திங்கள், மே 28, 2012

786 என்பதைப் பயன்படுத்தலாமா?ASSALAMU ALAIKKUM WA RAHMATHULLAHI WA BARAKATHUHU........ DEARS............. 786 என்பதைப் பயன்படுத்தலாமா? நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன) அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார். 786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான். அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும். ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் வின் பெயரால்... என்னை மிகைக்க நினைக் காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.)(அல்குர்ஆன் 27:30) நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதியுள்ளனர். பார்க்க : புகாரி 7, 2941, 4553 புஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார்.

ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (புகாரி 7-ஹதீஸின் சுருக்கம்) அளவற்ற அருளாளன், கருணையன்புடையோன் அல்லாஹ்தவின் திருப்பெயரால்...இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்). (புகாரி 2941-ஹதீஸின் சுருக்கம்) நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

ஞாயிறு, மே 27, 2012

குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு


இந்தியாவில் 10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும்.

கருவை வளர்க்கக் கூடிய பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது. ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும்.

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.
ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும்.

ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, மே 25, 2012

பேரம் பேசுரது35%, 40% னு லாபம் வச்சி விற்கும் பெரிய பெரிய shopping centers ல பொருள் வாங்கும் போது விலைய பற்றி எதுவும் சொல்லுரதில்ல....

கேட்கிர காசு கொடுத்திடுவோம்.....


நம்ம வியாபார திறமையெல்லாம்(ரூ.5 .ரூ.10 பேரம் பேசுரது) இவங்கள மாதிரி வயித்துக்காக பொலப்பு நடத்துரவங்ககிட்டதான்.......

யோசிச்சு பாருங்க...!!!

நாம கொடுக்குர 5, 10 வைத்து அவங்க அடுத்த ஊருல branch'a ஆரம்பிக்க போராங்க.....

வராத கரண்டுக்கு பில்லு கட்டுவாங்க, ஏதோ ரெண்டு வேலை நிம்மதியா சாப்டுட்டு போராங்க..

முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ் !


உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்

வியாழன், மே 24, 2012

இனி பெட்ரோல் தேவை இல்லை...! காற்றில் ஓடும் கார்..!
மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றை எரி பொருளாக கொண்டு இயங்கும் புதிய கார் வடிமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஐரோப்பாவைச் சேர்ந்த எம்.டி.ஐ நிறுவனத்துடன் இணைந்து டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த காரை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. பைசா செலவில்லாமல் செல்லும் இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு திட்டமிடப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக் குநாள் எகிறி வரும் நிலையில் மாற்று எரி சக்கியாக காற்று வந்தால், கற்பனையை சுகமாகத்தான் இருக்கிறது. -- From Nanayam Vikatan

கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!தலை குளித்து முடித்து விட்டு காயவைக்கும் போது கொஞ்சம் முடி உதிர்ந்தாலே போதும். எதையை இழந்து விட்டது போல நினைத்து ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். முடி கொட்டுவது என்பது இயல்பானதுதான்.

நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 200 முடிவரை இழக்கிறோம். கூந்தலை பராமரிப்பதில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. இது ஆண், பெண் என அனைத்து தரப்பினருக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருந்துகளை அளிக்கிறது.

மூன்று தோஷங்கள்

கூந்தல் வளர்ச்சிக்கும் மூன்று தோஷங்களுக்கும் தொடர்புள்ளது. இந்த தோஷங்கள் உடலில் சம நிலையில் இருந்தாலே கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு மண்டல நோய்கள் இவற்றாலும் முடி உதிரலாம். பாதத்திலிருந்து தலை வரை செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டாலும், முடி உதிரலாம். காலில் வெடிப்பு, கால்ஆணி, இவைகளாலும் முடி உதிரலாம்.

பெண்களுக்கு, அவர்களில் மாதவிடாய் கோளாறு தலைமுடியையும் பாதிக்கும். அதிக உதிரப்போக்கு பலவீனத்தை உண்டாக்கும். பிரசவம், கருச்சிதைவு இவற்றின் போது, உதிர இழப்பு அதிகமானால், முடி உதிரும்.

முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும். அப்போது தலைவாரிக் கொண்டால் முடி சுலபமாக உடைந்து விடும். அதிகமாக ஹேர் டிரையர் உபயோகிப்பதும் தவறு. முடியை கருமையாக்க பூசும் சாயமும் முடி உதிர காரணமாகலாம்.

சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும்.

பிரிஞ்சி இலையுடன் வேப்பிலை மற்றும் 25 கிராம் துளசி இலையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து டீஸ்பூன் எடுத்து ஐம்பது மி.லி. தண்ணீரில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்கமுடி உதிர்வது நிற்கும். வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, கூந்தலை அலசவும்.

எண்ணெய் மசாஜ்

தேங்காய் பால், தேங்காய் எண்ணைபோல, முடிக்கு நல்லது. தேங்காய் பாலை நேராகவே தலையில் தடவி அலசலாம். தேங்காய் பாலுடன் எலுமிச்சை விதைகளை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 10-15 நிமிடம், பாதாம் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையால் மசாஜ் செய்யவும்.

கற்பூரவில்லையின் பச்சை இலைகளையும் சேர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்கு அரைத்து, தேங்காய் பாலுடன் கலந்து, அரை மணி கழித்து அலசலாம். தேங்காய் பால், மருதோன்றி இலை, இவற்றை அரைத்து, சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து, ஷாம்பு போட்டு குளித்தபின், தலையில் தடவி வரலாம்.

தேங்காய் பாலுடன், காயவைத்த வெட்டிவேர், வெள்ளைமிளகு போட்டு கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டாது. நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி இரண்டையும் தேங்காய் பாலில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

அரை கப் தேங்காய் எண்ணெய் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து வேர் கால்களில் படுமாறு மசாஜ் செய்ய கூந்தலில் பொடுகுத் தொல்லை இருந்தால் நீங்கும்.

தலைக்கு குளிர்ச்சி

வெந்தயத்தை தனியாக அரைத்து தேய்த்துக் குளிக்கலாம். கால் மணி நேரத்திற்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும். வெந்தயத்தை பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் மோருடன் குடித்துவர, உடல் சூடுகுறையும். இல்லை இரவு படுக்குமுன்பு ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை, வெந்நீருடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் சூடு குறைந்து முடி நன்கு வளரும்.

மிளகு, வெந்தயம், நெல்லி முள்ளி இவை மூன்றையும் அரைத்து தலையில் தேய்த்து கொண்டால் முடி வளர நல்லது. எலுமிச்சை விதை மிளகு இரண்டையும் விழுதாக அரைத்து தடவலாம்.

பித்தம் தணியும்

உடலில் பித்தம் அதிகமானலே நரை ஏற்படும். எனவே பித்தத்தை தணிக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் கூறப்பட்டுள்ளன. 2 டீஸ்பூன் ஹென்னா பவுடர் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் வெந்தய பவுடர், 2 டீஸ்பூன் புதினா சாறு, 2 டீஸ்பூன் துளசி சாறு கலந்து பேஸ்ட் போல செய்து தலைக்கு அப்ளை செய்யவும். 2 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கவும். சாதாரண ஷாம்பு போட்டு தலையை அலசலாம்.

தலைக்கு குளித்து வந்தவுடன் மரிக்கொழுந்தை வைத்து அல்லது திருநீற்றுபச்சிலையை தேய்த்துவிட்டு, கொண்டை போட்டுக் கொண்டால் சூடு குறைந்து முடி வளரும். கொத்தமல்லி விதையுடன் தனியா இஞ்சியை துருவி சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணை சேர்த்துக் குளித்தால் பித்தம் போகும். முடி உதிர்தல் நிற்கும்.

செம்பருத்திப்பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும் முடி உதிர்தல் குறையும். செம்பருத்தி இலை, பூ இவற்றை சீயக்காய் தூளுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வருதல் மிகவும் நல்லது. கெமிகல்கள் கலந்த ஷாம்புவை உபயோகித்தபின், செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஷாம்புவினால் ஏற்படும் எந்த வித ரசாயன தீங்கும் ஏற்படாது. பச்சை கறிவேப்பிலையை பால் விட்டு அரைத்து, தலையில் தடவி, 1 மணிநேரம் கழித்து குளித்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.

வழுக்கையை தடுக்க

கூந்தல் வளர்ச்சிக்காக பாரம்பரியமாகவே ஆயுர்வேத தைலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீலிபிருங்காதி தைலம், பிருங்காமலாதி தைலம், பிருங்கராஜ் தைலம், தூர்வாதி தைலம், கருசிலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. அதிமதுரத்தை இடித்து பொடி செய்து, எருமைப்பால் சேர்த்து நன்றாக அரைத்து, எருமைப்பாலிலேயே குழைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், வழுக்கை விழுந்த இடங்களில் முடிவளரும். தினமும் 1 டீஸ்பூன் திரிபால சூரணம், படுக்குமுன், தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கவும். முடி வளர்ச்சிக்கு உதவும்.

புகை போடுங்க

தலைக்கு குளித்தபின், கூந்தலுக்கு புகைபோட, வெந்தயம், துளசி, வேப்ப இலைகள், இவைகளை பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி பெருகும் என்றும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. உடலின் தற்காப்பு சக்தியை மேம்படுத்த பயன்படும் நரசிம்மரசாயனம், குமாரயஸ்வசவம், பிருங்கராஜஸவம் போன்ற உள்ளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் முடி வளர்ச்சி பெருகும்.
Like · · Share

Bisrul Haffi Bisrul Haffi, Mubi Jannath and 9 others like this.
5 shares
Mubi Jannath very useful information
3 hours ago · Like
Mohamed Farook ithellam kulikiravangalukku than ithu useful (athunale enakku romba usefula irukku)
3 hours ago · Like

செவ்வாய், மே 22, 2012

நவீன ஜாஹிலிய்யத்தில் சிக்கித் தவிக்கும் முஸ்லீம் பெண்கள்.

உலகிலே பெண்களுக்கான சுதந்திரம் கண்ணியம் கொளரவம், பாதுகாப்பு போன்ற உன்னத உரிமைகைளை உலகமே வழங்காத போது, ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன், இஸ்லாம் பெண்களுக்கென வழங்கி, பெண்களும் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் என்பதை பறைசாற்றியது.

”ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)

அதில் ஒரு அமசம்தான் ஹிஜாப் அணிவது. இது இஸ்லாம் பெண்களுக்கென வழங்கிய ஓர் சுதந்திரமான சட்டமாகும். அறைகுறை துணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொறுகிக் கொண்டு, இதுதான் சதந்திரம் என்று நடமாடும் மானம் கெட்ட அநாகரீக கூப்பாடிகளுக்கு மத்தியில், வலைத் தளங்களிடையே ஹிஜாப் ஓர் விமர்சன அம்சமாக நோக்கப் படுவதை பார்க்கிறோம்.

மேற்கத்தேய நாடுகிளில் ஹிஜாபுக்கெதிரான சதித் திட்டங்கள் தீட்டப் படுவதும், பின் அதர்க்கான வாக்கெடுப்புகள் நடந்தேறுவதும், பல எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் அவைகள் இரத்துச் செய்யப் படுவதுமாய், சமீபத்திய நடப்புக்கள் நமக்குச் சொல்லி நிற்கிறது. இத்தனைக்கும் மத்தியில் நம் முஸ்லீம் பெண்களில் அசமந்தப் போக்குள்ள சிலர், இதனை ஆதரிப்பது போல், ஹிஜாபுகளினால் தன்னை அப்பட்ட விபச்சாரி என்று, சொல்லாமல் சொல்வதை, அவர்களின் ஆடையணிவதின் இலட்சணத்தை வைத்து, யாரும் அறிந்து கொள்லளாம்.

தன் கணவனிடம் காட்ட வேண்டிய அழகுகளை தெருவில் செல்லும் தெரு நாய்களிடம் காட்டி தன் அழகு மெச்சப் படுவதை அவள் விரும்புவதையும், அதர்க்கு கொஞ்சம் கூட எதிர்ப்ர்பு தெரிவிக்காமல் சூடு சுரணையற்று இருக்கும் கணவன்மார்களையும் பார்க்கும் போது நபியவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிஜமாவதை காணமுடிகிறது.
”உலக அழிவு நாளின் நெருக்கத்தில் பெண்களின் மூலமாக இந்த சமுதாயத்தில் நிகழும் "சமூக ஒழுக்க சீர்கேடுகளை" குறித்து எச்சரிக்கை செய்தார்கள். அதில் ஒன்றுதான் ஆடை குறைப்பு, அன்று அவர்கள் சொன்னது இன்று பெண்களால் கச்சிதமாக அரங்கேற்றப்படுவதை காணும்பொழுது நம்மை நெருங்கிவிட்ட மருமையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது.. ஆயினும் நம்மில் பலர் இது குறித்து கவலை கொள்ளாதது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

அறியாமைகால "யூத கிறித்துவ " அநாகரீகங்களை நாகரீகம் என்று செய்து வரும் பெண்களில், நமது பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர், என்று என்னும் பொழுது வெட்க்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. .
நபியவர்கள் கூறினார்கள், ‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)

குறைந்துவிட்ட ஆடை:

இன்று ஆடைகளை மேலே குறைத்துக்கொள்வதும், கீழே குறைத்துக்கொள்வதும், நாகரீகம் ஆகிவிட்டது. இது போதாது என்று இறுக்கியும் கொள்கின்றனர். அது உண்டாக்கும் விளைவுகளை குறித்து யாரும் கவலை கொள்வது கிடையாது. அரசும் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிப்பதும் கிடையாது. மாறாக, இதனால் பாலுணர்வு தூண்டப்பட்டு, லேசாக தடுமாறும் ஆண்களைத்தான் "ஈவ்டீசிங்" என்ற பெயரில் கொண்டுபோய் குமுறு, குமுறு என்று குமுறுகின்றனர். அதற்க்கு காரணமானவர்களை விட்டுவிடுகின்றனர். காமத்தை கலையாகவும், ஆபாசத்தை ஆன்மிகமாகவும்,கொண்ட நாடும் அதைச்சார்ந்த அரசும் வேண்டுமானால் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆபாசத்தை ஆபாசமாகவே பார்க்கவேண்டும் என்று கருதக்கூடிய, அதை கண்டிக்கக்கூடிய இஸ்லாத்தை, கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம் நாடுகளிலேயே இந்தகூத்துக்கள் அரங்கேருவதுதான் வேதனையிலும் வேதனை.

பாலுனர்வைதூண்டுதல்:

ஆடைகளை இறுக்கியும், குறைத்தும் அணிவதால் மறையவேண்டிய பகுதிகள் மறையாமலும், இறுக்கத்தினால் உடலுறுப்புக்கள் நெறிக்கப்பட்டு, பெண்ணிடம் பாலுணர்வை தூண்டக்கூடிய கனபரிமாணங்கள் மெருகூட்டப்பட்டு, கவர்ச்சியின் விளிம்பிற்கே சென்று, ஆண்களின் கண்களையும், சிந்தனையையும் தன்பக்கம் ஈர்த்துவிடுகிறது. சில ஆண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் வரம்பு மீறும் சூழ்நிலை ஏற்படுகிறது. .இதனால் பாதிப்பு என்னவோ இரு தரப்பினருக்கும் தான். இருந்தாலும் அனேக ஆண்கள் கூச்ச உணர்வின் காரணத்தால் தலைகுனிந்து விடுவதையும் காணமுடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் இந்த வெட்க்க உணர்வும் பெண்களிடத்தில் இல்லாமல் போனது ஏனோ?

திரைஅரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும், இணையதலங்களிலுமே ஆபாசத்தை கண்டு பிஞ்சிலேயே பழுத்துவிட்ட சிறுவர்கள், திரைகளே இல்லாமல் live ல் காணும் பொழுது, மென்மேலும் கெட்டு நாசம் அடைகின்றனர். காதல் கத்திரிக்காய் என்று சிறுவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கிறது. இளைய சமுதாயமே சீரழிந்து வருகிறது

ஆடை எந்த நோக்கத்திற்காக அணியப்படுகிறதோ,அந்த நோக்கம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு,குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டத்தையும் காணமுடிகிறது. மறையவேண்டிய மர்ம உறுப்புக்கள்,மறையாததாலும், பாலுணர்வை தூண்டுவதாலும் ,இப்படிப்பட்ட ஆடைகள் ஆடைகளே அல்ல,மாறாக இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும் பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருபப்வர்களைப் போன்றவர்கள் என்பதுதான் உண்மை.

குறைத்து அணிந்தாலே போதும் என்ற நிலையில் இருக்கும் ஆண்களே கூடுதலாக உடையணிந்து கண்ணியமாக இருக்கும்போது கூடுதல் ஆடையனியவேண்டிய பெண்கள் குறைத்து அணிவது எந்தவகையில் ஏற்புடையதாகும்.இப்படிப்பட்ட கழிசெடைகளைப்பற்றிதான் நபி ஸல் அவர்கள்,உலக அழிவு நாளின் அடையாளமாக பின்வருமாறு கூறுகிறார்கள்.

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம்]

அன்று நபி ஸல் அவர்கள் சொன்ன இந்த நிகழ்வு , இன்று நாம் காணும் பொழுது நம்மை நெருங்கிவிட்ட மறுமையின் நெருக்கம் உறுதியாகிறது.

இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு:

ஒழுக்கத்திலும்,பண்பாட்டிலும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்,முதுகெலும்பாகவும் இருக்கவேண்டிய நமது பெண்கள் ஆபாச யூத,கிருத்துவ கலாச்சாரத்தில் மூழ்கி,அவர்களையே மிஞ்சிவிடும் அளவுக்கு சென்றுக்கொண்டிருக்கின்றனர்.குறிப்பாக செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த அவல நிலையைக் காணலாம். நமது அரபு பெண்களின் அட்டுழியங்களும்,மார்க்கமுரனான காரியங்களையும் சொல்லிமாளாது. இறுக்கமான பேன்ட்டும்,இறுக்கமான பனியன்களும்,அணிந்துக்கொண்டு மார்புகள்மீது துணியே(கூடுதல்) இல்லாமல் இரு விரல்களுக்கு இடையில் சிகரெட் வைத்துக்கொண்டு கூத்தடிப்பதும்,கும்மாளம் அடிப்பதும் காணும் பொழுது நபி ஸல் அவர்கள் உருவாக்கிய அந்த அரபு சமூதாயம் எங்கே?என்று என்ன தோன்றுகிறது.

இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்பைத்தேடி செல்லும் நமது பெண்மணிகளும் இவர்களுடைய இந்த நாகரீகத்தில்[?] தடம்புரண்டு தாவிவிடுகின்றனர்.இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று அலசுவோமேயானால் இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு அறவே எடுபட்டுபோனதுதான்.

நமது தந்தை ஆதம் நபி (அலை)அவர்களிடமும்,தாய் ஹவ்வா (அலை) அவர்களிடமும் இருந்த வெட்கம் குறித்து இறைவன் கூறும்பொழுது....

இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.[7:22]

நபி ஆதம்(அலை)அவர்களும்,அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால்,ஏக இறைவனால் தடை செய்யப்பட்ட குறப்பிட்ட மரத்தின் கனியை சுவைத்ததால் தங்களுக்கு வெட்கத்தலங்கள் ஏற்பட்டதை உணர்ந்தனர்.உடனே வெட்க்க உணர்வின் காரணத்தால் அங்குள்ள மரத்தின் இலைகளால் மர்ம உறுப்புக்களை மறைத்துக்கொள்ள முற்ப்பட்டனர் என்று இறைவன் கூறுகிறான்.

ஆபாசம் தொடர்பான சட்ட திட்டங்களை இறைவன் கூறுவதற்கு முன்பே அது தொடர்பான உணர்வு அவர்களிடத்தில் இருந்திருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியமுடிகிறது. ஆனால் இன்றுள்ள நமது பெண்கள், இறைவன் கூறிய ஆபாசம் குறித்த சட்ட திட்டங்களை தெளிவாக அறிந்தபிறகும் அதில் மேம்ப்போக்கான நிலையில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

நபி ஸல் அவர்களும் வெட்க்க உணர்வின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் இறையச்சத்தோடு தொடர்புபடுத்தி பின்வருமாறு கூறுகிறார்கள்:

'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' நூல்; புஹாரி,எண் 9 .

'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வெட்கத்தை இறை நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி கூறியுள்ளதால் வெட்கத்தில் குறை வைப்போமேயானால் அது இறை நம்பிக்கையில் குறையை ஏற்ப்படுத்தும்.எனவே இறை நம்பிக்கை முழுமையடையாமல் போய்விடும்.ஆகவே வெட்க்கவிஷயத்தில் பெண்கள் கவனமாகவும் பேணுதலாக இருக்கவேண்டும்.

வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த ஆயுதம் என்றும் சொல்லலாம்.இந்த ஆயுதத்தை பெண்கள் பேணுதலாக பயன்படுத்தினாலே அவர்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களை குறைத்துவிடலாம். எஞ்சியவைகளை வேறு வழிகளில் ஒழித்து விடலாம்.

அன்றைய பெண்களும் இறையச்சத்துடன் கூடிய வெட்க உணர்வும்:

ஜாஹிலிய்யத்திலும் இது போன்ற அறை குறை ஆடை அரங்கேரி இருந்த போது, அல்லாஹ்வின் வேத வசனங்கள் அப்பெண்களின் செவிகளில் விழுந்த பொழுது, தங்களின் திறந்த வெளி பெண் உடல்கள் பாதுகாப்பு வலயங்கள் போன்று ஆடையணிய ஆரம்பித்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லி நிற்கிறது.

அன்றைய பெண்களிடம் இருந்த வெட்க்க உணர்வையும்,இறையச்சத்தையும்,அறிந்து கொள்வதற்கு முன் அது தொடர்பான சில உண்மைகளை அறிந்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நபி ஸல் அவர்களின் மனைவிமார்கள் ,(ஏனைய சஹாபி பெண்களும்) தனது சுய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொழுது சாதாரண உடையிலேயே செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.அந்நிய ஆண்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஆடைகள் போதாது என்ற காரணத்தினால்,கூடுதல் ஆடை அணிவதை வலியுறித்தி,உமர் (ரலி) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். நபி ஸல் இதை கண்டுக்கொள்ளவில்லை.ஒரு தடவை நபி ஸல் அவர்களின் மனைவிகளில் ஒருவரான சவ்தா (ரலி) ஓர் இரவு நேரத்தில் கழிப்பிடம் நாடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இவர்களின் உயரத்தை வைத்து, இறைதூதரின் மனைவிதான்(இறைதூதர் மனைவியரிலேய அவர்தான் உயரமானவர்கள்) என்பதை அறிந்துக்கொண்ட உமர் அவர்கள், சவ்தா அவர்களே! நீங்கள் யாரென கண்டுகொண்டோம் என்று உரத்த குரலில் அழைத்துள்ளார். அப்பொழுதாவது கூடுதல் உடை அணிவது தொடர்பான சட்டம் அருளப்படாதா என்ற ஆசையில் !அப்பொழுதான் பின்வரும் இறைவசனம் இறங்கியது.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.[24:31 ]

ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி புஹாரியில் (பாகம் 1, அத்தியாயம் 4, எண் 146 ) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். (4:13)

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (4:14)

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (4:124)

இறைவனுக்கும்,அவனது தூதருக்கும்,எவர் மாறு செய்கிறார்களோ!அவர்களின் நிலை குறித்தும்,எவர் கட்டுப்படுகிறார்களோ அவர்களின் நிலை குறித்தும் மேற்கூறிய வசனத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான்.எனவே ஆடை குறித்த சட்டத்தை பின்பற்றி, அவனுக்கு(இறைவனுக்கு)கட்டுப்பட்டும்,நபிஸல் அவர்கள் வலியுறுத்திய இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வை பின்பற்றி, நபிஸல் அவர்களுக்கு கட்டுப்பட்டும் வாழ்வதன் மூலம் நம் சமூதாய பெண்கள் மறுமை வெற்றிக்கு வழி செய்து கொள்ள வேண்டும்.

இறையச்சமுள்ளவர்களுக்கு இதுவே போதுமானதாகும்.

நன்றி
அன்ஸார்
நன்றி சகோ. முபாரக்

திங்கள், மே 21, 2012

தவறாக பயன்படுத்தப்படும் முஸ்லிம் பெண்களின் பர்தா!...


பரங்கிப்பேட்டை,பிப் 18:கடலூர் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் சீத்தாராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சித்ராவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார். இந்நிலையில் காதலர் தினமான நேற்று முன்தினம் தனது காதலியை சந்தித்து பேசுவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த சீத்தாராமன் பிறிதொரு நாளில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி [16.02.2012 ]அன்று காதலியை அழைத்து கொண்டு பரங்கிப்பேட்டைக்கு பைக்கில் வந்த போது பரங்கிப்பேட்டையில் சீத்தாராமன் – சித்ரா இருவரும் பிடிபட்டனர். முன்னதாக தனது காதலனுடன் மோட்டார் பைக்கில் செல்வதில் இருக்கும் சிரமத்தை கருதி, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா-வை அணிந்துக்கொண்டு சித்ரா, பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிக்கு செல்லும் நோக்கில் சீத்தராமனுடன் புறப்பட்டு வந்தார். பரங்கிப்பேட்டை நகரில் அவர்கள் இருவரும் பைக்கில் செல்வதை கண்ட சில இளைஞர்கள் (TNTJ சகோதரர்கள்) சந்தேகமடைந்து பைக்-கை பின் தொடர்ந்து வந்து வழிமறித்து விசாரிக்கவே முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, இருவரின் கல்லூரி அடையாள அட்டையை பெற்று விசாரித்ததில் இக்குட்டு அம்பலமாகியது. இதனை தொடர்ந்து பர்தா-வை கழற்றி விட்டு செல்லும்படி அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டார்கள். இருவரும் சிதம்பரம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தினை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. சமீப காலமாகவே விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பர்தா அணிந்து நீதிமன்றத்திற்கு வருகை தருவது கொந்தளிப்பினை ஏற்படுத்தி சில இஸ்லாமிய இயக்கங்கள் அதற்காக போராட்டமெல்லாம் நடத்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அவரவர்களின் வீட்டிற்கு தெரியாத தங்களின் காதல் உள்ளிட்டவற்றிற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா-வை பிற மதத்தினர்கள் அணிந்து கொண்டு வலம் வருவது கண்டிக்கதக்கது என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறினார்கள். நன்றி: PNO.NEWS... அன்மைகாலங்களில் இதுபோன்று முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் பர்தாவை சிலர் இதுபோன்ற (கள்ள) காதலுக்கு பயன்படுத்துவது தொடர்கதையாகிவிட்டது. மேலும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் இதுபோன்ற நடப்பது வழமையாகிவிட்டது. இதனால் தான் பெண்களை இஸ்லாம் தமது முகத்தையும் முன் கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று சொல்கின்றது. இதைப்பற்றி பர்போம்: தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர்,தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி யடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31) 'தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர' என்ற சொற்றொடர் இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளது. 'வெளியே தெரிபவை தவிர' என்ற சொற்றொடர் முகம், முன் கைகள் ஆகிய இரண்டையும் தான் குறிக்கிறது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் இவ்வாறு விளக்கமளித்திருப்பதை இதற்குச் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர். முகம், முன் கைகளை பெண்கள் வெளிப்படுத்தலாம் என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வாதத்திற்கு மேற்கண்ட வசனத்தை ஆதாரமாகக் கொள்வதை நாம் நிராகரிக்கிறோம். பெண்களின் உடலில் எந்தப் பகுதிகளை வெளிப்படுத்தலாம்? எந்தப் பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதற்கும் மேற்கண்ட வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வசனத்தில், 'தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்' என்ற வாக்கியமும், '......ஆகியோர் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்' என்ற வாக்கியமும் உள்ளன. அலங்காரம் என்று நாம் மொழி பெயர்த்த இடங்களில் ஸீனத் என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு அழகு என்று பலர் விளக்கம் கூறினாலும் இச்சொல்லுக்கு அலங்காரம் என்பதே சரியான பொருளாகும். அழகு என்பது ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள கவர்ச்சியைக் குறிக்கும். அதாவது ஒருவரது நிறம், முக அமைப்பு, கட்டான உடல், உயரம், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைந்த பற்கள், கண்கள் போன்றவற்றை அழகு என்ற சொல் குறிக்கும். உடலின் ஒரு பகுதியாக இல்லாத ஆபரணங்கள், ஆடைகள், மேக்கப் செய்தல், லிப்ஸ்டிக் போன்றவற்றை அலங்காரம் என்ற சொல் குறிக்கும். அழகை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்கும். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்காது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆனில் ஸீனத் என்ற சொல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களைக் கவனமாக ஆராய்ந்தால் ஸீனத் என்பது அலங்காரத்தைத் தான் குறிக்கும் என்பதைச் சந்தேகமற அறியலாம். வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம். திருக்குர்ஆன் 15:16 முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். திருக்குர்ஆன் 37:6 இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத் தவனின் ஏற்பாடாகும். திருக்குர்ஆன் 41:12 அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை. திருக்குர்ஆன் 50:6 முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத் தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம். திருக்குர்ஆன் 67:5 மேற்கண்ட வசனங்களில் நட்சத்திரங்கள் வானத்துக்கு அலங்காரமாக அமைந்துள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான். நட்சத்திரங்கள் வானத்தின் ஓர் அங்கம் அல்ல. வானத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் வானத்துக்குக் கவர்ச்சியை நட்சத்திரங்கள் அளிக்கின்றன. இதைக் குறிப்பிட இறைவன் ஸீனத் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம். திருக்குர்ஆன் 18:7 பூமியின் மேலுள்ள புற்பூண்டுகளை பூமிக்கு ஸீனத் (அலங்காரம்) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 7:31 தொழுமிடத்தில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் என்பது உடல் அழகைக் குறிக்காது. அவ்வாறு குறித்தால் உடல் அழகு இல்லாதவர்கள் பள்ளிக்கு வருவது குற்றமாகி விடும். அணிகின்ற ஆடை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது. 24:31 வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸீனத் என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே மேற்கண்ட வசனங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம். அலங்காரம் என்பதில் உடல் உறுப்புக்கள் அடங்காது என்றால் முகம், கைகள் தவிர' என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது. பெண்கள் ஆபரணங்கள் அணிந்த நிலையில், லிப்ஸ்டிக் போட்டுக் கொண்ட நிலையில், மேக்கப் செய்து கொண்ட நிலையில் அன்னிய ஆண்களுக்கு முன்னால் காட்சி தரலாகாது. மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்கள் முன்னிலையில் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் அலங்காரம் செய்யாமல் இயற்கையான தோற்றத்தில் தான் இருக்க வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தாகும். இவ்வசனத்தில் முகம், கைகளை மறைக்க வேண்டும் என்றும் கூறப்படவில்லை. மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படவில்லை. உடல் அங்கங்கள் பற்றி இவ்வசனம் பேசவில்லை. அலங்காரத்தில் வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்பதில் வெளியே தெரிபவை என்பது எதைக் குறிக்கின்றது? நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி அலங்காரம் என்பது நகைகள், முகப் பவுடர், லிப்ஸ்டிக் ஆகியவற்றுடன் ஆடையையும் குறிக்கும். உடலை மறைப்பதற்காக அணியும் ஆடைகள் கூட ஒருவருக்கு அலங்காரம் தான். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று பொதுப்படையாகக் கூறினால் ஆடை அணியாமல் இருக்க வேண்டும் என்ற கருத்து வந்து விடும். மற்ற அலங்காரத்தை மறைக்கலாம், அல்லது தவிர்க்கலாம். ஆனால் ஆடை எனும் அலங்காரத்தை மறைக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. மறைப்பதற்காக ஆடையின் மேல் மற்றோர் ஆடையைப் போர்த்தினால் போர்த்தப்பட்ட ஆடையும் அலங்காரத்தில் அடங்கி விடும். என்ன செய்தாலும் வெளியே தெரிந்தே தீர வேண்டியதாக ஆடை எனும் அலங்காரம் அமைந்துள்ளது. எனவே வெளியே தெரிந்தே தீர வேண்டிய ஆடை என்ற அலங்காரம் தவிர மற்ற எந்த அலங்காரத்தையும் அன்னியர் முன் காட்ட வேண்டாம் என்று தெளிவுபடுத்தவே, 'வெளியே தெரிபவை தவிர' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை நபித்தோழர்களில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர். மற்றவர்கள் ஸீனத் என்பதற்கு அலங்காரம் என்ற பொருளை ஏற்றுக் கொண்டாலும் சுற்றி வளைத்து வியாக்கியானம் கொடுத்து முகம், கைகளை மறைக்கத் தேவையில்லை என்ற கருத்தை இவ்வசனம் கூறுவதாகக் குறிப்பிடுகின்றனர். ஸீனத் என்ற சொல்லின் நேரடி அர்த்தத்தின் படியும், திருக்குர்ஆனில் பிற இடங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள படியும் நாம் கூறிய விளக்கம் தான் சரியானதாகும். பெண்கள் முகத்தையும், முன் கைகளையும் மறைப்பது அவசியமா? இல்லையா? என்றால் அதற்கு வேறு ஆதாரங்களைத் தான் எடுத்துக் காட்ட வேண்டும். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டக் கூடாது. பெண்கள் தமது முகத்தையும், முன் கைகளையும் அன்னிய ஆண்கள் முன் மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் நபிகள் நாயகத்தின் பின்னால் ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அமர்ந்திருந்தார். அப்போது ஹஸ்அம் என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். ஃபழ்ல் அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார். அப்பெண்ணும் அவரைப் பார்க்கலானாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபழ்ல் அவர்களது முகத்தை வேறு பக்கம் திருப்பினார்கள்.அப்போது அந்தப் பெண், 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். அவரால் வாகனத்தில் அமர முடியாது. இந்த நிலையில் அல்லாஹ் அடியார்கள் மீது விதியாக்கிய ஹஜ் அவர் மீது கடமையாகி விட்டது. எனவே அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நடந்ததாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1513, 1855 இதே நிகழ்ச்சி புகாரியில் 6228வது ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில், حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ وَكَانَ الْفَضْلُ رَجُلًا وَضِيئًا فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنَّاسِ يُفْتِيهِمْ وَأَقْبَلَتْ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَفِقَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَأَعْجَبَهُ حُسْنُهَا فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الْفَضْلِ فَعَدَلَ وَجْهَهُ عَنْ النَّظَرِ إِلَيْهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ نَعَمْ 'அப்பெண் அழகு நிறைந்தவராக இருந்தார்' என்றும், 'அவரது அழகு ஃபழ்ல் அவர்களைக் கவர்ந்தது'என்றும் கூறப்பட்டுள்ளது. திர்மிதீ 811வது ஹதீஸில் حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ عَنْ زَيْدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَقَالَ هَذِهِ عَرَفَةُ وَهَذَا هُوَ الْمَوْقِفُ وَعَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ ثُمَّ أَفَاضَ حِينَ غَرَبَتْ الشَّمْسُ وَأَرْدَفَ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَجَعَلَ يُشِيرُ بِيَدِهِ عَلَى هِينَتِهِ وَالنَّاسُ يَضْرِبُونَ يَمِينًا وَشِمَالًا يَلْتَفِتُ إِلَيْهِمْ وَيَقُولُ يَا أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ السَّكِينَةَ ثُمَّ أَتَى جَمْعًا فَصَلَّى بِهِمْ الصَّلَاتَيْنِ جَمِيعًا فَلَمَّا أَصْبَحَ أَتَى قُزَحَ فَوَقَفَ عَلَيْهِ وَقَالَ هَذَا قُزَحُ وَهُوَ الْمَوْقِفُ وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ ثُمَّ أَفَاضَ حَتَّى انْتَهَى إِلَى وَادِي مُحَسِّرٍ فَقَرَعَ نَاقَتَهُ فَخَبَّتْ حَتَّى جَاوَزَ الْوَادِيَ فَوَقَفَ وَأَرْدَفَ الْفَضْلَ ثُمَّ أَتَى الْجَمْرَةَ فَرَمَاهَا ثُمَّ أَتَى الْمَنْحَرَ فَقَالَ هَذَا الْمَنْحَرُ وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ وَاسْتَفْتَتْهُ جَارِيَةٌ شَابَّةٌ مِنْ خَثْعَمٍ فَقَالَتْ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ قَدْ أَدْرَكَتْهُ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ أَفَيُجْزِئُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ حُجِّي عَنْ أَبِيكِ قَالَ وَلَوَى عُنُقَ الْفَضْلِ فَقَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ لِمَ لَوَيْتَ عُنُقَ ابْنِ عَمِّكَ قَالَ رَأَيْتُ شَابًّا وَشَابَّةً فَلَمْ آمَنْ الشَّيْطَانَ عَلَيْهِمَا ثُمَّ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَفَضْتُ قَبْلَ أَنْ أَحْلِقَ قَالَ احْلِقْ أَوْ قَصِّرْ وَلَا حَرَجَ قَالَ وَجَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا حَرَجَ قَالَ ثُمَّ أَتَى الْبَيْتَ فَطَافَ بِهِ ثُمَّ أَتَى زَمْزَمَ فَقَالَ يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ لَوْلَا أَنْ يَغْلِبَكُمْ النَّاسُ عَنْهُ لَنَزَعْتُ قَالَ وَفِي الْبَاب عَنْ جَابِرٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَلِيٍّ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشٍ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ الثَّوْرِيِّ مِثْلَ هَذَا وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ رَأَوْا أَنْ يُجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِعَرَفَةَ فِي وَقْتِ الظُّهْرِ و قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا صَلَّى الرَّجُلُ فِي رَحْلِهِ وَلَمْ يَشْهَدْ الصَّلَاةَ مَعَ الْإِمَامِ إِنْ شَاءَ جَمَعَ هُوَ بَيْنَ الصَّلَاتَيْنِ مِثْلَ مَا صَنَعَ الْإِمَامُ قَالَ وَزَيْدُ بْنُ عَلِيٍّ هُوَ ابْنُ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلَام 'அப்பெண் இளம் பருவத்துப் பெண்ணாக இருந்தார்' என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை குறித்து நாம் சான்றுகளை எடுத்துக் காட்டும் போது, ஹிஜாப் குறித்த சட்டங்கள் அருளப்படுவதற்கு முன் இது நடந்திருக்கலாம்' என்று எதிர்க் கருத்துடையவர்கள் கூறுவது வழக்கம். இந்தச் சம்பவத்தில் அந்த வாதம் எடுபடாது. ஏனெனில் ஹிஜாப் பற்றிய கட்டளை நடைமுறைக்கு வந்த பின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசிக் காலத்தில் இது நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், 'அழகிய தோற்றம் உடைய இளம் பெண் நபிகள் நாயகத்தின் முன்னே வந்தார்'என்று கூறப்பட்டுள்ளது. ஒருவரைப் பற்றி அழகிய பெண் என்றும், இளம் பெண் என்றும் கூறுவதாக இருந்தால் முகம் தெரிந்தால் தான் கூற முடியும். மேலும் 'ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்த்தார். அப்பெண்ணின் அழகில் அவர் ஈர்க்கப்பட்டார்' என்றும் கூறப்பட்டுள்ளது. முகத்தை அப்பெண் மறைத்திருந்தால் ஃபழ்ல் திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். அப்பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது என்றும் கூற முடியாது. மேலும் அப்பெண் முஸ்லிம் பெண் என்பதும் இதில் தெரிகின்றது. பெண்கள் தமது முகத்தை மறைப்பது அவசியம் என்றால் இப்பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருப்பார்கள். 'நீ எப்படி முகத்தைக் காட்டலாம்?' என்று கேட்டிருப்பார்கள். மேற்கண்ட ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் எவரும், பெண்கள் தமது முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வரும் படி தெளிவாக அமைந்துள்ளன. புகாரி 6228 ஹதீஸின் விரிவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், 'பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு இது ஆதாரமாகும்' எனக் கூறுகின்றார்கள். இதை வலுவூட்டுவதற்காக, 'தொழுகையின் போதே முகத்தை மறைப்பது அவசியம் இல்லை எனும் போது மற்ற நேரங்களில் மறைக்கத் தேவையில்லை' என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள். و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلَالٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை அனுமதித்தார்களோ அதைத் தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். பாங்கும், இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகையைத் துவக்கினார்கள். பின்னர் பிலாலின் மேல் சாய்ந்து கொண்டு இறையச்சம் பற்றிக் கட்டளையிட்டார்கள். இறை வனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று ஆர்வமூட்டினார்கள். மக்களுக்குத் தேவையான அறிவுரை கூறினார்கள். பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கும் அறிவுரை கூறினார்கள். 'தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பீர்கள்' என்று குறிப்பிட்டார்கள். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து, இரண்டு கன்னமும் கறுப்பாக இருந்த ஒரு பெண் எழுந்து, 'ஏன்?' என்று கேள்வி கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீங்கள் அதிகமாகக் குறை சொல்கிறீர்கள்; கணவனுக்கு நன்றி மறக்கிறீர்கள்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1467 நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் எழுந்து கேள்வி கேட்டார் என்பதுடன் அப்பெண்ணின் இரு கன்னங்களும் கறுப்பாக இருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது. ஜாபிர் என்ற ஆண் நபித்தோழர் அப்பெண்ணின் கன்னம் கறுப்பாக இருந்தது என்று கூறுவதிலிருந்து அப்பெண் முகத்தை மறைக்காமல் இருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம், பிலால், ஜாபிர் பின் அப்துல்லாஹ் ஆகிய ஆண்கள் முன்னிலையில் அப்பெண் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளார் என்பதை இச்சம்பவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன. — with Nasreen Begum, பூந்தை ஹாஜா, Matcity Muslims and 48 others.

'''''''''''''''''''''''''''கணவன் - மனைவி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


! ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். “ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார்; சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும்... ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம்...” என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார். அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போனாள். ஆனாலும், ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் “எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க! ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க... காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள்... அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு... ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான் செஞ்சிப் பாருங்களேன்...” என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட, அவளது கணவனோ, “சரி அப்படியே செய்வோம்... இன்று நீ என் அலுவலகத்துக்கு போ... நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று போட்டிக்கு தயாரானான். ///// அவன் மனைவியோ “ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களால முடியாது...” என்று சொல்லிப் பார்த்தாள். ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க, “சரி, நான் என்ன செய்ய முடியும்?” என்றவாறே வீட்டையும், பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள். அங்கே போய்ப் பார்த்தால் அலுவலகம் ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடந்தது. முதலாளியின் மனைவி என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவளே கூட்டிப் பெருக்கி அனைத்தையும் சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ... என்ற கவலை வேறு வந்து வந்து போனது. ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணிபுரிபவரின், மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள். முறுக்கு அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் என அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள். ////// வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் “பிள்ளையா பெத்து வச்சிருக்கே... அத்தனையும் குரங்குங்க... எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது... படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க... சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க... அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே...” என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாய...அவளோ “அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா...” என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே “ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே...?” என்று அவள் அலற... “அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்?” என அவளது கணவனும் அதிர்ச்சியுற அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்கிறார்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல. ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும்; பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்; ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது. அது போலவே, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது. இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் எதையும் சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான். உயர்வு-தாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!


3 shares குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள். அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. Rinash Khan வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு • இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! • ஜஸாக்கல்லாஹ் ஹைர், 20 hours ago · Like · 6 Jakabar Shathik WAA ALAIKUM SALAM WVB" YAA 7 VETHAMANANA PAVAKALEL ERUNTHU YANGALAI KAPPAYAKA ALLAH" 20 hours ago · Like · 7 Abu Fizhaan வ அலைக்கு முஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! ஜஸாக்கல்லாஹ் ஹைர், (B)பாரக்கல்லாஹ். 20 hours ago · Like · 6 Mohamed Abdul Jabbar wa alaikum salam wa rahmathullaahi wa barakaathuhu 20 hours ago · Like · 5 Abu Fizhaan ‎@ brother Jahabar sathik ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.!!! 20 hours ago · Like · 7 Obamamsd Rizandeen walikum salam 20 hours ago · Like · 4 Abdullah Azam WA Alaikum salam Warahmathullahi Wabarakathuhu ... 20 hours ago · Like · 5 Tuan Azmeer waalaikum salam warahmathullahi wabarakathu. 20 hours ago · Like · 5 Syed Ahamed Hussain Wa Alaikumussalam Wa Rahmathullahi Wa Barakathuhu 20 hours ago · Like · 7 Syed Ahamed Hussain Jazakkallahu Khair...brother 20 hours ago · Like · 5 Mohammed Iqbal Avoor ‎@Jakabar Shathik brother....!Aameen....! 20 hours ago · Like · 5 Fathima Mai Wa Alaikkum Assalaam Va Rahmatthullaahi Va Barakkaathuhu... 20 hours ago · Like · 4 Javid Naseem va alaikum salam... 20 hours ago · Like · 4 Farook Maraikayer وعليكم السلام ورحمة الله وبركاته" "வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு" - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக 20 hours ago · Like · 5 Ajmal Sheik Jazakallahu dear brothes ... 20 hours ago · Like · 2 Pullama Abu wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu..jazzakallah khaira. 20 hours ago · Like · 4 Riyasudeen Hameed வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு. 20 hours ago · Like · 4 Mn Naflan WA Alaikum salam Warahmathullahi Wabarakathuhu .... Jazakumullahu khair 19 hours ago · Like · 6 Mohmed Yassin Yasin walaikum salam 19 hours ago · Like · 3 Jakabar Shathik WAA ALAIKUM SALAM WVB" YAA ALL AH" ENGAL ANAIWARIYUM 7" VEETHAMANA PAVAKALEL ERRUNTHU KAPPAYAAKA., AMEEEEEEEEEN 19 hours ago · Like · 6 Ayesha Fariha வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு 19 hours ago · Like · 5 Mohamed Aslam M pls change the [e.g]photo it not sut for this Hadis. because see their nail and eyebrow that's again to Islam 19 hours ago · Like · 3 Abd'Allah Mohamed وعليكم السلام ورحمة الله وبركاته "வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு" - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக ...See More 19 hours ago · Like · 4 Lebbai Mohamed வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.......... இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக......... ஜசாக்கல்லாஹ் ஹைர் பிரதர்........ 19 hours ago · Like · 5 Shahip Raja வ அலைக்கு முஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! ஜஸாக்கல்லாஹ் ஹைர், (B)பாரக்கல்லாஹ்... 17 hours ago · Like · 3 Faiz Jahan Wah Alaikum Salam Wa Rahmathulahi Wa Barakathu......!! 17 hours ago · Like · 3 Akbardeen Mohamed Wa alaikkum salaam va rahamathullahi va barakathuhu 17 hours ago · Like · 3 JA Striker Wa Alaikkum Salam Warhmatulahi Wabarkatuh Jazzakallah Khairan 9 hours ago · Like · 4 உம்மு ஸமீஹா முஸ்லிமாஹ் வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் தங்களின் மீது என்றென்றும் நிலவட்டுமாக! "ஜசாக்கல்லாஹு கைரா" 9 hours ago · Like · 3 முகவை சேக் வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு 9 hours ago · Like · 3 Abdulla Yasin Wa Alaikkum Salam Warhmatulahi Wabarkatuh 9 hours ago · Like · 3 Mujeeb Ur Rahman Walaikum assalam 8 hours ago · Like · 3 Abdul Rahman wa alaikum salam wa rahmatulahitala wa barakatuhu.. 7 hours ago · Like · 2 Mohamed Jazer Walaikkum asalam(warah) 4 hours ago · Like · 2 Kiyas Deen JAZAK ALLAHU KHAIR... 3 hours ago · Like · 2 Pullama Abu wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu. about an hour ago · Like · 1 Asraf Ali Tntj வஅழைக்கும் முஸ்ஸலாம் வரஹமதுலாஹி வபரகதுஹு my dear brother Mohammed Iqbal Avoor about an hour ago · Like

ஞாயிறு, மே 20, 2012

சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு


சவூதித் தலைநகர் ரியாத்திலிருந்து 500 கல் தொலைவில் உள்ள அல்ராஸ் என்னுமிடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த அன்வர்தீன் என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதேயான அன்வர்தீன் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர். நள்ளிரவில் காருக்குப் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் செல்ல அந்த சவூதிநபர் முயன்ற போது, அதைத் தடுத்துக்கேட்ட அன்வர்தீனை அஜீஸ் என்னும் பெயருடைய அந்நபர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். சம்பவமறிந்ததும், அஜீஸ் உடைய தந்தை தன் மகன் செய்த குற்றத்தை உணர்ந்து மகனேயானாலும் காவல்துறையில் ஒப்படைத்துப் பாராட்டு பெற்றார். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி கொலைக்குக் கொலை என்கிற வகையில் தண்டனை அமையும். இந்நிலையில், கொலையாளியான அஜீஸுடைய குடும்பத்தவர், பரிதாபமாகப் பலியான அன்வர்தீன் குடும்பத்தவரை அணுகி, இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். சவூதி சட்டப்படி பாதிக்கப்பட்டோர் மன்னித்தாலே தவிர, தண்டனை உறுதி என்பதால் இவ்வாறு கொலையாளி அஜீஸின் குடும்பத்தவர் கோரிக்கை வைத்தனர். ஆனால், கொலையாளியை மன்னிக்க அன்வர்தீன் குடும்பம் மறுத்துவிட்டது. தமிழக வார இதழ் ஒன்று தெரிவித்துள்ள தகவல் படி சவூதி காவல்துறை 'கொலையாளியை மன்னிக்கிறீர்களா?" என்று கொலையான அன்வர்தீனின் குடும்பத்தவரை வினவியபோது , ""இல்லை... பணம் வேண்டாம். கொலையாளிக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்'' என்று கூறியதாகத் தெரிய வருகிறது. சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி, பாதிப்புக்குள்ளானோர் மன்னிக்காதபோது,வேறு யாரும் மன்னிக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ வழியில்லை என்பது குறிக்கத்தக்கது.

வெள்ளி, மே 18, 2012

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!


நீங்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்-குர்ஆன் 5:02) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தனது தினசரி தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தோலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். கையடக்க கமராக்கள், மொபைல் வீடியோ கமராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய கமராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதை எத்தனை பேர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி! மொபைல் கமராக்கள், கையடக்க வீடியோ கமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும்- தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம். பொது இடங்களில் கமராக்கள்: பொது இடங்களில் – குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்கட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கமராவுடன் உள்ள தொலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியாவண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் இன்றிய உலகில் நம்மத்தியில் பெரும் அளவில் பெரு கிவிட்டனர். கல்லூரி விடுதிகளில்: கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் – மற்றும் மலசல கூடங்கள், குளியலறைகளில் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் இந்தியாவில் ஒரு கல்லூரி விடுதியிலிருந்து 09 கமராக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Face Book & Photoshop: Face Book- TWITTER- ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOADசெய்து இருகிறார்கள். சில மோசடிக்காரர்கள் அதை தேடி டவுன்லோட் செய்து கொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போட்டோவோடு இணைத்து, அதை இன்டர்நெட்டில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர். மேலும் பாடசாலை மாணவிகளின் போட்டோக்களை பாடசாலைகளில் வெளிவரும் வருடாந்த இதழ், மற்றும் ஏனைய வெளியீடுகளில் தனியாகவும் குழுவாகவும் உள்ள போட்டோக்களை வெளியிடுகின்றனர். அந்தக் குழு போட்டோவில் உள்ள பெண் பிள்ளைகளின் முகங்களை வெட்டியெடுத்து வேறு ஒரு ஆடவனுடன் அல்லது நிர்வாண போட்டோவுடன் இணைத்து வலையமைப்புக்களிலும் பேஸ் புக்கிலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை பேணிப் பாதுகாப்பதில் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகின்ற அதேவேளை, அல்லாஹ்வையும் றசூலையும் ஈமான் கொண்ட எந்தவொரு பெற்றோரும் இதனை அனுசரிக்கவுமாட்டார்கள். இருந்த போதிலும் பாடசாலைகளில் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு மாணவிகளின் எதிர்காலத்திற்கு பங்கம் விளைவிக்கும் இவ்விடயத்தை தடை செய்வதில் உரியவர்கள் சிந்தித்து செயற்படுவதுடன் பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும். நம்மையறியாமலேயே நம்மை போட்டோ, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தற்போது மிக சாதாரணமாக எமது நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறி வைத்தே நடந்து வருகிறது. அப்பாவியான பல பெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள். பொது மலசல கூடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்: பொது மலசல கூடங்களுக்கு செல்வோர், பொது குளியலறைகளை பயன்படுத்துதோர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லொட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், மலசல கூடம், குளியலறைகளிலும் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா? என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கமராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம். ஆகவே கவனம் தேவை. நெடுந்தூர பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பஸ் பயணம் செய்யும் போது அந்த பஸ்கள் வெளி ஊர்களிலுள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அப்படி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் அத்தகைய உணவங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள சில மலசல கூடங்களில் வீடியோ கமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் கமராக்கள் மூலமாக அவர்களை ஆபாசமாகப் படம் பிடித்து அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர். மேலும் இவற்றை சீடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம் வரை கொண்டு சென்றும் பணம் சம்பாதிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஹோட்டலில் திருமணம் செய்து கொள்பவர்கள் அங்கே தங்கி விட்டும் வருகின்றனர். இவர்களை குறி வைத்தும் ஹோட்டல் அறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும் விடுதியா என்று முடிந்தவரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் அல்லவா?. மருத்துவமனைகளிலும் கவனம் தேவை! மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தங்களால் முடியுமான வரை பெண் வைத்தியர்களை நாடுவது சிறந்ததாகும். அல்லது தக்க துணையுடன் செல்ல வேண்டும். மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும் ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக விலக்கும் போதும் கவனமாக இருங்கள். கமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில மருத்துவர்கள் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து- வீடியோவாகவும் புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்ததாகும் . புடவைக் கடைகளில் TRAIL ROOM கேமரா! நாம் துணிக் கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கமராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா? துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கமராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை: TRAIL ROOM CAMERAல் இருந்து கொண்டு செல்போன் மூலமாக யாருகாகவாவது call செய்து பார்க்க வேண்டும். உங்கள் அழைப்பு- நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த அறையில் ரகசிய கமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் call செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கமரா இருப்பது உறுதி என்று பொறியியலாளர்கள் கூறுகிறார்கள். TRAIL ROOM; கண்ணாடி இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம். ஆகவே இவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவெளி தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்து கொள்ளலாம். ஹிஜாப் அணியும் பெண்களுக்கு பாதுகாப்பு! இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள்- இன்ஷா அல்லாஹ். இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை. ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் தூங்கும் அறை, கழிவறை போன்ற இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபட முடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது; தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும் உடமையும் மானமும் மரியாதையும் புனிதமானவை என்றார்கள். (புகாரி 67) ஆகையினால் நவீன தொழில் நுட்பத்தின் பாரதூரமான விளைவுகளில் இருந்து நம்மையும் பாதுகாத்து மற்றோரையும் பாதுகாப்பதற்கு விழிப்புடன் செயற்படுவோம். நன்றி சகோ. அஸ்மீர்

புதன், மே 16, 2012

Wi-fi போகின்றது...Li-fi வருகின்றது...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக). இன்டர்நெட் தொழிநுட்பத்தில் மறக்க முடியா பெயர் Wi-fi. வயர் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்க பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. டாக்டர்கள் முஸ்தபா அப்கனி, கார்டன் போவே மற்றும் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் ஆகியோரின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் எதிர்க்கால இன்டர்நெட் உலகை மாற்றியமைக்க போவதாக அறிவியல் உலகம் கருதுகின்றது. wifi தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ரேடியோ அலைவரிசை சிக்னல்களை உபயோகிப்பது தான். இந்த சிக்னல்கள் மற்ற அலைவரிசையுடன் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் விமானம், மருத்துவமனை போன்றவற்றில் wifi-யை தடை செய்கின்றனர். Visible light communication (VLC) என்று அழைக்கப்படும் Lifi தொழில்நுட்பத்தில், ஒளியை கொண்டு தகவல்கள் அனுப்படுவதால் மேலே கூறிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் தண்ணீருக்கு அடியிலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.
இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் wifi-யை விட ரொம்ப விலை மலிவானது. மேலும் மிக வேகமானதும் கூட. 10 Gbps வரை இதன் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 hrs ஓடக்கூடிய ஒரு High Definition வீடியோவை 30 நொடிகளில் டவுன்லோட் செய்திடலாம். இன்னும் ஐந்து வருடங்களில் இந்த தொழில்நுட்பம் நம் கணிப்பொறிகள் மற்றும் மொபைல் போன்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும் என்று சமீபத்திய EFY (Electronics for You) இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இருப்பது போல இதிலும் குறைகள் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வேகத்தில் தலைச்சிறந்து இருப்பதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியிருக்கின்றனர். நன்றி: ஆஷிக் அஹமத் அ, EFY, New Scientist

இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு


மன்னிப்பு இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் என்பவன் தவறிழைப்பவனாகவே இருக்கின்றான். சில நேரங்களில் அவன் யோசிக்காமல் அல்லது எந்த ஒரு உள்நோக்கமும் இன்றி தவறிழைக்கின்றான். ஆனால் சில நேரங்களில் நன்கு அறிந்து கொண்டே பாவங்களில் ஈடுபடுகின்றான் அல்லது பிறருக்கு தீங்கிழைக்கின்றான்.மனிதர்கள் தொடர்ந்து தவறிழைப்பதால், பின்பு அதனை எண்ணி வருந்தக் கூடியவனாக இருக்கின்றதால் மன்னிப்பு என்பது மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகி விடுகிறது. இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு எனபது இரு வகைப்படுகின்றது. 1) அல்லாஹ்வின் மன்னிப்பு 2) மனிதனின் மன்னிப்பு நாம் சில நேரங்களில் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறி விடுகின்றோம். சில நேரங்களில் மனிதர்களுக்கு தீங்கிழைக்கின்றோம்.ஆகையால் நமக்கு இவ்விரண்டு விதமான மன்னிப்பும் தேவைப்படுகின்றது. (1) அல்லாஹ்வின் மன்னிப்பு மிக்க வல்லமையுடைய நாயனாகிய அல்லாஹ் மிக மன்னிப்பவன்.அல்லாஹ்விற்கு அழகிய பல திரு நாமங்கள் இருக்கின்றன. அவை அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் பறைசாற்றுகின்றன. Rahman (அளவற்ற அருளாளன்) Rahim (நிகரற்ற அன்புடையோன்) Gafoor (மன்னிப்பவன்) Afu’w (மன்னிப்பளிப்பவன்) Tawwab (மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்) Gaffaar (மிக மன்னிப்பவன்) Majeed (பெருந்தன்மையானவன்) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116) என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடி திருந்தி வாழ முற்படவேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம் எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!(அல்குர்ஆன் 2:286) ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’ என்று சொல் என்று கூறினார்கள். பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!’ (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580) அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் வாய்மையுடன் பாவமன்னிப்புத் தேடும் மனிதனுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அவன் செய்த பாவம் எவ்வளவு பெரிதாயினும் எவ்வளவு அதிகமாயினும் சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் கருணை எல்லையில்லாதது! உலகின் எல்லாப் பொருள்களையும் வியாபித்து நிற்கக் கூடியது இதற்கு ஆதாரமாக பின்வரும் நபி மொழியை கூறலாம் நூறு கொலைகள் செய்தவன்: அபூ ஸயீதில் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினான். பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். கல்லி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டான்: நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா? அவர் சொன்னார்: ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும்! உடனே அவன் (அந்த ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதி வழி வந்திருக்கும்பொழுது மரணம் அவனைத் தழுவிக்கொண்டது! அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் கருணை மலக்குகளும் தண்டனை மலக்குகளும் தர்க்கம் செய்யலானார்கள்! கருணை மலக்குகள் சொன்னார்கள்: இவன் பாவமீட்சி தேடியவனாக – தனது இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான்,. என்று! தண்டனை மலக்குகள் சொன்னார்கள்: இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை என்று! இந்நிலையில் வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும் நடுவராக்கினார்கள், அந்த மலக்குகள். அவர் சொன்னார்: இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்த மனிதன் எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாவான்! " அவ்வாறு அளந்து பார்த்த பொழுது அவன்,எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே கருணை மலக்குகள் அவனைக் கைப்பற்றிக் கொண்டார்கள்!" (நூல்: புகாரி, முஸ்லிம்) ஸஹீஹ் (முஸ்லிமின்) ஓர் அறிவிப்பில் வந்துள்ளது: ‘அவன் நல்ல ஊரின் பக்கமே ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர்வாசிகளுடன் சேர்க்கப்பட்டான்’ ஸஹீஹ் (முஸ்லிமின்) வேறோர் அறிவிப்பில் உள்ளது: ‘இந்த ஊருக்கு நீ தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான். மேலும் கூறினான்: (இப்பொழுது) இரு ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று! அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின் பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள்!’ ஸஹீஹ் (முஸ்லிமின்) இன்னோர் அறிவிப்பில் உள்ளது: ‘அவன் தனது இதயத்தால் அந்த ஊரை நாடிப் புறப்பட்டான். (2) மனிதர்களின் மன்னிப்பு தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். மன்னித்தல் எனபது வெறும் வார்த்தைகளினால் வெளிப்படுவதில்லை மாறாக அது உள்ளத்தில் இருந்து வெளிப்படுவதாகும். நாம் ஒருவரை மனதார மன்னித்து அதனை வார்த்தைகளினால் வெளிப்படுத்தி நமது செய்கையினால் நிருபணம் செய்வதே உண்மையான மன்னிப்பாகும். அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134) எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள். எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43) நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள்அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்)அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்றகருப்பு நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி)அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால்இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து "நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவைக்கொன்றவர் நீ தானா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால்அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், "தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில்காட்டாமல் இருக்க முடியுமா?'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன்பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ நூல்: புகாரி 4072 நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை உஹதுப் போரில்கொடூரமாகக் கொன்று அவர்களுடைய ஈரலைக் கடித்துத் துப்பிய கொடூரச் செயல்செய்தவர்களைக் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். அதுவும்மக்காவை வெற்றி கொண்டு, மாபெரும் தலைவராக, அரசராக இருந்த நேரத்தில் மன்னித்தார்கள் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்: உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்¢ஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22) இந்த வசனம் இறங்கியதை கேள்விப் பட்டவுடன் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் அவர்கள் தமது வீட்டை விட்டு வெளியே வந்து " ஆம் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் மன்னிப்பை வேண்டுகின்றேன்" என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவதூறை பரப்புவதில் பங்கு வகித்த அந்த இளைஞரை மன்னித்து அவருக்கு மேலும் பல உதவிகளை செய்தார்கள். மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான். நாமும் நம்மால் இயன்றவரை மன்னிக்கும் பக்குவத்தை வளரத்துக் கொள்வோமாக!

செவ்வாய், மே 15, 2012

ஜாலியா சிரிங்க‌


1. எங்கம்மா வீடும், மாமியாரும் பக்கம் பக்கம் தான். எங்களுக்குள்ள சண்டைன்னா அவங்கவங்க அம்மா வீட்டுக்கு போயிடுவோம் ஹி ஹி ---------------------------------- 2. வீட்டோட மாப்ளையா இருக்கறதும் ,போயஸ் தோட்டத்துல வாட்ச் மேனா வேலை பார்க்கறதும் ஒண்ணுதான் ----------------------------- 3. சின்ன வயசுல வாத்தியார் திட்டறப்போ இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விடற ஆளா நீங்க? உங்க கல்யாண வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராது --------------------------- 4. . +2 பாஸ் பண்ணுனாத்தான் மேரேஜ்னு டாடி சொல்லிட்டார். . ஐ ஜாலி.. சத்தியமா நீ பாஸ் பண்ண மாட்டே, நம்ம மேரேஜும் நடக்காது ---------------------------- 5. தூக்கம் வந்ததும் உடனே தூங்கிட்டா நீ சாதா தமிழன், நெட்டை ஓப்பன் பண்ணி ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் போட்டு ஒரு ரிவர்ஸ் ஸ்மைலியும் போட்டா ஸ்பெஷல் தமிழன் ------------------------------ 6. ”நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!” என பாரதியார் பாடியது ராமராஜன், தல அஜித், இளைய தலைவலி விஜய்? --------------------- 7. ஒரே டிக்கெட்டை 2 தடவை கலர் பிரிண்ட் எடுத்து ரெண்டையும் ஒரே பாக்கெட்ல மடிச்சி வெச்சுகிறதுக்கு பேரு என்ன மேனியா? கேப்பமாரியோமேனியா --------------------------- 8. மனைவியிடம் கணவன் தன் காதல் அனுபவங்களை பெருமையாக சொல்வான், மனைவி ஏதும் சொல்லாமல் மனசுக்குள் நக்கலாக சிரித்துக்கொள்வாள் # அமுக்கி ------------------------------- 9. அத்தான், என் கண்ணுக்கு மையே போடவேணாமா? இயற்கை அழகுன்னு சொல்ல வர்றீங்களா? இல்லை ஐ டெக்ஸ் ஒரு டப்பா ரூ 20, நீ வாரம் 2 டப்பா தீர்க்கறே! ------------------ 10. டேமேஜர் சார், என் புருஷன் எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார், பர்மிஷன் வேணும். ம்க்கும் சில்மிஷத்துக்கும் பர்மிஷனா?விளங்கிடும் 11. ஈமு கோழியை வளர்ப்பதும், சின்ன வீடு வைப்பதும் ஒண்ணுதான். போண்டி ஆகிடுவீங்க அல்லது ஆண்டி ஆகிடுவீங்க # வார்னிங்க் --------------- 12. கலங்கின குட்டையில குளிக்க முடியாது; கலங்கின மனசோட இருக்கறப்ப சினிமா பார்க்க முடியாது.# எ கீ ------------------ 13.கவர்ச்சி நடிகை தலை மறைவுன்னு ஒரு நியூஸ் படிச்சேன். அப்போகூட அவங்க தலையை மட்டும் தான் மறைப்பாங்களா? ------------------------- 14. பெண்ணுக்கு 10 மாசம் மட்டுமே சுமை, ஆணுக்கு 5 வருஷம் சுகமான சுமை # எங்கே போனாலும் குழந்தையை தூக்கிட்டு வர்றது நாங்க தாங்கோவ்! --------------------------- 15. சார், உங்க படம் ரொம்ப ஸ்லோவா இருக்கே? ஹி ஹி ஸ்பீடா ஓட்டுனா சீக்கிரம் முடிஞ்சுடும், எப்படி 2 1/2 மணீ நேரம் இழுக்க? ------------------ 18. காலம் மாறும், ஆனால் என் காதல் மட்டும் மாறாது, ஆனா காதலி மட்டும் மாறிட்டே இருக்கும் - பிரபுதேவா ---------------------- 19. அத்தான், எக்சாம்க்கு போகனும்னாலே எனக்கு வயித்துல புளியை கரைச்ச மாதிரி இருக்கு.... . உன் வயிறு என்ன ரசம் கொதிக்கும் குண்டாவா? --------------------------------- 20. வலியில் அம்மா என கதறும் நாம்.,வலி தீர்ந்ததும் அப்பா என பெருமூச்சு விடுவதன் உளவியல் வலி ஏற்படுத்தும் காரணி பெண், வலி நிவாரணி ஆண்

ஞாயிறு, மே 13, 2012

"பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் !


ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர் ?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன். தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது. எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை. ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும். பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது. வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா ?’ அல்லது ‘கெட்டவரா ?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம். ( இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் ) — with Abubacker Siddiq, Parveen Rose, பேகம் பானு and 88 others. Like · · Share Abdul Rasheed Mohamed and 13 others like this. Steel Hearted JAZAKKALLAH KHAIR!!! 3 minutes ago · Like Write a comment...

சனி, மே 12, 2012

மறுமை என்பது உண்மையா?


கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும்? எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்த வர்கள் எவ்வாறு மீள முடியும்? மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையைத் தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எந்த மண்ணறையிலும் நடைபெற வில்லையே ஏன்? உங்களால் நடந்ததாக நிரூபணம் செய்ய முடியுமா? என்றும் பல கேள்விகள் கேட்டார். - ஜே. ரியாஸ் கான், கீழக்கரை. பதில்: மறுமையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில், ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதியாகும். ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன. உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது. நூறு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இவ்வுலகில் இருக்கவில்லை. வேறு எங்கேயும் இருக்கவில்லை. எந்தப் பொருளாகவும் நீங்கள் இருக்கவில்லை. ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இறைவன் படைத்திருப்பதை நம்பும் முஸ்லிம்களுக்குப் படைக்கப்பட்டவைகளை அழித்து விட்டு மீண்டும் படைப்பதை நம்புவது எளிதானதாகும். மேலும், கடவுள் இருப்பதை முஸ்லிம்கள் நம்பும் போது அவன் சர்வ சக்தியுள்ளவன் என்று நம்புகின்றனர். மனிதனைப் போல் பலவீனமானவனாக கடவுளை முஸ்லிம்கள் நம்புவதில்லை. மட்கிப் போனவைகளை உருவாக்குவது உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இயலாத ஒன்று தான். கடவுளின் நிலையும் அது தான் என்றால் அப்படி ஒரு கடவுள் தேவையே இல்லை. நமக்கெல்லாம் முடியாததை எவனால் செய்ய முடியுமோ அவன் தான் கடவுள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. எனவே, மறுமை பற்றி கேள்வி கேட்பது பொருத்தமில்லாதது. கடவுளைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வந்து விட்டால் மறுமை, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமானவை. மண்ணறையில் வேதனை என்பது ஒரு அடையாளத்திற்காகச் சொல்லப்படும் வார்த்தையாகும். மண்ணறையைத் தோண்டிப் பார்த்தால் மனிதர்கள் யாரும் வேதனை செய்யப் படுவதை பார்க்க முடியாது. இதைச் சரியான முறையில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும். நல்லவர் கெட்டவர் அனைவரும் மண்ணறை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. குறிப்பாக, கெட்டவர்கள் மண்ணறை வேதனையிருந்து தப்பவே முடியாது என்பதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன. கெட்டவர்கள் பலர் தீயிட்டு சாம்பலாக்கப்படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர்களின் சாம்பல்கள் பரப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கு மண்ணறையே இல்லை என்பதால் மண்ணறை வேதனை கிடையாது எனக் கூறினால் அனைவரும் மண்ணறை வேதனையைச் சந்திப்பார்கள் என்ற ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டு விடும். அது போல் ஒரு மனிதனைக் காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிட்டு விடுகின்றன; அல்லது கடலில் மூழ்கிச் செத்தவனை மீன்கள் உணவாக உட்கொண்டு விடுகின்றன. இவர்களுக்கெல்லாம் மண்ணறை ஏது? அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தான் - அந்த மண்ணுக்குள் தான் வேதனை நடக்கிறது என்று நாம் நம்பினால் உலகில் பெரும்பகுதியினருக்கு மண்ணறை வேதனை இல்லாமல் போய்விடும். இறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் நம்மால் காண முடியாத உலகில் வைத்து தண்டிக்கிறான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும். குறிப்பிட்ட சில மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஸ்கள் உள்ளன. அவை இறைத் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகும் என்று கருத வேண்டும். எரிக்கப்பட்டவர்களுக்கும், மிருகங்களுக்கு உணவாகிப் போனவர்களுக்கும் மண்ணறை வாழ்க்கை கிடையாது என்ற விபரீதமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க மண்ணறை வாழ்க்கை பற்றி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும். மண்ணறை வாழ்வு இது தான் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால் உங்கள் நாத்திக நண்பரின் கேள்விக்கு விடையளிக்கலாம். மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா? என்றெல்லாம் அவர் கேள்வி கேட்க முடியாது.

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?


கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய் விடுமே? விளக்கம் தரவும். -சுரேஷ், திருக்குறுங்குடி பதில் : பெண்களைப் போகப் பொருளாக்கி ஆண்கள் ரசிக்கவே நீங்கள் குறிப்பிடும் நாட்டியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியாக சினிமாவும், நீலப்படங்களும் உருவாகியுள்ளன. பெண்கள், கண்டவர்களும் ரசித்து, அனுபவிக்கும் போகப் பொருட்கள் என்பதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. அங்க அசைவுகளையும், உடல் திரட்சியையும் மற்றவர்களுக்குக் காட்டுவது கலை என்றால் அந்தக் கலையில் இஸ்லாத்திற்கு உடன்பாடு கிடையாது. வேலை வாய்ப்பு என்று வாதிடுவது என்றால் கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். இதுவும் பலருக்கு வேலை வாய்ப்பாகத் தான் உள்ளது

வியாழன், மே 10, 2012

கருவில் குழந்தை இருக்கா?


கருவில் குழந்தை இருக்கா?.. கர்ப்பிணிகளே செக் பண்ணுங்க! கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தை கருவில் தங்கியுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.கருவின் வளர்ச்சி குறித்தும் அதை பாதுகாப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன். விந்தணு உடன் இணைந்த கரு முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும். இது நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் என்பது இதுதான். உயிருக்கு ஆபத்து சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள். ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும். இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள். கருக்குழாய் வெடிக்கும் ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் முடிந்த வரை கருவை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். முத்துப்பிள்ளை கர்ப்பம் அதேபோல் கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிருக் காமல் குட்டிக் குட்டி உருண்டை களாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம். இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம். கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.

செவ்வாய், மே 08, 2012

உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி


மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும். ஆட்டின் தலை: இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும். ஆட்டின் கண்: கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும். ஆட்டின் மார்பு: கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும். ஆட்டின் இதயம்: தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும். ஆட்டின் நாக்கு: சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும். ஆட்டின் மூளை: கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும். ஆட்டின் நுரையீரல்: உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும். ஆட்டுக் கொழுப்பு: இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும். ஆட்டின் குண்டிக்காய்: இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும். ஆட்டுக்கால்கள்: எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.

திங்கள், மே 07, 2012

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!


"ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்" கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே.... இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது. ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும் ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை! நன்றி: இனியவன் By: தமிழ் தமிழானவள்

ஞாயிறு, மே 06, 2012

தொடரும் ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள்.


23: 99, 100. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26 தொடரும் ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள். ஷேக்பாபு, அல்லாபி என்ற முஸ்லீம் தம்பதிகள் நள்ளிரவு நேரங்களில் சென்று கிராமத்தின் இடுகாட்டில் மண்டை ஓடுகளை சேகரித்துக் கொண்டு வந்து பில்லி சூனியம் செய்வதை பிழைப்பாகக் கொண்டவர்கள். சம்மந்தப்பட்ட கிராமத்தில் எதிர்பாராமல் தொடர் மரணங்கள் நிகழவே இவர்கள் மண்டை ஓடுகளை சேகரித்து பில்லி,சூனியம் செய்வதால் ஏற்பட்ட விளைவு தான் தொடர் மரணம் என்று முடிவு செய்த ஊர் மக்கள் அவர்களை நையப்புடைத்து இருவரின் பற்களையும் நிற்க வைத்து கதற கதற பிடுங்கி எடுத்துள்ளனர். 42 வயதையுடை முருகன் என்ற மந்திரவாதி நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியையும், 7ம் வகுப்புப் படிக்கும் மாணவியையும் இறந்த ஆவியை விரட்டுவதற்கு தனி அறையில் பூஜை செய்ய வேண்டும் என்றுக் கூறி தாய். தந்தை அனுமதியுடன் கதவைத் தாழிட சிறிது நேரத்தில் அலறி அடித்து கதவைத் திறந்து கொண்டு இரண்டு மகள்களும் ஓடிவந்து மந்திரவாதி தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூற ஊர் மக்கள் கூடி நையப்புடைத்துள்ளனர். இது மற்றொரு சம்பவம். படிப்பினை பெற வேண்டாமா ? தொலைகாட்சிகளைத் திறந்தால், செய்தித் தாள்களைப் புரட்டினால் மேற்காணும் செய்திகள் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு ஃப்ளாஷ் நியூசாக வந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் பிடியில் சிக்கிய சங்கராச்சாரியாவிலிருந்து நித்யானந்தா வரை உள்ள சாமியார்கள் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை கொள்ளைகளை கடவுளின் பெயரால் நடத்தினர், மந்திரவாதிகள் இறந்தவர்களின் ஆவியின் பெயரால் நடத்துகின்றனர். வீட்டுக்கு வீடு டிவி வந்து விட்டாலும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் அவ்வளவாக காண்பதில்லை, காண முடியாத அளவுக்கு சினிமாவும், சீரியல்களும், காமெடி காட்சிகளும் நேரத்தை ஆக்ரமித்துக்கொண்டு விட்டதால் இன்னும் கிராமப் புற மக்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். இதில் கிராமப் புறத்து மக்கள் மட்டும் விதிவிலக்கல்ல பட்டணத்து ஆபீஸர்களும் கூட இதில் அடங்குவர். ஜெயராமனை கொலை செய்த கொலையாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறிய (ஸ்காட்லான்ட் போலீசுக்கு நிகரான தமிழ்நாட்டு) போலீஸ் ஆவி(?)யின் உதவியுடன் தேடி கண்டு பிடிக்கப் போவதாக சமீபத்தில் அடித்த காமெடியைப் படித்து சிரிக்காதவர்களே தமிழ் நாட்டில் இல்லை எனலாம். துடி துடிக்க கொலை செய்யப்பட்டு அகால மரணத்தை அடைந்த ஜெயராமன் ஆவியாக வந்து அவர்கள் குடும்பத்தாரிடம் அல்லது இதற்காக அமைக்கப்பட்ட போலீஸ் படையிடம் இன்னார் தான் என்னை கொலை செய்தார்கள் என்றுக் கூறி இருக்கலாம். ஆவி இருப்பது உண்மை என்றால் தேவை இல்லாமல் இந்த போலீஸ் காரர்கள் ஜெயராமன் ஆவியை விட்டு விட்டு வேறொரு ஆவியைத் தேடி அலைய வேண்டிய அவசியமிருக்காது ? ஆவி என்பது சுத்த ஹம்பக் என்பதை இதிலிருந்தே விளங்கி கொள்ளலாம். சமூகவிரோத செயல்களுக்காக. சில பாழடைந்த கட்டடங்களில் ஆவி உலாவுவதாக கூறி அந்த கட்டடத்தை யாரும் விலைக்கு வாங்க முடியாத அளவுக்கு, யாரும் குடி இருக்க முடியாத அளவுக்கு, அவ்வழியே நடமாட முடியாத அளவுக்கு சில சமூக விரோதிகள் கோயபல்ஸ் ஸ்டைலில் பரப்பி விடுவார்கள் அதனால் அக்கட்டடம் சிதிலமடைந்து கிடக்கும். ஆனால் இரவானதும் அதற்குள் அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் தாராளமாக நடக்கும். சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை மட்டும் ஆவி விட்டு வைப்பதெப்படி ? என்பதை பொது மக்கள் சிந்திக்க மறுப்பது ஏன் ? பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ ஒரு பிரசவத்தில் இறந்ததும் முதலில் புர்ஹாம்பூரிள் உள்ள புலாரா மஹாலில் தான் அடக்கம் செய்யப்பட்டார். பிரசவத்தில் இறந்தது தெரிய வந்ததும் புலாரா மஹாலில் மும்தாஜின் அலறும் சத்தம் கேட்கிறது என்று புரளியைக் கிளப்பி விட்டனர் அதன் பின்னர் மும்தாஜின் குடும்பத்தார்களே புலாரா மஹாலுக்கு செல்வதை நிருத்திக் கொண்டனர். மும்தாஜின் உடல் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டப் பின்னரும் கூட உடல் தான் அங்கு சென்றது ஆவி இன்னும் இங்கு தான் அலைகிறது என்றுக் கூறி சமூக விரோதிகள் பாதுகாப்பான புலாரா மஹாலை தங்களுடைய சமூக விரோத செயல்களுக்கு பாதுகாப்பான கட்டடமாக ஆக்கிக் கொண்ட செய்தியைப் படித்திருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் ஏராளம் ! ஏராளம் !. சொந்த பிரச்சனைகளுக்காக, தனக்கு கீழ்படியாதவர்களை கீழ்படிய வைப்பதற்காகவும், தனது தேவையை நிரைவேற்றிக் கொள்வதற்காகவும் ஆவி தன்னிடம் வந்து பேசுவதாகக் கூறி ஆவி மூலமாக தனது தேவையை கூறி நிரைவேற்றிக் கொள்பவர்களும் இதில் அடங்குவர். ஆவி இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை. இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்தவியல் மின்புலம் மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்டதாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள். பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார். இதுவரை ஆவி உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம். ஆதாரம்:http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF&action=edit§ion=3 ஆவி உண்டென்றுப் புளுகிய பைபிள் ? ஆவி என்ற புருடா கண்டிப்பாக மேலை நாட்டு இறக்குமதி தான், இறந்தவர்களின் ஆவி உயிருள்ள உடலில் புகுந்து அட்டகாசம் செய்வதை போல் வேலை வெட்டி இல்லாத ஹாலிவுட் சினிமா காரர்கள் சினிமாவில் புகுத்தி மக்களை நம்ப வைத்தனர். சினிமா தான் இப்படி என்றால் சினிமாவை விட மோசமாக உருவாக்கப்பட்ட பைபிளில் இறந்தவர்களின் ஆவி உயிருள்ள உடலில் புகுந்து அட்டகாசம் செய்யும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அப்பாவி மக்களை நம்ப வைத்தனர். அப்பொழுது அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். மத்தேயு 10:1 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டு வந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லியது. லூக்கா 11:24 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின. மாற்கு 5:13 அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர் களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 13:2 என்று ஆவி உண்டு எனும் அறிவுக்கு ஒவ்வாத விஷயத்தை பைபிளில் எழுதி வைத்தனர். பைபிள் இறைவேதம் இல்லை என்பதை பைபிளிலிருந்தே இன்னும் வேறு பல சட்டங்கள் தொடர்பாகவும் நூற்றுக் கணக்கான வசனங்களை எடுத்து தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் நிருபித்து வருவதைப் பார்த்து வருகிறோம். அதனால் பைபிளே ஒரு சுத்த ஹம்பக் என்பதால் அதில் ஆவி தொடர்பாக கூறப்பட்ட தகவல்களும் சுத்த ஹம்பக் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆவி இல்லை என்று உரைத்தது இஸ்லாம் மட்டுமே !! எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும், மரணித்தப் பின்னர் அவரது உடலிலிருந்து உயிர் முற்றாகப் பிரிந்து படைப்பாளன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் மீண்டும் திரும்பவே திரும்பாது இதில் யாரும் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. மனிதர்கள் கண்டு பிடித்த உபகரணங்களில் அவர்கள் வரும்பியவாறு மாற்றி அமைக்கலாம் 110 மின்சாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரத்தை 220 மின்சாரத்திற்கு மாற்றி அமைக்கலாம் 220 மினசாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரத்தை 110 மின்சாரத்திற்கு மாற்றி அமைக்கலாம் இது போன்ற மாற்றங்களை மனிதன் செய்ய முடியும். உயிர் விஷயத்தில் இறைவனைத் தவிற வேறு எவராலும் எந்த மாற்றத்தையும் செய்ய இயலவே இயலாது உடலை விட்டுப் பிரிந்த உயிர் இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன்; 39:42. ஒன்றுமே இல்லாமல் இருந்தவருக்கு உடல் கொடுத்து உயிர் கொடுத்த இறைவன் அது மரணித்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போனப் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவும் ஆற்றலுடையவன் என்பதை உறதியாக நம்பும் மக்கள் இறந்தவரின் ஆவி உயிருள்ள யாருடய உடலிலாவது புகுந்து அட்டகாசம் செய்யும் என்றும், இறந்தவரின் ஆவியை அவரது மண்டை ஓட்டுக்குள் புகுத்தி மாந்திரீகம் செய்து எதிராளியின் உயிரை பறிக்க முடியும், கை,கால்களை முடக்க முடியும் என்றெல்லாம் கூறுவதை நம்பி ஏமாறக் கூடாது. மரணித்தவர்களுக்கும் உலகுக்கும் மிகப்பெரியத் தடுப்பை ஏற்படுத்தி விட்டதாக ஆற்றல் மிகும் அல்லாஹ் அருள் மறைக் குர்ஆனில் கூறி விட்டான். முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26. திருக்குர்ஆன்; 23: 99, 100. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
Related Posts Plugin for WordPress, Blogger...