வியாழன், நவம்பர் 22, 2012

மணமகன்கள் [வாங்க] இங்கே வாங்க...

தனக்கேத்த மணமகனைத் தேட [வாங்க] இந்தக் கடைக்கு ஒரு பெண் போகிறாள்.


முதல் தளம் இந்த அறிவிப்போடு வரவேற்கிறது:


Floor 1- வேலைக்குச் செல்லும் மணமகன்கள் இங்கே உள்ளார்கள்.

இதைப் படிச்சதும் "ம் ... இத்தனை நாளா ஒரு வெட்டிப் பயலோடு சுத்திகிட்டு இருந்தோம், அதைக் காட்டிலிலும் இது பரவாயில்லைதான்", -ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, "இருந்தாலும் அடுத்த ஃபுளோர்ல இதை விட பெட்டரா என்ன இருக்குன்னு போயி பார்ப்போமே" ன்னு இரண்டாவது தளத்துக்கு போகிறாள்.


Floor 2 – வேலைக்குச் செல்லும் வாலிபர்கள், இவர்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் அவர்களை அன்போடு கவனித்துக் கொள்பவர்கள்.

"ஆஹா..... சூப்பர், இவனுங்களும் ஒ.கே தான். அதுசரி மூணாவது ஃபுளோருக்கும் போய்ப் பார்ப்போமே........."


Floor 3 – "இவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் குழந்தைகளையும் அன்போடு கவனித்துக் கொள்வார்கள், மேலும் ஹிருத்திக் ரோஷன், சல்மான்கான் மாதிரி லுக்காகவும் இருப்பார்கள்"


“ம்ம்ம்ம்ம்ம்........ ரொம்ப டெம்ப்டிங்கா இருக்கே......... பரவாயில்லை, அடுத்த ஃபுளோரையும் பாத்திடுவோம்.”


Floor 4 – இவங்க வேலைக்கும் போவாங்க குழந்தைகளையும் பார்த்துக்குவாங்க, சினிமா ஸ்டார் மாதிரி குட் லூகிங், வீட்டு வேலையிலும் உதவியா இருப்பாங்க.


“வாவ்..... இதைவிடவும் பெட்டரா அடுத்த ஃபுளோர்ல என்ன இருக்குன்னும் பார்த்திடுவோமே" அப்படின்னு லிப்ட்ல அடுத்த தளத்துக்கு போகிறாள்.



Floor 5 – இங்கே வேலைக்குச் செல்லும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளும், அழகான, வீட்டு வேலையிலும் உதவியாய் இருக்கும், கொஞ்சம் ரொமான்ஸ் அதிகமான ஆடவர்கள் கிடைப்பார்கள்.

“ஆ...... கடவுளே, என்னால தாங்க முடியல, அடுத்த தளத்துல இன்னும் என்ன இருக்குதோ தெரியலையே" என்று ஆறாவது ஃபுளோருக்குச் செல்கிறாள்.


Floor 6 – "வாங்கம்மா வாங்க......நீங்கதான் இந்த தளத்தோட 345,67,89,012 -வது விசிட்டர்........... இங்க மணமகன்கள் யாரும் இல்லை, ஒரு பெண் எதிலுமே திருப்தியடையமாட்டாள் என்பதற்கான நிரூபணம் தான் இது, கடைக்கு வந்ததற்கு நன்றி, போயிட்டு வாங்கன்னு ஒரு எலக்ட்ரானிக் போர்ட் காமிச்சதாம்!!

வெள்ளி, நவம்பர் 16, 2012

சொர்க்த்தில் துணைகள்!!!!!!!!!!


"சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண்துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண்துணைகள் இல்லையா? என்ற கேள்வி எழும்.

இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையாகக் கூறும் போது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.

படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக "அவர்கள்' எனக் கூறுகிறோம்.

அரபு மொழியில் படர்க்கைப் பன்மையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.

அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் "நீ' "நீங்கள்' என்று கூறுகிறோம். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.

ஆனால் அரபு மொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.
தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கிப் பேசுகிறது என்று புரிந்து கொள்வோம்.
ஆனால் அரபி மொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை.

"ஸல்லூ' என்று அரபு மொழியில் கூறினால் "தொழுங்கள்' என்று பொதுவாகப் பொருள் செய்ய முடியாது. ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.
பெண்களை நோக்கி "தொழுங்கள்' என்று கூறுவதாக இருந்தால் "ஸல்லீன' எனக் கூற வேண்டும்.

அரபு மொழியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் "ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்'' என்று இரு தடவை கூற வேண்டும்.

திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டும்
இரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும் போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளது.

அதாவது அனைத்துக் கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, "ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன' என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபியவர்களிடம் கேட்டனர். "ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?'' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)

இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.

மறுமையில் பரிசு வழங்கும் போது "அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்' என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

(பார்க்க: திருக்குர்ஆன் 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8)
எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விடமாட்டான்.
இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் கணவராக அமைவார் என்பது கட்டாயமில்லை. இதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை.

கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும் போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்? என்றெல்லாம் பல கேள்விகளும் இக்கூற்றினால் எழும்.

"இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு'' என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர் (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மது 25417).
ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி இந்தப் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.

இங்கிருப்பதை விடச் சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.

எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.
அது போல் தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண் பாலாகக் கூறப்பட்டுள்ளது. அது பெண் பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33

வியாழன், நவம்பர் 15, 2012

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...

விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப ்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும் .
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

அந்த விசயத்திலே உங்கள் ஆத்துக்காரர்(ரி) நல்லவரா(ளா) ?




1. உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !

2. பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க.

3. என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு.கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்.

4. அடிக்கடி பிரண்டைப் பாக்கணும்,ஆபீஸ் அவுட்டிங்,நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன்? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது!
chennai-couples, chennai young couples, சென்னை பீச், சென்னை கடற்கரை, காதலர்கள், காதலர்கள் அத்துமீறல், காதலர்கள் ஜல்சா
5. உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.

6. “சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !

7. அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி!

8. நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !

9. ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்னு புரிஞ்சுக்கோங்க.

10. நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !

11. திடீரென தனிமை தேடுகிறாரா? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா? ஐயையோ… விஷயம் சீரியஸ் !

புதன், நவம்பர் 14, 2012

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....

பண்டிகை கால கவனத்திற்கு


1 பகல் இரவு சில மணி நேரம் கூட வீட்டை பூட்டி விட்டு செல்ல நேர்ந்தால் தாங்கள் தகுந்த முன் ஏற்ப்பாடு செய்து விட்டு செல்ல வேண்டும் .

2 . ஓரிரு தினங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்ல நேர்ந்தால் சம்மந்தப்பட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ (போன் 100 ) தகவல் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

3 . வீட்டை விட்டு வெளியூர் செல்ல நேரும் போது விலை உயர்ந்த ஆபரணங்களை வங்கி லாக்கரிலோ அல்லது பாதுகாப்பாக நீங்களே எடுத்து செல்ல வேண்டும்.

4 . இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருந்தால் , அதனை பாதுகாப்புடன் பூட்டி நிறுத்திச் செல்ல வேண்டும்.

5 . காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்லும் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம், ஐந்தாறு பெண்கள் இணைந்து கூட்டமாகவும்,அணிந்திருக்கும் நகைகளை வெளியில் தெரியாமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்புடன் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

6 . தாங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் நேரத்தில், உங்கள் கவனத்தை திசை திருப்பி உங்களிடமுள்ள பணப்பையை திருடிக்கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. உரிய கவனத்துடன் பாதுகாப்பாக நடந்துகொள்ளுங்கள்.

7 . நீங்கள் அணிந்து இருக்கும் ஆடையின் மீது எச்சில் போன்றவைகளை படிய வைத்து திருடர்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பி உங்களிடமுள்ள பணப்பையை திருடிக்கொண்டு செல்ல வாய்ப்புள்ளது விழிப்புணர்வுடன் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள்.

8 . 10 ருபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை உங்கள் அருகில் சிதறிவிட்டு திருடர்கள் உங்கள் பணம் கீழே விழுந்துள்ளது என கவனத்தை திசை திருப்பி உங்கள் வாகனத்தில் அல்லது கையில் வைத்துள்ள பணத்தை திருடி செல்ல வாய்ப்பு உள்ளது. உங்கள் கவனத்தை சிதறடிக்கதிர்கள்.

9 . உங்கள் பணப்பையை திருடர்கள் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து பறித்து செல்ல வாய்ப்புள்ளது , கவனமாக இருங்கள்.

10 . நீங்கள் பணத்தை அதிகமாக கையாள நேரும் சமயத்தில் இரு சக்கரம் மற்றும் பேருந்து பயணத்தை தவிர்த்து இரண்டு நபர்கள் துணையுடன் பாதுகாப்பான நான்கு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்லுங்கள்...

வியாழன், நவம்பர் 08, 2012

விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்- தமுமுக கோரிக்கை..




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வர
ுகின்றன.

கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.

கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.

இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.



அன்புடன்

(ஜே.எஸ். ரிபாயி)

நிரந்தர நரகம்


இஸ்லாம் சில செயல்களைச் செய்து அதற்கு பாவமன்னிப்புக் கோராமல் அதே நிலையிலே மரணம் அடைபவர்களுக்கு நிரந்தர நரகம் இருப்பதாக கூறுகிறது. அவை என்ன என்ன என்பதைப் பார்ப்போம் :

நயவஞ்சகர்கள் & இறை மறுப்பாளர்கள் :

நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 9:68

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் :

”மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ”இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

கொலை :

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 4:93

வட்டி :

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். ‘வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 2:275

தற்கொலை :

” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

கட்டாயம் இத்தகையவைகளை நாம் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.

செவ்வாய், நவம்பர் 06, 2012

குழந்தை வளர்ப்பு


*கடுமையான விமரிசனங்களோடுவளர்க்கப்படும் குழந்தை எதையும் மட்டம் தட்டி ஒதுக்கக் கற்றுக் கொள்கிறாள்.

*நையாண்டி செய்து வளர்க்கப்படும் குழந்தை எதைக் கண்டும் வெட்கி ஒதுங்க ஆரம்பிக்கிறாள்.

*அவமான உணர்ச்சியோடு வளர்க்கப்படும் குழந்தை ,குற்ற உணர்வுக
ளுக்கு அடிமையாகிப் போகிறாள்.

*பொறுப்போடு வளர்க்கப்படும் குழந்தை ,நிதானத்தோடு இருக்கிறாள்.

*சரியான தூண்டுதலோடு வளர்க்கப்படும் குழந்தை ,தன்னம்பிக்கையோடு திகழ்கிறாள்.

*தக்க பாராட்டுதல்களுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லவற்றை ரசிக்க கற்றுக் கொள்கிறாள்.

*நியாய உணர்வோடு வளர்க்கப்படும் குழந்தை நேர்மையைக் கடைப் பிடிக்கிறாள்.

*பாதுகாப்போடு வளர்க்கப்படும் குழந்தை மற்றவர்களை நம்பப் பழகுகிறாள்.

*தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தன்னையே புரிந்து கொண்டவனாக இருக்கிறாள்.

*அன்பு,நட்பின் அர்த்தம் புரிந்து வளர்க்கப்படும் குழந்தை நிஜமான அன்பைக் கொடுக்கவும் ,பதிலுக்கு அதைப் பெறவும் தெரிந்து கொள்வதால் ஆயுசு முழுவதும் நிம்மதியாக இருக்கும் வழியைத் தெரிந்து கொள்கிறாள்.

வெள்ளி, நவம்பர் 02, 2012

கொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்:




முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவல
ி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:
----------------------------
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒரு முறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்த நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
--------------------------------------------------
பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்டதாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது. இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்கமுடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.

வியாழன், நவம்பர் 01, 2012

சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன் சந்திப்பு:


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய அவதூறு திரைப்படம் பற்றி கருத்து பரிமாரிக்கொள்வதற்காக சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மௌலானா சம்சுதீன் காசிமியுடன் 03 -10 -2012 அன்று காலை 11 .30 மணிக்கு மக்காப்பள்ளியில் நேரில் சந்தித்தனர். சந்திப்பில் கலந்து கொண்ட தூதரக அதிகாரிகள் ; டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி),மத்தேயு .கே .பேஹ்(அரசியல் &பொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது .அப்போது நடைபெற்ற உரையாடலின் சுருக்கம்;



தூதரக அதிகாரிகள்: சமீபத்தில் நபிகள் நாயகம்(ஸல்) பற்றி வெளியான திரைப்படம் விஷயத்தில் எங்கள் ஆழ்ந்த மன வருத்தத்தையும் அப்படக்குழுவினருக்கு எங்களது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் நாட்டு அதிபரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கூட தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில் தங்களை போன்ற மார்க்கத்தலைவர்களை நேரில் சந்தித்து தங்கள் கருத்துக்களை அறிய வந்துள்ளோம். தங்களின் கருத்துக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டு எங்கள் நாட்டு அதிபருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் அனுப்பப்படும்.
மௌலானா: இந்தப்படம் வெளிட்டவுடனேயே உங்கள் நாட்டு அதிபரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தால் புண் பட்ட உலக முஸ்லிம்களுக்கு ஓரளவாவது ஆறுதலாக இருந்திருக்கும். பிரச்னையும் இந்தளவுக்கு கைமீறி போயிருக்காது. ஆனால் அதனை செய்யத்தவறியது உங்கள் குற்றம்.
தூதரக அதிகாரிகள்: செப்டெம்பர் 14 அன்றே கண்டன அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.ஆனால் உண்மை என்னவென்றால்அந்தப்படக்குழுவினர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கவும் எங்கள் சட்டத்தில் இடமில்லை. இந்திய சட்டம் போன்று எங்கள் சட்டம் இல்லை. அங்கே கருத்து சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் மிக மிக அதிகம். எனவே இது போன்று நபிகள் நாயகம்(ஸல்) மட்டுமின்றி பல்வேறு மதத்தலைவர்களையும் இழிவு படுத்தப்ப்படும்போதும் (ஏராளமான உதாரண சம்பவங்களை குறிப்பிடுகிறார்கள்) அவர்களை தண்டிக்க எங்களிடத்தில் சட்டமில்லை. சட்டத்தின் பிடியிலிருந்து இலகுவாக தப்பித்தும் விடுகிறார்கள். எனவே அவற்றை சகித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
மௌலானா: மற்ற தலைவர்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் எங்கள் நபிகள் நாயகத்தின் விஷயத்தில் நாங்கள் சகித்துக்கொள்ளவும் மாட்டோம். சகித்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் உலக முஸ்லிம்களின் ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் ரத்ததொடும் கலந்தவர்கள் நபிகள் நாயகம். அவர்கள் கற்று தந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை காலை கண் விழித்தது முதல் தூங்கும் வரை தினம் தினம் ருசித்து அனுபவித்து வரும் முஸ்லிம்கள் நபிகள் நாயகத்துக்காக தங்கள் உயிரையும் கொடுக்க முன் வருவார்கள். அது ஏன் என்ற காரணத்தை சொல்லி உங்களுக்கு புரிய வைக்க முடியாது. நீங்களும் அந்த முஸ்லிம்களில் ஒருவராக ஆனால் தான் உங்களால் உணர முடியும். இப்போது நடந்த சம்பவத்தை உங்கள் அரசாங்கம் கண்டித்து விட்டது. ஆனால் வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்.
தூதரக அதிகாரிகள்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அத்தகைய எந்த உத்தரவாதமும் எங்களால் தர முடியாது.ஏனென்றால் தனி நபர் கருத்து சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் அபரிமிதமாக வழங்கப்பட்டு விட்டது, எங்கள் சட்டம் அப்படி இருக்கிறது.
மௌலானா: மற்றவர்களின் உணர்வுகளை ஊனப்படுத்துவதற்கு துணைபோகும்,சட்டத்தை மாற்றுங்கள், அல்லது சட்ட திருத்தம் கொண்டு வாருங்கள்.

தூதரக அதிகாரிகள்: கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில்எந்த திருத்தமும் வந்ததில்லை.
மௌலானா: இப்போது அதற்கான நேரம் வந்து விட்டதாக எண்ணிக்கொள்ளுங்கள், உங்கள் நாட்டு தனி நபர் கருத்து சுதந்திரம் உங்களுக்கு முக்கியம் என்றால் கோடானு கோடி மனிதகுலம் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் எங்கள் நபிகள் நாயகத்தின் கண்ணியம் எங்கள் உயிரையும் விட எங்களுக்கு முக்கியம்.நீங்களே மனிதாபிமானத்துடன் யோசித்துப்பாருங்கள். இப்படி அடுத்தவர் மனதை ரணப்படுத்தி அதனை ரசிக்கும் கொடூர செயலை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பது பைத்தியக்காரத்தனமான சட்டமில்லையா? (நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது போல் கையை விரிக்கிறார்கள்).இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் எங்கள் மக்களை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும். இப்போது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் உங்கள் தூதரகத்தின் மீது கற்களைத்தான் எறிந்தார்கள். இன்னொருமுறை உங்கள் சட்டத்தையும் கருத்து சுதந்திரத்தையும் காரணம் காட்டி இதுபோன்று நடக்குமேயானால் உணர்ச்சி வசப்படும் பொதுமக்கள் எங்களது கட்டுப்பாட்டையும் மீறி கற்களுக்கு பதிலாக பெட்ரோல் குண்டுகள் கூட வீசலாம். அப்போது எங்களால் எங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாது (அவர்கள் முகத்தில் பலத்த அதிர்ச்சி). இந்த தகவல்களை உங்கள் நாட்டு அதிபருக்கும் வெளியுறவு செயலாளருக்கும் தெரிவித்து விடுங்கள்.
தூதரக அதிகாரிகள்: நிச்சயமாக உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டோம். இதனை எங்கள் நாட்டு தலைவர்களுக்கும் தெரிவிப்போம்.

(இறுதியில் அவர்களுக்கு திருக்குர்ஆன் ஆங்கில மொழிப்பெயர்ப்பு வழங்கப்பட்டது)
Related Posts Plugin for WordPress, Blogger...