எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களது உரிமைகள் என்ன என்ன..?
1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு.
3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு
4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்
*******
கை-விலங்கிடலாமா..?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராக இருந்தாலே ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை, கைது செய்யப்பட்டவரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது.
*******
கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல் எப்படி..?
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள 'குற்றவியல் நீதித்துறை நடுவர்' முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இந்த அதிகாரம் இல்லை. குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******
கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள் என்ன..?
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்
6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
******
நிற்க. 'இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா?' 'அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது?'
முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும்..! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்ய முடியும்..!
அதிசயம்
(24)
அரசியல்
(21)
இஸ்லாம்
(80)
உடல் நலம்
(49)
எச்சரிக்கை
(16)
சமூக பார்வை
(84)
சொதப்பல்
(14)
பயனுள்ள-தகவல்
(12)
பெண்கள்
(49)
மருத்துவம்
(6)
வரலாறு
(9)
Comedy
(14)
Job opportunities
(13)
Technology
(8)
வியாழன், மே 30, 2013
ஞாயிறு, மே 12, 2013
கதவு திறக்கும்’
திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.
போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.
சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர்.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .
நாட்கள் உருண்டோடின, அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தது.
அவள் கணவரும் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார்.மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.
அன்று இரவு அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே என்று கேட்டார்.அதற்கு அவள் கணவர் ...
”என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் ” என்றார்.
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்

தெரிந்து கொள்வோம் வாங்க-45
*வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சு விடவும், முழுங்கவும் முடியும்..
புதுப் பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
தர்பூசணியைத் தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
கனடா நாட்டவர், தங்களின் புகைப்படத்தை தபால் முத்திரையாகப் பயன்படுத்த
முடியும்.
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
எல்லாருடைய நாக்கு ரேகைகளும் கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.
சுவீடனில், ஒரு ஹோட்டல் ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும்
மீண்டும் கட்டப்படும்.
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டகச் சிவிங்கி மட்டும் தான் வலது, வலது, இடது, இடது
என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
பெரும்பாலான கைக்கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10 என்ற நேரம்
புன்னகையைக்
குறிக்கும்.
நீல நிறம், மக்களை அமைதியடையச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை
அமைதியாக வைத்திருப்பதற்காகச் சுரக்கின்றது.
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும்
செய்வார்.
15 எழுத்து ஆங்கில வார்த்தை, ஒருமுறை வந்த எழுத்து திரும்ப வராத வார்த்தை:
uncopyrightable
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6
வயதில் தான் வளர்கிறது.
வறுக்காத முந்திரிக் கொட்டை விஷத் தன்மை உடையது.
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ்
எனப்படும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)