செவ்வாய், ஏப்ரல் 30, 2013

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி ?

கேள்வி: காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா? அப்துல்லாஹ், கீழக்கரை

பதில்: காதலிக்கவில்லை என்ற கோபம்தான் இதற்குக் காரணம். இந்தக் கோபத்தை வெளிப்படுத்த ஒருவன் ஆசிட்டைப் பயன்படுத்துகிறான். ஆசிட் கிடைக்காவிட்டால் அரிவாளைப் பயன்படுத்துவான். அல்லது வேறு எத்தனையோ சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவான். எனவே ஆசிட் கிடைக்காமல் செய்வது இதற்கான தீர்வாகாது.

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட மாடலில் ஒரு சட்டை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்து விலை கட்டுப்படியாகாவிட்டால், என்ன செய்கிறோம்? அதை மறந்துவிட்டு கிடைப்பதை வாங்கி அணிந்து கொள்கிறோம்.

குறிப்பிட்ட உணவுக்கு ஆசைப்படுகிறோம். அந்த உணவு கிடைக்கவில்லை எனில், அதையே ஜெபம் செய்துகொண்டு செத்துப் போகமாட்டோம். அது கிடைக்காவிட்டால் வேறு உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், மருத்துவக் கல்லூரிகளைக் கொளுத்துவோமா? வேறு துறையைத்தான் தேர்வு செய்வோம். இதுதான் எதார்த்தம்.

இதுதான் வேண்டும். இது தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பது மனநோய்.

அதுபோல் ஒரு ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணிற்கும் ஆண் தேவை. ஒருவனை அல்லது ஒருத்தியை விரும்புகிறோம். அவள் இன்னொருவன் மனைவியாக இருக்கலாம். இன்னொருவனை விரும்புபவளாக இருக்கலாம். அல்லது நம்மை அவளுக்குப் பிடிக்காது இருக்கலாம். அதன் காரணமாக அவள் நம்மை நிராகரித்துவிட்டால், வேறு ஒருவரைத் தேடிக் கொண்டால், அதுதான் எதார்த்தம். அவன்தான் வேண்டும் - அவள்தான் வேண்டும் என்று அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அது மனநோய்.

இந்த மனநோய்தான் ஆசிட் வீச்சிற்கும் தன்னைப் பிடிக்காதவரை அழித்தொழிக்கவும் காரணம்.

இந்த மனநோயை அறிவு ஜீவிகள்(?), ஊடகங்கள் போன்ற விஷக்கிருமிகள் காதல் என்ற பெயரில் பரப்புகின்றன. இவன்தான் வேண்டும் - இவள்தான் வேண்டும் என்று உருகுவதுதான் சிறந்தது. அதுதான் தெய்வீகக் காதல் என்றெல்லாம் மக்களுக்கு மனச் சிதைவை இவர்கள் தான் ஏற்படுத்துகின்றனர்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலை மாறாதவரை இதுபோன்ற எழுத்தாளர்கள் ஊடகத்துறையினரில் உள்ள விஷக்கிருமிகளை அடக்கி ஒடுக்க சட்டம் போடாதவரை இதுபோன்ற சம்பவங்களை ஒருக்காலும் தடுக்கவே முடியாது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவதும் தான் காதல். விருப்பம் நிறைவேறாவிட்டாலும் நான் அவளையே/அவனையே நினைத்து உருகுவேன் என்பது காதல் அல்ல - அது மனநோய்தான். தங்களது மகன் அல்லது மகளுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு, அதையே நினைத்து உருகிக் கொண்டு இருந்தால், ஆகா தெய்வீகக் காதல் என்று ஊடகங்களின் முன்னாள் பாராட்டிக் கொண்டா இருப்பார்கள்? தான் விரும்புவதையே மக்களுக்கும் விரும்புபவன்தான் அறிவாளி. தொலைக்காட்சியில் முகம் காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக பேசுபவன் அறிவாளி இல்லை என்ற விழிப்புணர்வை எற்படுத்தினால், இதுபோன்ற செயல்களை ஓரளவு தடுக்கமுடியாது.

(குறிப்பு ஆசிட் வீசியவன் அவள் தனக்கு கேடு செய்தால் என்பதற்காகவோ தனது சொத்தைப் பறித்துக் கொண்டால் என்பதற்காகவோ ஆசிட் வீசவில்லை. தனக்கு அவள் கிடைக்கவில்லை என்ற வெற்தான் காரணம். அந்த வெறியை அவனுக்கு ஊட்டியவர்கள் அறிவு ஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் தான்)

திங்கள், ஏப்ரல் 29, 2013

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!

நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.

இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

இவ்வாறில்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரைவாக தரவிறக்கம்(Download), மற்றும் கோப்புகளை மேலேற்றம்(upload) செய்வதற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப்படுத்தவும் கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்குப் பயன்படும்.

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:

நீங்கள் Windows XP வைத்திருப்பீர்களானால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Windows XP யில் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி முறைகள்:

1.Strar button கிளிக் செய்யுங்கள்.
2. Run கிளிக் செய்யுங்ள். அல்லது CTRL+R கிளிக் செய்தாலும் Run Window-வைப் பெற முடியும்.
3. Run Window-வில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4. கிளிக் ஓ.கே.
5. அடுத்து தோன்றும் திரையில் computer configuration==>administrative Templates தேர்ந்தெடுங்கள்.
6. தோன்றும் சப்மெனுவில் (submenu) நெட்வொர்க் network தேர்ந்தெடுங்கள்.
7. இப்போது தோன்றும் சப்மெனுவில் (submenu) Qos Packet scheduler என்பதை கிளிக் செய்யுங்கள்.
Limit reservable bandwith என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அதில் Band with limit என்பதில் 4% என கொடுத்து OK கொடுங்கள்.
இப்போது செய்த மாற்றங்களை சேமித்துவிடுங்கள்.

அனைத்தையும் சரிவர செய்தவுடன் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்துவிட்டு இன்டர்நெட்டை இயக்கிப் பாருங்கள்.. நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். முன்பை விட இணைய வேகம் அதிகரித்திருப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்..


விண்டோஸ் 7 - ல் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி:

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்களா? அப்படி எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களின் இணையவேகம் அதிகரிக்கும்.

Windows 7-ல் இணைய வேகத்தை அதிகரிக்க முதலில்
1. ரன் விண்டோவை திறக்கச் செய்யுங்கள். (இதற்கு search பாக்சில் run என கொடுத்து என்டர் தட்டலாம். அல்லது Start+R கொடுத்து ரன் விண்டோவைத் திறக்கலாம்.)
2.திறக்கும் run window-வில் system.ini என தட்டச்சிடுங்கள்.
3. புதிய விண்டோ திறகும். அதில் ஏற்கனவே சில நிரல்வரிகள் இருக்கும். அதில் மாற்றம் எதுவும் செய்யவேண்டாம்.
4. திறந்த கோப்பில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து கோப்பில் உள்ள நிரல்வரிகளுக்கு கீழே பேஸ்ட் செய்துவிடுங்கள்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

பேஸ்ட் செய்தவுடன் Ctrl+S அழுத்தி மாற்றத்தை சேமித்துவிடுங்கள். அல்லது file==>save கிளிக் செய்யவும். மாற்றம் செய்ததை சேமித்தவுடன் கோப்பை மூடிவிடவும்.
தற்போது Windows xp பயனர்களுக்கு சொன்னதுபோலவே உங்கள் கணினியை Restart செய்யுங்கள். பிரௌசரை திறந்து இணையத்தின் வேகத்தை சோதனை செய்யுங்கள். மாற்றம் தெரிகிறதா?

புதன், ஏப்ரல் 24, 2013

குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம் உண்மை

பல தலைமுறைகளை அவமானப் படுத்தி அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. அதிர்ச்சி ரிப்போர்ட்.

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் Z தமிழ்’ சேனலில`சொல்வதெல ்லாம் உண்மை’னு ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்த ு செய்து கொண்டிருக்கிறார ்..

ஏற்கனவே விஜய் டிவியில் லட்சுமி அரைத்த `கதையல்ல நிஜம்’ என்ற மாவுதான் இதுவும்.

இப்போது நமக்கு பிரச்னை அந்த மாவு அல்ல.. அதில் வந்து சிக்கும் அப்பாவி மக்கள். அதிகமாக கள்ளத்தொடர்பு பஞ்சாயத்துகளே அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுக ிறது.

பெருவாரியாக வர்க்கரீதியாகவும் கல்வியிலும் சமூக அந்தஸ்த்திலும்கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்களே சேனல்காரர்களின் டார்கெட்.

அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு தங்களின் குடும்பத்தின் அந்தரங்க கதைகளை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது சரியா.. நாம் வீடியோ வடிவில் கொடுக்கும் வாக்குமூலங்கள் பல தலைமுறைகளாக நமது சந்ததிகளை அவமானத்திற்குள் ளாக்குமே என்பது குறித்த எந்த தெளிவுமற்றவர்கள ாகவே இருக்கிறார்கள்.

மிகச்சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்னையை ஒரு சேனலில் பதிவுசெய்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும்ஏற்றுகிறார்கள்.

இன்று விவரம் தெரியாமல் டிவியில் வாக்குமூலம் கொடுத்தவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இதை காண நேர்ந்தால் எவ்வளவு அவமானத்திற்குள் ளாகும். பேசினால் தீர்த்துவிடக்கூ டிய பிரச்னையை டிவியில் ஒளிபரப்பி பின் எப்போதும் அந்த குடும்பம் ஒன்று சேரவே முடியாதபடி செய்துவிடுகிறார ்கள்.

அதோடு நிகழ்ச்சியில் திடீர் என்று அடிதடியெல்லாம் நடக்கிறது. விசாரித்ததில் திட்டமிட்டே அப்படியான சூழலை டிவி நிர்வாகமே உருவாக்குவதாக தெரிகிறது.

அதாவது ஸ்டூடியோவுக்குள ் ஒரு தரப்பு கதை சொல்லிக்கொண்டிர ுக்கும். மறு தரப்புக்கு பக்கத்து அறையில் பெரிய டிவியில் அங்கு நடப்பதை ஒளிபரப்பி அவர்களுக்கு வெறியேற்றுவார்களாம். அப்புறமென்ன உள்ளரங்கில் கதை சொல்பவர்கள் மீது கோபத்தில் பாய அதை சேனல் ஆட்கள் சூட் பண்ணி குஷியாகிவிடுவார ்களாம்..

ஏன் `அவன் பொண்டாட்டிய இவன் கரெக்ட் பண்றது.. இவ புருசனை அவ கரெக்ட் பண்றது’ போன்ற சம்பவங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் தொழிலதிபர்கள் வீட்டில் நடப்பதில்லையா என்ன..?திறமையிருந்தால ் அப்படிப்பட்ட பிரபலங்கள் அல்லது பணக்காரர்களின் ஒரு குடும்பத்தைகூட்டி வந்து இப்படி சந்தி சிரிக்க வைக்க முடியுமா.. ?

முடியாதென்பதால் விபரமில்லாத அப்பாவிகளின் குடும்பத்தை இப்படி டிஆர்பி ரேட்டிங்கிற்காக சீரழிப்பது அசிங்கமாக இல்லையா..

முதல் வேலையாக இந்தமாதிரியான நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

முஹ்ம்மது நபியை அவமதித்து திரைப்படம் எடுத்தவர் இஸ்லாத்தை ஏற்றார்

இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார்.

ஒல்லாந்து நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியின் அங்கத்தவரான “ஈர்னாத் பஙன்டூர்” தான் இஸ்லாத்தை ஏற்று மதீனா சென்று இறைதூதர் (ஸல்) அவர்களின் கப்ரின் முன்னால் நின்று கண்ணீர் மலுக அழும் நாள் வரும் என்பதை ஒரு போதும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

“உக்காஸ்” என்ற சவுதி பத்திரிகை அவருடன் மதீனா நகர் சென்று அவரை பேட்டி கண்டது. அதில் அவர் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் தீவிர வலதுசாரி கட்சியில் தான் ஒரு அங்கத்தவராக இருந்து குறித்த திரைப்படத்தை இயற்றுவதில் பங்கு கொண்டதாகவும், அதனை அடுத்து இஸ்லாமிய உலகில் எழுந்த பாரிய எதிர்பலைகளை தொடர்ந்து தான் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகை தேடலின் போது இறைத்தூதரின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள பற்றின் ரகசியத்தை தன்னால் புரிய முடிந்தது. அந்த பின்னணியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இறைத்தூதரின் கபுருக்கு முன்னால் நின்று அவர் கடுமையாக அழுததாக குறித்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாத்தை பற்றிய ஆழமான தேடல் தான் இளைத்த பாரிய தவறை தனுக்கு தெளிவாக உணர்தியதாகவும் அதனை தொடர்ந்து தான் முஸ்லிம்களை படிபடியாக நெருங்கியதாகவும் இறுதியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மனிதனுக்கு நேர்வழி அளிப்பது மனிதனின் கையில் இல்லை. அல்லாஹ்வே நேர்வழி கட்டுகிறான் என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

சனி, ஏப்ரல் 20, 2013

குட்டி கதை

மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.

மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.

“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்

“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.

“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"

திங்கள், ஏப்ரல் 15, 2013

பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை

விழிப்புணர்வு"

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!! பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..
பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
johnson baby oil, amla hair oil,
clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை .

Via- dailynews. Com

வியாழன், ஏப்ரல் 11, 2013

வியந்து தான் போவீர்கள்-12

* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர் யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக் காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.

* ஆஸ்திரேலியாவில் ஒரு பாறை உள்ளது. 300 மீட்டர் உயரமும், 11 கி.மீட்டர் சுற்றளவும்கொண்ட இப்பாறை எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் சிவப்புக் கூடாரம் போல் காட்சியளிக்கும். இப்பாறையின் சிறப்பு என்னவெனில், வெய்யிலில் சிவப்பு நிறமாகவும், நண்பகலில் பழுப்பு நிறமாகவும் மாலையில் நீலம் கலந்த சிவப்பாகவும் தோன்றும். எனவே, இதை பச்சோந்திப் பாறை என அழைக்கப்படுகிறது

*வெளவால்களில் மொத்தம் 2,000 வகைகள் உள்ளன.

*கொசுவில் 2,700 வகைகள் உள்ளன.

*குரங்குகளில் அழகானது 'மர்மோசைட்' என்ற வகை குரங்கு.

*நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.

*ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்ய தன் தலையை 180 டிகிரி வரைப் சுற்றி பார்க்க முடியும்.

*மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்து வயதிற்கு மேற்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழைக்கின்றனர்.

*ரீசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.

*பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.

*கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் மொட்டுக்கள் வரை இருக்கும்.

* ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காண முடியாதாம்.

*ஆஸ்திரேலிய மலரான கேண்டிஸ் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றாழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.

*ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.

*நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.

* லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949-ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.

* நாய் உணவில்லாமல் கூட இருந்து விடும். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் விரைவில் இறந்து விடும்.

* கரப்பான் பூச்சிகள், பல்லிகள், விஷப் பாம்புகளை சாப்பிடும் ஒருவகை எட்டுக்கால் பூச்சி ‘டாரண்டுலா’வாகும்.

* ஒரு தேனீ 4,000 பூக்களிலிருந்து சேகரிக்கும் தேன் ஒரு ஸ்பூன் அளவே ஆகும்.

* காண்டாமிருகம் சுத்தமான சைவ விலங்கு.

* காலில் கண் உள்ள பூச்சி வெட்டுக்கிளி.

* முதன்முதலில் அலுமினியத்தை கண்டறிந்த நாடு பிரான்ஸ்.

ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்க ?


நம்ம தமிழ்நாட்டு ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...

இட்லி:
******
பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார்.

ஆனா, என்ன நடக்குது இங்க?
கடை இட்லி அரிசி கால் பங்கு,
ரேசன் அரிசி முக்கால் பங்கு,
உளுந்து கால் பங்கு,
ஜவ்வரிசி முக்கால் பங்கு,
நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம்,
சோடா உப்பு எக்கச்சக்கமா...
எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால்,
கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

சோறு:
******
தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே...

அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க.
அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!


புரோட்டா:
**********

பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும்.
ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சால்னா :
********

சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க.
பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார்.

அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!

ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க.
பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம்.

அப்படியே செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழு எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.

எல்லாத்தையும்விட முக்கியம்,
ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா.
நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்!

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்,,,

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

"தெரிந்து கொள்வோம் வாங்க"

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

* யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.

* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும்.

* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

* ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

* கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும் அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.

* வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை

* பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றையும் விட மிகவும் வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த அமைப்பு கிடையாது.

* ஆஸ்திரேலியாவிற்கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப்பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும் அரசாங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச் செலவுகளையும் ஏற்று குடிமக்களை அனுப்பி வைக்கிறது.

* மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

* சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது.

* 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் (tie) டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர் களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந்ததால் அதை இரவில் கூட பலர் கழற்றாமல் அணிந்து கொண்டே தூங்கினார்கள்....(யாழ் இணையம்)

ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

வியாழன், ஏப்ரல் 04, 2013

Dell நிறுவனத்தின் சென்னை கிளையில் 120 காலிப்பணியிடங்கள்.

Dell நிறுவனத்தின் சென்னை கிளையில் 120 காலிப்பணியிடங்கள்.....

Dell நிறுவனத்தின் சென்னை கிளையில் B.E., B.Tech., Any Graduate., Diploma பட்டதாரிகளுக்கு 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.. எனவே உலகப் புகழ் பெற்ற இந்த நிறுவனத்தின் பணி வாய்ப்பினை பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.

இப்பணிக்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகள் :

- Graduates / diploma holders in any discipline

(MCA, MSCIT,MSC Computer Science will be excluded) B.E/ B.Tech graduates with specialization in CSE and IT can apply with less than 65 % as aggregate and candidates from other disciplines with less than 80% can apply. Candidates with international calling experience for more than 6 months do not have percentage limitations.

- Fluency in spoken English, with good language skills, Voice Quality and a neutral accent.

- Graduates with or without any experience.

- Willingness to work in continuous night shifts


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :

Interview on 6th April 2013 between 10 am to 3 pm


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Dell International Services India Private Limited

Plot No 32 A and 32 B 3rd Floor, Ambit IT park,

Ambattur Industrial Estate, Chennai-58
Related Posts Plugin for WordPress, Blogger...