சனி, செப்டம்பர் 28, 2013

காசு இல்லாதவன்


காசு இல்லாதவன்
மெழுகுவத்தி ஒளியில் உண்கிறான்
தன் வீட்டில்.

காசு உள்ளவன் விலைகொடுத்து
காண்டில் லைட் டின்னரில் உண்கிறான்
நட்சத்திர உணவகத்தில்.

காசு இல்லாதவன்
வீட்டுக்கு வெளியில்
நட்சத்திரங்கள் கொண்ட வானத்தை பார்த்துக்கொண்டு உறங்குகிறான்.

காசு உள்ளவன்
வீட்டு விட்டத்தில்
நட்சத்திர சுவரொட்டிகளை பார்த்துக்கொண்டு உறங்குகிறான்.

காசு இல்லாதவன்
வயிறை வளர்க்க ஓடி உழைக்கிறான்.

காசு உள்ளவன்
வயிறை குறைக்க ஓடி களைக்கிறான்.

உழைப்பை கொண்டு சாதிப்பான்
காசு இல்லாதவன்.

சாதிப்பவனை பணத்தை கொண்டு வாங்குவான்
காசு உள்ளவன்.

காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு கிடைப்பது நிச்சயம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...