ஞாயிறு, அக்டோபர் 23, 2011

இந்து மதம் கூறும் இஸ்லாம்

என் இனிய நண்பர்களுக்கு!
மனித இனத்தைப் பற்றி இஸ்லாம் கூறுகையில்..
மனிதர்களே.. நிச்சயமாக நாமே உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் உங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிமுகப் படுத்திக் கொள்வ தற்காகவே உங்களைப் பல்வேறு பிரிவினராகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியம் வாய்ந்தவர் (கடவுளுக்கு) அதிகம் அஞ்சி வாழ்பவர்தான். (அல்குர்ஆன்.)
இஸ்லாம் என்பது இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக உலகம்தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. காலப் போக்கில் அதில் மாசு படிந்த போது அவ்வப்போது தீர்க்க தரிசிகள் இறைத் தூதர்கள் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களில் இறுதியானவர்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள். சிலர் அரேபியாவிலே இஸ்லாம் தோன்றியதால் அது அரபுகளுக்குரியது என்பர். அவ்வாறல்ல.. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இஸ்லாம்.
அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே கடவுள் தான்இ அதுதான் அல்லாஹ். முஹம்மது நபியவர்கள் அவனது தூதராவார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதே இஸ்லாம் எனப்படுகின்றது. அல்லாஹ் என்பது அரபு நாட்டுக்கடவுளல்ல. தமிமில் கடவுளென்றும் ஆங்கிலத்தில் புழன என்றும் உர்துவில் 'குதா' என்றும் வட மொழியில் 'பகவான்' என்றும் கூறுவது போல் அரபியில் ஒரே இறைவனுக்கு அல்லாஹ் என்கின்றோம். உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம் விரோதம் துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது.
உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதுவே நாளடைவில் பல்வேறு பிரிவுகளாக மாறி ஒன்றை ஒன்று எதிர்க்குமளவுக்கு குரோதத்தையும் விரோதத்தையும் உண்டு பண்ணி விட்டது. அவற்றைக் களைந்து இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை எதுவென அறிந்திருத்தல் ஒவ்வொரு இந்துவுக்கும் அவசியமாகும்.
இஸ்லாம் அதன் கடவுள் கொள்கை பற்றிக் குறிப்பிடுகையில்..
இந்த முழு அண்ட சராசரங்களுக்கும் ஒரே கடவுள்தான் இருக்க வேண்டும் கடவுள் என்பவர் அனைத்து வகையிலும் ஒப்பற்ற சக்தி பெற்ற வல்லவராக இருக்க வேண்டும். அவருக்கு எத்தகைய உலக தேவைகளும் இருக்கக் கூடாது. அவருக்குத் தூக்கமோ மறதியோ அலுப்போ ஓய்வோ தேவைப்படக் கூடாது. அவருக்குப் பிறப்போ இறப்போ இருக்கக் கூடாது. ஏனெனில் கடவுளுக்கு இவை உண்டு என வைத்துக் கொண்டால் - கடவுள் பிறப்பதற்கு முன் இவ்வுலகத்தைப் பரிபாலித்தவர் யார்? கடவுள் இறந்து விட்டதன் பின் மக்களைக் காப்பவர் யார் போன்ற வினாக்களுக்கு விடை காண முடியாத நிலை ஏற்படும். ஒரு கடவுள் இறந்த பின் வேறு கடவுள் கவனித்துக் கொள்ளும் என்று சொன்னால் பல கடவுள்கள் உண்டென ஏற்க வேண்டும். இவ்வாறு ஏற்றால் ஒவ்வொரு கடவுளுக்கும் குறிப்பிட்ட சில அதிகாரங்களே உண்டு என ஏற்க வேண்டும். எனவே கடவுள் அனைத்து சக்தி மிக்கவர் எனும் விடயம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது.
இஸ்லாம் முன் வைக்கும் இந்தக் கடவுள் கொள்கையினையே இந்து மதத்தின் மூல நூற்களிலும் முற்கால இந்துமத குருக்கள் பலரும் குறிப்பிட்டிருப்பதுதான் இங்கு ஆச்சரியான உண்மை. இதை நான் சொல்ல வில்லை. இந்து மத வேத மூல நூற்களில் காணப் படுபவைகளையே எடுத்துக் காட்டுகின்றேன். ஆனால் இப்போது அதிகமானோருக்கு இவ்வுண்மைகள் தெரியாது. பிற்காலத்தில் வந்த குருக்களும் பூசாரிகளும் இவற்றைப் பற்றியெல்லாம் மக்களுக்குக் கூறுவதை விடுத்து ஒரு சில ஆச்சாரங்கள் பொருள் புரியாத மந்திரங்களை மாத்திரம் உச்சரித்து அவையே இந்து மதம் என்று மக்கள் எண்ணும் அளவுக்கு தாங்கள் சொல்வது தான் இந்து மத போதனை என மக்களை எண்ண வைத்து இந்து மதத்தின் மூல மத நூற்களை யாரும் படிக்க முடியாத படியும் செய்து விட்டார்கள்.
இந்து மதத்தின் நான்கு வேதங்களாகிய 'ரிக் சாம அதர்வண யஜூர்' வேதங்கள் காலப் போக்கில் காணமற் போய் விட்டன. இந்துக்களின் மனுதர்மம் 'மனு' என்பவருக்குரியது. அவரது தர்ம சூத்திரங்கள் ஒரு லட்சமாகும். மனுதர்ம சாத்திரமாக அது வடிவெடுத்த போது அது 2683 தான் இன்று நடைமுறையில் 1928 தான் உள்ளன. ஆக நடைமுறைக்கு ஒவ்வாத மனுதர்ம சாஸ்த்திரமும் காலப் போக்கில் கரைந்து போயிற்று. இந்து மதமும் பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டன.
இதோ இந்து மதத்தின் மூலத்தில் கடவுள் கொள்கை எப்படி என்று பாருங்கள்..
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ? ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர் வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர் பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர். ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..(- சிவ வாக்கிய சுவாமிகள்)
ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர்.
அசலன் அனாதி ஆதி ஏகன் என இந்துப் புராணம் இறைவனை ஏகத்துவப் பெயர்களால் அழைத்தாலும் எங்குமே அனேக மக்கள் சிலை வைத்து இறைவனுக்கு இணை கற்பித்து விடுகின்றனர். ஆளுக்கொரு தெய்வம் ஏற்படுத்தி கல்லையெல்லாம் கடவுளாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து சிதறி விட்டனர்.
அல்குர்ஆன் சொல்கின்றது..'அல்லாஹ் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன் என்றும் நிலைத்திருப்பவன். அவனை உறக்கமோ சிறு தூக்கமோ பீடிக்கா..' (அல்குர்ஆன் 2-255)
நபியே கூறுவீராக.. அல்லாஹ் அவன் ஒருவனே.. அவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்)பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல் குர்ஆன்)
பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..
அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம் அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்யஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா (- அல்லோப நிஸத்.)
பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். இறைவன் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும். இஸ்லாத்தைப் பற்றி இவர்கள்..
-பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை கிடையாது. - அம்பேத்கார்.
-இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து. - பெரியார்
-பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கைமதம். - டாக்டர் ராதா கிருஷ்ணன்.
-ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான். குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள். (காந்திஜி)
-முஹம்மது போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது. ஒரே இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு விடை தரவில்லை. -அண்ணாத் துரை.
எனதன்பின் இந்து நண்பர்களே..
இந்து வேத ஆதி மூல நூல்களில் கடவுளைப் பற்றி கடவுளின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விடயங்களுக்கும் இன்றைய இந்துக்களில் பல கடவுள் கொள்கை வழிபாட்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் வேறுபாடுகளும்இ முரண்பாடுகளும் நிறைந்துள்ளன என்பதை இந்து வேத மூல நூற்களை வாசிக்கும் போது நீங்களாகவே முடிவு செய்து கொள்வீர்கள். இந்து மூல நூற்களிலும்இ முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அதுபோலவே இந்து மூல நூற்களில் கடவுளைப் பற்றிக் கூறுப்பட்ட அனைத்து தன்மைகளும் இஸ்லாத்தின் கடவுள் கோற்பாட்டுக்கு ஒத்துப் போவதையும் நீங்கள் உணர முடியும்.தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.
அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..'ஆயிரம் தெய்வங்கள் உண்டென அலையும் அறிவிலிகள்' எனப் பாரதியார் சாடுகின்றார். இஸ்லாத்தைப் பற்றி சில வரிகள்..
-இஸ்லாத்தில் ஒரே கடவுள்தான். அவன்தான் அல்லாஹ்.
-இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோருக்கு மத்தியில் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. இன குல வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக உண்ணலாம் வணங்கலாம். இதில் உயர் சாதி கீழ் சாதி எனும் சாதிப் பெருமைகளோ இன நிற வேறுபாடுகளோ கிடையாது. இஸ்லாத்தில் தீண்டாமை என்பதற்கு இடமே இல்லை. இஸ்லாம் அதை முற்றாக ஒழித்துக் கட்டிவிட்டது.
-இஸ்லாம் எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் மக்களுக்கும் பொருத்தமான சட்டதிட்டங்களையே கடைப்பிடிக்கின்றது. பகுத்தறிவுக்கொவ்வாதஇ புத்தி ஏற்றுக் கொள்ளாத புராணங்களோ இதிகாசங்களோ இதில் இல்லை.-இஸ்லாத்திலேயே பெண்களுக்கு முழுமையான உரிமைகள் வழங்கப் பட்டிருக்கின்றன. பெண்களுக்கு மறு மண உரிமையுண்டு. கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டையேறுவதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை.-இஸ்லாத்தில் கடவுளை வணங்கக் காணிக்கை செலுத்த வேண்டியதில்லை. இன்னும் எத்தனையோ சிறப்பம்சங்களில் இஸ்லாம் ஏனைய மதங்களை விட்டும் வேறுபடுகின்றது.
முடிவாக..
இஸ்லாமிய மார்க்கம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இஸ்லாம் உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. முஸ்லிம்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இஸ்லாமியப் போதனைகளுக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இஸ்லாத்தைக் குறைகூற முடியாது.இஸ்லாம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்..
இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது. (அல்குர்ஆன்)
எனவே இஸ்லாம் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென்று யாரையும் பலவந்தப் படுத்துவதில்லை. எனினும் அதிலுள்ள நற்பயன்களை உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது. அன்புள்ள நன்பர்களே உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள். உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். எந்த மார்க்கம் சிறந்தது. எந்த மார்க்கம் அனைத்து விதத்திலும் நடைமுறைச் சாத்தியம் மிக்கது ஒவ்வொரு மனிதனும் சுய கௌரவத்துடன் உயர்சாதி- கீழ்சாதி ஆண்டான் அடிமை போன்ற பிறப்பியல் வேறுபாடுகளை மறந்து சமத்துவத்துடன் வாழ எம்மதம் வழி வகுக்கின்றது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் நாடினால் உண்மை உங்களுக்கும் புலப்படலாம். நீங்களும் நேரியஇசீரிய ஓரு மார்க்கத்தை- சிறந்த வாழ்க்கைத் திட்டத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளலாம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
- முஹம்மது ஜலீல் மதனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...