எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 24, 2011

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு

இணையத் தளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் அதிக அளவில் இணையத் தளங்களை பார்க்கிறார்கள்.


பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட பல புகழ் பெற்ற இணையத்தளங்களில் ஏராளமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த இணையத் தளங்களில் இடையிடையே ஆபாச பதிவுகளும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன
எனவே குறிப்பிட்ட 21 இணையத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் கூறியதாவது.
பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத் தளங்களில் ஆட்சேபத்துக்குரிய பல பதிப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்க 21 இணையத்தள நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்.
மேலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜனவரி 13-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மேலும் 21 இணையத்தளங்களும் சட்டப்பிரிவு 292, 293 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கை எதிர் கொள்ள நேரிடும்.
இவ்வாறு டெல்லி மாஜிஸ்திரேட் கூறினார்.
THANKS TO MANITHAN.COM

வெள்ளி, டிசம்பர் 23, 2011

குளோனிங் நாய்

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உலகின் முதல் `குளோனிங்' நாய்க் குட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதற்கு `ரப்பி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் 4 நாய்க் குட்டிகளும் இதனுடன் பிறந்துள்ளன.

ரப்பியும் மற்ற நாய்க்குட்டிகளும் புற ஊதா வெளிச்சத்தில் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. இதற்கு அவற்றின் தோலிலும், உரோமங்களிலும் இருக்கும் ஒரு விதமான புரோட்டீன் தான் காரணம்.

மனிதனுக்கு உண்டாகும் பல நோய்களுக்கான மருந்து, அவற்றின் தன்மை போன்றவற்றை நாய்களின் மூலம் சோதனை செய்யும் வழக்கம் ஏற்கனவே இருந்து வருகிறது. புற்றுநோய் ஆராய்ச்சியில் இந்தப் புதிய `குளோனிங்' வரவுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாய்களின் கருமுட்டையை எடுத்து அதில் ஒரு வைரஸ்ஸை ஊடுருவச் செய்தார்கள். அந்த வைரஸ், ஒளிரக் கூடிய ஒரு மரபணுவை கருமுட்டையின் உட்கருவில் இணைத்தது. இந்த உட்கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்தார்கள். மற்றொரு நாயின் கருமுட்டையில் இருக்கும் உட்கருவை நீக்கிய பின் அதனுள் தனியே பிரித்து எடுக்கப்பட்ட உட்கருவை உட் செலுத்தினார்கள். பின் இந்தக் கரு முட்டையையும் வெளியே எடுத்து ஒரு வாரகாலத்திற்கு சோதனைச் சாலையில் வைத்திருந்தார்கள். அதற்குப் பின்னால் இந்தக் கருமுட்டையை வேறொரு நாயின் கருப்பையில் விதைத்தார்கள்.

இந்த முறையில் சுமார் 344 கருமுட்டைகள் 20 நாய்களின் கருப்பைகளில் விதைக்கப்பட்டன. பெரும்பாலான கருக்கள் வளராமல் போனாலும் 7 கருக்கள் மட்டும் உருவாகின. அவற்றில் ஒரு கரு முழுவதும் வளர்வதற்கு உள்ளாகவே அழிந்துவிட்டது. மற்றொரு கரு வளர்ந்து நாய்க்குட்டியாகப் பிறந்து சில வாரங்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனது. கடைசியில் 5 நாய்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. 5 நாய்களும் தற்போது ஆரோக்கியமாக துள்ளிக் குதித்து விளையாடி காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகின்றன.

எலி போன்ற மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருப்பது போலவே நாய்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது.

தென்கொரியாவைச் சேர்ந்த இதே ஆராய்ச்சியாளர்கள் தான் `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை கடந்த 2005-ம் வருடம் உருவாக்கி சாதனை படைத்தார்கள். அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார்கள்.

புதன், டிசம்பர் 21, 2011

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது கடைகாரர் எல்லா போன்களும்

தரமானதுதான்னு சொல்லுவார் உங்கள் நோக்கியா போனின் தரத்தை

எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண்கள் வரும்

இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.


Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code, ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்

0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்

0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்


0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.


1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்-
http://tndawa.blogspot.com

சனி, டிசம்பர் 17, 2011

படிக்கும் பெண்களே உஷார்????

சென்னை நுங்கம் பாக்கம் அப்போலோ மருத்துவமனை அருகில் இஸ்லாமிய தேசிய தொண்டு இயக்கம் ஒன்றை சேர்ந்த அமிஞ்சிக்கரை கிளை நிர்வாகி ஹபிப் எனும் சகோதரர் தன்னுடைய எலக்ட்ரானிக் பொருள் வியாபாரத்திற்காக நின்று கொண்டிருந்த போது ஒரு ஜீன்ஸ்,டி சர்ட், தலையில் ஸ்கார்ப் அணிந்த ஒரு இளம் பெண் அங்கே இருந்த வீடுகளைத் தட்டி 'தான் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகவும், தான் தங்க இன்று இரவு மட்டும் அனுமதி தருமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணைக் கண்ட இந்த சகோதரர் விபரீதத்தை உணர்ந்தார். யாராவது அடைக்கலம் தருகிறேன் என்று அழைத்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து விட்டால்... ஏன் எனில் அந்தப் பெண் வீடு எனத் தட்டியது எல்லாம் நாள் வாடகைக்கு தங்கும் சேவை வீடுகள் [serviced apartments] என்பது அங்கு வியாபாரத்திற்காக சென்ற ஹபிபுக்கு தெரியும் ! விபரிதத்தை உணர்ந்த ஹபிப் அந்தப் பெண்ணை அணுகி யார் என்ன என்று விசாரித்த போது தான் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகவும் , தன் தோழியைத் தேடி வந்ததில் அவர் இல்லை என்பதால் காலை பிருந்தாவன் செல்லும் வரை தங்க ஏற்பாடு செய்து தருமாறும் கூறினார்.உடனே ஹபிப் சூளை மேடு அல்புர்கான் நிர்வாகியும் அங்கு மதரசாவின் மேல் தளத்தில் குடும்பத்தோடு தங்கியருக்கும் அந்த தொண்டு இயக்கத்தின் சகோதரர் இப்ராகிம் வீட்டில் தங்க வைத்தார்.

அங்கு அவருக்கு அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகளின் மனைவிகள் சந்தித்து இஸ்லாத்தை எடுத்து சொன்ன போது ' வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை திணிக்காதீர்கள்' என பேசினார் தன் தந்தை முஸ்லிம் தாய் கிறிஸ்தவர் அவர் கொல்கத்தாவில் உள்ளார், தான் டிஸ்கோத்தே கிளப்பில் டிஜே ஆக இருந்துள்ளேன்! என்று கூறினார்.மறுநாள் பெங்களூரும் செல்லவில்லை.எனது தோழி வந்து விடுவர் என்னை இரண்டு நாள் தங்க அனுமதியுங்கள்.என்று சொல்லி இழுத்தார்.

மிகவும் நெருக்கிப் பிடித்து கேட்கும் போது, தான் சிவா எனும் நேபாள இளைங்கனை காதலிப்பதாகவும் அவனை நம்பி வீட்டை விட்டு வந்ததாகவும் கூறியதை அடுத்து, அவன் மொபைல் எண்ணை வாங்கிப் பேசியதில் அவன் வெளிநாட்டு சட்டை கம்பெனியில் பணி புரிவதாக சொன்னதை அடுத்து இந்தப் பெண்ணை அங்கு அழைத்து சென்று பார்த்ததில் அவன் அங்கு இல்லை ! காதலிப்பதாக சொன்ன நேபாளத் தம்பி நீட்டினான் கம்பி!

பொய்யான பெயர் கொடுத்ததால் அப்படி யாரும் இல்லை என்று அறிந்து கொண்டனர். அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகள். அடுத்து என்ன செய்வது என மாநில துணை போது செயலாளர் இக்பால் அவர்களிடம் தொடர்பு கொள்ள அவர் அப்பெண்ணை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க சொன்னார்.

ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்றால் அங்கு அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது! அந்தப் பெண்ணின் பெற்றோர் மகளைக் காணாமல் புகார் கொடுக்க வந்திருந்தனர்.அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள்.பெங்களூர் கல்கத்தா, தந்தை முஸ்லிம் தாய் கிறிஸ்டியன் என்பதெல்லாம் புருடா. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சென்னையில் வசிக்கும் செலவ செழிப்புள்ள சிறந்த குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் இருவரும் ஹஜ்ஜுக்கு சென்று அன்று தன் திரும்புகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த பெண் இந்த வேலை செய்துள்ளார்.

அந்தப் பெற்றோர் மிகுந்த வேதனையுடன் மகளை கண்டித்தனர்.

தன்னுடைய மகளை ஆர்க்கிடெக்ட் படிக்க வைத்த பெற்றோர் பெண்ணுக்கு அளித்த சுதந்தரத்தை எண்ணி வருந்தினர்.

இருப்பினும் தன் மகள் தவறானவர்களின் கையில் சிக்கி சீரழியாமல் அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகள் மூலம் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்.

மேலும் மறு நாள் தன் மகளை மூன்று நாள் கண்ணியத்துடன் காத்த அல்புர்கான் மதரசாவுக்கு குடும்பத்தோடு நேரில் வந்து நிர்வாகிகளிடம் மதரசா நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

பிள்ளைகளுக்கு கட்டுபாடற்ற சுதந்திரம் வழங்கும் பெற்றோர்கள் இனியனும் சிந்திக்கட்டும்.

இஸ்லாமிய அடிப்படையில் பிள்ளைகளை வளர்க்கட்டும். ஏன் எனில் அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகி ஹபிப் அல்லாமல் வேறு யார் இடமாவது சிக்கியிருந்தால் என்னாகும் என்று சிந்தித்து பார்க்க முடியவில்லை.

வீட்டை விட்டு ஓடிப் போகும் பெண்கள் இனியேனும் திருந்தட்டும.


Reference By : http://www.sengiskhanonline.com/

வெள்ளி, டிசம்பர் 16, 2011

Main Menu முகப்பு இஸ்லாம் குடும்பம் இல்லறம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெற்றோர்-உறவினர் கட்டுரைகள் செய்திகள் In English தொடர்புக்கு மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! - ஷாக் ரிப்போர்ட்!

கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு!

"சார்... என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க.

பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சியாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார்.

பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங்கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங் கன்னு தெரியல.

இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் அம்பலப்படுத்தி அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்கணும்'' -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.

அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்... அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.

சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க, வெளியில் வந்து காத்திருந்தோம்.

மணி மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள், திருமணமாகாத இளம்பெண்கள் அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய, பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து "பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?' என்று நர்ஸிடம் பேச்சுகொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.

அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க, அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள், "சரிங்க, நீங்க வெளியில் போங்க சார்... பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்'' என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே, எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ? என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்... பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க... அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்! என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே ஒரு சின்ன "கேப்' கிடைத்தது.

நர்ஸ் மருந்து எடுக்க... வேறு அறைக்குப் போக, பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம், பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து, கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே "க்ளிக் க்ளிக்' என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.

அடிவயிற்றில் ஜிலிருடன்... நாம் அந்த அறையிலிருந்து வெளியேற, நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியேறிய நாம் ''க்ரேஸ் மருத்துவ மனை''யின் எம்.டி.யும். மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.

""எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க'' என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல, நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்... நைஸாக.

""ஹலோ டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?''

""ம்...?''

""ஆஹ்... நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட்டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்...''

""சரி...''

""அது... வந்து... இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.''

""அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?''

""கேமரா இருக்குங்களே மேடம்?''

""ப்ச்... கேமரா வைக்கலேங்குறேன்ல'' (டென்ஷனாகிறார்.)

""அதில்ல மேடம்... நானும் வந்து பார்த்தேன் மேடம், கேமரா இருக்குறதை! எனக்கென்னன்னா நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா, வேற யாராவது பார்ப்பாங்களேன்னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு''.

""இங்க பாருங்க... கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல...''.

""ஓ... அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?''.

""இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் "கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்' என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ ""எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம், அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால... டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல! ஆனா, இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல, திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க'' என்று வேதனையுடன் சொன்னவர்,

""ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ்பிடலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க... அந்த இளம்பெண் இறந்துட்டாங்க! இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே'' என்கிறார் நொந்தபடி.

""கூச்சம் பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்... வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க, அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது... மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லாஹ் தான் நம்மையும் நம் குடும்பத்தார்களையும் பாதுகாக்க போதுமானவன். இதற்கு இன்னுமொரு காரணம் நம் சமூதாயத்தில் மருத்துவர்கள் மிகவும் குறைவாக இருப்பது தான், இதை கவனத்தில் கொண்டு நாம் நமது சமுதாயத்தில் அதிக மருத்துவர்களை உருவாக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

எந்த மருத்துவரிடம் சென்றாலும் அந்த மருத்துவரைப்பற்றி நன்றாக தெரிந்த பின்னரே குடும்ப பெண்களை அழைத்து செல்லுங்கள். இந்த விஷயத்தில் பெண்களை தனியாக அனுப்ப வேண்டாம். கூடுமானவரை பெண்களை பெண் மருத்துவரிடமே அழைத்து செல்லுங்கள். அல்லாஹ்விடம் அதிகமதிகம் துவா செய்யுங்கள்.

http://www.nidur.info/

செவ்வாய், டிசம்பர் 06, 2011

எச்சரிக்கை! மடிக்கணனிகளால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் அபாயம்

( NOTE BOOK ) மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
By: S.m. Arif Maricar

திங்கள், நவம்பர் 21, 2011

Trial Room எச்சரிக்கை!!!

; :உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்யவும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செய்து பார்க்கவும். உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்சயமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவு...ம்.

வீடியோ கேமராவிற்குறிய பைபர் ஆப்டிக் கேபிளின் அலைவரிசை செல்போனின் அலைவரிசையுடன் இடையூறு செய்யும்போது உங் களால் கால் செய்ய முடியாது.

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS Trial Room

இருவழி கண்ணாடி என் பது நம்மால் கண்ணா டிக்கு பின்புறம் இருப்ப வரை பார்க்க முடியாது ஆனால் அவரால் நம் மை பார்க்க முடி யும்.

நீங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது குளியளறையிலோ கண்ணாடி இருப்பதை கண்டால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் கண்களால் வித்தியாசத்தை உணர முடியாது.



உங்கள் விரல் நகத்தைக் கொ ண்டு கண்ணாடியைத் தொடவும். உங்கள் நகத்திற்கும் கண்ணாடியில் தெரியும் உருவத்திற் குமிடையில் இடைவெளி இரு க்குமெனில் அது சாதாரண ஒரு வழி கண்ணாடி. ஏனெனில் சாதாரண கண்ணாடியின் பின்பக்கம் சில்வர் பொருத்தப்பட்டிருக்கும்



இருவழி கண்ணாடியில் சில்வர் பின்புறமிருக்காது. ஆகவே இடை வெளி இல்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள் உங்களை கண்ணாடியின் பின்புறமிருந்து யாரேனும் பார்க்கவும் செய்யலாம்

வெள்ளி, நவம்பர் 04, 2011

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

குழந்தைகளும் தொலைக்காட்சியும்
பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.
பதிவு செய்தவர் : arafath noorullah
பதிவு செய்த நேரம் : 6/25/2010 7:21:06 AM
இப்பக்கத்தை பார்த்த நபர்கள் : 441


குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு இந்திய புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.

2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).

3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.

4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.

5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.


குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.

3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.

4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.


வன்முறையும் தொலைக்காட்சியும்

1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.

4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.

5. பள்ளியில் சேருமுனனரே (Aduls) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.

7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.

8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.

9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.


தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:

1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.

2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.

4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.

5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.

6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.

7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும். டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.

இதில் மிகவும் முக்கியமாக தாய்மார்கள் பின்பற்ற வேண்டியது, குழந்தைகளை டி.வி பார்க்கக் கூடாது என்று கூறினால் மட்டும் போதாது. அதை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். நம்மை பார்த்துதான் குழந்தைகள் கற்று கொள்கிறது.
வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள்
தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!
arafath noorullah >>http://labbaikudikadu.com

நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா?

நீங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஐ டி இல் போய் ஒரு அசிங்கமான சைட்டுடைய பக்கத்தை லைக் செய்தால் என்னவாகும் நிலைமை?

அதனால் அடிக்கடி பேஸ்புக் சைட்டில் சென்று யாராவது எப்போதாவது உங்களுடைய அக்கௌன்டை ஹேக் செய்திருக்கிரார்களா என்று பார்ப்பது நல்லது தானே..

இதை செய்வதற்கு பேஸ்புக் லாக்இன் செய்து வலது பக்கத்திலுள்ள அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் சென்று செக்யூரிட்டி என்ற டேப் எடுத்து ஆக்டிவ் செஷன்ஸ் என்பதில் கிளிக் செய்து பாருங்கள். இப்போது தெரியும். யார் யார்,எங்கிருந்தெல்லாம் உங்கள் அக்கௌண்டில் நுழைந்திருக்கிறார்கள் என்று.

இனி எல்லாம் உங்கள் கையில் ...



அஞ்சல்; தமிழ் நேசன்

வியாழன், அக்டோபர் 27, 2011

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.




சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது ‘தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.


சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?


உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.


அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.


தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.


கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்

கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி

இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை

அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்

மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்

சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன

குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.

விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்

விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி

விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி

விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்

விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு

விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்

விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை

விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்

விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை

விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி


சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.


தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?


திட்டமிட்ட சதியா?

பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.


சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.


உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.

அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.

அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.


தேவையில்லாத மருத்துவ செயல்கள்:

விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது.

உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.

சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:

சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.

தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.

சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.


சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:

கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.

ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.


இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:

கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.

வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:

கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .


கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:

கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).


ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..

நன்றி: http://naturecuredr.com/articles/cesarean.htm

Posted by மு.ஜபருல்லாஹ்

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில்முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து. இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது. 2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது. நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்: திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: ‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37) ”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். 3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். 4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம். 7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள். *அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:* பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.

இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?

எனதருமை இஸ்லாமிய சமுதாயமே! தஃவாபணியின் முக்கியம் பற்றி இந்த சமுதாயம் இனியாவது சிந்நிக்குமா? இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ந நபி (ஸல்) அவர்கள் ஒன்றுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தும் 40 ஆண்டு காலம் உண்மையாளன் என்ற பெயர் பெற்றனர். அதன் பின் மனித சமுதாயத்திற்கு ஒருவழிகாட்டியாக இறைவனால் அனுப்பப்பட்ட இனிய தூதர் ஆனார்கள்.
இந்த மனிதசமுதாயத்திற்கு அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டியதோடு மனித நேயத்தை கற்றுக்கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் உண்ணுவது முறையல்ல என்ற உன்னத மனித நேயத்தையும் கற்றுக்கொடுத்தனர். மனித நேயமிக்க இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்று இந்தியாவில் மிகப் பெரிய ஒரு அபாயத்தை எதிர் நோக்கி உள்ளதை எண்ணி வேதனைப்படுகின்றேன்.
இந்தியாவில் இஸ்லாம் எப்படி பரவியது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். இந்தியாவில் முதன் முதலில் வியாபாரமாகத்தான் இஸ்லாம் பரவியது. அவர்கள் செய்த வியாபாரத்தில் நேர்மை இருந்தது. இறையச்சம் மிக்கவர்களாக ஒழுக்க சீலர்களாகதாங்கள் செய்கின்ற அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை பெறவேண்டும் என எண்ணிச் செய்தார்கள். அதன் காரணமாக இஸ்லாம் இந்திய மண்ணில் பரவியது. இதன் பிறகு இந்திய மண்ணில் 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்கள் மன்னர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் இம்மக்கள் மத்தியில் புனித இஸ்லாத்தை, இஸ்லாத்தின் ஏற்ற மிகு கொள்கையை எடுத்து வைத்தார்களா? குர்ஆன், ஹதீஸ்படி ஆட்சி நடத்தினார்கள்?
அரபி மொழியில் உள்ள குர்ஆனை தமிழ் நாட்டில் தமிழிலும், மகாராஷ்டிராவில் மராத்தியிலும், இந்தியாவில் அந்தந்த மாநில மொழிக்கொப்ப இந்த குர்ஆன் அன்று மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டு, அவற்றை மக்கள் மத்தியில் எடுத்து வைத்திருந்தால், தாங்கள் இந்த நாட்டை ஆண்டபோது ஒரு இஸ்லாமிய ஆட்சி செய்திருப்பார்களேயானால் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆண்ட இந்த பூமியில் ஒரு பாபரி மஸ்ஜித் இன்று இடிக்கப்படுமா? இந்த இழி நிலை ஏற்படுமா? இது இஸ்லாமிய நாடாக அல்லவா மாறி இருக்க வேண்டும்.என்ன செய்தார்கள் இந்த முஸ்லிம் மன்னர்கள்? நபி பட்டம் கிடைத்து 23 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் தியாகம், உழைப்புக் காரணமாக உலகில்இன்று மூன்றில் ஒரு பங்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. (குர்ஆன், ஹதீஸ்படி நடக்கவில்லை என்றாலும்) அப்படி அவை தோன்றின. இங்கே என்ன செய்தார்கள் இவர்கள்? கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம் அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட சமூகக் காவலர்கள் எனக் கூறிக்கொண்டு ஏகப்பட்ட பட்டம் பெற்றுள்ள இந்த கண்ணியம் மிக்கவர்கள் என்ன செய்தார்கள்? இஸ்லாத்தின் மனிதப் பண்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்களா? இல்லை! மேடை கிடைத்தால் போதும் என மக்களை மூடர்களாக்கி இவர்கள் அரசியலில் அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியல் பிழைப்பு நடத்தினார்கள். இவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்களா? ஆண்டுக்கு ஒரு முறை நபிக்கு விழா எடுக்கும் இவர்கள் அன்றைக்காவது தஃவா பணி செய்கிறார்களா?
இல்லை! இல்லை! நாங்கள்தான் ரசூலுல்லாஹ்வின் போதனைகளைப் பின்பற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டு முஸ்லிம் அல்லாத மக்களிடம் பணிசெய்கிறோம் எனக் கூறும் இவர்கள் தாங்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என எண்ணி தமக்கு என ஒரு சட்டத்தைப் போட்டு கொண்டு இந்த வரையறைக்குள்ளே தான் எங்கள் ஜமாஅத்தில் இணையலாம் எனக் கூறுகின்றார்கள்.
எந்த நிலையிலாவது இஸ்லாத்தை அதன் முழுவடிவத்தை செயல் படுத்தவேண்டும் என நினைத்தார்களா? அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே! முஸ்லிம்களில் எத்தனை பெரிய பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஜகாத் ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள்? இன்றும் எத்தனை முஸ்லிம்கள் வீட்டில் வேலை செய்யும் அரிஜன இன மக்கள் இருக்கின்றார்கள். ஜாதி இஸ்லாத்தில் இல்லை எனவே இந்த நிலையோடு ஏன் வாழ்கின்றீர்கள்? எனக் கேட்டு இஸ்லாத்தில் இணைந்த அரிஜன்கள் எத்தனை? அடிமைத் தொழிலை தவிர வேறு ஒன்றும் தொழில் செய்ய முடியாத ஒரு அடிமை சமுதாயத்திடமாவது இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டதா?
இனியாவது முஸ்லிம் சமுதாயம் தஃவாபணியின் (அழைப்பு) முக்கியம் பற்றி சிந்தித்து இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். அப்படி இந்த இஸ்லாம் பரப்பப்படுமானால் எந்த பாபர் மஸ்ஜிதும் இடிக்கப்படுகின்ற சூழ்நிலையை காணமுடியாது.- P.ஜமாலுத்தீன்
Related Posts Plugin for WordPress, Blogger...