திங்கள், ஏப்ரல் 30, 2012

new job apportunity 30/4/12


Senior Piping Engineer - Malaysia வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 05:11 PM Role: Mechanical Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 8 To 10+ Years ஜாப் லொகேஷன்: சென்னை Basic/UG qualification: B.E/B.Tech PG Qualification: Any Post Graduation கீ ஸ்கில்ஸ்: Mechanical நிறுவனத்தின் பெயர்: PEGASUS STAFFING SOLUTIONS வெப்சைட்: www.pegasusstaffing.com காண்டாக்ட் பெர்சன்: LG Landline: +91-44-4204 6607 Description Senior Piping Engineer – Kuala Lumpur - Malaysia Possess a recognized degree in Chemical/Mechanical Engineering with minimum 8 years working experience; Well versed in ANSI, ASME, API & NACE Codes related to piping; Ability to perform piping calculations (wall thickness, branch reinforcement, stress analysis); Familiar with piping components and development of material specifications; Able to perform layout design and prepare GA, Isometric & Pipe support drawings; Knowledge of PDS 3D will be a strong advantage for Piping Designer position Phone calls will not be entertained Auto Responders from Job portals would be deleted Our Contact details: Pegasus Staffing Solutions 93 Arcot Road Lakshmi Towers IV Floor Kodambakkam Chennai 600024 Phones: 42046607/08 www.pegasusstaffing.com Email: engg@pegasusstaffing.com Required Freshers & Experienced Engineers for an Company வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 03:09 PM Role: Others எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 10+ Years ஜாப் லொகேஷன்: கொச்சி & எர்னாகுளம் / பெங்களூரு / சென்னை Basic/UG qualification: Any Graduate PG Qualification: Post Graduation Not Required கீ ஸ்கில்ஸ்: Engineers காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: Bynsl Technologies வெப்சைட்: www.bynsl.com காண்டாக்ட் பெர்சன்: HR Required Freshers & Experienced Engineers for an Company for more details please visit our website www.bynsl.com Engineers required for various companies in India வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 02:11 PM Role: Other Production / Engineering / R&D எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 3 Years ஜாப் லொகேஷன்: பெங்களூரு / சென்னை / விசாகபட்டிணம் Basic/UG qualification: B.E/B.Tech PG Qualification: Post Graduation Not Required கீ ஸ்கில்ஸ்: Mechanical / Electrical காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: LBS Associates காண்டாக்ட் பெர்சன்: Mrs.Sharadha Description We Introduce ourselves as a Manpower Consultants in Vishakhapatnam. For our clients (involved in Production, Maintenance and Services) requirement, we are recruitig the people from Electrical and Mechanical Stream with or without experienced to work various units/locations in Tamilnadu, Karnataka, Andhra Pradesh, Orissa and Jharkand. Salary will be 8,000/- to 10,000/- with accommodation. Selected candidates must to sign on a bond for two years. After completion of Training and Probation period they will be transfered to other unit. Govt Authorised Cloud Computing Training @ Knowledge Labs. வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 12:26 PM Role: Technician எக்ஸ்பீரியன்ஸ்: 4 To 7 Years ஜாப் லொகேஷன்: சென்னை Basic/UG qualification: Any Graduate PG Qualification: Any Post Graduation கீ ஸ்கில்ஸ்: Networking காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: Knowledge Labs வெப்சைட்: http:/www.cloud-computing-training.in/ காண்டாக்ட் பெர்சன்: Swati Landline: +91-44-4201 0999 Description Learn Cloud Computing with Green Computing Certification from the experts. Master the Green Data center, Virtualization, Cloud Computing, Grid Computing and Power Optimization through hands-on training @ Knowledge Labs. The IT Industry is going green fast. Are your green computing skills up to date? The industry’s demand for Green Computing is growing 20% annually. Secure your career. Get green certified. Green is the new black. Proof your Green Computing skills with world’s pioneer and largest green computing certifications. Call: 9789887816/ 8754415111 / 044-42010999 / 044-42010991 1st Floor, FM Tower, #547, Mount Road,(next to Audi Showroon) Nandanam, Chennai-600035, Ph.+44 42010999 http://www.cloud-computing-training.in Lite / Mobile Version: http://www.cloudcomputingtraining.in/ Like us on Facebook http://www.ec2training.in Virtualization/amazon/training @ Knowledge Labs. வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 12:23 PM Role: Tech / Engg - Manager எக்ஸ்பீரியன்ஸ்: 4 To 7 Years ஜாப் லொகேஷன்: சென்னை Basic/UG qualification: Any Graduate PG Qualification: Any Post Graduation கீ ஸ்கில்ஸ்: Networking காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: Knowledge Labs வெப்சைட்: http:/www.cloud-computing-training.in/ காண்டாக்ட் பெர்சன்: Swati Landline: +91-44-4201 0999 Description Learn Cloud Computing with Green Computing Certification from the experts. Master the Green Data center, Virtualization, Cloud Computing, Grid Computing and Power Optimization through hands-on training @ Knowledge Labs. The IT Industry is going green fast. Are your green computing skills up to date? The industry’s demand for Green Computing is growing 20% annually. Secure your career. Get green certified. Green is the new black. Proof your Green Computing skills with world’s pioneer and largest green computing certifications. Call: 9789887816/ 8754415111 / 044-42010999 / 044-42010991 1st Floor, FM Tower, #547, Mount Road,(next to Audi Showroon) Nandanam, Chennai-600035, Ph.+44 42010999 http://www.cloud-computing-training.in Lite / Mobile Version: http://www.cloudcomputingtraining.in/ Like us on Facebook http://www.ec2training.in Wanted 8 years Exp Quality Control engineer for Oil&Gas Man வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 11:53 AM Role: Mechanical Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 5 To 10+ Years ஜாப் லொகேஷன்: சென்னை Basic/UG qualification: Any Graduate PG Qualification: Any Post Graduation கீ ஸ்கில்ஸ்: Wanted 8 Years Exp Quality Control Engineer For Oil&Gas Man காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: I C Placement Solutions காண்டாக்ட் பெர்சன்: Prabhakaran Mobile: +91 - 98402 66428 Verified Landline: +91-44-2662 2427 Description Wanted 8 years Exp Quality Control engineer for Oil&Gas Manufacturing Industry.Bachelor’s degree in Mechanical Engineering from a reputed institution. Minimum 5 years experience in the Oil and Gas industry, particularly in pressure control equipments, working as a QA Engineer/Inspection Engineer in an manufacturing or repair facility.Overseas experience and additional inspection related qualifications (like NDT level II, CSWIP etc) will be an added advantage. Should be computer literate. Contact Details:Prabhakaran 9840266428,04426622427 mail id:icplacementsolutions@gmail.com urgent required JOB OPENING FOR DME. வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 11:33 AM Role: Mechanical Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 2 Years ஜாப் லொகேஷன்: சென்னை Basic/UG qualification: Diploma PG Qualification: Any Post Graduation கீ ஸ்கில்ஸ்: DME காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: MOTHER HR PLACEMENT SER வெப்சைட்: www.motherhrplacements.com காண்டாக்ட் பெர்சன்: SATYA Landline: +91-44-3041 2000 Description Description Position Type: Part-time TYPE OF COMPANY--GOOD COMPANY DEPARTMENT--SUPERVISOR, DESIGNER. QUALIFICATION--.DME Experience-- 0 TO 2 SALARY--NEGO. Responsible for a facility's durable medical equipment. Duties include selecting and ordering equipment and ensuring equipment delivery to facility and appropriate users. Tests and maintains equipment to ensure proper functionality. Provides training on use of equipment. Requires a high school diploma or its equivalent and 0-2 years of experience in the field or in a related area. Has knowledge of commonly-used concepts, practices, and procedures within a particular field. Relies on instructions and pre-established guidelines to perform the functions of the job. Works under immediate supervision. Primary job functions do not typically require exercising independent judgment. Company : Mother HR Contact Person : [ SATYA JAISWAL ] Post Resume @ : hr@motherhr.com. Contact No : 044-45410724, 30412000, 2020 Venue Address : No.7C, Mandy Street, Alandur,Chennai 600 016. (Near St.Thomas Mount Railway Station). Timings : Monday to Friday 10am to 3pm Saturdays 10am to 2pm. Please provide us with the below documents while attending the interview. 1. Latest Updated Resume 2. Latest Passport size photograph 3. Photo copy of your certificates For any clarifications please feel free to call on the above numbers. Required Freshers & Experienced Engineers for an Company வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 12:06 AM Role: Others எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 10+ Years ஜாப் லொகேஷன்: பெங்களூரு / சென்னை / ஹைதராபாத் & செக்கந்தராபாத் Basic/UG qualification: Any Graduate PG Qualification: Post Graduation Not Required கீ ஸ்கில்ஸ்: Engineers காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: Bynsl Technologies வெப்சைட்: www.bynsl.com காண்டாக்ட் பெர்சன்: HR Description Required Freshers & Experienced Engineers for an Company for more details please visit our website www.bynsl.com Civil Engineering Jobs - A Current USA Listing வெளியிட்ட நாள்: Fri, 27 Apr 2012, 06:54 AM Role: Civil Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 10+ Years Basic/UG qualification: B.Sc PG Qualification: M.Sc காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: Civil Engineering Jobs - A Current USA Listing வெப்சைட்: http://civil-engineering-jobs.intellego-publishing.com/ காண்டாக்ட் பெர்சன்: Thomas Description This useful site Civil Engineering Jobs provides to the unemployed civil engineer, a very large listing of jobs, with available jobs listed for each state within the United States. Statistics, news, and other useful elements are also provided. Senior Process Engineer - Kulalumpur - Malaysia வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 05:11 PM கன்ட்ரி: Malaysia ஜாப் கேட்டகரி: இஞ்சினியரிங்க் Role: Maintenance எக்ஸ்பீரியன்ஸ்: 8 To 10+ Years Basic/UG qualification: B.E/B.Tech PG Qualification: M.Tech கீ ஸ்கில்ஸ்: PID காலியிடங்களின் எண்ணிக்கை: 8 நிறுவனத்தின் பெயர்: PEGASUS STAFFING SOLUTIONS வெப்சைட்: www.pegasusstaffing.com காண்டாக்ட் பெர்சன்: LG Landline: +91-44-4204 6607 Description Senior Process Engineer – Kuala Lumpur - Malaysia Possess a recognized degree in Chemical Engineering/Petroleum Engineering with minimum 6 years working experience; Knowledge in preparation of Process Flow Diagram (PFD) with material & energy balance; Knowledge in preparation of Piping and Instrumentation Diagram (P&ID); Knowledge in preparation of Data Sheets furnishing process data; Able to conduct Hazop and perform process studies and optimization; Experience in pre-commissioning and commissioning execution work (inclusive development of procedure and schedule Phone calls will not be entertained Auto Responders from Job portals would be deleted Our Contact details: Pegasus Staffing Solutions 93 Arcot Road Lakshmi Towers IV Floor Kodambakkam Chennai 600024 Phones: 42046607/08 www.pegasusstaffing.com Email: engg@pegasusstaffing.com Design Engineer of varies kinds of bearing cages வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 02:09 PM கன்ட்ரி: China ஜாப் கேட்டகரி: இஞ்சினியரிங்க் Role: Design Manager / Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 10+ Years Basic/UG qualification: Any Graduate PG Qualification: Any Post Graduation கீ ஸ்கில்ஸ்: Design காலியிடங்களின் எண்ணிக்கை: 2 நிறுவனத்தின் பெயர்: Liaocheng Golden Empire Group வெப்சைட்: www.gebchina.com காண்டாக்ட் பெர்சன்: Sara Zhang Landline: +91-635-698 0962 Description Requirement:Over 5 years experience in bearing cages business line,full-time and part-time job both allowed. Treatment:Part-time,(guide our production monthly, in the form of consultant to promote to realize the goal. annual Salary:31847-477707 USD);Full-time(The company for individual pay the insurance, provide travel traffic tools and accommodation, enjoy better than the same industry treatment. annual salary :31847-477707 USD) Engineer of tooling of varies kinds of bearing cages வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 11:17 AM கன்ட்ரி: China ஜாப் கேட்டகரி: இஞ்சினியரிங்க் Role: Mechanical Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 3 To 10+ Years Basic/UG qualification: Any Graduate PG Qualification: Any Post Graduation கீ ஸ்கில்ஸ்: Engineer Of Tooling காலியிடங்களின் எண்ணிக்கை: 2 நிறுவனத்தின் பெயர்: Liaocheng Golden Empire Group வெப்சைட்: www.gebchina.com காண்டாக்ட் பெர்சன்: Sara Zhang Landline: +91-86635-698 0962 Description Requirement:Over 5 years experience in bearing cages business line,full-time and part-time job both allowed. Treatment:Part-time,(guide our production monthly, in the form of consultant to promote to realize the goal. annual Salary:31847-477707 USD);Full-time(The company for individual pay the insurance, provide travel traffic tools and accommodation, enjoy better than the same industry treatment. annual salary :31847-477707 USD) SAEDAN PRECAST CO. Requirement வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 09:12 AM கன்ட்ரி: Saudi Arabia ஜாப் கேட்டகரி: இஞ்சினியரிங்க் Role: Civil Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 10+ Years Basic/UG qualification: Diploma PG Qualification: Post Graduation Not Required கீ ஸ்கில்ஸ்: Civil Engineering Skills காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ நிறுவனத்தின் பெயர்: SAEDAN PRECAST CO. வெப்சைட்: Nil காண்டாக்ட் பெர்சன்: Ramesh Mobile: +91 - 88675 95905 Verified Landline: +91-80-4093 5666 Description The Company SAEDAN PRECAST CO. Requires Following Categories Of Employees. 1. QA/QC Engineer (Civil) 2. Civil Engineer (Precast) 3. Erection Engineer 4. Safety Engineer 5. Quantity Surveyor(Deg. Civil) 6. Planning Engineer 7. House Drivers(35 to 40 yrs). Any Experienced Candidates or Diploma Candidates are Eligible to apply for the above categories of jobs.They must have knowledge in Civil Engineering. Requirement For A1-TURAIS CO. Company வெளியிட்ட நாள்: Sat, 28 Apr 2012, 09:12 AM கன்ட்ரி: Saudi Arabia ஜாப் கேட்டகரி: இஞ்சினியரிங்க் Role: Civil Engineer எக்ஸ்பீரியன்ஸ்: 1 To 10+ Years Basic/UG qualification: Diploma PG Qualification: Post Graduation Not Required கீ ஸ்கில்ஸ்: Civil Engineering Skills காலியிடங்களின் எண்ணிக்கை: 10+ அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட் நிறுவனத்தின் பெயர்: A1-TURAIS CO

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?


கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? விளக்கம் தரவும். பி.எம். அஜீஸ், திருத்துறைப்பூண்டி. பதில் : ஒரு உயிரை எப்படிக் கொல்லலாம்? கொன்று எப்படிச் சாப்பிடலாம் என்பது அவர்களின் வாதமா? வலியை உணருமா? உணராதா? என்பது அவர்களின் வாதமா? இதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். நாம் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆடு மாடுகளைக் கூட வலியை உணராத வகையில் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அறுக்க முடியும். அப்படி அறுக்கப்படும் உணவை அவர்கள் உட்கொள்ளத் தயார் என்றால் தான் இவ்வாறு வாதிட வேண்டும். 'வலியை உணராத வகையில் பிராணிகளை நாம் அறுத்து உண்போமே' என்று அவர்கள் பிரச்சாரம் செய்து தாமும் உண்ண வேண்டும். ஆனால் அவ்வாறு உண்ண மாட்டார்கள். உண்ணக் கூடாது என்றே கூறுவார்கள். அப்படியென்றால் வலியை உணர்வது பற்றி எடுத்துக் கூறி வித்தியாசப்படுத்துவது போலித்தனமானது. இவர்களின் வாதப்படி மனிதனைக் கூட வலியை உணராத வகையில் கொல்வது பாவமில்லை என்று ஆகிவிடும் அல்லவா? வலியை உணராத வகையில் மனிதனை இன்றைக்குக் கொலை செய்வது சாத்தியமான ஒன்றுதான். இதெல்லாம் குற்றம் என்று கூறுவார்களானால் வலியை உணர்வது என்ற காரணம் பொய் என்பது தெளிவு. ஒரு உயிரை எப்படி எடுக்கலாம் என்ற உள்ளுணர்வு தான் அசைவத்தைத் தவிர்க்கத் தூண்டுகிறது. இந்தக் காரணம் தாவரத்திலும் இருக்கிறது. தாவரம் என்ற உயிரை - அது வலியை உணரா விட்டாலும் - அதைக் கொல்வதும், சாப்பிடுவதும் என்ன நியாயம் என்ற கேள்வி விடையின்றி அப்படியே தான் உள்ளது. இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அறிவியல் முடிவின் படி இஸ்லாம் கூறும் முறையில் பிராணிகளை அறுத்தால் அவை தாவரங்களைப் போலவே வலியை உணராது. உணவுக்காக விலங்குகளையும், பறவைகளையும் கொல்லுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். சிலர் கோழி போன்ற பறவையினங்களை நீரில் முக்கி திக்குமுக்காட வைத்து கொல்லுகின்றனர். மேல்நாடுகளில் கிட்டத்தட்ட இதே முறையில் விலங்குகளை கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு அவைகளை நிலைகுலையச் செய்து கொல்லுகின்றனர். மனிதர்களுக்கு வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் இஸ்லாம் வழிகாட்டியிருப்பது போல் இந்தத் துறையிலும் - அதாவது உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதிலும் - திட்டவட்டமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறது. இறந்து போன பிராணிகளையும், பிராணிகளின் ஓட்டப்பட்ட ரத்தத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது. பிராணிகளைக் கொல்லும் போது கூரிய ஆயுதம் கொண்டு கழுத்தை அறுத்து அவைகளைக் கொல்லும் படி பணிக்கிறது. அப்படிச் செய்யும் போது தலைக்கு ரத்ததைக் கொண்டு செல்லும் ரத்த நாளமும், ரத்தத்தை தலைப் பகுதியி லிருந்து வெளிக் கொண்டு வரும் ரத்தக் குழாய்களும் அறுபடுவதோடு சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாக அறுக்கப்பட்ட உடலிலிருந்து ரத்தம் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடுத்த சில வினாடிகளில் வலிப்பினால் அவைகள் துடிக்கின்றன இதனைக் காணுகின்றவர்கள் இஸ்லாமிய முறை பிராணி களை வதை செய்யும் முறை என்றும் அது மனிதாபிமான செயலுக்கு ஏற்றதல்ல என்றும் வாதிடுகின்றனர். அவர்களின் இந்த குற்றச்சாட்டு உண்மை தானா? இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மேற்கத்தியர்கள் கையாளும் முறை சிறந்தது தானா? அம்முறையைக் கையாள்வதால் உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா? அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்றத் தகுதியை அடைகிறதா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள். அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம். 1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 2)அறுவை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக்கருவிகள் பொருத்தப்பட்டன. 3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன. 4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன. 5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன. 6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊஊஏ மற்றும் ஊஈஏ பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊஊஏ மூளையின் நிலையையும், ஊஈஏ இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின. இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம். இஸ்லாமிய ஹலால் முறை: 1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊஊஏயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது. 2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊஊஏ பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது. 3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊஊஏ பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது. 4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது. மேற்கத்தியரின் முறை: 1) மேற்கண்ட முறையில் கொல்லப்பட்ட விலங்குகள் உடனே நிலை குலைந்து ய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன. 2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊஊஏ பதிவு காட்டியது. 3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை. மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது. ஹலால் முறையில் உயிர்கள் கொல்லப்படும் போது அவை வலி அல்லது வதையினால் துன்பப்படுவதில்லை. இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை ஒன்றை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் இரக்கத்தையும், கருணையையும் நாடுகிறான். ஆகவே நீங்கள் (விலங்குகளை) அறுக்கும் முன் உங்கள் ஆயுதத்தை நன்றாக (தீட்டி) கூராக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் அறுக்கப்படும் பிராணிக்கு துன்பத்தை நீக்குங்கள். (முஸ்லிம்: 3615) வலியை உணர்வது தான் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதை அவர்கள் தாராளமாக உண்ணலாம். அவர்கள் கூறுவது போலித்தனமான வாதம் என்பதற்கு மற்றொரு சான்றையும் காட்ட முடியும். நாம் கொல்லாமல் தாமாகச் செத்துவிட்ட உயிரினங்களைச் சாப்பிட நாங்கள் தயார் என்று அவர்கள் கூற வேண்டும். ஏனெனில் அதை இவர்கள் கொல்லவில்லை. செத்த பின் அதைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது வலியை உணராது. எனவே இதைச் சாப்பிடுவார்களா? முட்டை சாப்பிடுவார்களா? செத்த மீன்களைச் சாப்பிடுவார்களா? சாப்பிட மாட்டார்கள். இவற்றையும் சாப்பிடக் கூடாது என்றே அவர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க ஏன் போலியான காரணம் கூற வேண்டும்

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

தவறான முடிவின் பிடிவாத குணத்தினால்


ஒரு சிலரின் தவறான முடிவின் பிடிவாத குணத்தினால், உறவுகளின் ஒட்டு மொத்த சந்தோசமும் சீர்குழைந்து விடுகிறது.... -மு.மன்சூர் அலி...

வியாழன், ஏப்ரல் 26, 2012

இஜ்மா கியாஸ் என்றால் என்ன?


நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?


கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண்' என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்! -ஜுலைஹா புதல்வி, தருமாபுரம், காரைக்கால் பதில் : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டு பிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு. பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டு பிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும் இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையா? எனக் கேட்டால் அதில் உள்ள கேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார். அவரது அறிவு புகை பிடிப்பதைத் தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்? தவறு எனக் கண்டு பிடித்தவுடன் அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லை? எனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரிய ஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம். திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில் மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன. உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் எடுத்துக் கொள்கிறான். சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும், ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம் மனிதனின் அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது. பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார். அந்த வழியில் மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லை. ஒரு சர்வாதிகாரி ஒரு உத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான். இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத பள்ளிக் கூட வாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது. எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு கூறுகிறது. ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லை. அறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்க முடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த முடியவில்லை. காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் கூடாகத் தெரிகிறது. நாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம். அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையான ஒரு சக்தியை நம்ப வேண்டும். தவறு, தீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால் நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும். இது முதல் விஷயம். எல்லா விஷயத்திலும் நன்மையையும், தீமையையும் அறிவு கண்டு பிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக் கொள்கின்றனர். இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது என வாதிடுவோரும், தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர். மாபெரும் மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர். இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாது. ஏதோ ஒன்று தான் இதில் உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் ஒரு தரப்புடைய அத்தனை அறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்டவில்லை என்பது தெளிவு. வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும், வட்டி ஒரு வணிகமே எனக் கூறுவோரும் அறிவாளிகள் தாம். முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது என வைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உறுதி. அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உடைய விஷயங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. இதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம். அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயை! மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது? மார்க்ஸுக்குச் சரி எனப்பட்டது அவர் வழி வந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்? என்றெல்லாம் சிந்தித்தால் அறிவு மமதையிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறியின் மூலம் மனிதன் தன்னை பக்குவப்படுத்துவதன் அவசியத்தை உணரலாம்

திங்கள், ஏப்ரல் 23, 2012

திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?


கேள்வி : என்னுடைய இந்து நண்பர் அல்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவை குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும். -எம். திவான் மைதீன், பெரியகுளம் பதில்: இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல்-வாங்கல், இன்ன பிற உடன்படிக்கைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். இதைத் திருக்குர்ஆன் 2:282, 5:106 ஆகிய வசனங்களில் காணலாம். திருமணம் என்பதும் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளே அதற்குப் போதுமானது தான். ஆனால் ஒரு பெண்ணுடைய கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்துவது சாதாரண ஒப்பந்தம் போன்றது அல்ல. அவதூறு சுமத்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். விபச்சாரம் நிரூபிக்கப் பட்டால் அளிக்கும் தண்டனை மிகவும் கடுமையானது. இரண்டு நபர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்க முடியாது. எனவே தான் பெண்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்துவோர் குறைந்த பட்சம் நான்கு சாட்சிகளைக் கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க வேண்டும். ஆணுக்கு எதிராக விபச்சாரக் குற்றம் சுமத்தினாலும் நான்கு சாட்சிகள் நேரடியாகப் பார்த்ததாகக் கூற வேண்டும், என்று இஸ்லாம் கடுமை காட்டுகிறது. அது மட்டுமின்றி நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் இது பற்றி யாரேனும் பேசினால் அவ்வாறு பேசியவர்களுக்கு எண்பது கசையடி வழங்க வேண்டும் என்றும், நீங்கள் சுட்டிக் காட்டும் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை ஒருவரோ இருவரோ கண்டால் கூட அதைப் பரப்பத் தடை விதிக்கப்படுகிறது. நான்கு பேரும் நேரடியான சாட்சிகளாக இருக்க வேண்டும். இதில் கணவனுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கிறது. தன் மனைவியைத் தகாத நிலையில் பார்க்கும் கணவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டியதில்லை. ஏனெனில் அதன் பின்னர் அவன் அவளுடன் வாழத் தயங்குவான். எனவே பிரிந்து விட அவன் விரும்பினால் நான்கு தடவை சத்தியம் செய்து கூறி பிரிந்து விட வேண்டும். கற்பு விஷயத்தில் ஒருவருக்கு எதிராக மற்றவர் குற்றம் சுமத்துவதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், பெண்களின் மானத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அற்புதமான சட்டத்தை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது. எந்த நாட்டிலும் இத்தகைய அற்புதமான சட்டம் இருபதாம் நூற்றாண்டில் கூட இல்லை. சர்வ சாதாரணமாக கிசுகிசுக்கள் பரப்படுகின்றன. இத்தகைய ஒரு சட்டம் உலகில் நடைமுறைப் படுத்தப் பட்டால் பல பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும். 46 சிந்திப்பது இதயமா? மூளையா? குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும். - எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி. மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது. சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது. பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது. ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?என்று கேட்கிறோம். ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம். சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது. இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது. சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. 'இதயத்தில் உனக்கு இடம் இல்லை' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலிசெய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான். இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும். ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது. குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்! எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது. இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன். அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள். மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான். 5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும். 33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது. எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது. மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

அதிநவீன மோட்டார் சைக்கிள்: கார் போன்ற ஆடம்பரம்


இன்றைய நவீன உலகில், தொழில்நுட்பம் வளர்ந்து சென்றாலும், வளங்கள் மட்டுப்பட்டதாய் இருக்கின்றன. தற்பொழுது கார் பாவனை அதிகரித்துள்ளது. காரணம் சொகுசுப்பயண மோகமாகும். 4 பேர் பயணிக்க வேண்டிய கார்களில் பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவர் பயணிப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இதனால் எரிபொருள் வீண்விரயம் ஆக்கப்படுகிறது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில், கார் போன்ற ஆடம்பரம், சொகுசு கொண்ட மோட்டார் சைக்கிளை கண்டிபிடித்துள்ளது அமெரிக்காவின் Lit Motors நிறுவனம். இதில் மோட்டார் சைக்கிள் போல் இருவர் பயணிக்கலாம். ஏசி முதற்கொண்டு, காரில் உள்ள அத்தனை அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வகை மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகவும் அமையும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்........!!!


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது . தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது. எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும். வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை சிவப்பு நிறமாக….. குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும். —

வியாழன், ஏப்ரல் 19, 2012

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால்

மதுக்கடை என்ற நிலை இன்று.பள்ளி இல்லாத ஊரிலும்

மதுக்கடை திறக்க வேண்டும்

என்பது "குடி"மக்களின் கோரிக்கை.


பண்டிகை நாட்களில் பல கோடி வருமானம்

மதுக்கடைகளால், அரசுக்கு...


உழைத்து வந்தப் பணத்தை

குடித்து வீணடிப்பது முறையா...?
சிந்திப்பீர்....!!!


குடிகாரனை சமுதாயத்தில் யாருமே மதிப்பதில்லை.

குடித்து தன் மதிப்பை தானே இழக்கலாமா..???


குடி உன்னை தவறார வழியில் இட்டு செல்லும்..

குடியினால் வாழ்விழந்தவர் பலர்....


குடி உனது குடியை மட்டும் கெடுக்காது....


குடி...

உனது விதியை கெடுக்கும்..
உனது மதியையும் கெடுக்கும்.

உனது வீரத்தை கெடுக்கும்..
உனது மானத்தை கெடுக்கும்..

உனது அந்தஸ்தை கெடுக்கும்..
உனது நிம்மதியை கெடுக்கும்.....

ஒட்டு மொத்தமாக
உனது முன்னேற்றத்தை கெடுக்கும்..அது மட்டுமல்லாது

உலக அரங்கில் ஒட்டு மொத்த உனது சமுதாயத்தின்

அந்தஸ்தையும் குறைத்து விடும்...

(இது போல் ஆங்கங்கே குடித்து விட்டு போதையில் கீழே விழுந்து கிடந்தால்)

மு.மன்சூர் அலி

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு?!”

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர்
ஒருவர் ஒரு கதை சொன்னாராம்.

“ஒரு மனிதன் இருந்தான்.
அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும்
ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள்
வாங்கச் சொன்னானாம்.

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.;
அறை நிறையவில்லை.

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்
;அறை நிறையவில்லை

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி
அறையில் ஏற்றி வைத்தான்.
அறை முழுவதும் ஒளி நிறைந்தது”

அந்த உறுப்பினர் பின் சொன்னாராம்”அந்த மூன்றாமவன்
போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில்
இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது” மீதம் 99 ரூபாய்
என்ன ஆச்சு?!”

சபாஷ் போலீஸ்:


லஞ்சம் ஊழல் விவகாரங்கள் பார்லிமெண்ட் வரை பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இந்த சென்னை,போலீஸ்காரர் சந்திரசேகர் " லஞ்சம் தவிர்ப்போம், ஊழல் ஒழிப்போம்'' என்ற விழிப்புணர்வு வாசகத்தை தன் காக்கி சட்டையிலேயே அணிந்துள்ளார். தன் மட்டுமின்றி பார்பவர்களிடம் எல்லாம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறர். இந்த உணர்வு அனைவருக்கும் வந்தால் இந்த நாடு சுபிக்ஷமடையும். — with Rahmat Nisha

திங்கள், ஏப்ரல் 16, 2012

உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்

இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சமூக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. உள்நாட்டில் அது தொடர்ந்து பேணிவரும் மதச்சார்பற்ற மாண்பும், சமதர்ம சமுதாயம் அமைப்பதே அது முக்கியக் குறிக்கோள் என்று அறிவித்ததும், வெளியுறவுக் கொள்கையளவில் இந்தியா கடைப்பிடித்து வரும் அணிசேரா நடுநிலைக் கொள்கையுமே இந்தியாவை உலக அளவில் தலைநிமிரச் செய்தது.

இத்தகைய சிறப்பினைப் பெற்றிருந்த இந்தியத் திருநாட்டின் பெருமைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு அமைந்தது. பாசிசவாதிகளின் இந்த தீய செயல் இந்தியாவின் வளர்ச்சியை குறைந்தபட்சம் கால்நூற்றாண்டு பின்தங்கச் செய்தது என்றால் அது மிகையல்ல. இந்த அறம் கொன்ற தேசவிரோதச் செயலில் குற்றவாளிகளாக 68 பேரை லிபர்ஹான் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த வேதனைச் செயல் நிகழ்ந்து 10 ஆண்டுகள் முடிவடைவதற்குள் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து உலகின் இதயங்களை ரணமாக்கியது. 21ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையான குஜராத் இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மோடி நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.மோடியின் கொடூரச் செயல்கள் அம்பலமானதால் மோடிக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செயல்கள் குறித்து சட்டை செய்யாத பாசிச சக்திகள் ஒரு மிகப்பெரிய நரித்தனத்தை செய்தன. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொலை செய்ததைப் பாராட்ட(!) வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ... மோடியை வளர்ச்சியின் நாயகன் என்றார்கள். மோடியை வல்லவர், நல்லவர் என கூசாமல் பொய்ப் புகழ் பரப்புரை செய்த காலக்கட்டத்தில் மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசுவும், திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தியும் கேரளாவில் ஏ.கே.அந்தோனியும் எளிமையும் திறமை யும் வாய்ந்த முதல்வர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் அவையெல்லாம் வெகுஜன ஊடகங்களுக்கு கண்ணில் படவேயில்லை.மோடியைப் போல் உண்டா? மோடியே வளர்ச்சியின் நாயகன் என செயற்கையான முறையில் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். பாசிசவாதிகளின் ஐந்தரை கோடி குஜராத் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே நாட்டு மக்கள் நினைக்கத் தொடங்கினர். காரணம் குஜராத்தின் வளர்ச்சி மோடியால் விளைந்ததல்ல, நூற்றாண்டு காலமாக குஜராத் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள மாநிலம்தான். இருப்பினும் மோடியைத் தூக்கி நிறுத்துவதற்காகவே இந்தப் பொய்ப்பிரச்சாரம் என்பதை விளக்கத் தேவையில்லை. மோடி மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என புதிய பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அடுத்த பிரதமர் என பொய்ப்பரப்புரை அனல் பறந்தன. இருப்பினும் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி அழைக்கப்படவே இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையில் உலகின் பிரபலமான 100 பேர் வரிசையில் மோடியும் பட்டியலிடப்பட்டார். மோடியின் அடிப்பொடிகள் ஆனந்தக் கூத்தாடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இணைய பயன்பாட்டாளர்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவாக வாக்குகளைக் குவித்தனர். மேல்தட்டு மக்கள் இதனையே அன்றாடக் கடமையாகக் கொண்டு திரிந்தனர். செயற்கையான பரபரப்பை ஏற்படுத்தி 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்குகள் மோடி பெற்றார். ஆனால் சரித்திரம் சந்தித்திராத வகையில் இதுவரைக்கும் யாருக்குமே நிகழாத ஒன்று நிகழ்ந்தது.

ஆம் மோடிக்கு எதிர்வாக்குகள் 2 லட்சத்து 66 ஆயிரம் விழுந்தன. இந்த ஆண்டின் உலகில் அதிகம் வெறுக்கப்படும் நபர் என்ற பெயரை மோடி பெற்றுவிட்டதாகக் கூறியதோடு நவீன நீரோ மன்னன் என இந்திய உச்சநீதிமன்றம் இடித்துரைத்ததையும் டைம் இதழ் தனது அட்டைப் படத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது. இனப்படுகொலையாளன் உலக அளவில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். மோடி விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

நிலநடுக்கம் குறித்து ‘அலர்ட்’ செய்யும் மொபைல்போன் அப்ளிக்கேஷன்!

நிலநடுக்கம் பற்றி அறிய புதியதோர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன். ஜியோநெட் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குன் தெரிந்து கொள்ள முடியும். எந்தெந்த இடங்களில் நிலநடுக்கும் வந்துள்ளது, எந்நெந்த பகுதிகள் பாதித்துள்ளது என்பது போன்ற தகவல்களை இருந்த இடத்தில் இருந்து எளிதாக பெற
முடியும்.

இதே போல் எர்த்குவேக் என்ற இன்னொரு அப்ளிக்கேஷனும், நிலநடுக்கத்தை பற்றிய தகவல்களை வழங்கும். இந்த அப்ளிக்கேஷன் 24 மணி நேரமும் நிலநடுக்கும் பற்றிய முழு விவரத்தினையும் தெரியப்படு்த்தும்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் நிலநடுக்கம் பற்றிய செய்திகளை உடனே தெரிந்து கொள்ளவும், மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்த அப்ளிக்கேஷன்கள் பெரிதும் உதவும். இந்த அப்ளிக்கேனில் கிடைக்கும் தகவல்களை எஸ்எம்எஸ், இ-மெயில், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் தகவல் பரிமாற்றம் செய்வதன் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தலாம்.

நிலநடுக்கும் வந்த இடங்களை இந்த அப்ளிகேஷன் வழங்கும் மேப் மூலமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது இந்த ஜியோநெட் ரேப்பிட் அப்ளிக்கேஷனை பெற வேண்டும் என்றால் கூகுள் ப்ளே இணையதளத்தின் மூலம் பெறலாம். இதை பற்றிய தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Description
Custom earthquake notifications from GeoNet Rapid (Beta).
The official GeoNet Quake app for Android.

Currently in beta - http://beta.geonet.org.nz/quakes

Features include:
* Displays quakes in list or on map.
* Filter quakes by intensity or location.
* Background updates of quakes and keep list for up to a week.
* Configurable notifications and time periods etc.
* Share quakes (via. SMS, Email, Twitter, Facebook, Google Plus etc.)
* Home screen widget.

வெள்ளைப்படுதா? உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துங்க!

பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் அம்சம் வெள்ளைப்படுதல். இதனால் மன அழுத்தமும், வேறு எந்த விசயத்திலும் கவனம் செலுத்த முடிவதில்லை. உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் இந்த வெள்ளைப்படுதலுக்கு இயற்கையிலே மருந்திருக்கிறது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும். அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

தலைவலி

வெள்ளைப் படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல். இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல். சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறும் என்கின்றனர் மருத்துவர்கள்

உஷ்ணமான உணவு

வெள்ளைப்படுதலை தவிர்க்க உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எண்ணெய் தேய்ங்க

அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் சூட்டை குறைக்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இது மனது தொடர்பான விசயம் என்பதால் பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மணத்தக்காளி சூப்

இந்த வெள்ளைப் படுதல் நோயை குணப்படுத்த வீட்டிலே மருந்துள்ளன. மணத்தக்காளி கீரை சூப் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மணத்தக்காளியுடன், பூண்டு, மிளகு, சின்னவெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் உஷ்ணம் குறையும், வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்

ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றிய உடன் அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

இதனை முறையாக செய்து அருந்தினால், வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்

குடிப்பழக்கத்தை மறக்கச் செய்ய வீட்டிலேயே இருக்குது தீர்வு

லேசாக உடம்பு காய்ந்தால், உடனே பாராசிட்டமால்...தலை வலித்தால் ஏதேனும் ஒரு பெயின்கில்லர்...தும்மினால் மாத்திரை, இருமினால் மருந்து...

அளவின்றி, அறிவுரையின்றி எடுத்துக்கொள்கிற எந்த மருந்தும், உயிருக்கே உலை வைக்கிற ஆபத்தில் முடியலாம் எனத் தெரிந்தும், யாருக்கும் அக்கறையில்லை. எடுத்ததற்கெல்லாம் மருத்துவரையும், மருந்துகளையும் தேட நினைக்கிற மக்களின் மனப்பான்மையை மாற்றும் முயற்சியாக ‘வீட்டுக்கொரு சித்த உணவியல் நிபுண’ரை உருவாக்கும் புதுமையான முயற்சியில் இறங்கியிருக்கிறார் சித்த மருத்துவர் அருண் சின்னையா. ‘நோயற்ற வாழ்க்கைக்கு மட்டுமின்றி, பிழைப்புக்கான ஒரு வழியாகவும் அமையும் சித்த உணவியல் துறை’ என்கிறார் அவர்.

‘‘நாம குடிக்கிற தண்ணீர்லேர்ந்து, சாப்பிடற ஒவ்வொரு உணவுக்கும் ஒரு மருத்துவக் குணம் உண்டு. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட ‘பதார்த்த குண சிந்தாமணி’ங்கிற புத்தகத்துலயே இதுக்கான குறிப்புகள் இருக்கு. நாகரிகம் என்ற பேர்ல மாறிப் போன விஷயங்கள்ல முதலிடம் நம்ம உணவுப் பழக்கத்துக்குத்தான்.

பெருசா, குண்டா இருக்கிற அரிசிதான் சத்தானது. சத்தே இல்லாத, மெல்லிசான, பாலிஷ் போட்ட அரிசியைத்தான் நாம விரும்பறோம். வைட்டமின் இல்லை, கால்சியம் கம்மினு நாமளாவே மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறோம். நம்ம வீட்டு சமையலறைக்குள்ள இருக்கிற மிளகு, சீரகம், வெந்தயத்துக்கு எந்த சத்து மாத்திரையும் இணையாகாது’’ என்கிற டாக்டர் அருண் சின்னையா, தொடர்ந்து சொல்கிற தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.

‘‘குடிப்பழக்கத்தை மறக்கடிக்க இன்னைக்கு என்னென்னவோ சிகிச்சைகள் செய்யறாங்க. குடிக்கிறவங்களுக்கு தினம் 100 கிராம் சிறுபருப்பையும், ஏதாவது ஒரு கீரையையும் சேர்த்துக் கடைஞ்சு கொடுத்தாலே, குடிக்கணும்ங்கிற எண்ணம் மாறும். பருப்புக்கு அப்படியொரு மகத்துவம் உண்டு.

அதேபோல உடல் பருமன்... தினம் காய்கறி சாலட்டையோ கீரையையோ ஒருவேளை உணவா சாப்பிட்டா, கணிசமான எடை குறையறதைப் பார்க்கலாம். எடை ஏறக்கூடாதுனு நினைக்கிறவங்க, அடிக்கடி ஓட்டல்ல ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடறதைத் தவிர்க்கணும்.

‘ஜங்க் ஃபுட்’ மோகத்துலேர்ந்து குழந்தைங்களை எப்படி மீட்கறதுங்கிறது எல்லா பெற்றோருக்கும் மிகப்பெரிய கவலையா இருக்கு. அந்த உணவுகளை சாப்பிடறதால உடனடியா அவங்களோட ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு குறையுது. பார்வைக்கோளாறு வருது. அலர்ஜி தாக்குது. அந்தக் குழந்தைங்களுக்கும் தினம் ஒரு கீரையும் பருப்பும் ஃப்ரெஷ் ஜூசும் கொடுத்துப் பழக்கப்படுத்தினா, ஜங்க் ஃபுட் மோகத்துலேர்ந்து மீட்கலாம். இது ஒருநாள், ரெண்டு நாள்ல நடக்காது. மாசக்கணக்கானாலும் அலுக்காம, தொடர்ந்து கொடுத்துப் பழக்கினாதான் பலன் தெரியும்.

பருமனைக் குறைக்க நினைக்கிற பலரும், இன்னிக்கு ஓட்ஸ் பின்னாடி ஓடறது சகஜமா இருக்கு. ஓட்ஸ் என்பது இந்தியாவுல இருக்கிறவங்களுக்கு ஏற்ற உணவே இல்லை. ரொம்பவும் வறண்ட உணவான அது, பனிப்பிரதேசத்துல வாழறவங்களுக்கானது. நம்மூர்ல அதை எடுத்துக்கிட்டா, ரத்தச்சுழற்சி மாறுபட்டு, அனீமியாவுக்கு அஸ்திவாரம் போட்டுடும்.

எதை சாப்பிடணும், எப்ப சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்னு தெரிஞ்சாலே, ஆரோக்கியம் கை நழுவிப் போகாமப் பார்த்துக்கலாம். அது புரியாம உணவு முரண்படும்போதுதான், நோய்கள் வெளிப்படுது. இதையெல்லாம் மக்களுக்கு சொல்றதுக்காக நான் ஆரம்பிச்சதுதான் ‘வீட்டுக்கொரு சித்த உணவியல் நிபுணர்’ கான்செப்ட்.

ஆங்கில மருத்துவத் துறைல, டயட்டீஷியன்னு சொல்ற சத்துணவு நிபுணர்கள் இருக்காங்க. அப்படியிருக்கிறப்ப, ‘அரசால அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவத் துறைலயும் அப்படி ஏன் ஒரு பிரிவு இருக்கக் கூடாது’ங்கிற எண்ணத்துல தொடங்கினது. சித்த உணவியல் படிக்கிறவங்களுக்கு, அது பிழைப்புக்கான வழியாகவும் அமையும்’’ என்கிறவர், சித்த உணவியல் நிபுணர்களுக்கான அஞ்சல் வழிக் கல்விப் பயிற்சி, அதைத் தொடர்ந்த செமினார் போன்றவற்றை நடத்துகிறார்.

‘‘மருத்துவம் என்னிக்குமே மக்களுக்குப் புரியாத புதிரா இருக்கக் கூடாது. எதுக்கெடுத்தாலும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி ஓடறது நல்ல அடையாளமில்லை. நம்ம வீட்டு சமையலறையைவிட சிறந்த மெடிக்கல் ஷாப் வேற இல்லை. அங்க உள்ள ஒவ்வொரு பொருளோட மகத்துவத்தையும் மருத்துவக் குணத்தையும் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, உங்க குடும்பத்துக்கு உங்களைவிட சிறந்த டயட்டீஷியனும் இல்லை!’’
நிறைவாகச் சொல்கிறார் அருண் சின்னையா.

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

பாஸ்போர்ட்டு APPLY செய்யப்போரிங்களா ?


பாஸ்போர்ட்டு APPLY செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க ! அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது,நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை உருவாக்கிய அந்த சகோதரர்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிர்க்குள் செல்வோம் ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் https://passport.gov.in/pms/Information.jsp Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும். அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா) Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்) First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும் Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY) Place of Birth: பிறந்த ஊர் District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறுநாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும் Qualification: உங்களது படிப்பு Profession: தொழில் Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை) Height (cms): உயரம் Present Address: தற்போதைய முகவரி Permanent Address: நிரந்தர முகவரி Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை Phone No: தொலைபேசி எண் Mobile No : மொபையில் எண் Email Address: இமெயில் முகவரி Marital Status: திருமணமான தகவல் Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர் Father's Name: தந்தை பெயர் Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும் உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண் Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள் Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம் File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்) Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள் [] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும் அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும,உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும்,போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம். முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு) · ரேசன் கார்டு · குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்) · வாக்காளர் அடையாள அட்டை · வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்) · துணைவின் பாஸ்போர்ட் பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_ · 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ் · பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் · கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும் வேறு சான்றிதல்கள் · 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ். · பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரிபப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM)தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை,முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும்,ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

வியாழன், ஏப்ரல் 12, 2012

ஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு?

ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.

ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.

ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.

இதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.

உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.

இந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.

வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.

ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.

நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.

உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.

வாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.

கையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.

குறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.

மேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com


கலைச்சொற்கள் :
ஸ்கைப் - Skype
மடிக்கணினி - Laptop
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
வெப்கேமரா - Web camera
மென்பொருள் - Software Application
தரவிறக்கம் - Download
பயனர் கணக்கு - User Account
ஸ்கைப் உள்ளே / வெளியே - Skype In / Skype Out
கடனட்டை - Credit Card
பேபால் - Paypal
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
செல்பேசி - Mobile / cell phone
வருடச் சந்தா - Yearly fee
வாய்ஸ் மெயில் - Voice Mail
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA - Personal Digital Assistant, Hand held devices

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

Fபனாரில் QITC - யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி- ஏப்ரல்-13-2012

Fபனாரில் QITC - யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி- ஏப்ரல்-13-2012
Inbox
x
uansar uansar@gmail.com

Apr 8 (1 day ago)

to bcc: me
கத்தாரிலுள்ள சகோதரர்களுக்கு.........

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்.....
இம்மெயில் தங்களை பூரண உடல், உள சுகத்துடன் சந்திக்க வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்தவனாக....


fபனாரில் QITC - யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி- ஏப்ரல்-13

நாள் : 13 -4-2012 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி முதல்
இடம் : Fபனார் உள்ளரங்கில் ( சூக் பலாஹ் அருகில் உள்ளது )

இன்ஷா அல்லாஹ்
வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் fபனார் உள்ளரங்கில் QITC நடத்தும் மாபெரும் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இந்நிகச்சியில் QITC மர்கசின் தாஈகள் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர். இந்திய இலங்கையைச் சேர்ந்த அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் தங்கள் குடும்பத்துடன் கலந்து பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்புரை :
அல்லாஹ்வுக்கே மார்க்கத்தை கற்றுக் கொடுப்போர்!
உரை சகோ.அப்துஸ் சமத் மதனி
(சவூதி மர்கஸ் அழைப்பாளர்)

உலக அதிசயங்களும் குர் ஆனும்
உரை சகோ.முஹம்மத் தமீம் MISc

மன அமைதிதரும் வணக்கம்
உரை சகோ. U.L. அன்ஸார் (மஜீதி)

குறிப்பு :
1 . பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது.
2 . தங்களின் வாகனங்களை Fபனார் கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 . நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகன வசதியற்றோருக்கு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவைபடுவோர் சகோ : காதர் மீரான் அவர்களை 55384932 ,77175891 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
4. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 55267530 ,70392915 ,66579598 ,77967653

கத்தாரிலுள்ள சகோதரர்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறும், இத்தகவலை கத்தாரிலுள்ள தங்களது உறவினர் நண்பர்களுக்கும் எத்தி வைக்குமாறும், இணைய தள வசதியுள்ள சகோதரர்கள் இவ்வறிவிப்பினை வெளியிட்டு உதவுமாறும் அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நோட்டீசை பார்வையிடவும்.

அன்புடன்,
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?

34. புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?
கேள்வி: புத்தர் பற்றி திருக்குர்ஆன் கூறுவது என்ன? என்று புத்த மத நண்பர் கேட்கிறார். அவருக்கு எப்படி விளக்கம் கூறுவது? - இலங்கை எம்.ஜே.எம். நிஜாம்தீன், ஜித்தா

பதில்: குர்ஆன், உலகத்தில் வந்த ஒவ்வொருவரையும் பற்றி குறிப்பிடும் வரலாற்றுப் புத்தகமல்ல. அவ்வாறு எழுதப்படுவதாக இருந்தால் இப்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு பெரிதாக குர்ஆன் ஆகி விடும்.

மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தால் அது நன்மை தரும் என்பதை மட்டுமே குர்ஆன் கூறும். அது தான் மனிதனுக்குத் தேவையானது. ஒரு சிலருடைய வாழ்க்கையில் மனித குலம் பெற வேண்டிய படிப்பினைகளை மட்டும் குர்ஆன் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.

எனவே தான் குர்ஆனில் புத்தர் பற்றிக் கூறப்படவில்லை. கூறப்படாததால் எந்தக் குறையும் இல்லை.

அதே சமயம் புத்தர் பற்றி எத்தகைய முடிவை மேற்கொள்வது என்று சிந்தித்தால் அதற்கான விளக்கம் இஸ்லாத்தில் உண்டு.

புத்தர் ஒரு காலத்தில் பிறந்தார். பின்னர் இறந்து விட்டார். இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் வருடங்கள் கடந்து விட்டன. அவற்றுள் சுமார் நூறு வருடங்களுக்குள் மட்டுமே புத்தர் வாழ்ந்திருப்பார். இத்தகைய ஒருவர் கடவுளாக இருக்க முடியாது. நம்மைப் போலவே வாழ்ந்து மறைந்தவரை வழிபட முடியாது; வணங்க முடியாது.

அவர் கடவுளாக இருந்தார் என்றால், உலகம் தோன்றி பல இலட்சம் வருடங்களாக அவர் இல்லாமல் இருந்தாரே அப்போது இவ்வுலகத்தை யார் நிர்வகித்தார்? என்றெல்லாம் திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு புத்தரை ஆய்வு செய்யலாம். அவரை வழிபடுவது தவறு எனக் கூறலாம்.

அது போல் அவரது புலால் உண்ணாமை என்ற கொள்கை எக்காலத்துக்கும் பொருந்தாது. மனித குலத்துக்கு நன்மை தராது என்று ஆய்வு செய்வதற்கான வாசலை திருக்குர்ஆன் திறந்து வைத்துள்ளது.

எனவே புத்தரானாலும், ராமரானாலும், கன்பூஷியஸ் ஆனாலும் நேற்று தோன்றிய ரஜ்னீஷ் ஆனாலும் இன்றைக்கு இருக்கிற சாய்பாபாக்கள் ஆனாலும் அவர்களைப் பற்றி எத்தகைய முடிவுக்கு வரலாம் என்று ஆராயப் புகுந்தால் திருக்குர்ஆனில் மிகத் தெளிவான விடை உள்ளது.

இவர்களது பெயர்கள் தான் குர்ஆனில் இருக்காதே தவிர இவர்களது நடவடிக்கைகள் குறித்து என்னென்ன முடிவெடுக்கலாம் என்பதற்கு விடை இருக்கிறது. அதை உங்கள் புத்த மத நண்பருக்குக் கூறுங்கள்.

35. மாற்று மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?
கேள்வி : மாற்று மத நண்பர்கள் இருவர் நோன்பு வைத்தும், தொழுதும் வந்தார்கள். அதை நமது சகோதரர் ஒருவர் நீங்கள் நோன்பு நோற்பதும், தொழுவதும் பாவம். அதனால் இனி நோன்பு வைக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அவர்களிடம் நீங்கள் சுன்னத் செய்யவில்லை. கலிமா சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா? அவர்களுக்கும் நன்மை கிடைக்குமா? - குடவாசல் எம். கமால் பாட்சா, மயிலை.

பதில் : இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. நாம் இத்தகையோரைத் தடுக்கலாமா? என்பது முதல் விஷயம். இதனால் அவருக்குப் பயன் ஏற்படுமா? என்பது இரண்டாவது விஷயம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத சிலர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுகையிலும், இன்ன பிற வணக்கங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இன்னும் சொல்லப் போனால் போர்க் களத்திற்குக் கூட நபிகள் நாயகத்துடன் சென்றனர்.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. சுயநலனுக்காகவும், உலக ஆதாயம் கருதியும் இப்படிச் சிலர் நடிக்கிறார்கள் என்று குர்ஆன் மூலம் நபிகள் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் யார் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் அவர்களில் ஒருவரையும் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசிக் காலம் வரையிலும் இத்தகையோர் இருந்தனர்.

நீங்கள் சுட்டிக் காட்டுவோர் அவ்வாறு நடிக்கின்ற சந்தர்ப்பவாதிகள் அல்லர். இஸ்லாத்தில் சில காரியங்கள் அவர்களுக்கு உண்மையாகவே பிடித்துள்ளன. அதில் கவரப்பட்டு அதைக் கடைப் பிடிக்கும் போது இன்னும் பல அம்சங்களை அவர்கள் உள்ளூர விரும்பலாம்.

முஸ்லிமுக்குப் பிறந்து விட்டு சமாதிகளை வணங்கு வோரை விட இவர்கள் மேலானவர்கள் எனலாம்.

வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கும், சுன்னத் செய்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சுன்னத் செய்வது என்பது விரும்பத்தக்க நன்மை பயக்கும் ஒரு காரியமாகத் தான் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. கட்டாயக் கடமையாக கூறப்படவில்லை. சுன்னத் என்ற சொல்லுக்கு கட்டாயக் கடமையில்லாத நிலையில் விரும்பத்தக்க நபி வழி' என்பதே பொருள்.

இஸ்லாமியக் கொள்கை முழக்கமான 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்' என்பதை நம்பிக்கை கொண்டு வாயால் மொழிவது அவசியம் தான்.

அவர் நம்பிக்கை கொண்டவரா? இல்லையா? என்பதற்கு நாம் யாரும் சான்றிதழ் கொடுக்க முடியாது. ஆனால் தொழுகை, நோன்பு மூலம் நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்துகிறார்.

யார் நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்ததை உண்கிறாரோ அவர் முஸ்லிம். முஸ்லிமுக்கு உரிய எல்லா உரிமையும் அவருக்கு உண்டு என்பது நபி மொழி.
(நூல்: புகாரி 378)

எனவே இத்தகையோரைத் தடுக்கக் கூடாது. தடுப்பது தான் பாவம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கேள்விப்பட்டு பூரிப்படைகிறோம். பெரும்பாலும் எவ்வாறு பரவுகிறது?

பள்ளிவாசலுக்கு வந்து ஓரிரு நாட்கள் முஸ்லிம்களின் தொழுகை முறையைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களும் முஸ்லிம்கள் செய்வதைப் போல் உளூச் செய்து சேர்ந்து தொழுவார்கள். அதில் கிடைக்கும் மன நிறைவால் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள். வேறு வகையிலும் இஸ்லாம் பரவினாலும் இப்படித் தான் அதிக அளவில் பரவுகிறது.

எனவே, இத்தகையோரை விரட்டியடிக்காது ஒழுங்குகளைச் சொல்லிக் கொடுத்தால் நமக்கே அறிவுரை கூறும் அளவுக்கு உயர்வார்கள். இது தடுப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.

தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைச் சிரமப் பட்டு நிறைவேற்றும் அந்தச் சகோதரர்கள் மறுமையில் அதற்கான பலனை அடைய வேண்டுமானால் வேறு கடவுள் வழிபாடுகளை அவர்கள் விட்டு விட வேண்டும். பல கடவுள் நம்பிக்கையும், ஒரு கடவுள் நம்பிக்கையும் ஒரு உள்ளத்தில் இருக்கக் கூடாது என்பது இறைவன் கவனிக்கும் முதல் விஷயமாகும்.

இவ்வணக்கங்களுக்கு முன்னர் ஒரே ஒரு கடவுள் தான் உலகிற்கு இருக்க முடியும். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவனது தூதர் என்பதையும் நம்புவார்களானால் இந்தச் செயல் அர்த்தமுள்ளதாக அமையும்.

குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்ட்

நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, பாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் போன்றவற்றினால் இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடலை குறைக்கிறேன் பேர்வழி என்று சந்தைகளில் கூவி கூவி விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி விழுங்குகின்றனர். இவ்வாறு உடல் மெலிவதற்காக உட்கொள்ளப்படுத் மாத்திரைகளினால் கடுமையான இதய பாதிப்புகள் ஏற்படும் என்று அமெரிக்காவில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் மார்வின் கொன்ஸ்டம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, யுஏஇ, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலோனோர் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நீரிழிவு, இதயபாதிப்பு போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் உடல் மெலிவதற்காக மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

குண்டு உடலை இளைக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளால் இதயத்திற்கு ஆபத்தாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை விற்பனை செய்ய அமெரிக்க, ஐக்கிய அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசியை கட்டுப்படுத்தும்

உடல் எடையைக் குறைக்கவும், உடல் மெலியவும் பயன்படுத்தும் மாத்திரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது sibutramine(சிபுட்ராமின்) என்ற வேதிப்பொருளாகும். இப்பொருள் இதய அதிர்ச்சிக்கு காரணமாக அமையும் என மருத்துவ உலக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மருந்துகளில் சில தேவையற்ற கலவைகள் உள்ளன. இவை பசியை இல்லாமலாக்கும். இதனால் சாப்பிடும் உணவின் அளவு குறையும். ஆனால், இவை கடுமையான உடல்நலனை சீர்கெடுக்கும் பல பிரச்சனைகளை உருவாக்குவதாக புகார்கள் வெளியாகின.

இதயத்தை பாதிக்கும்

இதயத்துடிப்பை மிக அதிகமாக அதிகரிக்கச் செய்யும் sibutramine(சிபுட்ராமின்) இதய அதிர்ச்சிக்கும், முடக்குவாதத்திற்கும் காரணமாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து sibutramine(சிபுட்ராமின்) வேதிப்பொருள் அடங்கிய மருந்துகளை சந்தையிலிருந்து வாபஸ்பெற ஒரு சில நாடுகளின் அதிகாரிகள் தீர்மானித்தனர்.

மாத்திரைக்கு தடை

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் இம்மருந்துகள் இதயம் தொடர்பான நோய்களுக்கும், அதிக இரத்த அழுத்தத்திற்கும் காரணமாவதாக யு.ஏ.இ சுகாதார அமைச்சகத்தின் மெடிக்கல் ப்ராக்டீஸ் அண்ட் லைசன்ஸ் பிரிவு சி.இ.ஒ டாக்டர்.அமீன் அல் அமீரி தெரிவித்துள்ளார். ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேசனின் உத்தரவின் படி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த வேதிப்பொருள் அடங்கிய இதர சில மருந்துகள் ஏற்கனவே யு.ஏ.இயில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.இதயத்தின் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கும் என்பதால் உடல் மெலிய பயன்படுத்தப்படும் மாத்திரைகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து உணவுகள்

நம் நாட்டில் பல தொலைக்காட்சிகளில் இன்றைக்கு உடலை இளைக்கச் செய்யும் மாத்திரைகளும், டெலிஷாப்பிங் முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் உடல் எடையை குறைக்க முறையான உடற்பயிற்சியும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உட்கொண்டாலே போதும். கெட்ட கொழுப்புகள் அடங்கிய பீஸா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள். இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்காமல் செயற்கையாக உடல் எடையை குறைக்க நினைத்தால் தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதும் அவர்களின் எச்சரிக்கையாகும்.
Iniyavan Thanjai

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்

பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.


ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது.

நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந்துகளின் பக்க விளைவாலும், சிகிச்சைகள் காரணமாகக் கூட தலை முடி உதிரலாம்.

தலை முடி சுத்தமில்லாமல் இருப்பது, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டீஷனர் காரணமாகக் கூட தலைமுடி உதிரலாம். அடிக்கடி டிரையர் உபயோகிப்பது, அழுத்தமாக சிகை அலங்காரம், அயர்னிங் போன்றவையும் தலைமுடி உதிரக் காரணமாகலாம். அதிகமான மன அழுத்தம் கூட முடி உதிரக் காரணமாக இருக்கும். இதற்கு யோகா போன்ற தியானங்கள் பலனளிக்கும்.

பொதுவாக தலைமுடி உதிர்ந்து போன பிறகு அதற்காக சிகிச்சை செய்வதை விட, தலைமுடி நன்றாக இருக்கும் போதே அதனை சரியாக கவனித்தால் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

எப்போது ஷாம்புவோ அல்லது எண்ணெயையோ தலைக்கு வைக்கும் போது தலையில் இருந்து ஆரம்பித்து தடவுங்கள்.


தலைமுடியின் நுனிப் பகுதியை அவ்வப்போது வெட்டி விடுங்கள். இதனால் தலைமுடி நுனி உடைவது தடுக்கப்படும்.


தலைக்கு தடவும் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதனை தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதால் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.


அதிகமாக தண்ணீர் பருகினால் சருமப் பிரச்னைகள் குறையும். இதனால் தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.


சரியான தூக்கம் எந்த அளவிற்கு உடலுக்கு அவசியமோ அதே அளவிற்கு தலைமுடிக்கும் தேவைப்படுகிறது.


அதிகமாக தலை முடி உதிர்பவர்களுக்கு...


இளநீர் தண்ணீரை அல்லது தேங்காப் பால் கொண்டு தலை முடியைக் கழுவுங்கள்.


தயிர் அல்லது டீ டிக்காஷனை தலைக்கு குளிக்கும் போது தலை முடிக்கு போட்டு தேய்த்துக் குளிக்கலாம்.


கறிவேப்பிலையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இருக்கும் தலைமுடிக்கு அதிகமாக பலம் கிடைக்கும்.


இதற்கு மேலும் தலைமுடி உதிர்ந்தால் அது உங்கள் பரம்பரை சார்ந்த விஷயமாக இருக்கலாம்.

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்!

கேள்வி : இஸ்லாமிய மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக்கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும். மு. ஷேக்மைதீன், தென்காசி.

பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.

வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.

ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை - தீமைகளை ஏக இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.

'ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்? நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.

சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங்கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.

வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.

வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். உலகில் தான் முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்லிம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.

31. இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?
கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான் முறையே மாமனார், மருமகன், பேரன் என பொறுப்பேற்க முடிந்ததா? இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவது. விளக்கம் தரவும். -கா.ஷபீயுல்லாஹ், ஏரிப்புதூர்

பதில்: ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு வாரிசுரிமை ஒரு காரணமாக ஆகாது. எந்தப் பணியையும் அதற்குத் தகுதி உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனார் என்ற அடிப்படையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நிச்சயமாக அப்பதவி வழங்கப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அப்பதவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்கரிடம் வழங்கிச் செல்லவில்லை. யாரையும் நியமனம் செய்யாமல் தான் மரணித்தார்கள்.

நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பின் யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பதில் நபித்தோழர்களிடையே மிகப்பெரிய கருத்து மோதல் எல்லாம் ஏற்பட்டது. அபூபக்கருக்கும் உள்ளூர் வாசிகளின் தலைவரான ஸஃது அவர்களுக்கும் கடும் போட்டியும் நிலவியது.

மக்களின் அதிகப்படியான ஆதரவின் காரணமாக அபூபக்கர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருந்ததை மக்கள் கண்டதால் தான் பொறுப்பை ஒப்படைத்தனர்.

ஒரு மனிதனின் சொத்துக்களை அவனது வாரிசுகள் அடைவார்கள் என்று உலகுக்குச் சட்டம் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதற்கும் தனது குடும்பத்தார் வாரிசு இல்லை; அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்கள்.

தமக்கு உடமையான சொத்துக்களையே அரசுக் கருவூலத்தில் சேர்க்குமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமக்கு உடமையாக இல்லாததைத் தமது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பார்களா?

திருக்குர்ஆனின் போதனையும், நபிகள் நாயகத்தின் அறிவுரைகளும் குலம், கோத்திரத்தின் அடிப்படையில் ஒருவரும் சிறப்படைய முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றன.

அதே சமயத்தில் ஒரு ஆட்சித் தலைவரின் வாரிசுக்கு அதற்கான தகுதி இருந்து அந்தத் தகுதியின் காரணமாக அப்பதவியைப் பெற்றால் அதை இஸ்லாம் எதிர்க்காது என்று கூறலாம். இதனால் தான் அலீ (ரலி) அவர்களுக்குப் பின் அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களிடம் மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள்.

சனி, ஏப்ரல் 07, 2012

உதடு வெடிப்புக்கு...!

உதடுகள் அழகாக சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்......

அருமருந்தான அருகம் புல்....

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.

பல் ஈறு நோய்களுக்கு.....

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

உதடு வெடிப்புக்கு...

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

கட்டி கரைய....

கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.
Iniyavan Thanjai

வியாழன், ஏப்ரல் 05, 2012

இலவச மருத்துவ முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ....


இறைவன் நாடினால்... எதிர்வரும் 06-04-2012 அன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 12 மணி வரை அஜ்மான் கோல்டு சூக் எதிர்புறம் உள்ள "யாசின் மெடிக்கல் சென்டரில்"

இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராக...

சகோ.அதிரை அப்துல் ஹாதி.M.B.A.,M.com.,
அமீரக தலைவர். தமுமுக

சகோ.ஹுசைன் பாஷா.M.B.A.,M.A.,M.com.,M.phil.,L.L.B.,(Law)
அமீரக துணை தலைவர். தமுமுக

ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் பொதுவான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். சகோதரர்கள் அணைவரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.

என்றும் மக்கள் சேவையில்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
அஜ்மான் மண்டலம், ஐக்கிய அரபு அமீரக

புதன், ஏப்ரல் 04, 2012

நரேந்திர மோடிக்கு எதிர்ப்பை தெரிவிப்போம்

நரேந்திரமோடியை - பிரபல ஆங்கில பத்திரிக்கையான 'டைம்' ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் மிகச்சிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது. சங்பரிவாரிகளின் ஆதரவுடன் அதிக ஓட்டுக்களை பெற்று முன்னனியில் இருக்கிறார்.ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த அவர் அப்பட்டியலில் இடம்பெறக்கூடாது என்று எதிர்ப்பை தெரிவிக்க இறுதி நாள் ஏப்ரல் 6, 2012.டைம் பத்திரிகை, உலகின் 100 ஆற்றல் மிக்க மனிதர்களின் பட்டியலில் குஜராத் முதல்வர் மோடியை இணைக்கலாமா என்று கேட்டு ஒரு கருத்துகணிப்பை நடத்துகின்றது. இரண்டு நொடிகள் செலவிடுவதின் மூலம் மோடியை அந்த பட்டியலில் இருந்து நாம் கீழிரக்கலாம். கீழ்காணும் லின்க்கிற்கு சென்று, மோடி பட்டியலில் இருக்கலாமா என்ற கேள்விக்கு "No Way" என்பதை சுட்டி "Submit" என்று கொடுத்துவிடுங்கள். அவ்ளோதான். Lets start..http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109997,00.htmlஇரத்த வெறி பிடித்த நரேந்திர மோடிக்கு எதிராக தங்களின் ஓட்டையும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி அவர்களையும் ஒட்டு போட சொல்லுங்கள்.

பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

நாம சொன்னா யாருதான் கேட்கிறா? எல்லாம் தலைப்படிக்கிறார்கள்! நல்லதை சொன்னா இதுக்கு ஆதாரம் இருக்கிறதா? எந்த ஆராய்ச்சி நிறுவனம் கூறியது? அப்படினா எதுவரை எத்தனையோ பேர் குடிக்கிரார்களே ஏன் அவர்களுக்கு மட்டும் நோய்வந்து தாக்கவில்லையே என்றெல்லாம் சில்லி கேள்விகளை கெட்டு நம்மை நாமே நோய்களுக்கு ஆட்படுத்துகிறோம் என்பது உண்மை!


சரி. ஒருத்தர் ஏதோ நன்மையென கூறுகிறார், அதை சரியென்று நாம் கேட்போமா? ம்ஹூம். அந்த நல்ல பழக்கம் நம்மகிட்டே இல்லையே! அப்படியிருந்தால் நாம் எத்தனையோ கெடுதல்கள் நிறைந்த பொருட்களை எல்லாம் தடைபோட்டுயிருப்போமே நமக்குள்ளே! நாம் தான் அநியாய விளம்பரத்திற்கு அடிமையாகிவிட்டோம்.
சரி. நடந்தது நடந்ததகாக இருக்கட்டும் ... இனியாவது இதைப் படித்துவிட்டு பலன்பெறுங்கள்!ரொம்ப பேசவேண்டாம் ...! நல்ல இருந்தால் நீங்களும், உங்களின் குடும்பமும் சந்தோசமாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் அறிந்துகொள்ளுங்கள். ---- பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்! புதுடெல்லி: குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அவசர உணவுகள்இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான்.

புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ரைடு சிக்கன் மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே. எப். சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர். குளிர்பானங்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது.

தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

வாய்ப்புண் சரியாக பாட்டி வைத்தியம்

பெரும்பாலான மக்கள் இதுபோன்ற எளிய வைத்திய முறைகளை விரும்புவதில்லை காரணம் மாடர்ன் உலகில் பயணித்துக் கொண்டியிருப்பதால் பழமை வாய்ந்த மருத்துவ முறைகளை கண்டுகொள்வதில்லை. நாம் மாடர்னாக வாழவேண்டியதுதான் அதற்காக நமது ஆரோக்கியத்தை இழந்துவிடக் கூடாது என்பது உண்மை.

அவசியமென்றால் மற்ற வைத்தியத்தை விரும்புவதில் தப்பில்லை ஆனால் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு நமக்கு தெரிந்த மருத்துவ முறைகளை பயன்படுத்தி பலன்பெருவதற்கு முயலுங்கள். இன்ஷா அல்லாஹ்..பயன் பெறலாம்...!

-----

வாய்ப்புண் சரியாக பாட்டி வைத்தியம்


கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாவது மட்டுமில்லாமல் பல தொந்தரவுகளும் சேர்ந்தே தொற்றிக் கொள்கிறது. பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படுவதும் இந்த கோடையில் தான். வாய்ப்புண் பல காரணங்களால் வருகிறது அவை ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களுக்கு வாய்ப்புண் இருந்தல் நீங்களும் நீங்களும் இவைகளை பாலோ பண்ணுங்க

மஞ்சள்

எந்த வகை நோய்களுக்கும் சரி அழகிற்கும் சரி முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் தான். அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.

நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.

புதினா இலை

புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.

வெந்தைய இலை

வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

துளசி இலை

ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

வாய்ப்புண் இருப்பின் விரைவில் குணப்படுத்த விரும்பினால் பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்.
Iniyavan Thanjai

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!

நாம் சாதாரணமாக சொன்னோம் என்றால் மிகப்பலர் கேட்பதில்லை. அது என்னவோ கவுரவக் குறைச்சல் ஏற்படுகிரமாதிரி இவையெல்லாம் தவிர்த்துவிட்டு பெப்சி, கோகோ கோலா, 7 UP, SPRITE, போன்றவற்றை குடித்தால் தான் செரிமானம் ஏற்படும் என்பது நம்மவர்களின் கவுரவ என்னம். ஆனால் அது எந்தளவிற்கு நமக்கு உடலை கெடுக்கும் என்பதை மறந்துபோய் விடுகிறார்கள் அனாவசியமாக!

எவ்வித கலப்படமில்லாத, கெமிக்கல் கலக்காத ஓன்று என்றால் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள செய்தியினை படித்தாலே தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்....!

சிறிது நேரம் செலவளித்தாலும் அல்லாஹ்வின் உதவியால் பலநேரம் நிம்மதியாக இருக்கலாம்....! யோசிங்கள்...புரிந்துகொண்டு செயல்படுத்துங்கள் உங்களின் அன்றாட வாழ்க்கை முறையில்....! இன்ஷா அல்லாஹ்..!

---------------------

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!

நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி, சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் சேர வேண்டும். அதேபோல் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உணவு ஜீரணமாகாவிட்டால் வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது.

நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். இதற்கு வயிற்றில் உள்ள ‘சூடு’தான் உணவு ஜீரணமாக உதவும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த சூட்டை குறையவிடுவதில்லை.

அஜீரணத்தை போக்க

அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் போன்றவையும் அஜீரணத்தை ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இஞ்சி, எலுமிச்சை

ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.

இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும். இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.

சீரகம், பெருங்காயம்

ஒரு டம்ளர் தண்ணீரில் சீரகம் ஒரு டீ ஸ்பூன் ஒரு டீ ஸ்பூன் கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம். ஓமம் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி, நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.

கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.

கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த நீரும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

வயிற்று உப்புசம்

ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.

புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம். இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது. கறிவேப்பிலை சாறும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து ஜீரணத்திற்கு உதவும்.

திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும். அரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம். நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Iniyavan Thanjai
Related Posts Plugin for WordPress, Blogger...