சனி, மே 05, 2012

மனிதன் உறுவாக்கம்


அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' "கர்ப்பம்'' இஸ்லாமின் பார்வை இறைவன் முதல் மனிதனை மண்ணால் படைத்து அவரிலிருந்தே அவருக்கு ஒரு துனையையும் படைத்தான். அதன் பிறகு அந்த இருவரின் மூலமாக மனிதவர்க்கத்தை இந்திரியத்தைக் கொண்டு படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியையக் கொண்டு (உங்களைப் படைக்கிறான்) அல்குர்ஆன்,53:46 (கர்ப்ப கோளறைக்குள்) சொட்டு சொட்டாய் இந்திரியத் துளியாக அவன் இருக்க வில்லையா (அல்குர்ஆன்,75:37 அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண் பெண்) ஜோடியாக படைத்தான் அவன் ஆக்கினான் அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும் அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) என்னும் ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும் (அல்குர்ஆன்,35;11 இந்துரியத் துளியின் மூலமாக மனிதனை உருவாக்குவதற்காக இறைவன் தேர்வு செய்த இடம் தான் 1 தந்தையின் முதுகந்தண்டு. (இங்கு இந்திரியமாக மனிதக் கருவை சேமித்து வைத்தல்) 2 தாயின் கர்ப்பப்பை (இங்கு பல மாறுப்பட்ட நிலைகல் ஏற்ப்பட்டு மனிதன் உருவாக்குதல்) கர்ப்பக் கோளறை. இதைதான் இறைவன் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின்னர் (உங்கள் தந்தையிடம் ) தங்கவைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விலங்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை தெளிவாக விரிவித்துள்ளோம் (அல்குர்ஆன்,6:98) மனிதன் தனது தந்தையின் முதுகந்தண்டில் இருந்த இடத்தை குறிப்பதற்கு ('தங்க வைக்கப்படுபவர்') 'முஸ்தாகா்ரு' என்றும் தாயின் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டதை ('மறைத்து வைக்கப்படவது') முஸ்தவ்தா என்றும், அல்குர்ஆன்;6:98, இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் சொன்னதாக இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அடுத்ததாக பல மாறுப்பட்ட நிலைகள் ஏற்பட்டு மனிதனாக உருவக்குதல் கர்ப்பக் கோளறை. இதைதான் இஸ்லாம் அா்ரஹம் கர்ப்பக் கோளறை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''திண்ணமாக அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொருப்பாளராக நியமிக்கிறான், அவர்'இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு'' என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும் போது 'இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா ? நற்பாக்கியம் பெற்றதா ? துர்பாக்கியம் உடையதா? இதன் வாழவாதாரம் எவ்வளவு ? (இதன்) ஆயுள் எவ்வளவு ? என்று கேடப்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்னயிக்கப் பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போது எழுதப்படும். (புஹாரி :3333)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...