பீ.ஜே அன்றும் இன்றும் 01 நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? பீஜே அன்றும்-இன்றும்!
بسم الله الرحمن الرحيم
நாளை மறுமையில் நபி[ஸல்] அவர்களின் பரிந்துரையைக் கேட்பது கூடுமா? என்பது குறித்து அறிஞர் பீஜே அவர்கள், திருக்குர்'ஆன் மொழியாக்கம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'திருமறை தோற்றுவாய்' என்ற நூலில் 'மறுமையில் பரிந்துரை' என்ற பகுதியில் எழுதியுள்ளதை கீழே படியுங்கள்;
''நபிமார்கள் மற்றும் நல்லவர்கள் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டுமென்று விரும்பினால், அப்போது இறைவனை மட்டும் வணங்கி இறைவனிடம் தான் இதை கேட்கவேண்டும். இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை என்று கேட்க வேண்டுமே தவிர, நபியே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கலாகாது.
பீஜேயின் மேற்கண்ட விளக்கத்தில், பரிந்துரையை நபிகளாரிடத்தில் நேரடியாக கேட்கக் கூடாது. அதே நேரத்தில், ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர் பின்னாளில் தனது திருக்குர்'ஆன் தமிழாக்கத்தில் 'பரிந்துரை பயனளிக்குமா' என்ற விளக்கத்தில் மேற்கண்ட தனது கூற்றிற்கு தானே முரண்படுவதை கீழே படியுங்கள்;
இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும். கூறினார்கள்.
முதலில் ''இறைவா! என் விஷயத்தில் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பரிந்துரை செய்ய வை' என்று கேட்கலாம் என்று சொன்னவர்,
பிறகு அவரே அந்தர் பல்டியடித்து, இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையத் தா!' என்று கேட்பது தவறாகும் என்று கூறுகிறார். நிகழ்ச்சிக்கொரு சட்டையை மாற்றுவது போன்று நித்தமும் ஃபத்வா'வை மாற்றும் இவரை மக்கள் புரிந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக