செவ்வாய், ஜூலை 31, 2012

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புஎவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி (ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்காக உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:

உலகிற் சிறந்த பெண்மணி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].
கதீஜா (ரலி) அவர்களின் குடும்பத்தினரை நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (ரலி) அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824].
மற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத், தபரானி]

கதீஜா (ரலி) அவர்களின் நேசர்களை நபி (ஸல்) அவர்கள் மதித்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்பட்டதுபோல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள். ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். [புகாரி: 3818]

கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல்

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817]

சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்

நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்து என்னை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (ரலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820]


மரணம்

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது.

ஞாயிறு, ஜூலை 29, 2012

மாப்பிள்ளை வேட்டை!


( பெண் வீட்டார், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாஃப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.

மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா? வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா? கட்டுரைக்குள் நுழையுங்கள்!]

முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார். இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன? நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள்.

சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்?

சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது. பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள். பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர். இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது.

முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. "காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்" என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர்.

பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள். வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற சம்பளமும், பெண்ணைப் பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது.

அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது.
இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர். மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?

தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.

டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர்.

இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை அதிகம் விரும்புகின்றனர். இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.

இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?

வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா?
இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா?

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்?

அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.

ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது. அவனது திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும். திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான்.

எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான்.

குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை.

மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

அதுவே அவர்கள் ஆசையாக வளர்த்த மகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் சிறப்பான வாழ்க்கையாக அமையும்.

சனி, ஜூலை 28, 2012

தொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய?தொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன் நம்மை பார்க்கின்றான் என்ற அச்சத்துடனும் தொழுகையில் ஈடுபட வேண்டும்.


“இறைவனை நீ பார்ப்பதைப் போன்று வணங்கு! நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உமர்(ரலி) நூல் புகாரி

நமது கட்டுப்பாட்டை மீறி நமது உள்ளத்தில் மோசமான எண்ணங்கள் ஏற்படுமானால் அதைத் தவிர்க்கப் பின் வரும் ஹதீஸ் வழிகாட்டுகின்றது


“ஷைத்தான் எனக்கு என் தொழுகையையும் ஓதுவதையும் குழப்பி விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவன் கின்ஸப் என்ற ஷைத்தான் ஆவான் அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உனது இடது புறம் மூன்று முறை துப்பு” என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன்.
உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல் :முஸ்லிம்

நமது கட்டுப்பாட்டை மீறி உமது உள்ளத்தில் ஏற்படுகின்ற மோசமான எண்ணங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்படும் எல்லா எண்ணங்களையும் மன்னித்து விடுவான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல் புகாரி.


அலுவலகத்திலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ நமது உயரதிகாரி நம்மைப் பார்க்கும் போது நாம் சிரத்தையுடனும் அக்கறையுடனும் பணிபுரிய முனைவோம். பிரபஞ்சத்திற்கே அதிபதியான நம்மைப் படைத்த இறைவன் முன் நிற்கிறோம் என்கிற எண்ணத்தை நாம் நமது மனதில் தொடர்ந்து இருத்திக் கொண்டால், இவ்வகைத் தொல்லைகளில் இருந்து விரைவில் இன்ஷா அல்லாஹ் விடுதலை பெறலாம்.

இறைவன் மிக அறிந்தவன்

புதன், ஜூலை 25, 2012

"ஸகாத்தின் முக்கியத்துவம்"


ஸகாத்தின் பொருள்
இதன் பொருள் தூய்மையுறச்செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன் மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும் உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர்ஏற்பட்டது.
ஸகாத்தின் நோக்கம் என்ன ?
செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது. كي لا يكون دولة بين الاغنياء منكم ( الحشر 59:7) உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது (59:7)
ஸகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)
ஸகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?
ஸகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம்விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஸகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை.அவர்களிடம்குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள்,அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாகவேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும்.
ஸகாத் விதியானோர் ஐந்து பேர்
1. முஸ்லிமாக இருத்தல்
2. சுதந்திரமானராக இருத்தல்
3. நிஸாபை அடைதல் (85 கிராம் தங்க மதிப்புடைய பொருளைப் பெறுதல்) 4. பொருளுக்கு உரியவராக ( Owner) இருத்தல்.
5. விளை பொருளைத்தவிர அனைத்தும் ஓராண்டு பூர்த்தியாகுதல் இத்தகுதிகளைப்பெற்ற அனைவரும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் ?
8 பிரிவினர்)
انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ( التوبة 9:60)
1)யாசிப்போர் (ஃபக்கீர்)
2) ஏழைகள் (மிஸ்கீன்)
3) ஸகாத் வசூலிப்போர்.
4) இஸ்லாத்தை தழுவ விரும்புவோர்.
5) அடிமைகளை விடுதலை செய்வதற்காக!
6) கடன்பட்டோர்.
7) இறைவழியில் அறப்போர் செய்வோர்.
8) பயணிகள் (வழிப்போக்கர்) ( அல்-குர்ஆன் 9:60 )
யார் யாருக்கு கொடுககக்கூடாது ?
1) வசதியுள்ளோர்.
2) உடல் வலிமை பெற்றோர்.
3) தனது பெற்றோர்.பிள்ளைகள் ( அல்-அஸ்லு வல்ஃபர்உ)
4) நபியின் குடும்பத்தினர்.
5) முஸ்லிமல்லாதோர்.
6) தீயவர்கள்.
எப்போது வழங்க வேண்டும் ?
இது ரமளானில் தான் வழங்கவேண்டுமென பலரும் எண்ணிக்கொண்டு அம்மாதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாம் அவ்வாறு குறிப்பிடவே இல்லை.
பின் எப்போது கொடுக்க வேண்டும் ?
ஒருவருக்கு உணவு,உடை, வீடு, வாகனம், தொழிலுக்குத் தேவையான பொருட்கள் (கருவிகள்) போன்றஅவசியத் தேவைகள் போக ஒருகுறிப்பிட்ட அளவு அல்லது அதற்கு மேல் செல்வமிருந்தால் கணக்கிட்டு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்கவேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட அளவை (நிஸாபை) பெற்றவுடன் அல்ல. அந்த தொகை ஒர் ஆண்டு முழுவதும் அவனிடம் இருந்து, ஆண்டு இறுதியில் கொடுத்தால் போதுமானது.
எந்த அளவுக்கு ஸகாத் வழங்கவேண்டும் ?
20 தீனாருக்கு குறைவானவற்றில் ஸகாத் கடமையில்லை.20தீனார்கள் ஓராண்டு முழுவதும் உம்மிடமிருந்;தால் அதற்கு நீர் ஸகாத் கொடுக்க வேண்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : அஹ்மது, அபூ தாவூது, பைஹகீ) மேற் கண்ட நபி மொழியில் 20 தீனார் அளவு அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வைத்திருப்போர்தான் ஸகாத் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். என்பது தெரிய வருகிறது.
நபிகள் நாயகம் காலத்தில் செல்வம் என்பது தங்க வெள்ளி நாணயங்களாகவோ, கால்நடைகளாகவோ சொத்தாகவோ இருந்தது. இப்போதுள்ளது போல் விலையுயர்ந்த வைரங்கள், பிளாட்டினங்கள் இருந்ததில்லை. கரன்ஸி நோட்டுகள் இருந்ததில்லை. தங்கத்தின் மதிப்பை வைத்தே நோட்டுகள் அச்சடிக்கப் படுவதால் தங்கத்தின் விலையையும் வைத்தே இன்று அனைத்தையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஸகாத் கடமையான பொருட்கள்:
ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:
1) தங்கம், வெள்ளி,
2) வியாபாரப் பொருட்கள்
3) கால் நடைகள் 4) விவசாய விளைச்சல்கள்
5) புதையல்கள்
ஸகாத்தின் சதவிகித அளவுகள்
1. 2.5 (இரண்டரை)சதவிகிதம்
2. 5 சதவிகிதம்
3. 10 சதவிகிதம்
4. 20 சதவிகிதம் என பொருளின் இனம் மாறுபடும் போது சதவிகிதமும் மாறு படுகிறது.இனி இவற்றை விரிவாகாப் பார்ப்போம்.
1. இரண்டரை சதவிகிதம் ஸகாத்
1. தங்கம்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கிலிருந்த ஒரு தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4..25 கிராமாகும். 20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை( அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். ( இப்னு மாஜா)
யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால்அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும்.
உதாணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால் அதில் இரண்டரை கிராம்(இரண்டரை சதவிகிதம்) -தங்கத்தை அல்லது அதற்கு இணையான விலையை ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஸகாத்தை வழங்க வேண்டும்.
2. வெள்ளிவெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திங்கள், வெள்ளிக் காசுகள் போன்றவற்றிற்கும் ஸகாத் வழங்கப்பட வேணடும்.200 திர்ஹமோ அதைவிடக்கூடுதலோ வெள்ளிக்காசுகள் வைத்திருப்போர் மீது ஸகாத் கடமையாகும்.ஐந்து ஊக்கியா (ஒரு ஊக்கியாh 40திர்ஹம்.40ஓ5ஸ்ரீ200 திர்ஹம்) அளவை விடக்குறைந்த வெள்ளிக்காசுகளுக்கு ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரிய்யி (ரலி), புகாரி : 1447)
200 திர்ஹம் (வெள்ளி) இருக்கும் போது அதில் ஐந்து திர்ஹம் ஸகாத் கொடுக்க வேண்டும்..
மேற்கூறிய ஹதீஸிலிருந்து 200 திர்ஹத்திற்கு குறைவான எடைக்கு ஸகாத் கிடையாது எனத் தெரிகிறது.இன்றைய மெட்ரிக் எடையில் ஒரு திர்ஹத்திற்கு 595 கிராம் ஆகும். 200 திர்ஹத்திற்கு(200ஒ2.975) 595 கிராம் ஆகிறது. தனது அவசியத்தேவை போக ஒருவரிடம் ஓராண்டிற்கு 595 கிராம் அல்லது மேற்பட்டுவெள்ளியிருந்தால் (40 ல் ஒரு விகிதம்) இரண்டரை சதவீதம் (அதாவது 14.875 கிராம்) ஸகாத் வழங்க வேண்டும்.
3. நகைகள்; தங்க வெள்ளி நகைகளில் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஸகாத் உண்டா என அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்;பட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் ஸகாத் கொடுக்க வேண்டுமெனகீழுள்ள ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
இருபெண்கள் தங்கக் காப்புகள் அணிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது உங்களிருவருக்கும் மறுமை நாளில் நெருப்புக் காப்புகள் அணிவிக்கப்படுவதை விரும்புவீர்களா ? என அவர்ளிடம் கேட்டபோது விரும்பமாட்டோம் என பதிற் கூறினர். அவ்வாறாயின் உங்கள் கைகளில் அணிந்திருப்பவைகளுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள்; என நபி (ஸல்) எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருப்னு சுகைபு (ரலி),
ஆதாரம்: இப்னு ஹஸம்நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா ? எனக்கேட்hர்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அஹ்மத்
நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஸகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ
மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தங்க வெள்ளி நகைகளுக்கும் ஸகாத் உண்டு என்பதை நபி(ஸல்)அவர்கள் வலியுறுத்துவதைக் காணலாம்.(தங்கம், வெள்ளிக்குரிய மதிப்பீட்டை அன்றைய மார்கெட் நிலவரப்படி கணித்துக்கொள்ளவேண்டும்) ஆண்டுதோறும் கொடுக்கவேண்டுமா?ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஸகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டு தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை பரவலாகக் காணமுடிகிறது. இவர்கள் முன்வைக்கும் வாதத்தையும் ஆதாரஙடகளையும் பின்னர்காண்போம்.
எனினும் ஆண்டு தோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமென்றே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களின் பின்னர் வந்த கலீபாக்கள்காலத்திலும் ஆண்டு தோறும் வசூலித்து வந்துள்ளதைக் காணமுடிகிறது.
நபிகளாரின் காலத்திலும் குலபேயே ராசிதீன்கள் காலத்திலும் ஸகாத் வசூலிப்பதற்காக வருடந் தோறும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். எந்த நாயகத் தோழரும் அவ்வாறு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க வுமில்லை. இதை வைத்தே உலகின்பெரும்பாலான அறிஞர்கள் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமெனத் தீர்;ப்பு வழங்கியுள்ளனர்.
ஸவூதி அரேபியாவின் மிகப்பெரும் மார்க்க மேதைகளான அஷ்ஷைகு பின் பாஸ் (ரஹ்) அவர்களும், ஸாலிஹ்அல்-உதைமீன் (ரஹ்) போன்றவர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
(மேற்கோண்டு விளக்கத்திற்கு தொடர்-2 கட்டுரையைப்பார்க்க)
4. ரூபாய்கள் 85 கிராம் தங்கத்திற்கு நிகரான வகையில் கரன்ஸிநோட்டுகள் குறிப்பிட்ட காலஅளவு நம்மிடமிருந்தாலும்வங்கியிலிருந்தாலும் அதற்கான ஸகாத்தையும் நாம் கணக்கிட்டு கொடுத்து வரவேண்டும்.
5. வியாபாரப் பொருட்கள்
வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியேஆக வேண்டும்.ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-நாங்கள் வியாபாரத்திற்கென வைத்திருக்கும் பொருட்களுக்கு ஸகாத் வழங்க வேண்டுமென நபி ( ஸல் )அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆதாரம் : அபூ தாவூது, பைஹகீ
மூலதனத்திற்கும் மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டுமா? என்று பலரும் கேட்கின்றனர். மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்கவேண்டும் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.ஆதாரம்: உமர் (ரலி) அவர்கள் ஆடுகளைப் பெற்றிருந்த ஒருவரிடம் அதற்குரிய ஸகாத்தை கேட்டபோதுஅவை ஈன்ற குட்டிகளை விட்டு விட்டு ஸகாத் கொடுக்க முன் வந்தார். அப்போது அதற்குரிய குட்டிகளையும்கணக்கில் சேர்ப்பீராக! என அவர்கள் கூறிய செய்தி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முவத்தாவில் இடம் பெற்றிருக்கிறது. இதை ஆதாரமாகக் கொண்டு வியாபாரத்தில் இலாபமாகப்பெற்ற தொகைக்கும் சேர்;த்தே ஸகாத்தை கணக்கிடவேண்டும் என்பதை அர்ரவ்லுல் முரப்பஃ ஸரஹ் ஸாதுல் முஸ்தக்னஃ பாகம்4,பக்கம்17ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)
1) ஒருவர் பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து ஜனவரிமாதம் ஒரு வியாபாரத்தைத் தொடங்குகிறார் என்றுவைத்துக்கொள்வோம்.ஓராண்டு முடிந்து அடுத்த ஜனவரியில் கணக்குப்பார்க்கும்போது வியாபாரம் வளர்ந்து செலவு சம்பளம் போக 5 இலட்ச ரூபாய் அதிகமிருக்கிறது. இப்போது மூலதனமாகிய ரூ10இலட்சத்துக்கும் ஓராண்டுக்குப்பிறகு இலாபமாகக் கிடைத்த 5 இலட்சத்துக்கும் சேர்த்து 15இலட்சத்துக்கு இரண்டரைசதவீதம்(அதாவது 37,500 ரூபாய் ) ஸகாத் கொடுக்க வேண்டும். மூலதனமாகிய 10 இலட்ச ரூபாய்க்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்பதற்கு ஆதாரமில்லை.
2)அடுத்து பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து வியாபாரம் செய்கிறோம். வினியோக வியாபாரிகளிடமிருந்து கடனாகப் பெற்ற ஐந்து இலட்சத்திற்குரிய வியாபாரப் பொருட்களும் கடையில் உள்ளன.வரவேண்டிய பாக்கிக்கடன் தொகை மூன்று இலட்சம் உள்ளது. ஆண்டு இறுதியில் கணக்குப் பார்க்கும் போது 7 இலட்ச ரூபாய் இலாபமாக கிடைத்துள்ளன. இப்போது கடையில் ஆண்டு இறுதியில் 1010 5107 ரூ 22 இலட்சம் உள்ளன. இவற்றில் கடனாகப் பெற்ற தொகையையும் வரவேண்டிய தொகையையும் கழித்து 14 இலட்சத்திற்கு ஸகாத்கொடுக்க வேண்டுமா ? அல்லது இருப்புக்கு மட்டும் கொடுக்க வேண்டுமா என்ற ஐயங்கள் எழுகின்றன..ஆண்டு இறுதியில இருப்பில் உள்ள மொத்த தொகைக்கும் (அதாவது 1010510710 ரூ 22 இலட்சத்துக்கு இரண்டரை சதவிகிதம் (ரூபாய் 55000.00) ஸகாத் கொடுக்க வேண்டும்.
3) பிறருடைய பொருள் நம் பொறுப்பில் இருந்தாலும் அது ஸகாத்துடைய அளவை அடைந்து ஓராண்டு முழுமையாகநம்மிடம் இருந்து விட்டால் ஓரராண்டுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடவேண்டும். அந்தப் பொருளை ஸகாத்துடைய காலவரையை அடைவதற்கு முன் திருப்பிக் கொடுத்து விட்டால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
4) அது போல நாம் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன் தொகை நம்மிடம் ஒருவருடம் இருந்துவிட்டாலும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விடவேண்டும். ஸகாத் காலவரைக்கு முன்னர் திருப்பிச் செலுத்திவிடடால் ஸகாத் செலுத்த வேண்டியதில்லை.
கடன் தொகை
5)சதாரணக் கடனாகட்டும். வியாபாரக் கடனாகட்டும். கடன் கொடுத்த தொகை கண்டிப்பாக வரும் தொகையும் உண்டு. வராதவையும் உண்டு. கண்டிப்பாக வரும் தொகைக்கு அந்த ஆண்டே கணக்கிட்டு ஸகாத் கொடுத்து விடவேண்டும். வராத தொகைக்கு கையில் கிடைத்ததும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடவேண்டும். பலஆண்டுகள் சென்று இந்த கடன் தொகை கிடைப்பதாக இருப்பின் அவற்றிற்கு அண்டு தோறும் என்ற கணக்கில்லாமல் ஒரேஒரு தடவை மொத்தத் தொகைக்கும் கொடுத்தால் போதுமானது.
6. வங்கியில் போடும் வைப்பு நிதி,, குறித்த கால வைப்பு நிதியும் சேமிப்புப் பத்திரம் நிறுவனப்பங்குகள் அவை கைவசமிருக்கும் பணமாகக் கருதி ஒரு வருடம் பூர்த்தியானதும் ஆண்டுதோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும்.
7. சொந்த வீடுகள், வாடகை வீடுகள்நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஸகாத் கிடையாது. ஆயினும் வாடகைக்கு விடப்படும் வீடுகளில் வரும் வருமானத்திற்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
8. கடைகள், விடுதிகள் (லாட்ஜுகள்) வாடகைக்கு விடப்படும் கடைகள்,கட்டடங்கள்,விடுதிகள்(லாட்ஜுகள்) ஆகியவற்றிற்கும் ஸகாத் கிடையாது.அதில் வரும் வாடகைக்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
9. நிலங்கள், வீட்டு மனைகள்விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் ஆகியவற்றுக்கும் ஸகாத் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து வரும் வருவாய்க்கும், விற்பனை செய்வதாக இருந்தால் அதன் மதிப்புத் தொகைக்கும் இரண்டரை சதவீதம் ஸகாத் கடமையாகும். இவை வியாபாரச் சரக்குகளைப்; போன்றவையாகும்.
10. வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள்வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஸகாத் இல்லை. ஆனால், அவற்றின் வருமானத்திற்கும் வாடகைக்கும் ஸகாத் உண்டு.
பொதுவாகவே மேற்கூறிய அனைத்திற்கும் அவற்றின் மொத்த மதிப்பீட்டிற்கு-அஸலுக்கு-( ஏயடரந ழக pசழிநசவல) ஸகாத் கிடையாது. அவற்றின் வருமானத்திற்கும், அவற்றை விற்கும் போதும் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
11. கால் நடைகள் கால் நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகை மனித வாழ்வுக்கும் ஒரு நாட்டின் வளத்திற்கும் வருவாய்க்கும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. அவற்றின் பாலும் மாமிசமும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை. அதன்தோல், உரோமம், கொம்பு ஆகியவை பெருமளவில் அந்நியச்செலாவணியைப் பெற்றுத்தருகிறது. பயணம் செய்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறாக மனிதத் தேவைகளுக்கும் பொருளாதார வளத்திற்கும் பயன்தரும் இந்த கால் நடைகளை சிறப்பித்து திருமறையில் வரும் 43:12, 16:5,7 வசனங்கள் சிந்தனைக்குரியதாகும், எனவே இறைவன் வழங்கிய இந்த அருட்கொடைகளுக்கு ஸகாத் வழங்குவது கடமையாகும். நம் நாட்டைப் பொறுத்தவரை ஸகாத் கொடுக்குமளவுக்கு யாரும் கால்நடைகள் வைத்திருப்பதில்லை.
எனினும் அதன் விபரத்தை சுருக்கமாகக் காண்போம்.
ஸகாத் விகிதங்கள் கால்நடைகள் எண்ணிக்கை ஸகாத் இல்லை ஸகாத் கொடுக்க வேண்டும்.
1. ஆடுகள்
1 முதல் 39 வரை ஸகாத் இல்லை
40 முதல் 120 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
121 முதல் 200 வரை ‘ ‘ இரண்டு ஆடுகள்
201 முதல் 399 வரை ‘ ‘ மூன்று ஆடுகள்
400, அதற்கு அதிகமுள்ளதற்கு ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு அதிகம் வழங்கவேண்டும். (புகாரி ஹதீஸ் எண:;1454))
(வெள்ளாடு,செம்மரியாடு,ஆண்-பெண் ஆடுகள் யாவும் சமமாகும்)
2. மாடுகள்
1 முதல் 29 வரை ஸகாத் இல்லை (எருமைகள);
30 முதல் 39 வரை ——- ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்று
40 முதல் 59 வரை ——- 2 வருடம் ‘ ‘ ஒரு கன்று
60 அல்லது அதற்குமேற்பட்டதற்கு ஓவ்வொரு 30 மாடுகளுக்கு ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் ஓவ்வொரு 40 மாடுகளுக்கு இரண்டு ஆண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும்
3. ஒட்டகைகள்
1 முதல் 4 வரை ஸகாத் இல்லை
5 முதல் 9 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு
10 முதல் 14 வரை ஓராண்டு நிறைவு பெற்ற இரண்டு ஆடுகள் 15 முதல் 19 வரை ஓராண்டு நிறைவு பெற்ற மூன்று ஆடுகள்
20 முதல் 24 வரை ஓராண்டு நிறைவு பெற்ற நான்கு ஆடுகள்
25 முதல் 35 வரை ஓராண்டுநிறைவுபெற்ற ஓர் பெண் ஒட்டகம்;
36 முதல் 45 வரை இரு வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
46 முதல் 60 வரை 3 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம்
61 முதல் 75 வரை 4 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம
76 முதல் 90 வரை 2வருடம்நிறைவுபெற்ற 2 பெண் ஒட்டகங்கள்
91 முதல் 120 வரை 3 வருடம்நிறைவுபெற்ற2 பெண் ஒட்டகங்கள
ஒவ்வொரு 40 க்கும்ஒவ்வொரு 50 க்கும் 2 வருடம் நிறைவுபெற்ற 1 பெண் ஒட்டகம் 3 வருடம்நிறைவுபெற்ற 1 பெண்xட்டகம்
குதிரைக்குரிய ஸகாத் வியாபாரப்பொருளைப்போன்றதாகும். சொநத உபயோகத்திற்கு ஸகாத் கிடையாது. வியாபாரத்திற்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2) 5 சதவிகிதம் ஸகாத்
12. தானியங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தானியங்களில் கோதுமை மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுவந்தன. வேறு தானியங்களும் அப்பகுதிகளில் உற்பத்தியாகவுமில்லை. ஆயினும் நெல், சோளம், ரவை, ராகி கிழங்கு போன்ற உணவு வகை எதுவாயினும் கோதுமையைப் போன்று கணக்கிட்டு ஸகாத் கொடுக்க வேண்டும்.எனினும் முன்னர் நாம் குறிப்பிட்ட பொருள்களின் ஸகாத்திலிருந்து இவை மாறுபடுகின்றன. தங்கம் வெள்ளி வியாபாரப் பொருட்களுக்கு ஆண்டு தோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும். ஆனால் தானியங்களைப் பொறுத்தவரை அவ்வாறன்று. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரியஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும்.
3) 10 சதவிகிதம் ஸகாத்
(உற்பத்தியில் 5 சதவிகிதம்)
நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்து விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதம் ஸகாத்கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் ஒருபங்கு (1ஃ20) கொடுக்க வேண்டும்.)
உற்பத்தியில் 10 சதவிகிதம் நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்படாமல் விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் இரு பங்கு (2/20) கொடுக்க வேண்டும்.) அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி
ஓராண்டு முடிவடைய வேண்டும் என்பதில்லை.அறுவடையான உடனேயே கொடுத்து விடவேண்டும் இங்கேகவனிக்கத்தக்கதாகும். அதற்குரிய உரிமையை அறுவடை நாளிலேயே கொடுத்;து விடவேண்டும் என அல் குர்ஆன் (6:141) அறிவுரை பகர்கிறது.
தானியங்களுக்குரிய அளவு (நிஸாப்)
கோதுமைதானியங்களுக்கும் ஒரு வரையறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்;துள்ளார்கள்;.’ ஐந்து வஸக்’ அளவுக்குக் குறைவான உற்பத்திக்கு ஸகாத் கிடையாது என நபி ( ஸல் )அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூது, தீhமிதி,நஸயீ, இப்னு மாஜா,தாரமீ, முஅத்தா, அஹ்மத்.
எனவே, ஒரு வஸக் என்பது 60 ஸாவு ஆகும் ஒரு ஸாவு 2.5 மப (இரண்டரை கிலோ) ஃ 5 வஸக் 5ஒ60ஸ்ரீ 300 ஸாவு 300 ஸாவு (300ஓ2.5 மப ஸ்ரீ) 750 கிலோவாகும் .
750 கிலோ கோதுமை உற்பத்திக்கே ஸகாத் வழங்கப்படவேண்டும். அதற்கு குறைந்த அளவுக்கு ஸகாத்வேண்டியதில்லை. ஒரு வருடத்தில் பல முறை உற்பத்திச் செய்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த அளவுவிளைச்சலுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.
நெல் கோதுமையைப் பொறுத்த வரை அப்படியே அரைத்து மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும்..ஆனால் நெல்லைப் பொறுத்தவரை அதன் மேல் தோலான உமியை நீக்கிய பிறகே உண்ணுவதற்கு ஏற்றதாகும். ஆகவே. நெல்லுக்கு ’10 வஸக்’ ( 1500 மப) உற்பத்தியானால் தான் அதற்கு ஸகாத் உண்டு என மார்க்கஅறிஞர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். தண்ணீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்பட்டிருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதமும் தண்ணீர் பாய்ச்சுவதற்காகசெலவு செய்யப்படாமலிருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதமும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
நிலத்திலிருந்து உற்பத்தி யாகும் பொருட்களுக்கு மட்டுமே ஸகாத் கடமையாகும். நிலம் எவ்வளவு இருந்தாலும்நிலத்திற்கு ஸகாத் கிடையாது.
13. பேரீத்தம் பழம் , உலர்ந்த திராட்சை இந்த இரண்டும் அறுவடை செய்த உடனேயே ஸகாத் கொடுக்க வேண்டும். இவை தவிர எந்த பழவகைகளுக்கும் ஸகாத் கிடையாது.
14. காய்கறிகள்காய்கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படுமேயாhனால் அவற்றின் ஸகாத்காலமும் அளவும் நிறைவு பெற்றால் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டும்.
4) 20 சதவிகிதம் ஸகாத்
15. கனிமப் பொருள், சுரங்கப்பொருள்சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோகங்கள், கனிமப் பொருட்கள், பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதையல்கள், போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் (கனீமத்) பொருட்கள் ஆகியவற்றிற்கு 20 சதவிகிதம் ஸகாத் வழங்ப்படவேண்டும்.
முக்கியக் குறிப்பு :
1. வைரக்கல், பிளாட்டினம் பல நர்டுக்கரன்சிகள், வலையுயர்ந்த சேமிப்புப் பொருட்கள் ஆகிய ற்றிற்கு ஸகாத்கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
2. ஆடு, மாடு, ஒட்டகை அல்லாத மிருகங்களுக்கும் ,பறவைகளுக்கும் ஸகாத் கிடையாது. விற்பனைக்கென்றால் ஓராண்டுநிறைவு பெற்றதும் வியாபாரப் பொருளைப்போல் இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
3. பழவகைகள், காய் கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும அதன்விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
4. மேலே குறிப்பிடப்படாத எதுவாயினும் சொந்த உபயோகத்திற்கோ, பாது காத்து வரும் எண்ணத்திலோஉள்ளவையாயின் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரைசதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.
16. சில்லரையாக வினியோகித்தல்; சில்லரையாக வினியோகிப்பது ஸகாத் முறையாகாது. கடமையும் நிறை வேறாது.
17. பைத்துல் மால் பொது நிதிபைத்துல் மால் பொது நிதி ஒன்றை உருவாக்கி பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்குப்பயன் படும் வகையில் அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
இதன் மூலமே உலகளாவிய அளவில் வறுமையை ஒழித்து ஏழைகள் ஏற்றம் பெறச் செய்து சமுதாயத்தில் வாழ்வையும் வளத்தையும் காணமுடியும். இதுவே இஸ்லாம் விழையும் ஸகாத் முழறயாகும். வல்ல நாயன் ஸகாத்தின் முக்கியத்தை உணர்ந்து அதை உரிய முறையில் வினியோகிப்பதற்கு நல்லருள் புரிவானாக.
நன்றி:இஸ்லாம் கல்வி

பிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் !!!


உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது. சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்றுதான் ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும். தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார். குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டிய தாய், அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, தனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும், புத்தக ஆசிரியர்களும் வழிகளை பட்டியலிட்டு உள்ளனர்.

குழந்தை, தங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான பெற்றோர், அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இது, குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்திவிடும். எனவே, குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குழந்தையின் தலையைக் கோதியபடி, இரவு நேரங்களில் படுக்கையில் இருக்கும்போது மெதுவாக அறிவுரை கூறுங்கள், இது உறவை வலுப்படுத்த உதவும்.

தனது அம்மாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள்., பணிக்குச் செல்லும் தாய்மார்கள், தனது பணியிடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறலாம். தன்னார்வலராக இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று விவரிக்கலாம். இது குழந்தைகளிடம் அம்மாவின் மதிப்பை உயர்த்தும்.

மாலை நேரங்களில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்றாடப் பணிகளில் உங்களுக்கு என்று தனித்துவமிக்க வழிமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்படியே செயல்படுங்கள். எனது முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள், நானும் அப்படித்தான் இருப்பேன் என்று செயல்படுவதை தவிருங்கள்

குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள கிரகிக்கும் திறனைக் கொண்டு கற்றுக் கொள்கின்றனர். அவர்களை இப்படித்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். அவர்களின் நிலையை அறிந்து, அதனை மேம்படுத்த ஆலோசனைகளை மட்டும் வழங்குங்கள்.

தோல்விதான் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் எல்லா முயற்சிகளையும் ஆதரியுங்கள். சைக்கிளிலிருந்து கீழே விழுந்தால் பதறாதீர்கள். சைக்கிளை தொடக்கூடாது என்று கண்டிக்காதீர்கள். முயற்சி போதாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள். குழந்தைகள் அடுத்தடுத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை முடிந்தவரை தவிருங்கள். பெற்றோருடன் இணைந்து விளையாடும் குழந்தைகள், தனியாக விளையாட விருப்பமின்றி, ஒவ்வொரு முறையும் பெற்றோரையே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும். எனவே, பெரிய அளவிலான விளையாட்டுக்களைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

உங்களுக்கு கிடைத்த வேலை சரியாக இல்லை. வாழ்க்கை சீராக

அமையவில்லை. இப்படியாக புலம்பாதீர்கள். கிடைத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

குழந்தைகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிடக் கூடாது. அப்போதுதான், ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வது எப்படி என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும். நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடாது என்பதை அவர்கள் உணர்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது பயனுள்ளதாக அமையும்.

ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்று குழந்தைகள் சொல்லும்போது, அதனை பொறுமையாகவும், கவனமாகவும் கேளுங்கள். இது குழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும். அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை கேட்கத் தவறினால், அல்லது மட்டம் தட்டி மறுதலித்தால் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும். முன்னேற்றத்துக்கு தடையாக அமையும்.

குழந்தைகள் தங்களுடைய வேதனைகள் அனைத்தையும் பெற்றோரிடம் வெளிப்படையாக பேச மாட்டார்கள். அப்படிப் பட்ட நேரத்தில், குழந்தைகளிடம் உள்ள சோகத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமையாக பேசி வேதனைக்கான காரணங்களை உணர்ந்து அதைப் போக்க உதவ வேண்டும்.

குழந்தைகளைச் சுற்றிலும் அதிக அளவில் உறவினர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைக ளுக்கு ஊக்கம் அளிக்கும்.

குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். அவர்களுடைய திறமையையும் விருப்பத் தையும் அறிந்து அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.

குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறைகூறக்கூடும். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களு டைய கூற்று தவறாக இருந்தால் அதை ஏற்காதீர்கள். அதேசமயம், அவர்கள்மீது, கோபப்படாமல் மென்மையாக பதில் அளியுங்கள்.

இன்று நான் நிறைய தவறுகளை செய்துவிட்டேன் என்று குழந்தைகள் கூறக்கூடும். அப்படிப்பட்ட சமயத்தில், நானும் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன் என்று கூறுங்கள். உங்கள் தவறுகளை எப்படி திருத்தினீர்கள் என்று விளக்குங்கள். அவர்களுடைய தவறுகளையும் திருத்திக் கொள்ள அறிவுரை வழங்குங்கள். பெரிய மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, தம்மிடம் உள்ள வேதனைகளை மறந்துவிடுவார்கள். குழந்தையிடம் கோபமாக பேசினால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபப்படக் கூடாது என்பதை குழந்தைகள் உணரும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

சில விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்கும், குழந்தைக்கும் உள்ள உறவை இது வலுப்படுத்தும்.

தினந்தோறும் காலையில் எழுந்தவுடன், குறைந்தது 5 வேளை கடவுளை வணங்கவேண்டும் மற்றும் 5 பேருக்கு அல்லது செயல்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்த முயற்சி, குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும்.எல்லாமே நல்ல வழிகள்தானே. இவற்றை செயல்படுத்திப் பாருங்கள். எனது அம்மா ரொம்ப நல்லவங்க என்று நிஜமாகவே குழந்தைகள் ஒப்புக்கொள்ளும். உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கும்

திங்கள், ஜூலை 23, 2012

பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!


முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.

முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

நமது சகோதரர்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் அர்கான் மாநிலத்தில் இன அழித்தொழிப்பிற்கு பலியாகி வருகின்றார்கள். முஸ்லிம்களை படுகொலைச் செய்யும் பெளத்த பயங்கரவாதிகளுக்கு அரசாங்கத்தின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைத்துவருகிறது.

மியான்மரில் முஸ்லிம்கள் கொடூரமாக இனப்படுகொலைச் செய்யப்பட்டு வரும் வேளையில் உலக ஊடகங்கள் அங்கிருந்து வரும் செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது மிகக்கொடுமையாகும்.

மியான்மரில் முஸ்லிம்களின் உண்மையான பிரச்சனை ஏழ்மையோ, பட்டினியோ அல்ல. மாறாக அவர்கள் ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்குகிறார்கள் என்பதுதான் இந்த படுகொலைகளின் பின்னணியில் அமைந்துள்ளது. அவர்களுக்கு உதவுவது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதான கடமையாகும்.

உலகியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் அவர்களுக்கு நாம் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். உலக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்கள் வாழும் நாடுகளின் அரசுகளிடம் பர்மா முஸ்லிம் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், பர்மா முஸ்லிம்களுக்கு உதவவும் தொடர்ந்து போராடவேண்டும். ஆக்கப்பூர்வமான உதவிகளை அம்மக்களுக்கு அளிக்க முன்வரவேண்டும். தான தர்மங்கள், பிரார்த்தனை, பர்மா முஸ்லிம்களின் துயரத்தை நமது துயரமாக கருதுதல் போன்ற வழிகளிலும் முஸ்லிம்கள் தங்களது கடமையை நிறைவேற்றவேண்டும்.

முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்கள் அந்நாடுகளின் அரசுகளிடம் தீவிரமாக வலியுறுத்துதல் அவசியம். சோசியல் மீடியாக்கள் ஒரு சில இதழ்கள் மூலமாக மட்டுமே பர்மா முஸ்லிம்களை குறித்த செய்திகள் பரவுகின்றன. ஜும்ஆ மேடைகளிலும், சாதாரண முஸ்லிம்களிடமும் இச்செய்திகள் கொண்டுச் செல்லப்பட வேண்டும்.

உலக முஸ்லிம் நாடுகளின் கண்பார்வையில் இந்த கூட்டுப் படுகொலைகள் நிகழ என்ன காரணம்? பெளத்தர்கள் ஏன் இவ்வளவு துணிச்சலாக முஸ்லிம்களை கொலைச் செய்கிறார்கள்? காரணம் வேறொன்றுமில்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவும் தகுதியுடைய முஸ்லிம் ஆட்சியாளர் உலகில் இல்லை என்பதுதான்.

முஸ்லிம் உலகில் தற்பொழுது நடந்துவரும் மாற்றங்கள் அதற்கு வழிவகுக்கட்டும்.

‘முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக யார் கவலைப்படவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ (திர்மிதி) என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை உணர்ந்து நாம் செயல்படுவோம்! இச்செய்தியை அனைத்து மக்களிடமும் பரவச் செய்யுங்கள்!

ஞாயிறு, ஜூலை 22, 2012

வரலாறு முக்கியம் அமைச்சரே


superrsyed555ம் அவருக்கு பின்னாடி துர‌த்தும் சீட்டிங் கம்பெனியும் சிந்திக்க வேன்டி ஒரு படைப்பு

ஏன் வரலாறு... அதுவும் அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாளை என்ன நடக்கும் என்பதை குறித்து ஆய்வு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது, என்ன நடந்து இருக்கும் என்பதைக் குறித்த ஆய்வு ஏன்... இதனால் என்ன பயன்? போன்ற கேள்விகள் பொதுவாக 'வரலாறு' என்று கூறினாலே மக்களின் மனதில் எழுவது இயல்பே. இந்நிலையில் 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்று கூறுவோர் மக்களின் இக்கேள்விகளுக்கு விடையினை கூற கடமைப்பட்டு உள்ளனர். அதன் விளைவாகவே இந்தப் பதிவு.

ஒரு மனிதன் இரவிலே ஒரு மின்விளக்கின் கீழ் எதையோ நீண்ட நேரம் தேடிக் கொண்டு இருந்தான். அதனை கண்டுக் கொண்டு இருந்த விவசாயி ஒருவர் 'ஐயோ பாவம் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டு இருக்கின்றார் போல் இருக்கின்றதே. நாமும் போய் சற்று உதவுவோம்' என்று எண்ணியவாறே தேடிக் கொண்டு இருக்கும் அந்த மனிதனின் அருகில் சென்றார். விசாரித்துப் பார்த்த பொழுது அந்த மனிதன் தான் வாங்கிய சம்பளத்தை தனது பையில் வைத்து இருந்ததாகவும் அதனை தற்போது காணவில்லை என்றும் எனவே வழியில் எங்காவது தவறவிட்டு இருக்கலாமோ என்றுத் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட விவசாயியோ "சரி ஐயா...ஆனால் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கின்றீர்களே. இங்கே தான் தொலைத்தீர்கள் என்று நிச்சயமாக தெரியுமா?" என்றார்.

அதற்கு அந்த மனிதன் "இல்லை இல்லை... நான் இங்கே தொலைக்கவில்லை... அதோ அங்கே இருள் சூழ்ந்து இருக்கின்றதே அந்தப் பாதையில் தான் தொலைத்து இருக்க வேண்டும். ஆனால் இங்கே வெளிச்சம் இருப்பதால் இங்கேயே தேடிக் கொண்டு இருக்கின்றேன்" என்று பதில் கூற அந்த விவசாயியோ தனது தலையில் அடித்துக் கொண்டார். "ஐயோ அப்பனே..தொலைத்து ஒரு இடம்..தேடுவது மற்றொரு இடம்...பின் எவ்வாறு ஐயா உனது பொருள் உனக்குக் கிட்டும். ஒன்று இருளில் சென்று தேடு. அல்லது தொலைத்த பொருளை மீண்டும் ஈட்டிக் கொள். அதுவன்றி நீ இங்கேயே தேடிக் கொண்டு இருப்பது கால விரயமே அன்றி வேறில்லை" என்றுக் கூறிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார். அந்த மனிதனும் சற்று சிந்தித்து சரி சென்ற பொருள் செல்லட்டும் நாம் மீண்டும் பொருள் ஈட்டிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு நகர்கின்றான். சில நாட்கள் நகர்கின்றன.

மீண்டும் அதே விளக்கின் அடியில் அந்த மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருப்பதை விவசாயி காணுகின்றார். "அட என்னப்பா இது...இன்றும் இம்மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருக்கின்றானே" என்று அவன் அருகே சென்று விசாரிக்க மீண்டும் அவன் பணத்தினை தொலைத்து இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அட என்னடா இது... ஒவ்வொரு முறையும் இவன் தொலைத்துக் கொண்டு இருக்கின்றானே என்று சற்றே அந்த விவசாயி ஆராய, அம்மனிதனின் பையில் சிறு துளை ஒன்று இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அதன் மூலமாகவே அவன் ஈட்டிய பொருள் அனைத்தும் கீழே விழுந்து இருக்க வேண்டும் என்றும் அறிந்த அவர் முதலில் அவனை அவன் பையில் இருந்த துளையை சரி பார்க்க சொல்லிவிட்டு கிளம்ப அவனும் அவனிடம் இருந்த தவறினை திருத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றான். நிற்க.

சற்றே பிரபலமான கதைதான் அல்லவா. முல்லாவின் கதை என்றே எண்ணுகின்றேன். இதை நாம் இங்கே பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

முதலில் அந்த மனிதன் அவனுடைய பொருளினை இழக்கின்றான். ஆனால் ஏன் அந்தப் பொருளினை அவன் இழந்தான் என்பதனைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. அதன் விளைவாகவே அவன் மீண்டும் அவனுடைய பொருளினை இழக்க வேண்டிய நிலை வந்தது. ஒரு வேளை அவன் இரண்டாம் முறையும் அவனின் இழப்பிற்குரிய காரணத்தைப் பற்றி ஆராயவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவனுடைய பொருளினை அவன் இழந்துக் கொண்டே இருப்பான். அவன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சரி, எவ்வளவு முயன்றாலும் சரி அவனுடைய இந்த நிலை மாறாது. வெறுமையே அவனிடம் சேர்ந்து இருக்கும். காரணம் அவனின் துயருக்குரிய காரணியை அவன் அறியவில்லை. அறிந்தால் தானே அதற்குரிய பதிலினை அவனால் தேட முடியும். இங்கு தான் வரலாற்றின் தேவை வருகின்றது. வரலாறு என்பவை நமக்கு முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களே அன்றி வேறல்ல என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இப்பொழுது ஒரு செயல் நிகழ்ந்து இருக்கின்றது. அதனால் நமக்குத் தீங்கும் வந்து இருக்கின்றது. இந்நிலையில் ஏன் அந்த செயல் நிகழ்ந்தது அதனால் நமக்கு ஏன் தீங்கு வந்தது என்று ஆராய்ந்தால் தானே பிற்காலத்தில் மீண்டும் அதே துயர் நமக்கு வாராது நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது 'சரி வந்தது வந்துடுச்சி...இனி நடப்பதைக் காண்போம்' என்றே நாம் இருந்து விட்டால் மீண்டும் அந்தத் துயர் நம்மிடம் வாராது போய்விடுமா என்ன? அவ்வாறு அத்துயர் மீண்டும் நம்மிடம் வந்தால் அதனை சமாளிக்க நமக்கு அவ்வேளையில் வழிகளும் தான் கிட்டிடுமா என்ன? இல்லை தானே.

ஒருவன் முதல் முறையாக சாலையில் உள்ள பள்ளத்தில் அறியாது விழுகின்றான். இது ஒரு செயல். சரி தெரியாது விழுந்து விட்டான். மன்னித்து விடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே பாதையில் அதே பள்ளத்தில் அவன் விழுந்தான் என்றால் அச் செயலினை நாம் என்ன என்று சொல்வது. 'அந்த சாலையில் பள்ளம் இருக்கின்றது அதில் நாம் ஏற்கனவே விழுந்து இருக்கின்றோம் எனவே பார்த்துச் செல்ல வேண்டும் என்று அவனின் அனுபவத்தில் இருந்து அவன் அறிந்துக் கொள்ளாததை எவ்வாறு கூறுவது, அவனின் அறியாமை என்றா...அல்லது மடத்தனம் என்றா?. வரலாற்றில் இருந்து அவன் கற்றுக் கொள்ளவில்லை என்றே நாம் கருத வேண்டி இருக்கின்றது.

இன்று நம் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. முன்னர் வணிகத்துக்காக வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி ஆண்டார்கள். இன்றும் வணிகம் மூலமாக நம்மை மறைமுகமாக அடிமையாக்கி ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர். மேலும் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மில் பெரும்பான்மையினரான மக்களை தாழ்த்தப்பட்டோர் என்று சமயங்களைக் கொண்டு சிலர் அடக்க இன்றும் அந்த நிலை தொடருகின்றது. அந்த நிலையும் மாற வேண்டும் என்றால் அந்த நிலை எவ்வாறு தோன்றியது, ஏன் தோன்றியது என்பதையும் நாம் காண வேண்டும். அவற்றைக் காணாதுவிடின் பிற்காலத்தில் மீண்டும் அந்த நிலைகள் தலைத் தூக்கலாம். அந்த வேளையில் நமக்கு பிந்தைய சந்ததியினர் ஏன் அவர்கள் அந்தப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதனை அறியாமலே மீண்டும் இன்னல் பட ஆரம்பிப்பர். அவற்றைத் தவிர்க்கத் தான் நாம் வரலாற்றினைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. வரலாற்றிடம் இருந்து கற்று அதனை கற்பிக்கவும் வேண்டி இருக்கின்றது.

"வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் மீண்டும் மீண்டும் புதிதாய் விடையினைத் தேடும் பயணத்தை நாம் மேற்கொள்ள நம்முடைய வாழ்நாளில் நேரம் இல்லை. நம்முடைய பிரச்சனைகள் பெரும்பாலானவை பழமையானவை. எனவே அவற்றுக்கான விடையினை வரலாற்றின் உதவியோடு தேடுவதே பலன் தரும் செயலாக அமையும்." எனவே வரலாறு என்பது நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.

சனி, ஜூலை 21, 2012

மன திருப்திஎவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ (ரலி) நூல்: திர்மிதி

எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது (ரலி) நூல்:திர்மிதி

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: உமர் (ரலி) திர்மிதி

செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உங்களில் எவரேனும் தம்மைவிட அதிகப் பொருளுடையவரையும் தோற்றத்தில் தம்மைவிட மேலாக உள்ளவரையும் காண நேரிட்டால் அப்பொழுது அவர் தம்மைவிட இவ்விஷயங்களில் கீழாக உள்ளவரை நோக்கவும், ஏனெனில் இவ்விதம் செய்வது நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமலிருக்க மிகவும் உதவியாயிருக்கும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

தூய எண்ணம்அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் رَضِيَ اللَّهُ عَنْهُ (புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ (முஸ்லிம்)

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?

அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?

இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.

அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்+தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்

இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்

வியாழன், ஜூலை 19, 2012

மைக்ரோ வேவ் சமையல உஷார் !


மைக்ரோவேவ் இல்லத வீடு தற்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது.

மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாக Dr. மெர்கோலா தெரிவிக்கிறார். அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கும் போது மிக அதிக அளவில் நஷ்டப்படுவதாக Dr Cristina Garcia-Viguera சோதித்து அறிவிக்கிறார்.

ஆன்டியாக்ஸிடென்டும் அதன் நஷ்ட விகிதமும்.

ஆவியில் --- மைக்ரோவேவ் அவனில்

flavonoids -----------------------11% --- 97%

sinapics ---------------------------0% --- 74%

caffeoyl-quinic derivatives-----8% --- 87%

உணவில் ஏற்படும் பாதிப்புக்கள் :

1. மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது. குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது.

2. மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பானிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.

3. குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது. 1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.

4. ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோவேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள்.

5. மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும்.

மேலும் சில தகவல் :

சாதாரண அடுப்பில் எரிபொருள் எரியும் போது அது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இன்னொரு மூலக்கூறாக மாறும்போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. இந்த வெப்பம வெப்ப அலைகளாகப் பரவி உணவை அடைந்து சூடாக்குகிறது.

சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப்படுவதற்கும் மைக்ரோவேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்து சூடாக்குகின்றன். குறிப்பாக நீர் மூலக் கூறுகளை. இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம், புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது.

மைக்ரோவேவ் அவனில் மின்சார அலை உண்டாக்கும் அதிர்வுகளால் (சுமார் 2.5 gigahertz) நீர், கொழுப்பு, சர்க்கரை மூலக்கூறுகள் அதிர்வடைந்து உராய்வடைந்து வெப்பம் உண்டாகிறது. பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் இந்த அலை பாதிக்காது. சமையலுக்கு இத்தகைய பாத்திரங்களையே உப்யோகிக்க வேண்டும்.

மேலும் அறிய : How Microwave Cooking Works?

மைக்ரோ வேவும் உலோக பாத்திரமும் :

ஆனால் உலோகப் பாத்திரங்கள், அலுமினியம் ஃபாயில்கள் மைக்ரோ வேவ் அவனில் உபயோகப் படுத்தக்கூடாது. உலோகங்களில் மைக்ரோ வேவ் மின்சாரததை தூண்டுகிறது. இது மெல்லிய உலோகங்களில் ஸ்பார்க் (spark) ஐ உருவாக்கி எரியச் செய்கிறது.

மைக்ரோவேவில் முட்டை வெடிக்குமா?

மைக்ரோவேவ் அவனில் முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. முட்டை வெடித்து விடும்.

மைக்ரோ வேவில் தண்ணீர் வெடிக்குமா?

சுத்தமான தண்ணீரை மைக்ரோவேவ் அவனில் வைத்து அதிகமாக சூடாக்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் பாத்திரம் சூடாகாமல் தண்ணீர் மட்டும் சூடாவதால் தண்ணீர் அதன் கொதி நிலைக்குமேல் அதிக வெப்பமடைகிறது. வெப்பம் 100°c க்கு மேல் போனால் கூட நீர் குமிழ்களோ நீராவியோ வெளியாகாது. இந்த நிலையில் அந்த தண்ணீர் கோப்பையை அவனிலிருந்து வெளியே எடுக்க முயன்றால் உண்டாகும் சிறு அதிர்வால் தண்ணீர் வெடித்தது போன்று கொதிநிலைக்கு மேல் வெப்பமடைந்த தண்ணீர் கொப்பளித்து சிதறும். இதை தவிர்க்க தண்ணீர் சூடாக்கும்போது ஒரு உலோகமற்ற கரன்டியை அதில் இட்டு வைக்கலாம். பீதி வேண்டாம் அபூர்வமான நிகழ்வு இது என்றாலும் இப்படி நடைபெறும் வாய்ப்பு உள்ளது உண்மை.

மேலும் அறிய
http://www.snopes.com/science/microwave.asp

மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப்கார்ன் தயாரிக்கும்போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரைஈரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள், வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது. மேல் விபரம் இங்கே

Induction cooker :

Induction cookerன் செயல்பாடு அடிப்படையில் microwave oven போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. microwave ovenல் பாத்திரம் சூடாவதில்லை. உணவின் நீர் மூலக்கூறுதான் சூடாகிறது. இதில்தான் மேற்கண்ட பாதிப்பு உள்ளது. ஆனால் Induction cookerல் அடுப்பு சூடாவதில்லை. ஆனால் அதன் மீது வைப்பட்ட இரும்பு அல்லது காந்ததால் ஈர்க்கப்படும் உலோக பாத்திரத்தை மின் காந்த அலைகள் வெப்பமடையச் செய்கின்றன. அதனால் சாதாரண அடுப்பில் சமைப்பது போலவே உள்ளே இருக்கும் உணவு சூடாவதால் மேலே சொன்ன மைக்ரோவேவ் அவனுக்குள்ள பிரச்சனை இவனுக்கு இல்லை. ஆனால் இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்களும், அரிதாக மைக்ரோவேவுக்கு சென்சிட்டி உடையவர்களும் இண்டக்சன் ஸ்டவ் ஆனாலும் மொபைல் போன் ஆனாலும் பார்த்து, கேட்டு உபயோகிக்கவும்.

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!!
தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!!
ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!

மைக்ரோவேவ் அவன் இல்லாத வீடே தற்போது இல்லை. அதில் உள்ள நன்மை, தீமைகளை பார்த்து செய்வது சாலச் சிறந்தது. தண்ணீரை Microwave Ovenனில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல்முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும்.

ஆனால், அப்படியொரு அமைப்பே இல்லாதபோது Microwave Ovenகளில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது?

இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது. மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Ovenனினுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செகண்டுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக் கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Oven மூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோவேவினால் அசைக்க இயலாது.

எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது. ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்பட வேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven னினுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம், மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven ல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து,மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven னினுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத் தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

எனவேதான், Microwave Ovenகளில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

மைக்ரோவேவ் அவனில் செய்யக் கூடாதவை :

1. மைக்ரோவேவ் அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.

2. குறுகிய வாயுள்ள பாத்திரம் உபயோகிக்கக்கூடாது.

3. டின் உணவை டீஃப்ராஸ்ட் செய்யக்கூடாது.

4. முட்டையை ஓட்டுடன் சமைக்கக்கூடாது.

5. ரோஸ்ட் செய்யும் போது உப்பு போடக்கூடாது, வறுத்த பின்பு உப்பு போடவும், இல்லாவிடில் கரிந்து, தீய்ந்து விடும்.

6. டீப் ஃப்ரை செய்ய முயற்சிக்கக்கூடாது.

7. ப்ளாஸ்டிக், காகித பொருட்கள் உபயோகிக்ககூடாது, அவை உருகி, எரிந்து போகும்.

8. தண்ணீர் உள்ளே சிந்தக்கூடாது, இதனால் வெளிப்புற கண்ணாடி உடைய வாய்ப்புண்டு.

9. உணவு பொருட்கள் இல்லாமல் மைக்ரோவேவ் அவனை (சும்மா ஓடவிடக்கூடாது) உபயோகிக்ககூடாது.

நோன்பை விட்டுவிடச் சலுகை


மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டுவிடத் தற்காலிகமாகக் சலுகை வழங்கப்;பட்டுள்ளார்கள். அவர்கள் மாதவிடாய்க் காலங்களில் நோன்பு நோற்கத் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்றுவிட வேண்டும்.
'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)

கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்:

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும், தற்காலிகமாக நோன்பை விட்டுவிடச் சலுகை பெற்றுள்ளனர்.
'கர்ப்பிணிகளும், பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்து உள்ளார்கள்.' (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

சலுகை என்றால் அறவே அவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ளக்கூடாது. ரமளானில் விட்டுவிட்டு, வேறு நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்று விடவேண்டும். '..எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும்நாட்களில் நோற்க வேண்டும்..' என்று திருமறை கூறுவதைப் புரிந்துகொள்வது போல், மேற்சொன்ன ஹதீஸையும் புரிந்து செயல்படுத்த வேண்டும்.

நோயாளிகள்:

நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும், நோன்பை விட்டுவிடச் சலுகை வழங்கப்பட்டுள்ளனர். நோய்க்கு ஆளானவர்கள் ரமளானில் நோன்பை விட்டுவிட்டு, நோய் நீங்கிய பிறகு விடுபட்ட நோன்பை நோற்க வேண்டும். மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய வசனத்திலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.

முதியவர்கள்:

முதியவர்களும் நோன்பை விட்டுவிடச் சலுகை பெற்றுள்ளனர். இவர்களின் சலுகை தற்காலிகமானதன்று. நிரந்தரமாகவே இவர்கள் நோன்பை விட்டுவிடலாம். முதமையின் காரணமாக நோன்பை விட்டவர்கள் வருங்காலத்தில் அதை நோற்க முடியாது. ஏனெனில் அதைவிட அதிக முதுமையில் அவர்கள் இருப்பார்கள்.

இவவாறு நோன்பை விட்டுவிடும் முதியவர்கள் ஒவ்வொரு நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) கூறும்போது, 'இது (முற்றிலுமாக) மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்' என்று விளக்கம் அளித்துள்ளனர். (ஆதார நூல்: புஹாரி)
எனவே முதிய வயதுடையவர்கள் ஒவ்வொரு நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விட்டு நோன்பை விட்டுவிடலாம். 'ஒரு ஏழைக்கு உணவு; என்றுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதன் அளவு ஏதும் குர்ஆனிலோ, அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. எனவே ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மனிதனின் உணவு என்று எது கருதப்படுகின்றதோ அதைக் கொடுப்பதே சிறந்ததாகும். இந்த அளவு இடத்திற்கு இடம் மாறக்கூடியதாகும்.

மேலும் முதியவர்கள் ஒரு நோன்புக்காக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற இந்த கட்டளை, அவர்களுக்கு அதற்கான வசதி இருந்தால்தான். எவ்வித வசதியும் இல்லாவிட்டால் நோன்பு வைக்காத தள்ளாத வயதினர் ஏழைக்கு உணவேதும் வழங்கத் தேவையில்லை.

'அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை..' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகராவின் 286வசனத்தின் ஒரு பகுதி)

என்று அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுவதைக் கருத்தில் கொண்டு, மேற்படி செயலைச் செய்யலாம். வேண்டுமென்றே நோன்பை முறித்தவர் அதற்கான பரிகாரம் செய்ய வசதி இல்லாதபோது அவருக்கு நபியவர்கள் சலுகை வழங்கியதிலிருந்து இதனை நாம் அறியலாம். (இது பற்றிய ஹதீஸ் மறதியாக உண்பது, பருகுவது என்ற தலைப்பின் கீழ் வருகின்றது)

மேலே குறிப்பிடப்பட்ட இவர்களைத் தவிர, மற்ற அனைத்து முஸ்லிம்களும் ரமளான் மாதத்தில் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும். ரமளானில் நோன்பை நோற்காமல் - தகுந்த காரணமின்றி - தள்ளிப்போடுவது கூடாது.

புதன், ஜூலை 18, 2012

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..


பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..
ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர்.
அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெதி இல்லல்லா (- அல்லோப நிஸத்.)
பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். இறைவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராவார்
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4)
இந்து வேதங்களிலும் இஸ்லாமியக் கொள்கையே...
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே
(- சிவ வாக்கிய சுவாமிகள்)
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4)

கதீஜாவான மதுராணி


ஆந்திர மாநில வாரங்கள் நகரத்தில் பிறந்தவர் மதுராணி. ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். மதுவின் தந்தை தாகூர் பிரஹலாத் சிங். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் மதுராணிக்கு உண்டு. மது மூத்தவள்.

மதுராணி அண்மையில் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார். அதுதான் தாகூர் குடும்பத்தின் தலையாய பிரச்சனையாக மாறிவிட்டது.

பெண்களை கண்ணியப்படுத்துவது இஸ்லாம்தான். தன் 36 வயது மகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை ஜீரணித்துக் கொள்ள முடியாத தாகூர் பிரஹலாத் சிங், அவளை கொண்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் செய்தி ஆந்திர ஊடகங்களில் கடந்த வாரம் வெளியானது.

தந்தை பிரஹலாத் மகள் மதுராணியிடம் பேசுகிறார்.

'மகளே...பார்...நீ எடுத்திருக்கும் முடிவு (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பது) மிக மிகத் தவறானது. உன் முடிவை மாற்றிக் கொள்! யாரும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். உனக்கு உன் தந்தை, தாய் மற்றும் தம்பிகள், தங்கைகளின் பாசம், அரவணைப்பு மீண்டும் கிடைக்கும்...'

மதுராணி தந்தையின் கோபத்திற்கோ எச்சரிக்கைக்கோ செவிசாய்க்கவில்லை.

தந்தை தாகூர் தொடர்ந்து பேசுகிறார்...'உன் தீர்க்கமான முடிவையும், பிடிவாதத்தையும் காணும் போது நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஓய மாட்டாய் என்று தெரிகிறது. இதோ பார்! நீ உன் (ஹிந்து) மதத்தை மாற்றிக்கொள்ள விரும்பினாள் கிறிஸ்துவத்திற்கோ, புத்த மதத்திற்கோ மாறிக்கொள். அல்லது நீ விரும்பினால் துறவியாக வேண்டுமானாலும் மாறிக்கொள். ஆனால் முஸ்லீமாக மட்டும் மாறி விடாதே! எனக்கு இஸ்லாத்தைப் பற்றியும் மிக நன்றாக தெரியும்.

பெண்களுக்கு இஸ்லாமிய மதத்தில் எவ்வித மதிப்பும் இல்லை. அவள் அங்கு வீட்டு வேலைக்காரியாகத்தான் கருதப்படுகிறாள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நீ வருத்தப்படுவாய். இனியும் இஸ்லாத்தை ஏற்பேன் என அடம்பிடித்தால் உன்னை கொண்றுவிடுவேன்...'

தந்தை திட்டி தீர்த்தப்பின் மகள் மதுராணி திடமான நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பேசத் தொடங்கிறாள்.

மதுராணியின் பேச்சை ஒட்டுமொத்த குடும்பமும் கண் இமைக்காமல் கவனிக்கிறது.

இஸ்லாம் குறித்து தந்தையின் விமர்சனங்களுக்கும், அச்சத்திற்கும் ஆதாரங்களுடன் பதிலளித்து பேசுகிறார் மதுராணி.

'தந்தையே! இந்த உலகத்தில் பெண்களுக்கு கண்ணியத்தை தருகின்ற ஒரே மதம் இருக்கிறதுஎன்றால் அது இஸ்லாம்தான்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'தாயின் காலடியில் தான் சொர்கம் இருக்கிறது' என்று சொல்லியிருப்பதன் மூலம், பெண்களின் மதிப்பை வானளவு உயர்த்தி இருக்கிறார்கள். இஸ்லாத்தோடு வன்முறை தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் வன்முறையை போதித்ததில்லை.

அது சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை சொல்கிறது,பரப்புகிறது. தந்தையே ...இஸ்லாம் தவறான, மோசமான , நன்னடத்தையற்ற மதம் என்று கூறுகிறீர்கள். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் என்னைக் கொண்று விடுவேன் என்று சொல்லும் நீங்கள், எப்படி உங்களை நாகரிகமுள்ள, மரியாதைக்குரிய நபராக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதே சமயம் எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் புதைக்கப்படுவதை விட்டும் பாதுகாத்திருக்கிறார்கள். அதுவும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே...' – பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றபடி மதுவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த குடும்பம்... இனி மதுவை கட்டாயப்படுத்த முடியாது. அன்போடும், பாசத்தோடும் அவளை சமாதானப்படுத்த முடியும் என எண்ணி முயற்சித்தனர்.

ஆனால் இறைவன் யாரை நாடுகிறானோ அவர்களுக்கு வழி காட்டுகிறான். அதனால் மதுராணி இன்று கதீஜாவாக மாறியிருப்பதுடன் தனது பெற்றோரும் இன்னும் சில நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின், தான் அனுபவித்த இன்பம் மற்றும் மன அமைதியை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை என்று கூறும் கதீஜா, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணங்களையும் விவரிக்கிறார்.

'ஹிந்துயிசம் குறித்த நூல்களையும் புனித குர்ஆணையும் மிகவும் ஆழ்ந்து படித்தறிந்த பின்னர்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நான் முஸ்லீமாக மாறிய பின் (இறைவனால்) ஆசீர்வதிக்கப் பட்ட பெண்ணாக உணகிறேன். நான் பணிபுரிந்த நிறுவனத்தில் சில முஸ்லீம்களும் பணிபுரிந்தனர். அவர்கள் வழிபாடு நடத்துவதை பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும்.

அவர்கள் ஒன்றினைந்து கூட்டமாகத் தொழுவது என்னை மிகவும் ஈர்த்தது. நான் தீவிர ஹிந்து மதக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம்.

ஆயினும் ஆரம்பத்திலிருந்தே பல கடவுளர்களுக்கு முன் மன்டியிடுவதை நான் விரும்பியதில்லை...'என்றெல்லாம் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான பின்னணியைச் சொல்கிறார் கதீஜா.

பெண்களை கண்ணியப்படுத்துகிறது...

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து இந்து மதவேதங்களிலும் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அனைத்து வேதங்களும் ஒரே கடவுளைதான் சொல்கின்றன. முதம் தொடர்பான நூல்களை பல ஆண்டுகள் படித்த பின்னர் நான் யார்? ஏன் வாழ்க்கையின் நோக்கம்? என்பது போன்ற பல கேள்விகள் என் சிந்தனையில் உதித்தன. ஆனால் எல்லா கேள்விகளுக்குமான பதில்கள் நான் புனித குர்ஆனை வாசிக்கத் தொடங்கிய பின் எனக்கு கிடைத்தன...'

நான் இஸ்லாத்தை கண்மூடித்தனமாக ஏற்காமல் நன்றாக ஆய்வு செய்து மத ஒப்பீடுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார்.

முன்னதாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் கொள்கைப் பிரகடனமாக 'கலிமா'வை 3 வருடத்திற்கு முன்பே மொழிந்திருக்கிறார். கதீஜா அதோடு, ரகசியமாக தொழுதும் வந்திருக்கிறார். ஆனால் முஸ்லீமாக மாறிய பின் வீட்டிற்குள்ளேயே மத வழிபாடுகளில் ஈடுபட்ட காலத்தில் கடும் சிரமங்களையும், பிரச்சனைகளையும்

சந்தித்திருக்கிறார் எனவே இந்த பிரச்சனைகளின் காரணமாக கடந்த மார்ச் 20, 2012 அன்று வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இஸ்லாத்திற்காக தன் சுய விருப்பத்துடன் வீட்டை துறந்திருக்கிறார் கதீஜா. இறைவன் அவருக்கு போதுமானவன்.

நன்றி: மக்கள் ரிப்போர்ட்

திங்கள், ஜூலை 16, 2012

ரமலானுக்கு தயாராவோம்!!!


மனித சமுதாயத்தை சீர்திருத்த வந்த திருமறைக் குர்ஆன் இறங்கிய ரமலான் மாதம் நெருங்கி விட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்காக இப்பொழுதே நாம் நம்மை தயார் படுத்தி இருப்போம். அதில் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கு தயார் படுத்திக் கொண்டோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கான பயிற்சியை தொடங்குவோமாக !

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன்-2:183

ருசியுடன் உண்டு புசித்துப் பழகிய நாவை ரமலானுடைய நாளின் பாதிப் பகுதியில் உண்ணாமல் இருக்கப் பழக்கி இருப்போம். பொய் பேசாமல் இருக்கப் பழக்கினோமா ?
இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நாவை ரமலானில் பொய் பேசாமல் இருக்கப் பழக்குவோமாக !

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1903.

ஸஹர் மற்றும் இஃப்தாருக்கான உணவுகளை வகை வகையாக செய்து உண்டு மகிழ்வதற்கு தேவையான பொருள்களை இப்பொழுதே வாங்கி சேமிக்கத் தொடங்கி இருப்போம். ஆனால் அதில் உறவினர்களில் உள்ள ஏழை எளியோருக்கும்> நமது அருகில் வசிக்கும் ஏழை எளியோருக்கும் சிறிதை கொடுத்து அவர்களும் நம்மைப் போல் ஸஹர் மற்றும் இஃப்தாரில் உண்டு மகிழ்வதற்கும் சேர்த்து வாங்கினோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் அவர்களுக்கும் தாராள மனதுடன் சிறிதை சேர்த்து வாங்குவதற்கு எண்ணம் கொள்வோமாக ! இப்பொழுதே அந்த எண்ணம் வந்தால் தான் ரமலானில் வாரி வழங்கும் எண்ணம் உருவாகும்.

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1902.

இரவிலும்> பகலிலும் நேரம் தவறாமல் உறங்கிப் பழகிய கண்களை ரமலான் மாதத்தில் மாற்றி உறங்குவதற்கும் குறைத்து உறங்குவதற்கும் இப்பொழுதே பழக்கி இருப்போம். ஆனால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கினோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கிக் கொள்வோமாக! (இஃப்தாரிலிருந்து ஸஹர் வரை பலருடைய வீட்டில் (ரூமில்) சினிமா ஒடவே செய்கிறது சிலருடைய வீட்டில் (ரூமில்) நோன்பு நேரத்திலும் கூட சினிமா ஓடுவதை அறிந்து வருகிறோம்.)

நோன்பை நோற்றால் அது விரசமான சிந்தனையை தடுக்கும் என்று சத்திய மார்க்கத்தின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நோன்பு காலங்களிலும் விரசத்தைத் தூண்டும் சினிமாவை பார்க்கலாமா ?

உங்களில்> திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1905.

ரமலானுக்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் ரமலானில் பொய் பேசாமால், சினிமா பார்க்காமல், இருக்கவும் வாரி வழங்கும் எண்ணத்தை எற்படுத்தும் பயிற்சியை தொடங்குவோமாக !

செவ்வாய், ஜூலை 10, 2012

கையில் பல கோடி ! ஏமாற ஆர் யூ ரெடி ?சமீபத்துல அண்ணன் ஒருத்தரு போன் பண்ணி சாயங்காலம் வீட்டுக்கு வா, ரொம்ப முக்கியமான விசயம், கண்டிப்பா வந்துடுன்னு போன் பண்ணுனார், சரின்னு நானும் கிளம்பி அவர் வீட்டுக்கு போனேன், என்னை பாத்ததும் டக்குன்னு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு போய் ஜெயிலுக்கு போகாம எஸ்கேப் ஆன உடன்பிறப்பு கணக்கா வா அந்தபக்கம் போயிடுவோம்னு ரகசியமா கூட்டிட்டு போனாரு, ஓ பயங்கர ரகசியம் போலருக்கேன்னு நானும் சைலண்டா போனேன்.

தனியா ஒரு இடத்துக்கு போய் நின்னவரு, டேய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லக்கூடாது, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாரு, சரின்னா என்ன விசயம்னு சொல்லுங்க, யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சொன்னேன், இரண்டு மூணுதடவை சத்தியம் மேட்டர ரீபிட் பண்ணி கன்பர்மேசன் பண்ணிகிட்டு விசயத்தை சொன்னாரு மனுசன், ச்சீன்னு போயிடுச்சு.

வேற ஒன்னும் இல்லீங்க, இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு இவரோட நம்பருக்கு ஏழுகோடி ரூபா பரிசு விழுந்திருக்கறதா, அதுக்கு வீட்டு அட்ரஸ், போன் நம்பர், எல்லாம் மெயில் பண்ண சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்காங்க, அதைத்தான் உண்மைன்னு நம்பி என்ன மெயில் பண்ண சொல்லி கேட்கறதுக்காக கூப்பிட்டு இருந்தாரு, நானும் அண்ணா இது எல்லாம் சும்மா, டுபாகூரு மேட்டரு, இதையெல்லாம் பெருசா நினைக்காம விட்டுடுங்கன்னு சொன்னா ஆளு கேட்கவே இல்லை, டேய் நோக்கியா கம்பெனில இருந்து மெசேஜ் அனுப்பி இருக்காங்கடா? ஒருவேளை நிசமா இருந்தா ஏழு கோடிடா மெயில் அனுப்புடான்னு ஒரே தொல்லை.


நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன் அண்ணன் கேட்கற மாதிரி இல்லை, சரி அனுப்பித்தான் தொலைவோம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு எஸ்.எம்.எஸ் வாங்கி பாத்தா MDNOKIA@GMAIL.COM அப்படிங்கற மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி இருந்தது, அடப்பாவி நோக்கியா கம்பெனி எம்,டிக்கு சொந்தமா ஒரு டொமைன் வாங்கக்கூடவா காசிருக்காது, ஜிமெயில் ஐடிய வச்சிருக்கானே? 1100 மாடல்லயே 2ஜி அளவுக்கு சம்பாதிச்சிருப்பானேன்னு இதையும் சொன்னேன், எங்கண்ணந்தான் அடைந்தால் ஏழுகோடி இல்லையேல் தெருக்கோடின்னு உறுதியா நின்னதால வேற வழி இல்லாம இதுக்குன்னே ஒரு மெயில் ஐடிய ஓப்பன் பண்ணி பேரு, அட்ரஸ், போன் நம்பருன்னு எல்லாத்தையும் அனுப்பி வச்சேன்.

எவண்டா சிக்குவான்னு போர்வைய போத்திட்டு காத்திகிட்டு இருக்கானுகளே கம்முனாட்டி பசங்க மெயில் அனுப்புன ஒருமணி நேரத்துல ரிப்ளை வந்திருச்சு, அது என்னன்னா, இந்தமாதிரி ஏழுகோடியே நாற்பது லட்சம் ரூபா பரிசுத்தொகை உங்களுக்கு விழுந்திருக்கு, அதுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இந்த பணம் உங்க கைக்கு கிடைக்கற வரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது, ஏன்னா சட்டசிக்கல் வந்துரும், டேக்ஸ் கட்ட சொல்லுவாங்க, பணத்த நாளைக்கு விமானத்துல அனுப்பி வைக்கிறோம், எங்க ஆபீசரு ஜேக்கப் ஆண்டர்சன் கூடவே வருவாரு, உங்களோட கிப்ட் பாக்ச கஸ்டம்சுல இருந்து ஈசியா வாங்கித்தருவாரு, அப்படி இப்படின்னு, கடைசியா மேட்டருக்கு வந்தானுக அதாவது உங்களோட ஐடி, ப்ரூப் ஒன்னும், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ் 15500 ரூபாயும் கொண்டு வாங்கன்னு.
நானும் உடனடியா ரிப்ளை எதுவும் பண்ணாம ஒரு ரெண்டுநாள் சும்மா விட்டுட்டேன், அடுத்தடுத்த நாள் மெயில் அனுப்பிட்டே இருந்தானுக, நாளைக்கு ப்ளைட் லேண்டிங் லேண்டிங்னு நான் ரிப்ளையே அனுப்பல, அண்ணன் வீட்டு பக்கமும் போகல, சரின்னு மூணாவது நாள் இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அண்ணன் வீட்டுக்கு போனா அவனுங்க அடுத்தநாளே போன் பண்ணி பேசியிருக்கானுக, 15500 ரூபாய் அமவுண்டை நாங்க சொல்ர அக்கவுண்ட் நம்பர்ல போடுங்கன்னு

நம்ம அண்ணன் ஏற்கனவே வயித்துக்கு கஞ்சி வாய்க்கு பீடின்னு வாழுற ஆளு, என்கிட்ட முன்னூரு ரூபாதான் இருக்குது, சனிக்கிழமை சம்பளம் வாங்குனா ஆயிரம் கிடைக்கும் மொத்தமா 1300 இப்ப வச்சுக்கங்க, அப்புறம் ஏழுகோடி கிடைச்சதும் மீதிய கொடுத்துடறேன்னு சொல்லி இருக்காரு, அவனுங்க அதெல்லாம் முடியாது மொத்தமா 15500 வேணும் இல்லைன்னா பணம் கிடைக்காதுன்னு சொல்லிட்டானுக

இப்படியே அடுத்தநாளும் போன் பண்ணி இருக்கானுக, நம்மண்ணன்னும் லேசுபட்ட ஆளா 15500 க்கு பதினைஞ்சு லட்சமா நீங்களே எடுத்துட்டு மீதிப்பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டுருக்கார், அவன் கடுப்பாயி நாளைக்குள்ள பணம் கட்டல உனக்கு கிப்ட் கிட்டலன்னு கறாரா சொல்லி இருக்கான், அடுத்தநாள் நம்மாளு சரி உனக்கும் வேணாம் எனக்கு வேணாம் ஏழுகோடியில இரண்டு கோடிய நீயே வச்சுக்க, எனக்கு பேலன்ஸ் அஞ்சு மட்டும் போதும், டீலா? நோ டீலா?ன்னு கேட்க அவன் விவேக்கு ஒருபடத்துல சொல்லுவாரே அந்த ஒத்தவார்த்தை அத சொல்லிட்டு போன கட் பண்ணிட்டானாம்.

அன்னைக்கு சாயங்காலம் அவரு வீட்டுக்கு போயிருந்தேன், குவாட்டர ஊத்திட்டு பொலம்பிட்டு இருந்தாரு, அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே, ஈசியா வந்தது மிஸ்ஸாயிடுச்சேன்னு, அட ஏண்ணா நீங்கவேற அவனுகளே பிராடு பசங்க, நாந்தான் அப்பவே சொன்னன்ல பணம் கேட்பானுகன்னு, நீங்கதான் கேட்கலன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.

சாப்பிட்டுட்டு படுத்து தூங்கலாம்னு படுக்கும் போது என்னோட செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது, உங்களுக்கு ஏழுகோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு, உங்க அட்ரஸ், போன் நம்பர் இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்க

MDHONDA@GMAIL.COM அடப்பாவிகளா மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்!!!!

டிஸ்கி : நிறைய பேருக்கு இந்தமாதிரி எஸ்.எம்.எஸ் வந்திருக்கும், இந்த எஸ்.எம்.எஸ்களுக்கு ரிப்ளை பண்ணுனா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது, தெரிஞ்சுகட்டுமேன்னுதான் இந்த பதிவு.


சனி, ஜூலை 07, 2012

மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா


மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா
Friday, 06 July 2012 17:12
மாமல்லபுரத்தில் கடந்த ஜுன் மாதம் 28ம் தேதி அங்குள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக தொடர் முழக்க போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் வாழும் மக்களின் வழிப்பாட்டு உரிமை மற்றும் வாழ்வுரிமையை பறிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இயற்றியுள்ள புராதானச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எஞ்சியவை திருத்தச் சட்டம் (இந்திய தொல்லியியல் புராதானச் சின்னங்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்); 2010ஐ எதிர்த்து தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் வாழும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து நடத்திவரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தின்படி புராதானச் சின்னம் அல்லது இடம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியை சுற்றி 100 மீட்டர் அளவிற்கு தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் வாழும் பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது தற்போது உள்ள கட்டங்களில் சீரமைப்பு பணிகளோ நடைபெறக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் கட்டடங்களில் பழுதுபார்த்தல் அல்லது சீரமைத்தல் பணிகள் தேசீய புராதானச் சின்னங்கள் ஆணையத்தின் முன் அனுமதிப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மின்சார உபகரணங்களை மாற்றி அமைப்பதாக இருந்தாலும் முன் அனுமதியின்றி எதுவும் செய்ய இயலாது என்று மத்திய அரசு திருத்திய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிப்பாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது. தற்போது புதிய சட்டத்தின் கீழ் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பிறகு 14ம்; நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டு மக்கள் வழிப்பாட்டில் இருக்கும் தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னம் என தொல்லியில் துறை அறிவித்தது. இதன் காரணமாக ஹிந்துபெருங்குடி மக்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்பட்டதுடன் இந்த கோயிலைச் சுற்றி 300 மீட்டர் அளவிற்கு வாழும் அனைத்து சமூக மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொல்லியியல் துறை எடுத்துள்ள 32 இடங்கள் மற்றும் கடைசியாக எடுத்த தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது புனரமைப்பு பணியோ அல்லது ஒரு மின்விசிறியை மாற்றி மாட்டும் பணியோ முடங்கிப் போகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி தொல்லியில் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் வாழும் மாமல்லபுரத்தை மயான பூமியாக மாற்ற இந்திய தொல்லியியல் துறை திட்டமிட்டத்தை கண்டித்து தான் பல்வேறு போராட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 28 அன்று தொடர் முழக்கப் போராட்டத்திற்கு மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளை காலிச் செய்ய வேண்டும் என்ற நிலையில் கடல் மார்க்கத்தில் கல்பாக்கத்திற்கு வெகு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் குடியிருப்புகள் இருக்க கூடாது என்பதும் மத்திய அரசின் ஒரு மறைமுக திட்டமாகும்.
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் எனக்கும் இந்த போராட்டத்தில் அழைப்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் தமுமுகவினரும், ஜமாஅத்தினரும், வியாபாரிகளும் நான் இந்த போராட்டத்தில் பங்குக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். இப்போராட்டத்தில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக பிரதிநிதிகள் உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், மதிமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான், காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருகச்சூர் ஆறுமுகம், பா.ஜ.க. சார்பாக இல. கணேசன் முதலியோர் அழைக்கப்பட்டார்கள்.
விழா ஏற்பாட்டாளர்கள் இல. கணேசன் பேசி விட்டு சென்ற பிறகு நானும் சகோதரர் திருமாவளவனும் கடைசியாக மேடைக்கு வந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் நாங்கள் மாமல்லபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். போராட்டம் தொடங்கி வெகு நேரம் ஆன பின்பும் இல. கணேசன் வராத சூழலில் நானும் திருமாவளவனும் மேடைக்கு அழைக்கப்பட்டோம். போராட்டம் தொடர்ந்தது. இந்த சூழலில் மாமல்லபுரம் வந்த இல. கணேசனை போராட்ட குழுவினர் முதலில் விடுதிக்குச் சென்று சற்று ஒய்வெடுத்து விட்டு மேடைக்கு வரலாம் என்று வற்புறுத்திய பிறகு அதை மறுத்து நேரடியாக மேடைக்கு வந்து எனக்கு அருகில் தான் உட்காருவேன் என்று அடம் பிடித்து என் அருகில் அமர்ந்துக் கொண்டார். உடனே பத்திரிகையாளர்கள் அனைவரையும் எழுந்து நின்று புகைப்படம் எடுக்க கைகோர்த்து நிற்கச் சொல்ல மேடையில் இருந்த நெருக்கடியின் காரணமாக நான் நகர முடியாமல் மனதில் பெரும் வருத்தத்துடன் இல. கணேசனுடன் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
இதன் பிறகு நான் போராட்டக் குழுவினரிடம் உடனடியாக நான் பேசிவிட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக எனக்கு பேச வாய்ப்பளிக்கப்ட்டது.
எனது உரையின் தொடக்கத்தில் மேடையில் வீற்றிருந்த பா.ஜ.க.வின் இல. கணேசனுக்கும் அவரது கட்சியினருக்கும் பிற சமய மக்களின் வழிப்பாட்டு உரிமையை எவ்வாறு இஸ்லாம் பாதுகாத்துள்ளது என்பதை பறைச்சாற்றும் வகையில் அமைத்துக் கொண்டேன். தொடக்கமாகவே பிற மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பதற்கு சான்றாக கலீபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் கீழ் ஜெருசலம் நகரம் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்த நிலையில் அந்நகரில் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களை அந்நகரின் கிறிஸ்த்தவ தலைமை குரு சோபோர்னிசிஸ் அந்நகரைச் சுற்றிக் காட்டிய நிகழ்ச்சியையும் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படும் தேவலாயத்திற்கு (Church of Nativity) சென்று அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பாங்குச் சொல்லப்பட்ட வேளையில் அந்த தேவலாயத்திலேயே தொழுகையை நிறைவேற்றும்படி அந்த பாதிரியார் கேட்டுக் கொள்ள அதனை உமர் ரலி மறுத்ததையும் எடுத்துக் கூறினேன். நான் இங்கு இப்போது தொழுதால் பிற்காலத்தில் முஸ்லிம்கள் இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உங்கள் வழிப்பாட்டு உரிமை கோரக்கூடும். அதற்கு நான் வழி வகுக்க விரும்பவில்லை என்று உமர் (ரலி) தொழுவதற்கு மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி பேசினேன். நான் இந்த கருத்தைத் தெரிவித்தப் போது போராட்டத்தில் பங்குக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின் இந்த அற்புதமான சகிப்புத்தனத்தை அங்கீகரிக்கும் வகையில் பெரிய கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர். இல. கணேசன் போன்றோருக்கு அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். இதனைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பதை விவரிக்கும் போது வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமையை பறித்து இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறித்த விபரத்தையும் அதனை மீட்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வரும் வரலாற்றையும் எடுத்துரைத்தேன். இதே போல் மாமல்லபுரத்தில் வழிபாடு இல்லாத கோயில்களை தன்வயப்படுத்தி அவற்றை பாதுகாக்க தவறி வரும் இந்திய தொல்லியியல் நிறுவனம், மக்களால் பாதுகாக்கப்பட்டு வழிபாடு நடந்து வரும் தலசயானப் பெருமாள் கோயிலை தமிழக இந்து அறநலத்துறையிடமிருந்து தன் வயப்படுத்தி வழிப்பாட்டு உரிமையை பறிப்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணானது என்பதை சுட்டிக் காட்டினேன். வழிப்பாட்டு உரிமையுடன் வாழ்வுரிமைiயும் பறிக்கும் வகையில் 2010 இயற்றப்பட்ட சட்டம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி இச்சட்டத்தின் கீழ் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலககத்தில் முதலமைச்சரின் அறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொல்லியியல் துறையின் முன் அனுமதிப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும், மத்திய அரசு இச்சட்டததை கைவிட வேண்டும் என்று பேசினேன்.
நான் பேசிய மேடையில் மாமல்லபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவரும் இருந்தார். பேசி முடித்த பிறகு மக்ரிப் தொழுகைக்காக மாமல்லபுரம் பள்ளிவாசலுக்கு அவருடன் தான் சென்றேன். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த பள்ளிவாசலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதை என்னால் அறிய முடிந்தது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று புதிய அரசு ஆட்சியில் அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் கொடியவன் மோடி வருகிறான் என்று தெரிந்த பிறகு நாம் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ளவில்லை. இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால் மாமல்லபுரத்தில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் இல. கணேசன் பங்குக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நாம் அதில் பங்குக் கொள்ளாமல் இருந்திருந்தால் மாமல்லபுரத்தில் வாழும் 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். நான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டதை வைத்து கடும் விமர்சனத்தை சிலர் இப்போது செய்து வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான்.; செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழிக்கேற்ப தான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டேன். நான் அந்த நிகழ்ச்சியில் எந்த எண்ணத்துடன் பங்குக் கொண்டேன் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். நான் அப்போராட்டத்தில் பங்குக் கொண்டு உரிமைக்காக குரல் கொடுத்ததை தம் வாழ்வுரிமையை இழக்கும் நிலையில் உள்ள முஸ்லிம்கள் உட்பட மாமல்லபுரம் மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள். அம்மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம்.நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!....


எச்சரிக்கை!!!

அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.

நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.

நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.

அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.

தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.

மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.
பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த செய்தியை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
MOHAMED MAGDOOM அவர்களின் ஆங்கிலக் கட்டுரை தமிழாக்கம்

வியாழன், ஜூலை 05, 2012

பெண்களே! நீங்கள் வெளியே செல்லும்போது ஆண்களின் துணை இல்லாமல் செல்லாதீர்கள்சமுதாய சொந்தங்களே......!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

சில தினங்களுக்கு முன் ஒரு நாள்........!!

நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர். இருவரும் சுமார் 25 வயது இருக்கும். அவர்களுக்குள் ஒருவர் உடல் சுகவீனமானவர்.

இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண் அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம். அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது. உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சைபழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற பரபரப்பில் இருந்தனர். அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும். கணவன் மனைவி போலத் தோன்றியது. ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள் எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க, அதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல, ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்" என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுத்தனர்.

அடுத்த சில வினாடிகளில் தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும் உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர். ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது.

மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல 5 நிமிடம் கூட ஆகாது. ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 15 நிமிடங்களாகியும் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகுதூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது.

என்னசெய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!" என்று கதறியழ ஆரம்பித்தனர். உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்றுமிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த கரிசமணியை பறிக்க ஆரம்பித்தாள். முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே, முஸ்லிம் பெண் நிலை குலைந்துபோனாள்.

உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும் செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு, இருவரையும் ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். அந்த அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூச்சு திணறி கீழே விழ, உடன்சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள். அல்ஹம்துலில்லாஹ்.

பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து

அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார். மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்கொண்டது. அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன. நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள்.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

1. ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

2. வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.

3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.

4. செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின் மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும்.

5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள்.

6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அவர்களைக்கொஞ்சம் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.

7. தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள் கை வசம் வைத்துக் கொள்ளவும்.
(இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்)

நன்றி:-
பஷீர் அஹமது,
மஞ்சக்கொல்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...