செவ்வாய், ஜனவரி 31, 2012

சிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை(சீனி) அதிக ஆபத்தானது!!!

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.

காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

Cuddalore MuslimFriends

திங்கள், ஜனவரி 30, 2012

இனிய இல்லறம் (தாம்பத்திய உறவு) Part-2 (18+ only)

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்களாவர். எனவே உங்கள் விளை நிலத்தில் விரும்பியவாறு செல்லுங்கள்!’ (அல்குர்ஆன் 2:223)திருமணத்தின் மூலம் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலக்கும் தாம்பத்திய உறவு குறித்து எழும் எல்லா ஐயங்களையும் விளக்கும் அற்புதமான வசனம் இது.இன்னின்ன நாட்களில் உடலுறவில் ஈடுபடக் கூடாது. அதனால் இந்த விளைவு ஏற்படும். பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாது. கண் குருடாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரின் மறைவிடங்களைப் பார்க்கக் கூடாது. இப்படி பெரியவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறி தாம்பத்திய வாழ்க்கையை அர்த்தமற்றதாக்குகின்றனர்.சில மாதங்களில் தம்பதியரை வலுக்கட்டாயமாகப் பிரித்து வைத்து ரசிக்கின்ற கொடுமையையும் நாம் கண்டு வருகிறோம். அந்தக் கால கட்டத்தில் ஆண்களில் பலர் தவறான நடத்தையில் ஈடுபட்டாலும் அது பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

இத்தகையோரின் மூட நம்பிக்கைகளைக் களைவதாகக் கூறிக் கொண்டு எழுதப்படும் நூல்களும் விளக்கங்களும் கேட்பதற்கே காதுகள் கூசும் அளவுக்கு ஆபாசமாக அமைந்துள்ளன.ஆபாசமாகவும் இல்லாமல் அனைத்து ஐயங்களையும் அகற்றக் கூடிய வகையில் நாகரீகமாக விளக்க முடியாதா? முடியும்! மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் மிக அருமையாக இதை விளக்குகின்றது.ஆண்களாயினும் பெண்களாயினும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை ஆதரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆண்கள் ஆண்களுடன் சேர்வதும் பெண்கள் பெண்களுடன் சேர்வதும் கூடாது என்பதை எவ்வளவு அற்புதமாக இவ்வசனம் கூறிவிடுகிறது.பெண்களை விளைநிலங்களாகவும் ஆண்களை அதில் பயிரிடுவோராகவும் நாகரீகமான உவமை கூறியதன் மூலம் கேடு கெட்ட அந்தக் கலாச்சாரத்தை எதிர்க்கிறது.விளைநிலத்தில் தான் பயிரிட வேண்டும் என்ற கூற்று ஆண்கள் ஆண்களுடன் கூடுவதையும் மறுக்கிறது. மனைவியரின் மலப்பாதையில் கூடுவதையும் மறுக்கிறது. அவ்விடங்களில் கூடுவதால் எதையும் உற்பத்தி செய்ய முடியாது.தாம்பத்திய வாழ்வில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது? எந்த முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள்! இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ‘உங்கள் விளைநிலங்களில் நீங்கள் விரும்பியவாறு செல்லலாம்’ என்ற சின்ன வாசகம் இதற்கு விடையளிக்கிறது.அதைச் செய்யலாம். இதைச் செய்யலாம். அதைச் செய்யக் கூடாது இதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் பட்டியல் போட்டு, கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமாறு இவ்வாசகம் இருக்க வில்லை. மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வேண்டாம். மலப்பாதையில் சேரக்கூடாது என்பதை அறிகிறோம்.இவ்விரண்டைத் தவிர வேறு எதற்கும் தாம்பத்திய வாழ்வில் தடை இல்லை. எதைப் பற்றி மனிதர்கள் விலாவாரியாகக் கேள்வி எழுப்ப கூசுவார்களோ, அல்லது காதால் கேட்கக் கூச்சப்படுவார்களோ அந்த விஷயத்தை விலாவாரியாகச் சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்கிறது குர்ஆன். அது கூடாது இது கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் அந்தத் தடைகளைக் கவனத்தில் கொள்ள முடியாத நேரம் அது. எந்தத் தடையும் கட்டுப்பாடும் அர்த்தமற்றதாகத் தான் அமையும். இதனால் பாவம் செய்து விட்டோமோ என்ற உறுத்தல் தான் மிஞ்சும்.படைத்தவனுக்கு இதெல்லாம் தெரியும் என்பதால் தாம்பத்தியத்தில் அனைத்தையுமே – அனைத்தையும் தான் – அனுமதிக்கிறான்.அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகில் மனிதன் சந்திக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் கூட இவ்வசனம் தக்க தீர்வைக் கூறுகிறது.குழந்தையில்லாத பெண்கள் கணவன் அல்லாத மற்றவனின் உயிரணுவைக் கருவறையில் செலுத்தும் முறை பரவிவருகிறது. உங்கள் மனைவியர் உங்களது விளைநிலம் தான். நீங்கள் தான் பயிரிட வேண்டும். வேறு எவரும் அதில் பயிரிட முடியாது என்று தெளிவாகவே குர்ஆன் கூறிவிடுகிறது.விவாகரத்து செய்து விட்டு வேறு கணவனை மணந்து அவனது விளைநிலமாக மாறி அவனது கருவைச் சுமக்கலாமே தவிர ஒருவனது விளைநிலமாக இருந்து கொண்டு மற்றவனின் கருவைச் சுமக்க முடியாது என்பதற்கு இவ்வசனம் தெளிவான ஆதாரமாக உள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட எண்ணுவோருக்கு இதில் எச்சரிக்கை உள்ளது. உங்கள் விளைநிலங்களில் – அதாவது மனைவியரிடத்தில் – மட்டும் தான் பயிரிடலாமே தவிர மாற்றாரின் விளைநிலத்திலோ அல்லது உங்களுக்கு உரிமையில்லாத நிலத்திலோ பயிரிட முடியாது என்பதும் இதனுள் அடங்கிக் கிடக்கிறது.திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பவர்கள் இவ்வசனத்தையும் இதற்கு முந்தைய வசனத்தையும் சிந்தித்தார்களானால் தாம்பத்திய வாழ்வு குறித்து எவரிடமும் எந்த விளக்கமும் கேட்கத் தேவையில்லை. இவ்வசனங்கள் மட்டுமே எல்லா சந்தேகங்களையும் நீக்குவதை உணர்வார்கள்
Cuddalore MuslimFriends

இனிய இல்லறம் (18+ only) Part-1

‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்!அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19)பெண்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளன? என்பதை இவ்வசனம் அழுத்தமாகச் சொல்வதைக் கடந்த தொடர்களில் அறிந்தோம்.இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் – மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். ‘நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்’ என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)நாம் வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே மனிதனோ ஏனைய உயிரினங்களோ வந்தால் பெரும்பாலும் அதில் நமது வாகனம் மோதிவிடும். அந்த உயிரினத்துக்கோ நமக்கோ ஆபத்து ஏற்பட்டு விடும். ஆனால் எருமை மாடுகள் குறுக்கே வந்தால் விபத்துகள் நடப்பதில்லை. அது நிதானமாகத் தான் வரும். நாம் வேகமாக வந்தால் அது மிரண்டு போய் நம் வண்டியில் வந்து மோதாது என்று அறிந்து வைத்திருக்கிறோம். எனவே எருமையின் அந்த நிதானத்தைப் புரிந்து கொண்டு வேகமாகச் சென்று விடுகிறோம்.பெண்களை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதற்காக இதைக் கூறவில்லை.எருமையின் சுபாவம் இதுதான் என்று ஏற்றுக் கொள்ளும் போது அதற்கேற்ப நடந்து கொள்கிறோம் அல்லவா! அந்தப் பக்குவம் ஆண்களுக்கு வேண்டும்.நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது – அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.இதுபோல் தான் பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை. அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான். மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!

Note: இது என் சினீயார்(Senior) எழுதியது! இதை எழுத எனக்கு இன்னும் தகுதிவர வில்லை உங்கள் கருத்துகள் அவரிடம் பரிமாற்றம் செய்யபடும்!!!

ஞாயிறு, ஜனவரி 29, 2012

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்

உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?


மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன?

1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.

2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்

3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்

5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்

மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.என்னென்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும்?

1.மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

2.மாரடைப்பு ஏற்படும் ஆரம்பகால நிமிடங்களும்,நேரங்களும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

3.இதயத்துடிப்புகள் கண்காணிக்கப்பட்டு இயல்புக்கு மாறான துடிப்புகளுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி நீக்கும் மருந்துகளை நோயளிக்குக் கொடுத்து ஓய்வெடுக்க செய்ய வேண்டும்.

4.இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்பட்சத்தில்,அதனைக்குறைக்கத் தகுந்த மருந்துகள் அளிக்கப்படுதல் வேண்டும்.

5.நோயாளியின் வயது,மாரடைப்பின் தாக்கம்,இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும்.
பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களைக்கொண்டு இரத்தக்குழாய்களை விரிவடையச்செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.


" எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (5:32 Al Quran)

மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி பற்றிய வீடியோ : http://www.youtube.com/watch?v=pW72Gik0Jr8


Reference By : http://moonramkonam.com

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது ...எப்படி

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது ...எப்படி


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

முஸ்லிம் பெண்களின் மெளனப் புரட்சி

இஸ்லாமியப் பெண்கள் அறக்கட்டளை(ITW) மாநாட்டுத் துளிகள்

கடையநல்லூரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் அறக்கட்டளை(ITW) பெண்களுக்கான வாராந்திர வகுப்புகள், நூலகம், நூல் விற்பனை நிலையம், கம்ப்யூட்டர் சேவைக்கல்வி, தையல் பயிற்சிப் பள்ளி, சிறுசேமிப்புக் கடனுதவி, தாவா நெட், ஹைர உம்மத் காலாண்டிதழ், எனக் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல தளங்களில் செயல்பட்டு வருகிறது.

சமீப காலமாகப் பெருகி வரும் கள்ளக் காதல், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக இந்த அறக்கட்டளை ‘ஆதலினால் காதல் செய்யாதீர்’ என்ற தலைப்பில் ஹைர உம்மத் சிறப்பிதழை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் மிகப்பெரும் விழிப்புணர்வு அலைகளை ஏற்படுத்திய இவ்விதழ் தற்போது IFT யின் வெளியீடாக புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

இப்பணியின் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி கடையநல்லூர் பேட்டை NMMAS ( நமாஸ்) பள்ளியில் ‘நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற குர்ஆனின் 81:26ஆம் வசனத்தை மையமாக வைத்து, ஒருநாள் பெண்கள் மாநாட்டை நடத்தியது.

சகோதரி K.A.ஃபாத்திமாவின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் சகோதரி V.I.ஆபிதா பர்வீன் தொடக்க உரையாற்றினார். "பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கான சான்றுதான் இந்த மாநாடு. இது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இந்தத் தீமை முற்றிலும் ஒழியும்வரை நாங்கள் ஓயமாட்டோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு மாதங்களில் ‘ஒழுக்கத்தை நோக்கி..’ எனும் தலைப்பில் கேம்பைன் நடத்த உள்ளோம்" என்று கூறினார்.

‘சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் உரையாற்றிய சகோதரி ஃபாத்திமா ஜலால், பெண்களின் பங்களிப்பைப் பட்டியலிட்டதுடன் பெண்களால்தான் சமூக மாற்றங்கள் நிகழும் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.

மாநாட்டின் மையக்கருத்தான ‘நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?’ என்ற தலைப்பில் மெளலவி நூஹ் மஹ்ழரி உணர்வுப் பூர்வமான உரையை நிகழ்த்தினார். 'சத்திய சஹாபாப் பெண்மணிகளின் பயணம் எங்கே சென்றது? நாம் இன்று எங்கே செல்கிறோம்? இனி நாம் எங்கே செல்ல வேண்டும்?' என்று வரலாற்று உதாரணங்களுடன் தமக்கே உரிய தனிப்பாணியில் எடுத்தியம்பினார். இந்த உரையைக்கேட்டுப் பலர் கண்கலங்கினர்.

'கலாச்சாரச் சீரழிவுகளுக்கிடையே கண்ணியமாக வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் தமது உரையில் கலாச்சாரச் சீரழிவுகளையும் அதனை எதிர்த்துக் கொண்டு எவ்வாறு கண்ணியமாய் வாழவேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்தும் விதத்தில் பட்டியலிட்டார்.

சகோதரி K.A.மெஹரின் ஹதீஸ் விளக்கத்துடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது. மதிய அமர்வில் ‘தீமைகள் புயலாய் வீசும்போது..’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 'தீமைகளுக்கெதிரான ஆண்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் ITW தலைவி, சகோதரி நஜ்மா கருத்துரை வழங்கினார். பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சகோதரி உம்மு ரோஜானும், 'சமுதாய இயக்கங்களின் பங்களிப்பு' குறித்து சகோதரி ஆயிஷா பானுவும் கருத்துரை வழங்கினர். டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் அவர்கள் கருத்தரங்கை வழி நடத்தி நிறைவுரையாற்றினார். காலை உரையின் இரண்டாம் பகுதியாக இவ்வுரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவுப் பேருரையாற்றிய மெளலவி ஹனீஃபா மன்பஈ உணர்வுப்பூர்வமான ஆழமான உரையை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை சகோதரி நிஸ்மியா தொகுத்து வழங்கினார்.

மாநாட்டுத் துளிகள்

சற்றேறக் குறைய இரண்டாயிரம் பெண்கள் ஒன்று திரண்டனர்.

35 பெண் தொண்டர்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தனர்.

10மணி நிகழ்ச்சிக்கு 9:30 மணிக்கே அரங்கு நிரம்பிய காட்சி பெண்களின் விழிப்புணர்வைப் பறைசாற்றியது.

காலையிலும் மாலையிலும் தேனீரும், மதியம் சிறப்பான உணவும் வழங்கப்பட்டன.

டோக்கன் முறையில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொண்டனர்.

மாநாட்டை அனைவரும் காணும் வகையில் வெளிஅரங்குகளிலும் கீழ்த்தளத்திலும் 6 LCD திரைகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

நாகர்கோவில், காயல்பட்டினம், உத்தமபாளையம், திருநெல்வேலி,தென்காசி, வீரசிகாமணி, புளியங்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.

வெளியூரிலிருந்து வந்த ஆண்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் சிறப்புத் திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

புத்தகக் காட்சி, சமரசம், இளம்பிறை, ஹைர உம்மத், சந்தா, விற்பனைப் பிரிவும் இடம் பெற்றது.

நிகழ்ச்சி முடியும் வரை இடையிலேயே யாரும் செல்லாமல் பெண்கள் அமர்ந்து உரையைக் கேட்டது சிறப்பான முன்னுதாரணம்.


தகவல் : சகோ. Mohamed Ameen V.S.


Read more about முஸ்லிம் பெண்களின் மெளனப் புரட்சி | பொதுவானவை Courtesy: www.satyamargam.com

கோலாகலமாக கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த பத்து வருடங்களுக்குப் பின் இந்த வருடமே தீவிரவாதிகளின் மிரட்டல் இல்லாமல் அச்சுருத்தலின்றி நாடு முழுவதும் அமைதியாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டதாக பத்திரிகை செய்திகள் கூறியது நாமும் அதைப் படித்து மிகுந்த சந்தோஷம் அடைந்தோம்.

இதற்கு முந்தைய வருடங்களில் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பே இன்ன ஜமாத் பெயரில் குடியரசு தினத்தன்று இத்தனை இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் மெயில் வந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் இதேப் பத்திரிகைகளின் வாயிலாக வெளி வந்து நாடே பரபரப்பாக காட்சி அளிக்கும்.

மேற்படி அதிர்ச்சி தகவல்கள் வெளியானதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பிரபலங்கள் கொடியேற்றச் செல்லும் முக்கிய இடங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை முடக்கி அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்.

தேவை இல்லாமல் இத்தனை கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறதே என்ற ஆதங்கம் பொதுமக்களுக்கு ஏற்பட்டு அதனால் அந்த தீவிரவாதிகளை ஒட்டு மொத்த மக்களும் வெறுக்கும் நிலை ஏற்படும்.

இறுதியில் ஒன்றும் நடந்திருக்காது ஒன்றும் நடக்காமல் போனதற்கு அரசு ஏற்பாடு செய்த இத்தனைப் பெரிய பாதுகாப்பே முக்கியக் காரணம் என்று அரசு அறிவிக்கும். தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது என்று பத்திரிகைகள் அறிவிக்கும். ஆனால் இந்த வருடம் மட்டும் அவ்வாறான அச்சுருத்தல்கள், அதைத் தொடர்ந்த அறிவிப்புகள் எதுவும் இல்லை.

நமது சந்தேகம் ?

இந்திய அரசுக்கு மிகப்பெரும் அச்சுருத்தலாக திகழ்ந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் இந்த வருடம் எங்கேப்; போனார்கள் ?


தீவிரவாதிகள் அரசுக்கு மிரட்டல் விடுவதற்கு இது தான் சரியான தருணம் இந்த தருணத்தை தீவிரவாதிகள் எப்படி நழுவ விட்டார்கள் ?இவற்றிற்கான தெளிவு !

வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்படும் குடியரசு தினத்தில் அரசுக்கு அச்சுருத்தலாக திகழ்ந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் பா.ஜ.க.வுக்காக ஓட்டு சேகரிக்க வடமாநிலங்களுக்கு சென்றிருக்கின்றனர் !

வட மாநிலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நேரு குடும்பமும், காங்கிரஸின் முக்கிய பிரபலங்களும் களமிறங்கி இருப்பதால் மேல்படி பா.ஜ.க.வின் உட்பிரிவாகிய RSS மற்றும் அதனுடைய தோழமை அமைப்புகளாகிய தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் போட்டிக்கு அங்கே சென்று கூடாரம் அடித்து விட்டனர்.

இந்த நேரத்தில் இது போன்ற ஈமெயில்களை அனுப்பி தேர்தலுக்கு முன் இது சங்பரிவாரத்தின் சதிவேலை தான் என்று கண்டுபிடித்து அறிவிக்கப்பட்டு விட்டால் பைசாவுக்காக பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்கும் ஒரு சில முஸ்லீம்களின் ஓட்டுகளும் கிடைக்காமல் போவதுடன் நடுநிலையுடன் சிந்திக்கக் கூடிய ஹிந்துக்களின் வெறுப்புக்கும் இதன் மூலம் ஆளாக நேரிட்டால் ஓட்டுகள் சிதறலாம் என்றுக் கருதியவர்கள் இந்த குடியரசு தினத்தில் முஸ்லீம் ஜமாத் பெயரில் விடும் குண்டு வெடிப்பு மிரட்டலை கை கழுவி விட்டனர்.

இல்லாத ஜமாத் பெயரில் மொட்டை மெயில் க்ரியேட் செய்து அதன் மூலம் இன்ன இடத்தில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று முன் கூட்டியே தகவல் அனுப்புவதும் தாக்குதல் நடத்தி முடித்ததும் அவற்றிற்கு நாங்களே பொறுப்பு ஏற்கிறோம் என்று அதே மெயில் ஐடியின் மூலம் மீண்டும் பதில் அனுப்புவதும் சங்பரிவார தீவிரவாதிகளின் வேலை என்பதை கடந்த மாலேகான் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடங்கி சமீபத்தில் பெங்களுரில் ஏற்றிய பாகிஸ்தான் கொடி வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்திய தேச விடுதலைக்காக உயிர் நீத்த முஸ்லீம்களின் வாரிசுகளை தீவிரவாதிகளாக தொடர்ந்து சித்தரித்துக்காட்டி அவர்களை கடைசிவரை அரசிடமிருந்து உரிமைகளைப் பெற விடாமல் தடுப்பதற்காக மேல்படி சங்பரிவார தேச துரோகிகளின் நாசகாரச் செயல் தான் என்பதற்கு மேற்காணும் நிகழ்வுகள் தௌளத் தெளிவான ஆதாரங்களாகும்.

ஒரு வாடகை வீட்டில் கூட குடி அமர முடியாமல், ஒரு வேலை உணவையும், உடுத்துவதற்கு ஒரு ஆடையையும் பெற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை கழிக்கும் நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் முஸ்லீம்கள் வாடி வதங்கிக் கொண்டிருப்பதாக அவர்களின் துயர வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது மத்திய அரசு நியமித்த ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கை. http://www.tntj.net/?p=12863

ஒட்டிய வயிறுக்கு ஒரு வேளை உணவை தேடிக்கொள்ள முடியாமல் மானத்தை மறைப்பதற்கு ஒரு ஆடையை அடைந்து கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் அல்லல் படும் முஸ்லீம்கள் குண்டு வைக்கப் பெரும் தொகையை எங்கிருந்துப் பெறுவார்கள் ?

ஒன்றிரெண்டுப் பேர் அவ்வாறு செய்தும் கூட இருக்கலாம் அவ்வாறான வகையைச் சேர்ந்தவர்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கவே செய்கின்றனர் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீவிரவாத முத்திரையைக் குத்தலாமா ?

தொடர்ந்து நடக்கும் அரசின் முக்கிய நிகழ்ச்சிகளின் போதெல்லாம் இல்லாத ஜமாத் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் மெயில்களை அனுப்பி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாடும் முஸ்லீம் சமுதாயத்தை அரசின் உரிமைகளையும், சலுகைகளையும் பெற விடாமல் தடுப்பது நியாயமா ? அரசும், பத்திரிகை துறையும், பொதுவான மக்களும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.


தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இருக்கும் மூன்றரை சதவீத இடஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தக் கோரியும், மத்தியில் பத்து சதவிகிதம் வலியுறுத்தியும், புதுச்சேரியில் இடஒதுக்கீட்டை முறையாக அமல் படுத்தாமல் இழுத்தடிக்கும் போக்கையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 14ல் நடத்தவிருக்கும் போராட்த்திற்கு தயாராகி விட்டீர்களா ? தயாராகுங்கள் பிறரையும் தயார் படுத்துங்கள். இந்திய தேச விடுதலைக்காக நம்முடைய சமுதாயத்தின் முன்னோர்கள் சிந்திய இரத்தத்தை மறந்து விடாதீர்கள்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சனி, ஜனவரி 28, 2012

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?பெண்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பா?

பெண்கள் தலைமையேற்றால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்றும், பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவும் கட்டுக் கதையாகும்.

பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எல்லா சந்தர்ப்பத்திலும் ஆண்கள் தான் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். பொது இடங்களில் பெண்ணுக்கு இடையூறு செய்தால் இவளுக்கு இது வேண்டும்' என்பது தான் பெண்களின் விமர்சனமாக உள்ளது. ஆண்கள் தான் தட்டிக் கேட்கின்றனர்.

பேருந்தில் பயணம் செய்யும் போது உட்கார இடம் இல்லாத கிழவியாக இருந்தாலும் இன்னொரு பெண் இடம் கொடுப்பது அரிதாகும். ஆண்கள் பெரும்பாலும் தமது இருக்கையைக் கொடுத்து விடுவார்கள்.

அலங்காரம் செய்து கொண்டவளைக் கேவலமாக விமர்சிப்பதும், பெண்களின் நடத்தை பற்றி அவதூறு பேசுவதும் பெண்கள் தான்.

தன்னைப் போன்ற ஒரு பெண்ணிடம் வரதட்சணை கேட்பதிலும் பெண்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

முஸ்லிம் ஜமாஅத்துகளில் குடும்பப் பிரச்சினை பற்றிய வழக்கின் போது அனைவரும் பெண்கள் சார்பாக பேசி வருவதைக் காண்கிறோம். இதன் காரணமாகத் தான் பெண்கள் அதிகப் பாதுகாப்புடன் உள்ளனர்.எனவே நாட்டிற்கு, ஜமாஅத்திற்கு பெண்கள் தலைமை தாங்கினால் பெண்களுக்கு நன்மை என்பதெல்லாம் நூறு சதவிகிதம் கட்டுக் கதையாகும்.

பெண்கள் கல்வி கற்கக் கூடாது.
பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாகவும் அவதூறு கூறுகின்றனர்.
கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.

ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான் இஸ்லாம் எதிர்க்கிறது. புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர்.

கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச் செய்திகளாகி விட்டன.

இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது. பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு ஏறாது என்று கூற முடியாது.

எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவது தான் அவர்களுக்கும் பாதுகாப்பானது என இஸ்லாம் கூறுகிறது.

பேருந்துகளில் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பேருந்துகளில் விடப் படுகின்றன.

ஒரே பேருந்து விடப்படும் இடங்களில் இருவருக்கும் தனித்தனி வழியும் இடமும் ஒதுக்கப்படுகிறது.

சிறிது நேரப் பயணத்தின் போதே இவ்வளவு பாதுகாப்புநடவடிக்கை என்றால் காலமெல்லாம் ஆண்களுடனே பெண்களை விட்டால் என்னவாகும்?

ஏமாற்றப்படும் அபலைகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்கூடாகக் கண்ட பின் இதை யாரும் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாத பெண்களும் கூட பெண்களுக்கே உள்ள கல்லூரிகளில் படிப்பதே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.

ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன? இதனால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தனி நூலாகவே எழுதலாம்.

ஏமாற்றப்படும் அபலைகள் பற்றிய செய்தி செய்தித் தாள்களில் அன்றாடம் இடம் பிடித்து வருவதே இதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அறியாமை காரணமாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல்: புகாரி 900, 873, 5238.

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 865, 899.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி 578, 372, 867, 87

.'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.நூல்: புகாரி 707, 862, 708, 709, 710, 868.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று 'பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்' என்று தெரிவித்தார்கள். நூல்: புகாரி 866, 569, 862, 864.

தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பது வழக்கம்.
நூல்: புகாரி 875, 837, 866

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன அரபு நாடுகளிலும், மலேசியாவிலும் பெண்கள் இன்றளவும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.

மார்க்கம் அறியாத சில பேர் சில பகுதிகளில் பெண்களைத் தடுத்தாலும் அது சிறிது சிறிதாக மாறி வருகிறது.

சந்தேகம் என்னும் கொடிய நோய்

உலகிலே சந்தேகத்திற்கு மருந்து இல்லை!
அப்படி கண்டுப்பிடிக்க முயற்சி செய்பவரும் சந்தேகத்திலே சந்தேகப்பட்டு நாட்டில் சமாதியான கதைகள் பல!

சந்தேகம் என்பது மிகப்பெரிய கொடிய நோய். இந்த சந்தேகநோய் எவ்வித கிருமிகள் இல்லமாலே ஒருமனிதனுக்கு பிரவிலோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய மிகப்பெரிய விசக்கிருமி. சந்தேகப்படும் மனிதனும், சந்தேகத்திற்குரிய நபரும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் இவ்வுலகில் என்பதை நாம் அறிவோம். இந்த சந்தேகம் ஒவ்வொருமனிதனையும் மரணக் குழிவரை அழைத்துச் சென்ற உண்மைச்சம்பவங்களும் நிறைய உண்டு. நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்துகொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமான விசயம். ஆனால் நம்மில் பலர் சம்பந்தமில்லாமலே சந்தேகப்பட்டு வாழ்வை தொலைத்த அன்பர்கள் அதிகமதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு.

சந்தேகப்பட வேண்டியதுதான். அது எந்த மாதிரியான விசயம் என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டு, இதனால் எவ்வித பாதிப்புகள் வராதா? என்பதை அறிந்தபிறகு சந்தேக நோக்கத்துடன் ஆராய்வது நலம். சும்மா உப்பு சப்பில்லாதா விசயத்திற்கு சந்தேகப்பட்டு, நாமும் மனமுடைந்து மற்றவர்களையும் ஆயுதம் இல்லாமல் துன்புறுத்தி வேதனைப்படுவதில் புண்ணியமில்லை. இதனால் யார்க்கும் பயனில்லை சந்தேகப்படுவரும், சந்தேகத்திற்குரிய நபரும் மொத்தத்தில் இருவருக்கும் பாதிப்பே!

ஒருவர் : தன் மனைவியையோ அல்லது பிள்ளைகளையோ எந்த நேரம்பார்த்தாலும் நடக்காத தவறை என்னி சந்தேகப்படுவது! இதனால் பலரின் மனைவிமார்கள் எதிர்காலத்தை நினைத்து, அனுசரித்து வாழும் தியாக பத்தினிகளும் உண்டு. சிலரின் மனைவி இதுபோன்ற அவலங்களை தாங்கக்கூடிய தைரியமில்லாமல் வேண்டாம் என்று விலக்கு அளித்துவிட்டு தந்தையின் வீட்டில் தஞ்சம்புகுந்தவர்களும் ஏராளம். சிலரின் பத்னிகள் தேவையில்லாமல் மரணத்தை சுவைத்தவர்களும் உண்டு.

சிலரின் பிள்ளைகள் பெற்றவர்களை கண்டுகொள்வதில்லை. சிலரின் பிள்ளைகள் ரோஷம் தானமுடியாமல் முட்டாள்தனமாக தற்கொலையும் செய்துக்கொள்கிறார்கள். சிலர் நண்பர்களின் / தாய்மார்களின், உறவினர்களின் நல்ல ஆலோசனையின்பேரில் ஆரோக்கியமாகவும் வாழ்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

அதிகமாக சந்தேகப்படுவது ஆண்களே! இவர்கள் அனைத்து விசயத்திலும், அனைவரிடமும் சந்தேகப்படுவார்கள். ஆனால் பெண்களின் சந்தேகம் இருக்கிறதே! அட டா...! என்னத்தே சொல்ல...! இவர்களின் சந்தேகம் ஒருமனிதனை உடனே அழித்து இவ்வுலகத்தை விட்டே விரட்டிவிடும். பெரும்பாலும் பெண்களின் சந்தேகம் கணவன்மீது மட்டுமே! (வேற ஒரு சக்காலத்தியை கூடி வந்துவிடுவாரோ என்கிற சந்தேகம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது)

ஒரு மூன்றுபேர் ஓர் இடத்தில் இருக்கிறோம்! அப்போது ஒருவிசயம் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதில் மூன்றுபேரில் ஒருவர் ஏதாவது வேலையாக சென்றுவிட்டு வந்துவிடுவார் அப்போது இரண்டுபேர்கள் பேசியதை நிறுத்திவிட்டு மூன்றாமவர் வந்தவுடன் வேற செய்தியை பேசுவார்கள். இந்த இரண்டுபேரும் பேசியது புண்ணியமில்லாத செய்தாக இருக்கும் அல்லது இவருக்கு தெரிந்த விசயமாக இருக்கும் ஆனால் மூன்றாமவருக்கு மனதில் ஒரு சந்தேகம் வர ஆரம்பித்துவிடும். இப்படியே ஒவ்வொரு விசயத்திலும் சந்தேகப்பட்டு அனைத்தையும் தொலைத்துவிடுவார்கள்.

அதேமாதிரி சும்மா ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டு போகிற, வருகிறவர்களை, தவாறனவர்களை விட்டுவிட்டு நல்லவர்கள் சந்தேகப்படுவது. இதுமாதிரியான பல விசயங்களின் நாம் பார்க்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால் நாட்டில் உள்ள காவல்துறையே அப்பவிமீது தான் சந்தேகப்படுகிறது. இந்த அநியாய சந்தேகத்தினால் பலர் தற்கொலையும் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் மற்றும் சிறையிலும் அநியாயமாக வாடிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் உண்மையை விட்டு பொய்யை உண்மையாக்க முயற்சிப்பதே. ஏனென்றால் அந்த பிரச்சனையை முடிவுகட்டவே இதுபோன்ற அவலநிலை.

மனிதனுக்கு சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்படமாட்டார்கள். இவர்களின் தேவையான சந்தேகத்தால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சதேகப்படுபவர்கள் தினம் தினம் நினைத்து நினைத்து தானகவே தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.

மரணம் என்பது இறைவனின் நாட்டமே. யார் யாருக்கு வாழ்க்கை எப்படி என்பதை படைத்த இறைவன் நாம் பிறக்கும்போது தீர்மானித்து விடுகிறான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதுவே ஒவ்வொருமனிதனின் வாழ்க்கை விதி.

சந்தேகப்படுவது ஓர் நல்ல விசயமில்லை. முதலில் நம்மை நம்பவேண்டும். நம்மீது நம்பிக்கை இல்லையோ நாம் எதன்மீதும் நம்பிக்கை கொள்ளமாட்டோம். இதனால் இல்லறம், குடும்பம், உறவு, பிழைப்பு அனைத்தும் பறிபோய் நிம்மதியற்று நாம் காணப்படுவோம். கடைசியில் தாமாகவே நொந்து நொந்து வீணாகி எதற்கும் புண்ணியமில்லாமல் மடியவேண்டிய நிலை வரும்.

ஆகவே! அல்லாஹ்வின் உதவியால் முதலின் உங்களை நம்புங்கள் அதன்பிறகு உங்களின் எதிரே இருப்பதின்மீது நம்பிக்கை வரும். அப்போதுதான் உங்களின் வாழ்வும் வளமாக இருக்கும். நாம் வாழ்வதற்காகவே இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரவேண்டும். நம்பிக்கையோடு இனிதே தொடங்குங்கள் புதிய வாழ்க்கை...!

அனாவசியமாக அவ நம்பிக்கை வைத்து உங்களின் வாழ்க்கையில் அல்லல்படவேண்டாம்...! நம்பிக்கைக் கொண்டார்கள் நலமுடன் வாழ்வார்கள் என்று வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கிறான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்...! இன்ஷா அல்லாஹ்..!

சந்தேகமில்லாமல் சந்தோசத்துடன் மனைவி, பிள்ளைகள், உறவுகளின் குதுகாளியுங்கள்...!

சந்தேகம் வேண்டாம்...! அது ஒரு விசக்கிருமி!
நம்பிக்கை உங்களின் புத்துணர்வு, தைரியத்தின் ஊட்டச்சத்து என்பதை என்னி அழகாக வாழுங்கள்...! இன்ஷா அல்லாஹ்...!

Iniyavan Thanjai

வெள்ளி, ஜனவரி 27, 2012

பிரார்த்தனைகள் (துவா )ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்

பிரார்த்தனைகள் ஒப்புக்கொள்ளப்படும் பல நேரங்கள் உள்ளன. அவைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

1) அதானுக்கும், இகாமத்துக்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை:

‘பாங்கிகிற்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை நிராகரிக்கப்பட மாட்டாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: 212).

2) நடு நிசியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் (மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது) கேட்கப்படும் பிரார்த்தனை:

ஒவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி எஞ்சி இருக்கும் போது அல்லாஹ் துன்யாவின் வானத்திற்கு இறங்குகின்றான், என்னிடத்தில் யாரும் பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்றுக் கொள்கின்றேன், என்னித்தில் யாரும் கேட்கக்கூடியவர்கள் இருக்கின்றார்களா? அதை நான் அவருக்குக் கொடுத்து விடுகின்றேன், என்னிடத்தில் பாவ மன்னிப்புத் தேடுபவர்கள் இருக்கின்றார்களா? அவர்களது பாவங்களை நான் மன்னித்து விடுகின்றேன். பஃஜ்ரு உதயமாகும் வரை இது நகழ்ந்து கொண்டிருக்கும்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 5411, முஸ்லிம்: 857).

3) ஸுஜுதின் போது:

‘ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக சமீபமாக இருக்கும் சந்தர்ப்பம் அவன் ஸுஜுதில் இருக்கும் போதாகும், எனவே அந்த நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனையில் ஆர்வம் காட்டுங்கள் உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக் கொள்வான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 46, 4925, முஸ்லிம்: 974).

4) ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், ஸலாம் கொடுப்பதற்கு முன்னர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதை கற்றுத் தந்த போது பின் வருமாறு கூறினார்கள்: அவர் அதன் பின் தனக்கு விரும்பிய பிரார்த்தனைகளை கேட்கட்டும்.’ (புஹாரி: 538, முஸ்லிம்: 204).

5) ஜும்ஆ தினத்தில் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை மஃரிப் தொழுகையை எதிர்ப்பார்த்தராக வுழுவுடன் அமர்ந்தவர்:

தொழுகையை எதிர்ப்பார்த்து அமரும் ஒருவர் தொழுகையில் உள்ளவரைப் போன்றாகும். ‘ஜும்ஆ தினத்தில் ஒரு நேரம் உள்ளது, ஒருவர் தொழுகைக்கு நின்றவராக (அந்நேரத்தில்) அல்லாஹ்விடம் கேட்பாரானால் அவருக்கு அல்லாஹ் (அவர் கேட்டதை) வழங்காமல் இல்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 538, முஸ்லிம்: 204).

தொழுகைக்கு நின்றவராக என்பதற்கு அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது: தொழுகையை எதிர்ப்பார்த்தவராக, ஏனெனில் தொழுகையை எதிர்ப்பார்த்திருப்பவரின் சட்டம் தொழக்கூடியவரின் சட்டமாகும். ஏனெனில் அஸருடைய நேரம் என்பது (உபரியான) தொழுகைக்குரிய நேரமல்ல’ என்று விளக்குகின்றனர்.

எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் மறைவதற்கு முன் வரை ஒருவர் அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். மஸ்ஜிதிலே இருப்பாரானால் மஸ்ஜிதிலும், பெண்கள், நோயாளிகள் வீடுகளிலும் பிரார்த்தனைகளில் இடுபட வேண்டும். எனவே ஒருவர் வுழுவுடன் மஃரிப் தொழுகையை எதிர்ப்பார்த்தவராக பிரார்த்தனைகளில் ஈடுபட முடியும்.

பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளபடுவதற்கான காரணிகள்:

1) அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் பிரார்த்தனையில் ஈடுபடல்.

2) உள்ளச்சத்துடனும், பணிவுடனும் பிரார்த்தித்தல்.

3) அல்லாஹ்வின் பால் தேவையுடவனாக பிரார்த்தித்தல்.

4) அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழுதல்.

5) அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், உயரிய பண்புகளை நினைவுகூர்ந்து அவனை பிரார்த்தித்தல்.

6) அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்து, அவனது அருளின் மீது நம்பிக்பையிலக்காது தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபடல்.

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள் (அனைவரும் படித்து புரித்து நடக்க வேண்டிய ஒன்று)

‘…..அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்’. (அல்குர்ஆன் 2:102)

குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.

ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.

இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.

நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.

மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.

இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.

எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் ‘நீ ஒன்றுமே செய்யவில்லை’ எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து ‘நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்’ என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.

மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! ‘அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்

அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)

அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.

மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)

குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.

அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.

தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி

பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.

இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.

இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.

நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)

ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்

சாபம் இடுவதை பற்றி இஸ்லாம் ???

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது. இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம்.

இத்தகைய பண்புகள் உண்மையான முஃமின்களுக்கு உரிய பண்பு இல்லை. முஃமின்களைச் சபிப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

மேலும் நபி (ஸல்) அவர்கள், ‘அதிகம் சபிப்பது உண்மையானவர்களுக்கு அழகல்ல’ என்று கூறியிருக்கிறார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

சபித்தவனையே சூழும் சாபம்:-

‘ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.

ஒரு முஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்!

ஒரு முஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஜைத் (ரலி), ஆதாரம் : புகாரி.
Cuddalore MuslimFriends

வியாழன், ஜனவரி 26, 2012

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர்(நேற்று ஆணி அதிகம் இணையம் பக்கமே வர முடியல இதனால் இன்று எழுதுகிறேன்). அந்த வசதியின் படி கூகுள் பிளசில் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். எனக்கு தெரிந்து எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.


கூகுள் பிளசில் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.


அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை டைப் செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.

வலது புறத்தில் உள்ள T என்ற லிங்கை கிளிக் செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்டர் மார்க் சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த வசதி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம்..

முட்டையை அவிக்கும் அளவிற்கு மொபைல் போனில் கதிர் வீச்சு வீரியமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மொபைல் மூலம் முட்டைகளை அவித்துக் காட்டி இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆனால் அதே நேரத்தில் அவை எந்த அளவு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. மொபைல் போன்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எந்த அளவுக்கு வீரியமானவை என்பதை இரண்டு ரஷ்ய பத்திரிகையாளர்கள் சோதனை மூலம் செய்து காட்டியுள்ளனர். மொபைல் போன்களிலிருந்து வெளி வரும் கதிர்வீச்சு, முட்டைகளையே வேக வைக்க கூடியது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இதற்காக அவர்கள் ஒரு சிறிய மைக்ரோவேவ் கருவியை உருவாக்கி உள்ளனர். ஒரு மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனை அழைத்து அவற்றை பேசக்கூடிய நிலையில் வைத்தனர். அதே நேரத்தில் அவற்றுடன் ஒரு டேப் ரிகார்டரை இணைத்து இரு போன்களுக்கு இடையே உரையாடல் நடப்பதாக காண்பித்து இரு போன்களும் தொடர்ந்து பேசும் நிலையில் இருக்கச் செய்தனர். 15 நிமிடத்தில் போன்களுடன் இணைக்கப்பட்டிருந்த மைக்ரோவேவ் கருவியில் வைக்கப்பட்டிருந்த முட்டை சூடேற ஆரம்பித்தது. 40வது நிமிடத்தில் முட்டையின் வெப்பம் கடுமையாகியது. 65வது நிமிடத்தில் முட்டை முழுவதுமாக வெந்து காணப்பட்டது.

இந்த அளவுக்கு நீண்ட நேரம் எவரும் பேச வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வாறு பேசினால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதையே இந்த சோதனை விளக்குகிறது. காதின் அருகில் இருக்கும் மூளைப் பகுதியை இந்த கதிர் வீச்சு எந்த அளவு பாதிக்கும் என்பதையும் இதன் மூலம் உணரலாம். 2 நிமிடம் தொடர்ந்து மொபைல் போனில் பேசினாலே அதிலிருந்து வரும் கதிர்வீச்சு, மூளையைப் பாதுகாக்கும் பகுதியில் ஊடுருவி விடும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.


எனவே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிரியமானவர்களிடம் தொடர்ந்து பேசும் மொபைல் பிரியர்கள் சற்று யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முடிந்தவரை சாதாரண போன்களை பயன்படுத்த வேண்டும் மொபைல் போனைத் தவிர்க்க முடியாதவர்கள், இயர் போனைப் பயன்படுத்துவது சற்று பாதுகாப்பானதாக இருக்கும் என்பதே இவர்களது அறிவுரை.

புதன், ஜனவரி 25, 2012

இட்லி, தோசை கடை மாவு ஒரு ஸ்லோ பாய்ஸன் (Slow Poisson)

என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை. பரோட்டா மைதாவினால் செய்த பன்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர்
செய்யபட்ட ஒரு ஆர்டிக்கள். பரோட்டாவது நமது பாரம்பரய உண்வு அல்ல, மற்றும் அதை இளைஞ்ர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் 80 வயது வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷன்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும்
மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷன்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்".

இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதயே கடையில் வாங்கி
சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்னத்தான் பிரச்சினை என்கிறேர்களா, அதற்க்கும் தேவையான் மாவு பற்றி தான்
இந்த ஆய்வு கட்டுரை.

ஆம் ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரன்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை
மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ச்மீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.
முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான் இப்ப்பொழுது நம்ம வாண்டுகளிடம் " தம்பி ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா"
அப்ப்டின்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை போகும். இது பேச்சலர்ஸ் கூட இப்ப செய்கின்றனர்.
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸ்ன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள்
விழிப்புனர்ச்சியை பரப்புங்கள்.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈரபத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு
ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவு சில மட்ட்மான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவுக்கு முன் காலத்தில் புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றூம் ஆரோட் மாவு
போடுவதால் மாவு பூளிப்பு வாசைனை கன்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த
மாவை ரெண்டு நாள் வைத்து மூனாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசைனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும்

தயிர் உறைவது ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனை வராமல்
இருக்க காரணம் இந்த் புண்ணிர்க்கு, கேர்ம்போர்டில் Boring Powder போடும் ஆரோட் மாவுதான்.

3. முக்கியமாக இந்த கிரன்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி
நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கள் துகள்களால் தான் சமீபமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தல் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்டாலும் அடுத்த மூனு மாதம் தான் மேக்ஸிமம்.

4. உங்களுக்கு நன்கு தெரியும் சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேன்டும் மற்றூம் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு
சுத்ததையும் இவர்கள் பேனுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றூம் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி
அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. கிரையன்டரை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த தயக்க்ம் இரண்டு விஷயங்கள். 1. கிரையன்டரை சுத்தம் செய்யும் கஷ்டம் 2. கல்லை துக்கி போட வேண்டும் ஒவ்வொரு முறை, பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம் சிறு குடும்பம் அதனாலயே கடையில் மாவு வாங்குகிரது. ஆனால் இவர்கள் கிரையன்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரயன்டரின் கிருமி
அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால்
இவர்கள் ஒரு வாரத்திர்க்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போய்விடும்.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். எனெக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை
இல்லை.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்க்கை
ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்னம், வாய் நாற்ற்ம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரையன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள் அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்.

9. கிரையன்ட்ர் ஒட அந்த மத்திய குழவியை இனைக்கும் ஒரு செயின் அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் ஒன்று சத்தம்
வராமல் இருபதற்க்கும் மற்றூம் மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குககாக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க
வேண்டும் அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைத்து இப்ப இருக்கிற கரென்டு கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக
பாய்ஸ்னாகிறது.

இந்த மாவில் நிறைய இடங்களில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் கானப்படும் கோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி - 24 மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள்
கியாரன்டியில் ஈர்மான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். உலர்ந்த மாவு பரவாயில்லை. இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்ல்து
ஐந்து பேர் ஷேர் செய்யும் தாய்மார்களும் கண்டிப்பாக கவனம் தேவை.

இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல அதனால் சென்னை மாநகராட்சி ரெய்டு செய்து மவு அரைக்கும் இடங்களில் எல்லாம் கைப்டுத்திகிறது.

தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்
Cuddalore MuslimFriends
by erainesan

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?ஆட்சித் தலைமை

ஆட்சித் தலைமை
'பெண்கள் ஆட்சித் தலைமையை ஏற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களின் உரிமையைப் பறிப்பதும் அவர்களை அவமானப்படுத்துவதுமாகும்' என்பதும் மாற்றார்கள் செய்யும் முக்கியமான விமர்சனமாகும்.

'பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான். நூல்: புகாரி 4425, 7099

ஆட்சித் தலைமை தவிர வேறு தலைமைகளை அவர்கள் வகிக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை.

மக்கள் தேர்வு செய்யும் ஆட்சித் தலைமை எவ்வாறு உருவாகிறது என்பதை முதலில் நாம் சிந்திப்போம்.
கொல்லைப்புறமாக பதவிக்கு வருதல்
அடிமட்டத்திலிருந்து ஒருவன் பாடுபடுவான். போராட்டங்களில் பங்கெடுப்பான். சிறைச் சாலையில் அடைக்கப்படுவான். அடி உதைகளுக்கு ஆளாவான். இப்படிப் பல தியாகங்கள் செய்த பின்னர் தான் படிப்படியாக உயர்ந்து தனது ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னே வருகிறான். இதன் மூலம் ஆட்சித் தலைமையை ஏற்கிறான்.

ஆனால் பெண்கள் எவ்வாறு ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள்! கோஷம் போட்டு கொடி பிடித்து, பசைக் கலயம் சுமந்து, சுவரொட்டிகள் ஒட்டி போராட்டங்களில் பங்கு கொண்டு படிப்படியாகத் தான் தலைமைப் பதவியைப் பெறுகிறார்களாஎன்றால் நிச்சயமாக இல்லை.

கஷ்டப்பட்டு உழைத்துப் பதவியைப் பெற்றவனின் மனைவியாக அல்லது மகளாக இருப்பது தவிர இப்பதவிக்காக எந்தத் தியாகமும் செய்திருக்க மாட்டார்கள். தலைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவன் கட்சிக்காக கடுமையாக உழைத்து அப்பதவிக்குத் தகுதியானவனாக இருப்பான். ஆனால் தலைவனின் உறவுக்காரப் பெண் என்ற ஒரு காரணத்தை மட்டுமே முன்னிறுத்தி பெண்கள் தலைமைப் பதவியைப் பெறுகின்றனர்.

ஜவஹர்லால் நேருவுக்குப் பின் காங்கிரசில் எத்தனையோ தியாகிகளும், தலைவர்களும் இருந்தார்கள். நேருவின் மகள் என்ற தகுதியில் இந்திரா காந்தி பதவியைப் பெற்றார்.

இலங்கையில் பண்டார நாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின் அவரது கட்சியில் அடுத்த கட்டத் தலைவர்கள் பலர் இருந்தனர். ஆனால் ஒரு தியாகமும் செய்யாத அவர் மனைவி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா, அவரது மனைவி என்ற காரணத்தினால் பிரதமரானார்.

அது போலவே ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் மகள் என்ற காரணத்துக்காகவே சந்திரிகா இன்று அதிபராக வீற்றிருக்கிறார்.

ஜுல்பிகார் அலி புட்டோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் பேநஸீர் புட்டோ பாகிஸ்தானில் பிரதமராக முடிந்ததே தவிர அவரது கட்சியின் அடிமட்டத் தொண்டனின் அளவு கூட அவர் உழைத்ததில்லை. நுஸ்ரத் புட்டோ பதவியைப் பெற்றதும் பூட்டோவின் மனைவி என்பதால் தான்.

முஜிபுர்ரஹ்மானின் மனைவி என்ற தகுதியின் காரணமாக மட்டுமே ஷேக் ஹஸீனா பங்களாதேஷுக்கு பிரதமராக முடிந்தது. முஜிபுர்ரஹ்மானுடன் சேர்ந்து விடுதலைக்காக போராடி பல தியாகங்கள் செய்த பலர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஜியாவுர்ரஹ்மானின் மனைவி என்ற ஒரே தகுதியின் காரணமாகத் தான் கலிதா ஜியா இன்றைக்கு பங்களாதேஷின் பிரதமராக இருக்கிறார்.

இந்தோனேசியாவின் மிகப்பெரும் தலைவராக இருந்த சுகர்னோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக மேகவதி அந்த நாட்டுக்கு அதிபராக ஆகியிருக்கிறார்.

இங்கே கூட எம்ஜியாரின் மனைவி என்பதால் ஜானகியும், மனைவியைப் போன்றவராக மக்கள் கருதியதால் ஜெயலலிதாவும் பதவிக்கு வர முடிந்தது.

லல்லு பிரசாத் யாதவின் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக ரப்ரி தேவி பீகாரின் முதல்வராக முடிந்தது.

என்.டி.ராமராவின் மனைவி என்பதற்காக அவரது கட்சியின் தலைமைப் பொறுப்பை சிவபார்வதியால் பெற முடிந்தது.
ஹிபதுல்லாஹ்வின் மனைவி என்பதற்காகவே நஜ்மா ஹிபதுல்லாவுக்கு பதவி கிடைத்தது.

நாளை சோனியா காந்தியோ, பிரியங்காவோ பிரதமரானால் அதுவும் இப்படிக் கிடைத்த பதவியாகத் தான் இருக்கும்.

ஆண்கள் ஒரு பதவியைப் பெறுவதற்குச் செய்யும் தியாகங்கள் எதையும் செய்யாமல் தான் பெண்கள் ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள். அப்படித் தான் வர முடியும்.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம்! தனக்கு தலைமைப் பதவி ஒரு காலத்தில் கிடைக்கும் என்பதற்காக பலவித தியாகங்கள் செய்தவர்களின் தியாகங்கள் இதனால் அலட்சியப் படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு மக்கள் செய்யும் பெரியதுரோகமாகும்.

கருணாநிதி எப்படித் தலைவராக ஆனாரோ அப்படி ஜெயலலிதா தலைவியாக ஆகவில்லை! பெண்ணுக்குப் பதவி கிடைக்கிறது என்பதற்காக தியாகங்களைப் புறந்தள்ளி விட முடியாது.

இவ்வாறு இல்லாமல் பதவியைப் பெறுவது என்றால் பெண்கள் வேறு விதமான (?) விலையைக் கொடுக்காமல் பதவியைப் பெற முடியாது என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லை.

இது முதலாவது காரணமாகும்.
கேடயமாக்கப்படும் பெண்மை.
பெண்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தமது தவறுகளுக்குப் பெண்மையையே கேடயமாக்குவார்கள். ஆண்கள் அவ்வாறு ஆக்குவதில்லை.

பெண் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் தவறான நடவடிக்கைகள் தக்க காரணத்துடன் விமர்சிக்கப்பட்டாலும் உடனே 'நான் ஒரு பெண் என்பதால் இப்படி விமர்சிக்கிறார்கள்' என்று குண்டைத் தூக்கிப் போட்டு வாயை அடைப்பார்கள். இந்திராவிலிருந்து ஜெயலலிதா வரை இதைக் கையாண்டுள்ளனர்.

அவர்களது நடத்தை, ஒழுக்கம் போன்றவைகளை விமர்சிக்கும் போது இப்படிக் கூறினால் அதையாவது ஏற்றுக் கொள்ளலாம். ஊழலை விமர்சிக்கும் போது கூட இதைக் கேடயமாகப் பயன்படுத்தினால் இதற்காகவே அவர்கள் அப்பதவியில் இருக்கத் தகுதியற்றுப் போகிறார்கள்.

பெண்மை ஊழலைக் காக்கும் கேடயமல்ல என்று பொங்கி எழ வேண்டிய பெண் அமைப்புகளும் சேர்ந்து கொண்டு பெண் என்பதற்காக இந்தப் பாடுபடுத்தலாமா?' என்று பல சந்தர்ப்பங்களில் முழங்கியுள்ளனர்.

இதன் காரணமாகத் தான் பெண் ஆட்சியாளர்கள் செய்யும் சிறிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளை விமர்சனம் செய்ய மீடியாக்கள் தயங்குகின்றன. ஊழலும், அக்கிரமும் எல்லை மீறிப்போகும் போது தான் பெண் ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படுவார்கள்.

எவ்வித விமர்சனங்களும் தங்கள் மீது வராமல் பெண்மையைக் கேடயமாகப் பயன்படுத்துவது அப்பெண்ணின் சுயநலத்துக்குப் பயன்படலாம். மக்களுக்கோ, மற்ற பெண்களுக்கோ, நாட்டுக்கோ இது மாபெரும் தீமையாக முடியும்.
இது இரண்டாவது காரணம்.
வாரிசுகள் திணிப்பு.
பொதுவாக ஆண் தலைவர்கள் தமது வாரிசுகளைத் திடீரென்று தினிக்க மாட்டார்கள். படிப்படியாக நுழைத்து தங்கள் வாரிசுகளும் தகுதியானவர்கள் தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தினிப்பார்கள்.

பெண்களோ எந்த விதமான தர்மத்தையும், நியாயத்தையும் கடைப் பிடிக்காமல் தமது வாரிசுகளைத் தினிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோவும், நுஸ்ரத் புட்டோவும் இதற்குச் சரியான உதாரணங்களாக உள்ளனர்.
இது முன்றாவது காரணம்.
சர்வாதிகாரம்
வாய்ப்புக் கிடைக்காத வரை பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள் தான். ஆனால் ஆட்சித் தலைமை கிடைத்து விட்டால் அவர்கள் சர்வாதிகாரம் செய்வதையும் அதிக அளவில் காணலாம்.இந்திரா, சந்திரிகா, ஜெயலலிதா என்று ஏராளமான உதாரணங்கள் கண் முன்னே உள்ளன.

பத்து ஆண் ஆட்சியாளர்களில் ஒருவர் சர்வாதிகாரியாக இருப்பது அரிதானது.

பத்து பெண் ஆட்சியாளர்களில் ஒரு ஜனநாயகவாதி இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

இப்படி ஆண்களை மிஞ்சும் அளவுக்கு 'ஆண் தன'த்தை வெளிப்படுத்தினால் தான் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற மனோ நிலைக்கு ஆளாகி இப்படி நடந்து கொள்கின்றனர்.
இது நான்காவது காரணம்.
இரவு பகல் எந்நேரமும் முழுமையாக ஈடுபட வேண்டிய பணி தான் தலைமைப் பதவி என்பது. இத்தகைய கடினமான ஒரு பணியைப் பெண்கள் சுமக்காமல் இருந்தால் பெண் குலத்துக்கே கேடு ஏதும் ஏற்படாது.

அது போக மாதவிடாய்க் காலம், மாதவிடாய் அடியோடு நிற்கும் வயது ஆகியவை அவர்களைத் தாறுமாறாகச் சிந்திக்க வைக்கும் இந்த நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒரு நாட்டையே பாதித்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்ணுரிமைக்குச் சம்மந்தமில்லை.
பெண்ணிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதும் அல்ல. 100 கோடி மக்களைக் கொண்ட நாட்டில் 50 கோடி பெண்கள் உள்ளனர் என்றால் நாட்டின் அதிபர் பதவி ஒருவருக்குத் தான் கிடைக்கும்.

50 கோடிப் பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ, கணிசமான பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ இருந்தால் தான் அது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதாக இருக்க முடியும்.

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, மணவாழ்வை தேர்வு செய்யும் உரிமை போன்றவை அனைத்துப் பெண்களின் அல்லது கனிசமான பெண்களின் உரிமை பற்றியதாகும். ஆட்சித் தலைமை என்பது பெண்ணுரிமையில் சேராது.

திங்கள், ஜனவரி 23, 2012

‘நடந்தது என்ன’

கடந்த சில மாதங்களாக அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி களத் தொகுப்பு என்ற பெயரில் சில நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகின்றன. புலனாய்வு நிகழ்ச்சி களின் சாயலில், ‘நடந்தது என்ன’ என்பதை மக்களுக்குக் காட்டுகிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தவறான செயல்கள், நாகரிக சமு தாயத்தை மீண்டும் மூட நம்பிக்கைப் படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையா காது. மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் இருக்கும் மக்கள் இப்போதைக்கு கொஞ்சமேனும் பேய், பிசாசு என்பனவற்றையெல்லாம் மறந்து அதெல்லாம் மூடநம்பிக்கை என்ற நிலையை ஓரளவிற்கு அடைந்து விட்டார்கள்.

இந்தத் தந்திரத்தைக் கையாளும் தொலைக்காட்சி சேனல்கள் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று அங்கிருக்கும் மக்களிடம் பேய் எப்படி வந்தது, பிசாசு எப்படிச் சென்றது என கதையளந்து இவர் களாகவே காட்சிகளைச் சித்தரித்து மக்களைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பேய் பிசாசெல்லாம் கிடையாது என்று முடிவெடுத்துத் தெளிந்து விட்டவரின் மனநிலை, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை பேய் இருக்குமோ என்ற குழப்பமான நிலைக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டுவிடும்.
சித்தரிக்கப்படும் காட்சிகள் திகிலடைய வைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளதால், மக்கள் இதை விரும்பிப் பார்க்கிறார்கள். அத் தோடு இந்தக் காட்சிகளை உண்மை என நம்பி இதுபோல நமக்கும் எதுவும் வந்துவிடக் கூடாது என்ற நிலைக்கு மக்கள் வந்துவிடுகின்றனர்.

அதன் பிறகு அவர்கள் குடும்பத் திலோ அல்லது தொழிலிலோ ஏதாவது வித்தியாசமாகத் தென் பட்டால் அதற்கான பரிகாரம் வேண்டி போலிச் சாமியார்களையும், போலி ஜோஸ்யர்கள் மற்றும் வாஸ்து, கல் என போலித்தனம் செய்பவர் களையும் நாடிச் சென்று, தங்களின் காசு பணங்களை இழந்து நிற் கின்றனர்.

இதெல்லாம் போதாது என்று சமீபத்தில் ஒரு தனியார் தொலைக் காட்சி சேனல், முன் ஜென்ம வாழ்க்கையைத் தோண்டி எடுக் கிறேன் என்ற பெயரில் மீண்டும் மக்களைக் குழப்பும் வேலையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பிரபலத்தை ஆழ்நிலை உறக்க நிலைக்குக் கொண்டு சென்று அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்பவர் தன்னை ஒரு மருத்துவர் என்றும் சொல்லிக் கொள்கிறார்.

ஆழ்நிலை உறக்கத்திற்குச் சென்றுவிடும் அந்தப் பிரபலத்திடம் இவர் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத் துவங்குகிறார். நீங்க இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் சம்பந்தமே இல்லாமல், நான் இப்போது திருப்பதி கோவிலில் இருக்கிறேன் என்று சொல்கிறார். இன்னும் சில நிமிடத்தில் பழனி முருகன் கோவிலில் இருக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாகத் தொடர்கிறது இந்த நிகழ்ச்சியின் முட்டாள்தனம்.

இது முடிந்து அவரிடம் இன்னும் கொஞ்சம் முன்னால் செல்லுங்கள் எனக் கேட்க, அவர் இன்னும் முன்னால் சென்று தன்னுடைய முன் ஜென்மத்தை அடைகிறாராம். அந்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் எனக் கேட்கப்படும் போது அந்த ஜென்மத்தில் நான் மானாக இருந்தேன், மயிலாக இருந்தேன், பட்டாம்பூச்சியாக இருந்தேன் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள், ஆய்வுக்கு உட்படக் கூடியவர்கள். ஆனால் அதிலே வருபவர்களில் ஒருவர்கூட நான் முன் ஜென்மத்தில் நாயாக இருந்தேன், கழுதையாக இருந்தேன், பன்றியாக இருந்தேன் எனச் சொல்வதில்லை. சொல்வதில்லை என்று சொல்வதைவிட சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னால் சாலப் பொருந்தும்.

முன் ஜென்மம் என்ற முட்டாள் தனமான விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் அதை வைத்து காசு பார்க்கும் வேலையைச் செய்கிறார்கள். லாபம் கிடைத்தாலும் அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற நிலையாவது அதில் இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுமிராண்டி காலத்திலிருந்து நவீன காலத்திற்கு நாகரிகமான மனிதனாக மாறிவிட்ட மக்களை மீண்டும் பழைய அறியாமைக் காலத்திற்குத் தள்ளிச் செல்லும் கீழ்த்தர வேலைகளை இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்து வருகின்றது.

தொலைக்காட்சி வழியாக எதைச் சொன்னாலும் நம்பும் மக்கள் இவைகளையும் கொஞ்சமும் ஆராயாமல் அப்படியே உண்மை என நம்பி விடுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு பரிகாரம் செய்கிறேன்என பல போலிகள் கிளம்பி மக்களின் பொரு ளாதாரங்களுக்கு வேட்டு வைக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கும், அதன் மூலம் பல பெண்களின் கற்பைச் சூறையாடுவதற்கும் இதுபோன்ற மூடநம்பிக்கையை உருவாக்கும் செயல்பாடுகளே காரணம் ஆகும்.

உண்மையை மக்களுக்கு வெளிச் சம் போட்டுக் காட்ட வேண்டிய ஊடகங்கள் தங்களின் சுய நலனுக்காக இதுபோன்ற முட்டாள் தனமான சம்பவங்களை ஒளிபரப்பி, அது குறித்த எவ்வித விழிப்புணர்வையும் மக்களுக்குத் தெரி விக்காமல் சுயநலத்துடன் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஞாயிறு, ஜனவரி 22, 2012

கற்பா கல்வியா?

என்ன செய்யப்போகிறோம்...?
பையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர்.

ஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி.

இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, "நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள்.

என்ன செய்யப்போகிறோம்...?

பெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் -இதுவும் சென்னையில்தான்- அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் - மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது.

பெண்ணின் வீட்டாருக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ, ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கு மணமுடித்து வைத்துவிட்டனர். மாப்பிள்ளை முஸ்லிம். சேர்ந்துவாழ்ந்தனர். அடையாளமாக வயிற்றில் ஏழு மாதக் குழந்தை.

இந்நிலையில் திடீரெனப் பெண் காணாமல் போய்விட்டாள். பிறகுதான் தெரிந்தது, அவள் தன் பழைய காதலனுடன் எங்கேயோ சுற்றித் திரிகிறாள் என்று. பின்னர் வீடு திரும்பிய அவளை, விவாகரத்துச் செய்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கணவனோ, மனைவியை மன்னித்து ஏற்கத் தயார்.

என்ன செய்யப்போகிறோம்...?

பிராமணப் பெண். பையன் முஸ்லிம். தேனி மாவட்டம். கல்லூரியில் உருவான காதல், இரு வரையும் கண்காணாத இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. இருவரும் இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். எங்கே, எப்படி, திருமணம் ஆனதா, இல்லையா எதுவும் பையன் வீட்டாருக்குத் தெரியாது.

கிட்டத்தட்ட இதே பாத்திரம், வேலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.

என்ன செய்யப்போகிறோம்...?

இப்படி ஒன்றல்ல; இரண்டல்ல. பல நூறு சம்பவங்கள். நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் நம் குடும்பங்களில் அரங்கேறிவருகின்றன. மேலைநாட்டுக் கலாசாரம், சின்னத்திரை, வண்ணத்திரை என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிவிட்டால் போதுமா? மலைப் பாம்பாய் வாய் பிளந்து மிரட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பேராபத்தைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன?

பெண் கல்வி

முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் துணிவோடு எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பெண் கல்வியை அனைவரும் வலியுறுத்துகிறோம். அது உண்மையும்கூட.

இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமன்றி, முஸ்லிம் ஊர்களிலும்கூட சமுதாயக் கண் மணிகள் நிறையவே படிக்கின்றனர். உயர்கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டனர். இளநிலைப் பட்டப் படிப்புக்கும் மேலாக, உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் முஸ்லிம் மாணவிகள் ரேங்க் ஹோல்டர்களாக ஜொலிக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், கல்வி ஒரு பக்கம் வளர்ந்தால், மறுபக்கம் கலாசாரச் சீரழிவு தேள் போல் கொட்டுகிறதே! முன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடு களெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே!

நாம் என்ன செய்யப்போகிறோம்?

இதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா? அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே! ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா?

கோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர்த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா? பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி?

அடிப்படை மார்க்கக் கல்விசிறு வயதிலேயே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான அடிப்படைக் கருத்துகளை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டால், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுத்து விடலாம். உண்மைதான்.

சிறு வயதிலேயே "குர்ஆன் மதரசா' எனப்படும் ஆரம்ப அரபிப் பாடசாலையில் குழந்தைகள் சேர்ந்து, குர்ஆன் ஓதக் கற்று, மார்க்கச் சட்டங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டால், பின்னாளில் எவ்வளவு பெரிய படிப்புகளைப் படித்தாலும் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பார்கள். முந்தைய தலைமுறையினர் அப்படித்தான் வளர்ந்தார்கள்.

இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பசு மரத்தில் ஆணி அறைந்தார் போன்று, இளம் உள்ளத்தில் இறையுணர்வு, இறையச்சம், மறுமை நம்பிக்கை, பெற்றோரின் உரிமைகள், பிள்ளைகளின் கடமைகள், பாலியல் தவறுகளால் விளையும் தீமைகள் உள்ளிட்ட பால பாடங்களைப் பதித்துவிட்டால், அது என்றென்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.

தினகரன் நாளிதழில் வந்த ஒரு செய்தி
ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது தான் பெரும் கொடுமை. காலையில் எழுந்தவுடன் அரைகுறையாகக் காலைக் கடனை முடித்துக் கொள்ளும் மழலையர், புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவர். பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும்வரை பெரியவர்கள் எழுந்தே இருக்கமாட்டார்கள்.


மதியம் அல்லது மாலை நேரம் வீடு திரும்பியபின் சிறிது நேர விளையாட்டு. பின்னர் மீண்டும் வீட்டுப்பாடம். அத்துடன் டியூஷன். பெரியவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பே குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இப்படி தந்தை - மகன் சந்திப்பே பல நாட்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இந்த நிலையில் மதரசாவுக்குக் குழந்தைகளை அனுப்ப நேரம் எங்கே? இப்படி பெற்றோர் அலுத்துக்கொள்கிறார்கள்.

தனி உஸ்தாதை நியமித்து வீட்டிலேயே மார்க்க வகுப்பு நடத்தலாம். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமா? வசதி இல்லாதோர் எத்தனையோ பேர்! வசதி இருந்தாலும் உஸ்தாது கிடைக்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாலு நல்ல வார்த்தை

இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா? அந்த வாசலும் அடைபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானைக் கேட்பதற்குக்கூட அவகாசம் அளிப்பதில்லை. விடுமுறை நாட்களோ வெளியூர் பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக் கழிந்துவிடுகின்றன.

மாணவிகளின் நிலை இதைவிட மோசம். மார்க்க உரைகளைக் கேட்பதற்கான முகாந்தரமே அவர்களுக்குக் கிடையாது. ஜும்ஆ இல்லை; சிறப்பு பயான்கள் இல்லை; நல்ல புத்தகங்கள் நம் வீடுகளில் கிடைப்பதில்லை. பல வீடுகளில் இஸ்லாமிய இதழ்களோ நூல்களோ மருந்துக்குக்கூட கண்ணில் படுவதில்லை.

தொலைக்காட்சி உரைகளிலோ -சிலவற்றைத் தவிர- விவரங்களைவிட விரசங்களே அதிகம். அடையாளப்படுத்தவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காசு கொடுத்து நடத்துகிறார்கள். தற்புகழ்ச்சிதான் அதில் மிகைக்கிறது; இறைநெறிகள் சொற்பமே. குறிக்கோல் விளம்பரம். அதில் உண்மையான குறிக்கோல் அடிபட்டுப்போகிறது.

தேர்ந்தெடுப்பு முக்கியம்

இதற்கு ஒரே தீர்வாக, முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், பெயருக்குக்கூட இஸ்லாத்தைக் காண முடியவில்லை. அரபி மொழி வகுப்புகளோ, இஸ்லாமிய நீதி போதனை வகுப்புகளோ அங்கு நடப்பதில்லை. நடக்கும் ஒருசில இடங்களிலும் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்றன; மாணவர்கள் வருவதில்லை.

பாடத்திட்டத்திலேயே இஸ்லாமியப் பாடங்கள் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் சில உள்ளன. எல்.கே.ஜி.யில் தொடங்கி மேல்வகுப்புவரை குர்ஆன் பாடங்களும் மார்க்க விளக்கங்களும் அங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளைக் கைவிட்டு எண்ணிவிடலாம். அவற்றிலும், பள்ளிப் பாடங்களின் தரம் குறையாவண்ணம், தீனிய்யாத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

இதுதான் இன்றைய எதார்த்தம். மறைக்க வேண்டியதில்லை. இந்தச் சூழ்நிலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் "காதல்' வலையில் சிக்கிக்கொண்டு சீரழிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. சுருங்கச்சொன்னால், மார்க்கமே இல்லாத மற்ற மாணவர்களின் நிலைதான் நம் பிள்ளைகளின் நிலையும்.

என்ன செய்யப்போகிறோம்...?

சமுதாய இளவல்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா? நம் இளைஞர்கள் மாற்றாளுடன் இல்லறம் நடத்தி, நம் வாரிசுகள் அவளது மடியில், அரவணைப்பில், இணைவைப்பில் வாழ்ந்துவரும் கொடுமை நீடிக்கலாமா? சமூக ஆர்வலர்களும் சீர் திருத்தவாதிகளும் சீரியஸாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகும் இது.

இதைத் தடுத்து நிறுத்த வழிகாணத் தவறினோம் என்றால், ஒரு தலைமுறையே மார்க்க மில்லாத தலைமுறையாக, வேற்று மதத் தலைமுறையாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதன் பாவம் இன்றைய தலைமுறையையே சாரும். நம்மை அல்லாஹ் சும்மா விடமாட்டான்.

அனைவரும் யோசியுங்கள். நல்ல முடிவு காணுங்கள். சுனாமி எச்சரிக்கை செய்தாகி விட்டது. தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொரு வரின் கடமை ஆகும்.

நான் ஒன்று சொல்வேன். பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் தரமான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.

பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தந்தை கடுமையாக உழைக்கிறார். உறக்கத்தைத் தியாகம் செய்கிறார். உணவைக்கூட உதறித் தள்ளுகிறார். மகனுக்கு, அல்லது மகளுக்கு வேண்டிய எல்லா வசதி களையும் செய்து கொடுக்கிறார். படிக்க வைக்கிறார்; பட்டமும் பணியும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவனது எண்ணவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறார்.

தாயும் நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். வகை வகையான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகு பார்க்கிறாள். பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறாள். ஆனால், பிள்ளைகளின் அசைவுகளைக் கண்டு விழித்துக்கொள்ள தவறிவிடுகிறாள். பேணி வளர்த்தல் என்பது உணவு உடையில் மட்டும் அல்ல. பண் பாடு, நாகரிகம், கலாசாரம், மறுமை வாழ்க்கை அனைத்தையும் கண்காணித்துச் சீரமைப்பதும் வளர்ப்புதான்.

நம் வீட்டுப் பிள்ளைகள் யார் யாருடன் பழகுகிறார்கள்? யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள்? ஏன் குழப்பமாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பிரச்சினை? முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் பின்னணி என்ன? தடுமாற்றம் தெரிகிறதே! கலகலப்பு இல்லையே! எதிலும் ஒட்டுதல் காணவில்லையே? காரணம் என்ன?

இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். நீங்கள் காட்டும் பாசத்தால் அவர்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் உங்களிடம் கொட்ட வேண்டும். அதைக் கேட்டு அவர்களைப் பெற்றோர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்.

அடுத்து எப்பாடு பட்டேனும், சிறு வயதிலேயே அடிப்படை மார்க்கக் கல்வியை நம் குழந்தை களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அவரவர் சூழ்நிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்றவாறு இதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். மார்க்க அறிவும் இறையச்சமும்தான் பிள்ளைகளைத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களே!

படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்குமுன், பணியாற்றும் இடத்திலேயே ஆண் துணையைத் தேடிக்கொண்டுவிடுகிறார்கள். அவன் முஸ்லிமா இல்லையா, நல்லவனா ஏமாற்றுக்காரனா என்பதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்காமல், இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தையோ கணவனோதான் நிறைவேற்ற வேண்டும். பிறந்த வீட்டில் தந்தையும் உடன்பிறப்புகளும் அதற்குப் பொறுப்பு. புகுந்த வீட்டில் கணவன் பொறுப்பு. தன் தேவைகளைத் தானே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ஒரு பெண்ணை நமது மார்க்கம் ஒருபோதும் தவிக்க விடவில்லை.

முஸ்லிம் பெண் தன்னையும் தன் குழந்தை களையும் தானே கவனித்தாக வேண்டும் என்ற நிலை மிகவும் அபூர்வமாக எப்போதாவதுதான் ஏற்படும். பெற்றோர், உடன்பிறப்புகள், கணவன், உறவினர், அரசாங்கம் என யாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் ஒரு பெண் திண்டாடுகின்ற நிலையில்தான், அவள் வேலை செய்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரும்.

தகப்பன் அல்லது கணவனின் கையாலாகாத் தன்மை, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை, சுய தம்பட்டம், அடங்காத் தன்மை போன்ற காரணங்களுக்காக இளம்பெண்கள் வேலைக்குச் செல்வதும், அதை முன்னிட்டு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்ற வழிவகுப்பதும் தேவைதானா? யோசியுங்கள்.

ஆக, கற்பா கல்வியா என்று வந்தால் கற்பையே தேர்ந்தெடுங்கள். இது ஆண்களுக்கும்தான்.
நன்றி மௌலவி ஆ. முஹம்மது கான் பாகவி

பனிக்காலத்தில் உடலை பாதுகாப்பது எப்படி?

மார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. சூரிய ஒளி குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்றுக் குறைவாகவே இருக்கும்.
நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய
ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக ‘வைரஸ்’ நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும்.
இந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொண்டையில் டான்ஸில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. இன்னும் இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா ஜூரம், ஒற்றைத் தலைவலி ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. அதோடு இந்த மாதிரியான பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகி விடுகிறது.
காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் ஜூரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன.
சரி, நம் உடலை எப்படி பாதுகாப்பது?
1. நல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள்.

2. வெதுவெதுப்பான சுடுதண்­ணீரில் குளிக்கவும்.

3. பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளுங்கள்.

4. மூக்கை கைகுட்டையால் மூடிக் கொள்ளுங்கள்.

5. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

6. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாயைத் திறந்து பேசிக்கொண்டே வண்டி ஓட்டாதீர்கள்.

7. தும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், மூக்கிலிருந்து வடியும் நீரிலும் அதிக அளவு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவை உடனே அருகில் இருக்கும் நபர்களைத் தாக்கி பரவும். மற்றவர்கள் நலன் கருதி, கைகுட்டை, கைதுண்டு இல்லாமல் இருக்காதீர்கள்.
பொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.
கம்பளியினாலான கையுறை அணியுங்கள். மாலை ஆனதும் காலுறை அணியுங்கள். சற்று இறுக்கமான ஆடைகள் அணிந்துக் கொள்ளுங்கள்.
மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள்.
பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்­ணீரைப் பயன்படுத்துங்கள்.
பன், பிரெட் போன்ற பேக்கரி ஐட்டங்களையும், சுவீட்களையும் வாங்கிய அன்றே உண்ண வேண்டும். இல்லையெனில் அதன் மேல் உருவாகும் பூஞ்சக்காளான்களால் வாந்தி, பேதி உண்டாகும்.
பொதுவாக பனிக்காலத்தில் தோல் வறண்டு விடும்.
உதடுகள் வெடிக்காமலிருக்க வெண்ணெய், நெய், கிளிசரின், பாலேடு, லிப்கார்டு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.
பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தப்படுத்திக் கொள்ள பழக்குங்கள்.
மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 45 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
-அல் பத்தாஹ்.
thanks to marhum-muslim.com

வியாழன், ஜனவரி 19, 2012

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?சாட்சிகள்

'இரண்டு பெண்களுடைய சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு நிகராகும்' என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இதையும் மாற்றார்கள் விமர்சனம் செய்கின்றனர்.
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) (அல்குர்ஆன் 2:282)

இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாகக் குர்ஆன் கூறுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத் திறனும் நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருத எந்தவித நியாயமும் இல்லை.

பெண்களில் சிலர் சில நாடுகளின் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பாக நிர்வகித்து வரும் போது சாதாரண சாட்சியம் கூறும் தகுதியில் கூடப் பாரபட்சம் காட்டுவது அக்கிரமமானது என்பன போன்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த வாதங்கள் நியாயமானவை என்றாலும் சாட்சியம் கூறுவதற்கும், இவற்றுக்கும் சம்மந்தமில்லை என்பதை விளங்கினால் இந்த வாதம் அடிபட்டுப் போகும்.

பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும் அறிவுத் திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விட இவர்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.

நல்ல, கூரிய மதி உடைய ஆண் மகனுடைய அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களே உங்களுக்குத் திறமை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 304, 1463)

அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களையே தர்க்க ரீதியாக மடக்கும் அளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் இவை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.

மிகைப்படுத்திக் கூறல்
ஆனால் சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல், அறிவுத் திறன் என்ற இரண்டு தகுதிகள் மட்டும் போதுமா? நிச்சயமாகப் போதாது! இவ்விரண்டை விட மிக முக்கியமான தகுதி ஒன்று அவசியம். உள்ளதை உள்ளபடி கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம். சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர் காலத்தை முடிவு செய்வதுமாகும்.

தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.

ஊசியை உலக்கையாகவும், யானையைப் பூனையாகவும் பார்க்கக் கூடிய இந்த இயல்பு, சாட்சியம் கூறுவதற்கான தகுதியில் குறைவை ஏற்படுத்துகின்றது. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பழமொழி இவர்களின் இயல்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

புகுந்த வீட்டில் மகள் பாதிக்கப்படும் போது பேசுகின்ற நியாயத்தில் கடுகளவைக் கூட மருமகள் விஷயத்தில் கடைப்பிடிக்காத மாமியார்கள் பலரை நாம் காண்கிறோம்.

நன்கு அலங்காரம் செய்த பெண்களை அச்சில் ஏற்றத் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து விட்டு அதை விட அதிகமாகத் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அலங்காரம் செய்து கொண்டு அதில் பெருமையடிக்கும் பெண்களும் இதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டுக்களாவர்.

இது போல் அனேக விஷயங்களில் பெண்களை இப்படித் தான் காண முடிகின்றது. ஆண்களிலும் இத்தகையோர் சிலர் இருக்கலாம். பெண்களில் இத்தகைய இயல்பு இல்லாதவர்களும் இருக்கலாம். விரல் விட்டு எண்ணி விடக் கூடிய விதி விலக்குகள் இவை. மிகப் பெரும்பாலோரின் நிலை இதுவாகத் தான் இருக்கின்றது.

பிடிக்காத ஒருவன் இன்னொருவனிடம் 100 ரூபாய் கடன் வாங்கியதற்குச் சாட்சி கூறும் போது கட்டுக்கட்டாகக் கொடுத்ததாக அறிந்தோ அறியாமலோ கூறினால் அங்கே நீதி செத்து விடும். பிடித்தவன் விஷயத்தில் குறைத்துக் கூறினாலும் அப்படியே.

இயற்கையாக அமைந்த பலவீனம்
பெண்கள் ஆண்களைப் போன்ற உடலமைப்புக் கொண்டவர்களல்லர். பலவீனமானவர்களாகவும் இயற்கையில் மாதாந்திர உதிரப் போக்கு என்ற உபாதைக்கு ஆளாகுபவர்களாகவும் உள்ளனர். இந்த மாதாந்திர உபாதை மனநிலையில் பாதிப்பையும், தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என மருத்துவவியலாரும், மனோதத்துவ இயலாரும், உடற்கூறு வல்லுனர்களும் கூறுவது அனைவரும் அறிந்ததே!

ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக அழைக்கப்படும் பெண், மாதாந்திர உபாதையுடனிருக்கும் போது அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலோ, அல்லது சாட்சியத்திற்கு அழைக்கப்படும் போது அவ்வுபாதையுடனிருந்தாலோ அவள் அளிக்கும் சாட்சியத்தில் அவளது உடல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மனநிலை பிரதிபலிப்பதால், சாட்சியம் முழுமையடையாது.

உள்ளதை உள்ளபடி கூறாமல் குழம்பிய நிலையில் அளிக்கப்படும் சாட்சியத்தால் நீதி வழங்குவதிலும் குறைபாடு ஏற்படும். இது இரண்டாவது காரணம்,

இவ்விடத்தில் மற்றொரு கேள்வி எழலாம். மாதவிடாய் நின்று போன பெண்ணையாவது ஒரு ஆணுக்கு நிகரான சாட்சியாக ஏற்கலாமல்லவா என்று வினவலாம். ஆனால் இத்தகைய பெண்களுக்கு வேறு விதமான மனநிலைக் குழப்பம் ஏற்படுவதையும் மருத்துவ விஞ்ஞானம் உறுதி செய்வதால் இவ்வினா அர்த்தமற்றுப் போகிறது!

மிரட்டலுக்கு அஞ்சுதல்
பொதுவாக சாட்சி கூறும் போது இரு தரப்பில் ஒரு தரப்புக்கு பாதகமாகத் தான் அது அமையும். யார் பாதிக்கப்படுகிறானோ அவன் தனக்கு எதிராகச் சாட்சி கூறும்பெண்ணை மிரட்டலாம். அவளையோ, அவளது குடும்பத்தில் ஒருவரையோ கொன்று விடுவதாகக் கூறினால் போதும், சாட்சியத்தை மாற்றிக் கூறி விடக் கூடியவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர். இந்தப் பலவீனத்தின் காரணமாகவும், இவ்வாறு வேறுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

இயல்பிலே அமைந்த இரக்க குணம்
மேலும், பெண்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தாய்மையுணர்வின் காரணமாகக் குற்றவாளியின் மீது இரக்கப்பட்டு, சாட்சியத்தில் ஒளிவு மறைவு செய்யலாம் என்பதாலும், ஒரு ஆணுக்கு நிகராக இரு பெண்கள் சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். நிச்சயமாக இரு பெண்கள் ஒரு சம்பவத்தை ஒரே மாதிரியாகக் கூறுவதில்லை என்பதை முதலாவது சொன்ன காரணம் உறுதிப்படுத்துகின்றது.

எனவே ஒரு ஆண் சாட்சிக்கு நிகராக இரு பெண் சாட்சிகள் தேவை என்று இஸ்லாம் வகுத்துள்ள சட்டம் அறிவுக்குப் பொருத்தமானதும் நியாயமானதும் ஆகும் என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு விஷயத்துக்கும் தேவையான தகுதிகளை எடைபோட்டு அதனடிப்படையில் ஆண் - பெண்ணிடையே இஸ்லாம் சில வித்தியாசங்களை ஏற்படுத்தியுள்ளது. நடுநிலை உணர்வுடன் இதைச் சிந்திக்கும் எவரும் இதிலுள்ள நியாயத்தை உணரலாம்.

மேலும் ஒரு பெண் சாட்சியமளிப்பதோ அளிக்காமல் இருப்பதோ அவளது உரிமையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...