புண்படுத்துவது" என்றார்கள். அவர், "பிறகு எது?" எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், "பொய் சத்தியம் என்றால் என்ன?" என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், "பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது" என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) (நூல்கள் - புகாரி 6920, திர்மிதீ, நஸயீ, அஹ்மத், தாரிமீ).

புகாரி 6675வது ஹதீஸில் பெரும் பாவங்களில் ஒன்றாக ''கொலை செய்வது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொய் சத்தியம் செய்வதைப் பெரும் பாவங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது இஸ்லாம்.

இறைவனுக்கு இணை கற்பித்தல்
பெற்றோரைத் துன்புறுத்தல்
கொலை செய்தல்
பொய் சத்தியம் செய்தல்
ஆக, இறைவனுக்கு இணை கற்பித்தலும் பொய் சத்தியம் செய்வதும் சம குற்றமாகக் கருதப்படும் என்பது தெளிவு. பொய் சத்தியம் செய்வது இந்த அளவுக்குக் கடுமையான குற்றமா? என்பதை ஆய்வுசெய்தால், தனக்கு உரிமையில்லாத, பிறரின் பொருளை அபகரிப்பதற்காகப் பொய் சத்தியம் செய்வது கடுமையான குற்றம் என்பது புலனாகும்! அதாவது, திட்டமிட்டு மோசடி செய்யும் உள்நோக்கத்துடன் அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்யப்படுவதால் இக்குற்றத்திற்கு இணை வைத்தலுக்கு இணையான தண்டனை வழங்கப்படும்!

பிறரை மோசடி செய்வதற்காகப் பொய் சத்தியம் செய்வது குறித்து அநேக அறிவிப்புகள் எச்சரிக்கின்றன. எல்லாமே கருத்து ஒன்றுதான் என்பதால் விரிவஞ்சித் தவிர்த்துள்ளோம்.

பொய் சத்தியத்திற்கான பரிகாரம் என்ன?

அறிந்தும், அறியாமலும் செய்யும் தவறுகளுக்காக வருந்தி, பின்னர் அதிலிருந்து விலகிக்கொள்வதே இதற்கான பரிகாரமாகும். பொய் சத்தியம் செய்து, அந்த சத்தியத்தால் சொல்லாலும் செயலாலும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கி அவரிடம் மன்னிப்புக் கேட்டு மீளுவதே பரிகாரமாகும்!

யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், 'வா சூது விளையாடுவோம்' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 4860, முஸ்லிம் 3384, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

இறைவனுக்கு இணை கற்பித்தல் கூடாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! ஓரிறைக் கொள்கைக்கு எதிராகச் சொல்லும் செயலும் இருந்தால், ''லாயிலாஹா இல்லல்லாஹ்'' எனக் கூறி, ஏக இறைவனை நினைவு கூர்ந்து அந்தப் பாவத்திலிருந்து விலகி மீண்டும் அத்தவறைச் செய்யாமல் உறுதியுடன் இருப்பதே இணை கற்பித்தலுக்கான பரிகாரமாகும்.

பெற்றோரைத் துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகிய பாவங்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அதற்கான பரிகாரத்தைச் செய்து திருந்திக்கொள்வதே பரிகாரமாகும்!

கேள்வியில் கேட்டுள்ளபடி குர்ஆனின் மீது பொய் சத்தியம் செய்தது முரண் என்றாலும், பொய் சத்தியத்தால் சம்பந்தப்பட்டவர் எவ்வகையில் பாதிக்கப்பட்டார் என்பதை நீங்களே அறிவீர்கள்! அதை அறிந்து அதற்கான பரிகாரம் செய்திடுக! மீண்டும் பொய் சத்தியம் செய்வதிலிருந்து விலகிக்கொள்க!

அல்லாஹ் அனைத்தையும் மன்னிப்பவன்; பெரும் கருணையாளன்!

(இறைவன் மிக்க அறிந்தவன்).

புதன், அக்டோபர் 09, 2013

யார்மீது கடமை?


இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக ஒரு கடமையைச் செய்ய வலியுறுத்தப்பட்டால் அதைச் செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்ற வேண்டும்.

முக்கியமான சுன்னத்

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளது.

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُضْحِيَةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلَاةِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ رواه البخاري

ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தியாகப் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்து விட்டிருப்பதைக் கண்டபோது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) நூல் : புகாரி (5500)

திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் திருக்குர்ஆனும் இதை வலியுறுத்தியுள்ளது.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ(2) سورة الكوثر
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன் 108: 1,2)

#குர்பானியின்சட்டங்கள்

செவ்வாய், அக்டோபர் 08, 2013

TMMK SUPER COMEDY


உலக அதிசயம் எது?


கருப்பாக இருப்பவர்களுக்காக சில ஆலோசனை ..!


இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான 'மெலனின்' அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்

வெள்ளி, அக்டோபர் 04, 2013

சொத்து ஆவணம் தொலைந்து விட்டால்....


சொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவணங்களை பழுதுபடாத விதத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக்கொண்டாலும் கூட, சொத்து ஆவணங்கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படுகின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வுகளின் போது அல்லது வீட்டைப் புனரமைப்பதற்கு உங்களுக்கு வங்கி கடன் தேவைப்படும் நேரத்தில், நீங்கள் தான் சொத்து உரியாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மாட்டார்கள் மற்றும் சொத்துப் பரிமாற்றங்கள் தீர்க்கப்படுவதில் சிக்கல் உருவாகும். இருப்பினும், சொத்து ஆவணங்களை இழப்பதனால் ஒருவர் முழுமையாக தவிக்க விடப்படுவதில்லை. சொத்து உரிமையாளர்கள் முயற்சி செய்து நகல் ஆவணங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு நகல் சொத்து ஆவணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நகல் சொத்து ஆவணங்களை எப்போதும் சொத்து உரிமையாளர் பெறமுடியும். ஆனால், இதற்கு கணிசமான செலவு, முயற்சி மற்றும் நேரம் ஆகியவை தேவை.

எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்

சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் முதல் வேலையாக போலீஸில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் புகார் பற்றிய நகலை சொத்து உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அடமான சொத்து ஆவணங்கள், வங்கி மூலம் இடந்தவறி வைக்கப்பட்டாலும் கூட, புகார் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

செய்திதாளில் விளம்பரம் செய்தல்

சொத்து உரிமையாளர் சொத்து ஆவண இழப்புப் பற்றி உடனடியாக ஒரு ஆங்கில மற்றும் பிராந்திய மொழி தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தை வாங்க ஆர்வமுள்ள நபரும் இது பற்றி விளம்பரம் செய்யலாம்.

என்ஓசி மற்றும் நகல்

பங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான எஃப்ஐஆர் காப்பி ஆதாரத்தைக் கொண்டு, ஹவுசிங் சொசைட்டியிலிருந்து, என்ஓசி மற்றும் டூப்பிளிகேட் ஷேர் சர்டிபிக்கேட் பெறுவதற்கு சொத்து உரிமையாளர் விண்ணப்பிக்க முடியும். சில வேளைகளில் வங்கிகள் என்ஓசி இல்லாமல் கடன் வழங்குவதில்லை. ஆகையால் கண்டிப்பாக நோ அப்ஜக்ஷன் சர்டிபிக்கேட் பெற்றுகொள்வது அவசியம்.

தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல்

சொத்து விபரங்கள், எஃப்ஐஆர் நம்பர் மற்றும் பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஆகியவை அடங்கிய ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுவதற்கான அனைத்து விபரங்களும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை உண்மை என்பதை உறுதிபடுத்த, ஒரு நோட்டரி மூலம் இது கையெழுத்திடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

விற்பனைப் பத்திர நகலைப் பெறுதல்

பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, வேண்டிய கட்டணத்தை செலுத்தினால், பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரத்தை வழங்கும். நியாயமாக ஒரு பழைய சொத்தாக இருந்தால், குறிப்பிடப்பட்ட சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிபடுத்த ஒருவர் உறுதி அறிக்கை பெற வேண்டும்.

இந்த உறுதி அறிக்கையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற முடியும். ஆகவே, ஒருவேளை நீங்கள் சொத்து ஆவணங்களை தொலைத்து விட்டால், தாமதிக்காமல் நகல் ஆவணங்களைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.

செவ்வாய், அக்டோபர் 01, 2013

பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???


திருமணமான புதியதில்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 600 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
Related Posts Plugin for WordPress, Blogger...