சனி, ஜனவரி 14, 2012

சூனியம் ,கைரேகை ,ஜோசியம் ,ஜாதகம் ,குறி ,பால்கிதாபு

* சூனியம் ,கைரேகை ,ஜோசியம் ,ஜாதகம் ,குறி ,பால்கிதாபு பார்ப்பதில் இணைவைத்தல் :


சூனியம் இறை நிராகரிப்புசசெயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் எந்த பயனையும் பெற்றுத்தராது தீமையை விளைவிக்கும் பாவச்செயலாகும்.

”அவர்களுக்கு எந்தப்பயனையும் தராத துன்பம் தரும் ஒன்றை -சூனியத்தைக்- கற்றுக்கொண்டார்கள். அல்குர்ஆன் 2:102

”சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெறமாட்டான். அல்-குர்ஆன் 20:69

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தர்ர்கள்:-
சூனியம் மற்றும் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென நம்புபவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தை நிராகரித்துவிட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

‘யாரேனும் குறிகாரனிடம் வந்து ஏதேனும் கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம்.

* கிளி ஜோஸியம்,பறவை சகுனம் பார்ப்பதும் இணைவைத்தலாகும்.

பறவைகள் போடும் சப்தத்தையும்,செயலையும் வைத்து நல்ல சகுகுனம்,அபசகுனம் பார்ப்பது, நல்லது கெட்டதை தீர்மானிப்பது அன்றைய அரபிகளின் வழக்கமாக இருந்தது.
கூண்டிலிரந்து பறவை வலது பக்கம் பறந்தால் நல்லது நடக்கும். வெற்றி ஏற்படும் எனவும், இடப்பக்கம் பறந்தால் தீமை ஏற்படும்,தோலவி ஏற்படும் என்நும் நம்பினார்கள். இன்றும் நம்மிடையே பறவைகளை வைத்து நல்லது கெட்டதைத் தீர்மானிப்பதையும் பார்க்கிறோம்.

காக்கை கரைந்தால் விருந்தினா வருவர்.ஆந்தை சப்தமிட்டால் யாராவது மரணமடைவர்.பூனை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுப்போகும் என்றெல்லாம் நம்புகின்றனர்.

பறவைகள் பறப்பதற்கும், சப்தமிடுவதற்கும் மனிதர்களின் வாழ்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக ‘ பறவை சகுனம் கிடையாது.’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). ஆதாரம் : புகாரி எண்கள்: 5753, 5754, 5755, 5756, 5757

மேலும் ‘ சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும்’ என்றார்கள். (ஆதாரம் : முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி)

* நாள்,நட்சத்திரம், ராவு காலம் பார்ப்பதும் ஷிர்க் இணை வைத்தலாகும்.

இன்று இந்தக்கள் மார்கழி மாதத்தை பீடையாகக் கருதுவதைப் போல அன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக்கருதி அதில் எந்த லேலை செய்தாலும் பீடையே சூழும் என்றும் அரேபியர்களின் நம்பினர்.செவ்வாய் புதன் கிழமைகளைப் பீடையாகக் கருதினர்.

எனவே நாள், மாதத்திற்கு நல்லது கெட்டதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது என்பது நமது நம்பிக்கையாகும். நபி (ஸல்) அவர்கள்
” ஸஃபர் மாதம் பீடை என்பது கிடையாது” என்றார்கள் (அறிவிப்பவர்:அபூஹ~ரைரா (ரலி), நூல் : புகாரி)
காலத்தை குறை கூறுவதும் ஷிர்க் அகும்.இது கெட்ட காலம்!இது கெட்ட நேரம்! காலம் என்னை வஞ்சித்து விட்டது! இயற்கை சதி செய்த விட்டது! என்று மக்கள் குறைபடுவதைக் காணுகிறோம். காலத்தையும் நாளையும் எசுவது இறைலனை ஏசுவது போலாகும். நபி (ஸல்) அருளியதாக அபூ ஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான், ஆதமின் மகன் என்னை செய்கிறான்.அவன் காலத்தை திட்டுகிறான். நானெ காலத்தைப் படைத்தவன்.எனத கையில் தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே இரவு பகலை இயக்ககிறேன். (அதாரம்: புகாரி,முஸ்லிம்)

* நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள் நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என நம்புவது குஃப்ரு இறை நிராகரிப்பாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-

‘அல்லாஹ்வின் கிருபையாலும் அருளாலும் மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார்.இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது எனக்கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
நாளிதழ், வாரஇதழ், மாதஇதழ்களில் வெயியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவதும் ஷிர்க் ஆகும்.தொலைக்காட்சியின் எல்லா சேனல்களிலும் ராசிபலன்கள் பற்றிய நிகழ்சிசிகள் இடம்பெறாத நாட்களே இல்லை.இவற்றைப்படிப்பதும்,பார்ப்பதும் பெரும் கற்றமாகும்.ஏனெனில் இவை ஷிர்கிற்கு வழி வகுத்துவிடும்.

* தாயத்து தகடுகளில் பலன் இருப்பதாக நம்புவதும் இணைவைத்தலாகும்.

சூனியக்காரன், ஜோஸ்யக்காரனின் ஆலோசனைப்படி கழுத்தில்,கையில்,இடுப்பில், தாயத்துகளையும் வீடுகளில் கடைகளில் தகடுகளையும் நம்மில் பலர் தொங்க விடுகிறார்கள். இதனால் சோதனைகளிலிருந்தும் திருஷ்டிகளிலிருந்தும் பாதுகாப்புப்பெற முடியும் என நம்புகிறாாகள். இதைப்போன்றே செல்வம் பெருகவும்,வளவாழ்வு அமையவும் பலவடிவங்களில் ராசியான கற்களில் மோதிரங்களும் அணிந்து கொள்கின்றனர். இவையனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு எதிரான கொள்கைகளாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’ (அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்)

தாயத்து, தகடு, தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகிறவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து மன்னிக்க முடியாத பெரும் பாவியாகிறான்.

புதுமனை,கட்டிடங்கள் கட்டும்போது அங்கே திருஷ்டிக் காப்பிற்காக பூசணிக்காய், கொலுக்கள், பொம்மை உருவங்கள் போன்றவற்றை தொங்கவிடுகிறார்கள்.இவையும் ஷிர்க் ஆகும்

1 கருத்து:

  1. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...