சூனியம் பற்றிய விடயம் இன்று தமிழ் உலகில் மிகவும் பிரபல்யமாக பேசப் படுகிறது என்பதை அனைவரும் அறிந்ததே!!
அதன் அடிப்படையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநிலத் தலைவர் மௌலவி பீ ஜே அவர்கள் சூனியம் இல்லை என்ற தன்னுடைய வாதத்தை நிலை நிறுத்த 'சூனியத்தை நம்புபவன் சுவனம் நுழைய மாட்டான்' என்ற வாசகத்தில் முஸ்னத் அஹ்மத் இல் வரும் 26212 ஆவது ஹதீஸ் ஐ மிகப் பெரும் ஆதாரமாக முன் வைக்கிறார்
அவர் ரமலானில் சூனியம் பற்றி 10 நாட்கள் பேசிய தொடர் உரையில் முதலாவது நாளின் உரையில் அந்த வாதத்தை நீங்கள் காணலாம்.( அது அவருடைய இணையத்தளமான ஆன்லைன் பீ ஜே வில் எழுத்து மூலம் தொகுக்கப் பட்டுள்ளது, அதன் லிங்க் இதோ http://www.onlinepj.com/…/nambikai_thota…/sooniyam_10th_day/)
இதற்கான மறுப்பை நான் என்னுடைய முன்னைய பதிவில் வெளியிட்டேன். அதன் லிங்க் (https://www.facebook.com/268181180024901/photos/a.268317480011271.1073741828.268181180024901/349210608588624/?type=1&தியேட்டர்)
மேலும் மௌலவி பீ ஜே அவர்கள் அடுத்து மிகப் பெரும் ஆதாரமாக முன் வைப்பது 'சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்' என்ற குர் ஆன் வசனத்தை ஆதாரமாக காட்டி சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் ஆகவே சூனியம் இல்லை என்று சொல்கிறார். அதை அவருடைய 8 ஆம் நாள் உரையில் நீங்கள் பார்க்கலாம். (http://www.onlinepj.com/…/nambikai_thotar…/sooniyam_8th_day/)
//////////உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.
திருக்குர்ஆன் 10:77
சூனியம் என்பது உண்மை இல்லை, அது பொய். ஆனால் நான் கொண்டு வந்தது அற்புதம். இதை எப்படி சூனியம் என்று சொல்லலாம் என்று மூஸா நபி கூறுகிறார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்றால் பித்தலாட்டம் தானே தவிர அதில் கடுகளவும் உண்மை இல்லை என்று மூஸா நபி வழியாக அல்லாஹ் விளக்கி விட்டான்.//////////////// இது மௌலவி பீ ஜே அவர்களின் வாதமாகும்.
மௌலவி பீ ஜே அவர்கள் மேலே குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தை சரியாக அணுக தெரியாத காரணத்தால் இவ்வாறான பிழையான விளக்கங்களை கொடுத்து வருகிறார்.
ஒரு குர்ஆன் வசனம் நமக்கு சரியாக விளங்காவிட்டால் ஏனைய குர் ஆன் வசனங்களை கொண்டு அதை அணுக வேண்டும். இல்லாவிட்டால் ஹதீஸின் துணையை அதாவது நபி (ஸல்) அவர்களின் விளக்கத்தை கொண்டு அணுக வேண்டும் இதுவே சரியான வழி முறையாகும்.
பகுத்தறிவு சிந்தனையைக் கொண்டு அணுகினால் இவ்வாறான பிழையான விளக்கங்களையே கொடுக்க நேரிடும்.
சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்ற குர் ஆன் வசனத்தை உண்மையான விளக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.
அல்லாஹ் குர் ஆனில் இன்னும் சில இடங்களில் அநியாயக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள், அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறுகிறான்.
அவற்றில் சில வனங்களை இங்கே பதிவிடுகிறேன்...
(அப்போது மூஸா) கூறினார்; "அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்."[28:37]
அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.[10:17]
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.(6 : 21-24)
மேலே நான் குறிப்பிட்ட ஒரு வசனத்தில் 'அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்' என்று வருகிறது. நாம் இந்த வசனத்தை படித்தவுடன் எப்படி விளங்கிக் கொள்வோம்??? அநியாயக் காரர்கள் எந்த வெற்றியும் பெற மாட்டார்கள் என்று விளங்கிக் கொள்வோமா?? அதாவது, உலகத்தில் சொத்து, செல்வங்களை அடையவே மாட்டான், அவனுக்கு உலகத்தில் எந்த ஒரு இலக்கையும் அடைய முடியாது என்று நாம் விளங்கிக் கொள்வோமா?? அல்லது மறுமை நாளில் எந்த வெற்றி பெற மாட்டான் என்று விளங்கிக் கொள்வோமா???
அவனுக்கு உலகத்தின் இறுதியிலும் தோல்வி அடைவான் மேலும் மறுமையில் வெற்றி பெற மாட்டான் என்றே விளங்கிக் கொள்வோம்.
இந்த வசனத்திற்கு மௌலவி பீ ஜே (10:77) வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தை கொண்டு அணுகினோமேயானால் அக்கிரமம் செய்வோர் உலகத்தில் எந்த ஒரு இலக்கையும் தனது தேவைகளையும் அடையாதவனாக இருப்பான் என்றே விளங்கிக் கொள்ள வேண்டிவரும்.
ஆனால் அக்கிரமக் காரர்கள் தான் இன்று உலகையே ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு தான் அதிக செல்வாக்கு வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றனவே! ஆகவே, இந்த வசனத்தை பொய்யாக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.
பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.[10:17] என்று அல்லாஹ் அல்லாஹ் சொல்கிறான்.
பாவம் செய்ய முற்படுபவர்கள் எல்லாம் பாவமே செய்வதில்லையா???
உதாரணமாக ஒருவன் களவு எடுக்க நினைக்கிறான். அவனுக்கு களவே எடுக்க முடியாது என்று அர்த்தமா???
அப்படியென்றால், களவு என்பதே உலகில் இல்லாமல் போய்விடும்.
மாறாக, யாரும் பாவம் செய்ய முடியாது என்பதை இந்த வசனம் குறிக்கவில்லை, பாவம் செய்தால் மறுமையில் பாவம் செய்ததற்கான தண்டனையை அனுபவிப்பான் என்றே அர்த்தமாகும்.
இதே போல தான் சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்ற வசனத்தையும் அணுக வேண்டும்.
சூனியக் காரன் சூனியத்தை செய்வான், அதனால் அல்லாஹ் நாடினால் தாக்கம் உண்டாகும். இறுதி வெற்றி அவனுக்கு கிடைக்காது என்பதையே அந்த வசனம் குறிக்கிறது.
அதற்கவர்; "அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது. (20:66)
இந்த வசனம், சூனியக் காரர்கள் மூஸா நபி அவர்களுக்கு முன்னால் பாம்புகளையும் கயிறுகளையும் போட்டதும் அது பாம்பு போல நெளிந்து ஓடியதாக பார்பவர்களுக்கு தெரிந்தது என்று சொல்கிறது.
சூனியக் காரர்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதை செய்துவிட்டார்கள். மூஸா நபி அவர்கள் தடியை போட்டதும் அது உண்மையான பாம்பாக மாறியது, மூஸா நபி அவர்கள் சூனியம் தான் செய்தார்கள் என்று நினைத்து பிர்அவனும் அவ்வாறு செய்வதாக சொல்லி சூனியக் காரர்களை அழைத்து வந்தான். அவர்களும் கயிறுகளையும் தடிகளையும் பாம்பு போல் காட்ட வேண்டும் என்று நினைத்து அதை காட்டி விட்டார்கள்.
அந்த நேரத்தில் தான் 'சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்' என்ற வசனம் இறக்கப் படுகிறது.
"இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்" (என்றும் கூறினோம்). (20:69)
மூஸா நபி அவர்களின் கையில் இருக்கக் கூடிய தடியை போடுமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்து அதை அவர்கள் போட்ட போது அது உண்மையான பாம்பாக மாறி சூனியக் காரர்கள் போட்ட பாம்புகளையும் தடிகளையும் விழுங்குகிறது.
இப்போ மூஸா நபி அவர்கள் தான் வெற்றி பெற்றார்கள். இதை தான் இந்த வசனம் குறிக்குதே தவிர, மௌலவி பீ ஜே அவர்கள் சொல்வது போன்று சூனியக்காரனால் எதுவுமே செய்ய முடியாது என்று அந்த வசனம் சொல்லவில்லை.
அவன் சூனியத்தை செய்தான். அல்லாஹ்வின் நாட்டத்தால் அவனது சூனியத்திற்கு தாக்கம் இருந்தது. ஆனால் அவனுக்கு இறுதி வெற்றி கிடைக்கவில்லை என்பதையே அந்த வசனம் குறிக்கிறது.
Ansar Thablighi,