வெள்ளி, மார்ச் 02, 2012

அம்மா நம்பிவிடாதீர்கள்! (மமகவின் இரட்டை வேடம்)

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்....)
தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பாசமுள்ள மகன் தன் தாயிடத்தில், தனைப்பற்றிய ஒரு சுயவிளக்கத்தை அளிக்கும் பாசக்கதறல் என்று ஒரு கனம் சிந்திக்கின்றீர்களா? அதுதான் இல்லை; இவ்வாறு, அம்மா நம்பிவிடாதீர்கள்! என்ற தோரணையில் மமகட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் அவர்கள் டெக்கான் குரொனிக்கல் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் தான், அம்மா நம்பிவிடாதீர்கள்! என்று நாம் வழங்கியுள்ள தலைப்பு.

அது என்ன அம்மா நம்பிவிடாதீர்கள்! : அம்மா நம்பிவிடாதீர்கள்!.?


அப்படியென்றால் என்னவென்று நீங்கள் கேட்கும் கேள்வி நமக்கு விளங்குகின்றது.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று, திருச்சி மாவட்டம் முழுவதும், திருச்சி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

தமிழக அரசுக்கு நன்றி! என்ற தலைப்பிட்டு அவர்கள் ஒட்டியிருந்த போஸ்டரால் ஒரே பரபரப்பு! பார்க்கக்கூடிய மக்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொள்ளவில்லை. போஸ்டரை ஒட்டிய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வுக்குத்தான் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதற்கான காரணம் வருமாறு :

அந்தப் போஸ்டரைப் படம்பிடித்து அது தொடர்பான விமர்சனத்தை டெக்கான் கொரோனிக்கல் நாளேடு வெளியிட்டிருந்தது.
”கடந்த தி.மு.க ஆட்சியில் 4 மணி நேரமாக இருந்த மின்வெட்டை, தற்போது 8 மணி நேரமாக அதிகப்படுத்தி சாதனை படைத்து, தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய…. தமிழக அரசுக்கு நன்றி! – இவண் : மனிதநேய மக்கள் கட்சி – திருச்சி மாவட்டம்” இவைதான் அந்த போஸ்டரில் அவர்கள் எழுதியுள்ள வாசகம்.
இதே போஸ்டரை அப்படியே அச்சு அசலாக கோவை மாவட்ட மமகட்சியும் அடித்து ஒட்டியிருந்தது.

இந்த போஸ்டரைப் பார்த்தவுடன் மமகட்சிக்கு வீரம் வந்துவிட்டது போல. இந்த அளவுக்கு துணிவாக ஆளும் கட்சியை எதிர்த்து போஸ்டர் ஒட்டியுள்ளார்களே! என்று அப்பாவிகள் நினைத்தனர்.

சபாஷ்! பேஷ்! பேஷ்! என்று சொல்லி முடிப்பதற்குள், பத்திரிக்கையில் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அந்த போஸ்டர் குறித்து கொடுத்துள்ள விளக்கம், இந்த மமகட்சி கூட்டம் இன்னும் திருந்தவில்லை; ஒருபோதும் திருந்தவும் திருந்தாது என்பதைப் படம்பிடித்துக் காட்டுவது போல அமைந்தது.


தானே புயல் ஜால்ரா ஓய்வதற்குள் அடுத்த ஜல்ரா:

இப்போதுதான், சில நாட்களுக்கு முன்பாக, தானே புயல் சம்பந்தமாக, “தானே’ புயல் பாதித்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைப் பார்க்கும் போது, பிற மாவட்டங்களில் வசிப்போர், நமது மாவட்டத்தில் புயல் வரவில்லையே என்று, ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு ஜால்ரா தட்டி ஜவாஹிருல்லாஹ் சாதனை படைத்துள்ளார்.

அப்படி ஜால்ரா தட்டியவரா? இப்படி அம்மாவைக் கண்டித்து கண்டன போஸ்டர் ஒட்டியிருப்பார் என யாரும் எண்ணிவிடக்கூடாது என்றும், அவரைப்பற்றி யாரும் நல்லெண்ணம் வைத்து விடக்கூடாது என்பதற்காகவும், அவரே வழிய முன்வந்து இந்த விளக்கத்தைக் கூறியது போல அவரது விளக்கம் இருக்கிறது. அந்த விளக்கமும், ஒரு வகையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக, தானே புயல் சம்பந்தமாக போட்ட ஜால்ரா போன்றதுதான்.


தானே புயல் ஜால்ரா முழுவது படிக்க இங்கே கிளிக் செய்யவும் ..


விஷமிகள் அடித்த போஸ்டராம் :

இந்த போஸ்டர் குறித்த கருத்து தெரிவித்த, ஜவாஹிருல்லாஹ், இது ஏதோ ஒரு சில விஷமிகள் செய்த வேலை என்றும், மின்வெட்டு குறித்த பிரச்சனையில் நாங்கள் இதுவரை ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக எந்த எதிர்க் கருத்தும் சொல்லவில்லை என்றும் கூறி அசடு வழிந்துள்ளார். எனவே அம்மா அவர்கள், ”நாங்கள்தான், அதிமுக அரசுக்கு எதிரான இந்த போஸ்டரை ஒட்டினோம் என்று நம்பிவிட வேண்டாம். அம்மா! நம்பிவிடாதீர்கள்!” என்ற தோரணையில் இந்தக் கெஞ்சல் பேட்டி அமைந்துள்ளது. இவர்கள் இந்த அளவுக்கு மானம் கெட்டுப்போய் விட்டார்களே என நினைத்து யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

இவர்கள் தங்களது பதவி சுகத்தைத் தக்கவைக்கவும், தங்களுக்கு பதவிகளைப் பெறுவதற்கும் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளெல்லாம் சான்று பகருகின்றன. இவர்கள் இப்படி கேவலப்பட்ட பிழைப்பு பிழைப்பதற்கு… வேறு ஏதாவது மமகட்சி வேலையை பர்க்கலாம்.

தனது கட்சியினரையே விஷமிகள் என்று சொல்லி சாதனை படைத்த ஒரே தலைவர் :
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தங்களது கட்சியினர்தான் இந்த போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார்கள் என்பது ஜவாஹிருல்லாஹ்வுக்குத் தெரிந்திருந்தும், அம்மாவுக்கு ஜால்ரா தட்டுவதற்காக, தனது கட்சியினரையே விஷமிகள் என்று சொல்லி மாபெரும்(?) சாதனை படைத்துள்ளார்.

தங்களது தொண்டர்களையே விஷமிகள் என்று சொல்லி பாராட்டும் ஒரு உன்னத(?) தலைவர் கிடைக்க அந்த விஷமிகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி ஜவாஹிருல்லாஹ் அவர்கள், தனது கழக கண்மணிகளை, கழக விஷமிகளே! என்று அழைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பெயரால் நடக்கும் கொடுமையைக் கண்டிக்காத ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. ஜெயலலிதாவுக்கு அடிமை சேவகம் செய்யும் அடிவருடிகள் மட்டும்தான் அதைச் சரி கண்டு வருகின்றனர். அந்த அடிப்பொடிகள் கூட்டத்தில், அந்த அடிவருடிகள் வரிசையில் தனக்கும் இடம் வேண்டும் தாயே! ஆதால், நான் சொல்லி அடித்த போஸ்டர் என்று திருச்சி மாவட்ட போஸ்டர் குறித்து தாங்கள் நம்பிவிட வேண்டாம் அம்மா!

அம்மா! நம்பிவிடாதீர்கள்! என்று பதவிமோக வெறியில் முணங்கும், ஜவாஹிருல்லாஹ் அவர்களின் முணகல் குரல் உங்களுக்கும் கேட்கின்றதா?

எத்திப்பிழைக்கும் அரசியல்வாதிகள் அதில் உண்மையாளர்களாக இருப்பார்கள். ஆனால் ம்மகட்சித் தலைவர் நாங்களும் மக்களுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று காட்டி அப்பாவிகளை ஏமாற்றவும் வேண்டும். அதே நேரத்தில் இது விஷமிகள் வேலை என்று அம்மாவையும் துதி பாட வேண்டும். இந்தப் போஸ்டரை ஒட்டியது விஷமிகள் என்றால் ஒட்டிய திருச்சி கோவை மாவட்ட நிர்வாகிகளை ம்ம கட்சியில் இருந்து நீக்கினால் அதை அம்மா அவர்கள் உண்மை என்று நம்புவார். ஆனால் போஸ்டர் ஒட்டிய்வர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இவர் ஆபத்தானவர் என்பது உளவுத்துறையைக் கையில் வைத்திருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல் போகுமா?

அல்லது மின்வெட்டைக் கண்டிப்பதென்றால் அதையாவது ஒழுங்காக செய்ய வேண்டும். அதை ஒட்டிய்வர்கள் விஷமிகள் எனக் கூறி மின்வெட்டை ஆதரித்த பின் ஏமாளிகள் கூட நம்ப்மாட்டார்களே? இப்படி இருமுகம் காட்டுவோர் ஜால்ராவில் விசுவாசம் காட்டுபவர்களை விட மோசமானவர்கள். மமகட்சியினர் விஷமிகள் பட்டத்தில் திருப்தி அடையப்பொகிறார்களா? மானத்தைக் காக்கப் போகிறார்களா?

http://www.pdmtntj.net/2012/02/blog-post_27.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...