வியாழன், ஜூலை 25, 2013

மதத்தை பிரிந்து வந்துவிட்டோம் மனிதத்தை பிரிக்கவில்லை.


ஆடிடர் கொலை வழக்கு இன்னும் குற்றவாளிகள் யாருன்னே தெரியாம ஒரு யூகம் ல இவர்கள்தான் என்று போலீசார் கை காட்டிடாங்க . அதுக்குள்ள இங்க இந்தியா இந்து களுக்கே துலக்கன வெட்டனும் குத்தனும் ஒரு கோஸ்டி கிளம்பிட்டு . அப்படியே ஊருக்குள்ள கலவரம் வந்தாலும் ரம்ஜான் க்கு என் வீட்ல பிரியாணி தின்னவந்தான் என்ன வெட்டனும் இல்லை தீபாவளிக்கு அவன் வீடு சாப்பாடு தின்ன நான்தான் வெட்டனும் அது எங்க ரெண்டு பேருக்கும் மன சாட்சி இடம் தராது .

தமிழ் நாடு சகோதரத்துவம் சாதாரணம் இல்ல . உரிமையா மாமா ,மாப்ள ,சின்னையா தாத்தா ன்னு அழைப்பதும் இப்படி ரத்த பந்தம் இல்லனாலும் உறவோட உரிமை கொண்டாடியாச்சி . இந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது . உதாரணம் என் அப்பா உடைய நண்பர் ஒருவர் ஹிந்து மதத்தை சார்ந்தவர் அவர் பையன் திருமணத்துக்கு கல்யாண பத்திரிக்கை ல உறவினர்கள் பெயரில் " பெரியப்பா " என்று என் அப்பா பெயர் போட்டு கவுரவ படுத்தியது மட்டுமல்லாமல் கல்யாணத்துக்கு வந்த அனைவரிடமும் அறிமுக படுத்தியும் வைத்தார் . எங்க அப்பா தாடியும் வச்சி தொப்பியும் போட்டு கிட்டு கல்யாண நேரம் ல பொண்ணு மாப்ள பக்கத்துல நின்னு பெரியப்பா ஸ்தானம் ல இருந்து கல்யாணத்தை முடித்து கொடுத்தார் .இதெல்லாம் சாதரணமான விஷயம் இல்லை .

ரம்ஜான் க்கு தவறாம பிரியாணி போறதும் அவங்க தீபாவளிக்கு பாய் வீடுக்கு அனுப்புறது பாய் கடைல போய் கறி வாங்குப்பா சொல்றதும் .இதெல்லாம் மதம் கடந்த அழகான புரிதல் கூட சொல்லலாம். இன்றும் கூட எங்கள் வீட்ல பலசர சாமான் செட்டியார் கடைல இருபது வருசமா வாங்குறோம் பக்கத்துல ஒரு முஸ்லிம் கடை இருக்கு அங்க வாங்கினதும் இல்ல . எங்க அப்பா கிட்ட சொன்னா அதுக்கு அவர் சொன்னார் ஒரு நேரத்துல நமக்கு அவசரத்துக்கு செட்டியார் எவளோ கேட்டாலும் சாமான் கொடுத்தவர் இன்று வசதி வந்துட்டுன்னு பக்கத்து கடைல வாங்க கூடாது பழச மறக்க கூடாது சொல்வார் .

ரம்ஜான் மாசம் ல போர் செய்வதை கூட இஸ்லாம் தடுத்துள்ளது அப்படி பட்ட மாதத்தில் ஒரு உயிரை ஒருத்தன் எடுத்து இருக்கான்னா அவன் கண்டிப்பா முஸ்லிம் என்ன மனுசனே இல்ல . மோடி புராணம் பாடுறேன் எங்களை வசை பாடாதிங்க எந்த சொறி நாய்க்கும் நாங்க பயப்படனும் அவசியம் இல்லை .நபிகள் நாயகம் காலத்தில் "332" பேரை கொண்டு ஆயிரகனகானவர்களை "பதர்" என்னும் போரில் சந்தித்தவர்கள் அதில் வெற்றியும் பெற்றவர்கள் .சமாதானம் சகிப்புத்தன்மை உண்டு சண்டைக்கும் நாங்கள் தயாராய் உண்டு .

ஆனால் இன்றைய சூழல் சகோதரர்களா பழகி கிட்டு இருந்த மாற்று மத நண்பர்கள் கூட தோல் ல கை போட்டு சிரிச்சி பேசிட்டு பின்னாடி இந்த துலுகனுங்கல அடக்க மோடி மாதிரி ஆள்தான் வேணும் சொல்றாங்க . அந்த அளவுக்கு மனசுல விஷத்தை விதைத்து விட்டார்கள் இனி வர கூடிய காலங்கள் எப்படி இருக்கும் தெரில .

ஒரு காலத்துல நாங்களும் தேவரா , முதலியாரா , செட்டியாரா இருந்தவர்கள் தான் . கொள்கை வேறுபாடுகளால் மதத்தை பிரிந்து வந்துவிட்டோம் மனிதத்தை பிரிக்கவில்லை.

*****************************************

ஒருமுறை நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உன் சகோதரனுக்கு உதவி செய்திடு., அவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதிக்குள்ளானவனாக இருந்தாலும் சரியே! அப்பொழுது ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார்....!

அல்லாஹ்வின் தூதரே! அவன் அநீதிக்கு உள்ளானால் நான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் தான். ஆனால் அவன் அநீதியாளனாக இருந்தால் அவனுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்? இது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!

நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்: 'அநீதி இழைப்பதிலிருந்து அவனை நீ தடுத்திடவேண்டும். அது தான் அவனுக்கு நீ செய்யும் உதவி ' (நூல்: புகாரி)

சனி, ஜூலை 20, 2013

ஃபுட் பாய்சன்


உணவு விஷமாதல் (Food poison) எப்படி ஏற்படுகிறது?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன்.

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல்.

சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும்.

மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.

அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.

மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.

நன்றி: டயட்டீஷியன் புவனேஸ்வரி

ஞாயிறு, ஜூலை 07, 2013

ஒரு குட்டி கதை

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.

ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.

அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.

இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.

அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.

இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.

அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.

அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…

நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.

ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,

எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,

உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.

அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,

பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே,

அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...