அதிசயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிசயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 26, 2012

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர்(நேற்று ஆணி அதிகம் இணையம் பக்கமே வர முடியல இதனால் இன்று எழுதுகிறேன்). அந்த வசதியின் படி கூகுள் பிளசில் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். எனக்கு தெரிந்து எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.


கூகுள் பிளசில் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.


அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை டைப் செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.

வலது புறத்தில் உள்ள T என்ற லிங்கை கிளிக் செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்டர் மார்க் சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த வசதி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

பரிணாமத்தை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..


பரிணாமவியலை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

a) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா?

b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா?


உலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி? என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவர் முன்வைத்த கோட்பாடும் தான் பொறுப்பு.

அப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா? என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான்.

என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்று கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர்.

ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கோட்பாடு இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது.

குரங்கினத்திற்கும் (APE) ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும் (நீக்ரோ), ஆஸ்திரேலியர்களையும் வைத்த அவரது செயல்,

ஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர்,
பரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள்,
அதனால் அவர்களே மேம்பட்டவர்கள்

என்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of "Evolution Theory") பார்க்கப்போகிறோம்.


டார்வின் இன வெறியரா ?

என்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.

உதாரணத்துக்கு, 1830 களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும் விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.

இது குறித்து அவர் எழுதும் போது:

"Those who look tenderly at the slave-owner, and with a cold heart at the slave, never seem to put themselves into the position of the latter;—what a cheerless prospect, with not even a hope of change! picture to yourself the chance, ever hanging over you, of your wife and your little children—those objects which nature urges even the slave to call his own—being torn from you and sold like beasts to the first bidder! And these deeds are done and palliated by men, who profess to love their neighbours as themselves, who believe in God, and pray that his Will be done on earth! It makes one’s blood boil, yet heart tremble, to think that we Englishmen and our American descendants, with their boastful cry of liberty, have been and are so guilty: but it is a consolation to reflect, that we at least have made a greater sacrifice, than ever made by any nation, to expiate our sin" --- Charles Darwin wrote in 1845 journal, "Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy", p. 499-500.


ஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.


அவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா?

ஆம். உண்மைதான்.

நிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).

முதலில் மற்ற இனத்தவரை எப்படி அணுகினார் என்று பார்ப்போம்.

தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.

"At some future period not very distant as measured by centuries, the civilised races of man will almost certainly exterminate and replace the savage races throughout the world. At the same time the anthropomorphous apes…will no doubt be exterminated. The break between man and his nearest Allies will then be wider, for it will intervene between man in a more civilised state, as we may hope, even than the Caucasian, and some ape as low as the baboon, instead of as now between the Negro or Australian and the gorilla" --- Charles Darwin in his book "The Descent of Man", p-201


மேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,

"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்"

என்று கூறுகிறார்.

அவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை.



அதே பத்தியின் கடைசியில், அவர், கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலியர்களையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இவர்கள் "Less Evolved" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான்.

ஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை

அப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கூறினார்.

"Their mental characteristics are likewise very distinct; chiefly as it would appear in their emotional, but partly in their intellectual faculties" --- Charles Darwin in his Book, Descent of Man, Chapter Seven: On the Races of Man, p.343


இப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே?, அதுபோல டார்வினுடைய கருத்துப்படி "less Evolved" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே?

டார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...

டார்வினுடைய, "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற கருத்தை தான் செயல் படுத்த நினைத்தாரோ ஹிட்லர்?

எது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் "Struggle for Survival" என்ற கருத்தை தான்.

ஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை "EVOLUTION" (ஜெர்மனியில் "Entwicklung") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் "Survival of the Fittest" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.

"Those who want to live, let them fight, and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live" --- Adolf Hitler, at his third public speech after taking power.

வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power


இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார்.

உதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:

"If Nature does not wish that weaker individuals should mate with the stronger, she wishes even less that a superior race should intermingle with an inferior one; because in such a case all her efforts, throughout hundreds of thousands of years, to establish an evolutionary higher stage of being, may thus be rendered futile" ---Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.

இயற்கை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.


ஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக் கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய SUPERIOR இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய "Origin of Species" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, " The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life".


பின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது.

ஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.

“The leader of Germany is an evolutionist not only in theory, but, as millions know to their cost, in the rigor of its practice. For him, the 'national front' of Europe is also the 'evolutionary front” --- Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230.

"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230.


பரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.

இதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமவியலை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,

ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா?

ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?


இது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

அப்படியானால், இனிமேலும் தயவுகூர்ந்து "உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...

நமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, "இல்லை மக்கள் அனைவரும் சமம்" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் "மனிதர்களெல்லாம் சமமல்ல" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்?,

என்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13


நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


My Sincere Thanks To:
1. British Broadcasting Corporation (BBC)
2. New Scientist Website.

References:
1. The Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life --- Charles Darwin, 1859.
2. The Descent of Man --- Charles Darwin, 1971.
3. Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy --- Charles Darwin, 1845.
4. Was Charles Darwin a Racist? --- BBC, dated 13th February 2009.
5. Hatred of slavery drove Darwin to emancipate all life --- New Scientist, dated 29th January 2009.
6. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 --- Adolf Hitler
7. Scientific Racism - Wikipedia.
8. Evolution and Ethics --- Sir Arthur Keith, 1947.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

குளோனிங் நாய்

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உலகின் முதல் `குளோனிங்' நாய்க் குட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதற்கு `ரப்பி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் 4 நாய்க் குட்டிகளும் இதனுடன் பிறந்துள்ளன.

ரப்பியும் மற்ற நாய்க்குட்டிகளும் புற ஊதா வெளிச்சத்தில் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. இதற்கு அவற்றின் தோலிலும், உரோமங்களிலும் இருக்கும் ஒரு விதமான புரோட்டீன் தான் காரணம்.

மனிதனுக்கு உண்டாகும் பல நோய்களுக்கான மருந்து, அவற்றின் தன்மை போன்றவற்றை நாய்களின் மூலம் சோதனை செய்யும் வழக்கம் ஏற்கனவே இருந்து வருகிறது. புற்றுநோய் ஆராய்ச்சியில் இந்தப் புதிய `குளோனிங்' வரவுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாய்களின் கருமுட்டையை எடுத்து அதில் ஒரு வைரஸ்ஸை ஊடுருவச் செய்தார்கள். அந்த வைரஸ், ஒளிரக் கூடிய ஒரு மரபணுவை கருமுட்டையின் உட்கருவில் இணைத்தது. இந்த உட்கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்தார்கள். மற்றொரு நாயின் கருமுட்டையில் இருக்கும் உட்கருவை நீக்கிய பின் அதனுள் தனியே பிரித்து எடுக்கப்பட்ட உட்கருவை உட் செலுத்தினார்கள். பின் இந்தக் கரு முட்டையையும் வெளியே எடுத்து ஒரு வாரகாலத்திற்கு சோதனைச் சாலையில் வைத்திருந்தார்கள். அதற்குப் பின்னால் இந்தக் கருமுட்டையை வேறொரு நாயின் கருப்பையில் விதைத்தார்கள்.

இந்த முறையில் சுமார் 344 கருமுட்டைகள் 20 நாய்களின் கருப்பைகளில் விதைக்கப்பட்டன. பெரும்பாலான கருக்கள் வளராமல் போனாலும் 7 கருக்கள் மட்டும் உருவாகின. அவற்றில் ஒரு கரு முழுவதும் வளர்வதற்கு உள்ளாகவே அழிந்துவிட்டது. மற்றொரு கரு வளர்ந்து நாய்க்குட்டியாகப் பிறந்து சில வாரங்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனது. கடைசியில் 5 நாய்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. 5 நாய்களும் தற்போது ஆரோக்கியமாக துள்ளிக் குதித்து விளையாடி காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகின்றன.

எலி போன்ற மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருப்பது போலவே நாய்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது.

தென்கொரியாவைச் சேர்ந்த இதே ஆராய்ச்சியாளர்கள் தான் `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை கடந்த 2005-ம் வருடம் உருவாக்கி சாதனை படைத்தார்கள். அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார்கள்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

சின்ன பையனுக்கு இத்தனை பலமா?

எங்க குடும்ப ஆல்பம்




Anbarasan Sankaran

நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சொமாலியாவிலோ , ஆப்ரிகா விலோ எடுக்கப்பட்டது இல்லை .நம் தமிழ் நாட்டில் (அப்போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது .முல்லை பெரியார் அணை கட்டபடுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது .அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்க...ு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர் .ஒப்பந்த அடிப்படையில் .பர்மா ,மலேசியா ,மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட்டனர் .இன்னும் நம் மக்கள் அங்கு வாழ்வது குறிப்படத்தக்கது .

இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான் பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.
— with Ram Prasath,

வியாழன், டிசம்பர் 08, 2011

70 அடி செங்குத்து சுவரில் பிடிமானம் இல்லாமல் ஏறிய பெண்!




சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஒரு பெண் விபரீதமான செய்கையில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கிழக்கு சீனாவில் காணப்படும் 70 உயரமான கோட்டை சுவர் காணப்படுகிறது. இதற்கு நாளாந்தம் பல நூற்றுக்கணக்காண உல்லாசப்பயணிகள் செல்வது வழக்கம். இதற்காக உள்நுழைவு கட்டணமாக £2.50 அறவிடப்படுகிறது. எனவே இதைனை செலுத்த முடியாத ஒரு பெண்ணே அங்கு உள்நுழைவதற்காக 70 அடி உயரமான சுவரில் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் ஏறி அசத்தியுள்ளார். நான்ஜிங் என்ற பெண்ணெ இவ்வாறு விபரீத விளையாட்டில் ஈடுபட்டவராவார். இவர் செங்குத்தாக இருக்கும் சுவரில் ஏறுவதை பார்த்து உல்லாசப்பயணிகள் அனைவரும் ஓரிடத்தில் கூடி வேடிக்கைபார்க்க தொடங்கியுள்ளார்கள். இவர் சிறுவயதில் இருந்து இவ்வாறு செங்குத்தான இடங்களில் ஏறுபவர் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இவர் சீனாவின் சிலந்திப்பெண் எனவும் அழைக்கப்படுகிறாராம்.
thanks to puthuyavulagam

புதன், டிசம்பர் 07, 2011

BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்

அறிவியல்
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…
அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.


நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தானது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.அல்குர்ஆன் 56:75, 76

(ஒளி இழந்து) விழுந்து மறையும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!” அல்குர்ஆன் 53:1

“”நிச்சயமாக நாம் தாழ்வாக உள்ள வானத்தைச் சுடரிடும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்துள்ளோம்” என்று 37:6ல் அல்லாஹ் கூறுகிறான்.

இரவில் வானத்தைப் பார்த்தால் கோடானு கோடி நட்சத்திரங்கள் நம்மை பார்த்து கண்சிமிட்டுகின்றன. இதற்குக் காரணம் நட்சத்திரங்களில் ஏற்படும் அணுப் பிளவின் காரணமாக வெப்பமும் ஒளியும் உண் டாகிறது. நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகும். நமது சூரியனை விட கோடானு கோடி மடங்கு மிகப் பிரமாண்டமான நட்சத் திரங்கள் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி அதிகரிக்கும்; அத்துடன் அதன் உள் ஈர்ப்பு விசை ஆற்றல் பன்மடங்காக பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அழிந்து மறையும் நட்சத்திரம் கருந்துளையாக மாறுகிறது.

கருந்துளை எனும் மர்மக் குகை:


20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகள் மட்டுமே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருந்துளைகள், மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இதற்கு கன அளவோ மேற் பரப்போ கிடையாது. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.

கருந்துளையின் எல்லைக்குச் செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. இவற்றின் ஈர்ப்பு ஆற்றலைக் கணக்கிட ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

பொதுவாக நமது பூமிக்கும் புவியீர்ப்பு ஆற்றல் உள்ளது. எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். இந்த புவியீர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டுமாயின் ஒரு வினாடிக்கு 11 கிலோ மீட்டர் வேகம் வேண்டும். (மணிக்கு 40,000வது-24000 மைல்) பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் செயற்கை கோள் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11வது வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகம்தான். ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் (3,00000km) செல்கிறது. நமது கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் 1,86000 மைல்/ வினாடியில் உள்ளது. எனவே கருந்துளைக்குள் செல்லும் ஒளி மீண்டு வருவதில்லை. கருந்துளை எனும் குகைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது. அங்கு என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் புரியாத புதிர். நட்சத்திரங்கள் மறைந்து அழிந்து தோன்றும் கருந்துளையின் மீது அல்லாஹ் மகத்தான சத்தியம் செய்வதிலிருந்து இதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம்.

கடந்த 2008 மார்ச் 18ல், நமது பிரபஞ்சத்திலேயே மிகப் பிரமாண்டமான “”கலாக்ஸி கிளாசிக்” (Galaxy Classic)) எனும் கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப் பிரமாண்டமானது. நமது சூரியன் விட்டம் 1,39,0000 வது. இதைவிட 1800 கோடி மடங்கு மிகப் பெரியது. நமது பூமியில் இருந்து 3.5 பில்லியன் அதாவது 350 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு வினாடியில் 1,86000 மைல் தூரம் செல்லும் இந்த வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அதுவே ஒரு ஒளி ஆண்டு தூரம். சொற்ப அறிவு கொடுக்கப்பட்ட நமக்கு இதன் பிரமாண்டம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்று.

கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாது என்றாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon)அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.

வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் ஏராளமான கருந்துளை உள்ளன. மற்ற நட்சத்திரங்கள், அல்லாஹ் கூறும் (கியாமத் நாள்) இறுதி நாளில் ஒளி இழந்து உதிரும். நமது சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே. அல்லாஹ் அறிந்தவன்!

“நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது, மேலும் வானம் பிளக்கப்படும் போது, அன்றியும் மலைகள் (தூசுகளைப் போல்) பறக்கப்படும்போது” 77:8,9

(அந்நாளில்) சந்திரன் ஒளி மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும். அல்குர்ஆன் 75:4,9
Share · November 20
Avulia Muhammadh

விளம்பர மோகமும் தமிழ் கலாச்சாரமும் funny video

செவ்வாய், டிசம்பர் 06, 2011

பெண்களும் கலை கலாசாரமும் zakir naik

This is what happened to a Muslim to pray in America

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?3

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது எனக் கூறுவோர் அதற்குச் சான்றாக,

ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம்; பெண்கள் அவ்வாறு மணந்து கொள்ளக் கூடாது;
மனைவியைப் பிடிக்காத கணவன் தலாக்' கூறி அவளை விலக்கி விடலாம்;
தலாக்' கூறும் உரிமை பெண்களுக்கு இல்லை;
விவாகரத்துச் செய்யப்படும் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க இஸ்லாம் மறுக்கிறது;
ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் என இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் கூறுகிறது;
பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆண்களை விட அதிகப்படியான உடைகளை அணிய வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது;
இரண்டு பெண்கள் சாட்சியம் கூறுவது ஒரு ஆணுடைய சாட்சியத்துக்குச் சமமானது என்று இஸ்லாம் கூறுகிறது;
அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் தாராளமாக அனுமதி வழங்கியுள்ளது

என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச் சாட்டுக்கள் ஏற்கக் கூடியவை தாமா? என்பதைத் தனித்தனியாக ஆய்வு செய்வதற்கு முன்னால் இக்குற்றச்சாட்டுக்கள் எழுவதற்கான காரணம் என்ன என்பதையும் அக்காரணம் சரியானது தானா என்பதையும் ஆராய வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமா? 'ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற தத்துவத்திற்கு எதிராக இச்சட்டங்கள் அமைந்துள்ளன என்று கருதுவதே இந்தக் குற்றச் சாட்டுக்களுக்கு அடிப்படைக் காரணமாகும். சில விஷயங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான சட்டங்கள் இருப்பது இதனால் தான் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே இரு பாலருக்கும் சட்டங்களில் எந்த விதமான வித்தியாசமும் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கின்றனர்.

முதலில் இந்தத் தத்துவம் அறிவுக்கு ஏற்புடையது தானா? என்பதை ஆராய்வோம்.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற சித்தாந்தத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வாதம் கேட்க இனிமையாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

ஆண் வேறு! பெண் வேறு! இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் இயல்புகளும், குண நலன்களும் வேறு வேறு!

இப்படி வேறுபட்டிருப்பதால் தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்க முடிகின்றது.

எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் உண்மையிலேயே சம நிலையில் இருக்கின்றார்களோ அந்த அம்சங்களில் அவ்விருவரையும் இஸ்லாம் சமமாகவே கருதுகிறது. அந்த அம்சங்களில் ஒரே விதமான சட்டங்களையே இருவருக்கும் இஸ்லாம் விதிக்கின்றது.

எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் சமமாக இல்லையோ, இருக்க முடியாதோ அந்த அம்சங்களில் இருவரையும் இஸ்லாம் சமமாகப் பாவிப்பதில்லை.

பெண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி ஆண்களுக்கு மட்டும் இருந்தால் அந்த வகையில் ஆண்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி பெண்களிடம் இருந்தால் அந்த வகையில் பெண்கள் சிறந்து விடுகிறார்கள். இப்படித் தான் இஸ்லாம் கருதுகிறது.

ஆண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்குச் சில சலுகைகளையும், கடமைகளையும் ஏற்படுத்திய இஸ்லாம், பெண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்கு வேறு விதமான கடமைகளையும், சலுகைகளையும் வழங்குகின்றது.

இரு பாலரும் எல்லா வகையிலும் சமமாக இல்லை என்பது சராசரி மனிதனுக்கும் பளிச்சென்று தெரிகின்றது. எனவே இரு பாலரும் முழுக்க முழுக்கச் சமமானவர்கள் என்று கூறுவது தவறாகும். போலித் தனமான இந்த வாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுக்கின்றது.

ஒரு பெண்ணுக்கு 15 வயதில் ஒரு புதல்வனும் ஒரு வயதிற்குட்பட்ட ஒரு புதல்வனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இரு புதல்வர்களும் அவளது பிள்ளைகள் தாம். இரு பிள்ளைகளையும் குறிப்பிட்ட காலம் வரை அவள் தான் கருவறையில் சுமந்தாள். அவளது பிள்ளைகள் என்ற முறையில் இருவருமே அவளுக்குச் சமமானவர்கள் தாம்.

அதே நேரத்தில் மூத்த புதல்வனுக்கு அந்தப் பெண் கடினமான உணவுகளை வழங்குகிறாள். அவன் விரும்பும் நல்ல உணவுகளை எல்லாம் கொடுக்க மறுப்பதில்லை. ஒரு வயதுக்கு உட்பட்ட மகனுக்கும் அதே உணவை வழங்க மாட்டாள். அப்படி வழங்கினால் அவள் தாயாக இருக்கத் தகுதியற்றவள் ஆகிறாள். மாறாக எளிதில் ஜீரணமாகும் உணவை மட்டுமே அவனுக்கு வழங்குகிறாள். மூத்தவனுக்கு வழங்கிய அதே உணவை இளையவனுக்கு வழங்காததால் அவள் பாரபட்சமாக நடந்து விட்டாள் என்று எவரும் கூற மாட்டார்கள்.

இந்தச் சமயத்தில் இளையவனை விட மூத்தவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.

இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். ஒரு வயதுக்குட்பட்ட பையனுக்கும், பதினைந்து வயதுப் பையனுக்கும் ஒரே நேரத்தில் பசிக்கிறது. சிறியவனின் பசியைத் தீர்ப்பதற்கே அந்தத் தாய் முதலிடம் தருவாள். அதன் பின்பே மூத்தவனைக் கவனிப்பாள்.

இந்தச் சமயத்தில் மூத்தவனை விட இளையவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.

இரண்டு புதல்வர்களின் ஜீரண சக்தியிலும், பசியைத் தாங்கும் சக்தியிலும் வித்தியாசம் இருப்பதால் அந்தத் தாய் இருவரையும் வித்தியாசமாக நடத்துவதை நமது அறிவு ஏற்றுக் கொள்கிறது.

இரண்டு புதல்வர்களுக்கும் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசத்தை விட ஆணுக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. ஜீரண சக்தியில் உள்ள வித்தியாசம், நாளடைவில் மறைந்து விடும் தன்மை வாய்ந்தது. ஆண், பெண் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசங்கள் நிரந்தரமானவை; காலப் போக்கில் மாறாதவை.

எனவே, நிரந்தரமான வித்தியாசங்களின் அடிப்படையில் சில விஷயங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித் தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது பாரபட்சமாகாது.
ஒரு மனிதனுக்கு அவனது தாயும், தந்தையும் சமமானவர்களா என்றால் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

'நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாயாருக்கு' என்றார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்டார். அப்போதும் 'தாயாருக்கு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். 'அடுத்தது யார்?' என்று அவர் மீண்டும் கேட்ட போது 'தந்தைக்கு' என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5971.

தாயாருக்கு அடுத்த இடத்தில் கூட தந்தை இல்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் சிறப்பை உயர்த்திக் கூறுகிறார்கள்.

எல்லா வகையிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஆண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே இஸ்லாம் அவர்களை உயர்த்துகிறது. பெண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே அவர்களை உயர்த்துகிறது.

எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களுமல்லர்.
எல்லா வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களுமல்லர்.
எல்லா வகையிலும் இருவரும் சமமானவர்களும் அல்லர்.


காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருக்கிறார் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. இது தான் அறிவுப்பூர்வமான நிலைப்பாடு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இஸ்லாத்தில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனக் கூறுவோரின் முதலாவது குற்றச் சாட்டைக் காண்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இஸ்லாத்தில் பெண்களின் நிலை 1
http://www.youtube.com/watch?v=hYJM3FFhiYY

இஸ்லாத்தில் பெண்களின் நிலை 2
http://www.youtube.com/watch?v=-37hSmm-WYc

திங்கள், டிசம்பர் 05, 2011

பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?
இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!
அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?

இதோ பாருங்கள்;

http://www.youtube.com/watch?v=0o5CqTX70aw&feature=player_detailpage


அனுப்பியது; இறைநேசன்



ஞாயிறு, டிசம்பர் 04, 2011

இப்படியும் ஒரு முஸ்லிம் தம்பதிகள்..!

இந்தியா - தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.
YARLMUSLIM
By adiraithunder

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?2

நூலாசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.



பாதுகாப்பு
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (திருக்குர்ஆன் 24:4)
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (திருக்குர்ஆன் 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 24:23)

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். (திருக்குர்ஆன் 65:1)

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:129)

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:2)

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9)

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

பண்பாடு
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 24:31)
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 33:59)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு. (திருக்குர்ஆன் 24:26)

திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 24:60)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (திருக்குர்ஆன் 33:32)

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 58:2)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (திருக்குர்ஆன் 24:27)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பெண்கள் வெளியே செல்லும் ஒழுங்கு

பெண் குழந்தைளின் பருவ வயதில்

சனி, டிசம்பர் 03, 2011

பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது

Labbai Karaikal

அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;
■தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;
■தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;
■இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
■மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;
■மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;
■மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)
பெண்கள் ஏன் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும்?

பெண்கள் பர்தா அணிவதற்கான காரணத்தையும் அல்லாஹ்வே விளக்குகின்றான்.

■நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக;
■அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.
■மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குஆன் 33:59)
பெண்கள் பர்தா அணிவதனால் ஏற்படும் நன்மைகள்:

மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் பர்தா அணிவதன் பயன்களாக கூறுகிறான்: -

1.பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
2.தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள்.
இவ்விரண்டு நன்மைகளுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்தமானதாகும்.

நன்கு சம அழகுள்ள இரு இரட்டைபிறவி சகோதரிகள் கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது.

பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது.
— with Moytheen Mohammed.
Like · · Share · 7 hours ago
Related Posts Plugin for WordPress, Blogger...