வியாழன், ஆகஸ்ட் 16, 2012

யாருக்குப் பெருநாள்? – கலீல் அஹ்மத் பாகவீ


யாருக்குப் பெருநாள்?

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்…
என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.

இவருக்குத்தான் இனிய பெருநாள்…!

தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த

உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்…!

வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த

உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்…!

ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி – பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட

உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!

எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த

உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்…!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

சுதந்திரம் அருமை அறிய சுதந்திரம் வேண்டும்சுதந்திரம் வந்தால் விடுமுறை அதனால் அதிகமாக தொலைகாட்சி நிகழ்சிகள் பலவிதம் . தொலைக் காட்சியினர் குடும்பங்களை சோம்பேறியாகவும் பொறுப்பு இல்லாதவனாகவும் மாற்றி தவறான காட்சிகளை காட்டியும் நிறைய பொருள் ஈட்டுகின்றனர்.
விடுமுறை கிடைத்ததால் ஓய்வு மற்றும் ஊர் பொய் வரலாம். இதுதான் நடக்கின்றது. மற்ற பண்டிகை நாட்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சுதந்திர நாள் ,மற்றும் குடியரசு நாள் கொண்டாடத்திற்கு கொடுக்கப்படுவதில்லை. இது மனதோடு ஒன்றாத ஒரு நாளாகவே வந்து மறைகின்றது
சுதந்திரம் அருமை இக்கால இந்திய மக்களுக்கு சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. அரசு விழாக்கள் கொடி ஏற்றும் நிகழ்வுடன் ஆயுத வலிமை காட்டி ஊர்வலம்.இத்துடன் முடிகின்றது
சாதாரண வெறுப்பான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு கிடைக்கும் உற்சாகம் கூட மக்களிடத்தில் இல்லை.
பெரும்பான மக்கள் ஆங்கிலேயன் ஆட்சியைக் காணவில்லை. மற்ற நாடுகள் சுதந்திரம் பெறுவதற்கு அடைந்த சிரமங்களும், தொல்லைகளும் அடைந்த துன்பங்களை குறைக்க காந்தி அடிகள் நமக்காக அயராது பாடுபட்டு குறைத்து விட்டார் . அல்ஜீரியா மக்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பெற்ற துன்பங்கள் நம்மை விட அதிகம். இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயனுக்கு ஒரு நெருக்கடியை ஹிட்லர் உண்டாக்கியதால் நம் தயவை நாடி அங்கிலேயர் வர வேண்டிய கட்டாய நிலை .அதை அருமையாக ,சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார் காந்தி அடிகள். அவருக்கு கிடைத்த உயர்ந்த தொண்டனாக நேரு அமைந்தது இந்திய நாட்டின் சுதந்திரச் செடி நன்கு வேருடன் கூடிய ஆலமரமாக தெற்காசியாவில் நிலை பெற வாய்ப்பானது , மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் இது நிலையானது , சுதந்திரம் பெற்ற பின்பும் முதலில் கடுமையான முறையை கையாள்வதின் வழியே மக்களுக்கு நன்மை செய்ய முயன்றதால் மக்கள் அவரை நேசிக்க ஆரம்பிக்க முயன்றனர் , அதன் பின்புதான் மக்களுக்கு கட்டுப்பாடான உரிமைகளை தர ஆரம்பித்தார் . அனைத்து மக்களையும் ஒரே கண் கொண்டு பார்த்தார் . மத வேறுபாடு காரணமாக சண்டை வராமலும் மற்றும் அனைத்து மக்களும் நேசத்துடன் வாழ வேண்டும் என்பதில் முக்கியம் கொடுத்தார் . அது ஒரு மிகவும் சிறிய நாடாக இருந்ததால் அவர் நினைத்ததை அவரால் சாதிக்க முடிந்தது அதனால் லிகுவான்கியு மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்,
நம் நேருஜி அவர்கள் அதேபோல் உயர்வான கொள்கைகளை பெற்றிருந்தும் அவர் ஒரு போதும் அடக்கு முறையை கையாள முயலவில்லை, அதனால் மக்கள் நேருவை மிகவும் நேசித்தனர் ,நேருவின் அறிவு அவருக்கு கை கொடுத்தது, அதனால் நம் அண்டை நாடுகள் அனைத்தும் (மலேசிய மற்றும் சிங்கப்பூரைத் தவிர ) பெயருக்குத்தான் மக்களாட்சி ஆனால் ஆள்வது முப்படை வீரர்கள்தான். இந்தியாவில் வாழும் மக்கள் மனித உரிமையின் மாண்பினை நன்கு அனுபவித்து விட்டனர் . இங்கு ஒரு காலமும் இராணுவ ஆட்சி வராது. அதன் பெருமை காந்திக்கும்,நேருக்கும் அவர்களுக்கு உரு துணையாக இருந்தவர்களுக்கும் போய்ச் சேரும்.

சுதந்திர வந்து நமக்கென்று பல்வேறு நாடுகளிலுருந்து எடுக்கப்பட்ட நன்மை பயக்கக் கூடிய ஒரு கலவையாகத்தான் நமது அரசியல் சாசன சட்டங்கள் உருவாக்கப்பட்டன . அது தொடர்ந்து காலத்தின் கட்டாயத்தை கருதி பல மாற்றங்களை ஏற்படுத்த அவசியம் வந்து ஏகப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தேவைதான் .
இருபினும் அதிலும் ஒரு ஓட்டையை தெரிந்தோ தெரியாமலோ வைத்து விடுகின்றனர் .A law without exception is no law

இது போதும் பலர் தவறு செய்த பின் தப்பிக்க . ஊழல் செய்பவர் ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறார். தேர்தல் வந்தால் பணம் வாரி இறைக்கபடுகின்றது . சட்டம் இருப்பது மக்களை பாதுகாக்க அந்த சட்டமே பாதிக்கப்பட்டவனுக்கு சாதகமாக அமையாமல் பொய் விடும் நிலையும் நாம் பார்க்கின்றோம் . “சட்டம் ஒரு இருட்டறை அதிலே வக்கீலின் வாதம் ஒரு ஒளி விளக்கு ஏன்று அண்ணா சொன்னார்” . வாதம் செய்பவரே இருட்டில் மாட்டிக்கொள்ளும் நிலை மிகவும் வேதனையாக உள்ளது .
சுதந்திரத்தின் அருமை தெரிய ஒவ்வொரு மனிதனும் திருந்த வேண்டும்’ வெறும் கொண்டாடத்தினால் ஒரு நன்மையும் விளையாது . வீண் விரயங்களை கட்டுப் படுத்த வேண்டும் . தலைவர்கள் வாழும் முறை மக்களுக்கு நல்வழி காட்டும். தலைவன் சரியில்லையென்றால் தொண்டன் தலைவன் வழிதான் தொடர்வான். உடலுக்கு ஆபத்து வராமல் தலைக்குத்தான் ஹெல்மெட் . முதலில் தலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் , தலைமையை முறைபடுத்திக் கொள்ளுங்கள் , பின்பு அனைத்தும் சிறப்பாக அமையும் . போதும் ‘ஹீரோ வொர்ஷிப்’வேண்டாம் சுய சிந்தனை தழைக்கட்டும் அது உரிமையை பாதுக்காக்கும் , அப்பொழுதுதான் சுதந்திரம் முழுமையடையும்

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

*****மனைவியின் ஆலோசனையும்..., மதிக்கத்தக்கதே.......!!!!********


நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சந்திக்க நேரிடுகிறது.

அந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல், அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கல்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.

பெண்களிடம் ஆலோசனைகளை கேட்கக் கூடாது, கேட்பது அபசகுனம், அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது.

இது போன்றவர்கள் நபியவர்களின் வாழ்வில் இருந்து நிறையவே படிப்பினை பெற வேண்டியுள்ளது. ஏன் என்றால் நபியவர்களே தங்கள் மனைவியரிடத்தில் தனக்குத் தேவையான ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.

அப்படியிருக்க நாம் ஏன் பெண்களிடம் நமக்கு தேவையான சிறந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது?

நபியவர்கள் உம்ராச் செய்வதற்காக தங்கள் ஸஹாபாக்களை அழைத்துக் கொண்டு வந்த நேரம் எதிரிகள் அதற்கு நபியவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

அந்நேரம் நபியவர்கள் எதிரிகளுடன் ஹுதைபிய்யா என்ற ஒப்பந்தத்தை போடுகிறார்கள். அப்போது நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது உம்மு ஸலமா (ரலி)(நபி (ஸல்) அவர்களின் மனைவி ) யோசனை வழங்குகின்றார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவைர நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இப்படிப்பட்ட பாராட்டத்தக்க ஒரு யோசனை சொன்னவர் ஒரு பெண்தான் ஆணல்ல.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

நபியவர்களிடம் விருந்தாளியாக ஒருவர் வந்த நேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தனர். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?'' அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)'' என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.

"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்'' அல்லது "வியப்படைந்தான்'' என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்,
وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۚ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

"தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்'' எனும் (59:9) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3798

ஜாடிக்கு ஏற்ற மூடி என்று சொல்வதைப் போல் நபியின் மனைவியரும், நபித் தோழர்களின் மனைவியரும் குடும்ப வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டதையும், தேவையான சந்தர்ப்பங்களில் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதையும், கணவன் சொல் பேச்சைக் கேட்டு நடந்ததையும் மேற்கண்ட செய்திகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா ? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !

''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.

''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.

உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.

இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35

தடையை மீறினார் வழி தவறினார்.
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.

20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று
அந்த மரத்தின் கனி,

இன்று
மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)

மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.

அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.

அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.

2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்
உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.

ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.

நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் கோரி தங்களை சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.

அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
·

உலகம் முடியும் காலம் வரை,

மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,


பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

மனுதர்மத்தை உடைத்தெறிந்து மனித தர்மத்தை நிலைநாட்டிய திருக்குர்ஆன்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

திருக்குர்ஆன் இறக்கி அருளப்படுவதற்கு முன்பு உலகில் மனிதன் மனிதனை அடித்து விழுங்கிக் கொன்டிருந்தான். ஆண்டான் – அடிமை> உயர்ந்தோன் – தாழ்ந்தோன்> கருப்பன் - சிவப்பன் எனும் வேற்றுமையும்> உயர்வு-தாழ்வும் உலகில் தலைவிரித்தாடியது உலகம் முழுவதிலும் எத்தனையோ சமூக நீதிக் காவலர்கள் உருவானார்கள் அவர்களால் எத்தனையோ சமூகநீதி போராட்டங்கள் நடத்தப்பட்டன> எத்தனையோ விடுதலை உணர்வுகளைத் தூண்டும் விழிப்புணர்வு நூல்கள் எழுதப்பட்டன. அவைகள் அனைத்தும் நீருப்பூத்த நெருப்பாக தோன்றிய வேகத்தில் மறைந்தன.

ஆனால் ஆண்டான் – அடிமை> உயர்ந்தோன் – தாழ்ந்தோன்> கருப்பன் - சிவப்பன் எனும் வேற்றுமைக்கும்> உயர்வு- தாழ்வுக்கும் முற்றுப் புள்ளி வைத்தது திருக்குர்ஆன் மட்டுமே என்றால் மிகையாகாது.

உலகம் முழுவதிலும் ஆதிக்க வர்க்கத்தினரால் அடிமைப் படுத்தப்பட்டு> சிறுமை படுத்தப்பட்டு விடுதலை அடைந்த மக்கள் திருக்குர்ஆனை சங்கை செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

ஏன் ?

திருக்குர்ஆனுக்கு முந்தைய நிலை ஒரு ஃப்ளாஷ்பேக்

பரந்து விரிந்த இந்திய பெருநாட்டிற்குள் கைபர் கணவாய் வழியாக ஆடுமாடுகளை> மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக நுழைந்த ஆரியக் கூட்டம் வெளி உலகம் அறியாத அப்பாவிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மண்ணின் மைந்தர்களாகிய ஆதி திராவிடர்களுடைய அறியாமையை பயன்படுத்திக் கொண்டு சிலை வணக்கத்தைப் புகுத்தி தங்களுடைய வயிற்றுப்பிழைப்பை தொடங்கினர்.

இவர்கள் அரசியலில் கால்பதித்து அரசு அதிகாரத்தை கைப்பற்றி கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு போதிய இடஒடுக்கீடுகளை ஒதுக்கிக் கொள்வதற்கு முன்பு வரை அவர்களது வயிற்றுப் பிழைப்பு கோயிலுக்கு வழங்கும் பிரசாதமும்> காணிக்கைகளும் தான்.

தாங்கள் தேவனுடைய தலையில் பிறந்ததாகவும் அதனால் தாங்களே வேதத்தை ஓதவும்> பூஜை புணஷ்காரம் செய்யவும் தகுதியானவர்கள் என்றுக்கூறி கோயில் நிர்வாகத்தை '' ஆரிய லைஃப் இன்ஷூரன்ஸ் '' செய்து கொண்டனர்.

அதனால் சொந்த மண்ணில் பிறந்தவர்களை தேவனுடைய காலில் பிறந்ததாக கூறி அவர்களுக்கு சூத்திரர்கள் என்ற இழி பெயர் சூட்டி தீண்டத் தகாதவர்களாக்கி எங்களுடன் சமமாக வாழ முடியாது என்றுக் கூறி அவர்களை ஊர் கோடியில் பன்றிகளுடன் ஒதுக்கி விட்டு அவர்கள் வாழும் பகுதிகளுக்கு சேரிகள் என்று பெயர் சூட்டியும்> தங்களுடைய குடியிருப்பை கோயிலைச் சுற்றி அமைத்துக் கொண்டு அதற்கு அக்ரஹாரம் என்று பெயர் சூட்டிக் கொண்டனர்.

மண்ணின் மைந்தர்களை தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரைக் குத்தி ஒதுக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே இவர்களது கோயில் நிர்வாகத்தில் அவர்கள் தலையிடக் கூடாது தங்களுடைய வயிற்றுப் பிழைப்பில் கைவைத்து விடக்கூடாது போட்டி வந்து விடக்கூடாது எனும் முக்கிய நோக்கமாகும்.

அந்த அப்பாவிகள் வந்தேறி ஆரியர்களால் சிறுமைப்படுத்தப் படுவதற்கு முன்பு தாங்கள் பிறந்த மண்ணில் சுதந்திரமாக சுற்றித் திறிந்தார்கள் இவர்களது வருகைக்குப்பின் அவர்கள் அடிமையாக்கப்பட்டப்பின் அவர்களது குடியிருப்புக்;களாகிய சேரிகளை தவிர்த்து பொது இடங்களில் நடக்கக் கூட முடியாத அவல நிலையை அடைந்து கொண்டதுடன் மற்ற சமுதாயத்து மக்களுடனான சமத்துவமும் பறிக்கப்பட்டு சிறகொடிந்தப் பறவைகளாயினர்.

ஒடுக்கப்பட்ட இந்த மக்களுடைய அவல நிலையை மாற்றி அவர்களது துயர் துடைக்க எத்தனையோ இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு குரல் கொடுத்தன அவைகளாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அவைகளும் ஒரு காலகட்டத்தில் அரசியல் அமைப்புகளாக பரினாமம் பெற்று யாரை எதிர்த்து யாருக்காக ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் துவக்கப்பட்டதோ அது மாற்றப்பட்டு எதிர்க்க வேண்டியவர்களிடமே சட்டமன்ற> பாராளுமன்ற சீட்டுக்காக சரணடைந்து கையேந்தும் அவலநிலையை அடைந்து கொண்டனர் .

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.368 நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். 49:13.

மனிதன் கடவுளுடைய தலையிலும் பிறக்கவில்லை> காலிலும் பிறக்கவில்லை ஒரே ஒரு மனிதனே முதலில் படைக்கப்பட்டு அவரிலிருந்து அவருக்கு பெண் துணையை படைக்கப்பட்டு உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே அச்சிலிருந்தே ( அந்த இருவரிலிருந்தே ) ஏற்றத் தாழ்வு இல்லாமல் படைக்கப் படுகிறது என்பதை ஆணித்தரமாக் அடித்துரைத்து வந்தேறி ஆரியர்களுடைய செட்டப் நாடகத்தை (மனுதர்மத்தை) உடைத்தெறிந்து மனித தர்மத்தை நிலைநாட்டியது திருமறைக்குர்ஆன்.

சமத்துவத்தை மட்டும் கூறி விட்டு விடாமல் சகோதரத்துவத்தையும் சேரத்துக் கூறி விடுதலை முரசு முழங்கி மனு தர்மத்தை சவக்குழிக்கு அனுப்பியது சங்கை மிக்க குர்ஆன். '' இன்னமா அல்மூஃமினூன இஹ்வா'' முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே ... 49:10

இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே !
சகோதரர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு உண்டாகுமா?
சகோதரர்களுக்கு மத்தியில் ஆண்டான் அடிமை எனும் சிந்தனை இருக்குமா ?
சகோதரர்களுக்கு மத்தியில் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு சிந்தனை வருமா ?
வராது !

வராமல் இருக்க வேண்டும் என்றால் சகோதரர்களாக ஆகிக் கொள்ள வேண்டும் வெளியில் இருந்து கொண்டு பெயரளவில் அண்ணன்- தம்பி> மாமன்- மச்சான் என்று கூறிக் கொண்டிருந்தால் சகோதரர்கள் ஆகமுடியாது முஃமின்கள் ( முஸ்லீம்கள் ) எனும் இறைநம்பிக்கையாளர்கள் வட்டத்திற்குள் இணைந்து கொள்ள வேண்டும் அவ்வாறு இணைந்து கொண்டால் ஏற்கனவே உள்ள முஃமின்கள் ( முஸ்லீம்கள் ) இறைநம்பிக்கையாளுக்கு புதிதாக இணைந்து கொண்டவர்கள் சகோதரர்கள் எனும் அந்தஸ்த்திற்கு உயர்ந்து விடுவார்கள். சமத்துவம் தாமாக தேடிவரும்.

ஆரியர்களால் அடிமைப் படுத்தப்பட்டிருந்த அப்பாவி ஆதி திராவிடர்கள் அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கு இஸ்லாத்தை நோக்கி அணி அணியாக வந்து இணைந்து கொண்டு சமத்துவத்தை அடைந்து கொண்டனர்.

அவ்வாறு சூத்திர ( அடிமை ) விலங்கை உடைத்தெறிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வந்து இணைந்து கொண்டவர்களே இந்திய முஸ்லிம்களாவார்கள் அவர்களுடைய வாரிசுகளே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும்> படித்துக் கொண்டிருக்கின்ற நீங்களுமாவீர்கள்.

இன்று சமுதாயத்தில் எல்லா மனிதர்களைப் போல நாமும் சமத்துவமாக வாழ்ந்து வருகிறோம் என்றால் திருக்குர்ஆன் நமக்கு விடுதலை வாங்கித் தந்தது என்பதை மற்ந்திடக் கூடாது. அதனால் திருக்குர்ஆனை நாம் சங்கை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

குர்ஆனை மறந்த மனிதர்களைப் பார்த்து குர்ஆன் கூறுகிறது : ...அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். 3:103

அதனால் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை நோக்கி வந்த அன்பிற்குரிய இந்திய முஸ்லீம்களே நமது முந்தைய அடிமை நிலையை நினைத்துப் பார்த்து சமத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த திருக்குர்ஆனை அழகுற ஓதி அது ஏவுகின்ற ஏவல்களை நமது வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகி நடப்பதுடன் அது விலக்கும் விலக்கல்களிலிருந்து முடிந்தவரை விலகிக் கொண்டு வாழ்வதே குர்ஆனை நாம் சங்கை படுத்தியதாக அவ்லாஹ்விடம் கருதப்படும்.

திருக்குர்ஆன் விடுக்கும் சமத்துவ அறைகூவலை இன்றும் இந்தியாவின் சேரிகளில் வசிக்கும் நமது முன்னோர்களுக்கு அது எட்டாமல் இருந்து வருகிறது என்பதுடன் எட்ட விடாமல் அடிமை விலங்கு பூட்டிய ஆதிக்க வர்க்கம் தடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மைகளாகும் அவர்களது செவிப் புலன்களை '' இன்னமா அல் மூஃமினூன இஹ்வா '' இறைநம்பிக்கையாளர்கள் சகோதரர்களே ! எனும் திருமறை வசனம் அவர்களது செவிப்பறையை தட்டினால் அடுத்த கனமே அவர்கள் தங்களது அடிமை விலங்குகளை உடைத்துக் கொண்டு இஸ்லாத்தை நோக்கி வருவார்கள் சமத்துவத்தை அடைந்து கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ் .

அன்பிற்குரிய நோன்பாளிகளே ! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதி வருவதுடன் அது கூறும் ஏவல - விலக்கல்களை அமல் படுத்துவீர்களேயானால் அது உங்களுக்கு ரமளானுக்குப் பிறகும் பின் தொடர்ந்து கொள்ளும்


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

சனி, ஆகஸ்ட் 11, 2012

யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்?


உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது வெளிப்படக்கூடிய ஒரு கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி
ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

(அல்குர்ஆன் 21:96)

யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் விளக்கியுள்ளனர்.

அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள். அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

(நூல் : முஸ்லிம் 5228)

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5228

அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.

நவீன கருவிகளையும், ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக் கேள்வி தவறானதாகும்.

மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இதுவரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.

இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத் தான் பார்க்க முடியும்.

காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.

செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.
எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.
இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். யுக முடிவு நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்க முடியும்.

இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அஹ்மத் 21299
இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: தப்ரானி
ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.

உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3348

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டுமா?:நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணாமல் புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிருந்து) முதல் சாப்பிடுவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் சாப்பிட்டு விட்டுத் தான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்கலும் நாம் காணமுடிகின்றது.
ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதை புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகல் எனது ஆடே முதன் முதல் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்கடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையத்தார்கள்.
அறிவிப்பவர்: பராஃ (ரலி) நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொழுதுவிட்டு வந்து ஹஜ் பெருநாள் சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுது விட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கின்றார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்தத் தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
நூல்: புகாரி 989
இந்த ஹதீஸின் படி பெருநாள் தொழுகையின் முன்போ, பின்போ எந்தத் தொழுகையும் கிடையாது என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டுமா?:நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணாமல் புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிருந்து) முதல் சாப்பிடுவார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் சாப்பிட்டு விட்டுத் தான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்கலும் நாம் காணமுடிகின்றது.
ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதை புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர் என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா பின் நியார் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகல் எனது ஆடே முதன் முதல் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்கடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையத்தார்கள்.
அறிவிப்பவர்: பராஃ (ரலி) நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொழுதுவிட்டு வந்து ஹஜ் பெருநாள் சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுது விட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கின்றார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.பெருநாள் தொழுகைக்குப் பின் சுன்னத் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்தத் தொழுகையையும்) தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
நூல்: புகாரி 989
இந்த ஹதீஸின் படி பெருநாள் தொழுகையின் முன்போ, பின்போ எந்தத் தொழுகையும் கிடையாது என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

மணித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.க மற்றும் த.மு.மு.க கட்சியினர்


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சார்ந்த ஹயாத் முகம்மது ஈஸா (வயது 19) என்பவர் தினக்கூலி அடிப்படையில் பிளம்பிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 03.08.2012 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் உள்ள ஹோண்டா மோட்டார் வாகன புதிய கட்டிடத்தின் மாடியில் எவ்வித பாதுகாப்
பும் இல்லாமல் கயிறு கட்டி வேலை செய்து கொண்டிருந்த போது ஆர்க் கன்சல்டிங் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டிட பொறியாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரின் கவனக்குறைவால் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனடியாக அவரது உடல் அருகில் உள்ள பெல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தை கேள்விபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம்;இ பாளையங்கோட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெல் தனியார் மருத்துவமனையில் பெருந்திரளாக குழுமினர்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கட்டிட பொறியாளர் குமார்இ பார்ட்னர் ஆதித்தன் மற்றும் கட்டிட மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரிடம் இறந்து போனவர் குடும்பத்திற்கு ரூ.20இ00இ000ஃ- (இருபது இலட்சம்) உடனடியாக வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கட்டிட பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்ட த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து இப்பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் விரும்பாத நிலையில் நஷ்ட ஈட்டுத் தொகையை குறைக்கும் வகையிலும்இ பிரச்சினையை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த செயல்பாடு சம்பவ இடத்தில் குழுமியிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பையும்இ கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு இருபது லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை விடுத்த போது, மாமா கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியான அதிமுக நிர்வாகிகளிடம், ‘இவர்களுக்கு (தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு) அவ்வளவு விபரம் போதாது.

ஒரு லட்சம் கொடுத்து பிரச்சனையை முடித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். நஷ்டஈட்டுத் தொகையைக் குறைப்பதன் மூலம் கம்பெனி முதலாளிக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுத்தால் அதற்காக குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகக் கொடுப்பார்கள் என்பது தான் இதற்குக் காரணம்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க வேண்டியவர்கள், கமிஷனைக் கருத்தில் கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகளுடைய நடவடிக்கைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தார்கள் கடும் வெறுப்படைந்தனர்.

தேவையில்லாமல் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் உடனடியாக இந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுகள் என்று தமுமுகவினரை விரட்டி, காரிதுப்பும் அளவிற்கு தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு ரூ.6இ00இ000ஃ- (ஆறு இலட்சம்) வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மறுநாள் இறந்தவரின் உடல் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மணிதநேய பணியை பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் ஊர் ஜமாஅத்தார்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

அல்லாஹ்விற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து ஈட்டுத்தொகை கிடைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட மாமா கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் தாங்கள் தான் இறந்தவருக்கு ஆதரவாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் மறுநாள் வெளியான ஒரு தமிழ் நாளிதழில் நமது ஜமாஅத் சகோதரர்கள் முற்றுகையிட்டிருந்த படத்தை வெளியிட்டு தமுமுக, மமகவினர் முற்றுகையிட்டதாக செய்தி வெளியிட்டது.

மாமா கட்சியினரின் இந்த துரோகச் செயலையும் பத்திரிகையில் செய்தியைத் திரித்துக் கூறிய இழிசெயலையும் கண்டு மக்கள் கொதித்துப் போயினர்.

இவர்களின் கட்ட பஞ்சாயத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது ...

இவர்களின் இந்த இழிவான செயல்களுக்கு இறைவன் மிக விரைவில் ஒரு முற்று புள்ளி வைப்பான் ..இன்ஷா அல்லாஹ்....
— with Jamal Mydeen, முத்துப்பேட்டை முகைதீன்,

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

குறட்டையை தவிர்க்க சில தகவல்கள் !!!


யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவ
தால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர்.

குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப்போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்

நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும்.

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

'நான் நோன்பாளி!'நோன்பு நோற்றிருக்கும் போது யாராவது வீண் வம்புக்கு வந்தால் கோபத்தை ஏற்படுத்தும் செயல்கள் மூலம் சீண்டினால் அவருடன் மல்லுக்கு நிற்காமல் நான் நோன்பாளி என்று இருமுறை கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

எதிராளியிடம் 'நான் நோன்பாளி!' என்ற பதிலை கோபப் படாமல் அடக்கத்துடன் கூறிவிட்டால் நாமும் நோன்பாளி தானே நாமும் அல்லாஹ்வுடைய நோன்பை நோற்றிருக்கத் தானே செய்கின்றோம் என்ற சிந்தனை நமக்கு வராமல் போய் விட்டதே சரியான நேரத்தில் அவராவது நமக்கு நினைவுப் படுத்தினாரே என்ற நல்லெண்ணம் அவருக்கு மேலோங்கும் இதன் மூலம் அவருடைய கோபம் காற்றாய் பறந்து விடலாம்.

இதனால் இருவரது நோன்பும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும் நோன்பாக அமைந்து விடும். இருவரும் அல்லாஹ் வழங்கும் அபரிமிதமான கூலியை அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தில் அடைந்து கொள்வார்கள்.

ஏன் இந்த கட்டளை ?
நோன்பு அல்லாஹ்வுக்குரியது அல்லாஹ்வுடைய நோன்பை நோற்றிருக்கக்கூடிய நாம் முதலில் நாவை கட்டுப்படுத்த வேண்டும்.

வாக்கு வாதம் அதிகரித்து இருவருக்கும் சண்டை முற்றி விட்டால் நாவிலிருந்து நரகல் வார்த்தைகள் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

அவருடைய தாய்,தந்தையரை இவரும், இவருடைய தாய்,தந்தையரை அவரும் திட்டிக் கொள்வர் இவ்வாறு திட்டிக்கொள்வதை இஸ்லாம் ஆரம்ப காலத்திலேயே இதை பெரும் பாவம் எனக் கூறி தடைசெய்து விட்டது.

ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். புகாரி: 45973

வயதான பெற்றோரை உணவு,உறைவிடம் கொடுக்காமல் விரட்டி விடுவது எவ்வாறு பெரும் பாவங்களின் பட்டியலில் சேருமோ அவ்வாறே பிறர் மூலமாக தன் பெற்றோர் ஏசப் படுவதும், தூசிக்கப்படுவதும் பெரும்பாங்களில் சேரும் என்பதையே மேற்காணும் நபிமொழி விளக்குகிறது.

பெற்றோரை ஏசி முடித்ததும் அல்லது ஏசிக் கொண்டிருக்கையிலேயே கடும் சொற்களைக் கொண்டு ஒருவர் மற்றொருவரை திட்டிக் கொள்வார்கள் இதுவும் பாவத்தின் பட்டியலில் சேரும்.

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார். புகாரி: 6044

அதேப் போன்று இரண்டு பேர் திட்டிக்கொள்ளும் பொழுது அதில் அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாமல் இருந்தால் எதிராளியன் மீது மொத்தக் குற்றமும் பதிவாகி விடும் இது மிகப் பெரிய மறுமை நஷ்டமாகும்.

இரண்டுபேர் திட்டும்போது அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாமல் இருக்கும்போது யார் ஆரம்பித்தார்களோ அவர் மீது (குற்றம்) பதிவு செய்யப்பட்டு விடும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹூரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார். நூற்கள்: முஸ்லீம்> அபூதாவூத்.

பெற்றோரையும் சகட்டு மேனிக்கு ஏசி விட்டு> நேரடியாக யாகவும் திட்டிக்கொண்டு இறுதியாக இருவரும் சாபமிட்டுக் கொள்வார்கள் நீ நல்லா இருப்பாயா நாசமா போ ? நோன்பு நாளில் கூட இப்படி செய்கிறாயே நீ ஒரு இறைமறுப்பாளன் என்று இன்னும் ஏராளமாக சபித்துக் கொள்வார்கள்.

இது எவ்வளவுப் பெரிய மறுமை நஷ்டம் என்பதை அவர்கள் அறிந்திருந்தால் அவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் வாழ்நாளில் இனி ஒரு தடவை இது மாதிரி நடந்து கொள்ள மாட்டார்.

ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ> 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக> இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்(ரலி) அறிவித்தார். புகாரி: 6045

இரண்டு நோன்பாளிகள் மோதிக்கொள்ளும் பொழுது கண்டிப்பாக இரண்டு நோன்பாளிகளின் நோன்பும் ஏற்றுக் கொளளப்படாத் நிலை உருவாகலாம் அல்லது ஒருவருயைட நோன்பாவது ஏற்றுக் கொளளப்படாத் நிலை உருவாகலாம்.

ஏற்றுக் கொளளப்படாத் நிலை உருவாவதை விட பாவங்கள் எழுதப்பட்டுவிடலாம். உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரமலானில் நன்மைகளை கொத்து கொத்தாக அறுவடை செய்து கொண்டிருக்கும் போது நாம் மட்டும் பாவத்தை சேர்க்கலாமா ?

இதனால் தான் பிரச்சனை வருவது மாதிரி தெரிந்தால் பிரச்சனை முற்றி விடாமல் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவதற்காக நான் நோன்பாளி என்று இரண்டு முறை கூறிவிட்டால் அல்லாஹ்வுடைய நோன்பு என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டு இருவரும் ஒதுங்கி கொள்வார்கள் என்ற நன்னோக்கில் மானிடம் முழுமைக்கும் அருட் கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! புகாரி 1894

இவ்வாறு ஒருவர் ரமலானில் நடந்து கொண்டார் என்றால் இது அவருக்கு ரமலானுக்குப் பிறகும் அவரைப் பின் தொடரும் நோன்பு மனித சமுதாயத்திற்கு கடமையாக்கப்பட்டதே பாவங்களை அழித்து நன்மைகளை அடைந்து கொள்வதற்கும் நற்செயல்கள் மூலமாக இறையச்சம் ஏற்பட வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் தான்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் 2:183.
Related Posts Plugin for WordPress, Blogger...