வெள்ளி, அக்டோபர் 21, 2011

ஆப்பிள்

An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம். அதாவது நோய்கள் இன்றி வாழலாம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் புது விடயம் என்னவென்றால் இந்த ஆப்பிள் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிட வேண்டும் என்பது தான்.

ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பது தான்.

அர்சோலிக் அமிலமானது மிகவும் சுவாரஸ்யமான ஒரு இயற்கை மூலப் பொருள் என்று இந்த ஆய்வை நடத்தியுள்ள டாக்டர். கிறிஸ்டோபர் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் தோல்களில் காணப்படும் இது இயல்பான ஒரு ஆகாரமாகவும் உள்ளது என்று கூறும் டாக்டர் ஆடம்ஸ் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் பற்றி ஆராயும் ஒரு அமெரிக்க நிபுணராவார்.

முதுமை அடைகின்றபோது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது. இதற்கு குறிப்பாக மருந்துகளும் கிடையாது.

இதற்கு மாற்று வழி தான் என்ன என்று லோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஆடம்ஸ் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தபோதுதான் ஆப்பிள் பழம் மற்றும் அதன் தோல் என்பனவற்றின் மகிமை உணரப்பட்டுள்ளது.

எனவே ஆப்பிள் தோளை இனி சீவி எறிய வேண்டாம், அதை அப்படியே தோலுடன் சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு இந்த ஆய்வாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...