வியாழன், மே 24, 2012

கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!



தலை குளித்து முடித்து விட்டு காயவைக்கும் போது கொஞ்சம் முடி உதிர்ந்தாலே போதும். எதையை இழந்து விட்டது போல நினைத்து ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். முடி கொட்டுவது என்பது இயல்பானதுதான்.

நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 200 முடிவரை இழக்கிறோம். கூந்தலை பராமரிப்பதில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. இது ஆண், பெண் என அனைத்து தரப்பினருக்கும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மருந்துகளை அளிக்கிறது.

மூன்று தோஷங்கள்

கூந்தல் வளர்ச்சிக்கும் மூன்று தோஷங்களுக்கும் தொடர்புள்ளது. இந்த தோஷங்கள் உடலில் சம நிலையில் இருந்தாலே கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு மண்டல நோய்கள் இவற்றாலும் முடி உதிரலாம். பாதத்திலிருந்து தலை வரை செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டாலும், முடி உதிரலாம். காலில் வெடிப்பு, கால்ஆணி, இவைகளாலும் முடி உதிரலாம்.

பெண்களுக்கு, அவர்களில் மாதவிடாய் கோளாறு தலைமுடியையும் பாதிக்கும். அதிக உதிரப்போக்கு பலவீனத்தை உண்டாக்கும். பிரசவம், கருச்சிதைவு இவற்றின் போது, உதிர இழப்பு அதிகமானால், முடி உதிரும்.

முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும். அப்போது தலைவாரிக் கொண்டால் முடி சுலபமாக உடைந்து விடும். அதிகமாக ஹேர் டிரையர் உபயோகிப்பதும் தவறு. முடியை கருமையாக்க பூசும் சாயமும் முடி உதிர காரணமாகலாம்.

சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும்.

பிரிஞ்சி இலையுடன் வேப்பிலை மற்றும் 25 கிராம் துளசி இலையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து டீஸ்பூன் எடுத்து ஐம்பது மி.லி. தண்ணீரில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்கமுடி உதிர்வது நிற்கும். வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, கூந்தலை அலசவும்.

எண்ணெய் மசாஜ்

தேங்காய் பால், தேங்காய் எண்ணைபோல, முடிக்கு நல்லது. தேங்காய் பாலை நேராகவே தலையில் தடவி அலசலாம். தேங்காய் பாலுடன் எலுமிச்சை விதைகளை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 10-15 நிமிடம், பாதாம் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையால் மசாஜ் செய்யவும்.

கற்பூரவில்லையின் பச்சை இலைகளையும் சேர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்கு அரைத்து, தேங்காய் பாலுடன் கலந்து, அரை மணி கழித்து அலசலாம். தேங்காய் பால், மருதோன்றி இலை, இவற்றை அரைத்து, சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து, ஷாம்பு போட்டு குளித்தபின், தலையில் தடவி வரலாம்.

தேங்காய் பாலுடன், காயவைத்த வெட்டிவேர், வெள்ளைமிளகு போட்டு கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டாது. நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி இரண்டையும் தேங்காய் பாலில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

அரை கப் தேங்காய் எண்ணெய் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து வேர் கால்களில் படுமாறு மசாஜ் செய்ய கூந்தலில் பொடுகுத் தொல்லை இருந்தால் நீங்கும்.

தலைக்கு குளிர்ச்சி

வெந்தயத்தை தனியாக அரைத்து தேய்த்துக் குளிக்கலாம். கால் மணி நேரத்திற்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும். வெந்தயத்தை பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் மோருடன் குடித்துவர, உடல் சூடுகுறையும். இல்லை இரவு படுக்குமுன்பு ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை, வெந்நீருடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் சூடு குறைந்து முடி நன்கு வளரும்.

மிளகு, வெந்தயம், நெல்லி முள்ளி இவை மூன்றையும் அரைத்து தலையில் தேய்த்து கொண்டால் முடி வளர நல்லது. எலுமிச்சை விதை மிளகு இரண்டையும் விழுதாக அரைத்து தடவலாம்.

பித்தம் தணியும்

உடலில் பித்தம் அதிகமானலே நரை ஏற்படும். எனவே பித்தத்தை தணிக்க ஆயுர்வேதத்தில் மருந்துகள் கூறப்பட்டுள்ளன. 2 டீஸ்பூன் ஹென்னா பவுடர் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் வெந்தய பவுடர், 2 டீஸ்பூன் புதினா சாறு, 2 டீஸ்பூன் துளசி சாறு கலந்து பேஸ்ட் போல செய்து தலைக்கு அப்ளை செய்யவும். 2 மணிநேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கவும். சாதாரண ஷாம்பு போட்டு தலையை அலசலாம்.

தலைக்கு குளித்து வந்தவுடன் மரிக்கொழுந்தை வைத்து அல்லது திருநீற்றுபச்சிலையை தேய்த்துவிட்டு, கொண்டை போட்டுக் கொண்டால் சூடு குறைந்து முடி வளரும். கொத்தமல்லி விதையுடன் தனியா இஞ்சியை துருவி சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணை சேர்த்துக் குளித்தால் பித்தம் போகும். முடி உதிர்தல் நிற்கும்.

செம்பருத்திப்பூவை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும் முடி உதிர்தல் குறையும். செம்பருத்தி இலை, பூ இவற்றை சீயக்காய் தூளுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வருதல் மிகவும் நல்லது. கெமிகல்கள் கலந்த ஷாம்புவை உபயோகித்தபின், செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஷாம்புவினால் ஏற்படும் எந்த வித ரசாயன தீங்கும் ஏற்படாது. பச்சை கறிவேப்பிலையை பால் விட்டு அரைத்து, தலையில் தடவி, 1 மணிநேரம் கழித்து குளித்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.

வழுக்கையை தடுக்க

கூந்தல் வளர்ச்சிக்காக பாரம்பரியமாகவே ஆயுர்வேத தைலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீலிபிருங்காதி தைலம், பிருங்காமலாதி தைலம், பிருங்கராஜ் தைலம், தூர்வாதி தைலம், கருசிலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம் போன்றவை கூந்தல் வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. அதிமதுரத்தை இடித்து பொடி செய்து, எருமைப்பால் சேர்த்து நன்றாக அரைத்து, எருமைப்பாலிலேயே குழைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், வழுக்கை விழுந்த இடங்களில் முடிவளரும். தினமும் 1 டீஸ்பூன் திரிபால சூரணம், படுக்குமுன், தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கவும். முடி வளர்ச்சிக்கு உதவும்.

புகை போடுங்க

தலைக்கு குளித்தபின், கூந்தலுக்கு புகைபோட, வெந்தயம், துளசி, வேப்ப இலைகள், இவைகளை பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி பெருகும் என்றும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. உடலின் தற்காப்பு சக்தியை மேம்படுத்த பயன்படும் நரசிம்மரசாயனம், குமாரயஸ்வசவம், பிருங்கராஜஸவம் போன்ற உள்ளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் முடி வளர்ச்சி பெருகும்.
Like · · Share

Bisrul Haffi Bisrul Haffi, Mubi Jannath and 9 others like this.
5 shares
Mubi Jannath very useful information
3 hours ago · Like
Mohamed Farook ithellam kulikiravangalukku than ithu useful (athunale enakku romba usefula irukku)
3 hours ago · Like

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...