புதன், ஜூலை 18, 2012

கதீஜாவான மதுராணி


ஆந்திர மாநில வாரங்கள் நகரத்தில் பிறந்தவர் மதுராணி. ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். மதுவின் தந்தை தாகூர் பிரஹலாத் சிங். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் மதுராணிக்கு உண்டு. மது மூத்தவள்.

மதுராணி அண்மையில் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார். அதுதான் தாகூர் குடும்பத்தின் தலையாய பிரச்சனையாக மாறிவிட்டது.

பெண்களை கண்ணியப்படுத்துவது இஸ்லாம்தான். தன் 36 வயது மகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை ஜீரணித்துக் கொள்ள முடியாத தாகூர் பிரஹலாத் சிங், அவளை கொண்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் செய்தி ஆந்திர ஊடகங்களில் கடந்த வாரம் வெளியானது.

தந்தை பிரஹலாத் மகள் மதுராணியிடம் பேசுகிறார்.

'மகளே...பார்...நீ எடுத்திருக்கும் முடிவு (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பது) மிக மிகத் தவறானது. உன் முடிவை மாற்றிக் கொள்! யாரும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். உனக்கு உன் தந்தை, தாய் மற்றும் தம்பிகள், தங்கைகளின் பாசம், அரவணைப்பு மீண்டும் கிடைக்கும்...'

மதுராணி தந்தையின் கோபத்திற்கோ எச்சரிக்கைக்கோ செவிசாய்க்கவில்லை.

தந்தை தாகூர் தொடர்ந்து பேசுகிறார்...'உன் தீர்க்கமான முடிவையும், பிடிவாதத்தையும் காணும் போது நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஓய மாட்டாய் என்று தெரிகிறது. இதோ பார்! நீ உன் (ஹிந்து) மதத்தை மாற்றிக்கொள்ள விரும்பினாள் கிறிஸ்துவத்திற்கோ, புத்த மதத்திற்கோ மாறிக்கொள். அல்லது நீ விரும்பினால் துறவியாக வேண்டுமானாலும் மாறிக்கொள். ஆனால் முஸ்லீமாக மட்டும் மாறி விடாதே! எனக்கு இஸ்லாத்தைப் பற்றியும் மிக நன்றாக தெரியும்.

பெண்களுக்கு இஸ்லாமிய மதத்தில் எவ்வித மதிப்பும் இல்லை. அவள் அங்கு வீட்டு வேலைக்காரியாகத்தான் கருதப்படுகிறாள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நீ வருத்தப்படுவாய். இனியும் இஸ்லாத்தை ஏற்பேன் என அடம்பிடித்தால் உன்னை கொண்றுவிடுவேன்...'

தந்தை திட்டி தீர்த்தப்பின் மகள் மதுராணி திடமான நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பேசத் தொடங்கிறாள்.

மதுராணியின் பேச்சை ஒட்டுமொத்த குடும்பமும் கண் இமைக்காமல் கவனிக்கிறது.

இஸ்லாம் குறித்து தந்தையின் விமர்சனங்களுக்கும், அச்சத்திற்கும் ஆதாரங்களுடன் பதிலளித்து பேசுகிறார் மதுராணி.

'தந்தையே! இந்த உலகத்தில் பெண்களுக்கு கண்ணியத்தை தருகின்ற ஒரே மதம் இருக்கிறதுஎன்றால் அது இஸ்லாம்தான்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'தாயின் காலடியில் தான் சொர்கம் இருக்கிறது' என்று சொல்லியிருப்பதன் மூலம், பெண்களின் மதிப்பை வானளவு உயர்த்தி இருக்கிறார்கள். இஸ்லாத்தோடு வன்முறை தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் வன்முறையை போதித்ததில்லை.

அது சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை சொல்கிறது,பரப்புகிறது. தந்தையே ...இஸ்லாம் தவறான, மோசமான , நன்னடத்தையற்ற மதம் என்று கூறுகிறீர்கள். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் என்னைக் கொண்று விடுவேன் என்று சொல்லும் நீங்கள், எப்படி உங்களை நாகரிகமுள்ள, மரியாதைக்குரிய நபராக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதே சமயம் எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் புதைக்கப்படுவதை விட்டும் பாதுகாத்திருக்கிறார்கள். அதுவும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே...' – பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றபடி மதுவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த குடும்பம்... இனி மதுவை கட்டாயப்படுத்த முடியாது. அன்போடும், பாசத்தோடும் அவளை சமாதானப்படுத்த முடியும் என எண்ணி முயற்சித்தனர்.

ஆனால் இறைவன் யாரை நாடுகிறானோ அவர்களுக்கு வழி காட்டுகிறான். அதனால் மதுராணி இன்று கதீஜாவாக மாறியிருப்பதுடன் தனது பெற்றோரும் இன்னும் சில நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின், தான் அனுபவித்த இன்பம் மற்றும் மன அமைதியை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை என்று கூறும் கதீஜா, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணங்களையும் விவரிக்கிறார்.

'ஹிந்துயிசம் குறித்த நூல்களையும் புனித குர்ஆணையும் மிகவும் ஆழ்ந்து படித்தறிந்த பின்னர்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நான் முஸ்லீமாக மாறிய பின் (இறைவனால்) ஆசீர்வதிக்கப் பட்ட பெண்ணாக உணகிறேன். நான் பணிபுரிந்த நிறுவனத்தில் சில முஸ்லீம்களும் பணிபுரிந்தனர். அவர்கள் வழிபாடு நடத்துவதை பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும்.

அவர்கள் ஒன்றினைந்து கூட்டமாகத் தொழுவது என்னை மிகவும் ஈர்த்தது. நான் தீவிர ஹிந்து மதக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம்.

ஆயினும் ஆரம்பத்திலிருந்தே பல கடவுளர்களுக்கு முன் மன்டியிடுவதை நான் விரும்பியதில்லை...'என்றெல்லாம் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான பின்னணியைச் சொல்கிறார் கதீஜா.

பெண்களை கண்ணியப்படுத்துகிறது...

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து இந்து மதவேதங்களிலும் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அனைத்து வேதங்களும் ஒரே கடவுளைதான் சொல்கின்றன. முதம் தொடர்பான நூல்களை பல ஆண்டுகள் படித்த பின்னர் நான் யார்? ஏன் வாழ்க்கையின் நோக்கம்? என்பது போன்ற பல கேள்விகள் என் சிந்தனையில் உதித்தன. ஆனால் எல்லா கேள்விகளுக்குமான பதில்கள் நான் புனித குர்ஆனை வாசிக்கத் தொடங்கிய பின் எனக்கு கிடைத்தன...'

நான் இஸ்லாத்தை கண்மூடித்தனமாக ஏற்காமல் நன்றாக ஆய்வு செய்து மத ஒப்பீடுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார்.

முன்னதாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் கொள்கைப் பிரகடனமாக 'கலிமா'வை 3 வருடத்திற்கு முன்பே மொழிந்திருக்கிறார். கதீஜா அதோடு, ரகசியமாக தொழுதும் வந்திருக்கிறார். ஆனால் முஸ்லீமாக மாறிய பின் வீட்டிற்குள்ளேயே மத வழிபாடுகளில் ஈடுபட்ட காலத்தில் கடும் சிரமங்களையும், பிரச்சனைகளையும்

சந்தித்திருக்கிறார் எனவே இந்த பிரச்சனைகளின் காரணமாக கடந்த மார்ச் 20, 2012 அன்று வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இஸ்லாத்திற்காக தன் சுய விருப்பத்துடன் வீட்டை துறந்திருக்கிறார் கதீஜா. இறைவன் அவருக்கு போதுமானவன்.

நன்றி: மக்கள் ரிப்போர்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...