உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 16, 2012

சமுதாய சிந்தனை இல்லாத சுயநல அரசியல் வாதிகள்.




சமுதாய சிந்தனை இல்லாத சுயநல அரசியல் வாதிகள்.

சமுதாய மக்களின் உரிமைகளுக்காக வீதியில் நின்று குரல் எழுப்பினால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் அமையும்> சட்டமன்றத்தில் குரல் கொடுத்தால் தான் செவிட்டில் அறைந்தால் போல் விழும் என்பதால் மாபெரும் மக்கள் பேரியக்கமாகிய தமுமுகவை அரசியல் அமைப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்று இப்போதைய தமுமுக காரர்கள் அப்போதுக் கூறியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

தமுமுகவினர் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு தடையாக இருப்பது தவ்ஹீத் பிரச்சாரம் தான் என்று பகிரங்கமாக் கூறி தவ்ஹீத் பிரச்சார அறிஞர்களை வெளியேற்றி விட்டு சமுதாயப் பேரியக்கத்தை தங்களுக்கு ஓட்டுப் பிச்சை எடுக்கும் சுயநல இயக்கமாக மாற்றிக் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் இரண்டு பேர் மட்டும் சட்ட மன்றத்திற்குள் நுழைந்தனர்.

சொன்னது என்னாச்சு ?
இவர்களுக்கு ஆதரவளித்த அதிமுக தனது ஓராண்டு சாதனையை(?) நூறாண்டு சாதனையாக பட்டியலிட்டது.

இவர்கள் தங்களது ஓராண்டு சாதனையை நூறாண்டு சாதனையாக இதுவரைப் பட்டியலிடாதது ஏன் ?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்த ஓராண்டில் இவர்கள் வென்றெடுத்த சலுகைகளைப் பட்டியலிட முடியுமா ? அல்லது குறைந்த பட்சம் உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரலெழுப்பியதையாவதுப் பட்டியலிடத் தயாரா ?

இந்த ஓராண்டில் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடித்ததும்> ஜோக் அடித்து அம்மாவை சிரிக்க வைத்ததும் நூறாண்டுகளுக்குப் போதும் எனும் அளவுக்கு உள்ள சாதனைளாகத் தெரிகிறது.

வாயிருந்தும் ஊமைகளாய்.
குரலெழுப்ப வாய்ப்பிருந்தும் இவர்கள் ஊமையாய் போன சந்தர்ப்பங்கள் இந்த ஓராண்டில் சட்டமன்றத்தில் எத்தனையோ நிகழ்ந்து விட்டன.

ஹஜ் மானியம் நிருத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து சீனாவில் இந்துக்களால் புன்னிய தலமாக கருதப்படும் மானசரோவர் செல்பவருக்கு 40 ஆயிரம் வழங்கப்படும் என்றும்> நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கு செல்பவர்களுக்கு 10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அம்மா(?) அறிவித்து அதில் குறைந்தது 500 பேர் இந்த சலுகையை இந்த ஆண்டு அடைந்து கொண்டர்.

மத்திய அரசு ஹஜ் மானியத்தை நிருத்தினால் என்ன இஸ்லாமிய சமுதாயத்தின் சகோதரியாகிய நான் மாநில அரசு நிதியிலிருந்து தருவதாக அவரால் அறிவிக்க முடிய வில்லை, இவர்களாவது தனது சமுதாய மக்களுக்கு மறுக்கப்பட்ட சலுகையை கேட்கலாம் ஏன் கேட்க வில்லை ? இதைக் கேட்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டும் என்றார்கள்.

கிராம கோயில்களின் புணரமைப்பு நிதி 250 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டன> இந்த ஓராண்டில் அரசு நிதியிலிருந்து 364 கோயில் குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் கீற்றுக் கொட்டகையில் இயங்கும் எத்தனையோ பள்ளிவாசல்கள் கீற்று மாற்ற முடியாமல்> தொழுகைப் பாய்களை மாற்ற முடியாமல் கிழிந்த நிலையில் கிடக்கின்றன> எத்தனையோ பள்ளிவாசல்களை ஒட்டிய குளங்கள் தூர் வார முடியாமல் சாக்கடையாக மாறிக் கிடக்கின்றன.

நம்முடைய வரிப் பணத்தில் குவிந்து கிடக்கும் அரசு நிதியிலிருந்து கோயில்களைப் புணரமைக்கலாம் பள்ளிவாசல்களின் புணரமைப்புக்காக கொடுக்கக் கூடாதா ? அதற்காக இவர்கள் குரல் எழுப்பக் கூடாதா ? இதைக் கேட்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டும் என்றார்கள்>

முஸ்லீம்களுக்கு மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக அம்மா(?) ஏற்கனவே வாக்களித்திருக்கையில் 1349 பேர் அரசு மருத்துவப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டதில் அதிகப்படுத்த வில்லை என்றாலும் விகிதாச்சார அடிப்படையிலாவது முஸ்லிம்கள் தேர்வு செய்யப் பட்டிருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லீம் கூட திட்டமிட்டு தேர்வு செய்யப்பட வில்லை.

இதற்காக இவர்கள் இதுவரை ஒருத் துறும்பைக் கூட எடுத்துப் போட வில்லை> இவர்கள் என்ன சமுதாயக் காவலர்கள் ? இது போன்று முஸ்லீம்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டு பிற சமுதாயத்தவருக்கு தாராளமாக வாரி வழங்கிய எத்தனையோ சலுகைகள் இந்த ஓராண்டில் மட்டும் அறிவிக்கப்பட்டதைப் பட்டியலிடலாம்.

இதற்கெல்லாம் குரல் கொடுப்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டுமென்றார்கள்> சட்டமன்றத்திற்குள் போயும் ஏன் குல் கொடுக்க வில்லை ? இதற்காக குரல் கொடுத்ததனால் இவர்கள் எத்தனை முறை குண்டுக்கட்டாக சட்டமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசப்பட்டார்கள் ? வளைகுடாவிலிருந்து

விழலுக்கு இறைக்கும் நீர் போன்றது.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனையாகிய மரண தண்டனைக்கு எதிராக கூட்டம் நடத்துபவர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டது.

பூரண மதுவிலக்கல்லாது குடிக்கலாம்> ஆனால் குடிக்கக் கூடாது எனும் தா.பாண்டியன் வை.கோ நடத்திய அரைவேக்காடுத் தனமானக் கூட்டத்தில் கலந்து கொண்டது.

இங்கிலாந்து அரசின் வைரவிழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி ம.தி.மு.க நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டது. இவைகள் சமுதாயப் போராட்டங்களா ?

இது போன்ற சமுதாயத்திற்கு எள்ளலவும் பிரயோஜனம் அளிக்காத போராட்டங்களில் கலந்து கொள்வதற்காகத்தான் கந்தக பூமியில் வெந்து மடியும் மக்களிடத்தில் சமுதாயம் எனும் பெயரைக் கூறி நிதிப் பெறுகிறார்களா ? இதற்காகத் தான் தவ்ஹீத் பிரச்சாரம் முட்டுக்கட்டை என்றுக் கூறி தமுமுகவிலிருந்து தவ்ஹீத் வாதிகளை வெளியேற்றினார்களா ? இவர்களுக்கு வசூல் செய்து அனுப்புகின்ற சகோதரர்கள் சிந்தித்துக் கொள்ளட்டும்.

கஸ்டப்பட்டு பொருளீட்டும் சகோதரர்களே ! இவர்களின் சமுதாயப் போராட்டம் என்ன லட்சனத்தில் அமைந்துள்ளது என்பதை இப்பொழுதாவது விளங்கிக் கொண்டு விட்டதால் இவர்களுக்கு அனுப்பும் நிதியை உங்கள் குடும்பத்தில் உள்ள நலிந்தப் பிரிவினருக்கு அனுப்பி குடும்பத்தாருக்கு கொடுத்துதவிய நன்மையை அடைந்து கொள்ளுங்கள்.

ஜே அரசின் பச்சை துரோகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்!


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
Like · · Share

Mohamed Sidik and 8 others like this.
2 shares
BM Ghani நீங்கள் என்ன சொன்னாலும் கட்சிப்பெயரில் இருக்கும் எழுத்துக்கள் இவர்களுக்கு இருந்தாத்தானே உரைப்பதற்கு? இன்னும் இவர்களை நம்பி பின்னால் செல்லும் மக்கள் தான் சிந்தித்து இவர்களை புரக்கணிக்க வேண்டும்.
4 hours ago · Like · 6
Thirupoondi Tntj Tntj evargalai makkal purindhu kondu vittargal,evargalin kootam karaindhu kondu irrupadhai nam kandukondhan irukirom,koodiya viraivil koodaram mothamaga kaliyahividum...insha allah
3 hours ago · Like · 4
முகநூல் போலிஸ்
அண்ணாச்சி எங்கள் தானே தலைவர் அப்படியே எம்ஜிஆர் மாதிரியே போஸ் கொடுக்கிறார்.நல்லா வருவாரு ..நம் சமுதாயத்தை சீரழிப் பாரு ....உங்களுக்கு எல்லாம் டிமிக்கி கொடுத்து கிட்டே இருப்பாரு...நரேந்திர மோடி யை அல்லது ஜெயாவை பிரதமராக்குவாறு ...மொத்தத்தில் ...See More
2 hours ago · Like · 2
Mohamed Sidik
சிந்திக்க வைக்கும் பதிவு ,
சீரழியும் சமுதாயத்தை பற்றி ,
சித்திக்க நேரம் இல்லா தலைவர்கள் .
பொறுப்பில்ல போக்கிரிகளாக்க ,
பொருளாதரத்தை வாரி இறைக்கும் ,
...See More
9 minutes ago · Like
Thirupoondi Tntj Tntj jayalalitha govt panra aniyathai,muslimgaluku pangira dhrogathai ethirthu oru varthai pesamaten engirargaley evargal enna manidhargal,ivargalai vida thirumavalavan better.

ஞாயிறு, ஜூன் 10, 2012

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?


இஸ்லாம் மார்க்கம் ஜாதிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்து விட்டாலும் வேறு விதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு விமர்சனம் செய்வதற்கு சில சான்றுகளையும் முன்வைக்கின்றனர். மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும் தக்னி, லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகளையும் இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோ கொடுப்பதோ இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பதாக வாதிடுவதைத் தான் நாம் மறுக்கிறோம். இவ்வாறு மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்
முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பது அவர்களது அறியாமையினால் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகளால் உருவானதாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலும் இத்தகைய பிரிவுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.

”நீங்கள் அனைவரும் ஒரு சமுதாயம் தான்”
(அல்குர்ஆன் 21:92)

உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து நாம் படைத்தோம். உங்களைக் கிளைகளாக கோத்திரங்களாக நாம் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கே. நிச்சயமாக அல்லாஹ்விடம் சிறந்தவர் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே!
(அல்குர்ஆன் 49:13)

தங்கள் மார்க்கத்தைப் பலவாறாகப் பிரித்து விட்டார்களே அவர்களுடன் (முஹம்மதே) உமக்கு எந்த தொடர்பும் இல்லை.
(அல்குர்ஆன் 6:159)

பலவாறாகப் பிரிந்துவிடக் கூடாது என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எல்லா மக்களுக்கும் மூல பிதா ஒருவர் தான். எல்லா மக்களுக்கும் மூல அன்னையும் ஒருவரே என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் செய்து விட்டது.

இஸ்லாத்தின் போதனைகளை மறந்து விட்டதன் காரணத்தால் தான் இவ்வாறு பிளவுபட்டு விட்டார்களே தவிர இஸ்லாம் பிளவுபடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாவது காரணம்
ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்குக் கிடைக்கும் தகுதியாகும். ஒரு சாதியில் பிறந்தவன் இன்னொரு சாதிக்காரனாக மாறவே முடியாது. இது தான் சாதிக்குரிய இலக்கணம்.

முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவானதன்று.

ஷியா, சன்னி, ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி, அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு கொண்டதால் ஏற்பட்ட பிரிவாகும்.
ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது கொள்கையை நிராகரித்துவிட்டு மற்ற எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஷாபி என்பவர் ஹனபி பிரிவில் சேரலாம். ஹனபி என்பவர் ஷாபி பிரிவில் சேரலாம்.

இது பிறப்பின் அடிப்படையில் வருவதன்று. ஒருவன் விரும்பித் தேர்வு செய்வதால் ஏற்படுவது. யாரும் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனும் போது இந்தப் பிரிவை சாதியுடன் சேர்ப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது.

மரைக்காயர், லெப்பை, இராவுத்தர் போன்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் உருவானதாகும்.

குதிரையைப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார். அன்றைய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து குதிரைகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர். இந்தத் தொழில் காரணமாக அவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்களே தவிர பிறப்பின் அடிப்படையிலோ, உயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்படையிலோ இவ்வாறு அழைக்கப்பட்டதில்லை.

மரக்கலத்தில் சென்று வணிகம் செய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்று அழைக்கப்பட்டனர். இதுவே மரைக்காயர் என்று ஆனது.

அரபு நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிலர் இங்கே வந்து குடியேறினார்கள். அவர்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டனர்.

யாரேனும் அழைத்தால் ”ஓ” என்று நாம் மறுமொழி அளிப்போம். அன்றைய அரபு நாட்டில் லப்பைக் என்று மறுமொழி கூறிவந்தனர். இங்கு வந்து குடியேறிய அரபு முஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்பைக் என்று கூறி வந்ததால் அவர்கள் லப்பை என்றே குறிப்பிடப்பட்டனர். உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறு அழைக்கப்படவில்லை.

எனவே இதையும் காரணமாக வைத்துக் கொண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளன எனக் கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.

மூன்றாவது காரணம்
கொள்கை மற்றும் தொழில் காரணமாக இவ்வாறு பல பெயர்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை. வேறு பிரிவினரிடம் திருமண சம்பந்தம் கூட செய்து கொள்கின்றனர்.

இதனைச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார். எனவே இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில் ஜாதி கிடையாது என அறிந்து கொள்ள முடியும்.

உருது, தமிழ் என்பது போன்ற பிரிவுகளுக்கிடையே சகஜமாகத் திருமணங்கள் நடப்பதில்லை என்பது உண்மை தான்.

இதற்குக் காரணம் சாதி அமைப்பு அல்ல. தம்பதிகள் தமக்கிடையே நல்லுறவை வளர்த்து இல்லறத்தை இனிதாக்கிட ஒரு மொழியை இருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.
ஒருவரது மொழி மற்றவருக்குத் தெரியாத நிலையில் அவர்களது இல்லறம் சிறக்கும் எனச் சொல்ல முடியாது. இது போன்ற காரணங்களுக்காகத் திருமண சம்பந்தத்தைச் சிலர் தவிர்க்கின்றனர். உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்லை.

தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்லை. உருது முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்ற அடிப்படையில் திருமண சம்பந்தத்தைத் தவிர்த்தால் தான் அதைச் சாதியாகக் கருத முடியும்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தெரியாத சில முஸ்லிம்கள் தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு திருமண உறவுகளைத் தவிர்க்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை.

இது போன்ற பிரிவுகளையும் கூட தவிர்ப்பது இத்தகைய விமர்சனங்களைத் தடுக்கும் என்பதை முஸ்லிம்களும் உணர்ந்து இதைக் கைவிட வேண்டும். என்பதையும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரையாகக் கூறிக் கொள்கிறோம். அவர்கள் கைவிடாவிட்டாலும் அதையும் சாதியாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்.

எம்மதமும் சம்மதமா?
இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். என்பதும் இஸ்லாம் குறித்து மாற்று மத நண்பர்கள் செய்யும் விமர்சனமாகும்.
தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர்.

முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத மக்கள் தங்கள் பண்டிகைகளின் போது வழங்கும் உணவுகளை முஸ்லிம்கள் உண்பதில்லை.

முஸ்லிம்கள் தாங்கள் அறுக்கும் மாமிசத்தை மட்டும் தான் உண்ணுகிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் அறுக்கும் மாமிச உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை.

முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிமல்லாதவர்கள் வழிபாடு நடத்துகின்றனர். ஆனால் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதில்லை.

முஸ்லிம்கள் ஆணோ, பெண்ணோ முஸ்லிமல்லாதவர்களிடம் திருமண உறவு வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. முஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து தருவோம் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.

இது போன்ற காரணங்களை எடுத்துக்காட்டி முஸ்லிம்கள் எம்மதமும் சம்மதம் என்ற தத்துவத்துக்கு வேட்டு வைக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

எம்மதமும் சம்மதம் என்ற தத்துவம் சரிதானா என்பதை முதலில் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

உலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றி சட்ட திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன. முரண்பாடுகள் இல்லாவிட்டால் ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதை இரண்டாவதாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.

பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை.

இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும். முதல் கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டாவது கொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இரண்டும் எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கடவுளுக்கு மனைவியர் உண்டு. மக்கள் உண்டு. கடவுளுக்குத் தூக்கம் உண்டு, கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.

இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு எதிரான பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.

முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.

இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை. நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது தான் பொருள்.

முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பவில்லை, நம்ப முடியாது நம்பக் கூடாது என்பது அதன் பொருள்.

மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளன. கட்சிகள், சங்கங்கள். இயங்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.

மதங்களை விட குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ, திமுக, அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது. எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவே கருதப்படுவார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பினணந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை. இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை எற்படுத்த முடியவில்லை.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.

”எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன்” என்பது இஸ்லாத்தின் நிலை

”உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)

அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.

இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வியாழன், ஜூன் 07, 2012

மரங்களை வெட்டுங்கள்!!





சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்:
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்:
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை:
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்:
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! PLS SHARE !

வெள்ளி, மே 25, 2012

பேரம் பேசுரது



35%, 40% னு லாபம் வச்சி விற்கும் பெரிய பெரிய shopping centers ல பொருள் வாங்கும் போது விலைய பற்றி எதுவும் சொல்லுரதில்ல....

கேட்கிர காசு கொடுத்திடுவோம்.....


நம்ம வியாபார திறமையெல்லாம்(ரூ.5 .ரூ.10 பேரம் பேசுரது) இவங்கள மாதிரி வயித்துக்காக பொலப்பு நடத்துரவங்ககிட்டதான்.......

யோசிச்சு பாருங்க...!!!

நாம கொடுக்குர 5, 10 வைத்து அவங்க அடுத்த ஊருல branch'a ஆரம்பிக்க போராங்க.....

வராத கரண்டுக்கு பில்லு கட்டுவாங்க, ஏதோ ரெண்டு வேலை நிம்மதியா சாப்டுட்டு போராங்க..

செவ்வாய், மே 22, 2012

நவீன ஜாஹிலிய்யத்தில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் பெண்கள்.

உலகிலே பெண்களுக்கான சுதந்திரம் கண்ணியம் கொளரவம், பாதுகாப்பு போன்ற உன்னத உரிமைகைளை உலகமே வழங்காத போது, ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன், இஸ்லாம் பெண்களுக்கென வழங்கி, பெண்களும் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் என்பதை பறைசாற்றியது.

”ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)

அதில் ஒரு அமசம்தான் ஹிஜாப் அணிவது. இது இஸ்லாம் பெண்களுக்கென வழங்கிய ஓர் சுதந்திரமான சட்டமாகும். அறைகுறை துணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொறுகிக் கொண்டு, இதுதான் சதந்திரம் என்று நடமாடும் மானம் கெட்ட அநாகரீக கூப்பாடிகளுக்கு மத்தியில், வலைத் தளங்களிடையே ஹிஜாப் ஓர் விமர்சன அம்சமாக நோக்கப் படுவதை பார்க்கிறோம்.

மேற்கத்தேய நாடுகிளில் ஹிஜாபுக்கெதிரான சதித் திட்டங்கள் தீட்டப் படுவதும், பின் அதர்க்கான வாக்கெடுப்புகள் நடந்தேறுவதும், பல எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் அவைகள் இரத்துச் செய்யப் படுவதுமாய், சமீபத்திய நடப்புக்கள் நமக்குச் சொல்லி நிற்கிறது. இத்தனைக்கும் மத்தியில் நம் முஸ்லீம் பெண்களில் அசமந்தப் போக்குள்ள சிலர், இதனை ஆதரிப்பது போல், ஹிஜாபுகளினால் தன்னை அப்பட்ட விபச்சாரி என்று, சொல்லாமல் சொல்வதை, அவர்களின் ஆடையணிவதின் இலட்சணத்தை வைத்து, யாரும் அறிந்து கொள்லளாம்.

தன் கணவனிடம் காட்ட வேண்டிய அழகுகளை தெருவில் செல்லும் தெரு நாய்களிடம் காட்டி தன் அழகு மெச்சப் படுவதை அவள் விரும்புவதையும், அதர்க்கு கொஞ்சம் கூட எதிர்ப்ர்பு தெரிவிக்காமல் சூடு சுரணையற்று இருக்கும் கணவன்மார்களையும் பார்க்கும் போது நபியவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிஜமாவதை காணமுடிகிறது.
”உலக அழிவு நாளின் நெருக்கத்தில் பெண்களின் மூலமாக இந்த சமுதாயத்தில் நிகழும் "சமூக ஒழுக்க சீர்கேடுகளை" குறித்து எச்சரிக்கை செய்தார்கள். அதில் ஒன்றுதான் ஆடை குறைப்பு, அன்று அவர்கள் சொன்னது இன்று பெண்களால் கச்சிதமாக அரங்கேற்றப்படுவதை காணும்பொழுது நம்மை நெருங்கிவிட்ட மருமையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது.. ஆயினும் நம்மில் பலர் இது குறித்து கவலை கொள்ளாதது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

அறியாமைகால "யூத கிறித்துவ " அநாகரீகங்களை நாகரீகம் என்று செய்து வரும் பெண்களில், நமது பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர், என்று என்னும் பொழுது வெட்க்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. .
நபியவர்கள் கூறினார்கள், ‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)

குறைந்துவிட்ட ஆடை:

இன்று ஆடைகளை மேலே குறைத்துக்கொள்வதும், கீழே குறைத்துக்கொள்வதும், நாகரீகம் ஆகிவிட்டது. இது போதாது என்று இறுக்கியும் கொள்கின்றனர். அது உண்டாக்கும் விளைவுகளை குறித்து யாரும் கவலை கொள்வது கிடையாது. அரசும் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிப்பதும் கிடையாது. மாறாக, இதனால் பாலுணர்வு தூண்டப்பட்டு, லேசாக தடுமாறும் ஆண்களைத்தான் "ஈவ்டீசிங்" என்ற பெயரில் கொண்டுபோய் குமுறு, குமுறு என்று குமுறுகின்றனர். அதற்க்கு காரணமானவர்களை விட்டுவிடுகின்றனர். காமத்தை கலையாகவும், ஆபாசத்தை ஆன்மிகமாகவும்,கொண்ட நாடும் அதைச்சார்ந்த அரசும் வேண்டுமானால் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆபாசத்தை ஆபாசமாகவே பார்க்கவேண்டும் என்று கருதக்கூடிய, அதை கண்டிக்கக்கூடிய இஸ்லாத்தை, கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம் நாடுகளிலேயே இந்தகூத்துக்கள் அரங்கேருவதுதான் வேதனையிலும் வேதனை.

பாலுனர்வைதூண்டுதல்:

ஆடைகளை இறுக்கியும், குறைத்தும் அணிவதால் மறையவேண்டிய பகுதிகள் மறையாமலும், இறுக்கத்தினால் உடலுறுப்புக்கள் நெறிக்கப்பட்டு, பெண்ணிடம் பாலுணர்வை தூண்டக்கூடிய கனபரிமாணங்கள் மெருகூட்டப்பட்டு, கவர்ச்சியின் விளிம்பிற்கே சென்று, ஆண்களின் கண்களையும், சிந்தனையையும் தன்பக்கம் ஈர்த்துவிடுகிறது. சில ஆண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் வரம்பு மீறும் சூழ்நிலை ஏற்படுகிறது. .இதனால் பாதிப்பு என்னவோ இரு தரப்பினருக்கும் தான். இருந்தாலும் அனேக ஆண்கள் கூச்ச உணர்வின் காரணத்தால் தலைகுனிந்து விடுவதையும் காணமுடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் இந்த வெட்க்க உணர்வும் பெண்களிடத்தில் இல்லாமல் போனது ஏனோ?

திரைஅரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும், இணையதலங்களிலுமே ஆபாசத்தை கண்டு பிஞ்சிலேயே பழுத்துவிட்ட சிறுவர்கள், திரைகளே இல்லாமல் live ல் காணும் பொழுது, மென்மேலும் கெட்டு நாசம் அடைகின்றனர். காதல் கத்திரிக்காய் என்று சிறுவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கிறது. இளைய சமுதாயமே சீரழிந்து வருகிறது

ஆடை எந்த நோக்கத்திற்காக அணியப்படுகிறதோ,அந்த நோக்கம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு,குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டத்தையும் காணமுடிகிறது. மறையவேண்டிய மர்ம உறுப்புக்கள்,மறையாததாலும், பாலுணர்வை தூண்டுவதாலும் ,இப்படிப்பட்ட ஆடைகள் ஆடைகளே அல்ல,மாறாக இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும் பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருபப்வர்களைப் போன்றவர்கள் என்பதுதான் உண்மை.

குறைத்து அணிந்தாலே போதும் என்ற நிலையில் இருக்கும் ஆண்களே கூடுதலாக உடையணிந்து கண்ணியமாக இருக்கும்போது கூடுதல் ஆடையனியவேண்டிய பெண்கள் குறைத்து அணிவது எந்தவகையில் ஏற்புடையதாகும்.இப்படிப்பட்ட கழிசெடைகளைப்பற்றிதான் நபி ஸல் அவர்கள்,உலக அழிவு நாளின் அடையாளமாக பின்வருமாறு கூறுகிறார்கள்.

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம்]

அன்று நபி ஸல் அவர்கள் சொன்ன இந்த நிகழ்வு , இன்று நாம் காணும் பொழுது நம்மை நெருங்கிவிட்ட மறுமையின் நெருக்கம் உறுதியாகிறது.

இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு:

ஒழுக்கத்திலும்,பண்பாட்டிலும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்,முதுகெலும்பாகவும் இருக்கவேண்டிய நமது பெண்கள் ஆபாச யூத,கிருத்துவ கலாச்சாரத்தில் மூழ்கி,அவர்களையே மிஞ்சிவிடும் அளவுக்கு சென்றுக்கொண்டிருக்கின்றனர்.குறிப்பாக செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த அவல நிலையைக் காணலாம். நமது அரபு பெண்களின் அட்டுழியங்களும்,மார்க்கமுரனான காரியங்களையும் சொல்லிமாளாது. இறுக்கமான பேன்ட்டும்,இறுக்கமான பனியன்களும்,அணிந்துக்கொண்டு மார்புகள்மீது துணியே(கூடுதல்) இல்லாமல் இரு விரல்களுக்கு இடையில் சிகரெட் வைத்துக்கொண்டு கூத்தடிப்பதும்,கும்மாளம் அடிப்பதும் காணும் பொழுது நபி ஸல் அவர்கள் உருவாக்கிய அந்த அரபு சமூதாயம் எங்கே?என்று என்ன தோன்றுகிறது.

இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்பைத்தேடி செல்லும் நமது பெண்மணிகளும் இவர்களுடைய இந்த நாகரீகத்தில்[?] தடம்புரண்டு தாவிவிடுகின்றனர்.இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று அலசுவோமேயானால் இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு அறவே எடுபட்டுபோனதுதான்.

நமது தந்தை ஆதம் நபி (அலை)அவர்களிடமும்,தாய் ஹவ்வா (அலை) அவர்களிடமும் இருந்த வெட்கம் குறித்து இறைவன் கூறும்பொழுது....

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]

நபி ஆதம்(அலை)அவர்களும்,அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால்,ஏக இறைவனால் தடை செய்யப்பட்ட குறப்பிட்ட மரத்தின் கனியை சுவைத்ததால் தங்களுக்கு வெட்கத்தலங்கள் ஏற்பட்டதை உணர்ந்தனர்.உடனே வெட்க்க உணர்வின் காரணத்தால் அங்குள்ள மரத்தின் இலைகளால் மர்ம உறுப்புக்களை மறைத்துக்கொள்ள முற்ப்பட்டனர் என்று இறைவன் கூறுகிறான்.

ஆபாசம் தொடர்பான சட்ட திட்டங்களை இறைவன் கூறுவதற்கு முன்பே அது தொடர்பான உணர்வு அவர்களிடத்தில் இருந்திருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியமுடிகிறது. ஆனால் இன்றுள்ள நமது பெண்கள், இறைவன் கூறிய ஆபாசம் குறித்த சட்ட திட்டங்களை தெளிவாக அறிந்தபிறகும் அதில் மேம்ப்போக்கான நிலையில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

நபி ஸல் அவர்களும் வெட்க்க உணர்வின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் இறையச்சத்தோடு தொடர்புபடுத்தி பின்வருமாறு கூறுகிறார்கள்:

'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' நூல்; புஹாரி,எண் 9 .

'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வெட்கத்தை இறை நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி கூறியுள்ளதால் வெட்கத்தில் குறை வைப்போமேயானால் அது இறை நம்பிக்கையில் குறையை ஏற்ப்படுத்தும்.எனவே இறை நம்பிக்கை முழுமையடையாமல் போய்விடும்.ஆகவே வெட்க்கவிஷயத்தில் பெண்கள் கவனமாகவும் பேணுதலாக இருக்கவேண்டும்.

வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த ஆயுதம் என்றும் சொல்லலாம்.இந்த ஆயுதத்தை பெண்கள் பேணுதலாக பயன்படுத்தினாலே அவர்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களை குறைத்துவிடலாம். எஞ்சியவைகளை வேறு வழிகளில் ஒழித்து விடலாம்.

அன்றைய பெண்களும் இறையச்சத்துடன் கூடிய வெட்க உணர்வும்:

ஜாஹிலிய்யத்திலும் இது போன்ற அறை குறை ஆடை அரங்கேரி இருந்த போது, அல்லாஹ்வின் வேத வசனங்கள் அப்பெண்களின் செவிகளில் விழுந்த பொழுது, தங்களின் திறந்த வெளி பெண் உடல்கள் பாதுகாப்பு வலயங்கள் போன்று ஆடையணிய ஆரம்பித்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லி நிற்கிறது.

அன்றைய பெண்களிடம் இருந்த வெட்க்க உணர்வையும்,இறையச்சத்தையும்,அறிந்து கொள்வதற்கு முன் அது தொடர்பான சில உண்மைகளை அறிந்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் ,(ஏனைய சஹாபி பெண்களும்) தனது சுய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொழுது சாதாரண உடையிலேயே செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.அந்நிய ஆண்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஆடைகள் போதாது என்ற காரணத்தினால்,கூடுதல் ஆடை அணிவதை வலியுறித்தி,உமர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். நபி ஸல் இதை கண்டுக்கொள்ளவில்லை.ஒரு தடவை நபி ஸல் அவர்களின் மனைவிகளில் ஒருவரான சவ்தா (ரலி) ஓர் இரவு நேரத்தில் கழிப்பிடம் நாடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இவர்களின் உயரத்தை வைத்து, இறைதூதரின் மனைவிதான்(இறைதூதர் மனைவியரிலேய அவர்தான் உயரமானவர்கள்) என்பதை அறிந்துக்கொண்ட உமர் அவர்கள், சவ்தா அவர்களே! நீங்கள் யாரென கண்டுகொண்டோம் என்று உரத்த குரலில் அழைத்துள்ளார். அப்பொழுதாவது கூடுதல் உடை அணிவது தொடர்பான சட்டம் அருளப்படாதா என்ற ஆசையில் !அப்பொழுதான் பின்வரும் இறைவசனம் இறங்கியது.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31 ]

ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி புஹாரியில் (பாகம் 1, அத்தியாயம் 4, எண் 146 ) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். (4:13)

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (4:14)

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (4:124)

இறைவனுக்கும்,அவனது தூதருக்கும்,எவர் மாறு செய்கிறார்களோ!அவர்களின் நிலை குறித்தும்,எவர் கட்டுப்படுகிறார்களோ அவர்களின் நிலை குறித்தும் மேற்கூறிய வசனத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான்.எனவே ஆடை குறித்த சட்டத்தை பின்பற்றி, அவனுக்கு(இறைவனுக்கு)கட்டுப்பட்டும்,நபிஸல் அவர்கள் வலியுறுத்திய இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வை பின்பற்றி, நபிஸல் அவர்களுக்கு கட்டுப்பட்டும் வாழ்வதன் மூலம் நம் சமூதாய பெண்கள் மறுமை வெற்றிக்கு வழி செய்து கொள்ள வேண்டும்.

இறையச்சமுள்ளவர்களுக்கு இதுவே போதுமானதாகும்.

நன்றி
அன்ஸார்
நன்றி சகோ. முபாரக்

வெள்ளி, மே 18, 2012

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!


நீங்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்-குர்ஆன் 5:02) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தனது தினசரி தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தோலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். கையடக்க கமராக்கள், மொபைல் வீடியோ கமராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய கமராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதை எத்தனை பேர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி! மொபைல் கமராக்கள், கையடக்க வீடியோ கமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும்- தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம். பொது இடங்களில் கமராக்கள்: பொது இடங்களில் – குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்கட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கமராவுடன் உள்ள தொலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியாவண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் இன்றிய உலகில் நம்மத்தியில் பெரும் அளவில் பெரு கிவிட்டனர். கல்லூரி விடுதிகளில்: கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் – மற்றும் மலசல கூடங்கள், குளியலறைகளில் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் இந்தியாவில் ஒரு கல்லூரி விடுதியிலிருந்து 09 கமராக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Face Book & Photoshop: Face Book- TWITTER- ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOADசெய்து இருகிறார்கள். சில மோசடிக்காரர்கள் அதை தேடி டவுன்லோட் செய்து கொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போட்டோவோடு இணைத்து, அதை இன்டர்நெட்டில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர். மேலும் பாடசாலை மாணவிகளின் போட்டோக்களை பாடசாலைகளில் வெளிவரும் வருடாந்த இதழ், மற்றும் ஏனைய வெளியீடுகளில் தனியாகவும் குழுவாகவும் உள்ள போட்டோக்களை வெளியிடுகின்றனர். அந்தக் குழு போட்டோவில் உள்ள பெண் பிள்ளைகளின் முகங்களை வெட்டியெடுத்து வேறு ஒரு ஆடவனுடன் அல்லது நிர்வாண போட்டோவுடன் இணைத்து வலையமைப்புக்களிலும் பேஸ் புக்கிலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை பேணிப் பாதுகாப்பதில் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகின்ற அதேவேளை, அல்லாஹ்வையும் றசூலையும் ஈமான் கொண்ட எந்தவொரு பெற்றோரும் இதனை அனுசரிக்கவுமாட்டார்கள். இருந்த போதிலும் பாடசாலைகளில் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு மாணவிகளின் எதிர்காலத்திற்கு பங்கம் விளைவிக்கும் இவ்விடயத்தை தடை செய்வதில் உரியவர்கள் சிந்தித்து செயற்படுவதுடன் பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். நம்மையறியாமலேயே நம்மை போட்டோ, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தற்போது மிக சாதாரணமாக எமது நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறி வைத்தே நடந்து வருகிறது. அப்பாவியான பல பெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள். பொது மலசல கூடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்: பொது மலசல கூடங்களுக்கு செல்வோர், பொது குளியலறைகளை பயன்படுத்துதோர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லொட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், மலசல கூடம், குளியலறைகளிலும் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா? என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கமராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம். ஆகவே கவனம் தேவை. நெடுந்தூர பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பஸ் பயணம் செய்யும் போது அந்த பஸ்கள் வெளி ஊர்களிலுள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அப்படி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் அத்தகைய உணவங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள சில மலசல கூடங்களில் வீடியோ கமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் கமராக்கள் மூலமாக அவர்களை ஆபாசமாகப் படம் பிடித்து அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர். மேலும் இவற்றை சீடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம் வரை கொண்டு சென்றும் பணம் சம்பாதிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஹோட்டலில் திருமணம் செய்து கொள்பவர்கள் அங்கே தங்கி விட்டும் வருகின்றனர். இவர்களை குறி வைத்தும் ஹோட்டல் அறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும் விடுதியா என்று முடிந்தவரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் அல்லவா?. மருத்துவமனைகளிலும் கவனம் தேவை! மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தங்களால் முடியுமான வரை பெண் வைத்தியர்களை நாடுவது சிறந்ததாகும். அல்லது தக்க துணையுடன் செல்ல வேண்டும். மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும் ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக விலக்கும் போதும் கவனமாக இருங்கள். கமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில மருத்துவர்கள் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து- வீடியோவாகவும் புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்ததாகும் . புடவைக் கடைகளில் TRAIL ROOM கேமரா! நாம் துணிக் கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கமராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா? துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கமராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை: TRAIL ROOM CAMERAல் இருந்து கொண்டு செல்போன் மூலமாக யாருகாகவாவது call செய்து பார்க்க வேண்டும். உங்கள் அழைப்பு- நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த அறையில் ரகசிய கமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் call செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கமரா இருப்பது உறுதி என்று பொறியியலாளர்கள் கூறுகிறார்கள். TRAIL ROOM; கண்ணாடி இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம். ஆகவே இவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவெளி தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்து கொள்ளலாம். ஹிஜாப் அணியும் பெண்களுக்கு பாதுகாப்பு! இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள்- இன்ஷா அல்லாஹ். இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை. ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் தூங்கும் அறை, கழிவறை போன்ற இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபட முடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது; தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும் உடமையும் மானமும் மரியாதையும் புனிதமானவை என்றார்கள். (புகாரி 67) ஆகையினால் நவீன தொழில் நுட்பத்தின் பாரதூரமான விளைவுகளில் இருந்து நம்மையும் பாதுகாத்து மற்றோரையும் பாதுகாப்பதற்கு விழிப்புடன் செயற்படுவோம். நன்றி சகோ. அஸ்மீர்

புதன், மே 16, 2012

இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு


மன்னிப்பு இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் என்பவன் தவறிழைப்பவனாகவே இருக்கின்றான். சில நேரங்களில் அவன் யோசிக்காமல் அல்லது எந்த ஒரு உள்நோக்கமும் இன்றி தவறிழைக்கின்றான். ஆனால் சில நேரங்களில் நன்கு அறிந்து கொண்டே பாவங்களில் ஈடுபடுகின்றான் அல்லது பிறருக்கு தீங்கிழைக்கின்றான்.மனிதர்கள் தொடர்ந்து தவறிழைப்பதால், பின்பு அதனை எண்ணி வருந்தக் கூடியவனாக இருக்கின்றதால் மன்னிப்பு என்பது மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகி விடுகிறது. இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு எனபது இரு வகைப்படுகின்றது. 1) அல்லாஹ்வின் மன்னிப்பு 2) மனிதனின் மன்னிப்பு நாம் சில நேரங்களில் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறி விடுகின்றோம். சில நேரங்களில் மனிதர்களுக்கு தீங்கிழைக்கின்றோம்.ஆகையால் நமக்கு இவ்விரண்டு விதமான மன்னிப்பும் தேவைப்படுகின்றது. (1) அல்லாஹ்வின் மன்னிப்பு மிக்க வல்லமையுடைய நாயனாகிய அல்லாஹ் மிக மன்னிப்பவன்.அல்லாஹ்விற்கு அழகிய பல திரு நாமங்கள் இருக்கின்றன. அவை அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் பறைசாற்றுகின்றன. Rahman (அளவற்ற அருளாளன்) Rahim (நிகரற்ற அன்புடையோன்) Gafoor (மன்னிப்பவன்) Afu’w (மன்னிப்பளிப்பவன்) Tawwab (மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்) Gaffaar (மிக மன்னிப்பவன்) Majeed (பெருந்தன்மையானவன்) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116) என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடி திருந்தி வாழ முற்படவேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம் எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!(அல்குர்ஆன் 2:286) ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’ என்று சொல் என்று கூறினார்கள். பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!’ (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580) அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் வாய்மையுடன் பாவமன்னிப்புத் தேடும் மனிதனுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அவன் செய்த பாவம் எவ்வளவு பெரிதாயினும் எவ்வளவு அதிகமாயினும் சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் கருணை எல்லையில்லாதது! உலகின் எல்லாப் பொருள்களையும் வியாபித்து நிற்கக் கூடியது இதற்கு ஆதாரமாக பின்வரும் நபி மொழியை கூறலாம் நூறு கொலைகள் செய்தவன்: அபூ ஸயீதில் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினான். பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். கல்லி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டான்: நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா? அவர் சொன்னார்: ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும்! உடனே அவன் (அந்த ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதி வழி வந்திருக்கும்பொழுது மரணம் அவனைத் தழுவிக்கொண்டது! அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் கருணை மலக்குகளும் தண்டனை மலக்குகளும் தர்க்கம் செய்யலானார்கள்! கருணை மலக்குகள் சொன்னார்கள்: இவன் பாவமீட்சி தேடியவனாக – தனது இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான்,. என்று! தண்டனை மலக்குகள் சொன்னார்கள்: இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை என்று! இந்நிலையில் வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும் நடுவராக்கினார்கள், அந்த மலக்குகள். அவர் சொன்னார்: இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்த மனிதன் எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாவான்! " அவ்வாறு அளந்து பார்த்த பொழுது அவன்,எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே கருணை மலக்குகள் அவனைக் கைப்பற்றிக் கொண்டார்கள்!" (நூல்: புகாரி, முஸ்லிம்) ஸஹீஹ் (முஸ்லிமின்) ஓர் அறிவிப்பில் வந்துள்ளது: ‘அவன் நல்ல ஊரின் பக்கமே ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர்வாசிகளுடன் சேர்க்கப்பட்டான்’ ஸஹீஹ் (முஸ்லிமின்) வேறோர் அறிவிப்பில் உள்ளது: ‘இந்த ஊருக்கு நீ தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான். மேலும் கூறினான்: (இப்பொழுது) இரு ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று! அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின் பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள்!’ ஸஹீஹ் (முஸ்லிமின்) இன்னோர் அறிவிப்பில் உள்ளது: ‘அவன் தனது இதயத்தால் அந்த ஊரை நாடிப் புறப்பட்டான். (2) மனிதர்களின் மன்னிப்பு தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். மன்னித்தல் எனபது வெறும் வார்த்தைகளினால் வெளிப்படுவதில்லை மாறாக அது உள்ளத்தில் இருந்து வெளிப்படுவதாகும். நாம் ஒருவரை மனதார மன்னித்து அதனை வார்த்தைகளினால் வெளிப்படுத்தி நமது செய்கையினால் நிருபணம் செய்வதே உண்மையான மன்னிப்பாகும். அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134) எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள். எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43) நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள்அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்)அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்றகருப்பு நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி)அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால்இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து "நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவைக்கொன்றவர் நீ தானா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால்அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், "தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில்காட்டாமல் இருக்க முடியுமா?'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன்பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ நூல்: புகாரி 4072 நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை உஹதுப் போரில்கொடூரமாகக் கொன்று அவர்களுடைய ஈரலைக் கடித்துத் துப்பிய கொடூரச் செயல்செய்தவர்களைக் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். அதுவும்மக்காவை வெற்றி கொண்டு, மாபெரும் தலைவராக, அரசராக இருந்த நேரத்தில் மன்னித்தார்கள் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்: உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்¢ஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22) இந்த வசனம் இறங்கியதை கேள்விப் பட்டவுடன் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் அவர்கள் தமது வீட்டை விட்டு வெளியே வந்து " ஆம் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் மன்னிப்பை வேண்டுகின்றேன்" என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவதூறை பரப்புவதில் பங்கு வகித்த அந்த இளைஞரை மன்னித்து அவருக்கு மேலும் பல உதவிகளை செய்தார்கள். மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான். நாமும் நம்மால் இயன்றவரை மன்னிக்கும் பக்குவத்தை வளரத்துக் கொள்வோமாக!

சனி, மே 12, 2012

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?


கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய் விடுமே? விளக்கம் தரவும். -சுரேஷ், திருக்குறுங்குடி பதில் : பெண்களைப் போகப் பொருளாக்கி ஆண்கள் ரசிக்கவே நீங்கள் குறிப்பிடும் நாட்டியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியாக சினிமாவும், நீலப்படங்களும் உருவாகியுள்ளன. பெண்கள், கண்டவர்களும் ரசித்து, அனுபவிக்கும் போகப் பொருட்கள் என்பதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. அங்க அசைவுகளையும், உடல் திரட்சியையும் மற்றவர்களுக்குக் காட்டுவது கலை என்றால் அந்தக் கலையில் இஸ்லாத்திற்கு உடன்பாடு கிடையாது. வேலை வாய்ப்பு என்று வாதிடுவது என்றால் கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். இதுவும் பலருக்கு வேலை வாய்ப்பாகத் தான் உள்ளது

ஞாயிறு, மே 06, 2012

தொடரும் ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள்.


23: 99, 100. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26 தொடரும் ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள். ஷேக்பாபு, அல்லாபி என்ற முஸ்லீம் தம்பதிகள் நள்ளிரவு நேரங்களில் சென்று கிராமத்தின் இடுகாட்டில் மண்டை ஓடுகளை சேகரித்துக் கொண்டு வந்து பில்லி சூனியம் செய்வதை பிழைப்பாகக் கொண்டவர்கள். சம்மந்தப்பட்ட கிராமத்தில் எதிர்பாராமல் தொடர் மரணங்கள் நிகழவே இவர்கள் மண்டை ஓடுகளை சேகரித்து பில்லி,சூனியம் செய்வதால் ஏற்பட்ட விளைவு தான் தொடர் மரணம் என்று முடிவு செய்த ஊர் மக்கள் அவர்களை நையப்புடைத்து இருவரின் பற்களையும் நிற்க வைத்து கதற கதற பிடுங்கி எடுத்துள்ளனர். 42 வயதையுடை முருகன் என்ற மந்திரவாதி நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியையும், 7ம் வகுப்புப் படிக்கும் மாணவியையும் இறந்த ஆவியை விரட்டுவதற்கு தனி அறையில் பூஜை செய்ய வேண்டும் என்றுக் கூறி தாய். தந்தை அனுமதியுடன் கதவைத் தாழிட சிறிது நேரத்தில் அலறி அடித்து கதவைத் திறந்து கொண்டு இரண்டு மகள்களும் ஓடிவந்து மந்திரவாதி தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூற ஊர் மக்கள் கூடி நையப்புடைத்துள்ளனர். இது மற்றொரு சம்பவம். படிப்பினை பெற வேண்டாமா ? தொலைகாட்சிகளைத் திறந்தால், செய்தித் தாள்களைப் புரட்டினால் மேற்காணும் செய்திகள் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு ஃப்ளாஷ் நியூசாக வந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் பிடியில் சிக்கிய சங்கராச்சாரியாவிலிருந்து நித்யானந்தா வரை உள்ள சாமியார்கள் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை கொள்ளைகளை கடவுளின் பெயரால் நடத்தினர், மந்திரவாதிகள் இறந்தவர்களின் ஆவியின் பெயரால் நடத்துகின்றனர். வீட்டுக்கு வீடு டிவி வந்து விட்டாலும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் அவ்வளவாக காண்பதில்லை, காண முடியாத அளவுக்கு சினிமாவும், சீரியல்களும், காமெடி காட்சிகளும் நேரத்தை ஆக்ரமித்துக்கொண்டு விட்டதால் இன்னும் கிராமப் புற மக்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். இதில் கிராமப் புறத்து மக்கள் மட்டும் விதிவிலக்கல்ல பட்டணத்து ஆபீஸர்களும் கூட இதில் அடங்குவர். ஜெயராமனை கொலை செய்த கொலையாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறிய (ஸ்காட்லான்ட் போலீசுக்கு நிகரான தமிழ்நாட்டு) போலீஸ் ஆவி(?)யின் உதவியுடன் தேடி கண்டு பிடிக்கப் போவதாக சமீபத்தில் அடித்த காமெடியைப் படித்து சிரிக்காதவர்களே தமிழ் நாட்டில் இல்லை எனலாம். துடி துடிக்க கொலை செய்யப்பட்டு அகால மரணத்தை அடைந்த ஜெயராமன் ஆவியாக வந்து அவர்கள் குடும்பத்தாரிடம் அல்லது இதற்காக அமைக்கப்பட்ட போலீஸ் படையிடம் இன்னார் தான் என்னை கொலை செய்தார்கள் என்றுக் கூறி இருக்கலாம். ஆவி இருப்பது உண்மை என்றால் தேவை இல்லாமல் இந்த போலீஸ் காரர்கள் ஜெயராமன் ஆவியை விட்டு விட்டு வேறொரு ஆவியைத் தேடி அலைய வேண்டிய அவசியமிருக்காது ? ஆவி என்பது சுத்த ஹம்பக் என்பதை இதிலிருந்தே விளங்கி கொள்ளலாம். சமூகவிரோத செயல்களுக்காக. சில பாழடைந்த கட்டடங்களில் ஆவி உலாவுவதாக கூறி அந்த கட்டடத்தை யாரும் விலைக்கு வாங்க முடியாத அளவுக்கு, யாரும் குடி இருக்க முடியாத அளவுக்கு, அவ்வழியே நடமாட முடியாத அளவுக்கு சில சமூக விரோதிகள் கோயபல்ஸ் ஸ்டைலில் பரப்பி விடுவார்கள் அதனால் அக்கட்டடம் சிதிலமடைந்து கிடக்கும். ஆனால் இரவானதும் அதற்குள் அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் தாராளமாக நடக்கும். சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை மட்டும் ஆவி விட்டு வைப்பதெப்படி ? என்பதை பொது மக்கள் சிந்திக்க மறுப்பது ஏன் ? பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ ஒரு பிரசவத்தில் இறந்ததும் முதலில் புர்ஹாம்பூரிள் உள்ள புலாரா மஹாலில் தான் அடக்கம் செய்யப்பட்டார். பிரசவத்தில் இறந்தது தெரிய வந்ததும் புலாரா மஹாலில் மும்தாஜின் அலறும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டனர் அதன் பின்னர் மும்தாஜின் குடும்பத்தார்களே புலாரா மஹாலுக்கு செல்வதை நிருத்திக் கொண்டனர். மும்தாஜின் உடல் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டப் பின்னரும் கூட உடல் தான் அங்கு சென்றது ஆவி இன்னும் இங்கு தான் அலைகிறது என்றுக் கூறி சமூக விரோதிகள் பாதுகாப்பான புலாரா மஹாலை தங்களுடைய சமூக விரோத செயல்களுக்கு பாதுகாப்பான கட்டடமாக ஆக்கிக் கொண்ட செய்தியைப் படித்திருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் ஏராளம் ! ஏராளம் !. சொந்த பிரச்சனைகளுக்காக, தனக்கு கீழ்படியாதவர்களை கீழ்படிய வைப்பதற்காகவும், தனது தேவையை நிரைவேற்றிக் கொள்வதற்காகவும் ஆவி தன்னிடம் வந்து பேசுவதாகக் கூறி ஆவி மூலமாக தனது தேவையை கூறி நிரைவேற்றிக் கொள்பவர்களும் இதில் அடங்குவர். ஆவி இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை. இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்தவியல் மின்புலம் மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்டதாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள். பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார். இதுவரை ஆவி உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம். ஆதாரம்:http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF&action=edit§ion=3 ஆவி உண்டென்றுப் புளுகிய பைபிள் ? ஆவி என்ற புருடா கண்டிப்பாக மேலை நாட்டு இறக்குமதி தான், இறந்தவர்களின் ஆவி உயிருள்ள உடலில் புகுந்து அட்டகாசம் செய்வதை போல் வேலை வெட்டி இல்லாத ஹாலிவுட் சினிமா காரர்கள் சினிமாவில் புகுத்தி மக்களை நம்ப வைத்தனர். சினிமா தான் இப்படி என்றால் சினிமாவை விட மோசமாக உருவாக்கப்பட்ட பைபிளில் இறந்தவர்களின் ஆவி உயிருள்ள உடலில் புகுந்து அட்டகாசம் செய்யும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அப்பாவி மக்களை நம்ப வைத்தனர். அப்பொழுது அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். மத்தேயு 10:1 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லியது. லூக்கா 11:24 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின. மாற்கு 5:13 அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர் களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 13:2 என்று ஆவி உண்டு எனும் அறிவுக்கு ஒவ்வாத விஷயத்தை பைபிளில் எழுதி வைத்தனர். பைபிள் இறைவேதம் இல்லை என்பதை பைபிளிலிருந்தே இன்னும் வேறு பல சட்டங்கள் தொடர்பாகவும் நூற்றுக் கணக்கான வசனங்களை எடுத்து தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் நிருபித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அதனால் பைபிளே ஒரு சுத்த ஹம்பக் என்பதால் அதில் ஆவி தொடர்பாக கூறப்பட்ட தகவல்களும் சுத்த ஹம்பக் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆவி இல்லை என்று உரைத்தது இஸ்லாம் மட்டுமே !! எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும், மரணித்தப் பின்னர் அவரது உடலிலிருந்து உயிர் முற்றாகப் பிரிந்து படைப்பாளன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் மீண்டும் திரும்பவே திரும்பாது இதில் யாரும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. மனிதர்கள் கண்டு பிடித்த உபகரணங்களில் அவர்கள் வரும்பியவாறு மாற்றி அமைக்கலாம் 110 மின்சாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரத்தை 220 மின்சாரத்திற்கு மாற்றி அமைக்கலாம் 220 மினசாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரத்தை 110 மின்சாரத்திற்கு மாற்றி அமைக்கலாம் இது போன்ற மாற்றங்களை மனிதன் செய்ய முடியும். உயிர் விஷயத்தில் இறைவனைத் தவிற வேறு எவராலும் எந்த மாற்றத்தையும் செய்ய இயலவே இயலாது உடலை விட்டுப் பிரிந்த உயிர் இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன்; 39:42. ஒன்றுமே இல்லாமல் இருந்தவருக்கு உடல் கொடுத்து உயிர் கொடுத்த இறைவன் அது மரணித்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போனப் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவும் ஆற்றலுடையவன் என்பதை உறதியாக நம்பும் மக்கள் இறந்தவரின் ஆவி உயிருள்ள யாருடய உடலிலாவது புகுந்து அட்டகாசம் செய்யும் என்றும், இறந்தவரின் ஆவியை அவரது மண்டை ஓட்டுக்குள் புகுத்தி மாந்திரீகம் செய்து எதிராளியின் உயிரை பறிக்க முடியும், கை,கால்களை முடக்க முடியும் என்றெல்லாம் கூறுவதை நம்பி ஏமாறக் கூடாது. மரணித்தவர்களுக்கும் உலகுக்கும் மிகப்பெரியத் தடுப்பை ஏற்படுத்தி விட்டதாக ஆற்றல் மிகும் அல்லாஹ் அருள் மறைக் குர்ஆனில் கூறி விட்டான். முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26. திருக்குர்ஆன்; 23: 99, 100. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், மே 01, 2012

மறு பிறவி உண்டா?


கேள்வி : என்னுடைய ஒரு ஹிந்து நண்பன் மறு பிறவி இல்லையென்பதை நிரூபித்தால் நான் இஸ்லாத்தில் வந்து விடலாம் எனக் கூறியுள்ளான். எனவே தயவு செய்து பதில் தந்தால் அந்த நண்பனின் சந்தேகம் தீர்க்க வாய்ப்பாக அமையும். ஹெச்.ஜாஃபர் சாதிக், கேரளா. பதில் : மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான். இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர். நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும். மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும். மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும். பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன. புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம். ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்? ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

தவறான முடிவின் பிடிவாத குணத்தினால்


ஒரு சிலரின் தவறான முடிவின் பிடிவாத குணத்தினால், உறவுகளின் ஒட்டு மொத்த சந்தோசமும் சீர்குழைந்து விடுகிறது.... -மு.மன்சூர் அலி...

திங்கள், ஏப்ரல் 23, 2012

திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?


கேள்வி : என்னுடைய இந்து நண்பர் அல்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவை குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும். -எம். திவான் மைதீன், பெரியகுளம் பதில்: இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல்-வாங்கல், இன்ன பிற உடன்படிக்கைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். இதைத் திருக்குர்ஆன் 2:282, 5:106 ஆகிய வசனங்களில் காணலாம். திருமணம் என்பதும் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளே அதற்குப் போதுமானது தான். ஆனால் ஒரு பெண்ணுடைய கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்துவது சாதாரண ஒப்பந்தம் போன்றது அல்ல. அவதூறு சுமத்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். விபச்சாரம் நிரூபிக்கப் பட்டால் அளிக்கும் தண்டனை மிகவும் கடுமையானது. இரண்டு நபர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்க முடியாது. எனவே தான் பெண்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்துவோர் குறைந்த பட்சம் நான்கு சாட்சிகளைக் கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க வேண்டும். ஆணுக்கு எதிராக விபச்சாரக் குற்றம் சுமத்தினாலும் நான்கு சாட்சிகள் நேரடியாகப் பார்த்ததாகக் கூற வேண்டும், என்று இஸ்லாம் கடுமை காட்டுகிறது. அது மட்டுமின்றி நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் இது பற்றி யாரேனும் பேசினால் அவ்வாறு பேசியவர்களுக்கு எண்பது கசையடி வழங்க வேண்டும் என்றும், நீங்கள் சுட்டிக் காட்டும் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை ஒருவரோ இருவரோ கண்டால் கூட அதைப் பரப்பத் தடை விதிக்கப்படுகிறது. நான்கு பேரும் நேரடியான சாட்சிகளாக இருக்க வேண்டும். இதில் கணவனுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கிறது. தன் மனைவியைத் தகாத நிலையில் பார்க்கும் கணவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டியதில்லை. ஏனெனில் அதன் பின்னர் அவன் அவளுடன் வாழத் தயங்குவான். எனவே பிரிந்து விட அவன் விரும்பினால் நான்கு தடவை சத்தியம் செய்து கூறி பிரிந்து விட வேண்டும். கற்பு விஷயத்தில் ஒருவருக்கு எதிராக மற்றவர் குற்றம் சுமத்துவதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், பெண்களின் மானத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அற்புதமான சட்டத்தை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது. எந்த நாட்டிலும் இத்தகைய அற்புதமான சட்டம் இருபதாம் நூற்றாண்டில் கூட இல்லை. சர்வ சாதாரணமாக கிசுகிசுக்கள் பரப்படுகின்றன. இத்தகைய ஒரு சட்டம் உலகில் நடைமுறைப் படுத்தப் பட்டால் பல பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும். 46 சிந்திப்பது இதயமா? மூளையா? குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும். - எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி. மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது. சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது. பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது. ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?என்று கேட்கிறோம். ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம். சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது. இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது. சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. 'இதயத்தில் உனக்கு இடம் இல்லை' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலிசெய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான். இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும். ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது. குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்! எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது. இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன். அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள். மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான். 5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும். 33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது. எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது. மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

வியாழன், ஏப்ரல் 19, 2012

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால்

மதுக்கடை என்ற நிலை இன்று.



பள்ளி இல்லாத ஊரிலும்

மதுக்கடை திறக்க வேண்டும்

என்பது "குடி"மக்களின் கோரிக்கை.


பண்டிகை நாட்களில் பல கோடி வருமானம்

மதுக்கடைகளால், அரசுக்கு...


உழைத்து வந்தப் பணத்தை

குடித்து வீணடிப்பது முறையா...?




சிந்திப்பீர்....!!!


குடிகாரனை சமுதாயத்தில் யாருமே மதிப்பதில்லை.

குடித்து தன் மதிப்பை தானே இழக்கலாமா..???


குடி உன்னை தவறார வழியில் இட்டு செல்லும்..

குடியினால் வாழ்விழந்தவர் பலர்....


குடி உனது குடியை மட்டும் கெடுக்காது....


குடி...

உனது விதியை கெடுக்கும்..
உனது மதியையும் கெடுக்கும்.

உனது வீரத்தை கெடுக்கும்..
உனது மானத்தை கெடுக்கும்..

உனது அந்தஸ்தை கெடுக்கும்..
உனது நிம்மதியை கெடுக்கும்.....

ஒட்டு மொத்தமாக
உனது முன்னேற்றத்தை கெடுக்கும்..



அது மட்டுமல்லாது

உலக அரங்கில் ஒட்டு மொத்த உனது சமுதாயத்தின்

அந்தஸ்தையும் குறைத்து விடும்...

(இது போல் ஆங்கங்கே குடித்து விட்டு போதையில் கீழே விழுந்து கிடந்தால்)
—
மு.மன்சூர் அலி

சபாஷ் போலீஸ்:


லஞ்சம் ஊழல் விவகாரங்கள் பார்லிமெண்ட் வரை பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இந்த சென்னை,போலீஸ்காரர் சந்திரசேகர் " லஞ்சம் தவிர்ப்போம், ஊழல் ஒழிப்போம்'' என்ற விழிப்புணர்வு வாசகத்தை தன் காக்கி சட்டையிலேயே அணிந்துள்ளார். தன் மட்டுமின்றி பார்பவர்களிடம் எல்லாம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறர். இந்த உணர்வு அனைவருக்கும் வந்தால் இந்த நாடு சுபிக்ஷமடையும். — with Rahmat Nisha

சனி, மார்ச் 31, 2012

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1)

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.

ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.


மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!



"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.


அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.


அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.


"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது."


"ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.


சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.


உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.


அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.


ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.


அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.


முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா?


வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.


கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.


சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன?


ஆக்கம்: அபூ ஸாலிஹா


Read more about கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1) | ஆய்வுக் கட்டுரைகள் Courtesy: www.satyamargam.com

வெள்ளி, மார்ச் 23, 2012

அறுவை சிகிச்சை இன்றி மகாதமனியை சீர்படுத்தலாம்

வயதானவர்கள் நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும்,

அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை கணக்கிட வேண்டும். இதயத்தில், அயோட்டிக் வால்வு என்ற மகா தமனி வால்வை, ரத்தமின்றி, அறுவைச் சிகிச்சையின்றி மாற்றி பொருத்து வதற்கு, டி.ஏ.வி.ஐ., என்று பெயர். ஆங்கிலத்தில், “டிரான்ஸ்பெமோரல் அயோட்டிக் வால்வு இம்ப்ளான்ட்’( transfemoral aortic valve implant) என்றழைக்கப்படுகிறது. தொடையிலுள்ள ரத்தக் குழாய் வழியாக, ஸ்டென்ட் பொருத்தப்படுவதே, இச்சிகிச்சை முறை. அயோட்டிக் வால்வு ஸ்டெனோசிஸ் என்ற வால்வு சுருக்க நோய், 60 முதல், 70 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ஏற்படும். 50 சதவீத முதியோருக்கு, வயது முதிர்வு தன்மையால், வால்வின் மேல், சுண்ணாம்பு, நார் சத்து படர்ந்து, வால்வு சுருங்கி விடுகிறது.

இதனால் ரத்தம், இடது கீழறையிலிருந்து, மகா தமனிக்கு செல்வதில் தடை ஏற்பட்டு, பல சிக்கல்களும், கோளாறுகளும் உண்டாகின்றன. பெரும்பாலும், அயோட்டிக் வால்வு சுருக்கத்தை, கண்டுபிடிப்பது கடினம். 50 சதவீதத்தினர் கண்டுபிடிக்காமல், இந்த வியாதியினால் திடீரென்று இறந்து விடுகின்றனர். நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும், அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை, கணக்கிட வேண்டும். இதய அறுவை சிகிச்சை வேண்டாம்

இதை சரியாக கண்டுபிடிக்கா விட்டால், அறுவை சிகிச்சை மூலம், வால்வு மாற்று சிகிச்சை செய்ய முடியாத இறுதி நிலையில், நோயாளிகள் இருப்பர். அந்த நேரத்தில், இந்த டி.ஏ.வி.ஐ., தான் தீர்வு. ரத்தமின்றி, கத்தியின்றி நெஞ்சை பிளக்காமல், வலது தொடையில் இருக்கும் பெமோரல் ரத்த நாளத்தில் துளை போட்டு, அதன் மூலம் ஒரு குழாய் செலுத்தப்பட்டு, அது, அயோட்டிக் வால்வை கடந்து, இடது கீழறை வரை சென்றடையும். இதனுள் ஒரு மெல்லிய கம்பியை செலுத்தி, அறையில் நிறுத்தி, அதன் வழியாக, ஸ்டென்ட்டை உள்ளடக் கிய பலூனை செலுத்தி, பழுதடைந்த அயோடிக் வால்வு பகுதியில் வைத்து, வெளியில் பம்பு மூலம், பலூனை விரிவடைய வைக்க வேண்டும். அப்போது, சுருங்கிய வால்வு விரிவடையும். பலூனின் ஸ்டென்ட் தாங்கியுள்ள பகுதியை, வால்வின் பழுதடைந்த பகுதியில் வைத்து விட்டால், வால்வில், ரத்த ஓட்டம் சீராகிவிடும்.

இந்த நோயை, உடனடியாக கண்டுபிடிக்க முடியாததற்குக் காரணங்கள்:

இந்த பாதிப்பை கொண்டவர்கள், எந்தவித குறைகளுமின்றி இருப்பர். காரணம், பெரும்பாலான முதியோர், அதிகமான செயல்பாடுகள், வேலைகளில் ஈடுபடுவதில்லை.

'எக்கோ கார்டியோ கிராம், டிரெட் மில் டெஸ்ட்’ பரிசோதனைகள் செய்து கொள்வதில்லை.

பெரும்பாலான குடும்ப டாக்டர்கள், இந்த நோயை கவனத்தில் கொள்ளா மல் கூடுதல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தமென்று இருந்து விடுகின்றனர்.

முதியோருக்கு மூச்சு திணறலோ, வேலை செய்யும் திறன் குறைந் தாலோ, நடை பயிற்சியின் வேகம், தானாக குறைந்தாலோ, வயதான குறையென்று சும்மா இருக்கக் கூடாது.

உடனடியாக, இதய வல்லுனரின் ஆலோசனை தேவை.

வியாழன், மார்ச் 22, 2012

ஓர் தீவு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வு

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

**********
பிரஞ்சு வார்த்தைகளின் உச்சரிப்புகள் கவனமுடன் கையாளப்பட்டுள்ளன. தவறிருந்தால் சுட்டி காட்டவும்.
**********

ல ரெயுனிஒன் (La Réunion) - இந்திய பெருங்கடலில், மடகாஸ்கருக்கும் மொரீஷியஸ்சுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். சுமார் எட்டு லட்சம் மக்கள் வாழும் இந்த தீவு அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


இந்நாட்டின் மக்களை ஒரு வினோதமான மூளை சம்பந்தப்பட்ட நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர பசியின்மையால் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட மறுத்தும், கட்டுப்படுத்த முடியாத அளவு வாந்தியும் எடுப்பார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் white matter காலப்போக்கில் அழிய ஆரம்பிக்கும். சுவாசிப்பதையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்தும் மூளைத்தண்டுகள் தளர ஆரம்பிக்கும்.

நிச்சயம், இது எண்ணிப்பார்க்கவே கொடுமையான ஒரு நோயே. ரெயுனிஒன் தீவின் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்நோய்க்கு பறிகொடுத்துவிட்டனர்.

இந்த நோயை Ravine encephalopathy என்றழைகின்றனர். இந்த நோய் மிக அரிதானது. 10000-15000 பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அதே நேரம், ஒருமுறை வந்துவிட்டால், அடுத்த தலைமுறையினருக்கு கடந்துக்செல்லக்கூடியது. ஆக, இது ஒரு பரம்பரை நோயே. இந்த தீவு மக்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட காரணமிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், காலங்காலமாக சொந்தங்களுக்குள்ளாகவே திருமணம் செய்து வந்தனர் இத்தீவின் மக்கள். ஆகையால், இந்த நோய் அடுத்தடுத்த தலைமுறையினரையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.

சரி, இந்த நோய்க்கான காரணங்கள் என்ன? எப்படி ஏற்படுகின்றது இந்த நோய்?

இதற்கு விடைக்காண ஆரம்பித்து தான் அதிசயத்து போய் நின்றது கர்தோ (Cartault) என்ற ஆய்வாளரின் குழு. இந்த நோய் ஏற்பட எந்த மரபணுக்கள் காரணம் என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள் இந்த குழுவினர். சுமார் ஒன்பது குடும்பங்களை ஆய்வுக்குட்படுத்தினர். நோயால் பாதிக்கப்பட்ட பதினைந்து குழந்தைகளும், பாதிக்கப்படாத பதினேழு குழந்தைகளும் இதில் அடங்குவர்.

மரபணுக்களை சோதித்தவர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. SLC7A2 என்ற மரபணுவில் தான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த மரபணுவானது, பாதிக்கப்படாதவர்களின் அதே மரபணுவை காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.

ஆக, இந்த மரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் தான் நோய்க்கான காரணம் என்று கண்டயறியப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இந்த மரபணுவானது, LINE jumping மற்றும் SINE element எனப்படும் மரபணுக்களோடு தொடர்புடையது. ஆக, இந்த மூன்று மரபணுக்கள் தான் இந்த நோய்க்கு பின்னணியில் இருக்கின்றன என்பது தெளிவானது.

இயல்பான நிலைக்கு மாறாக சில மரபணுக்கள் இருப்பதால் நோய் ஏற்பட்டிருக்கின்றது, இதில் என்ன வியப்பு என்று நீங்கள் கேட்கலாம். அங்கு தான் விசயமே இருக்கின்றது.

குப்பை மரபணுக்கள் (Junk DNA):

அது 1940-களில் ஒரு கட்டம்.

மரபியல் வல்லுனரும், பின்னாளில் நோபல் பரிசு பெற்றவருமான பார்பரா ஒரு வியப்பூட்டும் ஆய்வை நிகழ்த்தினார். உயிரினங்களின் மரபணுக்களில் 'transposons' எனப்படும் மரபணுக்களை கண்டுபிடித்தார் அவர். இந்த மரபணுக்களின் பயன்பாடு தெரியாவிடினும், இவை மற்ற மரபணுக்களை ஒழுங்குப்படுத்தும் செயலை செய்யலாம் என்று எண்ணினார் பார்பரா.

அதே நேரம், இந்த மரபணுக்களை "குப்பை மரபணுக்கள் (Junk DNA)" என்று அழைக்க ஆரம்பித்தனர் ஆய்வாளர்கள். இவை உபயோகமில்லாதவை என்று அவர்கள் கருதியதாலேயே அப்படி அழைக்கலாயினர்.

அது என்ன உபயோகப்படும் மரபணுக்கள், உபயோகமில்லா மரபணுக்கள்?

ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் சில அதிகாரங்கள் (chapter) பயனுள்ளவை என்றும், மற்ற அதிகாரங்கள் பயனற்றவை என்றும் கூறினால் எப்படி இருக்குமோ அப்படியான நிலை தான் இதுவும். உயிரினங்களின் DNA-க்களில் சில பகுதிகள் பயனுள்ள மரபணுக்கள் (coding DNA) என்றும், மிஞ்சியவை பயனில்லாதவை (Non-coding DNA or 'Junk' DNA) என்றும் எண்ணினர் ஆய்வாளர்கள்.
பயனுள்ள மரபணுக்கள் என்பவை, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை (Instructions) தன்னகத்தே கொண்டவை. ஆயிரக்கணக்கான புரதங்கள் ஒருங்கிணைந்து நம் உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன.

பயனற்ற மரபணுக்கள் என்பவை, இத்தகைய செயற்பாடுகளை செய்வதில்லை. அதுமட்டுமில்லாமல், இவை எதற்காக இருக்கின்றன என்பதே நீண்ட காலத்திற்கு புரியாத புதிராகவே இருந்தது/இருந்துக்கொண்டிருக்கின்றது.

பார்பரா முதற்கொண்டு சில ஆய்வாளர்கள், இவை பயனுள்ள மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் செயலை செய்யலாம் என்பதாக கூறினாலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகையால் குப்பை மரபணுக்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.

இயல்பாகவே இந்த குப்பை மரபணுக்கள்(?) இறைமறுப்பாளர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்துவிட்டன. 'இறைவன் உயிரினங்களை படைத்தார் என்றால் ஏன் உபயோகமற்ற மரபணுக்கள் இருக்க வேண்டும்?' - இத்தகைய கேள்விகள் எளிதாக எழ ஆரம்பித்தன.

நாத்திகர்களின் அறிவியல் சார்ந்த இறைமறுப்பு புரிதல்கள் நீடித்ததில்லை என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. குப்பை மரபணுக்கள் விசயத்திலும் அது தான் நடக்க ஆரம்பித்தது. கடந்த பத்து வருடங்களாக, இவற்றில் நடக்கும் ஆய்வுகள் இந்த மரபணுக்கள் குறித்த மிக வியப்பான செய்திகளை தந்துக்கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். ஜப்பான் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குப்பை மரபணுக்கள் என்பவை சுமார் 540 மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்களில் மாற்றமடையாமல் காணப்படுகின்றன என்ற தகவல் வெளிவந்தது.

என்ன? 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளில் குப்பை மரபணுக்கள் இருந்திருக்கின்றனவா? இவை பயனற்றவை, குப்பை என்பதாக இருந்திருந்தால் இத்தனை மில்லியன் ஆண்டுகள் மாற்றமடையாமல் வந்திருக்க வேண்டிய அவசியம் என்ன? - இம்மாதிரியான கேள்விகள் ஆய்வாளர்களை அசரடிக்க, நாம் அறியாத ஏதோ ஒரு முக்கிய பணியை இந்த மரபணுக்கள் நம் செல்களில் செய்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.

ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வை போலவே வேறு பல ஆய்வுகளும் மேற்கண்ட முடிவுக்கே வந்தன. முக்கிய பணியை செய்கின்றன என்று பலரும் ஒப்புக்கொண்டாலும், அது எந்தமாதிரியான பணி என்பதை தங்கள் ஆய்வுகளுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்துக்களை கூறினர்.

மொத்தத்தில், குப்பை மரபணுக்கள் குறித்த தவறான புரிதல்கள் விலக ஆரம்பித்தன.

பைனல் பஞ்ச்:

ரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு SLC7A2 (Intron), LINE jumping & SINE element போன்ற மரபணுக்கள் தான் காரணம் என்று மேலே பார்த்தோம் அல்லவா?

இவை என்ன தெரியுமா? இதுநாள்வரை குப்பை மரபணுக்கள் என்று கருதப்பட்டவையே இவை. Ooppss.....

இது அறிவியல் உலகை பிரம்மிக்க வைக்கும் ஒரு செய்தியே. காரணம், இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் உயிர்க்கொல்லி நோய்க்கு வழிவகுக்கின்றது என்றால் இவற்றை எப்படி குப்பையாக கருத முடியும்?

ஆக, குப்பை மரபணுக்கள் குறித்த ஆய்வாளர்களின் முந்தைய புரிதல்கள் தவறு என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

'ஓகே. குப்பை மரபணுக்களில் சில பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால் இன்னும் பல மரபணுக்கள் பயனற்றவையாக இருக்கின்றவே' என்று சிலர் கூறலாம். நேற்றுவரை இவை ஒன்றுக்கும் உபயோகமில்லாத மரபணு தொகுப்பு, இன்றோ இவற்றில் சில மிகவும் பயனுள்ளவை, அப்போ நாளை?

எப்போது குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவைகளில் சில, மிகவும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டு விட்டதோ, அப்போதே மற்ற (குப்பை) மரபணுக்கள் குறித்த எண்ணங்களையும் மறுபரிசீலனை செய்யும் வழிமுறைகளை அவை திறந்து விட்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.

ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை நோக்கி அறிவியல் பயணிக்காது. அப்படி பயணித்தால் அது அறிவியலாக இருக்கவும் முடியாது.

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to:
1. Sister Shameena (for helping out with French pronunciations)
2. Brother Mohamed Ashik and Sister Amina Mohammed (for content checking)

References:
1. Research team finds key to childhood brain disease lies in genetic junk - Medical Xpress. March 13, 2012. link
2. Under three layers of junk, the secret to a fatal brain disease - Discover magazine blog. March 12th, 2012. link
3. Transposons, or Jumping Genes: Not Junk DNA? - Nature Education. link
4. Barbara McClintock and the Discovery of Jumping Genes (Transposons) - Nature Education. link
5. 'Junk' DNA gets credit for making us who we are - New Scientist. 19 March 2010. link
6. 'Junk' throws up precious secret - BBC. 12 May 2004. link
7. "Junk DNA" - PSRAST.org. link
8. Difference Between DNA and Genes - Differencebetween.net. link
9. Noncoding DNA - Wikipedia. link
10. Genetics 101 Part 1: What are genes? - youtube. link
11. Genes & Chromosomes Part 1 - youtube. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Related Posts Plugin for WordPress, Blogger...