வெள்ளி, அக்டோபர் 05, 2012

கருவரைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா?


மறுமைபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.இன்னும் அவனே மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான். எந்த ஆத்மாவும் தான் நாளை என்ன சம்பாதிப்பேன் என்று அறியாது. எந்த ஆத்மாவும் தான் எங்கே மரணிப்பேன் என்று அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன் நுட்பமானவன். லுக்மான்:34

இவ்வசனத்தில் இறைவன் 5விடயங்களைப்பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்கிறான். அதில் கருவரைகளில் உள்ளவை பற்றிய அறிவும் ஒன்று. இந்த வசனம் இன்றைய மருத்துவ அறிவியலுக்கு முரண்படுவதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் மருத்துவ அறிவியல் இதனை நிரூபிக்கிறது என்பதே உண்மையாகும். அதனை தெரிந்துகொள்ள முன்னர் இந்த வசனம் என்ன சொல்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்பது சிசு ஆணா பெண்ணா என்பதை மாத்திரங் குறிக்கவில்லை. விந்திலிருந்து குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? ஒற்றையா? இரட்டையா? என்பவைகளையும் இவ்வசனமும் குறிக்கிறது. அல்குர்ஆனில் சில வசனங்கள் இதை இன்னும் தெளிவுபடுத்துகின்றன.

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (6) آل عمران

‘அவனேகருவரையில் உங்களை அவன்விரும்பியவாறு வடிவமைக்கிறான்” ஆலு இம்ரான்:6

اللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنْثَى وَمَا تَغِيضُ الْأَرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِمِقْدَارٍ (8) الرعد : 8

‘ஒவ்வொரு பெண்ணும் தன் கருவில் சுமப்பதையும் கருவரைகள் சுருங்குவதையும் விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான்.ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.” ரஃத்:8

இந்த வசனங்களில் இறைவன் கருவரையில் வடிவமைக்கப்படல் எவ்வளவு காலம் கருவரையில் சிசு தங்கும் போன்ற செயற்பாடுகளை தானே நிர்ணயிப்பதாகவும் சொல்வது இவையனைத்தும் ‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்ற வசனத்தை தெளிவுபடுத்துகிறது.

நவீன மருத்துவ அறிவியலோடு இந்த வசனம் முரண்படுவதாய்ச் சொல்வது மருத்துவம் பற்றிய அறியாமை. இரண்டு அறிவியல் வளர்ச்சிகளை எடுத்துக்காட்டியே இதை முன்வைக்கிறார்கள்.

1.முற்பரிமாண நாற்பரிமாண அல்ட்ரா ஸவ்ன்ட் ஸ்கேனிங் கருவிகளின் வரவுகள்

2.நவீன மருத்துவ அறிவியல் பால்த் தேர்வு(sex selection) முறைகள்.

1.முற்பரிமாண நாற்பரிமாண அல்ட்ரா ஸவ்ன்ட் ஸ்கேனிங் கருவிகளின் வரவுகள்.



இது ஒளிக்கோட்பாட்டுக் கண்டுபிடிப்பின் விளைவாக ஏற்பட்ட ஒரு நன்மையெனலாம். ஒளியலைகளை கருவரைக்குள் செலுத்தி கருவின் நிலை பற்றி அறிய இதைப் பயன்படுத்துவார்கள். 1940 களில்தான் அறிமுகமாகின. ஆரம்பத்தில் இரு பரிமாணமாகவே இருந்த இந்தக் கண்டுபிடிப்பு இப்பொழு நாற்பரிமாணம் வரை முன்னேறியுள்ளது. இதனால் கருவின் களங்களுக்கு எந்தப் பாதிப்புங்கிடையாது. சிசுவின் நிலைகள் நோய்கள் வடிவமைப்பு பால் போன்றவற்றை இதன் மூலம் கண்டறியப்படுகின்றன.


2.நவீன மருத்துவ அறிவியல் பால்த்தேர்வு(sex selection) முறைகள்.

ஆண் குழந்தை தேவைப்படுகின்றவர்களுக்கு ஆண்குழந்தையையும் பெண்குழந்தை தேவைப்படுகின்றவர்களுக்கு பெண்குழந்தையையும் ஏற்படுத்துவதற்காக நவீன விஞ்ஞான முறைகள். இது இன்று பல அமைப்பில் ஒழுங்கில் செய்யப்படுகின்றன.

IUI.

Flow Cytometry / Sperm Separation.

PGD

இந்த அனைத்து முறைகளும் பெண்ணது சினை முட்டை ஆணின் இந்திரியத் துளியிலும் மேற் கொள்ளப்படும் சில விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகள். அவ்வாறு க்ரோமோஸோன்கள் சுமந்துவரும் டீஎன்ஏ வை பகுத்தும் இன்னும் சினைமுட்டைகளை அதிகரிக்கச் செய்வதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவைகள் கருவரைக்குள் செலுத்தப்படும்.

இந்த இரண்டு வளர்ச்சிகளையும்தான் ஆணா பெண்ணா என்று அறிவதென்ன உருவாக்கவும் செய்கிறார்களே என இறைமறைக்குச் சவாலாக வாதாடுகிறார்கள்.

இவைகள் ‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்ற வசனத்திற்கு முரண்படுகிறதா?



கருவரையில் கருவிற்கு இரு நிலை உண்டு. 12 வாரங்களுக்கு முன்னுள்ள நிலை 12 வாரங்களுக்கு பின்னுள்ள நிலை. அதாவது கிட்டத்தட்ட 4 மாதங்ளை எட்டியுள்ள நிலை. 4 மாதங்களைத் எட்டும்போது இந்தக் காலத்து விஞ்ஞானிகளுக்கு மாத்திரமல்ல அறிவியலின் வாசமே அடிக்காத அந்தக் காலத்து மக்களும் கருவிலுள்ள குழந்தை ஆணா பெண்ணா என்று அறியலாம் முறைகள்தான் வேறுபடுமே தவிர இதில் நவீன விஞ்ஞானத்திற்கு எந்த சிறப்பம்சமும் இல்லை. அந்தக் காலத்து அறியாமைக்கால மக்களாலும் அறிய முடிந்த ஒன்றை இறைவன் தான் மட்டும்தான் அறிவேன் என்று சொல்லியிருக்கமாட்டான்.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு இறை நிராகரிப்பாளன் கூட இந்த வசனத்தை அப்படிப் புரியவில்லை. அவ்வாறு புரிந்திருந்தால் தங்களது ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் காட்ட கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவரையிலுள்ள சிசுவை வெளியே எடுத்துப் பார்த்து ஆணா பெண்ணா என்று பதில் கூறியிருப்பார்கள். அவ்வாறு செய்திருந்தால் அந்த மக்களே அவனை நகைத்திருப்பார்கள். காரணம் இந்த வசனத்தை அவ்வாறு யாரும் விளங்கவில்லை. கர்ப்பத்தில் குழந்தை ஆணாகவே பெண்ணாகவே தோற்றம் பெற்றபின்னால் கருவரையை கிழித்துப் பார்த்துச் சொல்வதும் ஸ்கேன் மூலம் சொல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.

1ம் 2ம் 3ம் 4ம் 5ம்……வாரங்களில் அன்றைய காலத்து மக்களாலோ இன்றைய விஞ்ஞானத்தாலோ என்ன வழிமுறையைக் கையாண்டாலும் சொல்ல முடியாது. இந்த பதில் ஸ்கேனிங்கிற்குப் பொருந்துகிறது 2வது முறையான ‘பால் தேர்வு” முறைக்குப் பொருந்தவில்லையே என்ற கேள்வி இப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். இந்த நவீன வழிமுறைக்குக் கூட சில பழைய முன்மாதிரிகள் உள்ளன. சில சமூகங்கள் வலது விதை மூலம் ஆணும் இடது விதை மூலம் பெண்ணும் கிடைப்பதாக நம்பினர். இதனால் பெண் குழந்தை கிடைக்காமல் செய்வதற்காக சிலர் இடது விதையை நீக்கம் செய்தனர். இன்னுஞ் சிலர் அதைக் கட்டினர். இது போன்ற முயற்சிகளின் அறிவியல் வடிமே இந்தப் ‘பால் தேர்வு முறை” இந்த முறைகளின் ஆண் குழந்தைகளுக்கான சாத்தியப்பாடுகள் பின்வருமாறு:

IUI. : 55%

Flow Cytometry / Sperm Separation. : 80%

PGD: 99%

ஒரு கருவரையில் ஆண் குழந்தையை இந்த முறைகள் மூலம் உருவாக்க விரும்பினால் உருவாகுவாவதற்கான சாத்தியப்பாடுகளே இவைகள். இங்கேயும் விஞ்ஞானத்தால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த செயல்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட கருவாயினும் 12ம் 13ம் வாரங்களிலேதான் ஆணா பெண்ணா என மருத்துவர்கள் உறுதி செய்வார்கள்.

அப்படியாயின் இங்கேயும் ஸ்கேனிங்கிற்கு நாம் கேட்ட கேள்வியே கேள்வியாகும். எனவே ஒரு காலமும் இந்திரியத்துளியாக இருக்கும்போது களப்புத்துளியாக மாறும்போது தொங்கும் ஒரு அட்டைப் பூச்சி வடிவம் எடுக்கும் போது சதைத் துண்டாக இருக்கும் போது இது ஆணா பெண்ணா என அறியமுடியாது என்பது மட்டமல்ல குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? போன்ற எல்லாவற்iயும் அகிலத்தைப் படைத்து நிருவகிக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே அறிவான்.

வியாழன், செப்டம்பர் 27, 2012

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா?



அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால்நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ளவேண்டும். பெண்கள் தங்களுடைய முகத்தையும் இரு முன் கைகளையும் கரண்டைக்குக் கீழ் உள்ள கால்பகுதிகளையும் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும்.

இம்முறை ஹிஜாப் பர்தா என்று இஸ்லாமியவழக்கில் சொல்லப்படுகின்றது. பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுஅணிந்தால் அவர்கள் பர்தாவைப் பேணியவர்களாவிடுவர். ஆனால் இன்றைக்கு நடைமுறையில் இயல்பானஆடைகளுக்கு மேல் கூடுதலாக நீண்ட வேறு ஒரு ஆடையைப் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள்.

இந்தக்கூடுதலான ஆடை தான் பர்தா என்றும் பலர் கருதுகின்றனர். இவ்வாறு ஒரு பெண் தனது சுயவிருப்பத்தின்அடிப்படையில் கூடுதலாக ஆடைகளை அணிந்து கொண்டால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஆனால்எல்லோரும் இவ்வாறு தான் அணிய வேண்டும் என்றோ இது தான் இஸ்லாமிய பர்தா முறை என்றோ கட்டாயசட்டமாகக் கூறுவது கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பர்தாவிற்கு என பெண்கள் தனியே எந்தஒரு ஆடையையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆடை வேறு பர்தா வேறு என்றில்லாமல் பர்தா சட்டத்தைக்கடைப்பிடிக்கும் வகையில் தங்களது ஆடை முறையை அமைத்துக் கொண்டார்கள்

. இதைப் பின்வரும்செய்தியிலிருந்து அறியலாம். இக்ரிமா கூறுகிறார் :
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான்பின் ஸபீர் அல்குறழீ (ர) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ர)

அவர்கள்கூறுகிறார்கள்:
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முக்காடு அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர்ரஹ்மான் தம்மைத் துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில்(கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி-
நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள்சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர்ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சை நிற முக்காடுத்) துணியை விடக் கடுமையான பச்சைநிறமுடையதாக உள்ளது'' என்று சொன்னேன். (இதற்கிடையில்)-அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம்மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார்.ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.
அப்பெண்மணி, "(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும்வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத்திருப்திப்படுத்த முடியவில்லை'' என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். நூல்:புகாரி 5825
மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட பெண் பச்சை நிறத்தில் முக்காடுஅணிந்திருந்தார் என்றும் தனது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துக் காட்டினார்என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இயல்பான ஆடையைத் தான் தங்களது பர்தாவாக ஆக்கினார்கள்என்பதை இதன் மூலம் புரிகின்றோம். பொதுவாக ஆடைகளை அழகாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும் என்று மார்க்கம் போதிக்கின்றது. இந்த அடிப்படையில் ஆண்கள் எவ்வாறு தங்களது ஆடைகளை நல்லமுறையில் அமைத்துக் கொள்ள உரிமை பெற்றிருக்கின்றார்களோ அது போன்ற உரிமை பெண்களுக்கும்இருக்கின்றது. பொதுவாகப் பெண்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று திருக்குர்ஆன்கூறும் அதே வேளையில் வெளிப்படையான அலங்காரங்களை மட்டும் பெண்கள் வெளிப்படுத்திக் கொள்ளஅனுமதியளிக்கின்றது. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக்கொள்ளட்டும். அல்குர்ஆன் (24:31)
மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை அன்னியஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

பெண்களின் ஆடைகளில் வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும்.தேவை கருதி இந்த அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆடைகளில் இரண்டுவகைகள் இருக்கின்றது. சாதாரண ஆடைகள் பிறருடைய கவனத்தை ஈக்கும் வகையில் அமைந்த ஆடைகள்.பிறரை ஈர்க்கும் வகையில் அமைந்திராத சாதாரண அலங்காரங்கள் உள்ள ஆடைகளை பெண்கள் அணிவதைத்தான் மேற்கண்ட வசனம் அனுமதிக்கின்றது.

எந்த ஆடைகள் மிகவும் கவர்ச்சியாகவும் பிறர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கின்றதோ அது போன்றஅலங்கார ஆடைகளைப் பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்பு அணிந்துவரக் கூடாது. எனவே பெண்கள் அணியும்பர்தா என்பது பொதுவாக மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் வகையில் உள்ளஅலங்காரங்களைக் கொண்டிருந்தால் அதை அணிவது தவறல்ல.

எந்த வகையான அலங்காரங்கள் மக்களை விட்டும்தன்னை தனிமைப்படுத்தி காட்டக்கூடியதாகவும் பிறர் கவனத்தை தன்பால் ஈர்க்கக்கூடியதாகவும் அமைந்துள்ளதோஅது போன்ற அலங்காரங்கள் உள்ள பர்தாவை அணியக்கூடாது.
Related Posts Plugin for WordPress, Blogger...