காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் நகர் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
1) ராஜீவ் காந்தி மருத்துவ காப்பிடு திட்டத்தை மஞ்சள் நிற ரேசன் கார்டு வைத்திருக்கும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் அமல்படுத்த வேண்டும்,
2) புதுச்சேரி அரசு அறிவித்தபடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காரைக்காலில் உடனடியாக அமைக்க வேண்டும்,
3) காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும்,
4) காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள CT Scan மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும்
என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரம் நகர தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த தெருமுனை பிரச்சாரத்திர்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அலாவுதீன், மாவட்ட தலைவர் லியாகத் அலி, மாவட்ட பொருளாளர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.யூசுப், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்த தெருமுனை பிரச்சாரமத்தில் நிரவாகிகள் சபுருதீன், ஹசனுதீன், சர்புதீன், ஜியாவுதீன், சாதிக், சதாம் பலர் கலந்து கொண்டனர், முடிவில் தமுமுக நகர செயலாளர் நஜிமுதீன் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக