ஞாயிறு, அக்டோபர் 23, 2011

சுடர் மளிகையில் ஒரு சொற்ப்போர

; :தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தஞ்சை மாவட்ட ஆட்சியரால் என்னை சிறைப்படுத்தப்பட்ட நாள் 9.8.1993
பழனி பாபா வயது - 43
சிறைவாசி எண் : 778 தற்காலிகமாக மத்திய சிறை, சென்னை. தாய் சிறை (Parent Prison) மத்திய சிறை திருச்சி - 20
ஆலோசனை மன்ற குழுவினர்
முன் நான் எடுத்துரைத்த வாதங்கள் நாள் 18.09.1993
குழுவின் தலைவர்: ஜஸ்டிஸ் ராமானுஜம் உறுப்பினர்கள் : ஜஸ்டிஸ்கனகராஜ் : ஜஸ்டிஸ் கிருஷ்ண சாமி
இடம்: சுடர் மாளிகை கிரீன் வேஸ் சாலை அடையாறு சென்னை - 600020
சுடர் மளிகையில் ஒரு சொற்ப்போர்

18.9.93 மத்திய சிறை சென்னை
தற்காலிகமாக
தேசிய பாதுகாப்பு சட்டம் 778
மத்திய சிறை திருச்சி. 620020

ஆலோசனை மன்றக் குழுவினரின் முன்

நீதிபதி அவர்களே.

நேற்று மாலை 2 மணிக்கு ஆயுதப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுவரப்பட்டு 1 மணிவரை இடத்துக்கு அலைந்து பாழடைந்த? (Condemned Cell)செல் ஒன்றில் இரவு முழுவதும் கூவம் கொசுத் தொல்லையில் தூக்கமின்றி, காலை எழுந்து, தண்ணிர் தட்டுப்பாட்டில்,புதிதாக வந்த எனக்கு குளிக்கத் தண்ணீர் 2 வாளி வாங்கிக் குளித்து முடிய 12 மணி ஆனது உடனே புறப்பட்டு இந்தச் 'சுடர்' மளிகைக்குள் வந்து நிற்கிறேன்.

நேற்று 3 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பி இரவு 10.45 மணிக்கு சென்னைக்கு கொண்டு வந்து என்னை அரசு நிறுத்தி உள்ளது. கேவலம் அடிமாடு வியபாரி கூட வழியில் கொண்டு செல்லும் கால்நடைகளுக்கும் தண்ணிர் காட்டுகிறார்கள்.

அதைவிட மிருகத்தனமாக ஒரு SPECIAL CLASS PRISONERஐ நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நான் உங்கள் முன் என் வாதத்தை எடுத்து வைக்க நிர்ப்பந்தபடுத்தப்பட்டுள்ளேன்.


மேலும், அரசுக்கு 200க்கும் மேற்பட்ட விளக்கங்களைக் கேட்டு நானும் எனது வழக்கறிஞர்களும் விடுத்த பல நோட்டிஸ்களுக்கும்-அதில் பலவற்றிற்க்கு, நேற்றுமாலை 2மணி வரை சுமார்-

23 Telex Messages
13 Fax Messages
16 Wire Messages
23 Telegraphic Messages
10 Speed Post
12 Special Messages Post

என கடைசி நிமிடம் வரை தந்துள்ளது. பலவற்றிற்கு பதிலே காணவில்லை. இன்றுகூட 12 பக்கம் Fax செய்தியை காலை 11.30க்கு சென்னை சிறையில் தந்துள்ளது.

இவைகளை எல்லாம் படித்து பார்க்க நேரம் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம், இம்மனுக்களில் பல மனுக்கள் நான் சிறைப்பட்ட மறு வாரத்தில் அனுப்பப்பட்டவைகள் ஒரு மாதம் தூங்கிவிட்டு இப்போது படு சுறுசுறுப்பாக ஜெட் வேகத்தில் தன்கடமை உணர்வு பொங்க அரசு இவைகளை அனுப்பி உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் கடைசி வரியில் மனுதாரர் ஆலோசனை மன்றக்குழுவிற்கு அனுப்பும் மனுவிற்கு வலுவூட்டவே (Effective Reprcsentation) சக்தி வாய்ந்த பிரதி வாதங்களுக்கு உதவியாக இச்செய்திகள் வழங்கப்படுவதாக கூறி உள்ளது.

நடுவர் அவர்களே! இது கொக்குக்கு நரி விருந்து வைத்த கதையாக உள்ளது
சகல சௌகரியமும் உள்ள அரசுக்குப் பதில் அளிக்க ஒரு மாதத்திற்கு மேல் அவகாசம் தேவையாம். ஆனால் உரிமைகள் முடக்கப்பட்டு- ஒரு பேப்பருக்குக் கூட விண்ணப்பித்து மறுநாள் தான் பெறவேண்டிய நிலை சிறைவாசியினுடைய நிலை. நான் எதோ அரசு சுகபோக மாளிகையின் அந்தப் புறத்தில் இருப்பதாக அரசு எண்ணிவிட்டது.

ஒரு மாதம் இவர்களுக்குத் தேவையாம் எனக்கு ஒரு மணி நேரம் கூட அவகாசம்மில்லை. இது என்ன நியாயம் Social Justice- சமுக நியாயம் தர்மம் இல்லையா? இருதரப்புக்கும் சம வாய்ப்பளிப்பது தான் சட்டநிதி (legal Justice)- சிறையில் எழுத ஒரு பேப்பர் வேண்டுமானால் ஹெட்வார்டர் ( H.W) மூலம் சொன்னால் அவர் சிப்-வார்டரிடமும் (Chief Warder)பின் Chief Head ward-Asst Jailor-Deputy- Additional Suptd, பின் Superintendent என தொடர்ந்து பின் R.Tக்கு ஆர்டர் கிட்டி கையெழுத்தாகி அதே மாதிரி மேலிருந்து கிழாக ஒரு சுற்று சுற்றி இன்ஷியாலிட்டு என்னிடம் வர ஒருநாள், சில நேரம் 2 நாட்கள் கூட ஆகிவிடும். இந்த தலைமை செயலகத்தில் இருக்கின்ற அதிகாரிகள் சிறை Manual லின் அட்டையை கூடப் பார்த்திருக்கமாட்டர்கள்.

I A S முடித்ததும் அப்படியே டிரையினிங் செல்லும் இவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது சிறைத்துறையிலும்.சிறையினுள்ளும் ஒரு சிறைவாசியாக இருந்தால் தான் இவர்களுக்கு அதன் கஷ்ட நஷ்டங்கள் புரியும்.

தற்போது என் நிலை வழக்காட சாதகமாக உள்ளது. எனக்கு போதுமான அவகாசம் தரப்படவில்லை என்று ஒரே வரியில் ஒரேநாளில் மனுமூலம் விடுதலை பெற இயலும் என்பதை பலவருடம் உயர்நீதி மன்றத்தில் இருந்த உங்களுக்குப் புரியாத ஒன்றல்ல, ஆனாலும் அப்படி சட்டத்தின் ஒட்டைகளைப் பயன் படுத்தி நான் விடுமுறை பெற எண்ணுவது, என் மாதிரி சமுக அந்தஸ்த்தும் பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையான நடத்தையும் கொண்ட என் போன்றவர்க்கு அது ஒரு மோசமான முன் உதாரணமாகிவிடும். புறம் தாக்குதலுக்குச் சமம். அது ஒரு Hyprocrate நயவஞ்சக வழியாகிவிடும். அது என் நேரிய குணத்திற்கு இழுக்காகிவிடும். எனவே பிரச்சனைகளை நேரில் சந்திக்க- டெக்னிக்கல் கிரவுண்ட்ஸில் சந்திக்கவே நான் விரும்புகிறேன். எனக்குப் போதுமான அவகாசம் தர வேண்டுகிறேன்.

நீதிபதி கனகராஜும், நீதிபதி ராமானுஜமும் ஒத்துக்கொண்டனர். ஆனால் கிருஷ்ணசாமி என்ற R.S.S. அனுதாபி அவகாசம் அளிக்க இயலாது நீங்கள் 15.08.93 அன்றே குற்றச்சாட்டுக்களைப் பெற்றுக் கொண்டிர்கள் அப்போது முதல் படிக்காமல் என்ன செய்தீர்கள்? என்றார்.

நல்ல கேள்வி நீதிபதி அவர்களே 15.08.93 அன்று தந்த 300 பக்கக் குற்றச்சாட்டுகள் ஒரு முழுநாவல் அல்ல ஒரே முச்சில் படிக்க சிறையில் பரபரப்பு பகலில், இரவில் நிசப்தம் ஆனால் இரவில் என் 'செல்' லில் விளக்கு இல்லை. அதனால் தனியாக ரிட் போட்டு உள்ளேன் அது பெண்டிங்கில் உள்ளது. இதோ அதன் நகல்

அடுத்து அதை நான் படிக்க எனக்கு நேரத்தை ஒதுக்கி நன்கு படித்த பின்னர் அதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அரசுக்கு பல மனுக்கள். ஒவ்வொரு குற்றச்சாட்டும் படிக்கும் போதும் ஏற்படும் நியாயமான குறைபாடு மற்றும் சந்தேகங்களை கேட்டு மனு அனுப்பினேன்.

உதாரணமாக 09.08.93 அன்று திருவையாற்றில் இரு சாராரும் தட்டிகளை வைத்தனராம்
முஸ்லிம்கள் இந்துக்களை வெட்டுவோம் என்றும், இந்துக்கள் முஸ்லிம்களை வெட்டுவோம் என்றும் தட்டி வைத்தனராம்.
முஸ்லிம்களின் தட்டிக்கு என்னைக் கைது செய்த நீதிபதி (கலெக்டர்) மாவட்ட நீதிபதி, இந்துக்கள் வைத்த தட்டிக்கு யாரைக் கைது செய்தார்?

இது நியாயமான கேள்வி. அதை எழுதி அனுப்பினால் இன்று காலை தான் தகவல் தருகிறார் யாரையும் கைது செய்யவில்லை என்று நான் எப்படி எழுத்து மூலமான பதிலைத் தயாரிப்பது?

மெளனமாகினர்

பின்னர் கேட்டார், 'இப்போதைக்கு உங்கள் வாதம் என்ன?'

கனம் நடுவர் மன்ற நீதிபதி அவைகளே! 70 ஆண்டுகள் திருவையாற்றில் தொழுத மசூதியை இடித்தது அரசு, அதைத் தட்டிக் கேட்டது தவறு என்றால் நான் குற்றவாளியாவதில் தவறில்லை மசூதி இல்லாது முஸ்லிம்களின் வாழ்வு உரிமை இல்லை. இதை வலியுறுத்தியது குற்றமானால் நான் குற்றவளியே!

சிறுபான்மை மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரத்த குரல் தந்தது ஒரு பெரிய குற்றமென்றால்...... அக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வேன்.

என் வழிபாட்டு உரிமை முடக்கப்படும் போது நான் வாதிட்டதும் பயனின்றி வாளேடுக்க வேன்டியது தான் வழி என்றால், அதனால் என்மீது வழக்கென்றால், மீண்டும் மீண்டும் வாளெடுப்பேன்.

அதற்கு தூக்கு தான் தண்டனை என்றால் என் வாழ்வுரிமையை விட, என் வாழ்வு எனக்குப் பெரிய ஒன்றல்ல.

I PLEAD GUILTY

மகாமகத்தன்று 100 பேர் செத்ததற்கு ஏ.ஜி. தான் காரணம் என்று முதலமைச்சர் சொல்ல,
இல்லை ஜெயலலிதா குளிப்பதைக் காணத்தான் வந்ததால் கூட்ட நெரிசல் என்று மாற்றி மாற்றிப் பழி போடப்பட்டது. பலியானவர் 100க்கும் மேல். காயமுற்றதோ ஆயிரக்கணக்கில்- பொது அமைதி கெட்டது. சட்டம் ஒழுங்கு (Law & Order) கெட்டது.

அப்போது இதே கலெக்டர்- இதற்கு காரணமானவர்களை- 100 பேர்களின் சாவுக்குக் காரணமானவர்களை கைது செய்ய அக்கறை காட்டவில்லை. இந்தியத் தேசீயத்தின் மீது இவருக்குப் பாசம் பொங்கி எழவில்லை. ஒரு தவறும் நடை பெறாதபோது என்னை மட்டும் தேசீய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன் படுத்தி கைது செய்யத் துடியாய்த் துடிக்கும் இம்மாதிரி ஜாதிவெறி பிடித்த கலெக்டர்களுக்கு எதிராக போராடுவது இந்த நாட்டில் மரணதண்டனைக்குரிய குற்றமென்றால், மானம் இழந்து வாழும் வாழ்வை விட மரணம் மேலானது-அக்குற்றத்தை பலமுறை செய்வேன் செய்தேன்!

'எங்கள் மார்க்க உரிமைகளுக்கு மரணம் தான் தண்டனை என்றால் எங்கள் மார்க்கத்தை விட வாழ்வு உயர்வான பொருட்டல்ல.'

அச்சுறுத்தலால் எங்கள் ஜீவாதார உரிமைகளை அடக்கி விடலாம் என அரசு அதிகாரிகள் கருதுவார்களேயானால் அச்சுறுத்தலை அவமதிப்பது என் உரிமையாகிவிடும்.

அடக்குமுறையினால் என்னுடைய நியாயமான உரிமைகளை முடக்க நினைத்தால் நான் அதை எதிர்த்து வாழ்வு பூராவும் போராடக் கூட தயங்க மாட்டேன். அதற்கான ஆயுத்தங்களை செய்து வைக்க நான் முனைவது குற்றம் என்றால்-

'I PLEAD GUILTY'

மதச்சார்பற்ற நாட்டை 'இந்து நாடு' ஆக்க அதிகாரிகள் செயல்பட்டால் அதை அடித்து நொறுக்கி நாட்டின் பழம் பெருமையை காப்பேன்...... அது குற்றமென சொல்லப்பட்டால்-

' I PLEAD GUILTY OF THAT' SO CALLED CRIME FOR SEVERAL TIME AND SEVERAL MORE TIME'

ரதயாத்திரையின் பெயரால் ரத்த ஆறு ஒட விட்டவனுக்கே பாதுகாப்பு. ஏனையேர் அடங்கிப் போக வேண்டும் என்றால் ரத்த நிறத்தை மாற்றி ஒட்ட எண்ணுவது தவறில்லை. என் மக்கள் சிந்திய ரத்தத்திற்கு யாரிடம் நான் நியாயப் பழி தீர்ப்பது என்பதை இந்த ஆலோசனை மன்றக்குழு எனக்கு ஆலோசனை சொல்ல முடியுமா?
அல்லது அரசுக்கு அப்பழி செய்தவனை ARREST செய்ய பறிந்துரைக்குமா?
அதைச் செய்ய எந்த அமைப்பு உள்ளது?
கடந்த 45 ஆண்டுகளில் இமயம் முதல் குமரி வரை முஸ்லிம் பெருமக்களில் தாலி இழந்தவர், உற்றம் இழந்தவர்,உறவுகளை இழந்து ரத்த சேற்றிலெ மிதந்தவர் 4.5 லட்சமெனப் பாராளுமன்றப் புள்ளி விவரம் தரப்படுகிறதே!
அதற்கு காரணமான RSS வகையறாக்களை கைது செய்ய வக்கற்ற சட்டமும், அரசும் என்னைப் பொறுத்தமட்டில்..........
மன்னிக்க வேண்டும் நீதிபதிகளே!

உங்கள் நடுவர் மன்றம் உட்பட செருப்புக்குப் சமமானவர்களே......!

இது பாதிக்கப்பட்டவனின் மனப் புண்ணிலிருந்து கசியும் இரத்தம் வடியும் ரணக் காயங்களின் பிரதிபலிப்புகள்

மீண்டும் நாகரீகம் கருதி 4.5 லட்சம் அப்பாவி மக்களைப் பறிக்கொடுத்த இனத்தில் ஒரு சதை துண்டு துடித்ததால் என் இதயம் கக்கிய தவறான வாசகம்.

அதற்கு மாற்று இல்லாததால் அதைச் சொன்னேன் - வருத்தத்துடன் தான். அதனைவிட எளிய பதம் எனக்கே கிட்டவில்லை. என் பாதிப்பின் ஆழம் காட்ட, என் காயத்தின் வேதனைக்கு வேறு வார்த்தை சொல்லத் தெரியவில்லை வருந்திதான் சொன்னேன்.

'மன்னிப்புக்கு இங்கு இடமில்லை'

'பாபர்மசூதி இடிபட்டதும் நான் தான் விலங்கிடப்பட்டேன்!

RSS ஆபிஸ் இடிபட்டதும் நான் தான் கடுங்காவலில் வைக்கப்பட்டேன்
இனி சீன நெடுஞ் சுவர் இடிக்கப்பட்டாலும் இந்த அரசு என்னைத்தான் கைது செய்யும்.

இதன் நச்சு எண்ணத்தை முறியடிக்க மக்களைத் திரட்டி நியாயம் சொல்லி நியாயமான பாரபட்சமற்ற ஒரு அரசை நிர்மாணிக்க என்ணியது தேசீய குற்றமென்றால், அந்த குற்றத்தை நீங்கள் விடுவித்த மறு நாளே மீண்டும் செய்யத்தான் செய்வேன்.

மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவும், மனித நேய அமைப்புகளுக்குச் சிறை வாசமும் தான் அரசின் அன்றாட அணுகு முறையாக உள்ளது வரை என் மாதிரி அமைப்புகளை தீவிரப்படுத்தும் கட்டாயத்தில் தான் நான் மீண்டும் மீண்டும் உள்ளாக்கப்படுவேன்.

25 கோடி இஸ்லாமிய மக்களுக்கு அரசுப் பதவிகளில் 1 சதவிகிதமே இடஒதுக்கிடு உள்ளது. மீதி 24 சதம் கிடைக்கும் வரை ஒரு இயக்கம் நடத்தி போராடுவது இயல்பு, மரபு.

ஒதுக்கப்பட்டு, ஒரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு எம் மக்கள் பிழைப்புரிமை தேடி பிற நாட்டில் வாழ பெற்றத்தாய், உடன்பிறந்த சகோதரர்கள் உள் நாட்டில் வாட நிரந்தரப்பிரிவில் நித்தம் எங்களது வீடுகளில் கண்ணிர் சுமை.

இதனிடையே காவலில்லா வீடுகளில் கடி நாய்கள் போல் சூறையாடும் கூட்டத்திற்கு போலிஸ் துணை நிற்பதை கண்டு பதைபதைத்த உள்ளத்துடன் என்னரும் பெண்டிரை, இளம் சிறாரை நான் காக்க எண்ணியே ஒரு இயக்கம் ஆரம்பித்தேன். அதைக் குற்றம் என்று இந்த அரசு சொன்னால், அத்தகைய குற்றவாளியாக நானிக்கப் பெருமைப்படுகிறேன்.

இந்து மத இழிவிலிருந்து விடுபட்டு சமத்துவ, சாந்தி, சகோதரத்துவம் தேடி இஸ்லாமை இறக்குமதி செய்து எங்களளவில் ஒதுங்கி எங்களுக்குள் ஒன்றுபட்டு யாருக்கும் தீங்கற்று, தீண்டாமை குணமற்று ஒரே குலமாய், ஒரு தாய் மக்களாய், வாழும் சீரிய மனித நேய மார்க்கத்தினை பேணி ஒழுகும் எங்களை, பிளவு பிரிவுகளையே மதக் கோட்பாடாக, பிறப்பு, நிற வேற்றுமை காட்டும் அடிப்படை கொண்ட, பண்டைய திராவிடத்தை பிளந்து கூறு போட்டு பாகுபடுத்தி, பாழ்படுத்தி, பிளவுபடுத்தி, இழிவுபடுத்திய அதே சனாதன பாம்புகளுக்கு நாங்கள் பணிந்து போக, சில அரசு அதிகாரிகள் எங்களை சட்டம் என்ற இரும்பு கரத்தால் ஒடுக்க நினைத்தாலும், அடக்க எண்ணினாலும் அதை எதிர்த்துப் போராடி எங்கள் மனதுக்கேற்ற மார்க்கத்துடன், மானத்துடன், மாண்புகளுடன், மரியாதைகளுடன், மனித நேயத்துடன் வாழ நினைக்கும் எங்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முறியடிப்பது, தடுத்து நிறுத்துவது, தட்டிக் கேட்பது தவறு என்றும் தண்டணைக்குரிய பாவம் என்றும் கருதினால் அந்தப் பாவியாக நான் இருப்பதில் தவறில்லை.

' நான் மட்டுமே வாழவேண்டும் என்று கேட்கவில்லை. நாங்களும் வாழ வேண்டுமென்று இயங்கியது தவறு என்றால், தண்டணை எதுவானாலும் அதற்கு அஞ்சிடப் போவதில்லை.'

எங்களை ஒரு தேசிய இனமாக கருதாத எந்த ஒரு அரசையும், எந்த ஒரு சட்டத்தையும், எந்தக் கோர்ட்டையும், எந்த ராணுவத்தையும் எதிர் கொள்வது எமது உயிருக்கு ஆபத்து என்றாலும் கூட எதிர்கொள்வோம்.

' கள்ளிச் செடியில் மலராய் இருப்பதைவிட ரோஜாச்செடியில் முள்ளாய் இருப்பது மேலானது.'
' கோழையின் தலைக்கிரீடமாய் இருப்பதைவிட வீரனின் கால் செருப்பாய் இருப்பது மேலனது.'

"A DEAD LION IS BETTER THAN LIVING DOG"

ஆதிக்க சக்திகள், அதிகார வர்க்கங்கள் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பாளர்களிடமே குவிந்துள்ளதால் மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் மாடுகளை விடக் கேவலமாய் நடத்தப்படுவதைக் கண்டு மனம் குமுறி மாற்று வழி கானாது, மன்றாடிப் போராடாது நான் மாண்டு விட்டால் நாளைய என் வாரிசுகள் என்னை மன்னிக்கமாட்டார்கள்.

உங்கள் மன்னிப்பை விட உருவாகப் போகும் வீர சமுகத்தின் மன்னிப்பே எனக்குப் பெரிய ஒன்று. இந்த நீதி மன்றம் என்னைத் தண்டிக்கலாம்.

ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும்!

வருங்காலம் வஞ்சம் எடுக்கும் என் சார்பாக!

இன்றைய சிறை வாசங்கள் நாளைய தலைமுறையின் சிம்மாசனங்கள்.....

சுதந்திர இந்தியாவிலுள்ள ஜாதிக் கலவரங்களுக்கு காரணம் இஸ்லாமா? இந்து மதத்தின் வர்ணா சக்திகளா?

மதக்கலவரங்கள் மட்டுமே 70 ஆயிரம். 40 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் இது நடைப்பெற காரணம் RSS அமைப்பு என்பது அரசின் புள்ளி விவரக் கணக்கு.

விழுப்புரம்,மண்டைக்காடு,ஆம்பூர்,தம்மம்பட்டி,ஆத்தூர்,சேலம்,வாணியம்பாடி,கோவை,தக்கணிக்கோட்டை, களத்தூர்,திண்டுக்கல், தேங்காய்ப்பட்டிணம், குளச்சல், காயல்பட்டினம், கடைய நல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, அருப்புக்கோட்டை, செஞ்சி, உளுந்துர்பேட்டை, நாகூர் என்று தொடர் கலவரங்களுக்கு காரணம் RSS

ஒரு RSS காரனையாவது, என்றாவது இம்மாதிரி தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனரா? மாறாக அடிபட்ட முஸ்லிம்களையே கைது செய்து அபலைப் பெண்களாக என் மக்களை அச்சுறுத்துவது அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வாடிக்கையாய் போனது.

கடலங்குடி, ஐயம்பேட்டை, திருவையாறு போன்ற இடங்களில் மசூதி கட்டத் தடை. அதே நேரம் கேவலம் குரங்கு இன அனுமனுக்கு கூட கோவில் கட்ட அனுமதியின்றியே அரசு பாதுகாப்பு இதை ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்.

அதை எதிர்த்தால் தேசத்திற்கே ஆபத்து வங்துவிடுமாம். என்ன கேலிக்கூத்து இது? இதற்கு ஒரு 'குடிமகன்' கட்டுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அக்கட்டுப்பாடுகளை கடுங்காவல் சிறைகளை கறுப்பு சட்டங்களை அடக்கு முறைகளை, ஒடுக்குமுறைகளை ஒரவஞ்சனைப் போக்குகளை பாரபட்சமான நடவடிக்கைகளை, எதிர்த்துப் போராடாது இருப்பது மானம் கெட்டவர்கள், சுரணையற்றவர்கள் என்ற அவப் பெயரை எங்கள் வாரிசுகள் எங்களுக்குச் சுட்டி விடுமுன் அவைகளை எதிர்த்துப் போராடுவது என் ஜீவாதார உரிமைகளுக்கு என் உயிரினும் மேலான மார்க்கத்திற்கு நான் செலுத்தும் உயிர்க் காணிக்கை.

'வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது என் இனமாக இருக்கட்டும்.'

என சத்திய சபதமேற்று சன்மார்க்க வழி தவறாது வாழும் ஒருவன் நான் எனவே இதுபோல் பல நீதி மன்றங்களின் முன் நிறுத்தப்பட்டவன் - நின்றிருப்பவன் - இனியும் நிறுத்தப்பட போபவன்... எனவே எள் முனை அளவு கூட நான் விட்டுக் கொடுப்பதற்கு இல்லை.


இது ஒரு வழக்கு என்ற கோணத்தில் இதைக்கானாது, ஒரு தேசிய இனத்தின் வாழ்வுரிமையாக இருக்கிறது எனக்கருதி எனக்கு மீண்டும் வாய்பினைத்தந்து என் வாதங்களைக் காரணங்களுடன் Grounds of detention உடன் ஒன்றிப்போன மறுப்புகளுக்கு மறுவாய்ப்புத் தரவேண்டும்.

(இடையே குறுக்கிட்ட கிருஷ்ணசாமி நீதிபதி)

' நீங்கள் Grounds of detention க்குள் பேசாது வேறு ஏதோ தேவையில்லாதவை பேசுகிறீர்கள்' என்றார்

உடனே இடைமறித்த நான் -

உங்கள் வழக்கிற்குத் தேவையற்றதாக இருக்கலாம், ஆனால் வரலாற்றிற்கு என் இன மக்களின் வருங்கால வாரிசுகளுக்கு இவை தேவையான ஒன்று, எப்படிப்பட்ட சூழ் நிலையில் எப்படிப்பட்ட பாரபட்சமான அதிகார துஷ்பிரயோகத்தில் நான் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளேன் என்பதை என் குழந்தைகள் வளரும் போது கண்டு கொள்ள வேண்டும்.


' கொள்ளையடித்தேனா-

கொலைசெய்தேனா-

கற்பழித்தேனா-

களவாடினேனா-


எதற்காக 125வது முறையாக நான் சிறைப்படுத்தப்பட்டுள்ளேன் என்பதை என் விளக்கங்களுடன் நீங்கள் கேட்டே ஆக வேண்டும் அவற்றைப் பதிவு செய்தாக வேண்டும். என் முழு உரை கேட்கத்தான் நீங்களே ஒளிய முட்டுக்கட்டை போடுவத்ற்கு அல்ல. அப்படி முட்டுக்கட்டை போடுவேன் என்று இந்த நடுவர் மன்றம் கூறுமானால் நான் வெளி நடப்பு செய்ய வேண்டி வரும்'

தலைவர் நீதிபதி ராமானுஜம் உடனே-

NO..NO.. PROCEED

என் சொல்ல மீண்டும் தொடர்கிறேன்.

' எனக்கு தரப்பட்ட அவகாசம் குறைவு அதுமட்டுமல்ல, உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, இரவுப் பயணம் களைப்பு இவற்றினூடே முழுமையாக என்னால் எதையும் எடுத்து வைக்க இயலவில்லை. எனவே ஒன்று மறு தேதிக்கு ஒத்திப் போடுங்கள் அதுவரை சென்னைத் தலை நகர் சிறையிலிருக்க அனுமதி தாருங்கள்.

அத்துடன் 2 Interview என் மகளுக்கு அனுமதி தாருங்கள் அவள் மூலம் எனது வழக்கறிஞரிடம் உள்ள பல ஆதாரங்களை அரசு தபால்களை பெற வேண்டும், அவற்றை படிக்க Cell யில் விளக்கு வசதி, எழுத பேப்பர், அதற்குரிய சாதனங்கள்.....

அதற்கு அதிகபட்ச நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நீங்கள் என்னை சிறைப்படுத்திய 50 நாட்களுக்குள் அரசுக்கு உங்கள் தீர்ப்பை தரவேண்டும். எனவே குறைந்த பட்சத்தில் தந்தால் சுருக்கமாகவாவது என் பதிலை தயாரிக்க எனக்கு முடியும்'.

' சரி.. 22.09.93ந் தேதிக்கு சரிப்படுமா?- என்றனர்.

கனம் நீதிபதி அவர்களே

5 நாள் இருப்பது போல் தோற்றமே தவிர வேறில்லை. இன்று சனிக்கிழமை மாலை 6 மணி ஆகிவிட்டது.

இனி சிறைக்குச் சென்று Admission லாக்கப் என 9 மணி ஆகிவிடும். இருக்கும் களைப்பில் உறக்கம் தான் வரும்.

நாளை ஞாயிறு சிறை விடுமுறை நேர்காணல் கிடையாது.

20ந் தேதி நீங்கள் என் மகளை வரவழைக்கத் தந்தி அனுப்பி வந்தபின் மாலை சொல்லியனுப்பினால், மறு நாள் 21.09.93 மாலைதான் அவள் கொண்டு வருவனவற்றை வைத்து இரவு முழுக்க எழுதி 22.09.93 காலை உங்களிடம் சமர்பிக்க முடியும்- எனக்கு படிக்க 8 மணி நேரம் எழுத 4 மணி நேரம் தூங்க 12 மணி நேரங்களே ஒதுக்கி உள்ளீர்கள் ஆனால் மேலோட்டமாக 5 நாள் கணக்கில் வரும். அது சிறைவாசிக்கு சிலமணித்துளிகளே!.

' அதற்கு மேல் தர இயலாது பாபா' - என்றனர்.

' சரி என்னால் முடிந்த அளவுக்கு நான் முழுமையான பதிலை எழுதி வருகிறேன்'.


கைகுலுக்கும் போது கனகராஜ் கண்கள் கலங்க

நீதிபதி ராமானுஜம் கனிவுடன் நோக்க

கிருஷ்ணசாமி கடுப்புடன் செல்ல..............


7 மணிக்கு விடை பெற்று சிறைக்கு வந்து - அதன்பின் மறு நாள்தான் பைல்களைப்படித்து பதிலை தயாரித்துக் கொண்டிருந்தேன். ஒரு பக்கம் கொண்ட எழுத்து மூலமான பதிலை- 22.09.93 அன்று தயாரிதேன்.

அதன் நகலை எடுத்து அனுப்பி உள்ளேம். 23.09.93 அன்று திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டேன்.
From
Erainesan

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...