அதிசயம்
(24)
அரசியல்
(21)
இஸ்லாம்
(80)
உடல் நலம்
(49)
எச்சரிக்கை
(16)
சமூக பார்வை
(84)
சொதப்பல்
(14)
பயனுள்ள-தகவல்
(12)
பெண்கள்
(49)
மருத்துவம்
(6)
வரலாறு
(9)
Comedy
(14)
Job opportunities
(13)
Technology
(8)
ஞாயிறு, ஜனவரி 29, 2012
கோலாகலமாக கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த பத்து வருடங்களுக்குப் பின் இந்த வருடமே தீவிரவாதிகளின் மிரட்டல் இல்லாமல் அச்சுருத்தலின்றி நாடு முழுவதும் அமைதியாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டதாக பத்திரிகை செய்திகள் கூறியது நாமும் அதைப் படித்து மிகுந்த சந்தோஷம் அடைந்தோம்.
இதற்கு முந்தைய வருடங்களில் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பே இன்ன ஜமாத் பெயரில் குடியரசு தினத்தன்று இத்தனை இடங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் மெயில் வந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் இதேப் பத்திரிகைகளின் வாயிலாக வெளி வந்து நாடே பரபரப்பாக காட்சி அளிக்கும்.
மேற்படி அதிர்ச்சி தகவல்கள் வெளியானதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பிரபலங்கள் கொடியேற்றச் செல்லும் முக்கிய இடங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை முடக்கி அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்யும்.
தேவை இல்லாமல் இத்தனை கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறதே என்ற ஆதங்கம் பொதுமக்களுக்கு ஏற்பட்டு அதனால் அந்த தீவிரவாதிகளை ஒட்டு மொத்த மக்களும் வெறுக்கும் நிலை ஏற்படும்.
இறுதியில் ஒன்றும் நடந்திருக்காது ஒன்றும் நடக்காமல் போனதற்கு அரசு ஏற்பாடு செய்த இத்தனைப் பெரிய பாதுகாப்பே முக்கியக் காரணம் என்று அரசு அறிவிக்கும். தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது என்று பத்திரிகைகள் அறிவிக்கும். ஆனால் இந்த வருடம் மட்டும் அவ்வாறான அச்சுருத்தல்கள், அதைத் தொடர்ந்த அறிவிப்புகள் எதுவும் இல்லை.
நமது சந்தேகம் ?
இந்திய அரசுக்கு மிகப்பெரும் அச்சுருத்தலாக திகழ்ந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் இந்த வருடம் எங்கேப்; போனார்கள் ?
தீவிரவாதிகள் அரசுக்கு மிரட்டல் விடுவதற்கு இது தான் சரியான தருணம் இந்த தருணத்தை தீவிரவாதிகள் எப்படி நழுவ விட்டார்கள் ?
இவற்றிற்கான தெளிவு !
வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்படும் குடியரசு தினத்தில் அரசுக்கு அச்சுருத்தலாக திகழ்ந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் பா.ஜ.க.வுக்காக ஓட்டு சேகரிக்க வடமாநிலங்களுக்கு சென்றிருக்கின்றனர் !
வட மாநிலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நேரு குடும்பமும், காங்கிரஸின் முக்கிய பிரபலங்களும் களமிறங்கி இருப்பதால் மேல்படி பா.ஜ.க.வின் உட்பிரிவாகிய RSS மற்றும் அதனுடைய தோழமை அமைப்புகளாகிய தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் போட்டிக்கு அங்கே சென்று கூடாரம் அடித்து விட்டனர்.
இந்த நேரத்தில் இது போன்ற ஈமெயில்களை அனுப்பி தேர்தலுக்கு முன் இது சங்பரிவாரத்தின் சதிவேலை தான் என்று கண்டுபிடித்து அறிவிக்கப்பட்டு விட்டால் பைசாவுக்காக பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்கும் ஒரு சில முஸ்லீம்களின் ஓட்டுகளும் கிடைக்காமல் போவதுடன் நடுநிலையுடன் சிந்திக்கக் கூடிய ஹிந்துக்களின் வெறுப்புக்கும் இதன் மூலம் ஆளாக நேரிட்டால் ஓட்டுகள் சிதறலாம் என்றுக் கருதியவர்கள் இந்த குடியரசு தினத்தில் முஸ்லீம் ஜமாத் பெயரில் விடும் குண்டு வெடிப்பு மிரட்டலை கை கழுவி விட்டனர்.
இல்லாத ஜமாத் பெயரில் மொட்டை மெயில் க்ரியேட் செய்து அதன் மூலம் இன்ன இடத்தில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று முன் கூட்டியே தகவல் அனுப்புவதும் தாக்குதல் நடத்தி முடித்ததும் அவற்றிற்கு நாங்களே பொறுப்பு ஏற்கிறோம் என்று அதே மெயில் ஐடியின் மூலம் மீண்டும் பதில் அனுப்புவதும் சங்பரிவார தீவிரவாதிகளின் வேலை என்பதை கடந்த மாலேகான் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடங்கி சமீபத்தில் பெங்களுரில் ஏற்றிய பாகிஸ்தான் கொடி வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இந்திய தேச விடுதலைக்காக உயிர் நீத்த முஸ்லீம்களின் வாரிசுகளை தீவிரவாதிகளாக தொடர்ந்து சித்தரித்துக்காட்டி அவர்களை கடைசிவரை அரசிடமிருந்து உரிமைகளைப் பெற விடாமல் தடுப்பதற்காக மேல்படி சங்பரிவார தேச துரோகிகளின் நாசகாரச் செயல் தான் என்பதற்கு மேற்காணும் நிகழ்வுகள் தௌளத் தெளிவான ஆதாரங்களாகும்.
ஒரு வாடகை வீட்டில் கூட குடி அமர முடியாமல், ஒரு வேலை உணவையும், உடுத்துவதற்கு ஒரு ஆடையையும் பெற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை கழிக்கும் நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் முஸ்லீம்கள் வாடி வதங்கிக் கொண்டிருப்பதாக அவர்களின் துயர வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது மத்திய அரசு நியமித்த ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கை. http://www.tntj.net/?p=12863
ஒட்டிய வயிறுக்கு ஒரு வேளை உணவை தேடிக்கொள்ள முடியாமல் மானத்தை மறைப்பதற்கு ஒரு ஆடையை அடைந்து கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் அல்லல் படும் முஸ்லீம்கள் குண்டு வைக்கப் பெரும் தொகையை எங்கிருந்துப் பெறுவார்கள் ?
ஒன்றிரெண்டுப் பேர் அவ்வாறு செய்தும் கூட இருக்கலாம் அவ்வாறான வகையைச் சேர்ந்தவர்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கவே செய்கின்றனர் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீவிரவாத முத்திரையைக் குத்தலாமா ?
தொடர்ந்து நடக்கும் அரசின் முக்கிய நிகழ்ச்சிகளின் போதெல்லாம் இல்லாத ஜமாத் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் மெயில்களை அனுப்பி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாடும் முஸ்லீம் சமுதாயத்தை அரசின் உரிமைகளையும், சலுகைகளையும் பெற விடாமல் தடுப்பது நியாயமா ? அரசும், பத்திரிகை துறையும், பொதுவான மக்களும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இருக்கும் மூன்றரை சதவீத இடஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தக் கோரியும், மத்தியில் பத்து சதவிகிதம் வலியுறுத்தியும், புதுச்சேரியில் இடஒதுக்கீட்டை முறையாக அமல் படுத்தாமல் இழுத்தடிக்கும் போக்கையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 14ல் நடத்தவிருக்கும் போராட்த்திற்கு தயாராகி விட்டீர்களா ? தயாராகுங்கள் பிறரையும் தயார் படுத்துங்கள். இந்திய தேச விடுதலைக்காக நம்முடைய சமுதாயத்தின் முன்னோர்கள் சிந்திய இரத்தத்தை மறந்து விடாதீர்கள்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக