சனி, ஜனவரி 28, 2012

சந்தேகம் என்னும் கொடிய நோய்

உலகிலே சந்தேகத்திற்கு மருந்து இல்லை!
அப்படி கண்டுப்பிடிக்க முயற்சி செய்பவரும் சந்தேகத்திலே சந்தேகப்பட்டு நாட்டில் சமாதியான கதைகள் பல!

சந்தேகம் என்பது மிகப்பெரிய கொடிய நோய். இந்த சந்தேகநோய் எவ்வித கிருமிகள் இல்லமாலே ஒருமனிதனுக்கு பிரவிலோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய மிகப்பெரிய விசக்கிருமி. சந்தேகப்படும் மனிதனும், சந்தேகத்திற்குரிய நபரும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் இவ்வுலகில் என்பதை நாம் அறிவோம். இந்த சந்தேகம் ஒவ்வொருமனிதனையும் மரணக் குழிவரை அழைத்துச் சென்ற உண்மைச்சம்பவங்களும் நிறைய உண்டு. நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்துகொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமான விசயம். ஆனால் நம்மில் பலர் சம்பந்தமில்லாமலே சந்தேகப்பட்டு வாழ்வை தொலைத்த அன்பர்கள் அதிகமதிகம். இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு.

சந்தேகப்பட வேண்டியதுதான். அது எந்த மாதிரியான விசயம் என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டு, இதனால் எவ்வித பாதிப்புகள் வராதா? என்பதை அறிந்தபிறகு சந்தேக நோக்கத்துடன் ஆராய்வது நலம். சும்மா உப்பு சப்பில்லாதா விசயத்திற்கு சந்தேகப்பட்டு, நாமும் மனமுடைந்து மற்றவர்களையும் ஆயுதம் இல்லாமல் துன்புறுத்தி வேதனைப்படுவதில் புண்ணியமில்லை. இதனால் யார்க்கும் பயனில்லை சந்தேகப்படுவரும், சந்தேகத்திற்குரிய நபரும் மொத்தத்தில் இருவருக்கும் பாதிப்பே!

ஒருவர் : தன் மனைவியையோ அல்லது பிள்ளைகளையோ எந்த நேரம்பார்த்தாலும் நடக்காத தவறை என்னி சந்தேகப்படுவது! இதனால் பலரின் மனைவிமார்கள் எதிர்காலத்தை நினைத்து, அனுசரித்து வாழும் தியாக பத்தினிகளும் உண்டு. சிலரின் மனைவி இதுபோன்ற அவலங்களை தாங்கக்கூடிய தைரியமில்லாமல் வேண்டாம் என்று விலக்கு அளித்துவிட்டு தந்தையின் வீட்டில் தஞ்சம்புகுந்தவர்களும் ஏராளம். சிலரின் பத்னிகள் தேவையில்லாமல் மரணத்தை சுவைத்தவர்களும் உண்டு.

சிலரின் பிள்ளைகள் பெற்றவர்களை கண்டுகொள்வதில்லை. சிலரின் பிள்ளைகள் ரோஷம் தானமுடியாமல் முட்டாள்தனமாக தற்கொலையும் செய்துக்கொள்கிறார்கள். சிலர் நண்பர்களின் / தாய்மார்களின், உறவினர்களின் நல்ல ஆலோசனையின்பேரில் ஆரோக்கியமாகவும் வாழ்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

அதிகமாக சந்தேகப்படுவது ஆண்களே! இவர்கள் அனைத்து விசயத்திலும், அனைவரிடமும் சந்தேகப்படுவார்கள். ஆனால் பெண்களின் சந்தேகம் இருக்கிறதே! அட டா...! என்னத்தே சொல்ல...! இவர்களின் சந்தேகம் ஒருமனிதனை உடனே அழித்து இவ்வுலகத்தை விட்டே விரட்டிவிடும். பெரும்பாலும் பெண்களின் சந்தேகம் கணவன்மீது மட்டுமே! (வேற ஒரு சக்காலத்தியை கூடி வந்துவிடுவாரோ என்கிற சந்தேகம் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது)

ஒரு மூன்றுபேர் ஓர் இடத்தில் இருக்கிறோம்! அப்போது ஒருவிசயம் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதில் மூன்றுபேரில் ஒருவர் ஏதாவது வேலையாக சென்றுவிட்டு வந்துவிடுவார் அப்போது இரண்டுபேர்கள் பேசியதை நிறுத்திவிட்டு மூன்றாமவர் வந்தவுடன் வேற செய்தியை பேசுவார்கள். இந்த இரண்டுபேரும் பேசியது புண்ணியமில்லாத செய்தாக இருக்கும் அல்லது இவருக்கு தெரிந்த விசயமாக இருக்கும் ஆனால் மூன்றாமவருக்கு மனதில் ஒரு சந்தேகம் வர ஆரம்பித்துவிடும். இப்படியே ஒவ்வொரு விசயத்திலும் சந்தேகப்பட்டு அனைத்தையும் தொலைத்துவிடுவார்கள்.

அதேமாதிரி சும்மா ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டு போகிற, வருகிறவர்களை, தவாறனவர்களை விட்டுவிட்டு நல்லவர்கள் சந்தேகப்படுவது. இதுமாதிரியான பல விசயங்களின் நாம் பார்க்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால் நாட்டில் உள்ள காவல்துறையே அப்பவிமீது தான் சந்தேகப்படுகிறது. இந்த அநியாய சந்தேகத்தினால் பலர் தற்கொலையும் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் மற்றும் சிறையிலும் அநியாயமாக வாடிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் உண்மையை விட்டு பொய்யை உண்மையாக்க முயற்சிப்பதே. ஏனென்றால் அந்த பிரச்சனையை முடிவுகட்டவே இதுபோன்ற அவலநிலை.

மனிதனுக்கு சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்படமாட்டார்கள். இவர்களின் தேவையான சந்தேகத்தால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சதேகப்படுபவர்கள் தினம் தினம் நினைத்து நினைத்து தானகவே தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.

மரணம் என்பது இறைவனின் நாட்டமே. யார் யாருக்கு வாழ்க்கை எப்படி என்பதை படைத்த இறைவன் நாம் பிறக்கும்போது தீர்மானித்து விடுகிறான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதுவே ஒவ்வொருமனிதனின் வாழ்க்கை விதி.

சந்தேகப்படுவது ஓர் நல்ல விசயமில்லை. முதலில் நம்மை நம்பவேண்டும். நம்மீது நம்பிக்கை இல்லையோ நாம் எதன்மீதும் நம்பிக்கை கொள்ளமாட்டோம். இதனால் இல்லறம், குடும்பம், உறவு, பிழைப்பு அனைத்தும் பறிபோய் நிம்மதியற்று நாம் காணப்படுவோம். கடைசியில் தாமாகவே நொந்து நொந்து வீணாகி எதற்கும் புண்ணியமில்லாமல் மடியவேண்டிய நிலை வரும்.

ஆகவே! அல்லாஹ்வின் உதவியால் முதலின் உங்களை நம்புங்கள் அதன்பிறகு உங்களின் எதிரே இருப்பதின்மீது நம்பிக்கை வரும். அப்போதுதான் உங்களின் வாழ்வும் வளமாக இருக்கும். நாம் வாழ்வதற்காகவே இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரவேண்டும். நம்பிக்கையோடு இனிதே தொடங்குங்கள் புதிய வாழ்க்கை...!

அனாவசியமாக அவ நம்பிக்கை வைத்து உங்களின் வாழ்க்கையில் அல்லல்படவேண்டாம்...! நம்பிக்கைக் கொண்டார்கள் நலமுடன் வாழ்வார்கள் என்று வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கிறான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்...! இன்ஷா அல்லாஹ்..!

சந்தேகமில்லாமல் சந்தோசத்துடன் மனைவி, பிள்ளைகள், உறவுகளின் குதுகாளியுங்கள்...!

சந்தேகம் வேண்டாம்...! அது ஒரு விசக்கிருமி!
நம்பிக்கை உங்களின் புத்துணர்வு, தைரியத்தின் ஊட்டச்சத்து என்பதை என்னி அழகாக வாழுங்கள்...! இன்ஷா அல்லாஹ்...!

Iniyavan Thanjai

1 கருத்து:

  1. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...