வெள்ளி, ஜனவரி 27, 2012

பிரார்த்தனைகள் (துவா )ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்

பிரார்த்தனைகள் ஒப்புக்கொள்ளப்படும் பல நேரங்கள் உள்ளன. அவைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

1) அதானுக்கும், இகாமத்துக்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை:

‘பாங்கிகிற்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை நிராகரிக்கப்பட மாட்டாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: 212).

2) நடு நிசியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் (மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது) கேட்கப்படும் பிரார்த்தனை:

ஒவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி எஞ்சி இருக்கும் போது அல்லாஹ் துன்யாவின் வானத்திற்கு இறங்குகின்றான், என்னிடத்தில் யாரும் பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்றுக் கொள்கின்றேன், என்னித்தில் யாரும் கேட்கக்கூடியவர்கள் இருக்கின்றார்களா? அதை நான் அவருக்குக் கொடுத்து விடுகின்றேன், என்னிடத்தில் பாவ மன்னிப்புத் தேடுபவர்கள் இருக்கின்றார்களா? அவர்களது பாவங்களை நான் மன்னித்து விடுகின்றேன். பஃஜ்ரு உதயமாகும் வரை இது நகழ்ந்து கொண்டிருக்கும்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 5411, முஸ்லிம்: 857).

3) ஸுஜுதின் போது:

‘ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக சமீபமாக இருக்கும் சந்தர்ப்பம் அவன் ஸுஜுதில் இருக்கும் போதாகும், எனவே அந்த நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனையில் ஆர்வம் காட்டுங்கள் உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக் கொள்வான்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 46, 4925, முஸ்லிம்: 974).

4) ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், ஸலாம் கொடுப்பதற்கு முன்னர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதை கற்றுத் தந்த போது பின் வருமாறு கூறினார்கள்: அவர் அதன் பின் தனக்கு விரும்பிய பிரார்த்தனைகளை கேட்கட்டும்.’ (புஹாரி: 538, முஸ்லிம்: 204).

5) ஜும்ஆ தினத்தில் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை மஃரிப் தொழுகையை எதிர்ப்பார்த்தராக வுழுவுடன் அமர்ந்தவர்:

தொழுகையை எதிர்ப்பார்த்து அமரும் ஒருவர் தொழுகையில் உள்ளவரைப் போன்றாகும். ‘ஜும்ஆ தினத்தில் ஒரு நேரம் உள்ளது, ஒருவர் தொழுகைக்கு நின்றவராக (அந்நேரத்தில்) அல்லாஹ்விடம் கேட்பாரானால் அவருக்கு அல்லாஹ் (அவர் கேட்டதை) வழங்காமல் இல்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 538, முஸ்லிம்: 204).

தொழுகைக்கு நின்றவராக என்பதற்கு அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது: தொழுகையை எதிர்ப்பார்த்தவராக, ஏனெனில் தொழுகையை எதிர்ப்பார்த்திருப்பவரின் சட்டம் தொழக்கூடியவரின் சட்டமாகும். ஏனெனில் அஸருடைய நேரம் என்பது (உபரியான) தொழுகைக்குரிய நேரமல்ல’ என்று விளக்குகின்றனர்.

எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் மறைவதற்கு முன் வரை ஒருவர் அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். மஸ்ஜிதிலே இருப்பாரானால் மஸ்ஜிதிலும், பெண்கள், நோயாளிகள் வீடுகளிலும் பிரார்த்தனைகளில் இடுபட வேண்டும். எனவே ஒருவர் வுழுவுடன் மஃரிப் தொழுகையை எதிர்ப்பார்த்தவராக பிரார்த்தனைகளில் ஈடுபட முடியும்.

பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளபடுவதற்கான காரணிகள்:

1) அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் பிரார்த்தனையில் ஈடுபடல்.

2) உள்ளச்சத்துடனும், பணிவுடனும் பிரார்த்தித்தல்.

3) அல்லாஹ்வின் பால் தேவையுடவனாக பிரார்த்தித்தல்.

4) அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழுதல்.

5) அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், உயரிய பண்புகளை நினைவுகூர்ந்து அவனை பிரார்த்தித்தல்.

6) அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்து, அவனது அருளின் மீது நம்பிக்பையிலக்காது தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபடல்.

1 கருத்து:

  1. Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...