புதன், மே 16, 2012

Wi-fi போகின்றது...Li-fi வருகின்றது...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக). இன்டர்நெட் தொழிநுட்பத்தில் மறக்க முடியா பெயர் Wi-fi. வயர் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்க பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. டாக்டர்கள் முஸ்தபா அப்கனி, கார்டன் போவே மற்றும் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் ஆகியோரின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் எதிர்க்கால இன்டர்நெட் உலகை மாற்றியமைக்க போவதாக அறிவியல் உலகம் கருதுகின்றது. wifi தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ரேடியோ அலைவரிசை சிக்னல்களை உபயோகிப்பது தான். இந்த சிக்னல்கள் மற்ற அலைவரிசையுடன் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் விமானம், மருத்துவமனை போன்றவற்றில் wifi-யை தடை செய்கின்றனர். Visible light communication (VLC) என்று அழைக்கப்படும் Lifi தொழில்நுட்பத்தில், ஒளியை கொண்டு தகவல்கள் அனுப்படுவதால் மேலே கூறிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் தண்ணீருக்கு அடியிலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.
இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் wifi-யை விட ரொம்ப விலை மலிவானது. மேலும் மிக வேகமானதும் கூட. 10 Gbps வரை இதன் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 hrs ஓடக்கூடிய ஒரு High Definition வீடியோவை 30 நொடிகளில் டவுன்லோட் செய்திடலாம். இன்னும் ஐந்து வருடங்களில் இந்த தொழில்நுட்பம் நம் கணிப்பொறிகள் மற்றும் மொபைல் போன்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும் என்று சமீபத்திய EFY (Electronics for You) இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இருப்பது போல இதிலும் குறைகள் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வேகத்தில் தலைச்சிறந்து இருப்பதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியிருக்கின்றனர். நன்றி: ஆஷிக் அஹமத் அ, EFY, New Scientist

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...