முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.
நமது சகோதரர்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் அர்கான் மாநிலத்தில் இன அழித்தொழிப்பிற்கு பலியாகி வருகின்றார்கள். முஸ்லிம்களை படுகொலைச் செய்யும் பெளத்த பயங்கரவாதிகளுக்கு அரசாங்கத்தின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைத்துவருகிறது.
மியான்மரில் முஸ்லிம்கள் கொடூரமாக இனப்படுகொலைச் செய்யப்பட்டு வரும் வேளையில் உலக ஊடகங்கள் அங்கிருந்து வரும் செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது மிகக்கொடுமையாகும்.
மியான்மரில் முஸ்லிம்களின் உண்மையான பிரச்சனை ஏழ்மையோ, பட்டினியோ அல்ல. மாறாக அவர்கள் ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்குகிறார்கள் என்பதுதான் இந்த படுகொலைகளின் பின்னணியில் அமைந்துள்ளது. அவர்களுக்கு உதவுவது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதான கடமையாகும்.
உலகியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் அவர்களுக்கு நாம் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். உலக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்கள் வாழும் நாடுகளின் அரசுகளிடம் பர்மா முஸ்லிம் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், பர்மா முஸ்லிம்களுக்கு உதவவும் தொடர்ந்து போராடவேண்டும். ஆக்கப்பூர்வமான உதவிகளை அம்மக்களுக்கு அளிக்க முன்வரவேண்டும். தான தர்மங்கள், பிரார்த்தனை, பர்மா முஸ்லிம்களின் துயரத்தை நமது துயரமாக கருதுதல் போன்ற வழிகளிலும் முஸ்லிம்கள் தங்களது கடமையை நிறைவேற்றவேண்டும்.
முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்கள் அந்நாடுகளின் அரசுகளிடம் தீவிரமாக வலியுறுத்துதல் அவசியம். சோசியல் மீடியாக்கள் ஒரு சில இதழ்கள் மூலமாக மட்டுமே பர்மா முஸ்லிம்களை குறித்த செய்திகள் பரவுகின்றன. ஜும்ஆ மேடைகளிலும், சாதாரண முஸ்லிம்களிடமும் இச்செய்திகள் கொண்டுச் செல்லப்பட வேண்டும்.
உலக முஸ்லிம் நாடுகளின் கண்பார்வையில் இந்த கூட்டுப் படுகொலைகள் நிகழ என்ன காரணம்? பெளத்தர்கள் ஏன் இவ்வளவு துணிச்சலாக முஸ்லிம்களை கொலைச் செய்கிறார்கள்? காரணம் வேறொன்றுமில்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவும் தகுதியுடைய முஸ்லிம் ஆட்சியாளர் உலகில் இல்லை என்பதுதான்.
முஸ்லிம் உலகில் தற்பொழுது நடந்துவரும் மாற்றங்கள் அதற்கு வழிவகுக்கட்டும்.
‘முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக யார் கவலைப்படவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ (திர்மிதி) என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை உணர்ந்து நாம் செயல்படுவோம்! இச்செய்தியை அனைத்து மக்களிடமும் பரவச் செய்யுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக