''என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் கூறுவீராக! திருக்குர்ஆன்.23:97.
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த கட்டுரையில் கேலி> கிண்டல்> கிச்சு கிச்சு மூட்டுவதன் மூலமாகவும் ஷைத்தான் மனிதனிடம் கோபத்தை விதைத்து கலகத்தை ஏற்படுத்துவான் என்பதை வரலாற்று சான்றுடனும் தற்போதைய நடைமுறை சம்பவத்துடனும் ஒப்பிட்டு எழுதினோம்.
இதில் சில சம்பவங்கள் மட்டுமே லேசான விளைவுகளுடன் முடிந்து விடுவதுண்டு பல சம்பவங்கள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
நம்முடைய ஒவ்வொரு அசைவுகளின் போதும் ஷைத்தானை தூரப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஷைத்தான் விஷயத்தில் அலச்சியமாக இருந்தால் நம்முடைய அனைத்துக் காரியங்களிலும் அவன் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி விடுவான்.
புத்திசாலித் தனத்தால் ஷைத்தானின் முயற்சியை முறியடித்து விடலாம் என்று நினைத்து விடக் கூடாது நம்முடைய புத்திசாலித் தனம் அவனுடைய சூழ்ச்சியில் தவிடுப் பொடியாகி விடும்.
அல்லாஹ்வின் துணை கொண்டு மட்டுமே ஷைத்தானுடைய சூழ்ச்சியை முறியடிக்க முடியும் அல்லாஹ்வின் பாதுகாப்புக்கு முன் அவனுடைய சூழ்ச்சி தவிடுப் பொடியாகி விடும்.
தூரம் அதிகமில்லை.
இறைவனின் மிகப்பெரும் பாதுகாப்புடன் வாழ்ந்து வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களே ஷைத்தானுடைய விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன் நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன் அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள் -உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள் அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள் உடனே நபி(ஸல்) அவர்கள் 'நிதானமாகச் செல்லுங்கள் இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்றார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும் 'அல்லாஹ் தூயவன் இறைத்தூதர் அவர்களே! (தாங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான் உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான் என்று நான் அஞ்சினேன்'' என்றார்கள். புகாரி : 3281. ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அறிவித்தார்.
சந்தேகத் தீயை உள்ளத்தில் பற்ற வைத்துக் கொளுத்தி விடும் அளவுக்கு ஷைத்தான் மனித உடலில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவன் என்பதால் இரத்தத்துடன் கலந்து விட்ட ஷைத்தான் கோபம் வந்த உடன் இரத்தத்தை சூடேற்றி விட்டு மனிதனுடைய கால்களை பூமியில் ஊண்றி நிற்க முடியாத அளவுக்கு ஆட வைத்து விடுவான்.
அதுவரை ஆடாத எவரும் அன்று ஆடி விடுவார் அவரை ஆட்டுவித்து ஷைத்தான் ரசித்துக் கொண்டிருப்பான்.
அவருடைய அழகிய முகத்தை அழுகிய முகமாக மாற்றி விடுவான் இவரா ? அவர் ? என்று வியக்கும் அளவுக்கு முகத்தில் பறக்கும் அணலால் அவருடைய முகத் தோற்றமே மாறி விட்டிருக்கும்.
இரத்தம் சூடாகி அசுர வேகத்தில் நரம்புகளில் ஓடுவதால் நரம்புகள் அதன் இயற்கை அளவைத் தாண்டி புடைத்துக் கொண்டு நிற்கும்.
உடல் முழுவதையும் ஆக்ரமித்த ஷைத்தான் சிந்திக்கும் திறனையும் கையில் எடுத்து விடுவான் அதனால் தான் அந்த நேரத்தில் அவர் பேசிய வார்த்தைகளை கோபம் தனிதந்தப் பின் மறுப்பார்.
நான் அப்படிப் பேச வில்லையே !!! நானா அப்படிப் பேசினேன் !!! என்று வியந்து கேட்பார்.
அதேப் போன்று ஷைத்தானின் ஆக்ரமிப்பில் இருந்தபொழுது யார் அவரிடம் சென்று என்ன அறிவுரைகளைக் கூறித் தடுத்தாலும் ஏற்க மாட்டார்> ஏற்க மறுப்பதுடன் விதாண்டாவாதம் பேசுவார்.
வரலாற்றில் ஓர் நாள்
ஒரு நாள் அமைதியின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் பொழுது அவர்களின் அருகே அல்லது சற்று தொலைவில் இருவர் கோபத்தில் திட்டிக்கொள்வதைப் பார்க்கின்றார்கள் அதில் ஒருவருடைய முகம் கடுமையாக சிவந்து விடுவதுடன் தொண்டை நரம்புகள் புடைத்து வெளியில் தெரிவதைப் பார்த்து சங்கடப் படுகிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உலக மாந்தர் அனைவருக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு முன் யார் சிரமப்பட்டாலும் அவர்களால் சகித்துக் கொள்ள இயலாது அதனால் அவர்கள் தங்களுடன் இருந்த தோழர்களிடம் நான் ஒரு பிரார்த்தனையைக் கூறுகிறேன் கோபத்தால் நரம்பு புடைக்கும் அளவுக்கு கத்திக் கொண்டிருப்பவரிடம் சென்று சொல்லுங்கள் அதை அவர் கூறினால் அவருடைய கோபம் தணிந்து விடும் என்கிறார்கள்.
மார்க்கப் பணியை எத்தி வைப்பதுடன் நின்று விடாமல் சமுதாய சேவைகளுக்காகவும் தங்களை அல்லும்>பகலும் அர்ப்பணித்துக்கொண்ட அண்ணல் அவர்களின் ஆருயிர் தோழர்கள் அதை செவியேற்றதும் கடும் கோபத்தால் நிலைகுலைந்து போய் நிற்பவரிடம் ஓடோடி சென்றுக் கூறுகிறார்கள்.
ஆனால் அதைக்கேட்ட அந்த கோபக் காரர் எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்க வில்லை ஸ்டெடியாகத் தான் நிற்கின்றேன் என்றுக் கூறி விடுகிறார்.
அந்த நேரத்தில் அவரால் அப்படித் தான் கூற முடியும் ஏன் என்றால் ஷைத்தானின் டாமினேஷனிலிருந்து அவர் அதுவரை விலகாதக் காரணத்தால் ஷைத்தானின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்ட அவரை ஷைத்தானே அவ்வாறு பதில் கூற வைக்கிறான்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர் அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து அவரின் தொண்டை நரம்பு புடைத்தது உடனே நபி(ஸல்) அவர்கள் 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் போருகிறேன்'' என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்'' என்று கூறினார்கள். எனவே மக்கள் அந்த மனிதரிடம் 'நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு'' என்று கூறினார்கள் அதற்கு அவர் 'எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?' என்று கேட்டார். புகாரிp 3282. சுலைமான் இப்னு சுரத்(ரலி) அறிவித்தார்.
எண்ணமே செயலை தீர்மாணிக்கிறது
நியாயமற்ற கடும் கோபம் ஷைத்தானின் மூலமே வருகிறது என்பதற்கு மேற்காணும் சம்பவமும் அதை தடுக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் போருகிறேன்'' எனும் பிரார்த்தனையும் சான்றுப் பகர்கிறது.
அதனால் தான் நம்முடைய புத்திசாலித்தனத்தைக் கொண்டு உடல் வலிமையைக் கொண்டு ஷைத்தானின் எந்த சூழ்ச்சியையும் முறியடிக்க முடியாது அல்லாஹ்வின் துணை கொண்டு மட்டுமே முறியடிக்க முடியும்.
கோபம் வரப்போவது ஓரளவு முன் கூட்டியேத் நமக்குத் தெரிந்து விடும் தெரியாமல் திடீரென வந்து விடாது.
எதிர் கொள்ளும் சம்பவங்களின் மூலமும் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் மூலமும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளலாம்.
அந்த நேரத்தில் தாமதமின்றி 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' என்றுக் கூறி விட வேண்டும். அவ்வாறுக் கூறி விட்டால் மலைப்போன்று வர இருக்கும் கலாட்டாக்கள்> பிரச்சனைகள் அல்லாஹ்வின் அளப்பரிய பாதுகாப்பினால் மடுவைப் போல் மாறி விடும்.
நடைமுறைக்கேற்ற மார்க்கம் தான் இஸ்லாம் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த சான்றாகும். காரணம் எண்ணம் தான் செயலை தீர்மாணிக்கிறது என்பதால்; 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்பதை சொல்ல ஒருவர் எண்ணி விட்டாலே கோபத்தைக் குறைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவரிடம் மேலோங்கி விடும்.
கோபத்தைக் குறைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் மேலோங்குபவரிடத்தில் மட்டுமே 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்று சொல்லவும் தோன்றும்.
இருவரும் இவ்வாறான முடிவுக்கு வந்து விட்டால் ஷைத்தான் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டு ஓடுவதைத் தவிற அவ்விடத்தில் கண்டிப்பாக வேறொன்றும் நிகழாது.
முடிந்தளவு முன் கூட்டியே சொல்லி விடவேண்டும் பிரச்சனை முற்றி விட்டால் நீயா ? நானா ? பார்த்து விடுவோமா என்று தான் ஷைத்தான் சொல்லத் தூண்டுவான்.
மடை திறந்த வெள்;ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது எவ்வாறு உடனே ஒரு அணையைக் கட்டி தடுத்து நிருத்த முடியாதோ அவ்வாறே கோபம் முற்றியப்பிறகு 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்றப் பிரார்த்தனையைக் கூறவே முடியாமல் போய் விடும்.
ஷைத்தானை உள்ளே விடுவதற்கு முன் தடுக்க வேண்டும் எந்த ஒன்றையும் உள்ளே அனுமதித்தப் பிறகு வெளியேற்ற முயற்சிப்பது கடினம்.
அதனால் தான் நரம்பு புடைக்கும் அளவுக்கு கத்திக்கொண்டு உடல் நலத்தையும்> மறுமை வாழ்வையும் தொலைத்துக் கொண்டு நின்றவர் அல்லாஹ்வின் துணையுடன் அந்த நேரத்திலாவது ஷைத்தானை தூரப்படுத்துவோம் என்ற சிந்தனை அவருக்கு வரவில்லை மாறாக எனக்கு பைத்தியமாப் பிடித்திருக்கிறது என்றுக் கூறி விடுகிறார்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
ASSALAMU ALAIKKUM W.R.B.
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு.
வாழ்த்துகள்.
தொடருங்கள்.
----------------
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,
இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.
"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
1. ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****
2. **** தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்
*****
3. ****** நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.! சபாஷ்!!! நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களே !!! *****
4. தினமலர் தீக்குளித்து தற்கொலை
5.
தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!! தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று. ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.
.
அல்லாஹ் நம் அனைவரையும் ஷைத்தானின் சூழ்ச்சியில் இருந்து காப்பானாக ஆமீன்!
பதிலளிநீக்குவாங்க abu friend & VANJOOR வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
பதிலளிநீக்கு