2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இந்த குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
எஸ்ஸôர் குழுமத்தின் மேம்பாட்டாளர்கள் அஞ்சுமன், ரவி ரூயா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸôர் குழுமத்தின் திட்டமிடுதல் துறை இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் உள்ளன.
÷லூப் டெலிகாம் நிறுவனத்தை முன்னிறுத்தி மத்தியத் தொலைத்தொடர்புத் துறையை மோசடி செய்து 2008-ம் ஆண்டில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விரைவில் கைது?÷இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், குற்றத்துக்கு சதி செய்தல், மோசடியில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் கீழ் இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. குற்றச்சாட்டப்பட்டுள்ள 5 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
÷105 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பல்வேறு ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை டிசம்பர் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.
எஸ்ஸôர் மறுப்பு: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தங்கள் நிறுவனத்தின் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எஸ்ஸôர் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அனைத்து விதிமுறைகளுக்கும் உள்பட்டுதான் 2ஜி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதில் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எங்கள் நிறுவனம் அரசின் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
÷ஆனால் இவர்கள் மோசடியாக குறைந்த விலைக்கு 2ஜி அலைக்கற்றை பெற்று அதிக லாபம் ஈட்டியுள்ளனர். ஏற்கெனவே தொலைத்தொடர்பு சேவையில் உள்ள எஸ்ஸôர் நிறுவனம், லூப் டெலிகாம் நிறுவனத்தை முன்னிறுத்தி, அந்த நிறுவனத்தின் பெயரில் மோசடியாக 2ஜி அலைக்கற்றை பெற்றுள்ளது என்பது முக்கியக் குற்றச்சாட்டு.
÷முன்னதாக 2ஜி வழக்கில் சிபிஐ இரு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. இதில் 14 பேர் மீதும், 3 நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா, திமுக எம்.பி. கனிமொழி, ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ஆ.ராசா, பெகுரா தவிர மற்றவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
thanks to thedipaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக