வெள்ளி, மார்ச் 27, 2015

சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்களா???


அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!! அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சூனியம் பற்றிய விடயம் இன்று தமிழ் உலகில் மிகவும் பிரபல்யமாக பேசப் படுகிறது என்பதை அனைவரும் அறிந்ததே!!

அதன் அடிப்படையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநிலத் தலைவர் மௌலவி பீ ஜே அவர்கள் சூனியம் இல்லை என்ற தன்னுடைய வாதத்தை நிலை நிறுத்த 'சூனியத்தை நம்புபவன் சுவனம் நுழைய மாட்டான்' என்ற வாசகத்தில் முஸ்னத் அஹ்மத் இல் வரும் 26212 ஆவது ஹதீஸ் ஐ மிகப் பெரும் ஆதாரமாக முன் வைக்கிறார்

அவர் ரமலானில் சூனியம் பற்றி 10 நாட்கள் பேசிய தொடர் உரையில் முதலாவது நாளின் உரையில் அந்த வாதத்தை நீங்கள் காணலாம்.( அது அவருடைய இணையத்தளமான ஆன்லைன் பீ ஜே வில் எழுத்து மூலம் தொகுக்கப் பட்டுள்ளது, அதன் லிங்க் இதோ http://www.onlinepj.com/…/nambikai_thota…/sooniyam_10th_day/)

இதற்கான மறுப்பை நான் என்னுடைய முன்னைய பதிவில் வெளியிட்டேன். அதன் லிங்க் (https://www.facebook.com/268181180024901/photos/a.268317480011271.1073741828.268181180024901/349210608588624/?type=1&தியேட்டர்)

மேலும் மௌலவி பீ ஜே அவர்கள் அடுத்து மிகப் பெரும் ஆதாரமாக முன் வைப்பது 'சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்' என்ற குர் ஆன் வசனத்தை ஆதாரமாக காட்டி சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் ஆகவே சூனியம் இல்லை என்று சொல்கிறார். அதை அவருடைய 8 ஆம் நாள் உரையில் நீங்கள் பார்க்கலாம். (http://www.onlinepj.com/…/nambikai_thotar…/sooniyam_8th_day/)

//////////உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

திருக்குர்ஆன் 10:77

சூனியம் என்பது உண்மை இல்லை, அது பொய். ஆனால் நான் கொண்டு வந்தது அற்புதம். இதை எப்படி சூனியம் என்று சொல்லலாம் என்று மூஸா நபி கூறுகிறார்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்றால் பித்தலாட்டம் தானே தவிர அதில் கடுகளவும் உண்மை இல்லை என்று மூஸா நபி வழியாக அல்லாஹ் விளக்கி விட்டான்.//////////////// இது மௌலவி பீ ஜே அவர்களின் வாதமாகும்.

மௌலவி பீ ஜே அவர்கள் மேலே குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தை சரியாக அணுக தெரியாத காரணத்தால் இவ்வாறான பிழையான விளக்கங்களை கொடுத்து வருகிறார்.

ஒரு குர்ஆன் வசனம் நமக்கு சரியாக விளங்காவிட்டால் ஏனைய குர் ஆன் வசனங்களை கொண்டு அதை அணுக வேண்டும். இல்லாவிட்டால் ஹதீஸின் துணையை அதாவது நபி (ஸல்) அவர்களின் விளக்கத்தை கொண்டு அணுக வேண்டும் இதுவே சரியான வழி முறையாகும்.

பகுத்தறிவு சிந்தனையைக் கொண்டு அணுகினால் இவ்வாறான பிழையான விளக்கங்களையே கொடுக்க நேரிடும்.

சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்ற குர் ஆன் வசனத்தை உண்மையான விளக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.

அல்லாஹ் குர் ஆனில் இன்னும் சில இடங்களில் அநியாயக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள், அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறுகிறான்.

அவற்றில் சில வனங்களை இங்கே பதிவிடுகிறேன்...

(அப்போது மூஸா) கூறினார்; "அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்."[28:37]

அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.[10:17]

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.(6 : 21-24)

மேலே நான் குறிப்பிட்ட ஒரு வசனத்தில் 'அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்' என்று வருகிறது. நாம் இந்த வசனத்தை படித்தவுடன் எப்படி விளங்கிக் கொள்வோம்??? அநியாயக் காரர்கள் எந்த வெற்றியும் பெற மாட்டார்கள் என்று விளங்கிக் கொள்வோமா?? அதாவது, உலகத்தில் சொத்து, செல்வங்களை அடையவே மாட்டான், அவனுக்கு உலகத்தில் எந்த ஒரு இலக்கையும் அடைய முடியாது என்று நாம் விளங்கிக் கொள்வோமா?? அல்லது மறுமை நாளில் எந்த வெற்றி பெற மாட்டான் என்று விளங்கிக் கொள்வோமா???

அவனுக்கு உலகத்தின் இறுதியிலும் தோல்வி அடைவான் மேலும் மறுமையில் வெற்றி பெற மாட்டான் என்றே விளங்கிக் கொள்வோம்.

இந்த வசனத்திற்கு மௌலவி பீ ஜே (10:77) வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தை கொண்டு அணுகினோமேயானால் அக்கிரமம் செய்வோர் உலகத்தில் எந்த ஒரு இலக்கையும் தனது தேவைகளையும் அடையாதவனாக இருப்பான் என்றே விளங்கிக் கொள்ள வேண்டிவரும்.

ஆனால் அக்கிரமக் காரர்கள் தான் இன்று உலகையே ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு தான் அதிக செல்வாக்கு வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றனவே! ஆகவே, இந்த வசனத்தை பொய்யாக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.

பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.[10:17] என்று அல்லாஹ் அல்லாஹ் சொல்கிறான்.

பாவம் செய்ய முற்படுபவர்கள் எல்லாம் பாவமே செய்வதில்லையா???

உதாரணமாக ஒருவன் களவு எடுக்க நினைக்கிறான். அவனுக்கு களவே எடுக்க முடியாது என்று அர்த்தமா???
அப்படியென்றால், களவு என்பதே உலகில் இல்லாமல் போய்விடும்.

மாறாக, யாரும் பாவம் செய்ய முடியாது என்பதை இந்த வசனம் குறிக்கவில்லை, பாவம் செய்தால் மறுமையில் பாவம் செய்ததற்கான தண்டனையை அனுபவிப்பான் என்றே அர்த்தமாகும்.

இதே போல தான் சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்ற வசனத்தையும் அணுக வேண்டும்.

சூனியக் காரன் சூனியத்தை செய்வான், அதனால் அல்லாஹ் நாடினால் தாக்கம் உண்டாகும். இறுதி வெற்றி அவனுக்கு கிடைக்காது என்பதையே அந்த வசனம் குறிக்கிறது.

அதற்கவர்; "அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. (20:66)

இந்த வசனம், சூனியக் காரர்கள் மூஸா நபி அவர்களுக்கு முன்னால் பாம்புகளையும் கயிறுகளையும் போட்டதும் அது பாம்பு போல நெளிந்து ஓடியதாக பார்பவர்களுக்கு தெரிந்தது என்று சொல்கிறது.

சூனியக் காரர்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதை செய்துவிட்டார்கள். மூஸா நபி அவர்கள் தடியை போட்டதும் அது உண்மையான பாம்பாக மாறியது, மூஸா நபி அவர்கள் சூனியம் தான் செய்தார்கள் என்று நினைத்து பிர்அவனும் அவ்வாறு செய்வதாக சொல்லி சூனியக் காரர்களை அழைத்து வந்தான். அவர்களும் கயிறுகளையும் தடிகளையும் பாம்பு போல் காட்ட வேண்டும் என்று நினைத்து அதை காட்டி விட்டார்கள்.

அந்த நேரத்தில் தான் 'சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்' என்ற வசனம் இறக்கப் படுகிறது.

"இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்" (என்றும் கூறினோம்). (20:69)

மூஸா நபி அவர்களின் கையில் இருக்கக் கூடிய தடியை போடுமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்து அதை அவர்கள் போட்ட போது அது உண்மையான பாம்பாக மாறி சூனியக் காரர்கள் போட்ட பாம்புகளையும் தடிகளையும் விழுங்குகிறது.

இப்போ மூஸா நபி அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். இதை தான் இந்த வசனம் குறிக்குதே தவிர, மௌலவி பீ ஜே அவர்கள் சொல்வது போன்று சூனியக்காரனால் எதுவுமே செய்ய முடியாது என்று அந்த வசனம் சொல்லவில்லை.

அவன் சூனியத்தை செய்தான். அல்லாஹ்வின் நாட்டத்தால் அவனது சூனியத்திற்கு தாக்கம் இருந்தது. ஆனால் அவனுக்கு இறுதி வெற்றி கிடைக்கவில்லை என்பதையே அந்த வசனம் குறிக்கிறது.


Ansar Thablighi,

புதன், மார்ச் 25, 2015

தலைவலிக்கு ஒரு ருபாய் செலவு இல்லாமல் இயற்கை வைத்தியம்.


விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மையை பெருக்கும் நெருஞ்சி முள்....!!


கிராமங்களில் தெருக்களிலும் விவசாயம் செய்யும் இடங்களிலும் கிடக்கும் நெருஞ்சி முள் பலரது கால் பாதங்களை பதம் பார்த்து விடும்.

நெருஞ்சி முள் காலில் குத்தியவுடன் வலி உச்சியை தொடும்.

அந்த நெருஞ்சி முள்ளில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன, அதில் மிக முக்கியமானது விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மையை பெருக்கும்.

நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.

இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

நெருஞ்சி முள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன.

நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.

சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும்.

ரத்த சுத்திக்கும், சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.

கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.

வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை (திருக்குர்ஆன்-21:16)

தகவல் உதவிக்கு நன்றி : அன்பு செல்வன்

செவ்வாய், மார்ச் 17, 2015

இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா


statestics from cristian website http://www.thewayofsalvation.org/ (MASHA ALLA)
முஸ்லீம்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதாலும்,அதிக அளவில் நாடு விட்டு நாடு குடிபெயர்வதாலும் அநேக ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய மயமாகி வருகின்றன.
பிரான்சில் 20-வயது மற்றும் அதற்கு கீழானவர்களில் 30 சதவீதம் பேர் முஸ்லீம்களாகும்.
பாரீசிலும் மார்செலியிலும் 20-வயது மற்றும் அதற்கு கீழானவர்களில் 45 சதவீதம் பேர் முஸ்லீம்களாம்.
தெற்கு பிரான்சில் எண்ணிக்கையில் சர்ச்சுகளை விட அதிக அளவில் இஸ்லாமிய மசூதிகளே உள்ளன.
பிரான்சில் ஒரு முஸ்லீம் குடும்பத்துக்கு 8.1 குழந்தைகள் வீதம் உள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 82,000-யிலிருந்து 2.5 மில்லியன்களாகியுள்ளது.
இங்கிலாந்தில் இப்பொழுது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. இதில் அநேகம் முன்பு சர்ச்சுகளாக இருந்தவை.
பெல்ஜியமில் ஏறத்தாழ 25% மக்கள் இஸ்லாமியர்கள்.
பெல்ஜியமில் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் இஸ்லாமியராக பிறக்கின்றன.
இதே போன்ற நிலை தான் நெதர்லாந்திலும்.இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் நெதர்லாந்தில் பாதி மக்கள் இஸ்லாமியராக இருப்பர்.
ஜெர்மனியில் 4 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர்.
ரஷ்யாவிலும் இதே கதை தான்.அங்கே ஐந்தில் ஒருவர் முஸ்லீமாக உள்ளார். சராசரியாக ஒரு இஸ்லாமிய குடும்பத்துக்கு 10 குழந்தைகள்.
இன்னும் ஐந்தாண்டுகளில் ரஷ்ய ராணுவத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முஸ்லீமாக இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது 2040-ல் 50 மில்லியனை எட்டவேண்டும் என்பது அமெரிக்க இஸ்லாமியர்களின் விருப்பம்.

லிபிய அதிபர் முகமது கடாபி சொன்னதில் வியப்பேதும் இல்லை.
“கத்தியின்றி,துப்பாக்கியின்றி,ஒரு படையெடுப்புமின்றி இஸ்லாமுக்கு அல்லா, ஐரோப்பாவில் வெற்றியை கொடுப்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.நமக்கு தீவிரவாதிகள் தேவையில்லை;குண்டு போடுவோரும் தேவையில்லை.(ஐரோப்பாவிலுள்ள) ஐம்பது மில்லியன் முஸ்லீமகளும் அந்த கண்டத்தை இன்னும் சில ஆண்டுகளில் ஒரு இஸ்லாமிய கண்டமாக்கி விடுவார்கள்"

ஜலதோஷம்


காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து.அதனுடைய கருத்தைக் கேட்டது.ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.
பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''
சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
Via ; சிரிக்க சிந்திக்க

சனி, மார்ச் 14, 2015

மனித இன நாகரிகத்தின் மலர்ச்சித் தட(ய)ங்கள்!!


மதி மனிதனின் வழித்தோன்றல் ஆகிய இன்றைய மனிதன் (Modern Man) வளர்ச்சி பெற்று, வளர்மதி மனிதன் (Homo Sapiens Sapien) எனப்படுகிறான். இந்த மனிதன் 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவன்.

மொழியின் முன்னோடி

வளர்மதி மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக்குறிப்புகள் உதவின. அதுதான், நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது.

வேளாண்மையில் மேலாண்மை

இந்நிலையில், வேளாண்மை பிறந்தது; காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங்களை, தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்துகொண்டான்.

பயிர்த்தொழில்_அவன் உயிர்த்தொழில்:

முதலில், உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான்.

அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை. நிலநடுக்கடல் நாடுகளிலும், மய்யக் கிழக்கு நாடுகளிலும் 10 ஆயிரம் ஆண்டுகட்குமுன் இதைப் பயிரிடத் தொடங்கிவிட்டான்.

முதல் பயிர்த்தொழில் தொடங்கப்பட்டது தாய்லாந்தில்.

இதன் காலம் கி.மு. 9700ஆம் ஆண்டு. அதாவது, இற்றைக்கு 11700 ஆண்டுகட்கு முன்னர் வேளாண்மை அங்கு தோன்றிவிட்டது. இற்றைக்கு, 9000 ஆண்டுகட்குமுன் அய்ரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் மிகுதியாக விளையும் பார்லி லெவெண்டர் என்னுமிடத்தில் பயிரிடத் தொடங்கிவிட்டது. 8000 ஆண்டுகட்குமுன், மக்காச் சோளம் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது.

அரிசியின் அறிமுகம்

அரிசியை (நெல்) விளைவித்து, உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழகம். இது. 5000 ஆண்டுகட்கு முன்னர். ஆஃபிரிக்காவில் சோளம் பயிரிடப்பட்டது.

இற்றைக்கு, 8000 ஆண்டு (கி.மு. 6000) வாக்கில் ஆசியப் பகுதியில் சோயா பயிரிடப்பட்டது.

சுட்டாரய்யா ரொட்டி சுட்டாரய்யா!

மெசபடோமியர்கள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரொட்டி சுடத் தொடங்கினர்.

ஏரு பூட்டிப் போவாயே, அண்ணே! சின்னண்ணே!!
ஏர்த்தொழிலுக்கு உதவிய கலப்பை தோன்றி 10

ஆயிரம் ஆண்டுகள் ஆயிருக்கும்.

எருதுகள் பூட்டி உழும் வழக்கம் தோன்றி, 4000 ஆண்டுகள் ஆகியிருக்கும்.

வீட்டுக்குப் பூட்டு

பூட்டு _ சாவியை முதன்முதலில் கண்டுபிடித்து, பழக்கத்துக்குக் கொண்டு வந்தவர்கள் அசீரியர்கள். அந்தக் காலத்து அசீரியா, தற்போதைய ஈராக்கின் வடபகுதியாகும். ஏறத்தாழ, 4000 ஆண்டுகளுக்கு முன்பே மரத்தாலான மிகப்பெரிய பூட்டு_சாவியை அவர்கள் பயன்படுத்தி வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலோகத்தால் பூட்டு_சாவி செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் உரோமானியர்கள். அவர்கள் கையாண்ட முறையின் அடிப்படையில்தான் தற்போதைய பூட்டுசாவிகள் உருவாகின்றன.

வீட்டு விலங்குகள்

செம்மறியாடுதான் முதன்முதலாக வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது. இற்றைக்கு 11 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர். எருது போன்ற கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியது இற்றைக்கு 8500 ஆண்டுகளுக்கு முன்னர்.

நட்பின் நாயகம்

மனிதன், வேட்டையாடி உணவு திரட்டிய காலங்களில் அவனுக்கு உற்ற நண்பன் ஆக விளங்கிய நாற்கால் விலங்கு நாய்தான்! ஏறத்தாழ, 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே, மனிதனைப் பின்தொடர்ந்து அவனது முதல் நண்பனாய்த் திகழ்ந்த இனம் நாய்தான்!

நகரங்களின் அடிப்படையில் நாகரிகம் ஆற்றங்கரை ஓரத்திலே:

நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்தது; நிலையான இடத்தில் வாழ்க்கை தொடங்கியது. கூடாரங்கள் மறைந்தன; குடிசைகள் பிறந்தன; ஊர்கள் உருவாயின; நாளடைவில், நகரங்கள் எழுந்தன; வேளாண் பொருளியல், தொழிற்பொருளியலைப் போற்றி முன்னேற்றம் ஏற்பட்டது; ஆற்றங்கரைகளில் அமைந்த நகரங்களின் பின்னணியில் நாகரிகம் தோன்றி வளரத் தொடங்கியது. வளரும் நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணைகி.மு.3100ஆம் ஆண்டு வாக்கில், ஓவிய எழுத்துகள் உருவாயின. நாகரிகத்தின் நல்லதொரு வளர்ப்புப் பண்ணையாக மெசபடோமியா கூறப்படுகிறது. எழுத்துகள் செம்மையாக உருவாயின. உருளைகள் (Wheels) இங்குதான் தோன்றியிருக்கலாம் என்பர் ஆய்வறிஞர்கள். நகர நாடுகள் (City States) முதலியவற்றின் பிறப்பிடம் இதுவே.

தனியுடைமைத் தத்துவம்

எகிப்து உழவர்கள் மண் வீடு கட்டினர். கி.மு. 3000 (இற்றைக்கு 5000)இல் மெசபடோமியா, சிரியாவைச் சேர்ந்தவர்கள் செங்கல் செய்யும் வழிமுறைகளைக் கண்டறிந்தனர். மாபெருங் கட்டடங்கள் மாளிகைகள் ஆக எழும்பின. முடியாட்சி முறை முகிழ்த்தது; அடிமைகளை வைத்து வேலைவாங்கும் முறை (Serfdom) தோன்றியது. தனியுடைமைத் தத்துவம் பிறந்தது; தழைத்தது; நிலைத்தது.

சிற்றரசும் பேரரசும்

நகரங்கள் காலப்போக்கில் பலப்பல தோன்றின. இவை, சிற்றரசுகள் ஆயின; உலகின் முதல் நகரம் யூரக்; 7000_8000 ஆண்டு வாக்கில் யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையில் இது தோன்றியது; நகரை ஆள மன்னர்கள் உருவாயினர்; அவர்கள் வாழ அழகிய அரண்மனைகள்; அங்கே, கோட்டை -_ கொத்தளங்கள் எழும்பின. கி.மு. 2400ஆம் ஆண்டில் மெசபடோமியப் பேரரசு (Empire) சார்கான் என்பவரால் நிறுவப்பட்டது.

நானொரு சிந்து - திராவிடச் சிந்து:

4500 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளியில் மொகஞ்சதாரோ அரப்பா நகர நாகரிகங்கள் மலர்ந்தன. சிந்துவெளி நாகரிகம் திராவிடர் இனத்தின் சீரிய நாகரிகமாக விளங்கியது.

இந்த நாகரிகத்தை உலகறியச் செய்தவர். வணக்கத்துக்குரிய ஈராசுப் பாதிரியார் அவர்கள் ஆவர் (Rev. Fr. Heros).திட்டமிட்ட முறையில் (Planning System) நகரமைப்பு, கழிவு நீர், வடிகால் வசதிகள் கொண்ட உலகின் முதல் நகரமாக மொகஞ்சதாரோ அமைப்பு சீரிய வகையில் ஈடும் எடுப்பும் இல்லாது திகழ்ந்திருந்தது.

உலோகங்களும் - உபயோகங்களும்

கி.மு-.6500இல் துருக்கியில் செம்புத்தாது (Copper Ores) கண்டெடுக்கப்பட்டது. கி.மு.5000இல் செம்பை உருக்கி எடுக்கத் தெரிந்திருந்தனர் மக்கள். மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் செம்புதான்! கி.மு. 3500_3000இல், உலோகத் தொழில்நுட்பம் மெசபடோமியாவில் தோன்றியது.

கி.மு. 3600இல், தாய்லாந்தில், பான்சியாங் சிற்றூரில் புதைகுழியில் வெண்கல ஈட்டிமுனை, வெண்கலச் சிலம்பு, கடகம் முதலியன கண்டுபிடிக்கப்பட்டன.

பொன்னை விரும்பும் பூமியிலே...

கி.மு.5000 ஆண்டு வாக்கில் பொன் (தங்கம்), வெள்ளி முதலான உலோகங்களையும் மெசபடோமியோ, எகிப்துப் பகுதிகளில் பயன்படுத்தத் தொடங்கினர். ஏறத்தாழ, கி.மு.1400 வாக்கில், இரும்பினாலான ஆயுதங்களும் அவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டன.

உழைக்கும் கைகளே! உருவாக்கும் கைகளே!

மரங்களைப் பயன்படுத்தி, பல கருவிகள் செய்யும் கைத்தொழில்கள் தோன்றின. கி.மு. 7000_6000 ஆண்டுவாக்கில், தானியங்கள் சேகரித்துவைக்கும் மண்பாண்டங்கள் செய்யப்பட்டன. முதலில், பச்சைக் களிமண்பாண்டங்களும், பின்னர் சுட்ட களிமண் பாண்டங்களும் செய்ய சுமேரியர்கள் வழிகாட்டினர்.

சக்கரங்களின் சாகசம்

விரைந்து சுழலும் சக்கரங்களின் உதவியால் யூரக் நகரில் கி.மு.3800 ஆண்டு வாக்கில், மண்பாண்டங்கள் வனையப்பட்டன.

சின்னச்சின்ன இழை பின்னிப்பின்னி...

கம்பளி, சணல் மூலம் துணி நெய்யப்பட்டது. சிந்துவெளிப் பகுதியில், பருத்தி பயிரிடத் தொடங்கியதும், அதிலிருந்து துணி நெய்யத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான்!

இறந்த உடலுக்கு இறுதி மரியாதை

இறந்த உடலைப் புதைக்கும் வழக்கம் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே! தோன்றிவிட்டது. இறந்த உடலுக்கு மலர்க்கொத்து வைத்து இறுதி மரியாதை செய்யும் வழக்கம் 60 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே! தோன்றிவிட்டது.

மெல்லப் புகுந்தது கடவுள்

கி.மு.7000_6000 ஆண்டு வாக்கில் பெண் தெய்வ வழிபாடு நடைமுறைக்கு வந்துவிட்டது. இற்றைக்கு, ஏறத்தாழ 6000 முதல் 7000 ஆண்டுகளுக்குமுன் கடவுள் வழிபாடு தோன்றியது. சடங்குகள், வழிபாடுகள், மதங்கள் முதலானவை அன்றைய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு ஏற்கத் தொடங்கின. வீரம், செல்வம், கலை இவற்றிற்கெனவும், ஆக்கல், காக்கல், அழித்தல் இவற்றிற்கெனவும் தனித்தனிக் கடவுள்கள் கற்பிக்கப்பட்டன.

நாகரிக வளர்ச்சிப் பாதையில் நடைபோட்ட மனித இனம் கையும் கையும் பேசியது அன்பால் அன்றோ?

முதலில், நாக்கு செய்யும் பணியைக் கை செய்தது; இந்தச் செய்கை மருவி சைகை எனப்பட்டது. கைகளைக் கொண்டே கருத்துப் பரிமாற்றம் கனகச்சிதமாக நடந்துவந்தது!

நண்பேண்டா

இன்றும், நாம், கைகூப்பி வணங்குவது, வலக்கையை உயர்த்தி அசைப்பது, ஒருவகை சைகை மொழிதான்? கையோடுகை குலுக்குவதும் சைகை மொழிதான்! உன்னுடன் இணைந்து நட்பாக _ நண்பனாக இருக்க விரும்புகிறேன்! என்பது இதன் பொருள் ஆகும். பின்னர், கைமொழி வாய்மொழி ஆனது.

கூடி வாழும் குடும்பம்

கைமொழி வாய்மொழியாக மாறுதல் அடையும்போதே, நாகரிகமும் பண்பாடும் படிப்படியாக வளர்ந்துகொண்டே வந்தது. ஆடை அணிகலன்கள், முடி ஒப்பனை முதலானவற்றில் மாற்றங்கள் தோன்றின. ஆண்_பெண் பிணைப்பால் குடும்பம் உருவாகியது. குடும்பத்தில் புதிய உறுப்பினராகக் குழந்தை(கள்) தோன்றியது; தோன்றின. சிற்றூர், பேரூர், நகரம், மாநகரம் உருவாகக் குடும்பம் அடிப்படையாயிற்று; குடும்பம் குடி ஆயிற்று.

பண்பாட்டு வளர்ச்சிப் பயணம்

தன்னலமும், பொதுநலமும் கொண்ட நடைமுறைச் சமுதாயம் உருப்பெறலாயிற்று. மனிதனின் எண்ண ஓட்டம், கற்பனை வளம் முதலியன, கோட்பாடுகள், அறநெறிகள், ஒழுங்குமுறைகள் பண்பாட்டு வளர்ச்சியின் சின்னமாக விளங்கியது. இயற்கையிலிருந்து, பல வகைகளில், பல நிலைகளில் ஆற்றல் பெறும் அரிய திறன்களை வளர்த்துக் கொண்டது.

சரித்திரம் தொடங்கும் சந்தர்ப்பம்

மனிதனின் மற்றுமொரு சாதனை எழுதக் கண்டுபிடித்தது. எப்பொழுது எழுதக் கற்றுக் கொண்டானோ அப்பொழுது முதலே வரலாறும் தொடங்கிவிட்டது. பேச்சு _ எழுத்து, மாந்த இன முன்னேற்றப் பாதையில் விரைவு நடை போட உதவின.

அறிவியல் வளர்ச்சியின் அரவணைப்பில்:

பொறிகளின் கண்டுபிடிப்புகளும் அறிவியல் வளர்ச்சியும் அவற்றின் பயன்பாடும் மனித இனத்தின் மாபெரும் மலர்ச்சியாகவும் நாகரிக வளர்ச்சியாகவும் திகழ்ந்தன. மின்னணுக்களின் (Electronics) பயன்பாடு, மின்சாரத்தின் (Electricity) தாக்கம் நாகரிகத்தின் உச்சகட்டமாக இன்று நடனமிடுகிறது.

இனியும் வளர்ச்சிகள் தொடரட்டுமே!

இந்த மலர்ச்சியும், வளர்ச்சியும் தொடர்ந்து கொண்டே, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது; இருக்கிறது; இருக்கும். மேலும் மேலும், மனித இனத்தின் நாகரிகத்தின் வளர்ச்சி தொடரும்; தொடர வேண்டும். தொடரட்டுமே!!
Related Posts Plugin for WordPress, Blogger...