செவ்வாய், ஜனவரி 17, 2012

தினமணியின் அறியாமை

"திருவள்ளுவர் தினம் -தை முதல் நாள்- தமிழ்ப்புத்தாண்டு- தமிழர் திருநாள்" என்று சென்ற வருட தமிழக அரசு சார்பாக திமுகவினர் சொல்ல...

"இல்லை... இல்லை... சித்திரை ஒண்ணுதான் தமிழ்புத்தாண்டு என்று இன்றைய தமிழக அரசு சார்பில் அதிமுக சொல்ல...

தமிழர்கள் நாம் எது 'ரியல் புத்தாண்டு' என்று மண்டையை பிய்த்துக் கொள்கிறோம்..! நம் பூமி எந்த இடத்தில் இருந்து சூரியனை சுற்ற ஆரம்பித்தது என்று எவருக்கும் தெரியாது. எனவே, எந்த மாதம் வேண்டுமானாலும் ஓர் ஆண்டின் தொடக்கமாக இருக்கலாம். இந்நிலையில், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று பள்ளியில் பழமொழி படித்தோம். இப்போதெல்லாம் தை பிறந்தால் அது சண்டைக்குத்தான் வழி அமைக்கிறது. அதிலாவது அர்த்தம் இருந்தால் கூட பரவாயில்லை. முட்டாள்த்தனமாக சண்டை நடக்கிறது.

திமுக காரர்கள் கருணாநிதியை கூலிங் கிளாசுடன் பெரிய கருந்தாடி வைத்து உயரமாக கொண்டை முடித்து 'திருவள்ளுவர் கெட்டப்'புக்கு மாற்றி "தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு" என்று போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள்.

இதைக்கண்ட உடனே தினமணிக்கு மூக்கில் வியர்த்து விட்டது.

அந்த போஸ்டரை ஃபோட்டோ பிடித்து போட்டு... அதன் கீழே ஏதோ தம் இஷ்டத்துக்கு உரைநடை மாதிரி இல்லாத 'ஏதோ ஒரு அரைகுறை நடை'யில் தப்பும் தவறுமாக........



இவிங்களுக்கு மட்டும் பூத்தாண்டு பொறக்குதுங்கோஓஓஓஓ!
கருணலொள்ளுவர் ஆண்டு
சுடாலிங் மாதம் சென்று
கனிவலி மாதம் பிறக்கும் முதல்நாளில்
தம்மில்லத்தாருக்கு பூத்தாண்டு பொறந்ததை
தம்மில்லருக்கு பொறந்ததாய்
துக்ளக் தர்பார் நடாத்தினீய்ங்களே!!
நீவிர் வாழ்க வாழ்க!!
ம்.....தன்னேரில்லாத் தமிழே!
உனக்கும் கறுப்பு (கண்ணாடி) திரையிட்டு
உன்புகழை மறைக்கக் கூடும்
ஒரு நாள்...ஓர் நாள்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
(copy & pasted from Dinamani)

.......இப்படி எழுதி இருந்தது..!

இதற்கு கீழே நம் மணி மணியான பல தினமணி வாசகர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் பின்னூட்டத்தில்... 'அதெப்படி எங்கள் திருவள்ளுவரை இப்படி அவமானப்படுத்தலாம்' என்று..? இதனை கேள்வி கேட்ட எனது பின்னூட்டத்தை தினமணி வெளியிடவே இல்லை..! அதனால் இங்கே பதிவு போடவேண்டிய அவசியமாகிவிட்டது..!

நாம் TTC பேருந்தில் பார்த்த அந்த வெண்தாடித்தாத்தா படம் என்ன திருவள்ளுவரின் சொந்தப்படமா..? உண்மைப்படமா..? இல்லையே..? அது கற்பனையாக வரையப்பட்ட புனைவுப்படமாயிற்றே..? "புனைவினால் திருவள்ளுவருக்கு இழுக்கு சேரக்கூடாது" என்ற இன்றுள்ள இதே நல்ல எண்ணம் அன்றே இருந்திருந்தால்... முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் புனைவுப்படம் போட்ட அன்றே போராடி இருந்திருக்கலாமே..? அல்லது ஏதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுத்து இதைத்தவிர வேறு புனைவுப்படங்கள் ஏதும் யாரும் வரையக்கூடாது என்று சட்டம் போட்டு இருக்கலாமே..? 'தும்பை விட்டு ஏன் வால்' என்பதே என் கேள்வி..!

அசலை காக்க புனைவை எதிர்த்தால் நாம் வரவேற்போம்..! ஆனால், அசல் என்று நம்பி ஒரு புனைவுக்காக இன்னொரு புனைவை எதிர்க்கும் இந்த எதிர்ப்பை எப்படி நாம் ஆதரிக்க முடியும்..!

இதற்குமுன்... வெண்தாடி, ஜடாமுடி கொண்டையுடன் புனைவு முகம் போட்டு இஷ்டத்துக்கு வரைந்த போதெல்லாம் வராத ஆங்காரம்... கோபம் எல்லாம்... இப்போது கருந்தாடி, கூலிங் கிளாஸ், சிகப்பு உதடு, வெண்மை கன்னம் என்று 'பந்தா'வாக மற்றுமொரு திருவள்ளுவர் புனைவு படத்துக்கு மட்டும் ஏனப்பா இம்புட்டு கோபம் வருகிறது..?



"திருவள்ளுவரின் நிஜமான உருவம் எது?" என்று... அதை கற்பனையாக வரையும் போது எவருக்குமே தெரியாது அன்று..!


"திருவள்ளுவரின் படம் புனையப்பட்ட கற்பனைதான்..!" என்று ஒருத்தருக்குமே தெரியாமல் போனது இன்று..!


இதில், 'திருவள்ளுவரை அவமானப்படுத்தி விட்டார்கள்' என்று தினமணி போன்ற ஒரு முன்னணி பத்திரிக்கை அறியாமையில் பொருமுவது... கேலிக்கூத்து... என்றால், அதில் பின்னூட்ட மிட்ட ஒருத்தருக்கும் கூடவா தெரியவில்லை... திருவள்ளுவர் படம் ஒரு பொய் என்று..!? பொய்யை எப்படி அவமதிக்கமுடியும்..?

ஒருகாலத்தில் புனைவு என்று இருந்தது பிற்காலத்தில் மனதில் பதிந்து பதிந்து அதுவே போகப்போக உண்மை என்று ஆகி விட்டதை பார்க்கிறீர்களா...?

அதிகாரம் 30. வாய்மை
குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

பொருள் :- யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை.

அடப்பாவிகளா... வாய்மை பற்றி இவ்வளவு தெளிவான குறள்களுடன் அதிகாரம் எழுதியவருக்கே... ஒரு பொய்யான உருவத்தை கொடுத்து விட்டீர்களே..? அந்த பொய்யான உருவத்துக்கு பதில் இன்னொருத்தன் இன்னொரு பொய்யான உருவம் கொடுத்தால் ஏன் கோபப்பட வேண்டும்..?
.
இன்று ஒருவேளை அந்த சாட்சாத் அசல் திருவள்ளுவரே நேரில் நம் முன்னே வந்து நின்று... "நான் தாண்டா வள்ளுவன்" என்றாலும்... "ஹலோ பெருசு... டாஸ்மாக்குல சரக்கடிச்சிட்டு ஒளராம சும்மா அப்பால போய் ஓரமா குந்து... அதுக்குமுன்னால, தோ பார்... எங்க திருவள்ளுவரு இவர்தாம்பா.." என்று கன்னியாகுமரி சிலையை சுட்டி, ஒரிஜினலுக்கே பெப்பே காட்டி விடுவார்கள் அல்லவா நம் தமிழ்க்குடிமகன்கள்..! அந்தோ பரிதாபம் அந்த வாய்மை..!
.
இப்போது புரிகிறதா..? 'மனித குல இறப்புக்கு பின்னர் நாளை மறுமையில் நியாயத்தீர்ப்பு நாளில் கவ்சர் தடாகத்துக்கு அருகே, ஒற்றை மனிதராய் நிற்கும் தங்கள் இறைத்தூதரை நேரில் காண இருக்கும் முஸ்லிம்கள், தம் நபிக்கு பொய்யான புனைவு உருவங்களை யாருமே வரைந்து குழப்பம் ஏற்படுத்தக்கூடாது' என்று ஏன் இவ்வளவு பிரயத்தனப்படுகிறார்கள் என்று..? ஏதோ.... புரிந்தால் சரி..!

'குழப்பம் இல்லாதிருக்க உங்கள் நபிக்கு உண்மையான வரைபடம் ஒன்று இருந்திருக்கலாமே' என்போருக்கான பதில்...

அப்படி ஒரு படம் இருந்திருந்தால்... முந்தைய நபியான ஈசா அலை...(ஜீசஸ் கிரைஸ்ட்)க்கு வைக்கப்பட்டது போல இவருக்கும் மக்கள் சிலை வைத்து, சர்ச்(தர்ஹா)கட்டி, இவரையும் கடவுளாக்கி, கிரிஸ்டியாநிசம் போல... 'முஹம்மதியானிசம்' என்று ஒரு புதிய மதத்தை உருவாக்கி, ஆதி மனிதர் ஆதமுக்கு அருளப்பட்ட, முஹம்மத் நபியால் இறுதியாக புணரமைக்கப்பட்ட இன்று நம்மிடமுள்ள ஏக இறைவணக்கம் கொண்ட அதே தூய இஸ்லாம் மீண்டும் ஒருமுறை சிதைக்கப்பட்டு இருந்திருக்கும்..! அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில்தான் படு உறுதியாக இருந்தார்கள்... இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மத் நபி (ஸல்..) அவர்கள்..!
http://pinnoottavaathi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...