வெள்ளி, நவம்பர் 04, 2011

மனிதநேய மக்கள் கட்சியின் பயணத்தில்

மனிதநேய மக்கள் கட்சியின் பயணத்தில் 2.11.2011 ஒரு மகிழ்ச்சியான நாளாகும். உள்ளாட்சி தேர்தலில் மமக சார்பில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒருநாள் நிர்வாக பயிற்சி முகாமும், சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேகமூட்டத்துடன் கூடிய மழைச்சாரலும், குளிர்ந்தகாற்றும், சென்னை மாநகரை இதமான ஒரு சூழலில் பரவசபடுத்தி கொண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளை தலைமை நிர்வாகிகள் மகிழச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்த, அவர்களோ இனம் புரியாத சந்தோசத்தில் திளைக்க; நிகழ்ச்சி நடைபெற்ற சிராஜ் மஹால் உணர்வுபூர்வமாக இருந்தது.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். புகழ்பெற்ற ஒய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அபுல்ஹசன் அவர்களும், உள்ளாட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற திரு.தாஸ் அவர்களும், பத்தாண்டு கால நேரடி நிர்வாகத்தை பெற்ற சாத்தனி சிராஜ் அவர்களும் வகுப்புகளை எடுத்தார்கள்.

உள்ளாட்சி நிர்வாகம் என்றால் என்ன? மன்ற கூட்டங்களை நடத்துவது எப்படி? நிதியை எப்படி செலவு செய்வது? அதிகாரிகளை பயன்படுத்துவது எப்படி? மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது எப்படி? தங்கள் வார்டுகளில் செய்யகூடிய பணிகள் என்ன? என்னவெல்லாம் அதிகபட்சமாக செய்ய முடியும்? என பல்வேறு ஆக்கபூர்வமான விஷயங்களை குறித்து அவர்கள் விளக்கியபோது மமக பிரதிநிதிகள் அனைவரும் மாணவர்களாக மாறிபோனார்கள்.

இந்நிகழ்ச்சியை பதிவு செய்ய வந்த பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் நடத்தியது இல்லை என்று பாராட்டினார்கள். மமக உண்மையிலேயே ஒரு வித்தியாசமான மாற்று அரசியல் கட்சிதான் என வியந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதலில் 156 பேர் தான் மமக சார்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டிருந்தது. பிறகு கிராமங்களில் இருந்து விடுபட்ட எண்ணிக்கையும் சேர்த்து 165 என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற அன்றைய தினம் இன்னொரு ஏழு பேர் எங்கள் பெயரை ஏன் மக்கள் உரிமையில் போடவில்லை என முறையிட்டு சான்றிதழ்களை கேட்க தலைமை நிர்வாகிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். இது குறித்து சில மாவட்ட நிர்வாகிகளை பகிரங்கமாக கண்டித்து பேசிய பேராசிரியர், தலைமைக்கு ஒழுங்கான தகவல்களை அனுப்பததால் ஒருங்கிணைந்த முழு பட்டியலை ஒரு சேர வெளியிட முடியாமல் போனதை சுட்டிகாட்டினார்.

35 பெண்கள், 2கிறிஸ்தவர்கள், 9 இந்துக்கள் உட்பட மமகவின் 172 வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மதியம் விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது. புது ரத்தம் பாய்ந்த உணர்வோடு மக்கள் பணியாற்ற புறப்பட்டனர் மமகவின் சொந்தங்கள்.

posted by;; Irainesan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...