வெள்ளி, ஜூன் 29, 2012

அழப்ப்பு பணி செய்பவர்கள் கனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:


1) அழைப்பு பணி செய்பவர்கள் முதலில் தம்மை தாமே திருத்திக் கொண்டு தீமையான செயல்களை விட்டும் தவிர்ந்தவர்களாக நல்லொழுக்கம் உடையவர்களாக மாற வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் கூறுகின்ற சொல்லுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். மேலும் காது கொடுத்து கேட்பார்கள். ஆரம்பக் காலத்தில் இஸ்லாம் அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் என்னவெனில் மற்றவர்கள் முஸ்லிம்களின் நல்லொழுக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்திற்கு வந்தார்கள்.

இதற்கு உதாரணமாக: -

அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம்.

தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும் தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப் எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம்.

இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை.

எனவே நல்லொழுக்கம் என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.

2) அழைப்பு பணி செய்பவர்கள் தம்முடைய கொள்கையை அவசியம் பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் மீது விதிக்கப் பட்டுள்ள கடமை என்னவெனில் தீனுல் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது தான். அவற்றை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

ஏனென்றால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட விரும்புகிறானோ அவர்கள் மட்டுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)

மறுமையில் அல்லாஹ் நீங்கள் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறி மற்றவர்களை அழைத்தீர்களா? என்று தான் இறைவன் கேட்பான்.

நாம் யார் யாரை தூய இஸ்லாத்தில் அழைக்க வேண்டும்?

அல்லாஹ் கூறுகிறான்: -

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)

எனவே நாம் முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்மிடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம், நம்மைச் சார்ந்திரிருக்கின்ற நம் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களையும், நம் அன்பிற்கு உகந்தவர்களையும், நன்பர்களையும், நம் கூட பணி செய்பவர்களையும் மற்றும் யாரெல்லாம் நம் கூற்றை கேட்பார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

அழைப்பு பணி செய்யாவிட்டால் ஏற்படும் நஷ்டம் என்ன?

நாம் மேலே கூறியது போல உண்மையிலேயே இறை நம்பிக்கை கொண்டு மறுமை, சுவர்க்கம், நரகம் அவற்றில் கிடைக்க கூடிய இன்ப துன்பங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டவர்கள் சத்திய இஸ்லாத்தை தம்முடனே வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார். அவர் அப்படி செய்தால் அவருடைய ஈமானில் கோளாறு இருப்பதாகவே கருதப்படும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், ‘அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): ‘எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள். (அல்-குர்ஆன் 7:164)

நாளை மறுமையில் நம்மைப் படைத்தவனின் முன்னிலையில் நாம் நிறுத்தப்பட்டு இறைவனின் மேற்கண்ட வசனத்தின் மூலம் இட்ட கட்டளையை நிறைவேற்றினாயா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஏற்படும் சங்கடத்தை நாம் உணர வேண்டும்.

எனவே சகோதர சகோதரிகளே! முஃமினான நாம் அனைவரும் மார்க்கத்தின் மிகச் சிறந்த பணியாகிய

தஃவா என்னும் அழைப்புப் பணியை சரிவர செய்தவர்களாக நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.

புதன், ஜூன் 27, 2012

நமது அழைப்புப்பணி


அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும் பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால் அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும் மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும் வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில் டிவி ரேடியோ பத்திரிக்கை இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். ஆனால் இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமைதான் உள்ளது.

1. நமது மக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இதுவே உண்மையான மார்க்கம் அறிவியல் பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துகிறார்கள்.

2. யாரேனும் பிரபலங்கள் இஸ்லாமை தழுவினால் அவர்களின் புகழை பெரிதுபடுத்தி இஸ்லாமை சரியான மார்க்கம் என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

3. அல்லது பிரபலமானவர்களின் இஸ்லாமைப் பற்றிய அபிப்பிராயங்கள் அவர்களது பேட்டிகள் பாராட்டுகள் கருத்துகளை முன் வைத்து இஸ்லாமை உயர்த்திக் காட்ட முற்படுகின்றனர்.

4. இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான வழிமுறைகளையும் விளம்பரப்படுத்தி அதன் வாயிலாக இஸ்லாமை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.

மேற்கண்ட இந்த நான்கு வகையான வழிமுறைகளை கையாண்டே இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இது தவிர இன்னும் சிலர் இஸ்லாமின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆட்சேபணைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறார்கள்.

குர்ஆன் வசனங்களை இறைவசனங்கள் என்று மெய்ப்பிக்க கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குர்ஆன் வசனங்களோடு ஒத்ததாக அமைந்துள்ளமையை காண்பிக்கின்றனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவை இன்று இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சாதாரணமாக ஒரு மனிதர் இதைக் கூறியிருக்க முடியாது. முக்காலமும் அறிந்த இறைவனே இதை கூறியிருக்க முடியும். குர்ஆன் இறைவன் வாக்கேயாகும் என்று நிரூபிக்கிறோம். உண்மையில் கடந்த நூற்றான்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகள் குர்ஆனில் சொல்லப்பட்டவையே. ஆனால் இதை வைத்து குர்ஆன் இறைவனின் வேதம் இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்று நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதை நாம் கைவிட வேண்டும்.

இஸ்லாமில் எத்தனையோ வழிபாடுகள் அறிவுரைகள் அறிவியல்பூர்வமாக அமைந்துள்ளது நாம் இதனை அறிவியலின் துணை கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் போது அறிவியலை முதன்மைப்படுத்தியும் முக்கியப்படுத்தியும் விடுகிறோம். இவ்வாறு நம்மையும் அறியாமல் அறிவியலை புனிதமாக்கி உயர்ந்த அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுகிறோம். இதனால் இஸ்லாமின் ஏதாவது ஒரு வழிகாட்டுதல் விஞ்ஞானத்திற்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனை செயல்படுத்த முன்வரும் மனிதன் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அச்செயல் அமைந்துள்ளதால் அதனை செய்ய முன்வருகிறான். அல்லாஹ்வும் அவன் தூதரும் ஏவி இருக்கிறார்கள் என்பதை இரண்டாம் பட்சமாகவே எண்ணுகிறான். சரியோ தவறோ நன்மையோ தீமையோ தலைவன் ஏவியதற்கு அடிபணிவதையே வழிபடுதல் என்கிறோம். இங்கே அத்தன்மை ஒளிந்து கொள்வதை பார்க்கிறோம். குர்ஆன் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதையலோ விஞ்ஞானத்தின் முன்னறிவிப்போ அதன் வழிகாட்டியோ அல்ல. அது வாழ்வியல் வழிகாட்டி புத்தகம்.

இன்று கண்டறியப்பட்டுள்ள குர்ஆனோடு ஒத்ததாக அமைந்துள்ள விஞ்ஞான உண்மைகளை நாம் சத்திய மார்க்கத்திற்கு சான்றாக கொள்ளலாம். அவற்றை வைத்து இஸ்லாம் அறிவியல் மார்க்கம் இஸ்லாம் விஞ்ஞான பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துவதம் சரியாகாது.

ஹிந்து மதத்தின் வழிபாடுகளிலும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் உள்ளன. வீட்டு முற்றத்தில் மாட்டுச் சாணி தெளிப்பதால் எத்தனையோ பூச்சிகள் விஷ ஜந்துக்கள் வீட்டை அண்டாது. முகத்திற்கு மஞ்சள் பூசுவதால் முகக் கிருமிகள் இறந்து போகின்றன. முகத்திற்கு பொலிவு கிடைக்கின்றது சூரிய நமஸ்காரம் செய்யும் போது அதிகாலை வெயில் உடல் மேல் படுவதால் வைட்டமின் ‘D’ சக்தி கிடைக்கின்றது. நெற்றியில் திருநீர் பூசுவதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் ரீதியான நன்மைகளும் மருத்துவபலன்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் ’அறிவியல்பூர்வமாய்’ என்று மக்களிடம் இஸ்லாமை கொண்டு சென்றால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தத்தமது பழக்க வழக்கத்தில் இருக்கும் அறிவியலை கண்டு தம் மதத்தையே பெருமையாக கொள்வர். இது அவர்களை மேலும் வெளியே வர முடியாதபடி செய்து விடும்.

இவற்றையெல்லாம் நாம் நமது மக்களிடம் சொல்லலாம். நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக இவற்றைச் சொல்வதில் தவறில்லை. பறவை இறைச்சிக்கு உயிரூட்டி இப்ராஹிம் (அலை) அவர்களது ஈமானையும் மிஃராஜ் மூலமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் ஈமானையும் அல்லாஹ் திருப்தி அடையச் செய்தான். அவர்கள் இறைத்தூதர்கள். அல்லாஹ்வின் அருளை நேரில் கண்டவர்கள். நாம் கொள்கையளவில் இஸ்லாமை அதன் ஏவல் விளக்கங்களில் நன்மை இருக்கின்றதா? என்று நாம் பார்ப்பதில்லை. நோன்பு வைப்பதால் இன்ன மருத்துவ பலன் இருக்கிறது என்பதால் நோன்பு நோற்பதில்லை. கேட்டோம் கட்டுப்பட்டோம் என்கிற அடிப்படையிலே நாம் வழிபட்டு கொண்டு இருக்கிறோம். இதுதான் உண்மையான ஈமானும் கூட. அதே வேளையில் உலகியல் அடிப்படையில் சில நன்மைகளும் இருக்கும் போது நமது மனம் திருப்தி அடைகின்றது. செய்யும் காரியத்தில் ஒரு ஆர்வமும் உறுதியும் ஏற்படுகின்றது. ஆகவே இதை நம் மக்களிடம் சொல்லலாமே தவிர இதை வைத்து பிற மக்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தலாகாது.

கேரள பிரபல இலக்கியவாதி கமலா சுரைய்யா (மாதவி குட்டி) பிரபல மேற்கத்திய பாப் இசைப் பாடகர் யூசுப் இஸ்லாம் போன்றோரின் இஸ்லாமிய தழுவலை அவர்களின் பிரபலத்தை முன்வைத்து இஸ்லாமை பிறருக்கு பிரச்சாரம் செய்கிறோம். இத்தகைய பிரபல மனிதர்கள் இஸ்லாமை தழுவியிருக்கிறார்கள். நீங்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

சிலர் இஸ்லாமிற்குள் வராவிட்டாலும் இஸ்லாமைப்பற்றி தங்களது நல்ல அபிப்பிராயங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் கொள்கையைப் பற்றியும் போதனைகளைப் பற்றியும் அது ஏற்படுத்திய சமூக மாற்றத்தைப் பற்றியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இன இழிவிற்கு இஸ்லாமே அருமருந்து என்று பெரியார் ஈ.வே. ராமசாமியும் முஹம்மத் இன்று இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார் என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியிருக்கிறார். இது போன்று எத்தனையோ தலைவர்கள் இஸ்லாமை தழுவாவிட்டாலும் இஸ்லாமை போற்றியிருக்கிறார்கள்.

இவர்களது பேட்டிகளையும் அறிக்கைகளையும் முன்வைத்து இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறோம். இப்படிப்பட்ட பிரபலமானவர்களின் நற்கருத்துக்களை மக்களிடம் சொன்னால் மக்கள் இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பார்கள். இஸ்லாமினுள் நுழைவார்கள் என்று நம்புகிறோம். உண்மையில் சகோதரர்களே! இதனால் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது நன்மதிப்பே ஏற்படுத்துமே தவிர அவர்களை இஸ்லாமிற்குள் நுழைக்கச் செய்யாது. சாதாரணமான ஒருவருடைய மனதில் ” அவர்கள் (அந்த பிரபலங்கள்) உண்மையானவர்களாக இருந்தால் இஸ்லாமை தழுவியிருக்கலாமே ” என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

அருமைச் சகோதரர்களே! நாம் இஸ்லாமை இவ்வாறு கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இத்தகைய கவர்ச்சி நாயகர்களின் வசீகர பேச்சுக்கள் இஸ்லாமை அறிமுகப்படுத்த தேவையே இல்லை. இஸ்லாமே கவர்ச்சி மார்க்கம் உண்மையான இஸ்லாமை மக்களிடம் சொன்னாலே மக்கள் சாரை சாரையாக வருவார்கள். அதன் கடவுட் கொள்கை ஒன்றே போதும்.

மேலும் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகளின் அழகையும் அதன் செயல் வடிவ வசீகரத்தையும் கல்விக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம் தாயை பேணுவதற்கான கட்டளைகள். இன்னும் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துகள் மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அழகான அறவுரைகளை எடுத்துக் கூறி இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறார்கள். எத்தனையோ பேர் இதைக் கேட்டு இஸ்லாமிற்குள் வருகிறார்கள்.

இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று கருதி இஸ்லாமினுள் வருகிறார்கள். இவ்வாறு எவ்வளவோ அழகான நெறிமுறைகள் தாங்கிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால் இதை மட்டும் கருத்தில் கொண்டு இஸ்லாமைத் தழுவியவர்களிடம் அவ்வளவு கொள்கை பிடிப்பு இருக்காது. நிலைகுலையாமை இருக்காது. “உலகில் எத்தனையோ நல்ல கருத்துகளை மதங்கள் கூறுகின்றன. அவற்றுள் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமும் சிலவற்றை கூறுகின்றது! ” என்ற கருத்தோட்டத்தையே இது பலரிடம் ஏற்படுத்தி விடும். இந்த நல்ல அறிவுரைகளுக்காக இஸ்லாமை தழுவ வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ண நிலைப்பாட்டை தோற்றுவித்துவிடும்.

அருமைச் சகோதரர்களே! உலகில் நல்ல அறவுரைகளுக்கும் தத்துவங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா சமயங்களிலும் நல்ல அறவுரைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் நல்ல அறவுரைகளை மையப்படுத்தி இஸ்லாமை கொண்டு சென்றால் மக்கள் அதைப் போற்றத்தான் செய்வார்களே தவிர இதற்காக ஒரு மதத்தை தழுவி அதில் கட்டுண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே மக்கள் கருதுவார்கள்.

இஸ்லாம் ஓர் அழகான வாழ்க்கை நெறியாக உள்ளது. அது மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வழிகாட்டும் நெறியாக உள்ளது என்று கூறுகிறோம். தனிமனித மற்றும் பொதுவாழ்க்கை என எல்லா விஷயங்களிலும் மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வளிக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறோம்.

இது உண்மை என்றாலும் இதை நாம் அழைப்புப்பணியின் பிரச்சார வழிமுறையாக கொள்ளக்கூடாது. இது ஒரு வகையில் கிறித்தவ மிஷினரிகளின் பிரச்சார வழிமுறையை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. அவர்கள் தான் “நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களானால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். நோய் நொடிகள் குணமாகும். கடன் தொல்லைகள் தீரும். முடவர்கள் நடப்பார்கள். மனநிம்மதி கிடைக்கும்! ” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்க்கத்தின் கவர்ச்சியே கலிமத்து தய்யிபாதான். அந்த “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

ஏகத்துவ பிரச்சாரம் செய்தாலே நமக்கு போதுமானது. அதற்கு இருக்கும் வசீகரத் தன்மை வேறு எந்த வாக்கியத்திற்கும் கிடையாது. இதை ஒன்றை மட்டும் வைத்தே தங்களது 23வருட நபித்துவ வாழ்க்கையில் இறைத்தூதர் (ஸல்) இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இஸ்லாத்தின் ஏனைய எந்த ஒரு அம்சத்தையும் பிரச்சார வழிமுறையாய் அண்ணல் நபி (ஸல்) கையிலெடுக்கவில்லை. அனைத்து நபிமார்களும் “என் சமூகமே அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “அல்லாஹ்வை வணங்குங்கள் தாகூதை விட்டும் விலகி இருங்கள்!” என்றும்தான் பிரச்சாரம் செய்தார்கள்.

அன்றைய அரபு தீபகற்பத்தில் ஷிர்க்கும் இருந்தது. ஏனைய அனாச்சாரங்களும் இருந்தன. விபச்சாரத்தை ஒழிக்கவும் மதுவிலக்கை கொண்டு வரவும் இறைத்தூதர் (ஸல்) ஓர் இயக்கத்தை உருவாக்கவில்லை. அப்படி தீமைகள் ஒழிப்பு இயக்கம் என ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இருந்த வெறுப்பும் எதிர்ப்பும் அந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது.

உண்மையில் இஸ்லாம் எதிர்ப்பிலேயே வளர்ந்திருக்கின்றது. பொய்க் கடவுளர்களைக் கொண்டு மக்களை நம்ப வைத்து அதை வைத்தே மக்களை தமக்குக் கீழே அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தனர் அன்றைய தலைவர்கள். அவ்வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதுவையும் விபச்சாரத்தையும் இன்னபிற தீமைகளையும் ஒழிப்பதையே முன்னிறுத்தி போராடி இருந்தால் அத்தலைவர்களது எதிர்ப்பிற்கு ஆளாகி இருக்கமாட்டார்கள். இது ஏனென்றால் அப்போராட்டம் அவர்களது தலைமைக்கும் பதவிக்கும் இது எவ்விதத்திலும் ஆபத்து ஏற்படுத்தாது. ஷிர்க்கை எதிர்த்த போது தான் தம் தலைமைக்கே இது வேட்டு வைக்க கூடியதாக உள்ளது என்பதை உணர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிர்த்தார்கள் துன்பம் தரலானார்கள் நாடு கடத்தினார்கள் கொலை செய்யவும் முற்பட்டார்கள்.

எந்த கற்சிலைகளை கடவுளர்கள் என்று மக்களை நம்ப வைத்து தமக்கு கட்டுப்படுபவர்களாக ஆக்கி வைத்திருந்தார்களோ அச்சிலைகள் கடவுள்கள் கிடையாது என்னும் போது எப்படி அத்தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும். அவர்களது தலைமையையே பறிக்கக் கூடியதாக அல்லவா அது இருந்தது?

தலைமையும் அதிகாரமும் கையில் இருக்கும் போது எல்லா சமூக கேடுகளையும் ஒழிக்க அவர்களால் முடியும். ஆனால் அது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. சிலைகளை கடவுளர்களாக மக்களை நம்பவைக்கும் போதுதான் அத்தலைவர்களுக்கு பற்பல வழிகளில் செல்வமும் கிடைக்கின்றது செல்வாக்கும் கிடைக்கின்றது. உலகம் முழுவதும் இதுதான் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

நன்மைகளை செய்கிறோம். தீமைகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று மக்களை ஒன்றிணைத்து பின்னர் படிப்படியாக இஸ்லாமை பிரச்சாரம் செய்யலாமே என்று நாம் நினைக்கலாம். இதுவும் சரியான வழிமுறை அன்று!. ஒரு வேளை ஏதாவது ஈமானிய சோதனை ஏற்பட்டால் அப்படி இஸ்லாமிற்குள் வருபவர்களிடம் ஈமானிய உறுதி இஸ்திகாமத் நிலைகுலையாமை தென்படாது.

ஏகத்துவ கலிமாவை சொல்லித்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். அதன் ஆழ அகலத்தை நன்றாக விளங்கிக் கொண்டபின்புதான் குறைஷித் தலைவர்கள் எதிர்த்தார்கள்.

ஒரு முறை அபு ஜஹ்லிடம் அவனைச் சார்ந்த கூட்டத்தாரில் ஒருவன் இப்படி கேட்டான். “நீங்கள் ஏன் முஹம்மதை இந்தளவிற்கு எதிர்க்கிறீர்கள்?. அவர் ஒன்றும் அன்னியர் கிடையாதே. உங்கள் சித்தப்பா மகன் தானே! அவர் சொல்வதை கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?

” அதற்கு அபுஜஹ்ல் “அவர் சொல்வது உண்மைதான்!. ஆனால் அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா? தன்னை ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்துகிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அவர் “நில்” என்றால் நிற்க வேண்டும் “உட்கார்” என்றால் உட்கார வேண்டும். இது என்னால் முடியாது!” என்று கூறினான். இது தான் அவர்கள் புரிந்து கொண்ட இஸ்லாம்! அதனால் கடுமையாக எதிர்த்தார்கள். எங்கே தம்மை விட்டும் தலைமை போய்விடுமோ என்று அஞ்சினார்கள்.

இஸ்லாமை சொல்லும் போது அடி விழும். உதை வாங்க நேரிடும். அப்பொழுது தான் நாம் உண்மையான இஸ்லாமைச் சொல்கிறோம் என்று பொருள்!. அனைத்து நபிமார்களும் இஸ்லாமை சொன்ன போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது இல்லை. இஸ்லாமை சொன்ன போது நபி (ஸல்) அவர்களுக்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இது எப்பொழுது ஏற்படும் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவைகளை வணங்காதீர்கள் என்று நாம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் போது தான் ஏற்படும்!. இஸ்லாமை இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும்!. நபிமார்கள் வாழ்க்கையிலிருந்து படிப்பினையாக இதனையே பெறுகிறோம்!!.

ஆகவே மற்ற மற்ற சிறப்பம்சங்களை காட்டிலும் இஸ்லாத்தின் இந்த அடிப்படையை மையப்படுத்தி இஸ்லாமை நாம் அறிமுகப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்!!

செவ்வாய், ஜூன் 26, 2012

கமிஸனும், காம்ப்ளிமென்டுகளும்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்று அன்பளிப்புகள் என்றப் பெயரில் தான் கைக்கூலிகள், மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் வழங்கப்பட்டு ஏராளமான விஷயங்கள் கை மாற்றப்படுகின்றன.

அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்களிலிருந்து, தொழில் நிறுவனங்கள் தொடங்கி, சாதாரண ப்ளாட்பாரக் கடைகள் வரை பணியாற்றுபவர்களிடம் இந்த நிலை காணப்படுகிறது. இவ்வாறு பெறப்படுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதை, மற்றவரால் ஏமாற்றப்படுவதை இஸ்லாம் ஒருக்காலும் அனுமதிக்க வில்லை.

அரசு கருவூலத்திற்கு வர வேண்டியது குறைவின்றி வரவேண்டும், முதலாளி மார்களுடைய லாபம் கஜானாவிற்கு குறைவின்றி வரவேண்டும், தொழிலாளிகளுடைய ஊதியம் வியர்வை காயும் முன் பேசப்பட்டதில் குறைவின்றி கிடைக்க வேண்டும். என்பதில் இஸ்லாம் பாரபட்சம் பார்க்காது.

தொழில் நிறுவனங்கள் தொடங்கி ப்ளாட்பார கடைகள் வரை தொழிலாளிகளே நிறுவனங்களை நடத்துபவர்களாகவும், பெரும்பாலும் முதலாளிகள் பேங்க் பேலன்ஸை பார்ப்பவர்களாகவும், கல்லாக் கட்டுபவர்களாகவுமே இருப்பார்கள்.

விற்பனைப் பொருள்களை தொழிற்சாலைகளில் அல்லது வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் (Purchashing manager) களுக்கு தொழிற்சாலை அதிபர்கள் கமிஸன் கொடுப்பார்கள்> அல்லது விலை உயர்ந்த அன்பளிப்புகளைக் கொடுத்து மடக்கி விடுவார்கள். அதனால் தொழிற்சாலைகளிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் போதே கூடுதல் விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை மறைமுகமாக முதலாளி மார்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

அதற்கடுத்து அப்பொருட்களை கீழ்நிலையிலுள்ள சிறிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் (Sales Reprasentive)> களிடம் கமிஸனை, அல்லது விலை உயர்ந்த அன்பளிப்பை சிறிய நிறுவனத்தார் கொடுத்து மடக்கி விடுவார்கள். அதனால் சிறிய நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அப்பொருட்கள் சப்ளை செய்யப்படும் நிலை ஏற்படுகிறது.

இதனால் வாங்கும் போதும், விற்கும் போதும் இவர்கள் பெற்றுக்கொள்ளும் அற்ப அன்பளிப்புகள் எனும் கைக்கூலியினால் முதலாளிகளுக்கு லாபத்தின் பெரும் பகுதி குறைந்து விடுவதால் வளர்ந்த நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு முன்னேற முடிவதில்லை அல்லது நிகராக முடிவதில்லை, சிலநேரம் இதனால் நஷ்டத்தில் கூட முடிந்து நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

ஒரு கம்பெனி வளர்வதற்கும், வீழ்வதற்கும் முக்கிய காரணமாக இருப்பது Purchashing manager, Sales Reprasentive ஆகும்.

இவர்கள் அல்லாத Show Room களில் (Salseman) களாக பணிபுரிபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட முதலாளி இல்லாத நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்று அதில் வரும் கூடுதல் தொகையை தனக்கு ஒதுக்கி விடுகின்றனர்.

இன்னும் அந்த நிறுவனத்தில் இல்லாத பொருளைக் கேட்டு வரும் கஸ்டமர்களுக்கு வெளியிலிருந்து வாங்கிக் கொடுத்து விட்டு அதனுடைய லாபத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இது சாதாரணமாக பெரிய தொழில் நிறுவனத்தில் தொடங்கி, ப்ளாட்பார்க் கடைகள் வரை நடக்கின்றன.

அரசு அதிகாரிகள் பெறும் கையூட்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது செய்தித் தாள்களில் வருவதைப் பார்க்கின்றோம். இது போன்ற நிறுவனங்களில் மேல்படி ஸ்டைலில் அடிக்கும் கொள்ளைகள் வெளியில் தெரிவதில்லை.

கல்லாவிலிருந்து காசு எடுக்க வில்லை,
பொருட்களை கடத்துவதில்லை

அதனால் கமிஷன் பெறுவதிலோ, அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து கூடுதல் கிடைப்பதை எடுத்துக்கொள்வதிலோ, அல்லது வெளியில் பொருளை வாங்கி கை மாற்றி விட்டு அதன் லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்வதிலோ தவறில்லை என்று நினைத்துக் கொண்டு இவற்றை ஹலாலாக்க நினைப்பவர்கள் வேலை தேடி அலைவதற்கு முன் தங்களின் வீட்டில் இருக்கும்போது இவைகள் கிடைத்திருக்குமா? இல்லை எனும் போது அவைகளை அடைய நினைக்க கூடாது இது தான் நபி வழி.

உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா ? என்று பாரும்! என்று கூறிவிட்டு மக்களை அழைத்து அவரது செயலைக் கண்டித்து உரை நிகழ்த்தி அல்லாஹ்விடம் கைகளை உயர்த்தி ஒப்படைத்தார்கள்..... அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) நூல்: புகாரி 6636.

ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட சம்பளமும், இதர சலுகைகளையும் மட்டுமே அடைந்து கொள்ளவேண்டும் லட்சங்களையம், கோடிகளையும் கொட்டி நிறுவனம் நடத்தும் முதலாளியிடம் சம்பளம் பெறும் நம்மால் அவருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது, பாதிப்பை எற்படுத்தாத வகையில் பெறப்படும் அன்பளிப்புகளும் கூட நமக்கு தடை அதுவும் முதலாளியையேச் சார்ந்ததாகும். மாறாக மேலதிகமாக அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கையை மீறி எதையும் அடைய நினைத்தால் கண்டிப்பாக அவைகளால் திருப்தி அடைய முடியாது.

...நன்மையால் நன்மையே விளையும் இந்த(உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகிற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன, அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். 6427 அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

மேய்ப்பாளன் கொண்டு விடுகின்ற இடத்தில் புல்லை திண்ணுகின்ற வரை கால்நடைகளுக்கு உயிர் பிரியும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை மாறாக தன்னுடைய விருப்பத்திற்கு சென்று வாய்க்கால் வரப்புகளில் விளையும் நச்சுத்தன்மை கொண்ட செடி, கொடிகளை மேயும் போது செத்து விடும் நிலைக்கு தள்ளப்டுகின்றன.

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் விதியாக்கிதை அடைந்து கொள்ளவும், தடையாக்கியதை தடுத்துக்கொள்ளும் வரை மனித சமுதாயத்திற்கு இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக எதாவது ஒரு காரணத்தை கற்பனை செய்து தடையை மீறிப் பொருளீட்டினால் அந்தப் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் அருள் ஏற்படுவதில்லை, அல்லாஹ்வின் அருள் ஏற்படாத பொருளாதாரத்தினால் தேவைகள் நிறைவடைவதில்லை அதனால் தான் (முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். ) என்ற உவமையை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முறையற்ற வழிகளில் ஈட்டும் பொருளாதாரத்தால் தேவைகள் நிறைவடையாததால் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வழியில் பொருளீட்டும் நிலைக்கு தள்ளப்படுவதால் உலக வாழ்வில் நிம்மதி இழந்தவர் மறுமை வாழ்விலும் தோல்வி அடைகிறார்.

ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி, அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது. தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். அதனை விட்டு விட்டு அவன் இறந்துவிட்டால் அவனது நரகப் பயணத்திற்குத்தான் அது சாதகமாக இருக்கும். அல்லாஹ் தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அசுத்தம் இன்னோர் அசுத்தத்தை அழிப்பதில்லை. என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: (மிஷ்காத்)

இது போன்ற பழக்கம் யாரிடமாவது இருந்தால் புனித ரமளான் மாதத்தில் தவ்பா செய்து விடுங்கள் இதுவே இறையச்சத்திற்கு எடுத்துக் காட்டாகும். இறையசச்த்தை ஏற்படுத்துவதற்காகத் தான் ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது ரமளானை அடைந்தும் ஒருவர் தன்னை சீர்திருத்திக்கொள்ளாவிடில் அவர் நாசமைடைந்து விட்டார் என்று அன்னல் நபி (ஸல்) அவர்கள் கூற வானவர் ஆமீன் கூறி இருக்கிறார்கள்.

இன்று பெரும்பாலான மக்கள் பொருளீட்டுவதற்காக அரபு நாடுகளுக்கு வந்து முக்கியப் பொறுப்புகளில் அமர்ந்திருப்பதால் கவனத்துடன் பொருளீட்ட வேண்டும் என்பதற்காகன ஓர் நினைவூட்டல் மடல் இது.

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி உலகில் நிம்மதியாகவும், அதனால் மறுமையில் வெற்றியாளர்களாகவும் ஆகும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !

அர்த்தமுள்ள கோபம்
திருட்டு என்பது சமுதாயத்தை சீரழிக்கும் தீமை என்றால் அன்பளிப்பு என்றப் பெயரில் பெறப்படும் கையூட்டுகள் அரசு கஜானாவை காலியாக்கி உலக வங்கியிடம் நாட்டை கடனாளியாக்கிடவும், தனியார் நிறுவனங்களை திவாலாக்கி முதலாளி மார்களை தலையில் துணியை பொட்டுக் கொண்டு தெருவுக்கு அனுப்பிடவும் போதுமானத் தீமைகளாகும்.

அரசுக்கு சேர வேண்டியது முறையாக வந்து சேர வேண்டும், முதலாளி மார்களுக்கு வந்து சேர வேண்டியது முறையாக வந்து சேர வேண்டும் என்றால் அரசு அதிகாரிகள், மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இது போன்ற அன்பளிப்புகளை இனி வரும் காலங்களில் பெறக்கூடாது என்பதற்காக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மக்களை திரட்டி கோபத்துடன் கண்டித்து உரை நிகழ்த்தியதுடன் நில்லாமல் அல்லாஹ்விடமும் இதை ஒப்படைத்தார்கள்.

சாதாரண ஒரு மனிதன் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் காரியத்தை செய்திருந்தால் அவரை தனிமையில் வைத்து அண்ணல் அவர்கள் கண்டித்திருப்பார்கள் அவர் அரசு அதிகாரி என்பதால் தான் மக்களைத் திரட்டி கண்டித்தார்கள்.

மதீனாவில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இது தெரிவதுடன், மதீனா அல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் சென்றடையும் நோக்கில் செய்தார்கள்.

அண்ணல் அவர்களின் இந்த அழகிய வழிமுறையை உலகம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் பின்பற்றி இருந்தால் அந்தந்த நாட்டு மக்கள் நிம்மதியாக உண்டு புசித்து வாழ்க்கையை கழிப்பதற்கு அந்தந்த நாட்டில் விளையும் வளங்கள் போதுமானதாக இருந்திருக்கும்.

நாட்டையும், மக்களையும் பாதிக்கச் செய்யும் இந்த தீமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்பதற்காக அண்ணல் அவர்களுக்கு இந்நிகழ்வு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

அண்ணல் அவர்களை அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக ஆக்கி இருப்பதால் சாதாரண குடிமகன் தன்னுடைய வாழ்வை நிம்தியாக கழிப்பதற்கு தேவையான முன்னுதாரணங்கள் அண்ணல் அவர்களிடம் இருக்கிறது நாடாளும் மன்னன் நாட்டில் குழப்பங்கள் நிகழாமல் ஆட்சி செய்வதற்கு தேவையான முன்னுதாரணங்களும் அண்ணல் அவர்களிடம் இருக்கிறது.


அனைவரும் அவற்றை பின் பற்றி வாழ்ந்தால் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற நன் மக்களாக முடியம்.

தீமையைக் காணும் பட்சத்தில் தேவையான அளவு கோபத்தை வெளிப்படுத்தும் செயல் வீரனாகவும், தேவை இல்லாத இடத்தில் கோபத்தை முற்றாக அடக்கி ஆளும் மாவீரனாகவும் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக !

திங்கள், ஜூன் 25, 2012

புனித ஹஜ்ஜின்பிரயாணமும் பயணக் குறிப்புகலும் மேலும் சரித்திர புகழ் பெற்ற புனித மக்கா & மதினா இடங்களும்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்

தொகுப்பு
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்,


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க

தல்பியா

வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை

உம்ரா நிய்யத்:

அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்ரத்தன்
இறiவா உம்ராவை நாடி நான்
இஹ்ராமைக்கட்டியுள்ளேன். இதை எனக்கு
இலேசாக்கித் தந்து ஏற்றுக் கொள்வாயாக.

உம்ரா

உம்ராவுடைய பர்ளு
1. நிய்யத் 2. இஹ்ராம் ஆடை 3. தவாபு 4. சயீ
5. முடி சிரைத்தல்


ஹஜ் நிய்யத்
அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன்
இறiவா

ஹஜ்ஜை நாடி நான் இஹ்ராமைக
கட்டியுள்ளேன். அதை இலேசாக்கிதந்து
ஏற்றுக் கொள்வாயாக.

ஹஜ்ஜுடைய பர்ளு

1. நிய்யத் 2. இஹ்ராம் 3. தவாப்ஜியாரத் 4. சயீசெய்தல்
5. அரபாத்தில் தங்குதல்

பிரயாண துஆ

சுப்ஹானல்லதி ஸஹ்ஹரலனா ஹாதா
வமாகுன்னா லஹ{ முக்ரினீன்
வஇன்னா இல ரப்பினா லமுன்கலிப+ன் ஜித்தாவிலிரந்து மக்கா 76 கி;.மீ தூரம் 55 வது கி.மீட்டரில் ஹரம் எல்லை ஆரம்பம்.

அங்கு ஒத வேண்டிய து.ஆ இறiவா இந்த இடம் நிச்சயமாக உன்னுடையதும். உன் திருத்தூதருடையதுமான புனிதமான இடமாகும். உன்னுடைய அடியார்களை எழுப்பும் அந்த நாளில் எனக்கு உனது வேதனையிலிருந்து அபயம் அளிப்பாயாக மக்கா நகரம் நுழையும் போது ஓதும் துஆ.

இறைவா திருமக்காவில் இருக்கும் வரை என் மனதிற்கு அiதியைத் தந்து அருள்வாயாக ஹரம் ஷரீபான கஅபாவில் சபா மர்வாகுபதியில் (புயவந ழே.24)

பாபுஸ்ஸலாம் வாசல் வழியாக நுழையும் போது ஓத வேண்டிய துஆ.

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! அல்லாஹ{ம்ம அன்தஸ்ஸலாம் வமின் கஸ்ஸலாம் வஇலைக்க யர்ஜிஉஸ்ஸலாம் ஹய்யினா… யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன் உன் மூலமே சாந்தி ஏற்படுகிறது. எனவே எங்களைப் படைத்து பரிபாலிப்பவனே! எங்களை சாந்தியோடு வாழச் செய்வாயாக! ஆதன் பின் ஸலவாத் ஓத வேண்டும்.

முதன் முதலாக கஅபாவைப் பார்த்தவுடன் ஓதவேண்டிய துஆ:எ

யாஅல்லாஹ்! புனிதமான இந்த உனது வீட்டிற்கு சிறப்பையும் மகத்துவத்தையும்; கண்ணியத்தையும் கம்பீரத்தையும் அதிகப் படுத்துவாயாக என் வாழ்க்கையில் கேட்கப்போகிற அனைத்து ஹலாலான, துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக (மற்றும் நாம் நினைக்கும் எல்லா துஆக்களையும் கேட்ட பிறகு) ஸலவாத் ஓத வேண்டும்.

துவாபை ஆரம்பிக்கும் முன்பு ஓதவேண்டிய துஆ:

புனிதம் மிக்க உனது திரு வீட்டை ஏழு சுற்று நாடி உம்ராவின் தவாபை உக்காகச் செய்கிறேன். அதை இலேசாக்கித் தந்து, என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! தவாப் ஆரம்பிக்கும் முன்பு “ஹஜ்ருல் அஸ்வத்” முன்பாக ஓதவேண்டிய துஆ.

இறைவா! உன்னை விசுவாசம் கொண்டவனாக, உனது கட்டளையை நிறைவேற்றியவனாக, உனது திருநபியின் வழியைப் பின்பற்றியவனாக, மேலும் உனது திருநபியின் மீது ஆசியும், ஆசீர்வாதமும் கூறியவனாக, உன் திருநாமம் கொண்டு ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுகிறேன். பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர். தவாப் செய்து முடித்தவுடன் மகாமே இப்ராஹீம் பின்னால் 2 ரக அத் தொழுதபிறகு ஜம்ஜம் கிணறுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு ஓத வேண்டிய துஆ:


“பயனுள்ள கல்வியையும், தாராள சம்பத்தையும், இரண பாக்கியத்தையும், எல்லா நோய்களுக்கும் அருமருந்தாகவும் ஆக்கி வைக்க யா அல்லாஹ்! உன்னிடம் வேண்டுகிறேன்.

ஜம்ஜம் நீர் பருகியதும் கஅபாவின் வாசல் முல்தஜிமைப் பிடித்து ஓதவேண்டியதுஆ

“பழமையான புனிதமான இவ்வீட்டிற் குறித்தான யா! அல்லாஹ்! நரகிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக! இன்னும் நீ எங்களுக்கு அளித்தவற்றில் அபிவிருத்தி (பரக்கத்) செய்வாயாக! உனது சிறந்த கூட்டத்தாரிகளில் எங்களை சேர்ப்பாயாக! நீ எங்கள் மீது புரிந்த அருளுக்காக, உனக்கே எல்லாப் புகழும். அனைத்து நபிமார்கள் தூதர்கள், நேசர்களின் தலைவரான எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், இன்னும் அவர்களின் தோழர்கள், நேசர்கள், குடும்பத்தினர் மீதும், உனது அருள் உண்டாகட்டுமாக!” பிறகு சயீ செய்யச் செல்ல வேண்டும். பனீ மக்ஜும் வழியாக (கஃபா மஸ்ஜித் ஹராமை விட்டு வெளியாக வேண்டும்.

சுபா குன்றில் நின்று கஅபாவை முன்னோக்கி இரு கரங்களையும் வானத்தை நோக்கி ஏந்தி ஓதவேண்டிய துஆ:

“யா அல்லாஹ்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலாவாத்தும் பரக்கத்தும் அருள் புரிவாயாக.” அல்லாஹ{ அக்பர் (3 தடவை) அல்ஹம்து லில்லாஹ் நான்காம் கலிமாவை ஓதிக கொண்டே சயி செய்யலாம். மற்ற தெரிந்த, உலமாக்கள் கற்பிக்கும் துஆக்களையும் ஓதலாம் மைலனீல் அக்ளரைன் (பச்சை விளக்கு அடையாளமுள்ள இடம்) வரும் போது, “யா அல்லாஹ்! நீ அறிந்த பாவங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! என்று சொல்லி கஅபாவைப் பார்த்தவாறு ஆண்கள் மட்டும் ஓடவேண்டும். பெண்கள் மெதுவாக நடந்து செல்ல வேண்டும். இவ்வாறு 7 தடவை தபா மர்வாபவில் சுற்றி மர்வாவுக்கு வெளியே உள்ள சலூனில் சுன்னத்தான முறையில் அவசியம் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தலைமுடியின் முனையை கத்தரித்துக் கொள்ள வேண்டும். இதோடு உம்ரா முடிந்துவிட்டது. வீட்டிற்குச் சென்று இஹ்ராம் களைந்து குளித்து சாதாரண ஆடைகளை அணியலாம் தவாபு செய்யும் போது முறிந்தால் ஒளு செய்துவிட்டுத் தான் தொடர வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாபை நிறுத்தி வெளியாகிவிட வேண்டும். ஆனால் சயீ செய்யும் போது ஓளு முறிந்தாலும் மாதவிடாய் வந்தாலும் சயீ தொடரலாம். பெருமானார் (ஸல்) அவர்கள் மொத்தம் மூன்று உம்ராக்களையும் ஒரு ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.
ஹிஜ்ரி 7ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் நபி வழியில் ஹஜ் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
அரபாவிலுள்ள குன்று ஜபலுர்ரஹ்மத் (மலை) 30 மீட்டர் உயரம். மதீனாவில் மஸ்ஜித் நபவியில்மிம்பருக்கு அருகில் தூண்கள் உள்ள இடத்திற்கு, “றவ்ளத்துஷ் ஷரீபா” (சுவனப் ப+ங்கா) என்று பெயர்.
மதீனா

மதீனா நகரம் ஜித்தவிலிருந்து 425கி.மீட்டரும், மக்காவிலிருந்து 497 கி.மீட்டரும் உள்ளது. கடல் மட்டத்தை விட 597 மீட்டர் உயரத்தில் இருப்பதால் குளிர் காலத்தில் குளிர் அதிகமாகவும், கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகவும் இருக்கும். அதற்குத் தகுந்தாற் போல் ஆடைகள் எடுத்துச் செல்ல வேண்டும். குளிர் காலத்தில் செல்லும் போது காலுறை (சாக்ஸ்) எடுத்துச் செல்வது நல்லது. மஸ்ஜித் நபவி ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளதால் உள்ளே காலை இரவு நேரங்களில் சாக்ஸ் அணிந்து குளிரைத் தடுக்கலாம்.

மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது குறைந்தது ஆயிரம் ஸலவாத் ஓத வேண்டும். பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) மதீனா வாழ்க்கை பற்றிய வரலாறும் படிக்கலாம்.

ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் கட்டிசோறு சேண்ட்விச், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் போன்றவற்றைப் பழங்கள், மருந்துகளுடன் எடுத்துச் சென்றால், மக்கா-மதீனா வழிப்பாதையில் உணவுக்காக நிறுத்தும் இடத்தில் ஹோட்டல் உணவைவிட, நாம் தயாரித்து எடுத்துச் சென்ற உணவை அந்த உணவு விடுதிலேயே வைத்து உண்ண வசதியாக இருக்கும். கூடிய வரை டின்களில் விற்கப்படும் பழச்சாறு பருகாமல், பழங்களையோ அல்லது புதிதாக தயார் செய்து தரும் பழச்சாறு பருகுவது நல்லது. பாலில்லாமல் தேநீர் அருந்துவதும் உடல் நலத்துக்கு நல்லது. பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அத்தர், வெண்மையான ஆடைகள் விருப்பமானது என்பதால்

நாமும் வெள்ளைநிற ஆடைகள், மதீனாவில் உடுத்தி, அத்தர் அதிகமாக உபயோகிக்க வேண்டும். பேரீச்சம் பழம் தஸ்பீஹ் மணிகள், அத்தர் ஆகியவைகளை மதீனாவில் தான் வாங்க வேண்டும். மஸ்ஜித் நபவியில் ஒவ்வொரு முறை தொழுதுவிட்டு வரும் போதும் மறக்காமல் ரவ்ளா ஷரீப் சென்று பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்), அபுபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) ஆகியோருக்கு ஸலாம் சொல்லி வரவேண்டும்.
பாபுஸ்ஸாம் வழியாக மஸ்ஜித் நபவி சென்று மிக்க உள்ளச்சத்துடனும், மன அமைதியுடனும், கம்பீரத்துடனும் 70 முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கப்ருமபாரக்கின் அருகாமையில் ஓதுவதே சாலச் சிறந்ததாகும். “சுவன ப+ங்கா” எனப்படும் இடத்திலும் தஹஜ்ஜுத் மேடையிலும் சுன்னத், நபில் தொழுவது சிறப்பு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மஸ்ஜித் நபவியில் குர்ஆன் ஓதவேண்டும். தினமும் காலையில் பஜ்ரு தொழுதபிறகு மஸ்ஜித் நபவி அருகிலேயே உள்ள ஜன்னத்துல் பகீஃ சென்று அங்கு அடக்கமாகி இருக்கும் பெருமானார் (ஸல்) குடும்பத்தினர், சஹபாக்களையும் ஜியாரத் செய்து விட்டு வரவேண்டும். மதீனாவில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்.

உஹத்மலை

வியாழக்கிழமை சென்று அங்கு ஷஹீதான ஹம்ஜா(ரலி), அப்துல்லா இப்னு ஜஹ்ஷ்(ரலி), ஸஹ்லுப்னு கைஸ் (ரலி) போன்ற சஹாபிகளுக்கு ஜியாரத் செய்யவேண்டும். அங்கு மொத்தம் 64 அன்சாரி சஹாபிகளுக்கும், 6 முஹாஜிரீன்களும் அடக்கப் பட்டு;ள்ளார்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு பல் ஷஹீதான இடத்தையும் தெரிந்து கொண்டு அங்கும் சென்று வரலாம். தனியாக ஒரு நாள் அங்கு சென்று வந்தால் பொறுமையுடன் பார்த்து வரலாம்.

மஸ்ஜித் குபா


சனிக்கிழமை செல்வது சிறப்பாகும். “மஸ்ஜித் குபாவில்” தொழுவது உம்ரா செய்ததின் நன்மை ஆகும். - ஹதீஸ்

மஸ்ஜித் ஙமாமா

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு சுல்தான் ஹஸன் இப்னு முகம்முது சாலிஹ{வும் ஹிஜ்ரி 14ஆம் ஆண்டு துரக்கி சுல்தான் அப்துல் ஹமீத்கானும் புதுப்பித்தார்கள்.

மஸ்ஜித் கிப்லதைன்

பைதுல் முகத்தஸை நோக்கித் தொழுத முஸ்லீம்களை கஅபா திசை நோக்கித் தொழச் சொல்லி வஹீ வந்த பள்ளிவாசல்


கந்தக் அஹ்ஸாப் (அகழ்ப்போர்) நடந்த
இடத்தில் உள்ள 5 பள்ளிவாசல்கள்

ஹிஜ்ரி 5ம் ஆண்டு துல்க அதாபிறை 8ல் அகழ்வெட்டும் வேலை ஆரம்பமாகியது. 20 நாட்களில் வேலை முடிந்தது. கடுங்குளிர், பட்டினி, ஓய்வு இல்லாமை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்களுக்குச் சில நேரத் தொழுகைகள் களாவானது.
“கந்தக்” என்றால் அகழி என்று பொருள். “அஹ்லாப்” என்றால் “படைகள்” என்று பொருள் காபிர்கள் ஒன்றுபட்டு படைகளுடன் வந்தால் அஹ்ஸாப் போர் எனப் பெயர் வந்தது” இந்த போரில் முஸ்லிம்கள் ஆயிரம் பேரும், எதிர்ப்படையினர் பத்தாயிரம் பேர்களும் கலந்து கொண்டனர். சல்மான் பார்ஸி(ரலி) அவர்கள் சொன்ன யோசனையின் பேரில் அகழி வெட்டப்பட்டது.

மஸ்ஜித் அப+பக்கர் (ரலி) மஸ்ஜித்
அலி (ரலி) 7 கிணறுகள்
பெருமானார் (ஸல்)
அவர்களுக்கு சலாம் சொல்லும் முறை

“அஸ்ஸாத்து அஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹ்” என்று 70 முறை சொல்லவேண்டும். 70 முறை ஓதப்பட வேண்டுவது தனிச்சிறப்பு யாதெனில் இந்த எண்ணிக்கையில் ஏற்றுக் கொள்ளப்படுதலின் விசேஷ சிறப்பு இருக்கிறது. என்பதால் தான் திருக்குர்ஆனிலும் முனாபிக்குகள் பற்றிஅ ண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “நபியே! தாங்கள் அந்த முனாபிகளுக்காக 70 முறை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
(சூரேதௌபா ஆயத்) 8: தாயகத்திலிருந்து புறப்படும் முன் உறவினர்கள், நண்பர்கள் பெருமானார், (ஸல்) அவர்களக்கு ஸலாம் சொல்லுமாறு வேண்டிக்கொண்டிருந்தால் அப்பெயர்களைச் சொல்லி ஸலாம் சொல்ல வேண்டும். பெயர்கள் நினைவில்லாவிட்டால். “அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹி” மிம்மன் அவ்ஸான வஸ்தவ்ஸானா பிஸ்மில்லாஹி அலைக்க


இதன் பொருள்
அல்லாஹ்வின் அருமைத் தூதரே!
சலாம்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்னிடம் வேண்டிக் கொண்ட அனைவரின் பெயர்களையும் தாங்கள் அறிவீர்கள். ஆவர்களைப் பற்றிய விபரங்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்! ஆவைகளை இப்போது ஒப்படைத்து விட்டோம். அன்பு கூர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்வீர்களாக!’ என்று அரபி தெரியாதவர்கள் தமிழிலேயே சொல்லலாம். பாபுஸ்ஸலாம் வழியாகச் சென்று, நபிகள் நாயகம் (ஸல்), அப+பக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), ஆகியோருக்கு, சலாம் சொல்லியபின் கிப்லா திசை நோக்கி துஆ செய்த பிறகு பாபுஜிப்ரீல் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.


பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
ஸலாம் சொல்லும் வகைகள்
1. அஸ்ஸலாத்து அஸ்ஸலாமு அகை;க யாரசூலுல்லாஹ்
2. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யுவரஹ்…
3. அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ்
4. ஸல்லல்லாஹ{ அலைக்க யாரசூலுல்லாஹ். (ஏதாவது ஒன்றை 70 தடவைகள் சொல்ல வேண்டும்.
5. அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ், யாஹபீபுல்லாஹ் யாகைர கல்கில்லாஹ், யாசஃப் வதுலலலாஹ், யாஸய்யிதல் முர்சலீன், யாஇமாமல் முத்தகீன், யாஷபீஅல்முத்னிபீன் யாகாதமன் நபிய்யீன், அஸ்ஸலாமு அலைக்க வஅலா ஆலிக்க வஅஹ்லி பைத்திக வஅஸ்ஹாபிக அஜ்மஈன்.
தமிழில் “நபியே! உங்கள் மீதும், உங்களது கிளையார் குடும்பத்தார் மீதும், உங்களின் அருமை ஸஹபாக்கள் மீதும், அனைவர் மீதும் எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் பெருமானார் அவர்களுக்கு வஸீலாவையும், சிறப்பையும், தந்தருள்வாயாக! மேலும் நீ பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தின் பால் மறுமையில் அனுப்புவாயாக!”


ஹஜ்
பிறை 8 (முதல் நாள்)

அதிகாலையில் குளித்து இஹ்ராம் துணி அணிந்து கஅபாவில் ஹஜ்ரே இஸ்மாயில் என்கிற (ஹதீம்) இடத்திலோ அல்லது கஅபாவில் ஏதாவது ஒரு இடத்திலோ, அங்கு இடம் கிடைக்காவி;ட்டால், தங்கி இருக்கும் இடத்திலோ, இரண்டு ரகஅத் தொழுது “ஹஜ்ஜை நாடி இஹ்ராம் கட்டியுள்ளேன்” அதற்குரிய செயல்களை எனக்கு இலேசாக்கித் தந்து, அவற்றை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நிய்யத் செய்த பின் ‘லப்பைக்க…’ என்ற தல்பியாவை மூன்று முறை சொல்ல வேண்டும்.
மக்காவிலேயே பஜ்ர் தொழுதபிறகு பேரூந்தில் மக்காவிலிருந்து புறப்பட்டு மினா சென்று, நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்க வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா நாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஜமாஅத்துடன் தொழ வேண்டும். அங்கேயே ஹஜ் தொடர்பான நூல்களையும் படிக்கச் சொல்லிக் கேட்பது, திக்ரு, செய்வது உலமாப் பெருமக்கள், பெரியோர்கள் சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகிய அமல்களில் ஈடுபடவேண்டும்,

பிறை 9 (2 ஆம் நாள்)

மினாவில் பஜ்ர் தொழுதபின் (முஜ்தலிபா வழியாக முஜ்தலிபாவில் நிற்காமல்) அரபாத் செல்ல வேண்டும்.
“ஹஜ் என்றால் என்ன?” என்று நஜ்திலிருந்து வந்த ஒரு ஜமாஅத் பெருமானார் (ஸல்) அவர்களைக் கேட்ட போது” அரபாத்தில் தங்குவது தான் ஹஜ்” என்றார்கள். துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹ{வுக்கு முன்னதாக அரபாவுக்கு வந்து விடுபவர்களின் ஹஜ் நிறைவேறி விடும், என்று அறிவிப்பு கொடுக்கச் செய்தார்கள். அரபாவில் மஃரிபு நேரம் வரை இருந்து உம்மத்தின் மஃபிரத்துக்காக துஆ செய்தார்கள். அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும்.. “(இன்றைய நாளில்) உங்களுக்காக உங்கள் மீது என்னுடைய அருட்கொடைகளை (இன்று) முபமையாக்கித் தந்து விட்டேன்.”
-குர்ஆன் 5:4

என்ற புனித வசனம் அரபா நாளில் ஜும்ஆ நாள் மாலை அஸர் வேளைக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகையில் அமர்ந்திருந்த போது அருளப்பட்டது. வஹீயின் சுமையைத் தாங்க முடியாமல் ஒட்டகம் நிற்க முடியாமல் உட்கார்ந்துவிட்டது.

தீனின் கடமைகள் முழுமையுடைய ஹஜ் காரணமாக அமைந்துவிட்டது. லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளை அரபாவில் நம்முடன் தங்கி இருக்கும் பெரியோர்களைப் பின்பற்றி ஜமாஅத்தாகத் தொழவேண்டும். அரபாவில் இருக்கும் போது ஆண்கள் குளிப்பது விரும்பத்தக்க செயலாகும்.

அங்கு ஓதவேண்டிய துஆக்கள்:
அரபாவில் ஓத வேண்டியவை.
1. “குல்ஹ{வல்லாஹ{…” சூரா 1000 தடவை
2. யாஹய்யு யாகைய+ம் 1000 தடவை
3. லாஇலாஹ இல்லா அன்தகசுப்ஹானக இன்னி குன்து மினல்லாலிமீன் 1000 தடவை
4. மூன்றாம் கலிமா 1000 தடவை
5. 4ம் கலிமா 1000 தடவை
செய்யுமாறும அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஹனபி மத்ஹபின்பழ ஹாஜிகள் முஜ்தலிபாவில் அதிகாலை (ஸ{புஹ{ல் ஸாதிக்) கிழக்கு வெளுத்ததிலிருந்து கதிரவன் உதிக்கும் வரை தங்கி இருப்பது வாஜிபு கடமையாகும். புpறை 9ல் தங்குவது லைலத்துல் கத்ர் இரவு போன்று மிகச் சிறப்பானது. பிறை 11,12,13 ஆகிய நாட்களில் மூன்று ஷைத்தான்களுக்கும் கற்கள் எறிய 63 கற்களும், பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு மட்டும் எரிய 7 கற்களும் ஆக மொத்தம் 70 கற்களை முஜ்தலிபாவில் எடுத்துக்கொள்ள வேண்டும் “முஜ்தலிபா” என்பதற்குப் பொருள் “இணைதல்” பாவா ஆதம் (அலை) அவர்களும் அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் அறபாத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து, முஜ்தலிபாவில் தான் ஒன்று கூடினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

பிறை 10-3ம் நாள்
முஜ்தலிபாவில் பஜ்ர் தொழுதபிறகு தான் மினா செல்ல வேண்டும் மினாவந்தபிறகு

1. “ஜம்ரதுல் அகபா என்ற பெரிய ஷைத்தானுக்கு 7 கற்கள் எறிய வேண்டும்.
2. குர்பானி கொடுக்க வேண்டும்.
3. தலைமுடி எடுத்து இஹ்ராம் களைய வேண்டும்.
4. மக்காவிற்குச் சென்று தவாபுஜியாரத் செய்ய வேண்டும்.

பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு, இஷ்ராக் தொழுகைக்குப் பிறகு
“பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர்”, என்று சொல்லி முதல் கல் வீசிய பிறகு, தல்பியா ஓதுவதை நிறுத்திவிட வேண்டும்.

ஷைத்தானுக்குக் கல் எறியும் போது ஓதும் துஆ
“ஷைத்தானை விரட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், அவனின் திருநாமம் கொண்டு கல் எறிகிறேன். யா அல்லாஹ் எனது ஹஜ்ஜை ஏற்றுக் கொள்ளப்பட்ட தாயும், எனது பாவங்களை மன்னிக்கப்பட்டதாகவும் ஆக்குவாயாக! ஆமீன்!” நீண்ட துஆ ஓத முடியாது போனால் “பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறினால் போதும்.

ஷைத்தான்களின் பெயர்கள்

1. ஐம்ரதுல் ஊலா
2. ஐம்ரதுல் உஸ்தா
3. ஐம்ரதுல் அகபாஹ்

பிறை 11-(4ம் நாள்)

1. கதிரவன் நடு உச்சியைத் தாண்டிய பிறகு (ஜலால்) முதல் ஷைத்தானில் கல் எறிய ஆரம்பித்து வரிசையாகச் செல்ல வேண்டும். முதலில் பெரிய ஷைத்தானுக்கு எறிந்தால் தண்டம் கொடுக்க வேண்டும். திரும்பவும் எறிய வேண்டும்.

துல்ஹாஜ் 12 – (5 ம் நாள்)

பிறை 11ல் எறிந்தது போல வரிசையாக மூன்று ஷைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும். பெரும்பாலோர் பிறை 12ல் கல் எறிந்த பிறகு கதிரவன் மறையுமுன் மக்காவிற்குச் சென்று விடுவார்கள். ஆனால் அடுத்த நாள் பிறை 13ல் தங்கிச் செல்வதே சுன்னத்தான நடைமுறை.


பிறை 13 – (6 ம் நாள்)

முஅல்லிமிடம் ஒரு குழுவாகச் சென்று “பிறை 13ல் தங்கிச் செல்ல விரும்புகிறோம்” என்று சொன்னால் சில கூடாரங்களைப் பிரிக்காமல், அங்கு தங்க ஏற்பாடு செய்வார். இல்லாவிட்டால் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட மினா பள்ளிவாசலில் வசதியாகத் தங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை 11,12,13ல் ஜவால் நேரத்திற்குப் பிறகு தான் கல்லெறிந்தார்கள் அவர்கள் மினாவில் தங்கி இருந்த போது தான்.

“இதாஹாஅ நஸ்ருல்லாஹி” குர்ஆன் சூரா அருளப்பட்டது.
பிறை 13ல் மினாவில் தங்கி ஜவால் நேரத்துக்குபின் கல்லெறிந்த பிறகு தான் மக்கா புறப்பட்டார்கள்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் குர்பானி கொடுத்தபின் மொட்டை அடித்துக் கொண்டது போல நாமும் செய்து, அவர்களைப் போலவே நாமும் 70 கற்களை ஷைத்தான்களுக்கு வீசி, அவர்கள் கேட்டதுபோல நாமும் துஆக்கள் தொழுகைகள், அமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட பரிப+ரண ஹஜ்ஜை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்! ஹஜ்முபாரக்!

மதீனா

நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித் நபவியில் பகல் நேரத் தொழுகையான லுஹர் தொழுகையைத்தான் முதன் முதலில் தொழுதார்கள்.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் பெருநாள் தொழுகை நடந்தது.

“மதீனா” என்றால் “பட்டணம்” என்று பொருள். “மதீனத்துந்நபி” என்றால் நபியின் பட்டணம்.

“வெள்ளரியின் களிம்பை உலை அகற்றுவது போல மதீனா, நிச்சயமாக மனிதர்களின் பாவத்தை அகற்றிவிடும்”

மதீனாவின் தூசி தொழுநோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. “நபிமொழி
கைபர் போருக்குப் பிறகே மஸ்ஜித் நபவியில் மிம்பர் அமைக்கப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு
வருகைதந்தது கி.பி. 622
பத்ர் போர் கி.பி. 624
உஹத் போர் கி.பி. 625

கி.பி.1926ம் ஆண்டு மதீனாவின் மக்கட் தொகை 50,000

1978ல் ஒரு லட்சம்,
1988ல் ஏழு லட்சம்

மதீனாவில் தங்கி மஸ்ஜித் நபவியில் 40 வேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவது சிறப்பானது.

அரபாத்திலுள்ள பள்ளிவாசலின் பெயர்: மஸ்ஜித் நமிறா, அரபாத்திலுள்ள குன்றின் பெயர்: ஜபலுர்ரஹ்மத். முஜதலிபாவில் உள்ள பள்ளிவாசல் பெயர் : மஷ் அருல்ஹராம் மினாவில் உள்ள பள்ளிவாசலின் பெயர் : மஸ்ஜித் கைப் மக்காவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் மு அல்லா. மதீனாவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் பகீஃ

ஹிஜ்ரத் பயணத்தில் பெருமானார் (ஸல்) அவர்களும் அப+பக்கர் சித்திக் (ரலி) அவர்களும் தங்கிய இடம் தௌர் குகை. “ஓதுவீராக” என்ற முதல் இறைவசனம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இடம்: ஹீராமலைக்குகை.

ஹஜ்

ஒருவர் ஒரு தடைவ ஹஜ் செய்தால் அவர் இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செய்தவராகிறார். இரண்டு தடவை ஹஜ் நிறைவேற்றினால் இறைவனை தமக்கு கடனாளியாக்குகிறார். மூன்று தடவை ஹஜ் முடித்தால் நகர நெருப்பிலிருந்து தம்மை விடுதலையாக்குகிறார்.

ஹஜ்ஜும், உம்ராவும் அதிகமாக நிறைவேற்றுவது ஏழ்மையைத் தடுத்து விடுகிறது.

ஹஜ் செய்யுங்கள் செல்வந்தராவீர்கள். பிரயாணம் செய்யுங்கள் சுகம் பெறுவீர்கள்;;: நபிகள் நாயகம் (ஸல்)

நயவஞ்சகர்கள் ஜம்ஜம் நீரை வயிறு நிரம்பக் குடிக்கமாட்டார்கள். நபிமொழி.

மருத்துவக் குறிப்புகள்

1. ஹஜ் பயணத்தில் மூக்கில் இரத்தம் வந்தால் இரண்டு சொட்டு எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டால், அல்லாஹ் அருளால் உடனே இரத்தம் நின்றுவிடும்.
2. பாலில்லாத தேநீர் பருகி வந்தால் குளிர், வெப்பத்தைத் தாக்கிப் பிடிக்கவும், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் இருக்கவும் உதவும். அரபிகள் அப்பழத்தான் பருகுவார்கள்.
3. பழச்சாறு, (தேன்) ஐம் ஐம் அடிக்கடி பருகவேண்டும்.
4. வெப்பமாக இருந்தால் எலுமிச்சைப்பழச் சாரில் உப்பு சேர்த்துப் பருகலாம்.
5. ஜலதோஷம் (சளி) பிடிக்காமலிருக்க ஏர்கண்டிஷன் உள்ள இடங்களில் காலுறை (சாக்ஸ்) அணிவது நல்லது.
6. சைவ வணவு, காரம், எண்ணெய் இல்லாத உணவு, வணக்கங்களில் ஈடுபட வசதியாக இருக்கும்.
7. இரவில் விரைவில் தூங்கினால் தான் தஹஜ்ஜுத் குறித்த நேரத்தல் தவறாது தொழலாம்.
8. வெப்பத்தாக்கு (சன்ஸ்டிரோக்) குளிர்காலத்தில் இருக்காது என்றாலும் பகல் 11 லிருந்து 2 மணி வரை வெயிலில் வெளியில் சுற்றாமல் இருப்பது நல்லது. அவசியம் ஏற்பட்டால் தலையில் வெள்ளைநிற ஹஜ் துண்டு போட்டு வெள்ளை நிறக் குடை பிடித்துச் செல்ல வேண்டும். தேவையான ஓய்வு, உறக்கம் அவசியம்.

எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள்

1. 2½மீட்டர் இஹ்ராம் துணி.
2. முஸல்லா, மிஸ்வாக், தஸ்பீஹ்
3. மருந்துப் பொருள்கள்
4. உணவுத்தட்டு 2, கிண்ணம் 2, குவளை 2
5. டைரி
6. சின்ன அலாரம் (கடிகாரம்
7. பெட்ஷீட், போர்வை, காலுறை ஏர்பில்லோ, ஹவாய் செருப்பு
8. மதீனாவில் உபயோகிக்க வெள்ளைநிறத் துணிகள்
9. அங்குள்ள அன்பர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள்.


மற்ற குறிப்புகள்

மக்காவில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் இடங்கள்.
1. தவாபிலும், தவாப் சுற்றும் இடத்திலும்
2. முல்தஜிம்
3. மீஜாபுர் ரஹ்மத்
4. கஅபாவின் உள்ளே
5. ஜம்ஜம் கிணற்றருகே ஜம்ஜம் அருந்தியபின்
6. மகாமே இப்ராஹீமிற்கு அருகே
7. ஸபா, மர்பாவில்
8. ஸயீ செய்யுமிடங்களில்
9. அரபாவில்
10. முஜ்தலிபாவில்
11. மினாவில் இரண்டு ஷைத்தான்களுக்குக் கல் எறிந்த பிறகு ஜம்ரதுல் அகபா நீங்கலாக.
12. முதன் முதலாக கஅபாவைக் காணும் போது
13. (ஹத்தீம் ஹஜ்ரே) இஸ்மாயில் உள்ளே.
14. ஹஜ்ருல் அஸ்வத் ருக்னுல் யமானிக்கிடையே

பெருமானார் ஹஜ் பயணத்தில்

ஹஜ் பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபாவிலிருந்து முத்தலிபாவுக்கு ஒட்டகத்தில் பயணம் செய்த போது உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களின் பின்னால் ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள். முஜ்தலிபாவி விருந்து மினாவுக்குச் செல்லும் போது பெருமானாருக்குப் பின்னால் ஒட்டகத்தில் ஹஜ்ரத் பசல்இப்னு அப்பாஸ் (ரலி) உட்கார்ந்திருந்தார்கள்.

பிறை – 10 ல்

ஹஜ்ரத் மஃமர் (ரலி) அல்லது ஹஜ்ரத் கர்ராஷ் (ரலி) அவர்களை அழைத்துத் தலைமுடி சிரைத்துக் கொண்டார்கள்.


நுழைவு வாசலிலிருந்து
குறிப்பிடப்பட்டுள்ள
பேயர்களின் விபரங்கள்

1. ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி). ஈவர்கள் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களுடைய சிறிய தந்தையாகும்.
2. ஃபாத்திமாக நாயகி (ரலி). இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களது மகளாகும்.
3. ஹஸன் முஜ்தபா (ரலி) இவர்கள் ஹஜ்ரத் அலியின் புதல்வர்.
4. ஜைனுல் ஆபிதீன் (ரலி)
5. முஹம்மது பாகீர் (ரலி)
6. ஜஃபர் சாதிக் (ரலி)
இம்மூவரும் இஸ்லாத்தின் நான்காம் ஜனாதிபதி ஹஜ்ரத் அலிய்யுப்ன அபீதாலிப் (ரலி) அவர்களது பேரர்களாகும்.
7. உம்மூல் பனீன் (ரலி)
8. ஆத்திகா (ரலி)
9. ஸஃபிய்யா (ரலி) ஆகிய இம்மூவரும் நாயகம் (ஸல்) அவர்களுடைய மாமிகள் (தகப்பனாருடன் பிறந்த சகோதரிகள்)
10. ஜைனப் (ரலி)
11. உம்முகுல்ஸ{ம் (ரலி)
12. ருக்யா (ரலி) இம்மூவரும் பெருமானார் (ஸல்) அவர்களது புதல்விகளாகும்.
13. அப்துல்லாஹ் பின் ஜஃபர் தய்யார் (ரலி) அலிரலி அவர்களின் சகோதரர் மகன்
14. அகீல் இப்னு அபீதாலிப் (ரலி) அலி-ரலி அவர்களின் சகோதரர்.
15. மாலிக் (ரலி) பிரபல “ஹாதீஸ் அறிவிப்பாளர் மாலிக் இப்னு அவ்ஸ் என்பவராகும்.
16. நாபீஃ (ரலி) இவர்களும் “ஹதீஸ் அறிவிப்பாளராகும்”.
17. இப்ராஹ{ம், இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களுடைய புதல்வராகும். பிறந்து 15-வது மாதத்திலேயே வபாத்தாகிவிட்டார்கள்.
18. உஹது ஸஹ{துகள். மதீனாவிலேயே உள்ள உஹது மலை அடிவாரத்தில் நடந்த யுத்தத்தில் உயிர் நீத்த தியாகிகளில் சிலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
19. இஸ்மாயில்
20. ஹலீமா சஃதிய்யா (ரலி) இவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரண்டாண்டுகள் தாய்ப்பாலூட்டிய செவிலித்தாயாகும்.
21. ஃபாத்திமா பின்த்தி அஸது (ரலி)
22. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) இவர்கள் இஸ்லாத்தின் 3-ம் ஜனாதிபதியாகும் நபி (ஸல்) அவர்களது இருமகள்களை மணந்து துன்நூரைன் எனப் பெயர் பெற்றவர்கள்.
பின்வரும் ஒன்பது பெண்மணிககும் ரசூல் (ஸல்) அவர்களது மனைவிகளாகும். உம்மஹாத்துல் முஃமினீன் என அழைக்கப்படுவார்கள்.
23. ஜுவைரிய்யா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
24. ஸவ்தா (ரலி) பின்த்தி ஸம்ஆ
25. ஆயிஷா (ரலி) பின்;த்தி அபீபக்ரு
26. மைமூனா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
27. ஹஃப்பசா (ரலி) பின்த்தி உமர்
28. உம்முஹபீபா (ரலி) பின்த்தி அபீஸீப்யான்
29. உம்முஸலமா (ரலி)
30. ஸஃபிய்யா (ரலி) பின்த்தி ஹ{யய்யி
31. ஜைனப் (ரலி) பின்த்தி ஜஹ்ஷ்
nidurseasons

சனி, ஜூன் 23, 2012

பழமை வாதமா ? பயங்கர வாதமா


மாறுகிறது பழமைவாதம்: ஸ்கூட்டியில் வலம் வரும் காஷ்மீர் இளம் பெண்கள் '' என்ற தலைப்பிட்டு மாலை மலரில் ஒரு செய்தியைப் பார்த்தோம். ஏதோ ஒரு பெரிய அதிசயம் நிகழ்ந்து விட்டதைப் போல் பில்டப் செய்து அதற்காக ஒருப் பக்கத்தையும் வீணடித்திருந்தனர்.

குடும்பங்களில் நிலவும் பழமை வாதத்தை மீற முடியாமல் பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் முடங்கி கிடந்தனர். அந்த நிலை சமீபகாலமாக கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் தனியே செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுதந்திர காற்றை உணர்வதாக அவர்கள் கூறுகின்றனர் என்று கற்பனையை கலந்து விட்டிருந்தது.

இன்றும் சென்னை, மதுரை, திருச்சிப் போன்ற பெரு நகரங்களில் வசிக்கக் கூடிய முஸ்லீம் பெண்களில் சிலர் பக்கத்தில் இருக்கக் கூடிய கல்லூரிகளுக்கோ, அலுவலகங்களுக்கோ ஸ்கூட்டியில் செல்லவே செய்கின்றனர். இதேப் போன்று பெங்களூர், பம்பாய், டெல்லிப் போன்ற மாநிலங்களின் பெரு நகரங்களிலும் இது போன்று ஸ்கூட்டியில் அத்தியாவசியத் தேவைகளுக்காக செல்கின்றனர் ஆனால் நகருக்கு வெளியே தனித்து செல்ல மாட்டார்கள்.

பழமை வாதமா ? பயங்கர வாதமா ?
ஆனால் காஷ்மீரில் மட்டும் இது அறவே முடியாது காரணம் இந்திய ராணுவத்தினர் எந்த விதக் காரணமுமின்றி ஸ்கூட்டியை நிருத்தி தனித்து செல்லும் இளம் பெண்களை கடத்தி விடுவர்.

இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலுக்கு பயந்து தான் இளம் பெண்கள் தனித்து வெளியே செல்வதற்கு காஷ்மீர் குடும்பங்களில் ஏராளமானக் கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன என்பதை மாலைமலர் தெரிந்து கொள்ளட்டும்.

அவ்வாறு பல முறை கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பெண்களை மாலைமலர் போன்ற மத வாத பத்திரிகைகள் பெண் தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி மறைந்திருந்து சுட்டனர் அதனால் ராணுவ வீரர்கள் அவர்களை திருப்பி சுட்டதில் இரண்டு பெண் தீவிரவாதிகள் செத்தனர், மூன்று பெண் தீவிரவாதிகள் செத்தனர் என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு எழுதுவர்.

காஷ்மீரிலிருந்து இந்திய ஆக்ரமிப்புப் படைகள் வெளியேறி காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வரை இளம் பெண்கள் தனித்து நடந்தோ அல்லது வாகனத்திலோ பயணிக்க முடியாது.

அதனால் காஷ்மீரில் இளம் பெண்கள் ஸ்கூட்டியில் தனித்து செல்லாதது இஸ்லாமியப் பழமை வாதம் காரணம் அல்ல இந்திய ராணுவத்தினரின் பயங்கரவாதமேக் காரணமாகும்.

பஸ்சில் செல்லும் போது ஆண்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது. ஸ்கூட்டியில் அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. என்று காஷ்மீரில் புதிதாக ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள் கூறுவதாக மேலும் புளுகி உள்ளது மாலைமலர்.

ஒழுக்கத்தைப் பேண வேண்டும், பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று கருதும் எந்தப் பெண்களும் பஸ்சில் கூட்டத்துடன் பயணிப்பதை விட ஸ்கூட்டியில் தனித்து செல்வது பாதுகாப்பு என்று ஒருக்காலும் சொல்லவே மாட்டார்கள் இது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் மாலைமலரின் அப்பட்டமான கற்பனையாகும்.

பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அவர்களுக்கான தனி இருக்கையில் சக பெண்களுடன் அமர்ந்து செல்வர் எந்த விதமான தொந்தரவும் இடையூறும் ஆண்கள் மூலம் ஏற்படாது மீறினால் ஓட்டுனர் நடத்துனரால் அவர்கள் காவல் நியைலத்தில் பிடித்து ஒப்படைக்கப் படுவர், அல்லது சக பயணிகளால் கூட பிடித்து ஒப்படைக்கப்படலாம்.

ஸ்கூட்டியில் தனித்துப் பயணிக்கும் போது ஸ்கூட்டர் ஓட்டும் ஆண்களால் ஏற்படும் தொந்தரவுகளை, இடையூறுகளை இவர்களால் தனித்து எதிர்கொள்ள முடியாது, காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைக்கவும் முடியாது.

எதோ ஒரு அவசரத் தேவைக்காகக் கூட முன்னாள் செல்லும் ஸ்கூட்டரை இவர்களால் முந்த முடியாது, முந்த நேரிட்டால் ஸ்கூட்டர் காரர் கடுப்பாகி விடுவார் ஒருப் பெண்ணுக்கு இவ்வளவுத் துணிச்சலா ? நான் யார் என்ற ஆண் அகம்பாவம் அவருக்கு வந்து விடும் இறுதியில் விபரீதத்தில் முடிந்து விடலாம்

ஃபேஷன் ஆடைகளை அணிந்து கொண்டு தனித்து ஸ்கூட்டியில் பயணிக்கும் பெண்களின் பின்னால் அணி வகுக்கும் ஆண்களின் ஈவ்டீசிங்கினால் மன உலைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

கற்பழிப்புக்காக மரண தண்டனையே சிறந்தது என்று உலக மனித உரிமை அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் ஒருமித்துக் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு நாட்டில் கற்பழிப்புகள் மலிந்து விட்டன. இறுக்கமான ஆடை அணிய வேண்டாம் என்று நீதிபதிகள் பெண்களுக்கு அறிவுரைக் கூறும் அளவுக்கு கற்பழிப்பு வழக்குகள் நீதிமன்ற வாசல்களை நாள் தோறும் தட்டிக் கொண்டிருக்கின்றன.

தனித்து ஸ்கூட்டி ஓட்டும் எல்லாப் பெண்களும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை மறைக்கும் ஆடை அணிந்து ஓட்டுவதில்லை என்பதற்கு மாலைமலர் கொடுத்தப் போட்டோவே இதற்கு உதாரணமாக இருக்கிறது. (தேவைக் கருதி போட்டோவையும் இணைத்துள்ளோம் இல்லை என்றால் இதுப் போன்ற போட்டோக்களை நமது மெயிலில் இணைப்பதில்லை (

http://www.maalaimalar.com/2012/06/14131008/kashmir-young-womens-scooty-tw.html

இன்னும் திடீரென ஏற்படும் விபத்தில் அவர்களைத் தொட்டுத் தூக்கி மருத்துவமனையில் சேர்ப்பதற்கோ, இன்னும் பிற முதலுதவிகளை செய்வதற்கோ முடியாத நிலைகள் உருவாவதால் அகால மரணத்தைத் தழுவ நேரிடுகின்றனர் .

இப்படி அடுக்கடுக்காக எத்தனையோக் காரணங்களை தனித்து ஸ்கூட்டியில் செல்லும் பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் அநீதிகளை அடுக்கிக் கொண்டேப் போகலாம்.

மேற்காணும் ஆபத்தான விஷயங்களை கவனத்தில் கொண்டே பெண்கள் இரு சக்கர வாகனங்களையோ அல்லது நான்கு சக்கர வாகனங்களையோ இயக்குவதற்கு சவுதி அரேபியாப் போன்ற நாடுகளிலும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இது அவர்களுக்கு பாதுகாப்பேத் தவிறப் அவர்கள் மீது பழமை வாதத்தை திணிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் ஈவ்டீஷிங், கற்பழிப்பு, காதல் என்றப் பெயராலான மோசடிகள் போன்ற அநீதிகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டு விட்டால் பெண்கள் தாராளமாக வாகனம் ஓட்டுவதில் தடை வராது இதை இஸ்லாம் தடை செய்யவில்ல.

நாட்டின் குடிமக்களை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் மீதும் இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது அதனடிப்படையில் மேற்காணும் விதம் நாகரீகம் எனும் பெயரில் பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளை கருத்தில் கொண்டே சவுதி அரேபியா அரசாங்கம் பெண்கள் வாகனம் ஒட்ட தடை விதித்துள்ளது.

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். 7138 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

புதன், ஜூன் 20, 2012

பூரியான் பாத்திஹா

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அந்த மாயையில் மயங்கி கிடக்கும் மக்களுக்கும் இஸ்லாம் கூறும் தீர்வு இதோ!

என் அருமை சமுதாய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள். அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக‌ ஃபாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி சவுக்கடி தான் கொடுப்பிர்கள்.

இந்த பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்
ஷியாக்களின் 12 இமாம்களில் ஒருவரான 'ஜாஃபர் சாதிக்' என்பவரின் பெயரை முன்னிறுத்தி, இந்த ரஜப் மாதம் 22 வது பிறையில் 'பூரியான் ஃபாத்திஹா'வை ஓதுவதற்காக வீட்டின் ஒரு அறையை பிரத்தியேகமாக கழுவி சுத்தம் செய்து, மேலே வெள்ளைத் துணியினால் பந்தல் அமைத்து, அதில் பூக்களைத் தொங்கவிட்டு அலங்கரித்தவுடன் அந்த அறைக்கே ஒரு புனிதம் வந்துவிட்டதாக எண்ணி, ஃபாத்திஹா ஓதி முடிக்கும்வரை யாரையும் உள்ளேகூட அனுமதிக்கமாட்டார்கள்! (ஓதுபவர்கள் மட்டும் உள்ளே செல்லலாம்). தயாரித்து வைத்துள்ள பூரியான்களில் 22 பூரியான்கள் மட்டும் ஓதுவதற்காக (படைப்பதற்காக) வைக்கப்படும்.

இந்த‌ 'பூரியான் ஃபாத்திஹா'வைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் செல்வந்தராவதற்காக மாற்று மதத்தவர்கள் செய்யும் 'லட்சுமி பூஜை'யைக் காப்பி அடித்ததாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மூட நம்பிக்கையையும், கண்மூடிப் பின்பற்றும் மடமையையும் ஒழிக்க வந்த பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துக்கொண்டு, 'முன்னோர்கள் சொன்ன வழிமுறை' என்று அதே இஸ்லாத்தின் பெயராலேயே நாம் அத்தகைய மூடச்செயல்களை செய்துக் கொண்டிருக்கலாமா? இது உங்களுக்கு கைசேதமில்லையா? இதுபோன்ற ஒரு வணக்க‌த்தை அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளானா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் கற்று தந்தார்களா ? இல்லை கண்டிப்பாக இல்லை இறைமறையும்,நபி மொழியும் கூறுவதை கவனியுங்கள்.

"அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை". (அல்குர்ஆன் 13:26)

"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தபோதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)

இறை மறை இப்படி இயம்புகிறது நபி மொழியோ மார்க்கத்தில் அல்லாஹ்வினுடைய தூதர் கற்று தரதாவைகள் எல்லாம் புதுமைகள் அது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று கூறுகிறது
இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ''வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்)அவர்களின் நடைமுறை; காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்); பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: புகாரி)

இத்தகைய வழிகேடுகள், தான் காணும் கட்டுக் கதைகளை எல்லாம் தங்கள் இஷ்டம்போலக் கூறி, மக்களை வழக்கம்போல் நம்பவைத்து ஏமாற்றி, ஓசியில் தங்கள் வயிறு வளர்க்க சிலர் உருவாக்கியவைதான் என்பதை புரிந்துக் கொண்டு, சிறிதும் தாமதிக்காமல் உங்களை நபிவழியின் பக்கம் மாற்றிக்கொண்டு நேரான வழியில் செல்லுங்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக! நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! நேர்வழியில் இருப்போரை அதைவிட்டும் தடம் புரண்டுவிடாமல் காப்பானாக

ஞாயிறு, ஜூன் 17, 2012

சூனியம் - ஒரு பார்வை


விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும்.

ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.

இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா?

பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம்.

சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.

ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான்.

உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள்.

சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள். அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு åதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன.

ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.

சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது.


கண்களை ஏமாற்றுவதே சூனியம்


மூஸா(அலை) அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா(அலை) தோன்றியது. (அல்குர்ஆன் 20.66)

அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.

சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம்.

சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69)

''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102)

என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.

ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.

நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17)

உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான்.

(அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)

மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது.

ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102)

ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது.

மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்!

எனினும் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.

ஆதம்(அலை) அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான்.

இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.

''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும்.

ஆம்! இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார்.

ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர்(ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் åதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில் '' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான்.(அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும்.

1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது.

2. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு.

3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.

4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான்.

இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.

வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. இது யூதர்களின் நாச வேலையில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!

ஆக்கம்

M.M.அப்துல் காதிர் உமரி
"அந்த ஏழு பாவங்கள்"

புனித மக்கா முற்றுகை 1979


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது.ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று 1399 ஆண்டுகள் கழிந்து 1400 ஆவது வருடம் ஆரம்பித்த முஹர்ரம் முதலாவது நாள்.அடுத்து காரணம் 1979 நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகை.இந்த மக்கா முற்றுகை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இஸ்லாமிய உலகை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிய இந்த முற்றுகையை முன்னின்று நடத்தியவன் பெயர் ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி.இவன் சவுதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தை சேர்ந்த செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நஜ்த் பிரதேசம் பற்றி இவ்வாறு முன்னறிவுப்பு செய்தார்கள்.


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி……
'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.

(ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட ஒரு பிரதேசத்திளிருந்தான் இந்த ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி வெளிவந்தான்.இவன் தன் மைத்துனனான் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தாணியை வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்தான்.


நஜ்த் பிரதேசத்தில் மிகவும் பலம்வாய்ந்த குடும்பத்தில் பிறந்த ஜுஹைமான் இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனாக இருந்தான்.மேலும் இவன் சவுதி பாதுகாப்புப் படையின் முன்னால் காப்ரல் ஆவான்.மேலும் முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்களின் முன்னாள் மாணவர்களில் ஒருவன்தான் இந்த ஜுஹைமான்.பின்னாட்களில் முப்தி அவர்களுக்கு அதிராக போர்க்கொடி தூக்கியன் இவன்தான்.

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர் பரம்பரை சவுதி மண்ணை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி மேலைத்தேய கலாச்சாரத்தை பரப்ப முயற்சி செய்கிறது இது தான் ஜுஹைமானின் அடிப்படை குற்றச்சாட்டு.மேலும் தனது மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியே இமாம் மஹ்தி என்றும் அது பற்றி அல்லாஹ் தனக்கு கனவு மூலம் அறிவித்ததாகவும் அவன் கூறினான்.உண்மையில் இந்த இரு பொய்யர்களையும் நம்பியவர்கள் இஸ்லாமிய அறிவற்ற பாமர முஸ்லிம்களல்ல இவர்களை நம்பியவர்களில் பெரும்பாலானோர் மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்த உலமாக்கள்.சவுதி அரேபிய தவிர்ந்த எகிப்து,யேமன்,குவைத் மற்றும் ஆபிரிக்காவின் கறுப்பின முஸ்லிம்களும் இந்த குழுவில் அடங்குவர்.

1979 நவம்பர் 20 அதாவது 1400 ஆவது ஹிஜ்ரி ஆண்டின் முதல் நாள் கிட்டத்தட்ட 50000 தொழுகையாளிகளுக்கு தொழுகை நடத்த மஸ்ஜிதுல் ஹரத்தின் இமாம் முஹம்மத் அல் சுபைல் முன்வந்தார்.அப்போது தொளுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் முன்வந்து மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழையும் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகள் கொண்டு பூட்டினார்கள்.இந்த நேரத்தில் அவர்களுடன் போராடிய இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த 500 பேரில் சில பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய கலகக்காரர்கள் ஹரத்துக்கும் கட்டுப்பட்டு அறைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர்.பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பல தொழுகையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் எல்லோரும் விடுவிக்கப்படவில்லை சிலர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக ஹரத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டனர்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது,மேலும் அவர்கள் மஸ்ஜிதின் மேல்மட்டங்களை தற்காப்பு நிலைகளாகவும் மினராக்களை ஸ்னைப்பர் நிலைகளாகவும் பயன்படுத்தினர்.

புனித மஸ்ஜிதுல் ஹரம் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து ஒரு சில மணித்தியாலத்திலே மஸ்ஜிதை மீட்க களத்தில் குதித்தது சவுதி அரேபியாவின் பாதுகாப்புப் படை அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த இளவரசர் சுல்தான் அவர்களே களத்தில் படைகளை வழிநடத்தினார்.அன்றைய நாள் மாலை நேரத்துக்குள் முழு மக்கா நகரிலும் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.என்றாலும் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளதால் சவுதியின் பாதுகாப்புப் படை உலமாக்களின் பாத்வாவுக்கு காத்திருந்தனர்.நிலைமையை உணர்ந்த முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுளைய பத்வா வழங்கினார்.

உலமாக்களின் பத்வாவை பெற்றுக்கொண்ட சவுதி பாதுகாப்புப் படை பிரதான மூன்று வாயில்கள் ஊடாக முன்னணி தாக்குதலை தொடுத்தனர்.சவுதி பாதுகாப்புப் படை போன்றே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் மிகவும் கடுமையாக இருந்தது.மேலும் மினராக்களில் பதுங்கியிருந்த ஸ்நைபேர் துப்பாக்கிகளின் தாக்குதல் சவுதி பாதுகாப்புப் படைக்கு பெரும் சவாலாக இருந்தது.இறுதியில் நவம்பர் 27 ஆம் திகதியாகும் போது மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதிகதி சவுதி பாதுகாப்புப் படை வசம் வந்தது.கிளர்ச்சியாளர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ பாதை மட்டுமே இருந்தது.இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகை 255 பேருக்கு மரணத்தை தேடிக்கொடுத்து முடிவுக்கு வந்தது.இதன்போது 560 பேர் காயம் அடைந்ததனர்.மேலும் இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் 117 பேர் கிளர்ச்சியாளர்கள்.

கிளர்ச்சிக் குழுவின் தலைவன் ஜுஹைமான் உட்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைதி செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் சவுதியின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மக்கள் மத்தியில் சிறைச்சேதம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களோ அல்லது நான் மேலே பதிந்த விடயங்களில் ஏதாவது தவறு இருப்பின் தயவு செய்து உங்கள் கருத்துகளை குறிப்பிடவும்.திருத்தி கொள்கிறேன்.

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

http://tamilkhilafa.blogspot.com

சனி, ஜூன் 16, 2012

சமுதாய சிந்தனை இல்லாத சுயநல அரசியல் வாதிகள்.
சமுதாய சிந்தனை இல்லாத சுயநல அரசியல் வாதிகள்.

சமுதாய மக்களின் உரிமைகளுக்காக வீதியில் நின்று குரல் எழுப்பினால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் அமையும்> சட்டமன்றத்தில் குரல் கொடுத்தால் தான் செவிட்டில் அறைந்தால் போல் விழும் என்பதால் மாபெரும் மக்கள் பேரியக்கமாகிய தமுமுகவை அரசியல் அமைப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்று இப்போதைய தமுமுக காரர்கள் அப்போதுக் கூறியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

தமுமுகவினர் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு தடையாக இருப்பது தவ்ஹீத் பிரச்சாரம் தான் என்று பகிரங்கமாக் கூறி தவ்ஹீத் பிரச்சார அறிஞர்களை வெளியேற்றி விட்டு சமுதாயப் பேரியக்கத்தை தங்களுக்கு ஓட்டுப் பிச்சை எடுக்கும் சுயநல இயக்கமாக மாற்றிக் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் இரண்டு பேர் மட்டும் சட்ட மன்றத்திற்குள் நுழைந்தனர்.

சொன்னது என்னாச்சு ?
இவர்களுக்கு ஆதரவளித்த அதிமுக தனது ஓராண்டு சாதனையை(?) நூறாண்டு சாதனையாக பட்டியலிட்டது.

இவர்கள் தங்களது ஓராண்டு சாதனையை நூறாண்டு சாதனையாக இதுவரைப் பட்டியலிடாதது ஏன் ?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்த ஓராண்டில் இவர்கள் வென்றெடுத்த சலுகைகளைப் பட்டியலிட முடியுமா ? அல்லது குறைந்த பட்சம் உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரலெழுப்பியதையாவதுப் பட்டியலிடத் தயாரா ?

இந்த ஓராண்டில் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடித்ததும்> ஜோக் அடித்து அம்மாவை சிரிக்க வைத்ததும் நூறாண்டுகளுக்குப் போதும் எனும் அளவுக்கு உள்ள சாதனைளாகத் தெரிகிறது.

வாயிருந்தும் ஊமைகளாய்.
குரலெழுப்ப வாய்ப்பிருந்தும் இவர்கள் ஊமையாய் போன சந்தர்ப்பங்கள் இந்த ஓராண்டில் சட்டமன்றத்தில் எத்தனையோ நிகழ்ந்து விட்டன.

ஹஜ் மானியம் நிருத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டதை அடுத்து சீனாவில் இந்துக்களால் புன்னிய தலமாக கருதப்படும் மானசரோவர் செல்பவருக்கு 40 ஆயிரம் வழங்கப்படும் என்றும்> நேபாளத்தில் உள்ள முக்திநாத்துக்கு செல்பவர்களுக்கு 10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அம்மா(?) அறிவித்து அதில் குறைந்தது 500 பேர் இந்த சலுகையை இந்த ஆண்டு அடைந்து கொண்டர்.

மத்திய அரசு ஹஜ் மானியத்தை நிருத்தினால் என்ன இஸ்லாமிய சமுதாயத்தின் சகோதரியாகிய நான் மாநில அரசு நிதியிலிருந்து தருவதாக அவரால் அறிவிக்க முடிய வில்லை, இவர்களாவது தனது சமுதாய மக்களுக்கு மறுக்கப்பட்ட சலுகையை கேட்கலாம் ஏன் கேட்க வில்லை ? இதைக் கேட்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டும் என்றார்கள்.

கிராம கோயில்களின் புணரமைப்பு நிதி 250 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டன> இந்த ஓராண்டில் அரசு நிதியிலிருந்து 364 கோயில் குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் கீற்றுக் கொட்டகையில் இயங்கும் எத்தனையோ பள்ளிவாசல்கள் கீற்று மாற்ற முடியாமல்> தொழுகைப் பாய்களை மாற்ற முடியாமல் கிழிந்த நிலையில் கிடக்கின்றன> எத்தனையோ பள்ளிவாசல்களை ஒட்டிய குளங்கள் தூர் வார முடியாமல் சாக்கடையாக மாறிக் கிடக்கின்றன.

நம்முடைய வரிப் பணத்தில் குவிந்து கிடக்கும் அரசு நிதியிலிருந்து கோயில்களைப் புணரமைக்கலாம் பள்ளிவாசல்களின் புணரமைப்புக்காக கொடுக்கக் கூடாதா ? அதற்காக இவர்கள் குரல் எழுப்பக் கூடாதா ? இதைக் கேட்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டும் என்றார்கள்>

முஸ்லீம்களுக்கு மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக அம்மா(?) ஏற்கனவே வாக்களித்திருக்கையில் 1349 பேர் அரசு மருத்துவப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டதில் அதிகப்படுத்த வில்லை என்றாலும் விகிதாச்சார அடிப்படையிலாவது முஸ்லிம்கள் தேர்வு செய்யப் பட்டிருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லீம் கூட திட்டமிட்டு தேர்வு செய்யப்பட வில்லை.

இதற்காக இவர்கள் இதுவரை ஒருத் துறும்பைக் கூட எடுத்துப் போட வில்லை> இவர்கள் என்ன சமுதாயக் காவலர்கள் ? இது போன்று முஸ்லீம்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டு பிற சமுதாயத்தவருக்கு தாராளமாக வாரி வழங்கிய எத்தனையோ சலுகைகள் இந்த ஓராண்டில் மட்டும் அறிவிக்கப்பட்டதைப் பட்டியலிடலாம்.

இதற்கெல்லாம் குரல் கொடுப்பதற்காகத் தானே சட்டமன்றத்திற்குள் போக வேண்டுமென்றார்கள்> சட்டமன்றத்திற்குள் போயும் ஏன் குல் கொடுக்க வில்லை ? இதற்காக குரல் கொடுத்ததனால் இவர்கள் எத்தனை முறை குண்டுக்கட்டாக சட்டமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசப்பட்டார்கள் ? வளைகுடாவிலிருந்து

விழலுக்கு இறைக்கும் நீர் போன்றது.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனையாகிய மரண தண்டனைக்கு எதிராக கூட்டம் நடத்துபவர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டது.

பூரண மதுவிலக்கல்லாது குடிக்கலாம்> ஆனால் குடிக்கக் கூடாது எனும் தா.பாண்டியன் வை.கோ நடத்திய அரைவேக்காடுத் தனமானக் கூட்டத்தில் கலந்து கொண்டது.

இங்கிலாந்து அரசின் வைரவிழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு விடுத்த அழைப்பை திருப்பிப்பெற வலியுறுத்தி ம.தி.மு.க நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டது. இவைகள் சமுதாயப் போராட்டங்களா ?

இது போன்ற சமுதாயத்திற்கு எள்ளலவும் பிரயோஜனம் அளிக்காத போராட்டங்களில் கலந்து கொள்வதற்காகத்தான் கந்தக பூமியில் வெந்து மடியும் மக்களிடத்தில் சமுதாயம் எனும் பெயரைக் கூறி நிதிப் பெறுகிறார்களா ? இதற்காகத் தான் தவ்ஹீத் பிரச்சாரம் முட்டுக்கட்டை என்றுக் கூறி தமுமுகவிலிருந்து தவ்ஹீத் வாதிகளை வெளியேற்றினார்களா ? இவர்களுக்கு வசூல் செய்து அனுப்புகின்ற சகோதரர்கள் சிந்தித்துக் கொள்ளட்டும்.

கஸ்டப்பட்டு பொருளீட்டும் சகோதரர்களே ! இவர்களின் சமுதாயப் போராட்டம் என்ன லட்சனத்தில் அமைந்துள்ளது என்பதை இப்பொழுதாவது விளங்கிக் கொண்டு விட்டதால் இவர்களுக்கு அனுப்பும் நிதியை உங்கள் குடும்பத்தில் உள்ள நலிந்தப் பிரிவினருக்கு அனுப்பி குடும்பத்தாருக்கு கொடுத்துதவிய நன்மையை அடைந்து கொள்ளுங்கள்.

ஜே அரசின் பச்சை துரோகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்!


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
Like · · Share

Mohamed Sidik and 8 others like this.
2 shares
BM Ghani நீங்கள் என்ன சொன்னாலும் கட்சிப்பெயரில் இருக்கும் எழுத்துக்கள் இவர்களுக்கு இருந்தாத்தானே உரைப்பதற்கு? இன்னும் இவர்களை நம்பி பின்னால் செல்லும் மக்கள் தான் சிந்தித்து இவர்களை புரக்கணிக்க வேண்டும்.
4 hours ago · Like · 6
Thirupoondi Tntj Tntj evargalai makkal purindhu kondu vittargal,evargalin kootam karaindhu kondu irrupadhai nam kandukondhan irukirom,koodiya viraivil koodaram mothamaga kaliyahividum...insha allah
3 hours ago · Like · 4
முகநூல் போலிஸ்
அண்ணாச்சி எங்கள் தானே தலைவர் அப்படியே எம்ஜிஆர் மாதிரியே போஸ் கொடுக்கிறார்.நல்லா வருவாரு ..நம் சமுதாயத்தை சீரழிப் பாரு ....உங்களுக்கு எல்லாம் டிமிக்கி கொடுத்து கிட்டே இருப்பாரு...நரேந்திர மோடி யை அல்லது ஜெயாவை பிரதமராக்குவாறு ...மொத்தத்தில் ...See More
2 hours ago · Like · 2
Mohamed Sidik
சிந்திக்க வைக்கும் பதிவு ,
சீரழியும் சமுதாயத்தை பற்றி ,
சித்திக்க நேரம் இல்லா தலைவர்கள் .
பொறுப்பில்ல போக்கிரிகளாக்க ,
பொருளாதரத்தை வாரி இறைக்கும் ,
...See More
9 minutes ago · Like
Thirupoondi Tntj Tntj jayalalitha govt panra aniyathai,muslimgaluku pangira dhrogathai ethirthu oru varthai pesamaten engirargaley evargal enna manidhargal,ivargalai vida thirumavalavan better.

புதன், ஜூன் 13, 2012

நபிகள் நாயகம் அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?


நபி (ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் ”பத்ர்” எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஓடலாயிற்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும்.

விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலைநகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகிவிடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது. வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அது தான்.

”பத்ர்” எல்லையைத் தாண்டி அவர்கள் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

”உம்ரா” வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹுதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகியிருக்கும்.

ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறு தான். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை. என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்கா?
எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. ”தாயிப்” நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதினாவை விட வளமானதாக இருந்ததில்லை. பொருளாதாரம் போர் நோக்கமாக இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக "நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:94)

கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா?
எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றி வீரராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழிவாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்கள் நாடு துறக்கக் காரணமானவர்கள், அவர்களின் தோழர்களைச் சுடுமணலில் கிடத்தியவர்கள், தூக்கில் தொங்கவிட்டவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படிப் பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொதுமன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழி வாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்கு போதுமான சான்றாகும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்
.(அல்குர்ஆன் 5:8)

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்.
ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : புகாரி, முஸ்லிம்

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : முஸ்லிம்.

போர்க்களத்தில் எந்தத் தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் விசாலமானதாக இருந்தது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாது.

மதமாற்றம் செய்வதற்காகவா?
மற்றவர்களை மதமாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.

இம்மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக உள்ளது.
அல்குர்ஆன் 2 : 256)

அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாய மதமாற்றத்தை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு தம் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யா வரி பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)

இணை வைப்பவர்களில் (அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்கு பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! எனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்.
(அல்குர்ஆன் 9:6)

மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

எதற்காகப் போர் செய்தனர்?
மேற்கண்ட காரணங்களுக்காகப் போர் நடக்கவில்லை என்றால் அவர்களே போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விக்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. கமண்டலமும் ஜெப மாலையும் வைத்துக் கொண்டு சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்றும் நாம் சொல்வில்லை.

தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள். மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். இதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு நியாயமான சில காரணங்கள் இருந்தன.

முதலாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பூண்டோடு கருவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி (ஸல்) போர்களைச் சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.

நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காண மாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.

”உஹது போர்” என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் ”உஹத்” எனும் மலையடிவாரத்தில் நடந்ததால் ”உஹதுப் போர்” என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.

போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்து விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.

முன்னூறு மைல்கள் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்த நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்கள் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.

”பத்ருப் போர்” என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.

வலியப் போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

தங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?)
அல்குர்ஆன் 9:13)

போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள் தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டன. இதையும் குறை கூற முடியாது.

இரண்டாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.

இதனால் தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபனைக்கிணங்க திரும்பி வந்தார்கள்.

ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வபோது குறுக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்றுவிட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்துமீறுபவர்களை வழிமறிக்கவும் அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் மக்காவின் தலைவரான அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழிமறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தத்தமது நாடுகளில் இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் அனுமதிப்பார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.

நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.

பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை – சொந்த நாட்டை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றி கொண்டனர். இழந்ததை மீட்பதற்காக நடத்தப்படும் போர்களும் நியாயமான போர்களே.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு (அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து ”எங்கள் இறைவன் அல்லாஹ்” என்று கூறியதற்காக அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.
(அல்குர்ஆன் 22 : 39)

திருக்குர்ஆனின் இவ்வசனம் அநீதியிழைக்கப்பட்டவர்கள் அடங்கிப் போகாமல் எதிர்த்துப் போரிடுமாறு கட்டளையிடுகிறது. இழந்ததை மீட்பதற்காகக் கூட போர் செய்யக் கூடாது என்று யாரும் கூற மாட்டார்கள்.

தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராடும் பலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...