செவ்வாய், ஜனவரி 29, 2013

கமல்...நீ சிந்திக்க .... நீ சீர்பட... நீ செயல் பட


சிதறி கிடக்கும் சிறுபான்மையினரை
ஒரு முகப் படுத்திய .....கமலுக்கு நன்றி !

சமத்துவத்தை போதிக்கும் சன் மார்கத்தை
சாமானிய மக்களையும் - திரும்பி பார்க்க செய்த
கமலுக்கு நன்றி !

உறங்குகின்ற முஸ்லீமின்
உணர்வுககளை விஸ்வரூபம் - எடுக்க செய்த
கமலுக்கு நன்றி !

கமல்...நீ சிந்திக்க .... நீ சீர்பட... நீ செயல் பட
உம்மோடு ஒரு சில வரிகளாய் நான் !

இந்திய இறையாண்மையை
இரு கரமாக கொண்டவர்கள் நாங்கள்!
இந்திய ஜனநாயகத்தின்
மொத்த உருவம் நாங்கள்!

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக
எங்களின் எண்ணிக்கையை விட
மற்றவர்களின் தியாகத்தை விட
எங்களின் தியாகம் பெரிது !

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு
எங்களின் எண்ணிக்கையை விட
மற்றவர்களுக்கு ஏற்படும் அநீதியை விட
எங்களுக்கு ஏற்படும் அநீதம் பெரிது...!

மோடியின் கைகளை முகர்ந்தது பார்
முகமுடி கிழிய இரத்த வாடை வீசும்!

அத்வானியின் பதங்களை பார்
ரத யாத்திரையின் சுவடுகள் அல்ல...
ரத்த ______ சுவடுகள் தெரியும்!

இரத்தத்தின் ஈரம் தோயாத மண்ணை
ஈராக் - ஈரானுக்கும் சென்று பார் !

ஒண்ட வந்த ஓநாய்
உடலை குதறி - உயிரை குடிக்கிற
படுபாதக செயலை பாலஸ்தீனில் பார் !

அன்பே கடவுளென்று போதிக்கும் பித்ரு (பிசாசு)க்கள்
ரத்த வடைக்காக...
பித்து பிடித்து அலைவதை பர்மாவில் பார்!

எங்கும் எம் உறவுகளின் கதறல்கள் !

உயிர்கள் – உடமைகள் பறிபோன பின்னும்
நீதிக்காக...வீதியிலே நாங்கள்!

நீதியின் கண்களை கட்டிய பின்னும்
நீதிக்காக மௌனத்தோடு காத்திருக்கும்

நாங்கள் ஒரு தீவிரவாதி தான்?

எங்கள் ரத்தத்தை குடித்து
எங்களையே குடிகாரன் என்ற போதும்!

எங்கள் பெண்களின் கற்ப்பைச் சூறையாடி
எங்களையே விபச்சாரி என்ற போதும்!

எங்களை கொன்று விட்டு
கொலைகாரன் செத்துவிட்டான் என்ற போதும்!

எங்கள் உடமைகளை கொள்ளை அடித்து
எங்களை கொள்ளையர்கள் என்ற போதும்!

இவ்வளவு நடந்தும் எண்களின் மௌனம்
உலகிற்கு பயம் என்றால்...

இறைவன் இருக்கிறான்.....
இறைவன் இருக்கிறான்....

பயந்து கொள்ளுங்கள்....
பயந்து கொள்ளுங்கள்.....

இறை நிராகரிப்போரை வெட்டுவதை விட
யுத்தத்தில் அவன் கையால் வெட்டபடுவது உயர்ந்தது - என்று
உயிர் மூச்சாய் கொண்டிருக்கும் நாங்கள்...
உங்களின் பாதுகாப்பிற்கும் சேர்ந்தே வாழ்கிறோம்.!

எம்மை அழிப்பது – உன்
அழிவிற்கு நீயே காரனமாகிறாய்...!

தென்னையோ ---- நெல் கொள்ளையோ!
இடம் பெயர்ந்தால்தான் விளைச்சல்.
வா...கமல்..... வா

சனி, ஜனவரி 26, 2013

உடல் இளைத்து இருப்பததா அழகு?


உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலை ஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சுக்கு தண்ணீர் உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும். அருகம்புல் கசாயம் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமானவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும். முளைக்கட்டிய பயறு பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும். சோற்றுக்கற்றாழை தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். பேரிச்சை சத்துக்கள் தேவையான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும். முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

குட்டிக்கதை


மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.

அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

--இப்படிக்கு உன் அன்புக் கணவன்.

வெள்ளி, ஜனவரி 25, 2013

*பெருமை - சொர்க்கம் செல்ல தடையாகும்!***

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில்
நுழையமாட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர், 'தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க
வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)' என்று
கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

"அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான்.

தற்பெருமை என்பது,

(1) உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும்

(2) மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்;
அத்தியாயம்: 1, பாடம்: 1.39, எண் 131)

அன்பு சகோதர, சகோதரிகளே! மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் விளங்கிக் கொள்வது
என்னவென்றால், யாருடைய உள்ளத்தில் *அணுவளவு பெருமை *இருக்கின்றதோ *அவர்
சுவனம் செல்ல இயலாது*; மாறாக *நரகத்திற்கு தான் செல்ல நேரிடும்*
என்பதாகும்! (அல்லாஹ்
நம் அனைவர்களையும் காப்பானாகவும்.)

நபி (ஸல்) அவர்கள், பெருமையை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். அவற்றில்
முதலாவதாக உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதையும் இரண்டாவதாக மக்களைக் கேவலமாக
மதிப்பதையும் குறிப்பிடுகின்றார்கள். இவ்விரண்டையும் பற்றி சுருக்கமாகப்
பார்ப்போம்.

*1) **உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்து பெருமையடிப்பது**!***

இது ஒருவன் தன்னிடம் குடிக்கொண்டிருக்கின்ற பெருமையின் காரணமாக உண்மையையும்
சத்தியைத்தையும் அகம்பாவமாக மறுப்பதைக் குறிக்கும். இவ்வாறு சத்தியத்தை
மறுப்பவர்களை இரு பிரிவினர்களாகப் பிரிக்கலாம்.

*முதலாமவர்:***

மக்களை நேர்வழிப்படுத்துவற்காக இறைவன் இறக்கியருளிய உண்மையும் சத்தியமுமான
அல்குர்ஆனை முற்றிலும் மறுத்து ஆணவமாகப் பெருமையடிப்பவராகும். இந்த வகையில்
பெருமையடிப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்களாவார்கள். இதற்குரிய தண்டணை மறுமையில்
நிரந்தர நரகமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்.

*இரண்டாமவர்:***

தம் முன்னோர்களின் வழிமுறையையும் பாரம்பரியப் பெருமையையும் பேசி
ஆணவமாகவும், பிடிவாதமாகவும்
உண்மையும் சத்தியமுமான அல்குர்ஆனின் வசனங்களில் சிலதையோ அல்லது ஆதாரப்
பூர்வமான நபிவழிகளில் சிலதையோ மறுப்பது ஆகும். இதுவும் அல்லாஹ் மற்றும் நபி
(ஸல்) அவர்கள் கொண்டு வந்த உண்மைகளில் சிலவற்றை மறுக்கின்ற காரணத்தினால் ‘
கிப்ர்’ என்று சொல்லப்படக்கூடிய பெருமையைச் சார்ந்ததாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக *எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த
ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ**, **அவர்களுடைய இருதயங்களில் பெருமை
தவிர (வேறு எதுவும்) இல்லை**;** *ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும்
மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக
அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன். (40:56)

நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

"யாருடைய உள்ளத்தில் *அணுவளவு** **தற்பெருமை* இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில்
நுழையமாட்டார்”

சகோதர, சகோதரிகளே! பெருமை விசயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும். இறைவனின் வசனங்களோ அல்லது பெருமானாரின் நற்போதனைகளோ நம் முன்னால்
எடுத்து வைக்கப்படும் போது அவற்றை மிகுந்த எச்சரிக்கையுடன் படித்து சிந்தித்து
அதன்படி செயல்பட முன்வரவேண்டும்! சொல்பவர் நம்மை விட வயதில் சிறியவரா அல்லது
பெரியவரா? அவர் படித்த மேதையா? என்பதில் கவனம் செலுத்தாமல் சொல்லப்படும்
விசயம் அல்லாஹ்வின் வார்த்தையாகவும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையான ஆதாரப்
பூர்வமான ஹதீஸ்களாக இருக்குமேயானால் அவைகள் உண்மையும் சத்தியமும் ஆகும்
என்பதில் எள்முனையளவும் சந்தேகம் நமக்கு வரக்கூடாது! அவர்கள் கூறுவது சரியான
வேத வசனங்கள் தானா என்பதை வேண்டுமானால் இன்று கிடைக்கின்ற பல்வேறு தமிழ்
மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் உதவியைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.
அவ்வாறு சரிபார்ப்பதும் குழப்பமான இக்காலக்கட்டத்தில் மிக அவசியமாகவே
இருக்கின்றது!

அவ்வாறு எடுத்து வைக்கப்படுகின்ற அல்-குர்ஆன் வசனங்களோ அல்லது ஹதீஸ்களோ
சத்தியமான உண்மை என்று தெரிந்தும் மறுத்தோமேயானால் அல்லது பல தலைமுறைகளாக நம்
முன்னோர்கள் செய்து வந்ததை மறுக்கின்ற, ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த
காளான்களான’ இவர்களுக்கு என்ன தெரியும் என்று அகம்பாவமாக சத்திய வேதமான
அல்குர்ஆனின் வசனங்களையும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களையும் இவர்கள்
மறுப்பார்களேயானால் இவர்களின் உள்ளங்களிலும் ‘கிப்ர்’ எனும் அந்தப் பெருமைக்
குடிகொண்டிருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை! இவர்கள் நபி (ஸல்)
அவர்களின் *'**யாருடைய
உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் *நுழையமாட்டார்' என்ற
எச்சரிக்கையினை நினைவுப்படுத்திக்கொள்ளட்டும்.

எனவே அன்பு சகோதர, சகோதரிகளே! இறைவனின் சத்திய வேசனங்களையும் நபி (ஸல்)
அவர்களின் வழிமுறையாக நமக்குக் கிடைத்திருக்கின்ற ஆதாரப் பூர்வமான ஹதீஸகளையும்
நாம் பின்பற்றி வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த உண்மைகளை மறுத்து
பெருமையடிப்பவர்களின் கூட்டத்தில் நாம் ஒருபோதும் சேர்ந்துவிடக்கூடாது. இந்த
உண்மைகளை மறுத்து அல்லது இவ்வுண்மைகள் ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் போது
அதைப் பற்றிக் கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக அதைப் பற்றிய எவ்வித
அறிவுமில்லமாமல், *‘**இவர்கள் கூறினால் அது தவறாகத் தான் இருக்கும்**’* என்ற
ஷைத்தானிய சிந்தனையினால் ஏற்படுகின்ற அகம்பாவத்தினால் அவ்வுண்மைகளைப்
புறக்கணித்தோமேயானால் நம்மையும் அறியாமல் நாமும் அந்த பெருமையடிப்போரின்
கூட்டத்தில் சேர்ந்துவிட்டதாகத் தான் ஆகும்! அல்லாஹ் நம்மனைவர்களையும்
பாதுகாப்பானாகவும்.

*2) **மக்களை கேவலமாக கருதுவது:***

பெருமையில் இரண்டாவது வகையினராக நபி (ஸல்) அவர்கள் கூறியது, மக்களைக் கேவலமாக
கருதுவதையாகும். ஒருவர் தம் ஆடை மற்றும் காலனிகளை அழகாக வைத்துக்கொள்வதை
பெருமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும்.

இவ்வாறு அழகிய அல்லது தரமான பொருட்களையோ வைத்திருப்பவர், சாதாரணமான பொருட்களை
வைத்திருப்பவரைப் பார்த்து ‘அவர்களைவிட நான் மேலானவன்’ என்று கருதி அவர்களை
கீழ்த்தரமாகக் கருதினால் அங்கு பெருமைக் குடிகொண்டிருக்கின்றது என்பதை
அறிந்துக் கொள்ள வேண்டும்.

அது போல அதிக செல்வமுடையவர்கள் குறைவான செல்வமுடையவர்களைப் பார்த்து அவர்களை
கேவலமாக மதிப்பதும் பெருமையைச் சார்ந்ததாகும்!

மிக முக்கியமான இன்னொன்றை இங்கு மிக அவசியமாக குறிப்பிட்டேயாக வேண்டும்!
நமதூரில் இன்றும் கூட காணப்படுகின்ற வழக்கம், நமது முன்னோர்களுடைய காலத்தில்
பிழைப்பதற்காக நமதூரில் வந்து செட்டிலாகிவிட்டவர்களைக் கேவலாமக கருதி
பேசுவதாகும். *(இந்த சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்**; **ஏனென்றால்
சமுதாயத்தில் இருக்கின்ற தீமைகளைச் சொல்லிக்காட்டித் தான் திருத்த
வேண்டியதிருக்கின்றது).* பல ஆண்டுகளுக்கு முன்னால் நமதூரில் செட்டிலாகி
நம்மூர் மக்களாகவே ஆகிவிட்ட இவர்களை *'**பஞ்சுவெட்டி**'* என்றும்; *'**
பொழைக்கவந்தவன்**'* என்றும் அவர்களைக் கேவலமாகக் கருதி நமதூரின் முக்கிய
பிரச்சகைளில் அவர்களை ஒதுக்கி வைத்து, அவர்களின் நல்லது கெட்டதுகளில் கூட
பங்கெடுக்காமல் *(நானறிந்தவரை அவர்களின் மரணத்திற்கு சங்கு கூட அடிப்பதில்லை!
தவறிருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்)* நாங்களெல்லாம் *'**ஊர் உறவின்
முறை** **ஜமாத்தார்கள்**' *என்று பெருமை பேசி அம்மக்களை இழிவாகக் கருதுவதும்
இந்தப் பெருமையின் வகையைச் சார்ந்தது தான் என்பதை திட்டவட்டமாக அறிந்துக்கொள்ள
வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் உட்பட பல்வேறு முஹாஜிர்கள் மக்காவிலிருந்து மதினாவில்
குடியேறியவர்கள் என்பதையும் அந்த முஹாஜிர்களிடம் தான் மதீனாவாசிகளான
அன்சாரிகளை ஆளுகின்ற ஆட்சிப்பொறுப்பே இருந்தது என்பதை நாம்
மறந்துவிட்டோமா? வெளியூரிலிருந்து
நமதூருக்கு வந்தவர்களை ‘பஞ்சுவெட்டி’ என்பவர்கள் மக்காவிலிருந்து மதீனா
வந்தவர்களை என்னவென்பார்கள்? சகோதரர்களே! நாம் சிந்திக்கக்
கடமைப்பட்டிருக்கின்றோம்!

தமிழ் நாட்டிற்குள்ளேயே பிழைப்புக்காக ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊர் வந்தவர் '
பஞ்சுவெட்டி' 'பொழைக்கவந்தவன்' என்றால் ஆயிரக்காணக்கான மைல்கள்
கடல்தாண்டி, நாடுவிட்டு
நாடு வந்து இங்குள்ளவர்களிடம் அடிமையாக வேலைப்பார்க்கின்றோமே! நாம் எத்தகைய
பஞ்சுவெட்டிகள்?

இவ்வாறு பிற மக்களை ‘பஞ்சுவெட்டி’ என்றும் ‘பொழைக்கவந்தவன்’ என்றும் இழிவாகக்
கருதுவதன் மூலம் பெருமையடிப்பவர்கள், நபி (ஸல்) அவர்களின் *'**யாருடைய
உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் *நுழையமாட்டார்' என்ற
எச்சரிக்கையினை நினைவுப் படுத்திக்கொள்ளட்டும்.

அன்பு சகோதர, சகோதரிகளே! குலப்பெருமைப் பேசி மக்களை இழிவாகக் கருதுகின்ற
இத்தகையை ஜாஹிலியச் சிந்தனைகளை உடைத்தெரிவதற்காகவே நபி (ஸல்) அவர்கள் தமது
இறுதி ஹஜ்ஜின் போது பின்வருமாறு கூறினார்கள்:

“மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து
கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி
அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு
வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை
விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை
நிர்ணயிக்கும். நிச்சயமாக *அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர்
உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.**”* (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700,
அத்தர்கீப்
வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

அல்லாஹ் கூறுகின்றான்:

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில்
பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும்
நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.’ (அல்-குர்ஆன் 31:18)

* *

பெருமையடிப்பதன் விபரீதங்களை மேலும் அறிய பார்க்கவும்: தற்பெருமையும்
ஆணவமும்!http://suvanathendral.com/portal/?p=302>

அல்லாஹ் நம் அனைவர்களையும் பெருமையின் வாடைகூட நம்வாழ்வில் சேராது
பாதுகாப்பானாகவும்.

* *

புர்ஹான்.

ஞாயிறு, ஜனவரி 20, 2013

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !


கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்


என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.


என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது


என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்





கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்


என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்


என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள்

சிவந்த உள்ளங்கை


என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்


என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!


ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி


என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்


என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


வாய்




ஈறுகளில் இரத்தம் வடிதல்.


என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்


என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.


டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.


என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.


டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை


புதுச்சேரி: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதன், ஜனவரி 16, 2013

திருமணமான பெண் ஒருத்தி


திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். “இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.

இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார். காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார்.

“மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா?” என்று கேட்டார் தாயார். அதற்கு “அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி” என்று கூறினாள் மகள். “சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு?” என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, “ரொம்ப மென்மையாக இருக்கு” என்று கூறினாள் மகள்.

“முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல்” என்று கூறினார் தாயார். “கொஞ்சம் கடினமாக இருக்கிறது” என்று சொன்னாள் மகள்.

அடுத்தபடியாக “காப்பியை எடுத்து குடி” என்றார் தாயார். காபியை குடித்துவிட்டு, “ரொம்ப சுவையாக இருக்கிறது” என்று கூறினாள் மகள்.

“எதற்கு இந்த வேடிக்கை?” என்று தாயிடம் வினவினாள் மகள். அதற்கு பதில் அளித்த தாய், “மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில் தான் கொதிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது.

“இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது”.

“இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது”.

“காப்பியைப் பார். அது அந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது”.

“மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரி தான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.” என்று கூறினார் தாய்.

உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது.

தினந்தந்தி பேப்பரை எடுத்து படித்தேன். அதில் இந்த குட்டி கதை இருந்தது. தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் நினைவு மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது இந்த கதையை சொன்னார் என்று இருந்தது.

எங்களுக்கு புரிந்தது ஆனால் அம்மாவின் தொண்டர்கள் இனி கஷ்டங்கள் வந்தால் 3 பாத்திரங்களை எடுத்து வருவார்கள் இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியுமா ??? ( வடிவேலுவின் நண்பர்கள் ஜாமீன் தேடி கடலுக்கு போனது போல)

செவ்வாய், ஜனவரி 15, 2013

புதன், ஜனவரி 09, 2013

கேஸ் விபத்துகள் நடக்காமல் இருக்க நாம் கவனிக்கவேண்டியவை !!!


LPG சிலின்டர் நாம் வீடுகளில் தற்போது பயம் அற்று பயன் படுத்துகிறோம் . ஆனால் முந்தைய காலங்களில் LPG சிலின்டர் என்றாலே பயந்து பயன்படுத்தாமல் இருப்பார்கள் பலர் .காலப்போக்கில் அது பழகிப்போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( லிஃஉஎபிஎட் Petroleum Gas ) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . ஆனால அவ்வப்போது பல தீ விபத்துக்கள் நடைபெற்று கொன்று தான் இருக்கிறது . குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கூடசென்னையில் உள்ள வண்ணாரபேட்டையில் கியாஸ் கசிந்து நான்கு பேர் பலியானார்கள் மேலும் இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தார்கள் .இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய விடையங்கள் இருக்கிறது அதனை நாம் இங்கு பார்க்கலாம்

LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை நாம் பார்க்கலாம் .!!

LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும் . சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு . கீழ் உள்ள படத்தை பாருங்கள் .
இதுலே D13 இருக்கு, கவனிச்சீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?

இது வருசத்தை நாலாப் பிரிச்சு முதல் கால் பகுதியைக் குறிக்குது. ஜனவரி முதல் மார்ச் வரை

இது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2013 மார்ச் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ் இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.
காலாவதியானவைகளை இன்னொருக்கா அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம். இதைச் செய்ய எதாவது திட்டம் & குழு இருக்கணும் இல்லே?

சிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.
இதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.
சரி, எப்போ இது காலாவதின்னு தெரிந்துகொள்ளுவது ?
இங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.

The alphabets stand for quarters -
-- A for March (First Qtr)
-- B for June (Second Qtr)
-- C for Sept (Third Qtr)
-- D for December (Fourth Qtr)

சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும் . இதில் 4 ஆங்கில எழுத்துகள் ( A , B , C , D ) என்று வரும் . இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு ( மார்ச் வரை ) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை ) , மூன்றாம் காலாண்டு ( செப்டம்பர் வரை ) , நான்காம் காலாண்டு ( டிசம்பர் வரை ) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது . ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டுபண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது . அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது . ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG , சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் ( கசிவு ஏற்பட்டால் ) திறந்து வைப்பது நல்லது .

சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக ( vertically ) தான் வைக்க வேண்டும் . படுக்க ( Horizontally ) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி ( Like Rocket ) தள்ளப்படும் . அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .

வீடுகளுக்கு சிலிண்டர் மாத்தும்போது, நமக்கு வர்ற சிலிண்டரில் இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க.இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.
விபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம்.எதுக்கும் எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க

திங்கள், ஜனவரி 07, 2013

நீயா ! நானா !




ஆண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில்லை. ஆண்களின் பலம் அவர்களது வருமானம்
அவர்களது பலவீனம் அவர்கள் அதனை செலவு செய்வது .வருமானம் அதிகமாக இருக்க கடன் கேட்பார்கள் வருமானம் குறைவாக இருப்பின் நட்பும் பாசமும் மற்றும் மற்ற தொல்லைகளும் அதிகமாகும் என்பதால் அதனை மறைத்தே வைப்பார்கள். அலைப்பாயும் மனதை மறைப்பார்கள். மறைவாக அத்தனையும் நடக்கும். hypocrite இறைபக்தி ஒழுக்கமானவன் நம்பிக்கையாளன் இத்தனையும் இவனிடம் இருப்பதாக காட்டிக் கொள்வான். தவறான செயல்களிலிருந்து தப்பிப்பதில் திறமையாளன்

பெண்கள் பலசாலிகளா!
அனைத்தையும் மற்றவர்களிடம் 'சூது வாது. தெரியாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்பு மிகவும் வருந்துவார்கள்.
உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் அதிகமாக பெறுவது அனைத்தும் தாய் வழி வந்தவை.எடுத்துச் செல்வது கணவன் வீட்டிலிருந்து. மனதில் இச்சை இருப்பினும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆண்கள் அவர்களை தொடர வேண்டும் ஆனால் ஆணுக்கு தான் அடங்கி நடப்பதாக காட்டுவதில் திறமை அதிகம் . நம்பிக்கை இருக்கும் அதில் சந்தேகமும் உள்ளடக்கம். கண்ணீர் அவர்கள் சொத்து .அந்த சொத்து பல சொத்துகளை பெற வழி வகுக்கும்
இரகசியம் காப்பது குறைவு. நடிக்கவும் தெரியும் நேர்மையாக இருக்கவும் தெரியும்.

பி . கு: அனைத்தும் உண்மையாகிவிட முடியாது . ஒருவரின் கருத்து மற்றவருடன் மாறுபடும் . விவாதத்தில் வெற்றி தோல்வி இல்லை . இது விவாதமும் அல்ல .ஒருவர் மனதை ஒருவர் விவாதத்தால் மாற்றுவது இயலாதது.
உடன் வாழ்வோர் கருத்து உடன்பட்டால் உலகம் இயங்காது . ஆய்வும் ,தத்துவமும் விஞ்ஞானத்திற்கு வழி வகுக்கும் .
இன்றைய அரசியல் நாளைய சரித்திரம் . இன்றைய ஆய்வு விஞ்ஞானத்தின் முடிவு. காயிலிருந்து பழம் வரும்.பழம் நேரடியாக வராது.
கணவனும் மனைவியும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொடர்ந்து மகிழ்வாக வாழ்கிறார்கள்

குர்ஆனின் பெயர்கள்


“குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அப்பெயர்கள் வருமாறு:

எண் குர்ஆனின் பெயர்கள் வசன
எண்
1 அல் கிதாப் (திருவேதம்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது) 2:91
8 அல் கரீம் (கண்ணியமானது) 56:77
9 அல் முபீன் (தெளிவானது) 5:17
10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 2:151
19 அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) 6:92
25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103

மனிதனின் உடம்பில் ஒரு பாடி கிளாக்



வெள்ளி, ஜனவரி 04, 2013

புற்றுநோய் மற்றும் சக்கரை நோயை குணப்படுத்தும் ஒட்டக பால்



புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறது
விஞ்ஞானிகள் எலிக்கு புற்று நோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாத காலமாக எலிக்கு செலுத்தி வந்தனர் . எலி உடலில்/ இருந்த புற்றுநோய்
செல்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதியசெல்கள் உருவாகின, இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது.
ஒட்டக பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கபடும் இந்த மருந்து உடலில் நோய்-எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . இது புற்றுநோய் செல்களை அளித்து-விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.
இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே மனிதர்களுக்கும் இந்த-மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை சரியாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு இந்த\ மருந்தை செலுத்தி ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்
மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்Search similar articles

மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்

நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள்.

ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது.

ஒட்டகப் பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது.

இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது.

தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் தெரிந்திருந்த போதிலும், நகர்ப்புறங்களில் ஒட்டகப் பால் கிடைப்பதில்லை. தற்போது ஆர்எம்எஃப்-ன் சராஸ் கடைகளில் இது கிடைக்கிறது.

ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்எம்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத் தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் முக்கிய உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் சிறிது உப்புச்சுவை அதிகமாக இருக்கும். இப்போது அல் அய்ன் டெய்ரி நிறுவனம் ஒட்டகப் பாலில் இருந்து சுவையான ஐஸ் கிரீமைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளது. “இப்போது சந்தையில் இல்லாத ஒரு புது வகையான ஐஸ் கிரீமை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பல்வேறு சுவையுடன் கூடிய ஐஸ் கிரீம்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வருகிறோம். இது இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும்’ என்று அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் சயிஃப் அல் தர்மகி தெரிவித்தார்.
இந்த ஐஸ் கிரீம், பசும்பால் கலப்பு இல்லாமல் சுத்தமான ஒட்டகப் பால் மூலம் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!

சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...