வியாழன், மார்ச் 08, 2012

கப்ரின் மேல் எழுதக் கூடாது:



அடக்கத் தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது.


சில ஊர்களில் இதற்காகக் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வசதி படைத்தவர்கள் மட்டும் இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கப்படுகின்றனர்.


சமரசம் உலாவும் அடக்கத் தலத்திலும் இறந்த பிறகு கூட அநியாயமான இந்தப் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது.


இப்படி ஒவ்வொருவரும் இறந்த பிறகு கல்லை நட்டி வைத்து கல்லறை உருவாக்கி கொண்டால்,கிருஸ்துவ நாடுகளில் கல்லறைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டதை போன்று நம் நாட்டிலும் இறந்தவர்களை அடக்க இட பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.

(மர்ஹீம்:பழனி பாபா அடக்கஸ்தலத்தில் கல்லை நட்டு வைத்திருப்பது தான் வருத்தம் அளிப்பதாக உள்ளது)

கப்ருகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: அபூதாவூத் 2807

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...