வெள்ளி, மார்ச் 09, 2012

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை


பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

சவூதியில் அல் ஐஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்களை கிண்டல் கேலி செய்துகொண்டிருந்த சவூதி வாலிபர் ஒருவரை நன்னெறிக் காவலர்கள் சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறை அந்த வாலிபர் மீது ஷரியா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. அந்த வாலிபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷேக் ஹசன் பின் சாத் அல்காம்தி, அந்த வாலிபர் அந்நகரின் மரித்தார்கொல்லையை (இடுகாடு) துப்புரவு செய்யவும், மேலும் இறந்த மனிதர்கள் ஐவரின் உடலைக் குளிப்பாட்டவும் உத்தரவிட்டு இதுவே தண்டனை என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

19 people like this.
19 shares

Raja Mohamed கேடு கெட்ட செயல்களுக்கு தண்டனை இப்படி இருக்கணும்...இன்னி இவன் கவர்மென்ட்டே கேலி பண்ண அனுமதி கொடுத்தாலும் செய்யமாட்டான்....:)நம்ம ஊரை அப்படியே கொஞ்சம் சுற்றிப்பார்த்தேன்....தப்புகளுக்கான தண்டனையை எண்ணிப்பார்த்தேன்.....சிரிப்பு சட்டங்களும், சிரிப்பு தண்டனைகளும் .ஒரு படமே எடுக்கலாம் போங்க...இன்னும் சொல்லப்போனால்...நம்ம ஊரில் கேட்டவர்களுக்குத்தான் பாதுகாப்பே...:))
3 hours ago · Like · 7
Basheer Ahamed இது போன்ற கழிசடைகளுக்கு தகுந்த தண்டனைதான் தண்டனை கடுமையானால் குற்றங்கள் குறையும் இதே நேரத்தில் இந்தியாவில் இது போன்ற தண்டனைகள் அமலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் இஸ்லாத்தில் இது போன்ற தண்டனைகள் இருக்கின்றது என்ற ஒரே காரணத்திற்க்காக இது போன்ற தண்டனைகளை அமல் படுத்த தயங்குகின்றனர் எல்லாவற்றிக்கும் தீர்வு இஸ்லாத்தில்தான் உண்டு
2 hours ago · Like · 2

Write a comment...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...