ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தீப்பெட்டி தோன்றிய வரலாறு

நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர்.

ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார். அப்பொழுது பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்துப் பூசினார். அந்தக் குச்சியோ தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டு அதன் மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதிலிருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் குழைத்துப் பூசி, மிருகங்கள், அதிக பறவைகள் நடமாடும் இடங்களில் ஊன்றி வைத்திருக்கிறார். அப்பொழுது அதன் வழியாக சென்ற விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீப்பிடித்துக்கொண்டதாம்.

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீப்பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீப் பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர். அதன் பிறகு பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்
; : சுட்டவர்; தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...