செவ்வாய், மார்ச் 26, 2013

குழந்தைகளின் உயிரை பறிக்கும் சக்தி வாய்ந்த ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson):


குழந்தைகளின் உயிரை பறிக்கும் சக்தி வாய்ந்த ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson):

எச்சரிக்கை தகவல்..!
நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும்.

ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.

கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.


இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.


பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!

மேலும் தவலுக்கு இந்த விடியோ கிளிப்பை பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=sn7BFU2ykUA

நன்றி: முகநூல் நண்பர்கள் பக்கம்

புதன், மார்ச் 13, 2013

கைக்குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோகளின் கவனத்திற்கு :



கைக்குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோகளின் கவனத்திற்கு :

குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு!!

குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும்பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்குடயாபர் உபயோகிக்கும் பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, 'டயாபர்'களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், 'டயாபர்'கள் வரத் துவங்கின. இதன்பிரபலத்தால், துணி, 'டயாபர்'களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.

சரும நோய்கள்
'டிஸ்போசபிள்' டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர்.

தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ளன.

ஹார்மோன் பிரச்சினை
டிஸ்போசபில் டயாபர்களில் டிரிபுயூடில்-டின் ( TBT) கூட்டுப் பொருட்கள் உள்ளன. இதனை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உபயோகித்த பின்னர் தூக்கிஎறியப்படுவதால் மண்ணில் மட்கிப்போகாமல் அதை உண்ணும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், துணி 'டயாபர்'களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. துணி டயாபர்கள் பயன்படுத்தினால்,குழந்தைகளுக்கு ரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
டிஸ்போசபில் டயாபர்கள் சோடியம் பாலிக்ரைசலேட் என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்டுவதற்குநூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை. துணி டயாபர்கள், சிதைவுற 100 ஆண்டுகளே ஆகின்றன. இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும்டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகைடயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ரீயூசபிள் டயாபர்'கள் சிதைவடைய, ஆறு மாதகாலமே ஆகின்றன.

வெட்டப்படும் மரங்கள்
உலகில் தயாரிக்கப்படும் டயாபர்களில் 70 சதவீதம், காகிதங்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதனால், உலகளவில், ஆண்டுக்கு 100 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்தை உருவாக்க,உரங்கள், பூச்சி மருந்துகள், தண்ணீ­ர் என ஏராளமானவை தேவைப்படுகிறது. டயாபர்கள் தயாரிப்பதற்காக, அதிகளவில் மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையைஏற்படுத்தியுள்ளது.

செலவு குறைவு
'டிஸ்போசபிள்' டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், 'ரீயூசபிள் டயாபர்'கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, 'டிஸ்போசபிள்' டயாபர்களுடன் ஒப்பிடும் போது, 'ரீயூசபிள்' டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில்,பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன. எனவே அதிக அளவு பணம் செலவு வைக்காத சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத டயாபர்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

சென்னை

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி
மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.
-

திங்கள், மார்ச் 11, 2013

போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்!

கிறிஸ்தவ உயர்பதவியை ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI இஸ்லாத்தைத் தழுவினார்!

சில தினங்களுக்கு முன் கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் மிகவும் உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த போப் பெனடிக் XVI, தற்சமயம் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியுள்ள அவர் ''அல்லாஹ் தான் உண்மையான ஒரே இறைவன்'' என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொண்டதாக தெரிவித்தார்.

கிறிஸ்தவ உலகை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இச்செய்தி வேண்டுமென்றே ஊடகங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இருதினங்கள் கழிந்தும் இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இச்செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

கிறிஸ்தவ உலகின் வழிகாட்டியே இஸ்லாத்தைத் தழுவியுள்ளது இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மற்ற மதத்தவரையும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

கல்வியறிவு மிகைத்திருக்கும் இக்காலத்தில் சிந்திக்கும் எவருக்கும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கமாக இருக்க முடியும் என்பது தான் இறுதி முடிவாக இருக்க முடியும்.

இஸ்லாத்தைத் தழுவியபின் அவர் மக்களுக்கு அளித்த உரையின் இடையில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான தொழுகையை (அஸர் வக்த்) நிறைவேற்றினார்.

'போப்' ஆக இருந்தபோது இஸ்லாத்தை தவறாக அவர் விமர்சித்தைதைப்பற்றி வினவியபோது, அப்பொழுது தான் சிறுவராகவும் அறியாதவராகவும் இருந்ததாகவும், தற்போது தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துரிமை பற்றி அடிக்கடி பேசும் அமெரிக்க பத்திரிகைகள் (முன்னால்)போப் கிறிஸ்தவ உலகுக்கும், அமெரிக்கர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்(!!!) என்று தங்களது வெறுப்பை உமிழ்ந்துள்ளன.

அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகிறன்னோ அவர்களை எவராலும் வழிதவறச் செய்துவிட முடியாது. சகல வஸ்துகள் மீதும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் ஒருவனே. அல்ஹம்துலில்லாஹ்

வியாழன், மார்ச் 07, 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.


2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.


3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.


4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.


5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.


6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.


7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.


8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.


9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.


10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.


11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.


12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.


13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.


14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.


15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.


16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.


17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.


18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.


19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.


20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.


21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.


22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.


24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.


25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.


26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.


27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.


28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.


29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.


31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.


32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.


33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.


34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.


35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.


36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.


37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

. 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.


39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.


40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.


41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.


42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.


43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.


44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.


45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.


46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.


47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.


48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.


49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.


50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.


51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.


52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.


53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.


54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்


55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.


56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.


57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.


58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.


59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.


60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்

திங்கள், மார்ச் 04, 2013

செல்ஃபோனில் காதலித்துப்பார்..

செல்ஃபோனில் காதலித்துப்பார்..
உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாற்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரணாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல்ஃபோனில் காதலித்துப்பார்

உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்கோர்ள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Miss Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Miss Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல்ஃபோனில் காதலித்துப்பார்

கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஒன்னுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்

மொபிடெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுதுக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சக்காரனாவாய் இல்லை கடன்காரணாவாய்இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

தெரியுமா உங்களுக்கு ?

* பூமியின் நிலப்பரப்பு 14,89,50,800 சதுர கிலோ மீட்டர்.

* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.

* தாமிர உலோகம் அதிகம் உள்ளதால் ஆங்கிலத்தில் "கன்ட்ரி ஆஃப் காப்பர்' என்று அழைக்கப்படும் நாடு ஜாம்பியா.

* காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு பிரேசில்.

* உலகில் உள்ள மொத்த தேக்கு மரத்தில் மூன்றில் ஒரு பங்கு மியான்மர் நாட்டில் உள்ளது.

* பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் தூரந்த் கோடு.




கிஸô பிரமிடு !!!

எகிப்தின் கிஸôவில் உள்ள பிரமிடு பழமையானது.

இது 137 மீட்டர் உயரமும், 225 மீட்டர் நீளமும் கொண்ட பிரம்மாண்டமான முக்கோண வடிவில் கட்டப்பட்டு உள்ளது பிரமிடு. இது 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது.

ஒவ்வொரு கல்லும் இரண்டரை டன் எடை கொண்டவை. மொத்தக் கற்களின் எடை 7 மில்லியன் டன்கள் ஆகும்.

ஒரு லட்சம் வேலை ஆட்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதைக் கட்டி முடிக்க 20 வருடங்கள் ஆனது.


தேசியப் பழம் !!!


* வாசனைத் துறைமுகம் என்று அழைக்கப்படுவது ஹாங்காங் துறைமுகம்.

* இலங்கை தேசியக் கொடியில் உள்ள இலைகள் ஆலமர இலைகள்.

* சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

* தமிழ்ப் புதுக் கவிதையின் முன்னோடி ந.பிச்சமூர்த்தி.

* நம் நாட்டின் தேசியப் பழம், மாம்பழம்.

* அமெரிக்காவின் முதல் அதிபர் ஆப்ரகாம் லிங்கன்.



இந்திய தேசியப் படை !!!


* 1857-ம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போர் துவங்கியது.

* 1885-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் துவக்கம்.

* 1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது.

* 1930-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகப் போர் துவங்கியது.

* 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தது.

* பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைக் கண்டறிந்த முதல் விஞ்ஞானி ஆர்யபட்டா.

* தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞான உலகிற்கு அறிவித்தவர் ஜகதீஷ் சந்திரபோஸ்.

* மாங்கனீஸ் தாதுப் பொருளை அதிகளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் இரண்டு நாடுகள் சீனா, தென்னாப்ரிக்கா.

* ஈஃபிள் கோபுரத்தைக் கட்டியவர் அலெக்ஸôண்டர் ஈஃபிள்.

* ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் குக்.


சம்பா நடனம் !!!


* நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தவர் லூயிஸ் ஹென்பின்.

* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா.

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.

* "சார்க்' அமைப்பின் தலைமையகம் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ளது.

* இங்கிலாந்தில் முதல் முறையாக தொழில் புரட்சி நடைபெற்றது.

* சம்பா நடனத்துக்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.


உலகின் மிக அழகான துறைமுகம் !!!

* உலகில் மிக அழகான துறைமுகம் எனப் பெயர் பெற்றது சிட்னி துறைமுகம்.

* பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதனின் பெயர் தாமஸ் ஸ்காட் பால்டுவின். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.

* ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையின் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ள மணிதான் உலகிலேயே மிகப் பெரிய மணியாகும்.

* கூர்க்கா இன மக்களின் பூர்வீகம் நேபாளம் ஆகும்.

* அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் பழைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம் என்பதாகும்.

* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜாப் பூ.
Related Posts Plugin for WordPress, Blogger...