2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்.
( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)
3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்.
4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காக திரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்.
5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்.
6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள்.
7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்.
8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்.
# தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன். உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.