சனி, பிப்ரவரி 18, 2012

பொய்சாட்சி கூறுவது மார்க்கத்தை விலை பேசியது போன்றாகும்:



பொய்சாட்சி கூறுவது மார்க்கத்தை விலை பேசியது
போன்றாகும்:

[ 'சாட்சி கூறுவதை மறைக்காதீர்கள் சாட்சியை மறைப்பவர்
அவரின் உள்ளத்திற்கு பாவம் செய்தவர் ஆவார்' (அல்குர்ஆன்)

சாட்சியை மறைப்பதையே இறைவன் எச்சரித்துள்ளான் எனும்
பொழுது 'பொய்சாட்சி' கூறுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை
எண்ணிப்பாருங்கள்.

உலக ஆதாயத்தை அடைய பொய் சாட்சி கூறுபவன் மறுமை நாளில் நீதிபதிக்கெல்லாம் நீதிபதி, அரசனுக்கெல்லாம் அரசனான
அல்லாஹ்விற்கு முன் என்ந பதில் சொல்வான்? அவனின் அனைத்து செயல்களையும் நாவும் மற்ற உறுப்புக்களும் சாட்சிக்கூறும் அந்த நிலையை எண்ணிப்பாருங்கள்.

'பொய்சாட்சி கூறுபவனின் பாதம் (மறுமையில்) நிற்கும் இடத்தை
விட்டும் நகராது. இறைவன் அவனுக்கு நரகத்தை கடமையாக்கும்
வரை' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

அருமைத் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் 'பாவங்களில் மிக பெரியதை அறிவிக்கட்டுமா?' என்கிறார்கள்.
அருமை தோழர்கள் 'கூறுங்கள்' என்றனர்.

'இறைவனுக்கு இனைவைத்தல், பெற்றோருக்கு மாறு செய்தல்' என்று
கூறியபின் சாய்ந்து அமர்ந்தவர்களாக 'அறிந்துக்கொள்!
பொய்சாட்சி, பொய்சாட்சி, பொய்சாட்சி...., என்று கூறிக்கொண்டே
இருந்தனர் நாங்கள் 'போதும், போதும், என்று கூறும்வரை.]

பொய்சாட்சி கூறுபவன் வழிக்கெட்டவனாகவும், வழி கெடுக்கக்
கூடியவனாகவும், பொய்யானாகவும், தீங்கு இழைப்பவனாகவும்
இருக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் ஸுப்ஹு தொழுகையை நிறைவு
செய்த பின் எழுந்து நின்றவர்களாக 'பொய்சாட்சி இறைவனுக்கு
இனைவைப்பதற்கு சமம்' என மூன்று தடவை கூறியபின் கீழ்க்கண்ட
இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

'விக்கிரக ஆராதணையின் அசுத்தத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளுங்கள். பொய்யான வார்த்தைகளிலிருந்தும் தவிர்த்துக்
கொள்ளுங்கள். அல்லாஹ்விற்கு எதையும் இணை வைக்காது
அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து வழிப்பட்டு
விடுங்கள்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: எவரேனும் தன்னுடைய தீய செயலுக்குப் பின்பு (கைசேதப்பட்டு தன் குற்றத்தை)
சீர்த்திருத்திக் கொணடால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுகிறான்' (அல்குர்ஆன் 6:39)

எனவே எவரேனும் பொய்சாட்சி கூறியிருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து கொள்ளுங்கள் அத்துடன்
பொய்சாட்சியால் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்யவேண்டிய
கடமையும் உண்டு. ஏனெனில் மனிதர்களுக்கு இழைக்கப்படும்
பாவத்திற்கு அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டு அவர் மன்னித்தாலொழிய அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்கிறது
இஸ்லாம். மேலும் மேற்கண்ட வசனத்தில் 'தன்குற்றத்தை சீர் திருத்திக்கொண்டால்....' எனக்கூறுவதன் மூலம் பொய்சாட்சியால்
பாதிப்புக்குள்ளானவருக்கு பரிகாரம் செய்யவேண்டிய கடமையும்
பொய்சாட்சி சொன்னவருக்குண்டு என்பதை மறந்திட வேண்டாம்.

இறைநம்பிக்கையாளர்களே!

(நீங்கள் எவருக்கு எதிராகச் சாட்சி கூறுகின்றீகளோ) அவர் செல்வந்தராக(வோ), அல்லது ஏழையாக(வோ) இருந்தாலும் சரியே
ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில்)
மிக மேலானவன்

எனவே, நீதி செய்வதை விட்டு உங்கள் மனோ இச்சைகளை பின்பற்றாதீர்கள்.

இன்னும், நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும், அல்லது
புறக்கணித்து விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்கின்ற
வற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்)

நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாகா(வும்), உங்களுக்கோ
அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ, அல்லது (உங்கள்) உறவினர்களுக்கோ பாதகமாக இருப்பினும் சரியே, அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்.
Like · · Share

Abdul Rasheed Mohamed, Almowilath Islamiclibrary and 9 others like this.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...