வெள்ளி, அக்டோபர் 21, 2011

comedy

இதையெல்லாம் அனுப்பிச்சு வைச்ச நண்பருக்கு ரெம்ப நன்றி.. அனேகமா , நெட்லே ஏற்கனவே யாரோ , எழுதி இருக்கலாம் னு நெனைக்கிறேன்.. நல்லா இருக்குதான்னு நீங்களே பாருங்க... எனக்கு புடிச்சு இருக்குப்பா .....
==========================================================
“மாப்பிள்ளை டிவியில எல்லாம் வராரு”
“அடேடே… எந்த நிகழ்ச்சியிலே?”
“குற்றம், நிஜம் நிகழ்ச்சிகள்ளே குத்தவெச்சி உட்கார்ந்திருப்பாரே, பார்த்ததில்லை?”
==================================================================
... டி வி யில எங்கே பார்த்தாலும், ஒரே அழுகை , அழுகை... ஏன்..? இம்புட்டு வெறி? எவன் ஆரம்பிச்சு வைச்சான்..?
முதலில் மெகா சீரியல்களில் ஆரம்பித்தது அழுகை.
அழுகாச்சிக்கு இருக்கும் மார்க்கெட் வால்யூவைப் பார்த்துவிட்டு அழுகாச்சி ஸ்பெஷலாக நடிகை லட்சுமி ‘கதையல்ல நிஜம்’ ஆரம்பித்தார்.
தாய்மார்களும் வீட்டில் வேறே வேலை இல்லாமல் இருக்கிறவர்களும் பிசியாக அழ ஆரம்பித்தார்கள்.
அப்புறம் விசுவின் டாக் ஷோவில் அழுதார்கள்.
அதற்கப்புறம் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பாட்டுப் போட்டிகளில் அழுகை, நீயா நானாவில் அழுகை என்று அழுகாச்சியின் ஆட்சி பரவ ஆரம்பித்தது. டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கூட அழுகிறார்கள்!

இப்படியே போனால் செய்திகள், ராசிப்பலன் நிகழ்ச்சியில் கூட அழுவார்கள் போலிருக்கிறது.

ராசிப்பலன்களில் விஷால் கண் சிவக்க தோன்றுகிறார்.
“கன்னி ராசி நேயர்களே……” தொண்டை அடைத்து கண்ணில் நீர் முட்டி பேச்சு நின்று விடுகிறது.
அப்புறம் மணிரத்னம் படம் போல கொஞ்சம் காற்றும் கொஞ்சம் வார்த்தைகளுமாக
“உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்……..” முஸ்க்… முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ’ஜாக்கிரதையா இருங்க’ என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டுகிறார்.

செய்திகளில் தலைவிரி கோலமாக ஜெயஸ்ரீ .
“நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க” என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறார்.

===================================================================
பைத்தியக்கார ஆஸ்பத்திரியை ஒரு தரம் பார்க்கணும்ன்னு என் நண்பர் கிட்டே சொன்னேன்.
“என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறே, இன்னிக்கே போறதிலே தப்பில்லே” ன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.
“ஓரளவு குணமானவங்களை பார்த்தா போதும். ரீசன்ட்டா அட்மிட் ஆனவங்கல்லாம் வேண்டாம்”
“அதிலே கூட ரிஸ்க் இருக்கு”
“அதிலே என்ன ரிஸ்க்கு?”
“வின்ஸ்ட்டன் சர்ச்சிலொட பையன் உன் மாதிரிதான் குணமானவங்களை பார்க்கப் போனாராம். ஒருத்தன் அவரைப் பார்த்து நீ யாருன்னு கேட்டானாம். இவர், நான்தான் சர்ச்சிலொட பையன்னாராம். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னான்?”
“உனக்கு சீக்கிரம் சரியாய்டும். நான் வர்றப்போ சர்ச்சிலே நாந்தான்னு சொல்லிக்கிட்டு வந்தேன்னானாம்.”
“ஐயய்யோ, என்னை யாராவது நீ யாருன்னு கேட்டா என்ன பண்றது?”
“உனக்கந்த கவலை இல்லே. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க”
“ஏன்?”
“எப்டி இருந்தாலும் ரொம்ப நாள் கூட இருக்கப் போறான், மெதுவா கேட்டுக்கலாம்ன்னுதான்”
நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!
அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
என்னடா இது!
மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.
ஆறாவது ஆளும்
“விமலாவைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.
நான் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டேன்.
“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.
என் நண்பர் என்னைப் பார்த்து சிரிச்சி “இதுலேர்ந்து நாம அறிகிற நீதி என்ன?” ன்னார்.
“தெரியலையே?”
“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”
பட்டி மன்றப் பேச்சாளர் திரு.அறிவொளி சொன்னது.
============================================================
ஏன்யா. நெஜமாவே ரூம் போட்டுத் தான் யோசிக்கிறீங்களோ..?

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்

இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்

மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.

நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)

ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.

ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.

ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...