சனி, மார்ச் 24, 2012

ஷேய்க் அஹமது யாசீன் ஷஹீத் (ரஹ்)



அல்ஜேரா என்னும் பாலஸ்தீன கிராமத்தில் 1939 இல் பிறந்தவர் ஷேய்க் அஹமது யாசீன்.மூன்று வயதில் தந்தையை இழந்தார். 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு மற்ற பாலஸ்தீனியர்களைப்போல இவரும் அனாதையாக அலைந்தார்.ஆனால் கல்வியை ஆர்வத்தோடு கற்று உடற்பயிற்சியிலும் சிறந்து விளங்கினார்.அவற்றை வெற்றியின் இரு தோள்கள் என நினைத்தார்.கடுமையான போர் பயிற்சிகளை மேற்கொண்ட ஒருநாளில் மலையின் மீதிருந்து விழுந்து முதுகெலும்பு பழுதுபட்டு நடக்கமுடியாமல் ஆனார். உடல் ஊனமானாலும் உள்ளம் வீரத்தால் நிரம்பி வழிந்தது. கற்ற கல்வி இவருக்கு ஆசிரியர் வேலையை பெற்றுத் தந்தது. 1987 இல் "ஹமாஸ்" என்ற பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இவர் ஆரம்பித்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணிவகுத்தனர். யாசீன் அவர்களின் வழிகாட்டுதலில் விடுதலைப்போர் தீவிரமாக நடந்தது. இவரின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அஞ்சிய யூத பாசிச அரசு இவரை கைதுசெய்து சிறையிலடைத்தது. நடமாட முடியாமல் கண்பார்வையும் சரியாகத் தெரியாமல் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த யாசீன் அவர்கள் எட்டு ஆண்டுகள் இஸ்ரேலியர்களின் சிறைக்கொட்டடியில் வன் கொடுமைகளை அனுபவித்தார். 1997 இல் விடுதலையானார். ஆனாலும் அவரின் அறிவும் வீரமும் குன்றி விடவில்லை."ஹமாஸ்"எப்போதும்போல் போராடியது."அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் நாம் தலை வணங்க மாட்டோம்;பாலஸ்தீனையும் அல்குத்ஸையும் விடுதலைப் பெறச் செய்வதில் வெற்றி பெறுவோம்" என வீர முழக்கமிட்டு போர்செய்தார்.

இவரது ஆண்மைமிக்க அறைகூவலை எதிர்கொள்ள திறனற்ற பேடி வஞ்சகன் ஏரியல் ஷேரோன் 2004 மார்ச் 22 ஆம் நாள் இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணைகளை வீசி ஷேய்க் அஹமது யாசீன் avarkalai படுகொலை செய்து விட்டான். வாழ்நாள் முழுவதும் பாலஸ்தீன விடுதலைக்காக போராடி அண்ணல் நபிகள்(ஸல்) அவர்களின் வழியில் பேணுதலாக வாழ்ந்து காட்டிய அந்த புனிதப் போராளியின் உடல் அவர் வாழ்ந்த மண்ணுக்குள் அடக்கம் ஆகிவிட்டது. அல்லாஹ் தனது பொருத்தத்தை அவர்களுக்கு வழங்கி, அவனுடைய சுகதாக்கள் கூட்டத்தில் அஹமது யாசீன் அவர்களையும் சேர்த்து வைப்பானாக. ஆமீன்.

*******************************

## கூட்டம் குடும்பத்தை, மனைவி மக்களை, சுற்றம் நட்பை யூதனின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பறிகொடுத்துவிட்டு, பசியிலும் பஞ்சத்திலும் பரிதவித்து,தவித்த வாய்க்கு தண்ணீருக்கும் வழியின்றி, வடிப்பதற்கு கண்ணீருமின்றி, பச்சிளம் பாலகர்களின் கைகளில் கற்களைக் கொடுத்து,"மகனே! இந்தக் கல்லைக் கொண்டாவது நமது இஸ்லாத்தின் எதிரிகளை விரட்டியடி" என்று அன்பு முத்தம் கொடுத்து வழியனுப்பி,யூதனின் ஈவிரக்கமற்ற கொலைவெறிக்கு அந்த பாலகன் பலியாகி, அவனின் உயிரற்ற உடலைத் தூக்கிவந்து,"தாயே உன் மகன் எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்டு விட்டான் " என்று அந்த பாலஸ்தீன மக்கள் சொல்லும்போது, "இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிவூன்" என்று, கூறி தான் பாலூட்டிய மார்போடு அணைத்து,"என் அன்பு மகனே! அல்லாஹ் உனக்கு சொர்க்கத்தைத் தந்தருளட்டும்" என்று வாழ்த்தி மண்ணறைக்கு வழியனுப்பி வைக்கின்றாளே பாலஸ்தீனத்து முஸ்லிம் தாய்.....அந்தத் தாயின் வேதனையில் ஒரு துளியாவது ருசித்திருக்கிறோமா நாம்?

வாழ்கையை இழந்த நிலையிலும்கூட இதயத்தில் ஈமானையும் வீரத்தையும் சுமந்து வரலாறும் தெரியாது; வள்ளல் நபிகளாரின் வாழ்வும் தெரியாது.

வாயில் மட்டும் ஈமானை வழியவிடும் இவர்கள் யஹூதிகளைவிடக் கேவலமானவர்கள்.

இவர்களின் வழிகேட்டிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...